Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-FINAL-2

திரு பேசியனைத்தும் அவள் மூளையில் ஓட அப்போது தான் புரிந்தது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம். தான் மாட்டியதும் இல்லாமல் தன்னால் பிள்ளைகளின் வாழ்க்கையும் சேர்த்து அல்லவா போய் இருக்கும் என்ற குற்றவுணர்வில் அவள் அமைதியாக இருக்க,

“அம்மா பாத்திங்களா எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கனு. இப்பலாம் யாரையும் நம்ம முடியல. நம்ம தான் உஷாரா இருக்கணும் போல. இது எல்லாம் எதுக்கு நம்ம கிட்ட இருக்குறத வைச்சி நம்ம வாழ்ந்தா போதாதா. அடுத்தவங்க நம்மள என்ன நினைப்பான்னு நினைக்க ஆரம்பிச்சா இப்படி தான் போய் முடியும். நம்ம நமக்காக வாழனும் அப்ப தான் நம்ம கிட்ட என்ன இருக்கோ அத மட்டும் வைச்சி வாழ முடியும்” என்றாள் தன்போக்கில்

 

இன்னும் அவளுக்கு அம்மாவுக்கு என்ன நடந்துயென தெரியாது. சரண் சுபாஸிடம் மட்டும் சொல்லி இருந்தான். திரு பாரதியிடம் சொல்ல வேண்டாம் என சொல்லி இருக்க அதனால் யாரும் அவளிடம் சொல்லவில்லை. அவளும் அதனை கேக்கவில்லை சில உண்மைகள் நமக்கு தெரியாமல் இருப்பதே நல்லது. அம்மா இப்போது தன்னுடன் இருக்கிறாள் அது போதுமே என்று இருந்து விட்டாள் அவள்.சுபாசும் உண்மை தெரிந்த பிறகும் தாயிடம் கேக்கவில்லை அவனுக்கும் அம்மா இருந்தால் போதும் மற்ற அனைத்தையும் தான் பார்த்து கொள்வோம். அதனால் அவளிடம் தங்களை விட்டு போக இனி இப்படி தப்பான முடிவு எடுக்கக்கூடாது என வாக்கு வாங்கி விட்டான்.



Advertisement

 

அவள் பேச்சினை கேட்ட இந்திரா அப்படியே முகம் மாற அதனை கவனித்த சுபாஷ், “அக்கா மாமா இன்னும் உனக்கு போன் பண்ணலையா”என்றான் அவள் பேச்சினை மாற்ற எண்ணி

 

Advertisement

“எங்கடா அவர் பிஸியா இருப்பாரு போல. இன்னும் போன் பண்ணல. அத்தைக்கு கால் பண்ணி கேட்டேன் வீட்டுக்கும் போகலையாம்” என்றாள் சோர்வாக.அவன் நினைத்து போல அடுத்த பேச்சிற்கு தாவீவிட்டாள் பாரதி.

Advertisement

 

“அக்கா நீ ரொம்ப சோர்வா தெரியுற பேசாம அத்த, மாமா கூட நீயும் வீட்டுக்கு போய் இருக்கலாம்”என்றான். இந்திராவை ரூமுக்கு மாற்றியவுடன் வீட்டிற்குக் கிளம்பி சென்ற விநாயகம், புஷ்பா உடன் அவளையும் கிளம்ப சொன்னான். அவள் தான் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

 

Advertisement

“போடா அம்மா இங்கே இருக்கும்போது நான் எப்படி வீட்டுல இருக்க முடியும். உங்க மாமா வேற இல்ல. அங்க என்னால் போக முடியாது நீ வேணா வீட்டுக்கு போய் ப்ரெஸ் வாங்கிட்டு வா. ஆங் அப்படியே கீதா அம்மாவுக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு வாடா”

 

“ஆமா க்கா கண்டிப்பா கீதாக்கா அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லி ஆகனும். எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. அவங்க மட்டும் சரியான நேரத்துல அம்மாவ கொண்டு வந்து ஹாஸ்பிடல் சேக்கலனா என்ன ஆகி இருக்கும்”என்றவனின் குரல் தடுமாற

 

“அதுலாம் ஒன்னும் ஆகி இருக்காது. நீ அத பத்தி பேசாத என்னால அத நினைச்சி கூடக் பாக்க முடியல”என்றாள் கலங்கிய குரலுடன்

 

 தனது பிள்ளைகளின் பேச்சினை கேட்டிருந்த இந்திராவிற்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. ஆனால் இனி இது போன்ற முட்டாள்தனத்தை பண்ண கூடாது என மனதில் உறுதி கொண்டாள்.

 

அப்போது யாரோ தன்னை அழைக்கும் சத்தத்தில் நுழைவு வாயிலை திரும்பி பார்த்தால், “இ..ந்து அம்..மா..டி இந்.. து என் செல்..லமே என் மகள கடைசில இப்படியா பாக்கணும். ஐயோ அம்மா கடவுளே இப்படி என் பிள்ளையை பார்க்கத்தான் என்ன உயிரோட வச்சிருக்கியா” என்று அழுத தனது அன்னையைப் பார்த்து , “அம்மா” என்று கைகளை நீட்ட நடுங்கும் விரல்களுடன் அதனைப் பற்றிக் கொண்டு கதறி அழுதார் சரோஜா. இந்திராவின் அன்னை. அவரின் பின்னே ராஜேந்திரன்( இந்திராவின் அப்பா), ராஜலிங்கம்(அவளின் அண்ணன்), அவரின் மனைவி, மகன்

 வசுந்தரா அவரின் மகன் மற்றும் கணவர் என அனைவரும் வந்திருந்தனர்.

 

 இருவரின் அழுகை பார்த்து அங்கிருந்த அனைவரும் அழ திடீரென்று இவர்கள் உள்ளே வந்ததும் ஒன்றும் புரியாமல் நின்ற சுபாஷ் தனது அன்னையின் அழுகையை பார்த்தவுடன், “பாட்டி இங்க பாருங்க அழாதீங்க நீங்கள் அழுறத பார்த்து அம்மாவும் அழுகிறாங்க அது அவங்க உடம்புக்கு நல்லது இல்லை. ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க பாட்டி” என்றான் சரோஜா கையை பிடித்துக் கொண்டு

 

 அவன் சொன்னதே கேட்டு தனது கண்களை துடைத்துக் கொண்டு, “ராசா நான் அழல ராசா. அம்மாடி நீயும் அழாத” என்று சொல்லி அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டார்.

 

“ஏம்மா இப்படி பண்ண இப்படி தற்கொலை பண்ற அளவுக்கு என்ன ஆச்சு உனக்கு. இந்த அம்மா ஞாபகம் உனக்கு வரவே இல்லையா” என்று அவள் கையை பிடித்து மீண்டும் அழ தொடங்க

 

“ அடியே கூறு கெட்டவளே இப்பதானே பேரன் சொன்னான். அழுதா அவ உடம்பு கெட்டுப் போயிடும்னு நீ ஏன் அவ கைய புடிச்சு அழுதுட்டு இருக்க. கொஞ்ச நேரம் சும்மா ஒரு கரையில இரு” என்ற ராஜேந்திரன், “அம்மாடி என்னை மன்னிச்சிடுமா. உன்னோட இந்த நிலைமைக்கு நான் காரணம் ஆகிட்டேனே. நான் மட்டும் என் புள்ள கூட பேசி இருந்தேன்னா என் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா. என்ன மன்னிச்சிடுமா உன்னோட எனக்கு இந்த வெட்டி கவுரவம் பெருசா போய்டு ” என்று இந்திராவின் முன்பு இரு கை கூப்பி கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.

 

“அப்பா” என்று அவரின் இரு கையை பிடித்து அதில் தனது முகத்தை புதைத்துக் கொண்டு, “ நீங்க ஏன் பா என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க. நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். என்ன மன்னிச்சிடுங்க அப்பா. உங்கள எல்லாம் கஷ்டப்படுத்துனால தான் எனக்கு இந்த நிலைமை”

 

“ இல்லடா நீ எங்ககிட்ட மன்னிப்பு கேட்காத இதுக்கெல்லாம் காரணம் நான் தான். நான் அந்த நாய உனக்கு மாப்பிள்ளையா கொண்டு வராம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. எல்லா தப்புக்கும் காரணம் நான் தான் என்னை மன்னிச்சிடுமா” என்றார் ராஜேந்திரன்

 

“அண்ணா நீ ஏன் மன்னிப்பு கேட்க நான் தான் எல்லாத்துக்கும் காரணம் நீங்க இல்ல. நீங்க பாசமா வளர்த்தவ உங்கள் சொல் பேச்சு கேட்காம ஓடிப்போனா கூப்டு வச்சி கொஞ்சவா செய்வீங்க. எல்லா தப்புக்கும் காரணம் நான் தான் னா. என்ன மன்னிச்சிடுனா நான் ஓடி போனதுனால உங்க எல்லாத்துக்கும் எவ்ளோ அசிங்கமா இருந்திருக்கும்” என்றாள் கண்ணீருடன்

 

“ ஆமா நீ ஓடிப்போனதுனால பொண்ண சரியா வளக்க தெரியலன்னு அப்பாவை எத்தனை பேரு கேவலமா பேசுனாங்க தெரியுமா. அண்ணன கூட ஒழுங்கா தங்கச்சியை கண்டிச்சி வளர்க்க மாட்டியான்னு எத்தனை பேரு கிண்டல் பண்ணாங்க தெரியுமா உனக்கு” என்றாள் குத்தலாக வசுந்தரா

அவள் பேசியதை கேட்டு கோபம் கொண்ட ரவி, “ஏண்டி எங்க எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா. அவ என்ன நிலைமையில ஹாஸ்பிடல் இருக்கா இப்ப கூட உன் புத்தி மாறாதா” என்றார் கடுப்புடன்

 

 ஹாஸ்பிடலுக்கு வர மாட்டேன் என்றவளை கன்னத்தில் இரண்டு போட்டு அழைத்து வந்திருந்தார் அவர். இதுவரைக்கும் தன்னை எதிர்த்து பேசாத தனது கணவன் தங்கைக்காக அடித்ததை தாங்க முடியாத வசுந்தரா, “நான் என்ன இல்லாததயா சொன்னேன். என்ன நடந்துச்சோ அதைத்தானே சொன்னேன். அவளுக்கு தெரிய வேண்டாமா அவளால் நம்ம பட்டது எல்லாம்” என்றாள் நல்லவள் போல

 

“ஆமா அப்படியே நீ சொல்லிட்டாலும் ஆள பாரு உன் குணத்த மட்டும் நீ மத்தவே மாட்ட இல்ல. உனக்கு இன்னும் இரண்டு அடி போட்டா தான் நீ எல்லாம் சரி பட்டு வருவ”என்று அவளை அடிக்க வர

 

“ மாப்ள சும்மா இருங்க. காலம் போன கடைசியில என்ன இது. எப்பவோ கொடுக்க வேண்டியது எல்லாம் இப்ப கொடுக்குறீங்க” என்றார் ராஜலிங்கம்

 

 தனக்கு சப்போர்ட் செய்யாமல் தன்னை பேசும் அண்ணனை அதிர்ந்து போய் வசுந்தரா பார்க்க, “என்ன பாக்க உன்னோட தில்லு முல்லு எல்லாம் எனக்கு தெரியாது நினைக்கியா. நீயும் உங்க அண்ணியும் சேர்ந்து பார்த்த எல்லா ஆகா வழி வேலையும் எனக்கு தெரியும். அவளுக்கு நாலு போட்டு தான் கூட்டிட்டு வந்து இருக்கேன். இருக்கிற பணம் போதாத உனக்கு வட்டிக்கு வேற விடுற போல. உனக்கு ஒரு நாள் இருக்கு. இப்ப அமைதியா நிக்க போறியா இல்லையா” என்று அவரின் மனைவியையும், தங்கையும் மிரட்டினார்.

 

 எல்லாரையும் வந்து பார் என்று நிற்கும் வசுந்தரா சிறு வயதிலிருந்து தன் அண்ணன் என்றால் கொஞ்சம் பயம் இப்போது அந்த அண்ணன் திட்டியதும் தனது வாயினை மூடிக்கொண்டு அமைதியாக நின்றாள்.

 

“ அடப்பாவமே உன்னோட வாயை ஆஃப் பண்ற சுவிட்ச் உன் அண்ணன் கிட்ட தான் இருந்துச்சா இது முதல்ல தெரிஞ்சிருந்தா நான் இத்தனை வருஷம் படாத பாடு பட்டு இருக்க மாட்டேனே” என்றார் பாவமாக

 

 அவர் சொல்லியதை கேட்டு எல்லோரும் சிரிக்க, “அப்பா நீங்க எப்பவும் லேட் பிக்கப் தான்” என்று சொல்லி சிரித்தான் அவரின் மகன்.

 

“அது என்னவோ கரெக்டு தான் தம்பி லேட் பிக்கப்பா இருக்க போய் தான உங்க அம்மா கழுத்துல தாலி கட்டி இருக்கேன்” என்றார் சோகமாக. அவர் சொன்னதை கேட்டு வசந்தரா அவரை முறைக்க, “மச்சான் இங்க பாருங்க உங்க தங்கச்சி என்ன முறைக்கிறா” என்று போட்டுக் கொடுத்தார் ரவி.

 

 அதில் பதறி போன வசுந்தரா, “ அண்ணா நான் எதுவும் பண்ணலண்ணா” என்றார் வேகமாக. அவர் சொன்ன வேகத்தில் அனைவரும் சிரிக்க தொடங்கினார்.

 

 தனது மகள் சிரிப்பதை ஆசையாக பார்த்த ராஜேந்திரன், “ அம்மாடி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருடா. உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் இந்த அப்பா கிட்ட சொல்லுடா நான் பாத்துக்குறேன் இன்னொரு தடவை இப்படி ஒரு முடிவு எடுக்காத சரியா” என்றார் அவளின் தலையை தடவிக் கொண்டு

 

“ சரிப்பா என்ன மன்னிச்சிடுங்க பா” என்று மறுபடியும் இந்திரா அழ ஆரம்பிக்க, “ அம்மா போதும் எத்தனை தடவை எல்லாத்தையும் மன்னிப்பு கேட்பீங்க. ஃபர்ஸ்ட் அழுறத நிப்பாட்டுங்க. சும்மா அழுதழுது உங்க உடம்ப வீணாக்காதீங்க” என்றான் அதட்டலாக

 

“ஆமாடா பேரன் சொல்றத கேளு. இனி எதுக்காகவும் நீ அழாதே அப்பா நான் பாத்துக்குறேன்” என்றவர் தனது பேத்தி,பேரனை பார்த்து, “ செல்லங்களா நீங்க எவ்ளோ பெருசா ஆயிட்டீங்க. உங்களோட சின்ன வயசுல கூட இருக்க இந்த தாத்தாவுக்கு கொடுத்து வைக்கல. அந்த வீணா போன வெட்டி வீராப்பலா எத்தனையோ நீங்க இழந்துட்டீங்க. அதுக்கெல்லாம் சேர்த்து இந்த தாத்தாவ நீங்களும் மன்னிச்சிடுங்க டா” என்று அவர்களை தோளோடு அணைத்துக் கொண்டார்.

 

“ என்ன தாத்தா இது.நீங்க வயசுல பெரியவங்க எங்ககிட்ட மன்னிப்பு கேட்காதீங்க” என்றாள் பாரதி சங்கடமாக

 

“ஆமா தாத்தா எதுக்கு வீணா பழச நெனச்சு மன்னிப்பு கேட்டு சங்கடப்படுறீங்க. அதெல்லாம் வேண்டாம் இனி வர்ற காலத்துல நம்ம ஒண்ணா இருக்கலாம். நம்ம இழந்ததெல்லாம் சேர்த்து வச்சு வாழலாம் தாத்தா” என்று பெரிய மனிதன் போல் கூறியவனை, “என் ராசா எப்படி அறிவா பேசுறான் பாருங்க” என்று அவனை அனைத்து கொண்டார் பாட்டி.

 

இப்படியே பிரிந்த குடும்பம் ஒன்றாக தங்கள் இருக்கும் இடம் ஆஸ்பத்திரி என்பதை மறந்து அனைவரும் சந்தோஷமாக கதை பேச

 

“ என்ன இங்க சத்தம் அதிகமா இருக்கு. இது ஹாஸ்பிடலா இல்ல வேற எதுவுமா” என்று மிரட்டலுடன் உள்ளே வந்தார் வேதாச்சலம்.அவரின் பின்பு அவரின் குடும்பத்தினர் அனைவரும் நின்றனர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!