Skip to content
Post Views: 750
அங்கே வேதச்சலத்தை பார்த்த ராஜேந்திரன், “அண்ணா” என்று அவரை அணைத்துக் கொண்டார்.
“ஒரு வழியா இப்பவாவது பொண்ண மன்னிச்சியே அது போதும். சும்மா நம்மளோட வெட்டி கௌரவத்துக்காக பசங்க வாழ்க்கைல விளையாடக்கூடாது சரியா” என்று அண்ணனாக அவருக்கு அறிவுரை சொன்னார்.
“ காலம் போன கடைசியில் தானா நமக்கு எல்லாம் புரியுது. இருந்தாலும் உங்க அளவுக்கு பெருந்தன்மை எனக்கு வராதுனா” என்றார் அந்த காலத்திலேயே தனது மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த வேதாச்சலத்தை பாராட்டி
Advertisement
“ அட போடா வாழ போறது அவங்க அவங்களுக்கு பிடிச்சா போதாதா நடுவுல நம்ம யாரு அவங்க தப்பு பண்ணா தப்பானவங்கள செலக்ட் பண்ணா நம்ம அதை சரி பண்ணலாம். அத விட்டுட்டு அவங்கள பிரிக்கக்கூடாது. வாழ போவது கொஞ்ச நாள் அத நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போவோம். அத விட்டுட்டு அவனுக்காக இவனுக்காகன்னு சொல்லி நம்ம சந்தோசத்தை நம்ம ஏன் இழக்கணும் சொல்லு” என்றார் தத்துவமாக.
Advertisement
“அட அட சீனியர் கலக்குறீங்களே. உங்களோட இந்த பேச்சு திறமைக்கும், அறிவுக்கும் நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது சீனியர்” என்று விசில் அடித்து பாராட்டினான் சரண்.
Advertisement
“டேய் போதும் அடங்குடா நீ கொஞ்சம் ஓவரா தான் போற. உனக்கு கூடிய சீக்கிரம் கால்கட்டு போட்டு தான் ஆகணும்” என்றார் விநாயகம்
Advertisement
அவர் அப்படி சொன்னதும் தனது பக்கத்தில் நின்ற சாராவை பார்த்து, “ என்ன சாரபாம்பு உங்க மாமா கல்யாணத்த பத்தியெல்லாம் பேசுகிறாரு. நீ சரி சொல்லாம அவர் பேச மாட்டாரே. உனக்கு ஓகேவா” என்றான்.
“ எனக்கு ஓகே தான். நான் தான் அப்பா கிட்ட சொல்லி மாமா கிட்ட பேச சொன்னேன். என்ன உங்களுக்கு ஓகே இல்லையா” என்றாள் அவன் கண்ணை பார்த்துக் கொண்டு
“ நான்தான் எப்பவோ ரெடியே. உனக்கு தான் ஏதோ அந்த ஆபீஸ் மூடுனா தான் கல்யாணம் அப்படின்னு சொல்லிட்டு அலைஞ்சு. ஆமாம் மாமா கிட்ட நீ எப்ப பேசுன. யோவ் மாமா உன் பொண்ணு உன் கிட்ட பேசணும்னு என்னை டீல்ல விட்டுட தான நீ” என்று தனது வருங்கால மனைவியிடமும் மாமனாரிடமும் கோபித்துக் கொண்டான்.
“ என்ன மாப்ள நீ என் பொண்ணே இப்பதான் எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு என்கிட்ட பேசி இருக்கா. அந்த சந்தோஷத்தை கொஞ்சமாவது அனுபவிக்க விடு மாப்பிள்ளை”
“ ஓ அப்படி சரி ஓகே. மறுபடியும் ஏதாவது பிரச்சனனா என்கிட்ட தானே வருவ. அப்ப பாத்துக்கறேன் ஒன்னு. நீ சொல்லு டார்லிங் நீ எப்படி மனசு மாறுன” என்றான் அவளின் மனமாற்றத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில்
“அது திரு மாமா தான் எனக்கு புரிய வச்சாங்க. பைனான்ஸ்ங்கறது தப்பு இல்ல. அதுல கெட்டது மட்டுமில்ல நிறைய நல்லது இருக்குன்னு எனக்கு புரிய வச்சாங்க அதனாலதான் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்”
“ டேய் அதான் அவ ஏதோ ஒன்னு ஓகே சொல்லிட்டாளா அப்புறம் என்ன போய் டூயட் பாடுவியா அத விட்டுட்டு தேவையில்லாம கொஸ்டின் கேட்டுகிட்டு இருக்க. என்ன ஜூனியர் நீ என்னோட ஜூனியர்னு ஒன்னு சொல்றதுக்கு வெக்கமா இருக்கு” என்றார் வேதாச்சலம்.
“ அப்படி சொல்லாதீங்க சீனியர் இப்ப பாருங்க என்னோட பெர்பார்மன்ஸ் என்னனு. வா டார்லிங் நம்ம தனியா போய் டூயட் பாடலாம்” என்று சாராவை இழுத்துக் கொண்டு வெளியே ஓட
“ டேய் மாப்பிள்ள என் பொண்ணு இப்பதான் என் கூட பேசி இருக்கா அவளை எங்கேயும் கூட்டிட்டு போயிடாதடா” என்று அவர்களின் பின்னே ஓடினார் முத்துவேல்.
அதனைப் பார்த்து அனைவரும் சிரிக்க, “எல்லாரும் கொஞ்சம் வெளிய போறீங்களா கேஸ் விசயமா அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அனைவரையும் வெளியே அனுப்பிய திரு, “ இப்ப எப்படி இருக்கு அத்தை” என்றான் இந்திராவை பார்த்து
“நான் நல்லா இருக்கேன் மாப்பிள” என்றார் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத குற்றணர்வுடன்
“ நிமிர்ந்து பாருங்க அத்தை எதுக்கு தலை குனியுறீங்க. பாத்தீங்க தான உங்களுக்கு ஒன்னுனா எத்தனை பேரு பதறி வாராங்கன்னு. இவங்க எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி போக உங்களுக்கு மனசு வந்துச்சு. அந்த ஆளு உங்கள பேசின எல்லாத்தையும் நானும் கேட்டேன்” என்று அவன் சொன்னவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பேசிய வார்த்தைகளை ஒரு மருமகன் கேட்கக் கூடியவையா என்று
“என்ன பாக்குறீங்க அத்தை அவன் உங்களை பேசின எல்லாத்தையும் நானும் பார்த்தேன். நீங்க மட்டும் அவனைத் திருப்பி ரெண்டு அடி அடிச்சிருந்தீங்கன்னா உங்ககிட்ட அவன் வாலாட்டி இருக்க மாட்டான். நீங்க அமைதியா இருக்க போய் தான் அவன் அவ்ளோ பேசியிருக்கான். ஃபர்ஸ்ட் பேசும்போதே அவன் செவில ஒன்னு விட்ருக்க வேண்டாமா நீங்க. அதுக்கு பிறகு என்ன வந்தாலும் பாத்துக்கலாம் நீங்க வந்து இருக்க வேண்டியதுதான அத்தை” என்றான் ஆத்திரமாக.
“ உங்களுக்கு என்ன ஆள் இல்லைனு நினைச்சீங்களா உங்களுக்காக எத்தனை பேரு இருக்கோம் பாருங்க. இனியாவது இப்படி எந்த தப்பும் பண்ணாதீங்க அத்தை. அப்புறம் உங்களோட லோன் அமௌன்ட் எல்லாத்தையும் அந்த லட்சுமி கிட்ட இருந்து வாங்கியாச்சு. பாவம் அவங்களும் இதுல தெரியாம வந்து மாட்டிக்கிட்டாங்க. அந்த பைனான்ஸ் ஆட்கள் தான் அவங்களையும், அவங்க குடும்பத்தையும் கடத்திட்டு போய் மறைச்சு வச்சிருக்காங்க. நாங்க தான் அவங்கள காப்பாத்தி கூட்டிட்டு வந்தோம். அவங்க எல்லோருடைய லோனையும் அடைச்சுட்டாங்க. இப்போ உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல ப்ரீயா ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி கதவினை திறக்க சென்றவனை பார்த்து, “சாரி மாப்பிள்ளை இனிமே இப்படி பண்ண மாட்டேன். அதோட எல்லாத்துக்கும் நன்றி மாப்பிள்ளை” என்று கை கூப்பி நன்றி சொன்னாள் இந்திரா.
“ என்ன அத்தை நீங்க. எங்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க. என்னைய நீங்க சுபாஷ் மாதிரி நினைங்க அப்பதான் என்ன உங்களுக்கு அன்னியமா பார்க்க தோணாது. என்னோட பாருக்குட்டிய என்கிட்ட கொடுத்த உங்களுக்காக இது கூட பண்ண மாட்டேனா. எதையும் மனசுல போட்டு குழப்பாம நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க அத்தை” என்று சொல்லி சென்றான்.
தனக்காக இத்தனை பேரு உள்ளனர் என்ற தெம்போடு நிறைந்த மனதுடன் கண்களை மூடி ஓய்வெடுத்தார் இந்திரா.
ஒரு கஷ்டத்தை தனியாக சமாளிப்பதற்கும், துணையோடு சமாளிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா. அதைப்போல ஒரு குடும்பத்தின் சுமையை தனியாக ஒருவர் சுமப்பதற்கும், அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சுமப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்தக் காலத்தில் பல பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியக்கூடாது என்று அவர்களிடமிருந்து மறைத்து கடன் வாங்கி அவர்களுக்கு செய்கின்றனர். அப்படி செய்வதால் அவர்களுக்கு தங்களின் குடும்ப பொருளாதார நிலை தெரிவதில்லை அதனால் பார்ப்பதெல்லாம் வேண்டுமென்று அடம் பிடிக்க தொடங்கிய விடுவர். இவர்களும் கடன் வாங்கி அதனை வாங்கி கொடுத்து அவர்களுக்கு பழக்கப்படுத்தி விடுகின்றனர். தங்களின் வரவுக்கு மீறி செலவு வரும்போது தான் அங்கே கடன் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியிடம் இருந்தோ அல்லது தனியார் பைனான்ஸ் ஏஜென்சியிடம் இருந்து வாங்கும்போது நன்றாக தான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு தவணையும் கட்டும் போது தான் அதன் கஷ்டம் தெரியும். கடன் என்பது ஒரு புதைக்குழி போல ஒவ்வொரு முறையும் அதனை வாங்கும் போது கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கே தெரியாமல் அதன் உள்ளே இழுத்து செல்லப்படுகிறீர்கள். இப்போதுள்ள காலத்தில் தவணை என்ற சொல்லால் சேமிப்பு என்ற சொல் காணாமல் போய்விட்டது. தவணை முறை எப்போதும் நமக்கு ஆபத்தில் போய் தான் முடியும். தற்போது உள்ள காலத்தில் எப்போது நமது காலம் முடியும் என்று தெரியாது அதனால் நாம் செல்லும்போது நம் தலைமுறைக்கு சொத்துக்களை சேர்த்து வைத்து செல்லா விட்டாலும் கடன் வாங்கி வைக்காமல் செல்வோம்.
தவணை எப்போதும் மெதுவாக உங்கள் குடும்பத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் அழிக்கும் ஆலகால விஷம்…
சிறு துளி பெரும் வெள்ளம் போல சிறுக சிறுக சேமித்து அதனை வைத்து வாழும் வாழ்க்கையே அழகானது…
அதனால் இருப்பதை வைத்து வாழ பழகிக் கொள்ளுங்கள்…
கடன் இல்லாத வாழ்க்கையே நிறைவான வாழ்வு…
நீங்களும் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ கடவுளே வேண்டி விடைபெறுகிறேன்…..
error: Content is protected !!