Skip to content
Post Views: 1,672
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் – 19
Advertisement
Advertisement
ஆண்டவர் கனி வீட்டில் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க செல்ல,. திவ்யா மாடியில் உள்ள அவர்கள் அறைக்கு செல்ல போக..
Advertisement
திவ்யா என்றவன் “இந்த ரூம்” என்று அவன் தங்கி இருந்த கெஸ்ட் ரூம்பை காட்ட. என்ன என்பது போல் பார்த்திருந்தவளை.
Advertisement
“நான் இந்த ரூம்பில் தான் இருக்கேன்” என்று கெஸ்ட் ரூம்பை காட்டியவன், அவளை கெஸ்ட் ரூம்புக்கு போக சொல்ல..
“கனி மேல உள்ள உன் ரூம்பை கிளின் பண்ணியாச்சு உன் ட்ரெஸ்சும் மேல கொண்டு போய் வச்சாச்சு” என்று யோகா சொல்ல..
“சரி சித்தி” என்றவன்.
“நீ போ திவ்யா நான் வர்ரேன்”என்றான்..
திவ்யாவுக்கு குழப்பமாக இருந்தது.. ஏன் அவன் கெஸ்ட் ரூம்பில் தங்கியிருந்தான் என்று நினைத்து கொண்டே மாடியில் உள்ள அவர்கள் அறைக்கு வந்தாள்..
ஆண்டவர்கனியின் உடை ஒரு பேக்கில் இருக்க..
இவளது உடையும் பேக்கில் தனியாக இருக்க.
ஊரில் இருந்து கொண்டு வந்த பேக்கில் இருந்து ஒரு மேக்சியை எடுத்தவள் குளித்து உடை மாற்றி வர..
ஆண்டவர் கனி கையில் சில கவர்களோடு அறைக்கு வந்தான்.
“என்ன அது கவர்ல”..
“உனக்கு தான் சாப்பிட, நட்சும், பழங்களும்” என்றவன் எடுத்து டேபளில் வைத்து விட்டு “பால் குடிக்குறீயா நாச்சியா”..
“உம்” என்றவள். “எப்போ போனிங்க இதை வாங்க”…
“பெரியசாமி கிட்ட வாங்கிட்டு வர சொன்னேன்”.. என்றவன்..பாலில் ஏதோ போட்டு கலக்குவதை பார்த்தவள்..
“என்ன போட்டு கலக்குறீங்க”…
“குங்கும பூ” என்று கூறியவன்.. “என் பிள்ளைகள் உன்ன மாதிரியே கலரா பொறங்க வேணும், அதுக்கு தான் குடி” என்றவன் அவளிடம் தந்து விட்டு. அவள் குடிக்கும் வரை பார்த்திருந்தவன்.. “வேற எதாவது வேணுமா நாச்சி”…
“உம்” என்று தலையாட்டியவளிடம். “என்ன வேணும்” என்று கேட்டவனிடம்..
அவனை கைகாண்பித்தவள், அவனை அணைக்க வர.
“ஏய் நான் குளிக்கணும்டி” என்றான்..
“பராவல்ல இதுவே நல்லா தான் இருக்கு என்றவள், அவன் வேர்வை வாசத்தை நுகர்ந்து, அவனை இன்னும் நெருங்கி அணைத்துக்கொண்டு இருக்க..
“குளிச்சுட்டு வரேன்டி”..
“வேண்டாம்” என்றவள், “நீங்க ஏன் கெஸ்ட் ரூம்புல தங்கியிருந்தீங்க”. என்றாள்..
அவளை அவனும் அணைத்துக்கொண்டே, “நீ இல்லாம இந்த ரூம் வர எனக்கு புடிக்கல.. நீ எல்லா இடத்திலும் இருக்குற மாதிரி தெரியும்,, கிட்ட போன நீ இருக்க மாட்ட.. பைத்தியம் பிடிக்குற மாதிரி இருந்தது.. அதனால தான் நீ எப்போ வர்ரீயோ, அப்போ தான் நம்ம ரூம்புக்கு வரனுமுன்னு முடிவு பண்ணி இருந்தேன்”..
“கனிப்பா” என்றவள். “என்னை ரொம்ப மிஸ் பண்ணீங்களா”..
“மிஸ்சா, நீ இல்லாம, என்னால எந்த வேலையும் நிதானம செய்ய முடியல நிறைய தப்பு பண்ணேன்,, எப்போதும் என் கண்முன்னாடி அடிக்கடி வருவ.. ஏதோ உயிர் இல்லாத ஜடம் போல் நிற்பேன், உன்னை பார்த்து அடிகடி ஏம்மாந்த போயிருவேம்.. இப்போ நீ வந்து தான், எனக்கு உயிர் கொடுத்து இருக்க”
இன்னும், இன்னும் நெருங்கி அவனை அணைத்துக்கொண்டவள், “ஐ லவ் யூ கனி”..
“நானும் தான் பொண்டாட்டி” என்றவன் அவளின் முகம் முழுவதும் முத்தமிட. அவன் அவளை விட்டதும், இவள் கனிக்கு முத்தமிட, இருவரும் மீண்டும், மீண்டும் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி முத்தமிட, முத்த யுத்தம் ஆகி, அடுத்த கட்டத்துக்கு அவர்கள் மூழ்கி இருக்க.
ஆண்டவர் கனி போன் ஒலித்தது.. ஆண்டவர்கனியும், திவ்யா வும் வேறு உலகில் இருக்க. நீண்ட நேரம் போன் ஒலிப்பதை கேட்ட திவ்யா தான்.
“கனி உங்க போன் அடிக்குது”..என்றாள்.
“அது பாட்டுக்கு அடிக்கட்டு நீ சும்மா இருடி” என்றவன். அவன் விட்டதில் இருந்து தொடர.
“கனி”என்று அவனை அவளிடம் இருந்து தள்ளி போனை எடுத்து, அவனிடம் தந்து “யாருன்னு பாருங்க” என்றாள்.
ஆண்டவர் கனி முனங்கியபடியே போனை எடுத்து பார்க்க.
ஏதோ பதியாத எண் வர. “யாரோ அன் நோன் நம்பர் டி, காலையில் பேசுறேன்” என்று அவளை அணைக்க வர.
“பேசுங்க கனி” என்று அவள் முறைக்க.
“பேசாம விடமாட்ட” என்று அந்த நம்பருக்கு போன் போட.
போனை எடுத்த அன்பு.
“ஆண்டவர் கனி” என்றான் .
“உம் கனி தான் பேசுறேன், நீங்க”..
“நான் அன்பு கனி”.. என்றான்.
இவனா என்று மனதில் நினைத்தவன்..
“சொல்லு அன்பு”..
“வாழ்த்துக்கள் கனி, மாமா இப்பதான் சொன்னாங்க அதான் கால் பண்ணேன்..என்றவன்..”திவி கிட்ட பேசனும்” என்றான்.
“உம்” என்று போனை திவ்யாவிடம் தர..
“யாரு” என்று கனியிடம் கேட்டுக்கொண்டே போனை வாங்க.
“ஏய் சரவெடி” என்றான் அன்பு..
“மச்சான்” என்றவள் எழுந்து அமர..
ஆண்டவர் கனிக்கு கோபம் வந்தது. மச்சானா, மச்சான் பொல்லாத மச்சான். என்று முனங்கியபடியே எழுந்து அமர..
“நன்றி மச்சான், தாங்யூ மச்சான், ஓகே மச்சான் நான் பாத்துக்கிறேன், உம் நல்லா சாப்பிடுறேன், உம் நல்லா இருக்காங்க” என்று பேசிக்கொண்டே கனியை பார்க்க..
அவனோ இவள் வார்த்தைக்கு, வார்த்தை மச்சான் போடுவதை கேட்டவன், எத்தனை மச்சான் சொல்லி கூப்பிடுற பாரு, என்னை ஒருவாட்டியவது ஆசையா மச்சான்னு கூப்பிட்டளா இவ, என்று முனங்கிய படியே இருக்க.. போன் பேசிக்கொண்டே
கனியை தன் மார்போடு சேர்த்து அணைத்து வைத்துக்கொண்டவள். அவனின் தலையை வருடி விட..
கனிக்கு அவளின் செய்கையில் சிரிப்பு வர. ஆயிரம் மச்சான் வந்தாலும் தான் இவள் இதயகனி என்றவன், அவளை இன்னும் தன்னோடு அணைத்து க்கொள்ள..
திவ்யா அவனின் தலையை வருடிக்கொண்டே பேசினாள்.
அன்பு அவளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, “பார்கவி பேசுற” என்றவன்..
பார்கவிடம் போனை தர..
“திவ்யா நான் பார்கவி”..
“பாரு எப்படி இருக்கீங்க,”.
“நான் நல்லா இருக்கேன் பார்கவி, நீயும், அன்பு மச்சான் எப்படி இருக்கீங்க”..
“நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம் திவி, நீங்க, குட்டி பாப்பா, எப்படி இருக்கீங்க”..
“உம் சூப்பரா இருக்காங்க குட்டீஸ், நானும் நல்லா இருக்கேன்”.
“அங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா”..
“எல்லாரும் நல்லா இருக்காங்க”..
“திவ்யா நல்லா சாப்பிடுங்க, ஹெல்தியா சாப்பிடுங்க” என்று மருத்துவராக சிலவற்றை சொல்லிவிட்டு “ஓகே திவ்யா, உடம்ப பாத்துக்கோங்க, எதாவதுன்னு கால் பண்ணுங்க”.என்றாள்.
“ஓகே பார்கவி, நான் பாத்துக்கிறேன், அப்பறம் நீங்களும் சீக்கிரமா குட் நீயூஸ் சொல்லனும்” என்று திவி சொல்ல..
“கண்டிப்பா” என்றவள் போனை அனைத்து கையில் வைத்திருக்க.
அன்பு அவள் கண்டிப்பா என்று சொல்வதை கேட்டவன்.
” என்ன பார்கவி, எதுக்கு கண்டிப்பா அப்படி என்ற வார்த்தை சொன்ன” என்றான்…
அவளோ “ஒன்றுமில்லை” என்று சொல்லி விட்டு நகர.
அவளின் கையை பிடித்தவன். “சொல்லு இட்லி” என்று அவளின் கன்னத்தை பிடித்து ஆட்ட.
“அது அது வா,,” என்றவள்..
“நாம எப்போ குட் நியுஸ் சொல்ல போறோமுன்னு கேட்டாங்க”..
“என்ன குட் நியுஸ்” என்றான்..
“அது குட் நீயுஸ்சுன்னா” என்றவள் சொல்ல தயங்க..
“என்ன பார்கவி, தெளிவா சொல்லு” என்றான்.
“அது நமக்கு.. நமக்கு அவங்கள மாதிரியே” என்று இலுக்க.
புரிந்து கொண்டவன், மெல்ல சிரித்துவிட்டு, “உனக்கு குழந்தைகள் பிடிக்குமா” என்று கேட்டுக்கொண்டே அருகில் வர..
“உம் ரொம்ப புடிக்கும்”.. என்னவளை.
தன் கை வளைவுக்கு கொண்டு வந்தவன்.
“அப்போ உனக்கும் குழந்தை வேணுமா” என்று அனுமதி கேட்டு நிற்க..
“எனக்கு முதலில் குட்டா தான் வேணும் அவனை கூட்டிட்டு இலங்கை முலுவதும் சுத்தனும் அப்பறம் , என் சின்ன வயசு கதையெல்லாம் என் குட்டா கிட்ட பேசனும் நான் பாத்த இடத்துக்கெல்லாம், கூட்டிட்டு போய் காட்டணும், இன்னும் நிறைய இருக்கு” என்று பேச.
அவன் கண்ணோடு கண் பார்த்து “என் குட்டா கையை பிடிச்சு கிட்டு இலக்கை முலுக்க சுத்தி வரனும்”.
“இது என்னோட நீண்ட நாள் ஆசை வருவீங்களா அன்பு”..
அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன்.. அவளை பார்த்து சிரித்து “கண்டிப்பா வர்ரேன் உன் குட்டாவா”.என்றவன். “நீயா என்னை புருஷனா நெனச்சி எப்போ நெருங்கி வர்ரீயோ, அப்போ வா, அதுவரைக்கு நான் உன் குட்டா தான்”. என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ள..
“குட்டா”… என்று கத்தியவள் அவனை அடிக்க துரத்தினாள்..
“கன்னம் பன்னு மாதிரி இருந்த கிள்ள தான் செய்வோம்”.. என்றவன் அவளிடம் சிக்காமல் ஓட..
“போ.. குட்டா என்னால முடியல” என்றவள். மூச்சு வாங்கி கொண்டு அமர.
அவள் அருகில் வந்து அமர்ந்தவன், “எப்போ இலங்கை போலாம்” என்றான்..
“போலாம், அது என்னோடு பிரண்டு கல்யாணம் இன்னும் பத்து நாள் வருது, நாம சேர்ந்து போலாமா”..
“உம் தேட் மட்டும் சொல்லு, நான் வொர்க் ப்பிரி பண்ணிக்கிறேன்” என்றான்..
“உம்”என்றவள்..
அவள் அறைக்கு சென்று விட.. அவள் போகும் வரை அவளேயே பார்த்திருந்தவன்.. நீண்ட மூச்சை விட்டான்..
ஆண்டவர் குளித்து வந்தவன், திவ்யாவை பார்த்து “என்ன உன் அன்பு மச்சான்கிட்ட பேசி முடிச்சாச்ச” என்றான்..
“உம்… பேசி ஆச்சு” என்றவள். சிரிக்க..
“என்ன இளிப்பு” என்றான்.
“அன்பு மச்சானை மச்சான்னு கூப்பிட்ட உங்களுக்கு பிடிக்காது
தானே”..
“ஆமாம் பிடிக்காது, என்னை வெறுப்பேத்த தானே அவனை அத்தன மச்சான் போட்ட..”
அவளோ “ஆமாம்” என்று சிரிக்க..
error: Content is protected !!