சொல்லி விடு வெள்ளி நிலவே – 10
தலையில் நன்றாக குட்டு வாங்கிக் கொண்டு, மானு அப்படியே நின்று கொண்டிருக்க,
“ஏய்.. லூஸு அதுக்குன்னு அப்படியே நின்னுட்டு இருப்பியா? இந்தா.. இந்த டவலைப் போர்த்திக்கிட்டு உட்காரு.
நான் யுடுயூபில் யாரச்சும் இதுக்கு வீடியோ போட்டுருக்காங்களான்னு பார்க்குறேன்” என்று சொல்லி போனை எடுத்தான்.
அவனருகில் மானுவும் உட்கார்ந்து கொண்டு பார்த்தாள்.
Advertisement
பார்த்து விட்டு, அதே மாதிரி, புடவையை இடுப்பில் சொருக சொல்லி, கொசுவம் எடுத்தாள், அவன் பார்த்து சொல்ல, சொல்ல!
இரண்டு மூன்று முறை எடுத்தும் சரியாக வர வில்லை!
பிறகு தான் ரித்து கவனித்தான். வீடியோவில் வலக்கைக் கொண்டு கொசுவம் எடுப்பதையும், இவள் இடக்கை கொண்டு கொசுவம் எடுப்பதையும்!
Advertisement
“ஏய்.. இரு.. இரு. நீ ஏன் லெப்டுல எடுக்குற? அவங்க பாரு ரைட் ஹாண்டில் எடுக்கிறாங்க! அதான் உனக்கு சரியா வர மாட்டேங்குது!”
Advertisement
“எனக்கு இந்த கையில தான் ரித்து வருது. இந்த கையில எடுத்தா வர மாட்டேங்குது”.
“ஓ. நீ லெப்ட் ஹான்டரா?”
“இல்ல. இது மட்டும் தான் இப்படி ஆகுது!”
Advertisement
“ஓ! அப்ப பார்சியலிலெப்ட் போல நீ.. ஓகே, அப்படியே எடுத்துட்டு, இப்படி திருப்பி சுத்தி சொருகு”.
“சொருக வர மாட்டேங்குது ரித்து.”
“விடு, நானே எடுக்கிறேன்” என்று சொல்லி, அவள் பின் புறமாக நின்று எடுத்து ஒரு வழியாக சொருகினான்.
முடித்து விட்டு பார்த்தால், முந்தானையில் இன்னும் பின் குத்தப்படாமல் இருப்பது தெரிந்தது!
“ஏய். உன்னை இங்க பின் குத்த சொன்னேன்ல, குத்தலியா?”
“இல்லையே!”
“சரி, பின்னை எடு, நானே குத்தி விடுறேன்”.
“பின்னைக் காணோம் ரித்து”
“ஏய்..உன்னை.. எருமை. எருமை. ஒரு பின்னை பத்திரமா வச்சுக்க தெரியாதா?”
தலையில் மீண்டும் குட்டு.
“வலிக்குது ரித்து.. நீ ஏன். என்னையை இன்னிக்கு இப்படி திட்டுற.. அடிக்குற?”
“பின்ன.. நீ செஞ்சுகிட்டு இருக்குற வேலைக்கு. உன்னை திட்டாம என்ன பண்ணுவாங்களாம்?“
“இங்க பாரு, இங்க குத்தி வச்சுருக்க!” என்று, அவள் ப்ளவுஸ் கடைசி கொக்கியில் இருந்ததைக் காட்டி, எடுக்க போனான்.
“அய்யோ. அது வேற பின்! இது அம்மாவோட பள்வுஸ். எனக்கு இடுப்பு சைஸ் சரியா இல்ல, அதனால இழுத்துப் பின் போட்டு வச்சுருக்கேன்.
சாரியோட பின், எங்கோ இங்க கீழ விழுந்துடுச்சு போல”, என்று சொல்லி கீழே குனிந்து எடுக்க போய், அவனை இன்னும் “சோதனைக்கு” உள்ளாக்க போனாள் மானு.
“ஏய்.. இரு..இரு. நானே தேடி எடுக்குறேன். நீ அப்படியே நில்லு. குனியாதே! எல்லா.. என் விதி..” திட்டிக் கொண்டே, அவள் காலடியில் கிடந்த அந்த பின்னை எடுத்து, ஒன்று இரண்டு முறை சரியாக வராமல், ஒரு வழியாக அவனின் குட்டிமாவிற்கு சாரியை வெற்றி கரமாக கட்டி முடித்து.
“அப்பாடி..” என்று பெருமூச்சு விட்டான் ரித்து.
“வா, ஹாலில் போய் உட்காரலாம்”, என்று சொல்லி அவன் முன்னே போக, பின்னே உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு வந்தாள் மானு.
“இன்னும் என்னடி. அதான் சாரி கட்டி முடிச்சாச்சே! நான் ஏதோ கொஞ்சம் டென்சன்ல உன்னைக் கொட்டிட்டேன்! சாரி குட்டிமா”, என்று அவள் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான் ரித்து.
அவள் கண்களில் லேசாக ஈரம் காணவும், “ஏய்.. என்னாச்சு.. அப்ப கொட்டினது இன்னுமா வலிக்குது?” தலையைத் தடவி விட்டான்.
“இல்ல..நான் ஒன்னும் கொட்டுனதுக்கு அழல!”
“அப்புறம்?”
“வேற ஒன்னை நினைச்சு தான் அழுகை வருது!”
“வேற ஒன்ன நினைச்சா? என்ன , உன் ரித்து இவ்வளவு நல்லவனான்னு நினைச்சு ஆனந்த கண்ணீர் வடிக்கிறியா?”
“என் ரித்து நல்லவன்னு எனக்கு எப்பவோ தான் தெரியுமே, இது வேற ரீசன்!”
“அப்படி என்னத்தை தான் நினைச்சு அழற? சொல்லிட்டு அழு”.
“இல்ல.. நான் இப்படி வெறும் ப்ளவுஸ் பெட்டிகோட்டோட நின்னும் கூட, உனக்கு என் மேல வேற எதுவுமே தோணலையா?
உங்க பசங்க பாஷையில சொல்ற மாதிரி நான் அட்டு பிகரா? அழகா இல்லையா? நீ எப்படி இப்படி எனக்கு சாரி கட்டி விட்ட?”
“ஏய்.. இதுக்கு தான் பீல் பண்றியா? நீ நினைக்கிற மாதிரில்லாம் இல்ல! என் குட்டிமா அழகு யாருக்கு வரும்! அதெல்லாம் நீ நல்ல பிகர் தான்!
நான் தான் ரொம்ப ரொம்ப ஸெல்ப் கண்ரோலா இருக்கேன், ஆனா, நீ தான் அதை சோதிக்கிற மாதிரி அப்போ அப்போ. இது மாதிரி எதாச்சும் ஏடா கூடம் பண்ணி என்னை இம்சை பண்ணுற!
ஒரு மனுஷன் வீக்னெஸ் தெரியாம, நீ இப்படியெல்லாம் பண்ணக் கூடாது. ஒரு நேரம் போல இருக்க மாட்டேன் உன் ரித்து. பீ கேர்புல்!
கொஞ்சமாச்சும் யோசிச்சியா குட்டிமா, நீ பாட்டுக்கு நான் ரெடின்னு நிக்குற? ஒரு வேளை நானும் உன்னை மாதிரி இமோஷன் ஆகியிருந்தா, கசமுசா ஆகி விட்டிருக்கும்!
அப்புறம் நீ படிப்பியா, இல்ல பாப்பாவை கவனிப்பியா?”
“ஓ.. நீ அவ்வளவு தூரம் யோசிச்சியா? எனக்கு என் ரித்துவோட சந்தோஷம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிஞ்சிச்சு! மதத்த பத்தி யோசிக்கல!
ஒரு வேளை நமக்கு பாப்பா வந்துட்டா, ஒரு பேச்சுக்கு கேக்குறேன். உனக்கு என்ன பாப்பா இஷ்டம்? எனக்கு பையன் இல்ல பொண்ணு , ரெண்டுமே ஓகே தான்! ஆனா மூக்கு மட்டும் உன்னை மாதிரி இருக்கணும்! என்னை மாதிரி சப்பை மூக்கா இருக்ககூடாது!” அவன் மூக்கைப் பிடித்துக் கொஞ்சினாள் மானு.
“ஏய்.ஏய். நிறுத்து, என்ன நீ? இப்படி பேசுற? ஒருவேளை கசமுசா ஆகிட்டா, என்னைக் கை விட்டுட மாட்டியேன்னோ, இல்ல என்னை கல்யாணம் பண்ணிப்ப தானேன்னோ கேக்காம, இப்படி யோசிக்கிற?”
“அதெல்லாம் நீ பார்த்துக்கோ, எனக்கு அந்த விசயத்திலே எல்லாம் கவலையே இல்ல! எனக்கு நம்ம பாப்பா மூக்கு பத்தி தான் கவலை! என் ரித்து மத்த எல்லாத்தையும் பார்த்துப்பான்னு நான் பாட்டுக்கு ஜாலியா இருப்பேன்! இந்த கல்யாணம் எல்லாம் உன் பாடு!” என்றாள் விளையாட்டாக!
அவள் விளையாட்டாக சொன்னாலும், அதில் இருந்த அவன் மேலான அதி தீவிர நம்பிக்கை, அவனுக்கு கர்வத்தைக் கொடுத்தது!
இந்த அளவு ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறும் அளவு நல்லப் பிள்ளையாக தன்னை வளர்த்திருக்கும் அவன் மம்மி மீதும் அவனுக்கு பாசம் அப்போது பெருகியது!
அவன் அம்மாவை நினைத்தும், குட்டிமாவை நினைத்தும் மிகவும் பெருமைக் கொண்டான்!
சிரித்துக் கொண்டே, “அம்மாடி.. அம்மா . போதும். உன் ப்யுச்சர் ப்ளான்! முதல்ல நாம நல்லபடியா படிச்சு முடிக்கணும்! அப்புறம் போய் வீட்டில் சொன்னா, நமக்கும் வீட்டில் ஒரு மரியாதை கிடைக்கும்! ஆமா, உனக்கு யார் இப்படி எல்லாம் சொல்லிக் கொடுத்தா?”
“சொல்லிக் கொடுக்க யார் இருக்கா? நான் நேத்து டிவியில ஒரு பழைய படம் பார்த்தேன். அதுல எக்சாட்டா இதே மாதிரி ஒரு சீன். அப்போ ஹீரோயின் ஹீரோவுக்கு ஓகே சொல்ல, இப்படி செய்வா! அதான் நானும் அப்படியே செஞ்சேன்!”
“லூஸு. இது மாதிரியெல்லாம் இன்னொரு வாட்டி செய்யக் கூடாது. அப்புறம் பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் பார்த்துக்கோ” சொன்ன ரித்து, பின் அவளை வீட்டிற்கு கொண்டு போய் விட்டான்.
ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து எல்லோரும் கல்லூரி வந்த பின்னும் ரித்து மட்டும் வர வில்லை.
மானு அவனைக் காணாது தவித்தாள்.
போன் செய்தாலும் போக வில்லை.
ஸ்விட்ச் ஆப் என்றது.
ஒரு வேளை கோவித்துக் கொண்டு தான் எடுக்க வில்லையா? லீவில் அவன் போன் பண்ணிய போது தான் பேசாமல் கட் செய்ததும் தப்பு தானே!
இன்னமும் கோபமோ?
அன்று வீட்டுக்கு திரும்பும் போது, அவன் மம்மியைப் பற்றி, அவள் வளர்ப்பைப் பற்றி தான் பெருமையாக நினைத்தை அவளிடம் சொல்லிக் கொண்டு வந்தான்.
ஆனால் மானுவிற்கோ, தன் அம்மாவைப் பற்றின ஒரு காம்ப்ளெக்ஸ் எட்டிப் பார்த்தது!
ஒருவேளை, என் அம்மாவும் அவன் அம்மாவைப் போல மெச்சூர்டாக இருந்திருந்தால், தானும் ரித்துவைப் போல நிதானமாக யோசித்து இருப்போமா, இப்படி குழந்தைத் தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டோமோ என்று நினைக்க தொடங்கி, ஒரு சின்ன விலகல் தன்மையை அவளுக்குக் கொடுக்க, போனை கட் பண்ணி விட்டாள்!
ரித்து மீண்டும் மீண்டும் ட்ரை பண்ணி விட்டு, விட்டு விட்டான்.
அதற்குள் தெளிவாகி விட்ட மானு கல்லூரி வந்தவுடன் சாரி கேட்க எண்ணிக் காத்திருக்க, அவனோ வரவும் இல்லை, போன் பண்ணவும் இல்லை!
மானுவால் பொறுக்க முடியவில்லை.
பாதி வகுப்பிலேயே லீவ் வாங்கிக் கொண்டு, அவன் வீடு போனாள்.
பெல்லை அடித்து, கொஞ்ச நேரம் கழித்தே ரித்து கதவைத் திறந்தான், காலை கொஞ்சம் விந்தி விந்தி நடந்து வந்து!
உள்ளே வந்தவள், அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு,
“என்ன ஆச்சு ரித்து?” என்று கேட்க,
“காலில் பைக் சைலன்சர் சுட்டு விட்டது. உனக்கு போன் பண்ணிக் கொண்டே பைக்கில் ஏறினேன். அப்போது கவனிக்காம கால் பட்டுடுச்சு. புண்ணாகிடுச்சு. நடக்கவே முடியல. போன் சார்ஜ் போடல. எந்திர்ச்சு போய் போடக் கூட முடியல என்னால!”
அவன் சொல்லிக் கொண்டே சோர்ந்து போய் உட்கார்ந்தான்!
அவள் கிட்டே வந்து நெற்றியை, கழுத்தைத் தொட்டுப் பார்க்க, அனலாய் கொதித்தது!
காலைப் பார்த்து விட்டு கதறி அழுதே விட்டாள்!
“அய்யோ ரித்து.. எப்படி புண்ணாகிடுச்சு பாரு. ரொம்ப வலிக்குதா?”
“ம்ம்.” என்று முனகலுடன் சொன்னான் ரித்து.
“அப்ப, நாம ஹாஸ்பிடல் போகலாம் வா” என்று சொல்லி, அவனைக் கைத்தாங்கலாக கீழே கூட்டிச் சென்று ஒரு ஆட்டோவில் ஏறி ஹாஸ்பிடல் போனாள் மானு.
ஆட்டோவில் போகும் அவர்களை, அந்த அப்பார்ட்மெண்ட்க்கு புதியதாக குடி வந்த ஒருவர், ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு நின்றதை அவர்கள் கவனிக்க வில்லை!
அவர், ரித்துவின் மூன்றாவது மாமாவுடன் பாங்கில் ஒன்றாக வேலை செய்தவர்.
ரித்துவின் வீட்டிற்கு பல முறை வந்து போனவர்! ஆனால் ரித்துவிற்கு தான் அவரை தெரியாது!
