Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 19 2

“இனிமேல் மச்சான்னு  அவனை கூப்பிடு, கூப்பிட்ட வாய்க்கு தண்டனை குடுக்கிறேன்”  என்றவன்.

அவளின் இதழோடு  இதழ் மூட..



Advertisement

“இதுதான்  உங்க ஊருல தண்டனையா, மதுரை பஸ்”.

“போடி” என்றான் கோபமாக இருப்பது போல்.

Advertisement

Advertisement

“நீ வாயா ஹஸ்பண்ட்”  என்றவள். அவனை  அணைத்து கொண்டு படுக்க வைக்க..

ஆண்டவர்கனி கொஞ்சம் விரப்பாக  இருக்க.

Advertisement

அவனின் இடுப்பில் கிச்சு, கிச்சு மூட்டியவள், அவனை சிரிக்க வைக்க..

“அடியே  நான் பண்ணுறத எல்லாம் நீ பண்ணுற, பிள்ளை இருக்குன்னு  பாக்குறேன் இல்லனா” என்றான்.

“பிள்ளை  இல்லனா மட்டும்” என்றவளின்  வாயை தன் இதழ் கொண்டு மூடியவன்…

நீண்ட இதழ் முத்தமிட்டே  அவளை விட்டவன், “இனி  நீ பேசுவ” என்றவன்.

அதற்கு மேல்  அவளை பேசவே விட வில்லை கனி,  இருவரின் நான்கு மாத பிரிவை அவன் முத்தங்களால் அவளுக்கு உணர்த்த,  மீண்டும் ஏதோ பேச வந்தவளை, அவன் ஆழுமைக்கீழ் கொண்டு வந்தவன்.

அவளிடம் தன் உரிமையை நிலை நாட்ட, கனி, கனி என்று உருகியது பெண், அவனின் அணுகு முறையில்  மெய்சிலிர்த்தவள், போதும் என்பது போல் கனியை பார்க்க, இன்னும் வேணும் என்பது போல் அவனின்  கைகல், அவள் உடலில் வீணை மீட்ட, “போட மதுரை” பஸ் என்றாள்.

“எங்கடி போக” என்றான்.

அவளின் காது மடலில் உரசி கொண்டை..

 “இவ்வளவு ஆசை வச்சிகிட்டா என்னை பாக்க வரமா இருந்தீங்க”..

” என் ஆசை, என் உயிர்டி நீ” என்றவன். அவளின் இதழில் அலுத்தமாக முத்தமிட்டு சொல்ல..

“போடா  மதுர பஸ்”என்றவன், அவன் மார்பின் மீது தலைவைத்து கொண்டு  கண்கலங்க..

“அடியே பொண்டாட்டி,” என்றான். அவளோ  அமைதியாக இருக்க. “ஏ.. புஸ், புஸ் பொண்டாட்டி”..என்றான்

“என்ன!… யாரு புஸ், புஸ்”..

“நீ  தான், பாரு எப்படி இருக்க, நல்ல மெத்தை மாதிரி புஸ், புஸ்னு” என்றவன். அவளின் எடை கூடிய இடத்தை தடவி சொல்ல.

 “தள்ளி போ”  என்று அவனை தள்ள.

அவள் தள்ள முடியாதபடி அவனுள் சேர்த்து வைத்துக்கொண்டவன்.

“தாங்யூ பொண்டாட்டி”..

எதுக்கு என்பது போல்  அவள் பார்க்க..

“எல்லாத்துக்கும் தான், நீ  என் கூட  இருந்தா தான், எல்லாம் என்கிட்ட இருக்குற மாதிரி ஒரு பீல், நீ இல்லதா அந்த நாட்கள்”என்றவன் கண்மூடி  அமைதியாக இருந்தவன் “வேதனையான நாட்கள், அந்த வேதனை இனி எனக்கு வர கூடாது”.. இனி விடுவேன்  உன்னை.. என்பது முத்தமிட..

“வலிக்குது, விடுங்க”  என்றாள்..

“சாரிடி ரொம்ப அமுக்கிட்டேனா”..

“உம்ம்..”என்றவள்.. ஆண்டவர் கனியின் முகத்தையே பார்த்து இருக்க..

“என்னடி  என் முகத்தை உத்த பார்க்குற”..

 “எனக்கு உங்கள மாதிரியே இரண்டு ஆண்டவர் கனி பிறக்கணும்” என்றாள் ஆசையாக கணவனின் முகம் பார்த்து.

“உனக்கு எது இஷ்டமோ அப்படி நடக்கும் சரியா” என்றவன் அவளின் தலையில் முத்தமிட்டு அணைத்துக்கொள்ள..

 சுகமாக தூங்கினாள் திவ்யா அரிய நாச்சி..

விடிந்தும் இருவரும்  நன்றாக தூங்கி கொண்டு இருக்க..

ஆண்டவர் கனி கதவு தட்டும் ஓசையில் தான் கண்விழித்தனர் இருவரும், ஆண்டவர் கனி எழுந்து  இருவரின் ஆடையை சரிபண்ணியவன்.. கதவை திறக்க.

பெரியசாமி நின்றிருந்தான்.

என்ன என்பது போல் கனி பார்க்க..

தங்கை மீனாட்சியும், அவள் மாமியார், மாமானார் அண்ணியை பார்க்க வந்திருப்பதாக சொல்ல..

“வர்ரேன்டா”.. என்றவன். திவ்யாவை முத்தம் கொடுத்து எழுப்பி, இருவரும் குளித்து  முடித்து ரெடியாகி கீழே வந்தனர்.

திவ்யாவை பார்த்த அனிகுட்டி ஓடி வந்து அவளின் கால்களை “அத்தை” என்று கட்டிக்கொள்ள..

“தங்க குட்டி எப்போ வந்தீங்க”  என்று அவளை தூக்க..

தூக்காத மா என்றனர் அனைவரும், “ஒன்னும் ஆகாது” என்றவள், அவளை தூக்கிக்கொண்டு வந்து, மீனாட்சியை பார்த்து “வாங்க” என்று அழைத்தவள். அவளின் மாமியாரையும், மாமானாரை “வாங்க, வாங்க”  என்று அழைக்க..

“நீ நல்லா இருக்கீயம்மா”  என்றனர் இருவரும்..

நல்லா இருப்பதாக, தலையையாட்டியவள்.  அனிகாவிடம் பேச..

மீனாட்சி திவ்யாவின் அருகில் வந்து அவளின் கையை பிடித்து கொண்டு அவளின் முகத்தை பார்க்க,,  ” என்ன  அண்ணி, குட்டி பாப்பா எங்கே” என்றாள்..

“பாப்பா இல்ல தம்பி, வா உள்ள தூங்குறான்”  என்றவள்  மகன் தூங்கும் அறைக்கு அழைத்து செல்ல,, இரண்டு மாத குழந்தை பெட்டில் தூங்குவதை பார்த்தவள்..

“அழகா இருக்கான் அண்ணி” என்றாள்..

திவ்யாவிடம் மீனாட்சி  மன்னிப்பு  கேட்க,  “அண்ணி அத விடுங்க, தம்பி  பேர் என்ன?..

“கிரிஷ்”  என்றாள்..

“நல்லா இருக்கு   குட்டி தம்பி பேரு”இருவரும் பேசிக்கொண்டு இருக்க.

வெளியில்   என் பொண்ணு, என் பொண்ணு என்று அழும் சத்தம் கேட்டு, இருவரும் வெளியில் வர…

மீனாட்சியின் மாமியார் “என் பொண்ணு”  என்று அழ..

“என்னாச்சு அத்தை”  என்றாள் மீனாட்சி..

“கமலிக்கு  ஆக்சிடன்ட் ஆகியிருக்காம், ஹாஸ்பெட்டலில் இருக்காளாம்” என்று அழுது கொண்டே கூற..

ஆண்டவர் கனி “பேசுறதுக்கு  டைம் இல்ல கிளம்புங்க. மதுரையில பிளைட் இருக்கு ஒரு மணி நேரத்துல  பெங்களுர் போகிறலாம் வாங்க போலாம்”  என்று அழைக்க..

“அண்ணா  உனக்கு  காலில்  அடிப்பட்டு இருக்கு, நீ எப்படி  ஏர்போர்ட்க்கு வண்டியில கூட்டிட்டு போவா”  என்றான்..

இங்கே நடந்ததில்  அவனுக்கு காலில் அடிபட்டதே  மறந்து போனான் ஆண்டவர் கனி.

“நீ போய்  அவங்களை  ஏர்போர்ட்டு விட்டு வா என்க”.

மீனாட்சியின் மாமியார் “எங்களுக்கு பிளைட்டுல போக தெரியாது, பஸ்சுல  போறோம், இல்ல கார் புக் பண்ணி குடுங்க என்று சொல்ல”..

பெரியசாமியை பார்த்த யோகா, “சம்பந்தி கவலை படாதீங்க, தம்பி வருவான்”  என்றவர்..

பெரியசாமியை பார்த்தவர்,  “அத்தையையும்,  மாமாவையும் பெங்களுருக்கு கூட்டிட்டு போய், ஹாஸ்பெட்டலில் விட்டு, அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செஞ்சு குடுத்துட்டு வா”  என்றவர்  அவனின் முகத்தை பார்த்து முறைக்க..

அந்த முறைப்பு,  காரணம் அவன் செய்தே ஆகா வேண்டும் என்று செய்தி இருக்க.

“சரி” என்றவன்  இருவரையும் அழைத்து கண்டு பெங்களூரு

கிளம்பினான்..

அவனுக்கு உதவி செய்யும் எண்ணமே இல்லை,  அவங்களுக்கு பிளைட் ஏத்தி விட்டா போக  தெரியாத என்றவன். இம்சை பிடிச்சவங்க, ஒரு உதவி  பண்ண, ஓவரா பண்ணுறாங்க, அவனுக்கு சூப்பர் மார்கெட்டில் வேலை அதிகமாக இருக்க, இன்று  லோட் வருவதால், கோபமாகவே வந்தான் பெங்களுருக்கு..

அவர்களுக்கு  எங்கே இறங்குவது, ஏறுவது கூட தெரியவில்லை, ஒன்று, ஒன்றாக சொல்லி கொடுத்து  எப்படியோ அழைத்து வந்து விட்டான், கமலியை சேர்த்து இருந்த  ஹாஸ்பெட்டலுக்கு.

இரண்டாம் தளத்தில் கமலி இருக்க.. அந்த தளத்திற்கு  அவர்களை அழைத்து வந்தான்,கமலியுடன் வேலை பார்க்கும் தோழிகள்  சிலர்  நின்று இருக்கு.

இளங்கோ  அவர்களிடம் சென்று “என்னாச்சு என் பொண்ணு கமலிக்கு” என்று கேட்க..

“நீங்க தான் கமலி அப்பா, அம்மாவா”?..

“ஆமாம்”.

“ஏன்  சார்  அவளை  கல்யாணம்  பண்ணிக்கோ, பண்ணிக்கோன்னு  கம்பல்  பண்ணீங்க,  ரொம்ப  நாளா அவ  சரியாவே  சாப்பிடல.  ஏதோ புலம்பிட்டே இருந்தா. இன்னைக்கு   வேலைக்கு போயிட்டு  நடந்து வரும்  போது   படியில  இருந்து மயங்கி விழுந்துட்டா, தலையில நல்ல அடி, தையல் போட்டு இருக்கு..

நீங்க  பாத்துக்கோங்க”  என்று அனைவரும்  சென்று விட..

இளங்கோவும்  சாராதாவும்  மகள் இருக்கும் அறைக்கு செல்ல, கமலி மயங்கத்தில்  இருந்தாள்..

மகள்  அருகிலே  சாரதா அமர்ந்துவிட.. இளங்கோ  பெரியசாமியுடன்  வெளியில்

  அமர்ந்திருந்தார்..

சிறிது நேரத்தில் கமலி கண் விழித்து  சாரதாவை பார்த்து  “அம்மா” என்று அழைக்க, மகளை பார்த்தவருக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது..

“ஏன்டி இப்படி பண்ணி வச்சு இருக்க”..  என்றவர்  “ஏங்க, ஏங்க” என்று கணவரை  அழைக்க.

கதவை திறந்து கொண்டு வந்தவர் “பாப்பா கண் முழிச்சுட்டீயா”, என்று கேட்டுக் கொண்டே வந்து “ஏன்டா  இப்படி பண்ணி  வச்சு இருக்க”   என்று  சத்தம் போட..

கமலி  அமைதியாக  இருந்தாள்..

“கமலி, கமலி”  என்று  கமலியோட ஹாஸ்டலில் தங்கி  இருக்கும் ஒரு தோழி வர..

“வா” என்றாள் கமலி..

“இப்போ ஓகே  வா கமலி, எத்தனை தடவை சாப்பிடு, சாப்பிடுன்னு சொன்னேன் கேட்டீயா  நீ..  என்று திட்டிக்கொண்டே கமலி அருகில் வந்தவள்..

என்னாச்சு  தலையில் கட்டா?.! எத்தன  தையல்  போட்டு இருக்கு” என்றாள்.

“24 தையல் நீளமா போட்டு  இருக்கு”.  “பாவம் டி எத்தன  கஷ்டம் தான் உனக்கு வரணும்,  வேலைக்கு போயிட்டு வரனும்,.. இதுல  உன்  காதல் வேற”  என்று ஏதோ  கூற.. வர..

“மது  நீ  கிளம்பு” என்றாள் கமலி..

“நீ சும்மா இரு கமலி, நி தினமும் படுற வேதனை  என்னால பார்க்க  முடியலடி, நான் சொல்லிட்டு தான் போவேன்”என்றவள்..

கமலின் அம்மா சாரதாவின் கையைபிடித்த மது “அம்மா”  என்று ஏதோ கமலியை பத்தி சொல்ல வர..

“மது நீ கிளம்பு”!! என்று கமலி கத்த..

 அவளோ கமலியின் பேச்சை கேட்காமல், சாரதாவின் கையை பிடித்தவள், “கமலி  ஒரு பையனா லவ் பண்ணுற, அவன் முகத்த  அவ  நெஞ்சுல டாட்டூ போட்டு இருக்க  நாங்க  கூட  அத சரிய பாக்கல,  நீங்க  அந்த  பையன் யாருன்னு கேட்டு  கல்யாணம் பண்ணிவைங்க,  அந்த பையன் இல்லண்ணா, அவ வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டா, தயவு பண்ணி என் பிரண்டுக்கு அவ இஷ்டப்படியே கல்யாணம் பண்ணி வைங்க”  என்று சொல்லி முடித்து விட்டு. “உடம்ப  பாத்துக்கோ”  என்று மது  சென்றாள்….

“யாருடி அது, யார் அது”  என்ற சாரதா   கோபமாக கேட்க..

கமலி பேசாமல் அமைதியாக  இருக்க.. “சொல்லுடி, சொல்லு”என்றார்..

“அமைதியா கேளு சாரதா”, என்றார் இளங்கோ.

“என்ன அமைதியா கேளு, எந்தன தடவை இவ கிட்ட  கேட்டேன், ஏதாவது  பையன லவ் பண்ணுறீயான்னு, இவ இல்லண்ணு தான சொன்னா,, இப்போ என்னாச்சு உனக்கு, சொல்லுடி”..

கமலி ஒரு வார்த்தை  பேசாமல் அமைதியாக இருக்க..

“இவ  நம்ம பேச்ச கேட்க மாட்டா, நீங்க ஹாஸ்டல் போய் அவ ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க, நாம இவள ஊருக்கே கூட்டிட்டு போகலாம், இவ இனி இங்கே இருக்க வேண்டாம், வேலைக்கும்  போக வேண்டாம்,  வீட்டோட இருக்கட்டும்”.  என்று கணவரிடம் சொல்ல..

“அம்மா,! நான்  வேலைக்கு  போவேன், நீ  ஊருக்கு கிளம்பு, என்னை பாத்துக்க எனக்கு தெரியும், கிளம்பு நீ ”  என்றவள்.. எழுந்து அமர..

“பாப்பா, அம்மா பேச்சு கேளு பிடிவாதம், பிடிக்காத ஊருக்கு வா”..  என்றார்.

‘என்னால வர முடியாது பா, எனக்கு கல்யாணமும் வேண்டாம்”.

“எப்படி  பேசுறா பாருங்க கல்யாணம் பண்ண மாட்டளாம்”..

“நீ ஊருக்கு வர்ர, கல்யாணம் பண்ணுற” என்றார் சாரதா..

“அது நான்  செத்ததான் நடக்கும்”..

“உன்ன பெத்து வளத்தா, சாவுவேன்னு சொல்லுற, நீ முதல்ல சாவு, உன் பெத்த பாவத்துக்கு  நாங்களும் சாகுறோம்”  என்று பேசிக்கொண்டே சாரதா அழ .

 பெரியசாமி இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை அனைத்தையும்  வெளியில் அமர்ந்து  கொண்டு  கேட்டு கொண்டு இருந்தவன். சாவு அது இது என்று பேசுவதை கேட்டவன்.

இனி பேசாமல் எப்படி இருக்க என்றவன் கமலி இருந்த அறைக்குள் நுழைய..

யார்  என்று கமலி  பார்க்க.. சத்தியமாக  இவனை எதிர் பார்க்க வில்லை கமலி.. அப்படியே  அவனை கண் எடுக்காமல்  பார்த்திருக்க..

வந்துட்டீயா என்னை தேடி என்று மனம் அவனிடம் செல்ல

“அத்தை நான் கமலி கிட்ட பேசுறேன், நீங்க இரண்டு பேரும் வெளியில போய் காபி குடிச்சுட்டு வாங்க” என்றான்..

“சரி தம்பி, நம்மல பத்தி அவ கிட்ட சொல்லுங்க, இந்த காதலெல்லாம்  நமக்கு ஒத்து வருமா, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல சொல்லுங்க  தம்பி”.. என்று சாரதா கணவரோடு வெளியே கிளம்ப..

கமலியை  பார்த்தவன்  தலையில் கட்டு, ஊதா கலர் சுடிதார், அணிந்து இருந்தாள், அழுத முகம், அவன் பார்த்த சிறிய பெண், வளர்ந்து  இருந்தாள், கட்டில் அமர்ந்து இருக்க..

அவள் அருகில் வந்து ஒரு சேர் போட்டு அமர்ந்தவன்..

“ஏய் பாப்பா என்ன பெரிய மனிஷி மாதிரி சாவு, கீவுன்னு  பேசுற,  அம்மா, அப்பா  சொல்லுற பேச்ச   கேட்டு நட, அது தான் உனக்கு நல்லது”  என்றவனை..

“வெளியில  போடா”.. என்றாள் கமலி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!