Skip to content
Post Views: 2,733
பானுமதி.
ரித்து அம்மா சஷிபாலாவின் கல்லூரித் தோழி. நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கும் கல்லூரிக் காலத்தில் காதல் வந்தது.
அவளின் சொந்தக்கார பையனோடு தான்!
அதனால், அவள் விசயத்தில் ஜாதி எதுவும் குறுக்கே நிற்கவில்லை. அந்தஸ்து தான் குறுக்கே நின்றது!
Advertisement
நடுத்தர வர்க்கம் என்ற ஒரே ஒரு விசயம் மட்டுமே அவளுக்கு தகுதி இழப்பாக இருந்து விட்டது!
அழகு, அறிவு, திறமை, அனுசரணையான குணம் அனைத்தும் இருந்தும் கூட, பணம் என்பது மட்டுமே அவள் கல்யாண வாழ்க்கையைத் தீர்மானித்து இருக்க, மேற்சொன்ன நல்ல விசயங்களில் ஒன்று கூட இல்லாத, அதில் அழகைக் கூட விட்டுத் தள்ளலாம், அது இறைவன் தந்தது. மற்ற எதுவுமே இல்லாத ஒரு பணக்காரப் பெண் தான் அவனின் மனைவியானாள்!
பானு ஆரம்பத்தில் உடைந்து போனாலும், பணம் இருந்தும் தன்னை விட மோசமான நிலையில் இருக்கும் அவள் தோழி சஷி பாலாவை நினைத்துப் பார்த்து மனம் தேறினாள்.
Advertisement
சஷிபாலா உடைந்த போது எல்லாம் அவளுக்கு பானு ஆறுதல் சொல்ல தொடங்கினாள்.
Advertisement
இருவரும் கடுமையாக உழைத்து அவரவர் தொழிலில் முன்னேறினார்கள்.
அடிக்கடி சந்தித்துக் கொள்ள இருவருக்குமே நேரம் இருக்க வில்லை என்றாலும், அது எந்த வகையிலும் அவர்கள் நட்பைப் பாதிக்க வில்லை.
பானுவின் பொருளாதார நிலை, இப்போது அவளின் காதலனின் நிலையை விட பல மடங்கு அதிகம்!
Advertisement
சென்ற வருடம் கூட அவனின் மகள் திருமணத்திற்கு சென்று வந்தாள் பானு.
திருமணப் பரிசாக கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தாள்!
திருமணத்தின் போது மகளுக்கு கொடுப்பதாக பேசியிருந்த காரை வாங்க முடியவில்லை அவள் முன்னாள் காதலனால்!
இதை வேறு ஒரு சொந்தக்காரர் மூலம் அறிந்து கொண்டு தான் இதை பரிசளித்தாள்.
அவனின் பெற்றோர் கூனிக் குறுகிப் போய் நிற்பதைக் கண்டு,
“யாரும் இன்னிக்கு இருக்கும் நிலையை வைத்து எடைப் போடாதீர்கள்!
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்!
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்ன்னு இதை தான் பெரியவங்க சொல்லியிருக்காங்க!” என்று நன்கு வலுவாக கொடுத்து விட்டு தான் வந்திருந்தாள்.
மனதில் பட்டது எதுவாக இருந்தாலும், பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான நட்பு சஷி பாலாவுக்கு பானு மட்டுமே.
ஒரு விஷயம் சொல்லி விட்டால், அவளைத் தாண்டி எங்கும் போகாது என்ற அளவு நம்பிக்கையானவள் பானு சஷிக்கு.
சஷிக்கு ரித்து இருக்க, பானுவிற்கு யாரும் இல்லை! அவள் பெற்றோர் காலமாகி இருக்க, இப்போது அவள் மட்டுமே அவள் வீட்டில்!
கொஞ்ச நாளில் தனிமையே பானுவிற்கு பிடித்தமான ஒன்றாக போய் விட்டது!
மார்கழிப் பூவே பாடலில் சொல்வது போல, நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன், நடைப் பாதை கடையில் தேநீர் குடிப்பேன் என்று என்று தனிமையில் எங்காவது நடந்தோ, அல்லது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டோ அவ்வபோது போவதுண்டு! நேரம் கிடைக்கும் போது!
அப்படி போன வாரம் ஒரு நாள் ஸ்கூட்டியில் போகும் போது தெரு நாய் ஒன்று குறுக்கே வந்து, அவள் தடுமாறி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு!
சரியாக அதே நாள் தான் ரித்துவும் அதே ஊரில் வேறு இடத்தில் கீழே விழுந்து மானு வேலை செய்யும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். காலில் அடிப்பட்டு இருந்ததால் பானுவால் அவனை உடனே போய் பார்க்க முடியவில்லை!
போனில் மட்டுமே பேச முடிந்தது.
சிறு வயது என்பதால் ரித்துவின் கால் சீக்கிரம் சரியாகி விட்டிருக்க, நடுத்தர வயது பானுவிற்கு இன்னமும் சரியாக வில்லை!
இப்போது சஷி போன் பண்ணி சொல்லியிருக்கிறாள்.
“ரித்துவை உன் வீட்டுக்கு தான் அனுப்பியிருக்கேன். அவனுக்கு இன்னமும் கை சரியாக வில்லை! வெளியே விட்டால், மீண்டும் பைக்கை எடுத்துக் கொண்டு எங்கியாச்சும் கிளம்பி விடுவான். அவனைப் பிடித்து அங்கேயே வைத்துக் கொள். துணைக்கு ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன்! உன்னையும் அவனையும் அவங்க பார்த்துப்பாங்க.
ரித்துவின் பிறந்த நாள் அடுத்த வாரம் வருது. இந்த வருஷம் உன் வீட்டில் வைத்து தான் கொண்டாடப் போறோம். நான் நேரே அங்க வந்துடறேன்” என்று சொல்லியிருந்ததால் பானு ரித்துவிற்காக காத்திருந்தாள்.
வாசலில் டாக்ஸி சத்தம் கேட்டு, மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். சமையல்க்கார அம்மாவை கூப்பிட்டு கதவைத் திறக்க சொன்னாள்.
உள்ளே வந்தான் ரித்து.
கூடவே அந்த நர்ஸ் பெண்ணும்.
வந்தவன் நேரே பானுவின் அறைக்கே போனான்.
ரித்துவையும் மானுவையும் பார்த்த பானுவிற்கு ஒரு கணம் ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது!
ரெண்டு பேரையும் பார்த்தவுடன் நல்ல பொருத்தமான ஜோடி என்று!
ச்சே.. அந்த பொண்ணு கல்யாணம் ஆன பொண்ணுன்னு இல்ல சஷி சொன்னா! என்று அந்த எண்ணத்திற்கு தடைப் போட்டு விட்டு,
“வாடா ரித்துக் கண்ணா! இப்ப தான் ஆண்ட்டி வீட்டுக்கு உனக்கு வழி தெரிஞ்சு இருக்கு இல்ல! என்று செல்லமாக கோபித்துக் கொண்டு, “வாம்மா” என்று மானுவையும் அழைத்தார்!
உள்ளே வந்து, அவரைக் லேசாகக் கட்டிக் கொண்டவனிடம்,
“பார்த்துடா, கை பத்திரம்” என்றவள்,
“ஏண்டா, இன்னமும் பைக்கில் இப்படி வேகமா போய் போய், விழுந்து எழுந்து உன் மம்மியை இப்படி டென்சன்லயே வச்சுருக்க!”
“நோ..பானு.. வந்தவுடனே ஆரம்பிச்ச, நான் வந்த டாக்ஸிலேயே திரும்ப போய்டுவேன்!” என்று ரித்து மிரட்டினான்.
“சரி. சரி, நான் ஒண்ணும் சொல்லல போதுமா. நீ போய் ரெஸ்ட் எடு. ரேவதியம்மா உனக்கு டிபன் மேலேயே கொண்டு வருவாங்க”.
“அதெல்லாம் வேண்டாம். நான் கீழேயே வந்து சாப்பிட்டுக்கறேன். கால் சரியா தான் இருக்கு! அப்புறம் ஆண்ட்டி, இவங்க என்னையும் உங்களையும் பார்த்துக்க வந்திருக்கிற நர்ஸ். குட்டிமா”.
“பேரே குட்டிமாவா?”
“இல்ல..பேரு..” என்று சொல்ல ஆரம்பித்த ரித்துவைத் தடுத்து விட்டு, “ஆமா” என்று முந்திக் கொண்டு சொன்னாள் மானு!
“ஓகே குட்டிமா, இவனுக்கு ரூம் மேலே தான். நீங்க அவன் சாப்பிட வேண்டிய மெடிசன்ஸ் எல்லாம் எடுத்துட்டுப் போய் அங்கேயே வச்சுக்கங்க. நான் சாப்பிட வேண்டியது எல்லாம் இங்க இருக்கு” என்று காண்பித்தார்.
“சரிங்க மேடம்” என்று சொன்ன மானுவை,
“குட்டிம்மா, என்னோட மெடிசன்ஸ் எல்லாம் எடுத்துட்டு மாடிக்கு வா” என்று சொல்லி விட்டு மேலே போனான் ரித்து.
மாடிக்கு அவன் அறைக்கு சென்றாள் மானு. அவன் “”கட்டளைப் படி” சேலையில் இருந்தாள்!
அங்கு வருவதற்கு அவள் சில கண்டிசன்கள் போட்ட மாதிரி அவன் போட்ட கண்டிசன் இது!
அவன் அறைக்குள் நுழைந்தவுடன், வேகமாக சென்று கதவைத் தாழிட்டு விட்டான் ரித்து.
மருந்துகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த மானு நிமிர்ந்து பார்க்க,
கதவின் மேல் சாய்ந்து கொண்டு கைகளை கட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டே குறும்புப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ரித்து.
“இப்படி தனியே வந்து மாட்டிகிட்டீங்களே எம் எம் மேடம்! நான் உன்னை இங்க கொண்டு வந்ததே ரிதன்யா பாப்பாவுக்கு கூட விளையாட இன்னொரு பாப்பா ரெடி பண்ண தானே! நீயும் அடுத்தவங்க குழந்தையையே எத்தனை நாள் கொஞ்சுவ? அதான் நாம இங்க வந்துக்கோம் மிஸ்ஸர்ஸ் மானசா ரித்தீஷ் அவர்களே!”
“நோ. ரித்து, இது சீட்டிங்!”
“எதுடி சீட்டிங், என்கிட்ட சொல்லாம ஓடி ஒளிஞ்சதா இல்ல? இப்ப நான் பண்றதா?” என்று சொல்லிக் கொண்டு அவள் அருகில் சென்று அவளை இழுத்து, சுவற்றோடு சாய்த்துக்கொண்டு கொஞ்சம் முரட்டு அணைப்போடு கூடிய முத்தமழை பொழிய தொடங்கினான்.
“அய்யோ.. ரித்து விடு, பாரு, உனக்கு இன்னும் கை சரியாகல. அட்லீஸ்ட் ரெண்டு மூனு நாளைக்காவது கையை ரொம்ப அசைக்காம இரேன்!”
“நோ வே! போடி. அங்க தான் டுயுட்டில இருக்கேன், டுயுட்டில இருக்கேன்ன்னு சொல்லி, தடா போட்ட! அதுக்கு தான் உன்னை இங்க கொண்டு வந்ததே!” என்று சொன்னவனின் நன்றாக இருந்த இடக்கரம் அவள் மேனியெங்கும் அத்துமீறிக் கொண்டிருந்தது!
“நோ. ரித்து. வேண்டாம். கையில அடிப்பட்டுட போவுது! இடிச்சுக்கப் போறே!”
“என்ன குட்டிமா, வேண்டாம் வேண்டாம்னு சொல்லுற? அஞ்சு வருசம் பிரிஞ்சு இருந்துட்டு உன்னை பாக்குறேன்.
இது கூட விட மாட்டியா? நான் கேட்டு உன்னால இல்லன்னு கூட சொல்ல முடியுமா? நீ ரொம்ப மாறிட்ட குட்டிமா! எனக்கு உன்னைத் தேடுற மாதிரி, உனக்கு என்னைத் தேடவே இல்லைல?”
“அப்படியெல்லாம் இல்ல ரித்து. இப்ப என்னோட கவனம் எல்லாம் உன் கை சரியாகனும்னு தான்! எல்லா சரியா போயிட்டு இருக்கிறப்போ, தேவையில்லாம நீ காம்ளிகேட் பண்ணிக்கிற! கொஞ்சம் பொறு ரித்து”.
“முடியாது.” என்று சொல்லி அவன் செயல்களை தொடர, அவளை வேகமாக இழுத்ததில் அவனின் கட்டுப் போட்ட கையில் இடித்துக் கொண்டு விட்டான்!
வலி உயிர் போனது!
“ஷ்.. அம்மா..” என்று வலியில் கத்தியே விட்டான் ரித்து.
“அய்யோ. ரித்து, இதுக்கு தான் அப்போதிலிருந்து சொல்லிட்டே இருக்கேன்! சொன்ன கேக்க மாட்டேங்கிற! உன் கை சரியாகட்டும்! நீ என்ன சொன்னாலும் உன் குட்டிமா கேப்பா!” என்று சொல்லி அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொன்னாள் மானு,
பின் அவனை மெல்ல கட்டிலுக்கு அழைத்து சென்று படுக்க வைத்தவள், கொண்டு வந்திருந்த மருந்துகள் அடங்கிய பைகளில், வலி நிவாரணி ஊசியை எடுத்து அவனுக்கு போட்டு விட்டாள்.
அவள் ஏற்கனவே டாக்டரிடம் அதற்கான ஆலோசனைகளை பெற்று தான் வந்திருந்தாள்! தேவைப்பட்டால் போட என்று!
ஊசியைப் போட்டு விட்டு அவன் தலையை கோதி விட்டு,
“பேசாம படு ரித்து. பெயின் கில்லர் இன்ஜெக்சன் போட்டுருக்கேன். நல்லா தூங்கு”. என்று சொல்லி விட்டு நகர,
“எங்க போறே குட்டிமா, இங்கயே இரு”.
“என்னோட ஸாரி புல்லா அவுந்துட்டுது. நீ பண்ணின களேபரத்துல! சரியா கட்டிக்கிட்டு கீழே போய், ஆண்ட்டியோட பிரிஸ்க்ரிப்சன் எடுத்து பார்க்கணும்!”
“அதுக்கு ஏன் பாத்ரூமுக்கு போறே? இங்கியே கட்டு!”
“இல்ல.. அது வந்து..”
“ஏண்டி, இப்படி? தொட தான் விட மாட்டேங்கிற, அட்லீஸ்ட் பார்க்கவாச்சும் அலவ் பண்ணேன்!”
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது” என்று சொல்லி, அருகில் இருந்த சீப்பை அவனை நோக்கி எறிந்து விட்டு, அவளது புடவையை அவிழ்த்து விட்டு, சரியாக கட்டத் தொடங்கினாள்.
“நல்லா வளர்ந்துட்ட குட்டிமா” என்றான் ரித்து, அவள் புடவைக் கட்டுவதைப் பார்த்துக் கொண்டே!
“டேய்.. உன்னை..” என்று சொல்லி முதுகைக் காட்டி திரும்பி நின்று கொண்டு கொசுவம் வைத்தாள்!
“இல்ல குட்டிமா, ஸாரி எல்லாம் தானாவே கட்டிக்கிறியே அத சொன்னேன்! நீ எதை நினைச்ச?” என்றான் குறும்பாய்!
“ரொம்ப நல்லவன் தான் நீ, பேசாம தூங்கு!”
“சரிங்க மேடம்” என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டான் ரித்து சந்தோசப் புன்னகையுடன்!
——
இரவு உணவின் போது, பானுவைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து டேபிளின் முன்னே உட்கார வைத்தாள் மானு.
“நீயும் சாப்பிடும்மா” என்றார் பானு.
“இல்லை மேடம் நான் இப்படி ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட மாட்டேன். இன்னும் கொஞ்சம் லேட்டாகும். நீங்க சாப்பிட்ட உடன், நைட் எடுத்துக்க வேண்டிய டாப்லெட்ஸ் போட வச்சுட்டு நான் கிளம்புறேன்”
“ஆமா ஆண்ட்டி, குட்டிமா கிளம்பணும். அதுக்காக தான் நானும் சீக்கிரமே சாப்பிட உக்காந்துட்டேன்” என்று சொன்னவன்,
“ரேவதிம்மா, எனக்கு ஒரு முட்டை தோசை போட முடியுமா?” என்று கேட்டான்.
“அது வந்து தம்பி..” என்று அவர் கொஞ்சம் தயங்க,
“டேய் அவங்க இன்னிக்கு சனிக்கிழமை விரதம். இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, நாளைக்கு சாப்பிடலாம். எனக்கு கால் முடியல, இல்லன்னா நானே போட்டுக் கொடுப்பேன்!”
“ஓ. அப்படியா.! அப்ப குட்டிமா நீ போய் போட்டு எடுத்துட்டு வா” என்றான், அவனுக்கு தோசையை ஊட்டிக் கொண்டு இருந்த மானுவிடம்.
“டேய். அவங்க நர்ஸ்டா. உனக்கு ஊட்டி விடறதே பெரிசு! அவங்கள குக் வேலையும் செய்ய சொல்ற?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை! நான் சொன்னா போட்டுக் கொடுப்பா. நீ போய் போட்டு எடுத்துட்டு வா” என்று சொல்லி அவளை கிச்சனுக்கு அனுப்பினான்.
அவன் சொன்னவுடன், கிச்சன் நோக்கி சென்ற மானுவை ஆச்சர்யமாக பார்த்தார் பானு!
அந்த ஆச்சர்யம் அவள் போட்டு எடுத்துக் கொண்டு வந்த தோசையைப் பார்த்ததும் இன்னும் அதிகமாகியது!
சஷி எப்போது தோசையை கோன் போல மடித்து தான் அவனுக்கு தருவார், ரித்துவின் சிறு வயதில் இருந்தே! அப்படி கொடுத்தால் தான் அவனுக்குப் பிடிக்கும் என்று!
இந்த மானுவும் அப்படியே தான் கொண்டு வருகிறாள்! ரொம்ப நாள் பழக்கம் போல!
மனதில் தோன்றிய எண்ணங்களை வெளியே காட்டிக் கொள்ள வில்லை அவர்!
மறுநாள் காலையில் மனீஷ் கொண்டு வந்து விட்டான் மானுவை. கூடவே ஒட்டிக் கொண்டு வந்து விட்டது ரிதன்யா குட்டியும், தன் விளையாட்டு சாமான்கள் அடங்கிய ஒரு பையையும் தூக்கிக் கொண்டு!
கன்னம் குழி விழ சிரித்த அந்த குழந்தையின் சிரிப்பில் மயங்கி தான் போனார் பானுவும்!
அவருக்கு போர் அடித்ததால், ரித்துக் குட்டியை அவர் அறையிலேயே விளையாட சொல்லி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்!
அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சிரிக்கும் போது நல்லா குழி விழுது என்று நினைத்துக் கொண்டார் பானு.
ரொம்ப சமத்துக் குழந்தை ரித்துக்குட்டி.
அடம் பண்ணாமல், தன் விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடியவள், விளையாடி முடித்த பின், பொறுப்பாக மீண்டும் பையில் அடுக்கி வைத்தது!
பின் “மானும்மா, பசிக்குது” என்று சொல்லி உணவு கேட்டு உண்டது.
பின் அவளுக்கு தூக்கம் வரவே தன் தோள் மேல் போட்டுக் கொண்டு தூங்க வைத்துக் கொண்டிருக்கும் போது, ரித்து அவன் அறையில் இருந்து மானுவை அழைத்தான்.
இப்படி தான் ஏதாவது சொல்லி அவளை அவன் அறைக்குள் அழைத்துக் கொண்டே இருப்பான் அவன்!
இப்போது அழைக்கவே,
“இதோ வரேன்” என்று சொல்லிக் கொண்டு, குழந்தையோடு அவன் அறைக்குள் சென்றாள் மானு.
“எனக்கு ஆப்பிள் நறுக்கி கொடு” என்றான் ரித்து.
குழந்தையை அவன் அருகில் படுக்கப் போட்டுவிட்டு, கத்தியை எடுத்து ஆப்பிளை வெட்ட ஆரம்பித்தவளின் கையில் இருந்து கத்தியைப் பிடுங்கிக் கொண்டு,
“ஏய். குட்டிமா, இப்பவாச்சும் சொல்லு! நீ ஏன் என்னை விட்டுட்டு போனே! காரணத்தை சொல்லல, ரித்துக்குட்டிய..” என்று சொல்லி கத்தியை காட்டினான்.
சொல்லுவாளா?
error: Content is protected !!