Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-22-2

“அடியே நாசமா போறவளே உன்ன நம்பி நான் ரெண்டு லட்சம் ரூபாய் லோன் எடுத்துக் கொடுத்தேனே. இப்படி சொல்லாம கொள்ளாம ஊரு விட்டு ஓடிட்டாளே இனி நான் என்ன பண்ணுவேன். நானே ஒரு குடிகாரன் கிட்ட கடந்து படாத பாடுபடுறேன் இதுல இவ காசை வேற கட்டணுமே. ஐயோ கடவுளே நான் இனி என்ன செய்வேன்” என்று ரோட்டில் உட்கார்ந்து அழுதுபுலம்பிக் கத்தி கொண்டிருந்த சரஸ்வதியை பார்த்து

“ஏன் இந்திரா இது நம்ம சரஸ்வதி தான எதுக்கு இப்படி லட்சுமிக்கா வீட்டு முன்னாடி நின்னு அழுதுட்டு இருக்கா” என்றாள் சுதா.

“ஆமா அக்கா நம்ம சரசு அக்கா தான் என்ன ஆச்சுன்னு தெரில அக்கா வாங்க போய் என்னன்னு கேட்போம்” என்று பதை பதைக்கும் நெஞ்சத்தோடு சரஸ்வதியை நெருங்கினார்கள்.

“ஏய் சரசு என்னடி ஆச்சு ஏன் இப்படி காலையிலேயே அழுது புலம்பிகிட்டு இருக்க” என்றாள் சுதா.



Advertisement

“ஐயோ அக்கா நான் இந்தக் கொடுமையை போய் எங்க சொல்லுவேன். நானே ஒரு குடிகாரன் கிட்ட கடந்து படாதபாடு படுறேன். இதுல இந்தா இருக்காளே சண்டாளி இவளுக்கு வேற 2 லட்ச ரூபா லோன் எடுத்து கொடுத்துட்டேன் கா. பாவி மக மொத்தமா எல்லா காசை சுருட்டிட்டு ஓடிட்டா அக்கா. இனி அந்த காசுக்கு நான் என்ன பண்ணுவேன் ஏற்கனவே என் பசங்க படிப்புக்கு வேண்டி நானே நிறைய கடன் வாங்கி வச்சிருக்கேன்.அதோட இந்த நாசமா போறவளுக்கும் சேர்த்து கட்டணும்னா நான் எங்க போவேன் கா” என்று அழுது புலம்பினாள் சரசு.

“அக்கா என்ன சொல்றீங்க லட்சுமி அக்கா எங்க போனாங்க” என்று பயத்துடன் கேட்டாள் இந்திரா.

“ஐயோ இந்திரா உனக்கு தெரியாதா அந்த பாதகத்தி மொத்த பைசாவும் தூக்கிட்டு ஓடிட்டாமா. நம்ம கிட்ட மட்டும் இல்ல இந்த நிக்காங்களே பத்மா, சரோஜா, ராணி, கமலி இவங்கக் கிட்டயும் ஆளுக்கு ஒவ்வொரு லட்ச ரூபாய் லோன் எடுத்துட்டு பாதகத்தி மொத்தமா ஓடிட்டா ம்மா. இனிமே அந்த காசு கட்ட நம்ம என்ன பண்ண போறோம்னு எனக்கு தெரியலையே ஆண்டவா எங்களை ஏன் இப்படி சோதிக்க” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள் சரஸ்வதி.

Advertisement

“ஆமாமா நாங்க நாலு பேரும் ஆளுக்கு ஒன்றை லட்ச ரூபாய் லோன் எடுத்து கொடுத்து இருக்கோம். காலையில எங்க வீட்டுல வந்து அந்த லோன் காரன் கத்திட்டு போறான் மா. எங்க வீட்டுக்காரங்க எல்லாம் அவகிட்ட காசு வாங்கிட்டு வா. இல்ல வீட்டுக்கே வராதான்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க” என்றாள் ராணி.

Advertisement

“என் புருசனுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி தான் நானே லோன் எடுத்தேன். அதிலையும் இந்த மினிக்கி பாதி வாங்கிட்டா. அவ்வளவு காசு செலவு வழிச்சி பாடு பார்த்தும் அவர் போய் சேர்ந்துட்டாரு. இப்ப நானும் என் பிள்ளைகளும் நடுத் தெருவுல சாப்பாட்டுக்கு வழி இல்லாம கடனாளியா நிக்கோம். அப்படி இருக்கும்போது இப்ப இதையும் சேர்த்து நான் தான் கட்டணும்”என்றாள் பத்மா.

“யார் எந்த லோன் எடுத்தாலும் இவங்களுக்கு பாதி கொடுக்கணும் அப்படி மொத்த காசையும் வச்சு என்னதான் செஞ்சாளோ தே……”

“இவ வீட்டுல பந்தல் போட்டு பயிறு அவிக்க. பாவி எப்படி நடு தெருவுல நிப்பாட்டு போய்ட்டாளே”என்றாள் சரோஜா.

Advertisement

“அக்கா அப்படி சொல்லாதீங்க. அப்படி எல்லாம் லட்சுமி அக்கா எங்கேயும் போகாது இங்கே ஏதாவது பக்கத்துல அவங்க சொந்தக்காரர் வீட்டுக்கு போய் இருக்குமா இருக்கும். ரெண்டு நாள்ல திரும்பி வந்துருவாங்க அக்கா அப்படி எல்லாம் நம்ம காசு எடுத்துட்டு ஓட மாட்டாங்க” என்றாள் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இந்திரா.

 “ஐயோ இந்திரா இன்னுமா அந்த சண்டாளிய நீ நம்புற. அவ ஊரை விட்டு மொத்தமா போய் பத்து நாள் ஆகுதாம். மொத்தமா பிளான் பண்ணி நம்ம எல்லார்கிட்டயும் 10 லட்ச ரூபாய் ஆட்டைய போட்டு போயிட்டா அவ”

“ என்னக்கா சொல்றீங்க உண்மையாவே அவங்க போய்ட்டாங்களா”

“ஆமாமா உண்மையா தான் சொல்றேன் மொத்தமா 10 லட்ச ரூபாய் ஆட்டைய போட்டுட்டு குடும்பத்தோடு எங்கேயோ காணாம போயிட்டா மா. ஆமா நீ அவளுக்கு எத்தன லோன் எடுத்து கொடுத்த”

“ அக்கா நான் அவங்களுக்கு 20,000 லோன் ஒன்னு மட்டும் தான் எடுத்து கொடுத்தேன். ஆனா இன்னைக்கு காலையில வந்த லோன் காரன் நான் அவங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் லோன் எடுத்துக் கொடுத்ததா சொல்லிட்டு போறான் எனக்கு ஒண்ணுமே புரியல அத கேட்க தான் இவங்க கிட்ட வந்தேன் ஆனா பாத்தா அவங்களையே காணல இனி என்ன பண்ண போறேன்னு எனக்கு ஒண்ணுமே புரியல அக்கா” என்று சொல்லி சரசுடன் சேர்ந்து இவளும் அழ

“என்னமா சொல்லுற லோன் அட்டையில் எவ்வளவு காசுன்னு போட்டு இருக்குமே”

“அக்கா அந்த அட்டைய லட்சுமி க்கா கிட்டத்தான் இருக்கு”என்றாள் அப்பாவியாக

“என்னமா நீ எப்படி இருக்கு. இந்த காலத்துல கட்டின புருஷன் பெத்த பிள்ளை ஏன் பெத்த அப்பனேயே நம்ப முடியல அப்படி இருக்கும்போது இவங்கள எப்படிமா நீ நம்புன. என்ன பொண்ணுமா நீ கொஞ்சம் சூதனமா இருக்க வேண்டாமா ” என்றாள் ஆதங்கமாக

“அக்கா நான் அவங்கள என் கூடப் பொறந்த பொறப்பா பாத்தேன். அதான் கேக்கல க்கா” என்று வெகுளியாக சொல்லியவளை என்ன சொல்லுவது என்று தெரியாமல், “ஐய்யோ எப்படி வெகுளியா இருக்குற பிள்ளையா போய் ஏமாத்திட்டு போய்ட்டியே சண்டாளி”என்று அழ

 “ரெண்டு பேரும் சேர்ந்து அழுறத கொஞ்சம் நிறுத்துறீங்களா. வாங்க எல்லாரும் போய் முதல்ல லோன் ஆபீஸ்ல என்ன ஆச்சுன்னு விசாரிப்போம். அதுக்கப்புறம் போலீசில் போய் அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுப்போம் வாங்க” என்றாள் சுதா

” சுதா அக்கா நீங்களும் தானே லோன் எடுத்து கொடுத்தீங்க. உங்களுக்கு எவ்வளவு காசு கட்டணும்”

” நல்லவேளை நான் எடுத்துக் கொடுத்த லோன் எல்லாம் முடிஞ்சிட்டு அடுத்ததா ஒரு லோன் எடுத்து கேட்டா. நான்தான் இப்ப வேண்டாம் அக்கா. இப்படியும் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருவேன் அப்ப எனக்கு கண்டிப்பா தேவைப்படும் அதனால உங்களுக்கு எடுத்து விட மாட்டேன்னு சொன்னேன். நல்லதா போச்சு நல்லவேளை எடுத்து கொடுக்கலாம்”

” நல்லதா போச்சு அக்கா நீங்களாவது தப்பிச்சிங்களே”

“ஆமா மா ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல. இதுவரைக்கும் கரெக்டா லோன் கட்டியவ இப்ப மட்டும் எப்படி கட்டாம போவா”

“ஒரு லோன் வாங்கி இன்னொரு லோன் கட்டினா இப்படித்தான். நமக்கு தான் அறிவு இல்லாம அவளுக்கே எல்லா லோன்னும் எடுத்து கொடுத்திருக்கோம்”

“நம்ம என்ன இப்படி நடக்கும்னு கனவா கண்டோம். நம்பி வாங்கி கொடுத்தோம். இப்படி நட்டாததுல விட்டுட்டு போவானு தெரிஞ்சிருந்தா ஏன் எடுத்து குடுக்க போறோம்”

“ஆமாக்கா வாங்க முதல்ல போய் என்ன ஆச்சுன்னு விசாரிப்போம்” என்றாள் இந்திரா கொஞ்சம் திடமாக.

“ஆமா வாங்க மொதல்ல அங்க போய் கேப்போம். அவனுக தொணை இல்லாம இவளால இப்படி பண்ண முடியாது. அங்க போனா தான் உண்மை தெரியும். வாங்க போலாம்” என்றாள் கமலி.

“ஆமா க்கா நீங்க சொல்லுறது சரி தான். ஒரு நாள் லோன் காசு கொடுக்க லேட் ஆனா என்ன பேச்சு பேசினாங்க. என்னவோ இவங்க அப்ப வீட்டுக்காசு கொடுக்கிற மாதிரி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துக் கிட்டு எப்படி எல்லாம் அசிங்கமா கேட்டாங்க. அவங்கள நாம சும்மா விடக்கூடாது அக்கா. முதல்ல அங்க போய் என்னன்னு கேட்டுட்டு அடுத்து இவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கனும் க்கா”

“இவனுங்க கிட்ட என்னைக்கு லோன் எடுத்தமோ அன்னைல இருந்து நிம்மதியா சாப்பாடு பொங்கி சாப்பிட முடியல”

“அதுவும் கரெக்ட் தான் அவனுங்க தான் இதுக்கு காரணம். இன்னைக்கு இருக்கு அவங்களுக்கு”என்று சொல்லி அங்கே அனைவரும் சென்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!