Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 17 2

அங்கே நிறைய  கடைகள் இருந்தன.  பொறி, காரம், மரப்பொம்மை கடை, வித, விதமான் சாம்பிராணி பொருள் விக்கும் கடை, மூலிகை தைலம், என்று  நிறைய கடைகள் இருக்க.

“குட்டா” என்று அன்புவை அழைத்த பார்கவி   மரப்பாச்சி பொம்மையை  காட்டி “எனக்கு   அந்த பொம்மை வேணும்”  என்று கேட்க.



Advertisement

” என் கிட்ட காசு இல்ல இட்லி, இரு என் மாமாகிட்ட கேட்கிறேன், கேட்டு வாங்கி தர்ரேன் பாப்பு”  என்றவன்..

யோகாவை தேடி சென்றான்.

Advertisement

அன்பு பார்கவியை உப்பு மூட்டை போல்  முதுகில் தூக்கி வருவதை பார்த்தவர்”..

Advertisement

“என்னாச்சு அன்பு”..

Advertisement

“கீழே விழுந்துட்டம்மா”  என்றவன். அவளை யோகாவிடம் விட்டு, “வர்ரேன் பாப்பு” என்று பார்கவியிடம்  சொல்லிவிட்டு சென்றான்..

யோகா “பெரியசாமி எங்கே”  என்று பார்கவிடம் கேட்க.

பார்கவி அவன் தன்னை விட்டு குளிக்க சென்றவன் வரவேயில்லை  என்றாள்..

வரட்டும் என்றவர், பெரியசாமி கீழே வந்தவுடன் திட்ட..

“இப்போ  என்ன அதான் வந்துட்டாள சும்மா திட்டிகிட்டு”  என்றவன், கோபப்பட்டு திட்டி சென்றான்.

அனைவரும் கெடா விருந்தில் உண்டு விட்டு கிளம்ப தயாராக பார்கவி அன்புவை தேடினாள். அவன்  தனக்கு  பொம்மை  வாங்கி தருவதாக சொன்னானே எங்கே  என்று தேட, சரியாக அவள் கிளம்பும் முன் மரபாச்சி பொம்மை ஆண்பொம்மை, பெண்பொம்மை என்று  இரண்டு பொம்மையை வாங்கி  வந்தவன் பார்கவிடம் தர.

அந்த  பொம்மையை பார்த்து சந்தோஷப்பட்டவள், ஒரு பொம்மையை அன்பிடம் தந்து “நீ வச்சுக்கோ குட்டா, எனக்கு ஒன்னு போதும்” என்று ஆண் பொம்மை வைத்துக்கொண்டு, பெண்பொம்மையை அவனிடம் தர..

“நீயே இரண்டையும் வச்சுக்கோ இட்லி” என்றான் அன்பு.

“எனக்கு   ஒன்னு போதும்  குட்டா, நீ ஒன்னு வச்சுக்கோ”  என்று அவனிடம்  ஒன்றை திருப்பி தர..

“சரி இட்லி, என்று அதை வாங்கிக்கொண்டு  பாய்” என்று அன்பு கிளம்ப..

“குட்டா” என்று அவனை அழைக்க.

“என்ன பாப்பு”…

அவளின்  கையில்  யோகா குடுத்த கடலை மிட்டாய்யை அவனிடம் தர..

“நீ சாப்பிடு பாப்பு, எனக்கு வேண்டாம்”  என்றான்.

“குட்டா”  என்றவள் கையை நீட்டிய படியே இருக்க.

அதை  எடுத்து   அவன் வாயில் போட்டு கொண்டவன் “போதுமா இட்லி”  என்று அவளின்  இட்லி கன்னத்தை பிடித்து ஆட்டியவன், “பாய்  பாப்பு நல்லா படிக்கனும்” என்று சொல்லி சென்றான்.

பார்கவி அவன் போகும் பாதையை பார்த்து இருந்தாள்.

இதுவரை அவள்  யாரிடமும் தனக்காக எதுவும் கேட்டது இல்லை. அன்புவிடம் எப்படி இப்படி உரிமையோடு பொம்மை வாங்கி தா என்று கேட்டாள் என்று அவளுக்கே  தெரியவில்லை..

இன்று.

“பிளாஷ் பேக் போயிட்டு வந்தாச்சா” என்றான் அன்பு.

“உம்” என்றவள்.

“நான்   உங்களை தேடுனது எப்படி உங்களுக்கு தெரியும்”.. என்றாள்

“பீப்பீ” என்றவன்.

அவளுக்கு இந்த ஊரில்  அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது பீப்பீயை  மட்டும் தான், வேற யாரையும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. பீப்பீ  உருவத்தை வைத்து அவனிடம் சென்று குட்டாவை பத்தி விசாரிக்க.

அவனுக்கு  அவளை அடையாளம்  தெரியவில்லை..

“நீ யாருன்னு தெரியலயே குட்டாவா அப்படி  யாரு இருக்க எனக்கு தெரியாதுமா” என்றான்..

அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் அவனுக்கு அனைத்தும் ஞாபகம் வர.

உடனே அன்புவை  போனில் அழைத்து  “டேய் அன்பு உன்னை  தேடி  ஒரு பொண்ணு வந்துச்சு  உன்னை   குண்டான்னு  பேரு சொல்லி கேட்டுச்சு என்று சொல்ல.

என்னை தேடியா!.. குட்டாவா என்று சொன்னவுடன்  10 வயது குட்டி பெண் உருவம் மனதில் வர,   எனக்கு இந்த பொம்மை வாங்கி தா குட்டா என்று  கேட்டது ஞாபகம் வர.

“டேய் பீப்பீ” அந்த பொண்ண  நீ பாத்தியா  எங்கே இருக்கா  அவ.

“இங்கே  தான் கோவில்ல  பொங்கல் வச்சுட்டு இருக்காங்க. வா” என்றான்.

அன்பு ஐந்தே நிமிடத்தில் கோவிலுக்கு  வந்தவன், பீப்பீயிடம் “எங்கே டா அந்த பொண்ணு” என்றான்.

“அதோ” என்றவன் பார்கவியை காண்பிக்க. வானம் நிறம் வண்ணத்தில் பட்டு புடவை கட்டி பொங்கல் வைத்து கொண்டு இருந்தாள், சிறு வயதில் பார்த்த உருவ அமைப்பு அப்படியே இருக்க.

அந்த கன்னம் இட்லி போல உப்பி இருக்க. பருவ மங்கையாக இருந்த பார்கவியை பாப்பு என்று  அழைக்க போக அப்பொழுது தான் அவளை சுற்றி பார்த்தவன். யோகா  அருகில் மருமகளே எற்று அழைத்து பேசிக்கொண்டே பொங்கல் வைக்க, பக்கத்தில்  பெரியசாமி பார்கவிக்கு பாடி கார்ட் போல  நிற்க.

இதை எப்படி மறந்தேன், பாப்பு யோகாவின் சொந்தம் என்று, இப்போது பெரியசாமிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பது இவனுக்கு தெரியும்.  பொண்ணு  பார்கவியா இருக்குமோ என்றவன். அவன் நண்பனின் கேட்க..

“ஆமாம் டா அந்த பொண்ண தான். பெரியசாமியை  கல்யாணம் பண்ணிக்க போறான்” என்றான்.

பார்கவியை  ஒரு முறை  பார்த்தவன் “இட்லி” என்றவன் சாரிடா நான் வந்து பேசுன பெரியசாமிக்கு பிடிக்காது என்று  மனதில் சொல்லிவிட்டு,   பார்கவியிடம் பேசாமல் சொல்ல.

“அப்போ  என்ன  தெரிஞ்சும் என்கிட்ட வந்து பேசல”  என்றவள்.

“சரி  நம்ம கல்யாணத்துக்கு அப்பறமா  சொல்லி இருக்க வேண்டியது தானே”.

“யாரு,  நானு , சொல்ல வரல, போடி”  என்றவன்.

“கல்யாணமான அன்னைக்கே உன்கிட்ட சொல்லத்தான்  என் ரூம் வந்தேன், நீ என்ன பண்ண, என்னை பார்த்தவுடனே எல்லாத்தையும்  தூக்கி போட்டு ஒடச்ச, பின்ன நான் எப்படி சொல்வேன்”..

“போங்க அன்பு, நான் தான் உன் குட்டாண்ணு  சொல்லியிருந்த எப்படி இருந்துருக்கும், எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டீங்க”…

” இப்பா  என்ன  நான் தான் குட்டாண்ணு தெரிஞ்சு  போச்சுல  இனிமே நம்ம சந்தோஷமா இருப்போம்”..

“உம்” என்று தலையாட்டியவள்.

“ஒரு  நிமிசம்” என்றவள், அவள் அறைக்கு சென்று மீண்டும் அன்பு அறைக்கு வர.

“என்ன பார்கவி”  என்றான்.

“கண்ணை மூடுங்க” என்றவள்.

அவன் கண்ணை திறந்தவுடன் அவன் கண் முன்னே, அவன் சிறு வயதில் பார்கவிக்கு  வாங்கி குடுத்த  மரப்பாச்சி பொம்மை இருக்க அதை பார்த்தவன்..

“ஏய் பாரு இன்னுமா நீ இத வச்சி இருக்க”.. என்றான்.

“உம்”.. என்றாள்.

அதை வாங்கி பார்த்தவன்,”சாரிடா என்னை நீ இவ்வளவு  ஞாபகம் வச்சு இருப்பேன்னு தெரியாது, தெரிஞ்சு இருந்தா, உன்கிட்ட வந்து பேசியிருப்பேன் பாப்பு” என்றான்.

அன்பு மரப்பாச்சி பொம்மையை  தன் மார்போடு  வைத்துக்கொண்டான்.

பார்கவி அவன் அருகில் அமர்ந்தவள், “எனக்கு நெனவு தெரிஞ்சு என்னை  யாரும் தூக்கினதே இல்லை அன்பு. என்னை பாரமா நெனைக்காம என்னை மலை மேல தூக்கிட்ட போய் கீழே  இறங்கி  வந்தீங்க, யாரு  செய்வா இதை. அது மட்டுமா எனக்கு மிட்டாய் வாங்கி  தந்தீங்க, மரபாச்சி  பொம்மை வாங்கி  தந்தீங்க,  நான் என்  அப்பாவை தவிற வேற  யாரு  கிட்டையும் எதுவும் கேட்டது இல்லை, உங்ககிட்ட  தான் பொம்மை வாங்கி தாங்கன்னு  கேட்டு இருக்கேன், அப்படின்னா நீங்க எவ்வளவு பெஷல் எனக்கு, உங்களை மறப்பேனா நான்”..  என்றாள்.

“நான்  என்ன  பெருசா பண்ணேன் பாப்பு, சின்ன  பொண்ணு  நீ உன்னால நடக்க முடியல தூக்கிட்டு போனேன், நீ கேட்ட பொம்மையை  வாங்கி தந்தேன், அவ்வளவு தான், ஆன நீ அந்த பொம்மையை இவ்வளவு  நாள் வச்சுகிட்டது எனக்கு ஆச்சரியமா இருக்கு பார்கவி”.

“எனக்கு  ரொம்ப  சந்தோஷமா  இருக்கு  அன்பு”.. என்றாள்.

அன்பு மனதில் எனக்கு உன்ன கல்யாணம் பண்ணதுல இருந்தே நான் சந்தோஷமாக தான் இருக்கேன் என்றிருந்தான்..

“சரி  வாங்க ஹாஸ்பெட்டல் போலாம்”  என்றாள்.

நான் எங்கேயும் வரல, நீயே எதாவது மருந்து போடு என்றவன் கால் நீட்டி படுத்து விட..

“உங்களை” என்றவள். அவள் அறைக்கு சென்று  பஸ்ட் எய்டு பாக்சை எடுத்துக்கொண்டு வந்தவள். அன்புவின் காயத்தை துடைத்து மருந்திட.

“இட்லி மெதுவா” என்றான்.

“இன்னும் கொஞ்சம் தான் அன்பு”  என்றவள் அனைத்து காயத்திற்கும் மருந்திட்டவள்.

“சாப்பாடு கொண்டு வர்ரேன் அன்பு, மாத்திரை போட்டு படுங்க” என்று சொல்ல..

“இல்ல பார்கவி நைட்டு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகனும்” என்றவன்.

எழுந்து வேற உடை மாற்ற செல்ல..

“என்ன?. மீட்டிங்கா அதெல்லாம் நாளைக்கு போங்க”  என்றவள். அவன் கையில் வைத்திருந்த உடையை பிடுங்கி பீரோவில் வைக்க.

“ஓய்.. பாரு  ட்ரெஸ் குடு நான் போகனும்” என்றான்.

“ஒன்னும் வேண்டாம்” என்றவள்..

அவனின் போனை எடுத்து குருவிற்கு அழைத்து “அன்பு இன்று மீட்டிங்  வரமுடியாது பிரதர்” என்றாள்…

“சரி சிஸ்டர்”  என்றான் குரு…

“பாரு போனை குடு, நான் நல்லா இருக்கேன், மீட்டிங் போகனும்” என்று சொல்ல..

பார்கவி அன்புவின் பீரோ கதவை சாவி எடுத்து மூடியவள்..

“இப்போ எப்படி  டெரஸ் எடுத்து போடுவீங்க நானும் பார்க்கிறேன்”  என்றவள்.. சாவியை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு போக..

அன்பு பார்கவின் பின்னாடி  “சாவி குடு பாரு” என்று செல்ல.

“முடியாது”  என்றவள் வேகமாக நடக்க.

“பாரு குடு,  சாவியை குடு” என்று அன்பு அவள் பின்னாடி  பிடிக்க வர.

பார்கவியை  வேகமாக ஓட. அன்பு அவளை துரத்த.

இருவரும் சிறு பிள்ளை போல் ஓடி பிடித்து விளையாட..

அன்பு பார்கவின் பின்னாடி இருந்து  பிடித்து கொண்டவன்.. சாவியை புடுங்க..

“தர மாட்டேன்” என்றவள் அன்புவிடம் அடித்து பிடித்து விளையாட..

இருவரும் சிறுபிள்ளை  பருவத்திற்கே  சென்று இருந்தனர்.. இருவரின் சிரிப்பு சத்தம் அந்த வீட்டில் எதிரொலித்தது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!