Skip to content
Post Views: 1,665
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -17
Advertisement
எத்தனை வருட தேடல் இது. தன் சிறுவயது நண்பன் குட்டாவை தேடிக்கொண்டு இருந்தாள், யாருக்கு தெரிய வில்லை என்று நினைத்தவள். ஒரு வேள அவன் இந்த ஊரில் இல்லை போல என்று நினைத்து இருந்தாள்..
Advertisement
Advertisement
இப்போது அன்பு தான், நான் தேடும் குட்டா என்றவுடனே அவளால் நம்ப முடியவில்லை, “நீங்க தான் என் குட்டாவா” என்றாள் மீண்டும்..
Advertisement
“நான் தான் உன் குட்டா, நம்ப முடியலையா, வேனா இன்னொரு முறை உன்னை தூக்கிட்டு மகாலிங்க மலை ஏறவா” என்றான்.
அவளுக்கு உறுதியாக தெரிந்து விட்டது இவன் என் குட்டா தான் என்று, “அப்போ குண்டா இருப்பீங்க, இப்போ ஒல்லியா இருக்கீங்க” என்றாள்..
“என்ன பண்ணுறது உன் ஸ்ரீப்பா எனக்கு சின்ன வயசுல கேட்டது எல்லாத்தையும் வாங்கி தந்து, நான் எல்லாத்தையும் சாப்பிட்டு குண்டா இருந்தேன், இப்போ கொஞ்சம் வெயிட் கம்மி பண்ணிட்டேன்”.. என்றான்..
“என்னை நீங்க தேடுனீங்களா” என்றாள்.
“இல்லை” என்று உண்மையை சொன்னவன்..
“நீ தேடுறத தெரிஞ்ச பின் தான், உன்கிட்ட பேசனுமுன்னு நெனச்சேன். எப்போ நீ அந்த பெரியசாமி பொண்டாட்டியா ஆக பொறதா இருந்துச்சு அதனால சொல்லல்ல” என்றான்.
“நீ என்னை ஞாபகம் வச்சு இருக்கீயா பார்கவி அப்போ உனக்கு 10 வயசு இருக்குமா?.
“எனக்கு 17 வயசு இருக்கும், 11 படிச்சுட்டு இருந்தேன்” என்றான்.
“எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு அன்பு”..என்றாள்.
இருவருக்கும் ஞாபகம் பின்னோக்கி சென்றது.
பார்கவி இலங்கையில் இருந்து பள்ளி விடுமுறைக்கு விருதுநகர் யோகா வீட்டிற்கு வந்திருந்தாள்..
அனைவரும் சேர்ந்து ஒரு கெடா விருந்துக்காக மகாலிங்க மலைக்கு வந்திருந்தார்கள்..
மகாலிங்க மலை ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் வழியில் வத்ராப் ஸ்டாபின் பக்கம் தானி பாறையில் இறங்கி நடந்தால் மகாலிங்க மலை வரும். மலை மீது சிவன் கோவில் உள்ளது. இயற்கை சூழந்த மலை, பல சித்தர்கள் இன்னும் அங்கே வாழ்ந்து கொண்டு இருப்பதாக அனைவரும் நம்பும் மலை.
மகாலிங்கம் மலைக்கு கீழ் கருப்ப சாமி கோவில், பேச்சியம்மன் கோவில், பிள்ளையார் கோவில் என்று இருக்க. சிலர் குல தெய்வம் என்பதால் ஆடு வெட்டி விருந்து வைத்திருக்க, விருநகரில் உள்ள பாதி பேர் விருந்துக்கு வந்திருந்தனர். அதில் அன்பு குடும்பம், யோகா குடும்பம் என்று அனைவரும் வந்திருந்தனர். லட்சுமி, ராமசுப்பு, ஆண்டவர்கனி வேரு ஒரு விசேஷத்திற்கு சென்று இருக்க, யோகா மட்டும் குடும்பமாக வந்திருந்தார்.
கெடா வெட்டு மதியம் என்பதால், அனைவரும் காலை உணவு உண்டு விட்டு, மலை மீது ஏறி சுந்தர மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தை வணங்க கிளம்பினார்கள்..
அன்பு அவன் நண்பர்களோடு கிளம்ப..
யோகா, பார்கவி, மீனாட்சி, பெரியசாமி அவன் நண்பர்கள் என மலை மீது ஏற கிளம்பினார்கள். மகாலிங்க மலைக்கு செல்லும் தூரம் 7 கிலோ மிட்டர் தூரம் ஏற வேண்டும். ஏறி கடவுளை வணங்கி பின். கீழே வர மீண்டும் 7 கீலோ மீட்டர் நடந்து வர வேண்டும்.
பாதை கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் இரண்டு பக்கமும் மரங்கள், குரங்குகள், கல்லில் ஆன படிகட்டுகள், பெரிய பறைகள் உடைக்க பட்டு படி போல அமைத்து இருக்க, போகும் வழியில் இரண்டு இடத்தில் மழை நீர் ஆறு போல் ஓடிக்கொண்டு இருக்க, நாம் அதை தாண்டி தான் செல்ல வேண்டும், தண்ணீர் குறைவாக இருந்தாள் நடந்தே செல்லலாம், இல்லை என்றாள் பெரிய கயிறு கட்டி இருப்பார்கள் அதை பிடித்து கொண்டே ஏற வேண்டும். ஆற்றை கடந்த பின் வழுக்கு பாறை என்று இடம் வரும், பார்த்து கவனமாக செல்ல வேண்டும் படிகள் இருக்காது, மெதுவாக ஏற வேண்டும், சிறுபிள்ளைகள் ஏறி விடுவார்கள், வயதானவர்கள்,ஏற கொஞ்சம் கடினம், இன்னொருவரின் கைபிடித்து ஏறலாம்,,.
யோகா, பார்கவி, மீனாட்சியும் பேசிக்கொண்டே வர, பெரியசாமி அவன் நண்பர்களோடு பேசி, விளையாண்டு கொண்டே வந்தான்..
யோகாவுக்கு பாதி தூரம் வந்தவுடனே மூச்சு அதிகமாக வாங்க, கால் வேற வலியெடுத்தது. மலை பாதி தூரத்தில் ஒரு ரெட்டை லிங்கம் கோவில் வர
அமர்ந்து விட்டார்.
பார்கவியும், மீனாட்சியும் சிறிய பிள்ளைகள் என்பதால் நடக்க முடிந்தது ஓடியாடி, விளையாண்டு கொண்டே வர..
யோக அமர்ந்திருப்பதை பார்த்த ஊர்காரர் ஒருவர் தண்ணீர் கொடுத்து மெல்ல நடந்து போங்க இன்னும் கொஞ்ச தூரம் தான் என்று சொல்ல.
யோகாவுக்கு இன்னும் ஏறினாள் எப்போ இறங்குவது என்று நினைத்து, “பெரியசாமியை நீ போ, நானும், பிள்ளைகளும் கீழே போறோம்” என்று கிளம்ப, மீனாட்சி தாயின் கைபிடித்து இறங்க தயாராக, பார்கவி மலை மீது ஏற ஆசை என்பதால்,
“அத்தை நான் மச்சான் கூட மலை ஏற போறேன்” என்றாள்.. “உன்னை எப்படிடா அவன் கூட தனியா விடுறது’…
“அத்தை எனக்கு மலை மேல போகனும்” என்று சொல்ல..
அவள் ஆசை படுவதை பார்த்தவர், தனியா எப்படி, இங்கே சில இடத்தில் பாதைகள் செங்குத்தாக இருக்கும், சில இடத்தில் உச்சியில் நடப்பது போல பயமாக இருக்கும் கால் தவறினால் ஒன்றும் சொல்ல முடியாது,, கவனமாக சொல்ல வேண்டும் சில அபாய கரமான இடங்களும் உண்டு..
“இல்லடா உன்னை தனியா விட முடியாது சின்ன புள்ள நீயு, உன்ன எப்படி'”..
“அத்தை நான் பத்திரமா மலை ஏறி போயிட்டு வந்துடுவேன்” என்றவளை. பார்த்த பெரியசாமி “மா நீங்க மீனாட்சியை கூட்டிட்டு கீழ இறங்குறது குள்ள நாங்க வந்துருவோம்” என்றவன்..
“வா பார்கவி” என்று அவளை கையை பிடித்துக்கொள்ள..
பார்கவி மலை மீது ஏற ஆசைப்பட்டு பெரியசாமியின் கையை பிடித்துக்கொண்டாள்..
“பார்த்து கூட்டிட்டு போயிட்டு வா டா, பிள்ளை பத்திரம்” என்றவர் பார்கவியிடம் “மச்சான் கையை விட கூடாது சரியா” என்று சொல்லி விட்டு, மலையில் இருந்து ஒரு கம்பை ஊன்றி கீழே இறங்க, யோகாவுக்கு தெரிந்த பெண்களும் கீழே இறங்கி கொண்டு இருக்க, யோகாவும் அவர்களிடம் பேசிக்கொண்டே நடந்தார்..
இங்கே பெரியசாமி முதலில் பார்கவியை ஒழுங்காக தான் அழைத்து கொண்டு மலை ஏறிக் கொண்டு இருந்தான். பின்பு நண்பர்களோடு பேசிக்கொண்டு வர. மலைக்கு கீழ் ஒரு அருவி செல்வதை பார்த்தவர்கள்.
இறங்கி குளிக்கலாம் என்று முடிவு பண்ணியவர்கள், இவளை கீழே அழைத்து செல்ல முடியாது என்று நினைத்து . “நீ இங்கே உங்கார்ந்து இரு பார்கவி, மச்சான் அந்த அருவியில இறங்கி குளிச்சுட்டு வாரேன்” என்றான்.
“நானும் வர்ரேன்” என்றவளை..
“நீ இறங்க முடியாது பார்கவி, கீழே அருவிக்கு போக பாதையே இல்ல, நாங்க இறங்குறதே கஷ்டம், நீ இங்க நின்னு பாரு நாங்க குளிச்சிட்டு வர்ரோம்”.. என்று அவளை ஒரு பாறையின் மீது அருவி தெரியும் மாறு உட்காரவைத்து விட்டு, பெரியசாமி அவன் நண்பர்களோடு குளிக்க சென்றுவிட..
பார்கவி உட்கார்ந்து கொண்டே பெரியசாமியை பார்த்திருந்தவள் காற்று நன்றாக வீச பாறையின் மீது படுத்து தூங்கிவிட்டாள் பார்கவி…
பெரியசாமி நண்பர்களோடு குளித்தவன் வேறு பாதையில் மலை ஏறி விட்டான்.. பார்கவியை மறந்து..
யோகா மலை இறங்கும் போது அன்புவை பார்த்தவர்.”அன்பு இப்போ தான் மலை ஏற்றீயா”..
“ஆமாம் மா” என்றான்..
“சரிப்பா” என்றவர், “எனக்கு ஒரு உதவி பா, என் நாத்தனார் பொண்ணு இலங்கையில் இருந்து வந்திருக்க குட்டி பொண்ணு, பெரியசாமிக்கூட மலை ஏறுற பாத்துக்கோ” என்றார்..
“சரிமா” என்றவன், மலையேறிக்கொண்டு இருக்க..
பார்கவி நன்றாக தூங்கி எழுந்து அருவி பார்த்தவள். அங்கே பெரியசாமியும் அவன் நண்பர்களும் இல்லை என்றவுடன், “மச்சான், மச்சான்” என்றவள் பயம் வந்து அழ..
அவள் அழும் சத்தம் கேட்டு ஓடிவந்தான் அன்பு..
“ஏய் பாப்பு ஏன் அழற”..
“பெரியசாமி மச்சான் அருவியில குளிக்க போனாங்க காணும்” என்று அழ..
“அழாத யோகாம்மா சொன்னாங்க நீ இலங்கையில் இருந்து வந்திருக்கியா”..
அவள் “ஆமாம்” என்று தலையாட்ட..
“சரிவா நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என்றவன், அவளை கைபிடித்து பத்திரமாக கூட்டிச் சென்றான் மலை மீது..
பார்கவிக்கு சில இடங்களில் ஏற கஷ்டமாக இருந்தால், தூக்கி கொள்வான்..
அவளுக்கு அன்புவை மிகவும் பிடித்தது..
அன்பும் அவன் நண்பர்களும் பார்கவியை மலை மீது அழைத்துக்கொண்டு. முதலில் சுந்தர மாகாலிங்கத்தை வணங்கி விட்டு, அடுத்தது சந்தன மகாலிங்கத்தை வணங்கி கீழே வர. வரும் வழியில் பார்கவி கல் தடுக்கி கீழே விழுந்துவிட..
பார்கவிக்கு காலில் நன்றாக சிறாய்த்து விட. அழும் பார்கவியை சமாதானம் பண்ணியவன்.. அவளை உப்பு மூட்டை போல் முதுகில் தூங்கி கொண்டு வந்தான்..
பார்கவி கால் வலியில் அழுதுக்கொண்டே வர.. அன்புவின் நண்பர்கள். அவளை கேலி கிண்டல் பண்ணி சிரிக்க வைக்க முயல. அவள் சிரிக்காமலே வர. அதில் ஒருவன் குட்டையாக, கருப்பாக, கொஞ்சம் கால் சாய்ந்து நடப்பான் அவனை எல்லாரும் பீப்பீ என்று அழைத்து கேலி செய்ய. பீப்பீ அன்புடன் ஒன்றாக சேர்ந்து படிப்பவன். அனைவரையும் சிரிக்க வைப்பான். அவனை அழைத்து பார்கவியை சிரிக்க வைக்க சொல்ல, அவனும் ஏதேதோ பேசி, பேசி பார்கவியை சிரிக்க வைக்க முயற்சி பண்ண.
அவளோ சிரிக்காமல் அமைதியாக அன்புவின் மேல் சவாரி செய்து கொண்டு வர..
என்னாட பண்ணுறது இவளை என்றவன். அவளை ஒரு கல்லில் மேல் உட்கார வைத்து. அவளை சிரிக்க வைக்க முயற்சி பண்ணான்.
ஆனாலும் பார்கவி சிரிக்க வில்லை.
அன்புவின் நண்பன் அன்புவை “ஏய் குண்டா” என்று அழைத்து பேச..
பார்கவி அன்புவை பார்த்து சிரித்துவிட்டாள்.
“ஏய் இவ்வளவு நேரம் நான் சிரிக்க வச்சேன், நீ சிரிக்கல இப்போ சிரிக்குற” என்றவன்..
அவளின் கன்னங்களை பிடித்து ஆட்டியவன் “இட்லி மாதிரி சாப்டா இருக்கு” என்றவன் அவளை “இட்லி” என்று அழைக்க.
அன்புவின் நண்பர்களும் அவளை “இட்லி பாப்பா” என்று அழைத்து பேச..
அவளும் அனைவரிடம் பேசிக்கொண்டே வர.. “உங்க பேர் என்ன எல்லாரும் பீப்பீன்னு சொல்லுறாங்க” என்றாள்..
“அது நாங்க எங்களுக்கே செல்லமா வச்சுகிட்ட பேரு, நாங்க எல்லாம் ஒன்னா இருக்கும் போது இப்படி தான் கூப்பிடுவோம். உனக்கு இப்போ பேரு வச்சோமே இட்லி அந்த மாதிரி” என்றவன். அனைவரின் செல்ல பெயரை சொல்லிக்கொண்டு வர.
அன்புவை பார்த்து “இவன் பேரு குண்டன், நாங்க குண்டா என்று கூப்பிடுவோம், எப்படி குண்டா இருக்கான் பாரு” என்றான் ஒருவன்.
அவளோ அன்புவை பார்த்து “ரொம்ப குண்டா இல்லை, என் குட்டா” என்றாள்.
“என்னது குட்டாவா, புது பேர இருக்கு, இது கூட நல்ல தான் இருக்கு” என்றனர்.
“இனிமே எல்லாரும் குட்டான்னு கூப்பிடுங்க” என்றாள் பார்கவி..
“சரி இட்லி மேடம்” என்று அவளை கேலி பண்ணி கொண்டே மலை மீது இருந்து இறங்கி கீழே வந்தனர்.
அன்புவின் நண்பர்கள் மலை அடிவாறத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க. அன்பு கலர், கலர் பொம்மை உருவம் கொண்ட சீனி மிட்டாய் வாங்கி பார்கவி இடம் தர.
அவன் முதுகில் தொங்கி கொண்டே மிட்டாயை சப்பிக் கொண்டு வந்தாள்.
error: Content is protected !!