Skip to content
Post Views: 682
“சிஸ்டர் இங்கே இந்திரான்னு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்க எந்த ரூம் தெரியுமா” என்றவனை அந்த அதிகாலை வேலையில் இரவு முழுவதும் வேலை செய்த களைப்பில் உறக்கம் சொக்கும் கண்ணோடு நிமிர்ந்து பார்த்தாள்.
தனது முன்னே களைந்த தலையுடன் கண்கள் சிவந்து பதட்டமாக இரவு நேர உடையுடன் நின்றவனை பார்த்து, “அந்த சூசைட் கேசா” என்றாள் தனது தூக்கம் சொக்கும் விழிகளுடன் அலட்சியமாக
அவள் சொல்வதைக் கேட்டு சுபாஷுக்கு கோபம் வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட, “ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ஐசியூல இருக்காங்க போய் பாருங்க” என்று சொல்லி மீண்டும் தனது விட்ட தூக்கத்தை தொடங்கினாள் அந்த செவிலியர் பெண்.
Advertisement
அவள் சொல்லியதை முழுதாக கூட கேட்காமல் வேகமாக படி ஏற தொடங்கினான் சுபாஷ்.
வேகமாக பர்ஸ்ட் ப்ளோர் வந்து மூச்சிரைக்க சுற்றி பார்க்க அங்கே டீ வாங்குவதற்கு வந்த சரண் அவனைப் பார்த்து, “சுபாஷ்” என்று அழைத்தான்.
Advertisement
“சரண் மாமா’ என்று வேகமாக அவனிடம் வந்தவன், “ மாமா அம்மாவுக்கு என்ன ஆச்சு. இப்போ எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்க தான அவங்களுக்கு ஒன்னும் இல்ல ல்ல. அம்மாவ இப்போ பாக்கலாமா எதுக்கு இன்னும் ஐசியூல வச்சிருக்காங்க ரூமுக்கு மாத்தலையா. ஆமா அக்கா, திரு மாமா, தாத்தா எல்லாம் எங்க இருக்காங்க ” என்று சரணை பேசவிடாமல் மூச்சு வாங்க தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான்.
Advertisement
“டேய் சுபாஷ் இங்க பாருடா கொஞ்ச நார்மலா இரு. ரிலாக்ஸ் பண்ணுடா. அம்மாவுக்கு ஒன்னு இல்ல அவங்க நல்லா தான் இருக்காங்க காலையில ரூமுக்கு மாத்திடுவாங்க. வா இந்த சைட் தான் ரூம் இருக்கு உன்னை நான் கூட்டிட்டு போறேன்” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
அங்கே ஆதரவு இல்லாத குழந்தை போல ஐசியு முன்பு போடப்பட்டு இருந்த இருக்கையில் தனது உடலை சுருக்கி படுத்திருந்த தனது தமக்கையை நோக்கி சொன்றான் சுபாஷ்.
தலைக் களைந்து அழுது அழுது முகம் வீங்கி கண்கள் மூடி இருந்தும் அதிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவள் தூங்கவில்லை என்பதை சொல்ல உதடுகள் எத்தனையோ முனுமுனுக்க படுத்துயிருந்த பாரதியினை மெதுவா அசைத்து, “அக்கா”என்று உசுப்பினான்.
Advertisement
அதில் திடுக்கிட்டு எழுந்தவள் தனது முன்னே நின்றவனை பார்த்து, “டேய் சுபாஷ் அம்…மா அ..ம்மா பாரு டா. அவங்கள வர சொல்லு டா ” என்று பச்சக் குழந்தை போல அவனை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள் பாரதி.
“ நமக்கு இந்த உலகத்துல இருக்கிறது நம் அம்மா மட்டும் தானடா. அவங்க ஏன் இங்க படுத்திருக்காங்க வர சொல்லுடா அம்மாவ. பயமா இருக்குடா இங்க இருக்க. அம்மா வர சொல்லு வீட்டுக்கு போலாம்” என்று அவனை கட்டிக் கொண்டு மீண்டும் அழ
“அக்கா இங்க பாரு அம்மாவுக்கு ஒன்னும் இல்ல இங்க பாரு என்ன பாரு அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது”என்று அவளை அணைத்து தமையன் தகப்பனாக மாறி ஆறுதல் சொன்னான்.
இவர்களின் அந்த பாச போராட்டத்தை தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த புஷ்பா மற்றும் விநாயகம் அதனை காண முடியாமல் கண் கலங்கி நின்றனர்.
“ அக்கா இங்க பாரு என்ன ஆச்சு எதற்காக அம்மா இப்படி பண்ணாங்க” என்றான் புரியாதவனாக ஏனென்றால் அவனுக்கு தெரிந்து அவன் அம்மாவிற்கு எந்த கடனும் இல்லை. அப்படி இருக்க திடீரென்று லோன் காரன் தொல்லை தாங்க முடியாமல் தனது அன்னை தற்கொலை முயற்சி செய்து கொண்டதை அவனால் தாங்க முடியவில்லை.
“டேய் எனக்கு ஒன்னுமே புரியலடா எதுக்கு ம்மா இப்படி பண்ணாங்க ஏன் இங்க இருக்காங்க எதுவுமே எனக்கு புரியல” என்று மீண்டும் அழத்தொடங்கியவளை என்ன செய்து சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் முழித்து நின்றான் சுபாஷ். பாவம் அவனும் 18 வயது டீன் ஏஜ் பையன் தானே. இந்த வயதில் அனைவரும் தங்கள் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி என சுற்றி கொண்டு இருக்க. இவனுக்கு மட்டும் இப்படி என்றால் அவனும் என்ன தான் செய்வான்.
சிறு பையன் முன்பு அவனை பயமுறுத்துவது போல் அழும் தனது மருமகளின் செயல்பிடிக்காமல்,“பாரதி இங்க பாரு எதுக்கு அழற உங்க அம்மா நல்லா தான் இருக்கா. சும்மா அழுது அவன பயமுறுத்தாத. நியாயமா பாத்தா நீ தான் அவனை சமாதானப்படுத்தணும். அவனே சின்ன பையன் அவன் முன்னாடி நீ அழுதா அவனுக்கு எப்படி இருக்கும். பாரு அவன் எப்படி இருக்கானு. உங்க அம்மா இப்படி ஆனதுல உனக்கு மட்டும் தான் கஷ்டமா அவனுக்கு இருக்காதா. நீ அவன் கிட்ட அழுதுட்ட அவன் பாவம் யாருகிட்ட போய் அழுவான் கண்ணை தொட முதல. பாவம் அவன் சாப்பிட்டானா கேளு” என்று மிரட்டி அவளின் கடமையை ஞாபகப்படுத்தினார் புஷ்பா.
அவரின் மிரட்டல் கொஞ்சம் வேலை செய்ய அழுகையை கட்டுப்படுத்திக் கொண்ட பாரதி அப்போது தான் தம்பியின் முகத்தை பார்த்தாள்.
அதில் இருந்து கவலை, களைப்பு, தாய்க்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பரிதவிப்பு என எல்லாம் சேர்ந்து அவன் முகத்தில் தெரிய நமக்கு ஆறுதல் சொல்ல இத்தனை பேர் இருக்க அவனுக்கு ஆறுதல் சொல்ல தான் மட்டுமே உள்ளோம் என்பதை உணர்த்த பிறகு தான் முகத்தை அழுத்தி துடைத்து தனது கண்ணீரை நிறுத்தியவள் தைரியமாக அவனைப் பார்த்து பேச தொடங்கினாள்.
“அம்மாக்கு ஒன்னும் இல்லடா இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவ ரூமுக்கு மாத்திடுவாங்க. நீ சாப்டியா உனக்கு ஏதாவது வாங்கி தரவா”என்றாள் அக்காவாக
“நான் சாப்பிட்டேன் அக்கா எனக்கு ஒன்னு வேண்டாம் அம்மா ஏன் இப்படி பண்ணாங்க” என்றான் புரியாமல்
“ எனக்கும் ஒன்னும் தெரியல டா. நைட்டு பத்து மணி இருக்கும் திடீர்னு சரண் அத்தான் போன் பண்ணி அம்மா இப்படி பண்ணிட்டாங்கனு உங்க மாமா கிட்ட சொன்னாங்கடா. மாமா தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தாங்க. நான் வரும்போது அம்மா ஐசியூல தான் இருந்தாங்க. நான் இன்னும் அம்மாவ பாக்கல டா. எனக்கு தெரியல அம்மாவுக்கு என்ன ஆச்சு ஏன் இங்கே இருக்காங்கனு எது கேட்டாலும் உங்க மாமா சொல்ல மாட்டேங்குறாங்க” என்றாள் எதுவும் தெரியாத குழந்தை போல.
“சரிக்கா நீ டென்ஷன் ஆகாத. அம்மாக்கு ஒன்னும் ஆகாது. ஆமா மாமா எங்கே”என்று வந்ததிலிருந்து தனது கண் முன்னே வராத தனது அக்காவின் கணவரை பற்றி கேட்டான்.
அப்போதுதான் தனது கணவனை அவளும் தேட தொடங்கினாள்.
இவர்களின் இந்த அழுகையை காண சகிக்காமல் தூரமாக பார்த்து நின்ற சரணை நெருங்கி வந்த சாரா, “பாருடா கண் குளிர பாரு இதுதான் நீங்க லோன் கொடுத்து அத கட்ட முடியாம போற குடும்பத்துல நடக்கிறது. இதோ இந்த கண்ணீருக்கு பயந்து தான் நமக்கு இந்த தொழில் வேண்டாம்னு நான் சொல்கிறேன். ப்ளீஸ்டா இப்பவாவது புரிஞ்சுக்க இந்த தொழில் நமக்கு வேண்டாம். நம்மகிட்ட இருக்கிற பணத்தை வைச்சி வேற எதாவது தொழில் பண்ணலாம் இது வேண்டாம் இது பாவம் இதனால வர காசு நமக்கு உதவாது. ப்ளீஸ் டா நான் சொல்றத கேளு அப்பா கிட்ட சொல்லி இந்த தொழிலை விட சொல்லு. கண்டிப்பா இவங்களோட அழுகை நம்மளையும் நம்ம குடும்பத்தையும் சும்மா விடாது. இந்த பாவம் நமக்கு வேண்டாம்”என்று சரணின் கையை பிடித்து கெஞ்சினாள் சாரா.
என்ன சொன்னாலும் புரியாமல் பேசும் அவளை என்ன சொல்வது என்று தெரியாமல், “சாரா ப்ளீஸ் இப்ப இருக்குற மைண்ட் செட்ல நான் எதுவும் பேச விரும்பல. என்ன கொஞ்சம் ஃப்ரீயா யோசிக்க விடு. இப்ப இங்க என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்குன்னு உனக்கு தெரியுமா. எதுவும் தெரியாம தேவை இல்லாம பேசாத.உனக்கு என்ன இனி அந்த ஆபிஸ் ஓபன் ஆகி இருக்க கூடாது அவ்வளவு தான. இனி அது இருக்காது ஓகேவா.போய் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பாரு. எல்லாத்தையும் சொல்லிட்டல இனி அத பத்தி பேசாத சரியா. போய் டூட்டிய பாரு போ”என்று சாராவை அனுப்பிவிட்டு
“ ஏதோ இந்திரா அத்தைக்கு இப்படி ஆகிட்டுனு எனக்கு போன் பண்ணான்னு இவகிட்ட கொஞ்சம் நல்லா பேசினா உடனே இத்துப்போன ரேடியோ மாதிரி ஒரு வார்த்தையை தூக்கிட்டு வந்துருவா இவளோட கடவுளே” என்று தனியாக புலம்பி விட்டு
சற்று தள்ளி போய் தனது அண்ணனுக்கு போன் செய்து பார்த்தான் அது சுவிட்ச் ஆப் என்று வர, “இவன் வேற போன் எடுக்காம படுத்தி தொலைவான்” என்று அவனை திட்டி விட்டு, “ஆல் ஓகே பிரதர்” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தங்கள் குடும்பத்தினர் இருந்த இடத்தை நோக்கி நடந்த சென்றான்.
“ மாமா இங்க தாண்டா இருந்தாங்க எங்க போனாங்கன்னு எனக்கு தெரியல” என்று தனது குடும்பத்தினரை பார்த்து விட்டு சொன்னாள்.
“ சரி அக்கா மாமா இங்கதான் இருப்பாங்க நான் போய் பார்க்கேன் நீ அமைதியா கொஞ்ச நேரம் உட்காரு” என்றவன் அங்கே வந்த சாராவை பார்த்து, “சாரா க்கா அம்மா இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காங்க” என்றான் ஒரு மருத்துவராக தனது தாயின் உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்ள
“ ஆல் ஓகே டா அவங்க குடிச்ச பாய்சன் அவங்களோட பிளட்ல கலக்குறதுக்கு முன்னாடியே கொண்டு வந்துட்டாங்க. அதனால வயிற்றில் இருந்த மொத்த பாய்சனையும் நாங்க இனிமா கொடுத்து வெளியே எடுத்துட்டோம். அவங்க ஸ்டொமக்கையும் கிளீன் பண்ணியாச்சு. இப்போதைக்கு அவங்க தூங்கிட்டு தான் இருக்காங்க. காலைல சீப் டாக்டர் வந்தவுடனே ரூமுக்கு மாத்திடுவோம். அதனால பயப்படாம இருடா” என்று அவனுக்கு சொன்னாள்.
“அக்கா இப்ப அம்மாவ பாக்கலாமா”
“ அவங்க தூங்கிட்டு இருக்காங்க டிஸ்டர்ப் பண்ணாம ஒவ்வொருத்தரா போய் வேணும்னா பாத்துட்டு வாங்க. என்ன கேட்டா நீ மட்டும் போய் பாத்துட்டுவானு தான் சொல்லுவேன். உங்க அக்கா ரொம்ப எமோஷனா இருக்காங்க. அவங்க இப்ப போய் உங்க அம்மாவ பார்த்தா கண்டிப்பா அவங்கள டிஸ்டர்ப் பண்ணுவாங்க. அதனால அவங்க பிபி அதிகமாக வாய்ப்பு இருக்கு. சோ நீ மட்டும் என்கூட வா”
“அக்கா சாரா க்கா சொல்றது சரிதான் நீ இங்க வெயிட் பண்ணு நான் போய் அம்மாவ பாத்துட்டு வரேன்” என்று தனது தமக்கையை அங்கே அமர சொல்லிவிட்டு சாராயுடன் அவன் மட்டும் உள்ளே சென்றான்.
உள்ளே மருத்துவ உபகரணங்களுக்கு இடையே அமைதியாக கண்களை மூடி படுத்திருந்த தனது அன்னையினை பார்த்தவன் அவளை நெருங்கி வந்து ட்ரிப் ஏறாத ஒரு கையினை பிடித்துக் கொண்டு, “ஏம்மா இப்படி பண்றீங்க அப்படி என்ன உங்களுக்கு பணம் தேவை வந்துச்சு. இதுக்கு தான் நான் டாக்டர் படிக்கலைன்னு சொன்னேன். கேட்டீங்களா எனக்கு இந்த உலகத்தில் இருக்கிற ஒரே சொந்தம் நீங்க மட்டும் தான் நீங்களும் என்னை விட்டு போனா நான் என்னம்மா பண்ணுவேன். ஏம்மா இப்படி பண்றீங்க. எவ்வளவு கடன் வந்தா என்ன உங்க பையன் நான் இருக்கும் போது அடைக்க மாட்டேனா. எதுக்கு மா இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுத்தீங்க. உங்கள யார் இப்படி ஒரு முடிவு எடுக்க சொல்லி தூண்டி விட்டது. அப்பா சாகும்போது கூட எங்களுக்காக உயிரோட தானே இருந்தீங்க. இப்ப மட்டும் உங்களுக்கு என்னமா ஆச்சு ஏம்மா இப்படி பண்ணுனிங்க. சொல்லுங்கம்மா. உங்க நிலைமைக்கு காரணம் யாரு சொல்லுங்கம்மா” என்று அமைதியான குரலில் அவளின் கையை பிடித்துக் கொண்டு அழுதான் சுபாஷ்.
இவனின் இந்த அழுகைக்கு காரணமானவனோ தனது முன்னே நின்று கேள்வி கேட்பவனுக்கு பதில் சொல்ல முடியாது அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது கண்ணு முழி பிதுங்கி போய் நின்றான்.
விதை விதைத்தவன் அதனை அறுவடை செய்யும் போது, வினையை விதைத்தவனும் அதனை அறுவடை செய்து தானே ஆக வேண்டும்.
error: Content is protected !!