Skip to content
Post Views: 664
“அப்புறம் மிஸ்டர். கர்த்தர் எப்படி இருக்கீங்க. என்னடா ஒரு இருட்டு அறைக்குள்ள அடைச்சிட்டு எப்படி இருக்கனு கேட்கிறானே பாக்கிய” என்றவனை நிமிர்ந்து பார்த்தான் கந்தன்.
தனது வீட்டில் ஏசியறையில் பஞ்சு மெத்தையில் மாத்திரை போட்டு உறங்கிக் கொண்டிருந்தவனை அர்த்த ராத்திரியில் வீடு புகுந்து தூக்கி வந்து எந்தவித வெளிச்சம் மற்றும் காற்றும் வராத ஒரு இருட்டறையில் பகலா இரவா என்று கூட தெரியாமல் அடைத்து வைத்து தனது முன்னே நின்று நக்கல் செய்பவனை கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்தான் கந்தன்.
Advertisement
“டேய் சுப்பு இங்க பாருடா நம்ம கர்த்தருக்கு கோபம் எல்லாம் வருது”
“ கோபம் வராம என்ன சார் பண்ணனும் அவர் பெயர் கர்த்தர் இல்லை கந்தன்”
Advertisement
Advertisement
“ ஓ ஆமால சரி சாரி மிஸ்டர் கர்த்தர் ப்ச்.. யோவ் உன் பேரு கந்தனு என் மைண்ட்ல ரெஜிஸ்டரே ஆக மாட்டேங்குது. என்னப்பா பண்ண சரி காசா பணமா. நம்ம எம்மதமும் சம்மதம் அப்படின்னு வாழ்றவங்க அதனால உன் பேர கர்த்தருனு வச்சிப்போம் சரியா”
“ டேய் போலீஸ்னு பார்த்தா ரொம்ப தான் பேசுற என்னடா உன் பிரச்சனை எதுக்கு தேவையில்லாம என்ன இங்க கொண்டுவந்து வச்சிருக்க. நான் யார் தெரியுமா என் பின்னாடி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா. நான் ஒரு போன் போட்டா போதும். உன்ன வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் பண்ண முடியும் பாக்குறியா” என்றான் இவன் செய்யும் அலும்பு தாங்க முடியாமல் கந்தன்
Advertisement
“ டேய் சுப்பு நம்ம கர்த்தர் என்ன இவ்வளவு கோவமா பேசுறாரு இது சரி இல்லையே. அந்த லத்திய எடு” என்று சுப்புவிடம் இருந்து லத்தியை வாங்கிய திருக்குமரன், “ கர்த்தர்னு பேர் வெச்சா அமைதியா இருக்கணும். கர்த்தர் என்ன சொல்லி இருக்காரு ஒரு கன்னத்துல அடிச்சா இன்னொரு கன்னத்தை காட்டணும்” என்று சொல்லி லத்தியினை எடுத்து அவன் தோளில் ஒரு அடி வைக்க, “அம்மா”என்ற அலறுடன் கையை பிடித்து கொண்டான் கந்தன்.
“ என்ன மிஸ்டர்.கத்தர் சாரி சாரி கந்தன் இப்ப கூப்பிடுங்க பாக்கலாம் உங்க பின்னாடி இருக்கிறவங்கள” என்று சொல்லி மேலும் இரண்டு அடி என்று வைக்க
அடி பொறுக்க முடியாமல், “சார் என்ன விடுங்க சார். நான் இந்த சமுதாயத்துல ஒரு முக்கியமான ஆள். சொந்தமா ஒரு ஆபீஸ் வச்சு நடத்துற ஒரு பெரிய மனுஷன் சார். என்ன போய் ஒரு அக்யூஸ்ட் மாதிரி இப்படி நடத்துறது நல்லா இல்ல.எதுக்காக என்ன கூட்டிட்டு வந்து இப்படி டார்ச்சர் பண்றீங்க. அப்படி என்னதான பண்ணுனேன்னு சொல்லிட்டு அடிங்க சார்” என்று அலறினான்.
“ ஆமால எதுக்கு ஒன்ன தூக்கிட்டு வந்து அடிக்கேன். சுப்பு எதுக்காக இந்த சமுதாயத்துல முக்கியமான ஒரு பெரிய மனுஷனை தூக்கிட்டு வந்தோம்”
“ சார் நீங்க தானே இவரை தூக்கிட்டு வர சொன்னீங்க”
“ நான் சொன்னா இந்த சமுதாயத்துல முக்கியமான ஒரு பெரிய மனுஷனை நீ தூக்கிட்டு வரலாமா. தப்புல்ல சுப்பு மன்னிப்பு கேளு”
“ சார் என்னால இந்த கந்து வட்டிக்காரன் கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது சார்”
“சுப்பு என்ன சொல்ற தப்பு தப்பு அது கேபி பைனான்ஸ் எங்க சொல்லு பார்க்கலாம் கேபி ஃபைனான்ஸ் அப்படித்தான மிஸ்டர் கர்த்தர் அதைக் கேபி பைனான்ஸ் தான” என்றான் கந்தன் முன்பு லத்தியை ஆட்டிக்கொண்டு
“ இல்ல சார் அது பைனான்ஸ் இல்ல வட்டிக்கட தான் சார்” என்றான் மீண்டும் அடித்து விடுவானோ என்ற பயத்தில் கந்தன்
“ என்ன சுப்பு இது சமுதாயத்துல முக்கியமான ஒரு பெரிய மனுஷன் வட்டிக்கட நடத்தலாமா. அது எவ்வளவு பெரிய தப்பு. இது தப்புக்கு என்ன தண்டனை தரணும் சொல்லுங்க மிஸ்டர் கர்த்தர் சமுதாயத்துல ஒரு பெரிய மனுஷன் வட்டிக்கட நடக்கலாமா அநியாயமா வட்டி வாங்கலாமா” என்று கேட்டுக் கொண்டு மீண்டும் இரண்டு அடியினை வைக்க
“ ஐயோ சார் என்ன விட்டுருங்க நான் தெரியாம வச்சுட்டேன் இனி வைக்க மாட்டேன் சார். என்ன வெளிய விடுங்க இல்லன்னா நீங்க பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும். எனக்கு பின்னாடி இருக்கிற ஆளுங்கள பத்தி உனக்கு தெரியாது சார் ”
“ஏன் மிஸ்டர் கர்த்தர் எப்ப பார்த்தாலும் எனக்கு பின்னாடி இருக்கிற ஆளு பின்னாடி இருக்கிற ஆளுன்னு சொல்றீங்க அப்படி யாரு தான் உங்க பின்னாடி இருக்கா சொல்லுங்க”
“ சார் அ..து அ..து” என்று சொல்லி அவன் திணற
“ இவன் தான் உங்க பின்னாடி இருக்கிற ஆளுங்களா மிஸ்டர் கர்த்தர்” என்று அந்த லோன் ஏஜென்ட் மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் கந்தன் முன்பு நிறுத்தினான் திரு.
இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவனுக்கு புரிந்து விட்டது எதற்காக தன்னை இங்கே அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறான் என்று.
“என்ன கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வருதா எதுக்காக நான் உங்கள இங்கே தூக்கி வச்சிருக்கேன்னு” என்றான் கந்தன் முகத்தில் வந்து போன உணர்ச்சிகளை பார்த்துக் கொண்டு
“இங்க பாருங்க சார் இவங்க யாருன்னு எனக்கு தெரியாது. தேவையில்லாம என்ன கொண்டு வந்து இங்க வச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் சேர்த்து நீங்க பின்னாடி அனுபவிக்க தான் போறீங்க பாருங்க” என்றான் சுதாரிப்பாக
“என்ன மிஸ்டர் கர்த்தர் இன்னுமா உங்களுக்கு புரியல உங்க ஆட்டம் எல்லாம் முடிஞ்சிடுனு. உங்களுக்கு இவங்கள யாரும் தெரியாது அப்படித்தான. அது சரி இவனையாவது யாருன்னு தெரியுமா” என்று சுப்பு இழுத்து வந்தவனை கந்தன் முன்பு நிறுத்தினான்.
தனது முன்னே சட்டை கிழிந்து தலைமுடி கலைந்து முகம் கை கால் அனைத்தும் இரத்தமாக நிற்க முடியாமல் நின்றவனை முதலில் புரியாமல் பார்த்தவன், “ஐயோ என் புள்ள அருணு உனக்கு என்ன ஆச்சுயா. யார் உன்ன இப்படி அடிச்சது. டேய் போலீஸ் இது உன் வேலை தான. எதுக்குடா தேவை இல்லாம என் பிள்ளையை இப்படி அடிச்சு வச்சிருக்க” என்றான் தனது மகனை கையில் ஏந்தி கொண்டு
“அப்பா டேய் ஊர்ல உள்ள எல்லா மொள்ளமாதிரி தனம் பண்ற உங்களுக்கே இப்படி பாசம் இருக்கும் போது உங்க ரெண்டு பேர்த்தால எத்தனை ஏழை குடும்பம் அழிச்சி இருக்கு தெரியுமா. அவங்க எல்லாம் தன்னோட அப்பா மேல அம்மா மேல எவ்வளவு பாசமா இருந்திருப்பாங்க. எத்தனை பசங்க தன்னோட அப்பா அம்மாவ இழந்துட்டு நிக்கிறாங்க தெரியுமா. சொல்லுடா அவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல போற” என்று சொல்லி தனது கையில் இருந்த லத்தியால் கந்தன், அவன் மகன் மற்றும் அந்த லோன் ஏஜென்ட் ஆகிய மூவரையும் தனது ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து நொறுக்கினான் திருக்குமரன்.
அவன் அடியை பொறுக்க முடியாமல் மூவரும் அலற, “சார் போதும் அவங்கள விடுங்க. இதுக்கு மேல அடிச்சனா மூணு பேரும் செத்துருவாங்க கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க சார்” என்று சுப்பு அவன் கையில் இருந்த லத்தீனை பிடுங்கி எரிந்து அவனை சமாதானப்படுத்தினான்.
“ஏன்டா பரதேசி நாயே உன்கிட்ட காசு வாங்குனா உன் கூட படுக்க வரணுமா. காலம் போன கடைசியில உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் அத்தைய உன்ன அட்ஜஸ்ட் பண்ணி போக சொல்லுவ ” என்று சொல்லி கந்தனை அடிக்க சென்றான்.
அவன் சொல்வது புரியாமல் முழித்த கந்தனை பார்த்து, “என்னடா புரியலையா என்னோட அத்தனா யாருன்னு தெரியலையா. அதுதாண்டா நீ காலைல அவமானப்படுத்தி அனுப்புன இந்திரா இந்திரா தாமஸ். அவங்களோட ஒரே ஒரு மருமகன் நான் தான். புரியலையா அவங்க பொண்ணோட புருஷன் நான் தான்டா. இப்ப புரியுதா நீ எப்படி இங்க மாட்டுனனு” என்றவனின் பேச்சில் புரிந்து விட்டது தனது சபல புத்தியால் தான் எங்கே சிக்கி இருக்கிறோம் என்று..
“ என்னை இன்னும் புரியலையா உனக்கு தெளிவா படம் போட்டு காட்டடா. டேய் பாருடா உங்க அப்பனோட திருவிளையாடல்” என்று கந்தன் மகனிடம் சொல்லி தனது செல்லில் இருந்த வீடியோவை அவர்களின் முன்னே காட்டினான்.
அதில் அந்த மேனேஜர் வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்த கந்தன் பயத்துடன் நின்ற இந்திராவை பார்த்து, “என்னமா ஆச்சு எதுக்கு என்னை பார்த்து பயப்படுற. நான் உன் அண்ணனோட பிரண்டு தான் சரியா என்ன பாத்து பயப்படாத. என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு மா” என்றான் பாசமாக இந்திராவிடம்
“சார் நிஜமா அந்த லோன் நான் எடுக்கவே இல்ல. நான் சைன் பண்ணது வெறும் இருவதாயிரம் ரூபாய் லோன் தான் சார். என்ன நம்புங்க என் பிள்ளைங்க மேல சத்தியமா நான் அவ்ளோ காசு லோன் எடுக்கவே இல்ல”
“ என்னமா சொல்ற இத என்ன நம்ப சொல்றீங்களா. இப்ப தான் உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்களாமே. அதோட உங்க பையன் வேற டாக்டர் படிக்கானாமே. சரி எங்கிட்ட இருந்து நீங்க காசு வாங்கல . இதுக்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து காசு வந்துச்சி சொல்லுங்க மிஸஸ் இந்திரா தாமஸ்” என்று அவளின் பெயரை மட்டும் அழுத்தமாக சொல்லி ஒரு வித நக்கலில் முடித்தான் கந்தன்.
“தேவை இல்லாம பேசுறீங்க சார். இந்த லோன் நான் எடுக்கவே இல்ல என்னால கட்ட முடியாது”என்றாள் கண்டிப்பாக.
“ஓ கட்ட முடியாதா சரி ஓகே ஒரு பிரச்சனையும் இல்ல.நீ மட்டும் நான் சொல்லுற மாதிரி நடந்துகிட்டா உன் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தீங்கள அவங்க கிட்ட போயி உங்க சம்மந்தி என்கிட்ட லட்ச ரூபாய் லோன் எடுத்து ஏமாத்திட்டாங்கனு நான் சொல்ல மாட்டேன் மா. அதோட உன் பையன் படிக்கிற இடத்துல போய் உங்க அம்மா என்கிட்ட காசு வாங்கிட்டு என்னை ஏமாத்திட்டாங்கனு நான் சொல்ல மாட்டேன் மா.அதாவது நான் என்ன சொல்றேன்னா நான் சொல்ற மாதிரி என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போனா இந்த அமௌன்ட் ஃபுல்லாக கட்டிடனு க்ளோஸ் பண்றேன். ஓகேவா ஆனா அதுக்கு பதிலா ஒரு ஆறு மாசத்துக்கு என்னோட வீட்டுக்கு வந்து என் தேவை எல்லாத்தையும் பூர்த்தி செய்யனும்” என்றான் அவளின் மேனியை கண்களால் வருடிக்கொண்டு
“ சார் நீங்க பேசுறது பார்க்கிறது எல்லாமே தப்பா இருக்கு என்னால நீங்க சொல்ற மாதிரி எல்லாம் நடக்க முடியாது நான் இப்பவே போலீஸ் போறேன்”
“ கம்ப்ளைன்ட் கொடுக்க போறீங்களா சரி ஓகே உன் லோன் அக்கவுண்ட க்ளோஸ் பண்ணாம லோன் அமௌன்ட் கட்டலன்னு சொல்லி உன் போட்டோ உன் பையன் பொண்ணு எல்லாரோட போட்டோவும் சேர்த்து போஸ்டர் அடிச்சு இப்படி என்கிட்ட லோன் வாங்கி ஏமாத்திட்டாங்க. இனிமே இவங்ககிட்ட யாரும் காசு கொடுத்து ஏமாறாதீங்கனு ஒரு பெரிய போஸ்டர் அடிச்சு ஊருக்குள்ள ஓட்ட சொல்லுறேன். அதோட முக்கியமா உன் பையன் படிக்கிற காலேஜ் முன்னையும் உன் பொண்ணு வீட்டு முன்னையும் அந்த போஸ்டரை மறக்காம ஓட்ட சொல்லுறேன் சரியா. ஆங் அப்புறம் போட்டோ எல்லாம் தெளிவா இருக்கணும் அதனால ஏதாவது ஃபேமிலி போட்டோ வச்சிருக்கியா” என்று இந்திராவிடம் கேட்க அவள் அவனை முறைத்து பார்க்க, “ சரி ஓகே விடு நானே என் செலவுல ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்” என்றவன் அவளின் அருகே வந்து மெதுவாக,
“உன்னோட பையன் ஏதோ டாக்டர் ஆக படிச்சிட்டு இருக்கானாமே அவன் இனி வெளிய தலை காட்ட முடியாது. உன் பொண்ணும் தான் அவமான தாங்க முடியாம தூக்குல தொங்க போறா பாரு” என்றான் கந்தன் வெறியுடன்
அவன் சொல்வது புரியாமல் மிரண்டுப் போய் முழித்து நின்ற இந்திராவை பார்த்து, “என்னடா இவன் ஏன் நம்மள இப்படி பண்றான்னு தெரியாம யோசிக்கிறியா” என்றவனுக்கு ஆமாம் போல் தலையாட்ட, “என்ன உனக்கு தெரியலையா எப்படி தெரியும் நீ தான் அந்த அனாதை பையன் பின்னாடி ஓடி போனவாளாச்சே. உன்ன பத்து வருஷமா உருகி உருகி காதலிச்சு உங்க அண்ணன் கைல கால்ல விழுந்து எப்படியோ எல்லாத்தையும் கரெக்ட் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தா. நீ அசால்ட்டா அந்த அனாதை நாய் பின்னாடி போடுவியா. அப்பவே உங்க ரெண்டு பேரையும் கொல்லலாம் இருந்தேன். ஆனா எங்க அப்பா சாவ கிடந்ததால என் அத்தை பொண்ண கல்யாணம் பண்ண வேண்டியதா ஆயிட்டு. அதுக்கு பிறகு ஒரு பத்து வருஷம் உங்கள என்னால ஒன்னும் பண்ண முடியல. சரி பொழைச்சு போங்கனு அப்படியே விட்டுட்டேன். ஆனா உன்னோட அழகு என்ன இன்னைக்கு வரைக்கும் தூங்க விடல. இப்பதான் எனக்கொரு வாய்ப்பு கிடச்சியிருக்கு அத கரெக்டா யூஸ் பண்ண வேண்டாமா. நான் அப்படியே உன்னை விட்ருவேன்னு நினைக்கியாடி. விடமாட்டேன்டி இந்த வாட்டி ஒண்ண ருசிக்காம விடமாட்டேன் டி. நைட்டு வரைக்கும் தான் உனக்கு டைம் அதுக்குள்ள ஏதாவது ஒரு முடிவு எடு. என் ஆசைக்கு பணிஞ்சா உன் பிள்ளைகள விட்டுவேன். இல்லன்னு வச்சுக்க உன் பிள்ளைகளே அவமானம் தாங்க முடியாம தற்கொலை பண்ணி செத்துருவாங்க. முடிவு உன் கையில தான் உன் பிள்ளைக வாழணுமா இல்ல சாகனுமா நீயே முடிவு பண்ணு வரட்டா மாமா” என்று அவள் கன்னத்தில் தட்டி சென்றான் கந்தன்.
அதோட அந்த வீடியோவை முடிய, “ என்ன மிஸ்டர் கர்த்தர் எப்படி நம்ம தனியா பேசுனது இப்படி வீடியோவா மாறுச்சுன்னு பாக்குறீங்களா. அது வேற ஒன்னும் இல்ல உங்களோட புது மேனேஜர் என்னோட பிரண்டு தான் அவன் எடுத்த வீடியோ தான் இது. எப்படி எப்படி என் அத்தைக்கு நீ சாய்ஸ் தரியா. இப்ப நான் தரட்டா உனக்கு சாய்ஸ். இதுவரைக்கும் நீ பண்ண தப்பு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு நல்ல பிள்ளையா எல்லாம் உண்மையும் சொல்ல போறியா. இல்லை என்கிட்ட அடி வாங்கி வாங்கி சாகப் போறியா. உன் முன்ன ரெண்டு சாய்ஸ் இருக்கு. அதில ஒன்று சூஸ் பண்ணு. உன்ன மாதிரியெல்லாம் நான் அதிகமா டைம் தரமாட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள ரெண்டுல ஒன்ன முடிவு பண்ணி சொல்லு” என்றவன் அந்த மூவரையும் அங்கே விட்டுவிட்டு மற்ற அனைவரும் அங்கே இருந்து வெளியேறினர்.
“ டேய் தகப்பா காலம் போன கடைசியில உனக்கு பொம்பள சோக்கு கேக்குதா. பெரிய லைலா மஜ்னு காதல் ஆளையும் மண்டையும் பாரு. எவ்ளோ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா பிளான் பண்ணி இந்த இடத்துக்கு நான் வந்தேன் தெரியுமா. எனக்கு ஆப்ரால் ஒரு பொம்பளை மேட்டர்ல மாட்ட வச்சுடியே. உன் மூஞ்சிக்கு எங்க அம்மா போதாதா. உன்ன அடிச்சு கொன்ன கூட தப்பே இல்லை. ஏண்டா பரதேசி நாயே இப்படி பண்ணுன” என்று தந்தை என்றும் பாராமல் கிழிக்கிழி என கிழித்து தொங்க விட்டு விட்டான் அவன். அருண் குமார் சாரா பைனான்சியின் மேனேஜர்.
“நல்லா சொல்லுங்க சார் இவரால நானும் மாட்டிகிட்டேன்” என்றான் கலெக்சன் ஏஜென்ட் பிரகாஷ்.
“ நீ அவரால மாட்னியா. ஏன்டா நாயே ஒரு பொம்பளைய உன்னால ஒழுங்கா மறைச்சு வைக்க தெரியுதா. நீ மட்டும் அந்த லட்சுமி ஒழுங்கா மறைச்சு வச்சிருந்தா. இப்ப நம்ம மாட்டி இருப்போமா”
“நல்லா சொல்லு தம்பி எல்லாம் இவனால தான்”
“ யோவ் நீ வாய தொறக்காத வாயை மட்டும் திறந்த உன்னை நானே கொன்னுடுவேன். இதுக்கெல்லாம் ஆரம்பமே நீ மட்டும் தான். நீ மட்டும் அந்த பொம்பளைய உள்ள கொண்டு வராம இருந்திருந்தா இவனுக்கு அதை பத்தி தெரிஞ்சு இருக்காது. போயும் போயும் இவன் மாமியார் மேல தான் உனக்கு ஆசை வருமாயா”
“ மகனே தப்பா சொல்லாத என்னோட லவ்வர் தான் அவனோட மாமியார். அதோட அவ பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டு தெரியும். ஆனா இவன்தான் அவளோட மருமகன் எனக்கு தெரியாதுடா ”
“ அடிங்க முட்டி செத்த கிழவா உனக்கு லவ்வர் கேட்குதா லவ்வர் ஆளையும் மண்டையும் பாரு” என்று பச்சை பச்சையாக தந்தை என்று பாராமல் திட்ட தொடங்கினான். மற்ற இருவரும் தங்கள் காதினை மூடி கொண்டனர்.
“ டேய் அங்க என்னடா சத்தம்” என்று கத்தி கொண்டு உள்ளே வந்த திரு, “மிஸ்டர் கர்த்தர் என்ன செய்யப் போறீங்க. எந்த சாய்ஸை சூஸ் பண்ணி இருக்கீங்க” என்று தனது கையில் இருந்த துப்பாக்கியை கந்தனை நோக்கி குறி வைத்து கேட்டான்.
“சார் சார் கொன்றாதீங்க சார் எல்லாம் உண்மையும் நான் சொல்லிடுறேன்” என்று அவன் துப்பாக்கி பயந்து எல்லா உண்மையும் சொல்லத் தொடங்கினான்.
error: Content is protected !!