Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

Tnk-20-1

“டேய் யார் டா நீங்க ஏன் என்ன தூக்கிட்டு வந்தீங்க”என்று அந்த இருட்டு அறையில் வெளியே செல்ல வழி தெரியாது கத்தி கொண்டிருந்தான் சுபாஷ்.

 

“டேய் எங்க டா கொண்டு வந்து இருக்கீங்க என்ன”என்று சுற்றி பார்த்து கத்தியவன்

“ டேய் எங்க அம்மா பாவம் என்ன தேடுவாங்க டா. ப்ளீஸ் என்ன விட்டுங்க. இன்னைக்கு எனக்கு ரிசல்ட் டா ப்ளீஸ் என்ன விட்டுங்க”என்று கெஞ்ச தொடங்கினான் சுபாஷ்.



Advertisement

“டேய் சொன்னா புரியாதா உங்களுக்கு வெளிய விடுங்கடா என்ன”என்று அவன் கத்திக் கொண்டிருக்கும்போது வெளியே,

“யோவ் இதுலாம் தேவையா எதுக்கு இந்த வேலை பாவம் அவன். ஒரு பெரிய மனுஷனா எப்பவாவது நடந்து இருக்கீங்களா ஜீனியர் ”

“நீ சும்மா இருடா உனக்கு என்ன தெரியும். இது தான் இப்ப உள்ள ட்ரெயிண்ட் இது கூட தெரியல நீயெல்லாம் டூகே(2K) கிட்ஸ்”என ஸ்டைலாக தலைக்கோதி கேட்டார் வேதாச்சலம்.

Advertisement

“கடவுளே இந்த கொசு தொல்லை தாங்க முடியலேயே. 70ஸ்-ல பிறந்துட்டு இதெல்லாம் என்ன கலாய்க்குது. என்ன ண்ணா மாடு மாதிரி என்னைய பாத்துட்டு இருக்கே எதாவது பண்ணுடா பாவம் அந்த சின்ன பையன்”என்றான் சரண் தனது அண்ணனிடம்

Advertisement

 அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு, “வர வர கொஞ்சம் ஓவரா தான் போற வசமா என்னை கிட்ட மாட்டுவ அப்ப இருக்குடி உனக்கு” தனது தம்பியிடம் மெதுவாக சொல்லிவிட்டு

 தன்னை பாவமாக பார்த்துக் கொண்டு நின்ற அத்தையும் அவன் மனைவியும் பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு, “தாத்தா போதும் அவன் சின்ன பையன் ரொம்ப பயந்திடுவான் வாங்க போய் அவனை பார்க்கலாம்” என்று சொல்லி அந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்ற திருவை பார்த்த சுபாஷ், “மாமா”என்று அழைத்துக் கொண்டு அவன் அருகில் வர, “ஹேய் சப்ரைஸ்”என்று கேக் உடன் அவன் பின்னால் வந்து நின்றவர்களைப் பார்த்தவுடன் உண்மையில் ஒன்றும் புரியாமல் முழித்து நின்றான் சுபாஷ்.

“யோவ் அந்த பையன் முகத்தை பாருயா பாவம் எப்படி ஒன்னுமே தெரியாம பச்சமண்ணு மாதிரி இருக்கான்.அவன போய் இப்படி பண்ற. இதுலாம் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா” என்றான் சரண்.

Advertisement

“டேய் இத பத்தி உனக்கு என்ன டா தெரியும் போடா பூமார் பாய்”

“யோவ் யார பாத்து பூமார் சொல்லுற”

“உன்ன பாத்து தான் சொன்னேன்டா டொமட்டோ”

“யோவ் வேதா பாய் என்னை பாத்து என்ன சொன்ன”என்று அவரிடம் எகிறிக் கொண்டு சென்றவனின் கையை பிடித்து நிறுத்திய திரு, “டேய் கொஞ்சம் சும்மா இருடா” என்று தனது தம்பியை அடக்கியவன், “தாத்தா நீங்களும் கொஞ்சம் பேசாம இருங்க சும்மா எப்ப பாத்தாலும் ரெண்டு பேரும் சண்ட போடுறதே பொழப்பா போச்சு” என்று இருவரையும் அடக்கியவன், ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த தனது குட்டி மச்சான் அருகில் சென்று அவனை கட்டி அணைத்து, “வாழ்த்துக்கள் மச்சான் நீ ஸ்கூல்ல பஸ்ட் வந்து இருக்க” என்றான் திரு சுபாஷை தழுவிக்கொண்டு

“டேய் ஸ்கூல் ஃபர்ஸ்ட் மட்டுமா வந்திருக்கான். நம்ம டிஸ்ட்ரிக்ட் ல நீ தான் ஃபர்ஸ்ட் மார்க் குட்டி மச்சான்” என்றான் சரண் சத்தமாக

 

  அவன் சொன்னதை கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் முழித்த சுபாஷ் திருவின் பின்னே நின்ற தனது அன்னையைப் பார்க்க, அவர் கண்ணில் நீருடன் தனது இரு கைகளை விரித்து மகனை தன்னிடம் கூப்பிட சிறு நொடிக் கூட தாமதிக்காமல் அவரின் கரங்களுக்குள் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, “அம்மா நான் ஜெயிச்சுட்டம்மா இனி எப்படியாவது உன்ன கண்கலங்காம பார்த்துக்குவேன்”என்றான் சந்தோஷ கண்ணீருடன் சுபாஷ்

“ஆமா டா செல்லம் ஜெயிச்சிட்டே எப்படியாவது உங்கள் அப்பா ஆசைப்பட்ட மாதிரி உன்ன டாக்டராக்கி பாத்துட்டா போதும்டா எனக்கு”என்று மகனை அணைத்து கொண்டு மேலே பார்த்து, “என்னங்க உங்க பையன் டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் வந்து இருக்கான். நீங்க ஆசைப் பட்ட மாதிரி என் தலைய ஈடு வைச்சாவது எப்படியாவது இவன டாக்டர் ஆக்கிடுவேன்”என்று சொன்ன தனது அன்னையை பார்த்து, “அம்மா நான் டாக்டருக்கு எல்லாம் படிக்க மாட்டேன். நீ தேவை இல்லாம வார்த்தை விடாத”என்றான் சுபாஷ் வேகமாக

அதில் அதிர்ந்துப் போய் அனைவரும் அவனை பார்க்க, “ டேய் என்னடா சொல்ற” என்றார் இந்திரா அதிர்ச்சியுடன்

“ஆமாம்மா நான் உண்மைய தான் சொல்றேன் என்னால எல்லாம் டாக்டருக்கு படிக்க முடியாது” என்றான் தீர்மானமாக

 “டேய் என்னடா சொல்ற இதுக்கு தான் உன்னை நான் கஷ்டப்பட்டு படிக்க வச்சேனா. உங்க அப்பா ஆசைய நிறைவேத்தணும் கொஞ்சம் கூட உனக்கு தோணலையா என்னடா பிள்ள நீ. நம்ம அம்மா எவ்ளோ கஷ்டப் படுறாங்க நம்ம அம்மாவ இந்த ஊர்ல உள்ளவங்க எப்படி எல்லாம் பேசுறாங்க. அவங்க முன்னாடி நம்ம வாழ்ந்து காட்டணும்னு அம்மாவ பெருமைப்பட வைக்கணும்னு தோணலையா டா உனக்கு”என்று அவனை அடிக்க சென்றவளின் கையை பிடித்த வேதசலாம் தாத்தா

“கொஞ்சம் பொறுமையா இரு மா காரணம் இல்லாமல் எதுவும் சொல்லற பையன் இல்லம்மா அவன். என்னன்னு விசாரிப்போம் அதுக்கு பிறகு நம்ம முடிவு பண்ணலாம் நீ தேவை இல்லாம பேசாதம்மா” என்றார் பொறுமையாக

“ எப்படி பெரியப்பா பொறுமையா இருக்க முடியும் பாத்தீங்க தான எப்படி பேசுறான்னு. அவர் போன பிறகு ஒவ்வொரு வேளையும் இவங்களுக்கு சாப்பாடு போடுறதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா. இதோ இந்த ஊரு பக்கம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தான் வரணும்னு இருந்தேன். ஆனா இப்ப பாருங்க சாப்பாட்டுக்கு வழி இல்லாம பஞ்சம் பொழைக்க வந்த மாதிரி இங்கே வந்துருக்கேன். எல்லாம் யாருக்காக இதோ இவங்க ரெண்டு பேருக்காக மட்டும் தான. அவர் எங்களை விட்டு போகும் போது நானும் அவர் கூட சேர்ந்து போக எனக்கு தெரியாதா எதுக்கு போகாம இருக்கேன் இதோ இந்த ரெண்டு பிள்ளைகளை எப்படியாவது வாழ்க்கையில ஒரு நிலைக்கு கொண்டு வரணும் தான. ஆனா இந்தப் பிள்ளைகளை பாருங்க எதையுமே புரிஞ்சுக்காம எப்படி இருக்காங்கன்னு. இதோ இங்கே நிக்காளே உங்க வீட்டு மருமக இவ என்னை எப்படி நிலைமையில் கொண்டு வந்து வச்சா கொஞ்சம் சறுக்கி இருந்தாலும் இந்த ஊரே எங்கள காரித் துப்பி இருக்கும். ஏதோ நாங்க பண்ண கொஞ்ச நஞ்ச புண்ணியம் தான் உங்களை மாதிரி ஒரு குடும்பத்தில் இவள கரைச்சேர்த்து இருக்கு. அவளை பத்தி நான் நிறையக் கனவு கண்டேன். ஆனா இப்ப பாருங்க எதையுமே செய்ய முடியல” என்ற தனது அம்மாவை குற்ற உணர்வோடு நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்ணீருடன் தலைக்குனிந்தாள் திவ்யா.அவளின் அந்த உணர்வை புரிந்ததுப்போல் அவளின் கையை இறுக பற்றிக் கொண்டான் திரு.

“சரி ஓகே என்ன இருந்தாலும் உங்க குடும்பத்துல அவ வந்து சேர்ந்தது ஒரு நல்ல முடிவுதான்னு மனச தேத்திக்கிட்டேன் ஆனா இவன பாருங்க. எல்லாம் கூடி வரும்போது தாழிய உடைச்ச மாதிரி எப்படி பேசுகிறான் பாருங்க பெரியப்பா. இதெல்லாம் பாக்குறதுக்கு நான் அவர் கூடவே செத்து போயிருக்கலாம் தோணுது” என்று சொல்லி இந்திரா அழ

“இங்க பாருமா தங்கச்சி எதுக்கு இப்ப முடிஞ்சு போன விஷயத்தை பத்தி பேசுற. இப்ப ஏன் அழுவுற உன் பையன் டாக்டர் படிக்க மாட்டேன்னு சொன்னதுகாகவா. இங்க பாரு மா பிள்ளைங்க மேல நமக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதேபோல அவங்க வாழ்க்கையில அவங்க என்னவாகணும்னு அவங்களுக்கும் ஒரு ஆசை இருக்கும் அத புரிஞ்சி நடந்துக்க. அதனால தேவை இல்லாம நம்மளோட ஆசைய அவங்க மேல தினிக்க பார்க்காதமா” என்றார் விநாயகம்.

“என்னம்மா உன் புருஷன் நல்லவர் மாதிரி டயலாக் எல்லாம் பேசுறாரு. எப்படி இந்த டயலாக் ஊருக்கு மட்டும் தானா இவருக்கு கிடையாதா ” என்றான் சரண் நக்கலாக தனது அன்னையிடம்

“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருடா. எப்ப பாரு அவரு கலாய்க்கிறதே உனக்கு வேலையா போச்சு. இங்கே என்ன நடந்துட்டு இருக்கு தேவையில்லாம பேசாதடா” என்றார் கடுப்புடன் புஷ்பா.

“என்ன பிளவர் உன் புருஷனுக்கு ரொம்ப தான் கொடி பிடிக்கிற. என்ன உலகம் பா உண்மைய சொன்னா ஏத்துக்க மடக்குது. என்ன இருந்தாலும் லவ்வர விட்டுக் கொடுக்க மாட்டல்ல பிளவர் குயின்”

“இப்ப மட்டும் நீ வாய மூடுல என் மருமகளுக்கு போன் பண்ணி வர சொல்லிருவேண்டா”

“ ஐயோ இந்த ஹிட்லரே போதும்பா. அந்த சார பாம்பு வந்தா. கோவப்படுற பேர்ல மூக்காலே பம்ப் பண்ணிட்டு இருப்பா. ஆள விடு சாமி உன் ஹிட்லர் ஏதோ பேசிட்டு போறார் எனக்கு என்ன வந்துச்சு” என்று அமைதியாக தனது அண்ணனிடம் போய் நின்று கொண்டான் சரண்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!