Skip to content
Post Views: 576
வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு -அத்தியாயம் -7
திடீரென மண்டபத்தில் போலீஸை பார்த்ததும் சொந்தபந்தங்கள் அதிர்ச்சியாக,
வல்லரசுவின் சித்தப்பா வாங்க இன்ஸ்பெக்டர் நடந்தது என்னன்னு நீங்களே சொல்லுங்க இந்த கர்வம் புடிச்சவனுக்கு என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கறான்.
கொஞ்சம் தள்ளிக்கோங்க என்ற இன்ஸ்பெக்டர்,
Advertisement
இங்க பழனியப்பா யாரு?
நான் தான் எதுக்கு என்ன கேக்கறீங்க? நான் தப்பேதும் பண்ணலையே.
“யோவ், கேட்டதுக்கு பதில் சொல்லு, அத விட்டுப்புட்டு முந்திரிக்கொட்டதனமா பேசாத.
Advertisement
என்னங்க வீன்வம்பை விலைகுடுத்து வாங்காதீங்க என்றவள்,
Advertisement
சார், என்ன பிரச்சனைங்க?
பிரேமா உங்க பொண்ணு தானே?
ஆமாங்க சார். நாங்களே உங்கள தேடி வரலாம்னு இருந்தோம். காலைல இருந்து என்னோட பொண்ண காணோம்.
Advertisement
என்னமா சொல்றீங்க? நேத்துதான் அந்த பொண்ணு உங்கமேல கொலைமிரட்டல் கேஸ் குடுத்துச்சி இன்னைக்கு ஆளே இல்லன்னு சொல்றீங்க என்ன பன்னீங்க? பிரேமாவா
ஐயோ ஆண்டவா என்னதிது சோதனை பெத்த பொண்ண கொலை செய்ய பாத்தோமா? இத எப்படி என் பொண்ணு சொல்லிருப்பா?
ம்ம்ம்….. வாய்ல தான் என்றார் வல்லரசு சித்தப்பா.
யோவ், பெரியவர் மாதிரி பேசுயா, என்ற பழனி என் பொண்ணா சார் கேஸ் குடுத்தா? அவளை எவ்ளோ செல்லமா வளத்தேன் இப்படிலாம் அசிங்கப்படுத்தவா தங்கமலை என்றவரின் கண்ணிலிருந்து நீர் மனைவியின் கையில் விழுந்தது.
என்னங்க புள்ளய பத்தி விசாரிங்க நீங்களே கலங்கிப்போன நாங்கல்லாம் என்ன செய்வோம்.
இல்லடி நம்ப நம்ப……. அடுத்த வார்த்தை வரவில்லை துக்கம் தொண்டையை அடைத்தது.
இங்க பாருங்க பழனி உங்க பொண்ண நீங்க எப்படினா வளத்திருக்கலாம் ஆனா இப்ப அந்த பொண்ணுக்கு நீங்க தான் எதிரின்னு கேஸ் குடுத்திருக்கு விசாரணை செய்யலன்னா மேலிடத்துக்கு போவேன்னு திமிரா பேசுது வல்லரசு முகத்துக்காக பாத்தேன் இப்ப பாத்தா விஷயம் பெருசாகுது.
இப்பவே நீங்க ஸ்டேஷன் வரனும் என்றார் விஷத்தை சுருக்கமாக முடித்த இன்ஸ்பெக்டர்.
ஜோதிலிங்கம் பதட்டத்தில் இருக்க சங்கர் முன்வந்து சார் எங்க குடும்பத்துக்கு இதெல்லாம் புதுசு மாமா கொஞ்சம் மேலுக்கு முடியாதவங்க நான் மட்டும் வரட்டுமா? என்றார்.
யோவ் பொண்ண பெத்தவன் நீயா? என்றார்
இல்ல சார்.
பொத்திகிட்டு அங்கேயே இரு அது போதும் என்ற இன்ஸ்பெக்டர் நடங்க பழனி என்றார்.
தட்டு தடுமாறி எழுந்து நின்றார்.
இன்னோரு முக்கியமான விஷயம் நீங்க உங்க பொண்ண பண்ணின கொடுமை எல்லாத்துக்கும் இந்த வீட்ல சாட்சி இருக்கு அவனையும் கூப்பிடுங்க.
என்னது சாட்சியா? எங்க வீட்லயா?
என வாயை பிளந்தார் அங்கம்மா
யார் அந்த சாட்சி? சார்
உங்க வீட்டு பையன் மதிவாணன்.
அடபாவிங்களா கேட்டீங்களா போலீஸ்கார் சொன்னதை கேட்டீங்களா? என் குடும்ப மானத்தை வாங்கவே புள்ளைய பெத்துவச்சிருக்கான். முதல்ல என் பொண்ண குறி வச்சிருக்கான் அடுத்தடுத்த என்ன நடக்குமோ? இதுக்காக தான் பிளான்போட்டு குடும்பத்தோட நாடகமாடிவெளில போயிருக்காங்க இவங்கள சும்மா விடமாட்டேன் என்றவர் சட்டப்படி எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் வாங்க போலாம் இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை என்றவர் திரும்பி பார்க்காமல் சென்றார்.
அன்று நடந்த பிரச்சனையால் ஊரை விட்டு திருவண்ணாமலை வந்தவர்கள் அதன்பிறகு விருந்தினராக மட்டுமே அந்த ஊருக்கு போவதை பழக்கமா கொண்டுள்ளனர்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நாட்கள் அதன் வேகத்தில் ஓடிகொண்டிருக்க, இன்று பருவமங்கையாக வளர்ந்து வல்லரசுவுக்கு பெருமை சேர்க்கும் மகளாக செல்ல புள்ளையாக வளர்ந்து நிற்கிறாள்.
திருவண்ணாமலையில் இவர்கங்களுக்கென ஒரு இடம் வாங்கி அதில் இரண்டடுக்கு மாடி வீட்டை கட்டி முடித்தார் வல்லரசு.
வேலை செய்யுமிடத்திற்கு அருகிலேயே வீடு உள்ளதால் எந்த பிரச்னையும் இல்லை. இத்தனை வருட வாழ்க்கையில் அவருக்கு நிம்மதி தருவது மதிவதனியின் முன்னேற்றம் மட்டுமே. படிப்பில் மட்டுமில்லை எதிலும் முதலிடம் வாங்குபவள்.
அப்படிப்பட்ட மகளின் மனதில் இருக்கும் ஆசையை புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மதிவதனியின் மிகப்பெரிய கோவம். ஆனால் வெளியே காணிபித்து கொல்லமாட்டாள்.
*************
அண்ணனின் அன்பிற்கு ஏங்கியிருந்தவளுக்கு பழைய நினைவுகள் கண்ணீரை வரவைத்தது.
மாலைநேரத்தில் வாசலை கூட்ட வந்த தங்கம்மா வீட்டு முற்றத்தில் உட்கார்ந்துத்திருந்தவளை பார்த்து,
வந்தவ உள்ள வராம இங்க என்னடி பண்ற.
ஒன்னுமில்ல “ம்மா “.
அதானே பாத்தேன் உள்ள வந்தா வேலை வெக்கபோறேன்னு இங்கயே உட்காந்திருப்ப உன்ன பத்தி எனக்கு தெரியாதா?
“ப்ச்”
ரொம்ப சலிசிக்கிற உண்மைய சொன்ன கோவம்தான் வரும். அந்தந்த வீட்ல பொண்ணுங்க படிக்கவும் செய்துங்க, அவங்கவங்க அம்மாக்கு ஒத்தாசையாவும் இருகாங்க. உலகத்துல இல்லாத பெரிய படிப்பு படிக்கிற உன்ன ஒன்னும் சொல்லக்கூடாது. உங்க அப்பாக்கு மூக்குவேர்த்து முன்ன வந்துடுவார்.
எனக்கு இருக்கற உடம்புவலிக்கு அக்கடான்னு உட்காற முடில. அந்தளவுக்கு வேலை இழுக்குது என்று புலம்பினார்.
ஐயோ அம்மா எனக்கு எங்கையும் நிம்மதி இல்லை நான் என்னதான் பாவம் பண்ணனோ உன் வயித்துல வந்து பொறந்துட்டேன் என்று வெறுமையாக பேசியவள் அண்ணாமலையாரை பாத்துட்டு வரேன் என கோவமாக கிளம்பினாள்.
தொடரும் அத்தியாயம்-8 தங்கம்ஸ்
error: Content is protected !!