Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுள்ளே💞2

அத்தியாயம் _2

விடுதி அறையில் உறக்கம் இல்லாமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ஸ்வாதி .

பிரபா சார் ஏன் என்னை கூடுவாஞ்சேரிக்கு மாற்றினார் ? ஏதாவது தப்பு பண்ணிட்டோமோ…. ஒரே குழப்பம் அவளுக்கு.



Advertisement

அவர் கண்கள் ஏன் என்னை கண்டு தடுமாறியது …?

இந்த ஹோட்டலில் அக்கவுண்டண்ட் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது ….இந்த மூன்று ஆண்டுகளில் பிரபாவுடன் அவளுக்கு  நல்ல புரிதல் இருந்தது .

பிரபா எந்த தொழிலாளியிடமும் ….நான்

Advertisement

சம்பளம் கொடுக்கும்  முதலாளி …நீ என்னிடம் சம்பளம் வாங்கும் தொழிலாளி என்று பேதம் பார்த்து நடத்த மாட்டான் .

Advertisement

பிரபாவின் நிமிர்வும் , கனிவு கலந்த கண்டிப்பும் அவளுக்கு மிக பிடிக்கும் .

ரெசிடென்ஷியல் ஹோட்டலில் அக்கவுண்ட்ஸ் பார்க்கும் பணியில் இருந்தாலும் அனைத்து செக்ஷனுக்கும் சென்று  வேலை பார்ப்பாள் . குக்கிங் , பேக்கிங் , டெலிவரி , ஸ்டோர் கீப்பிங் , ரூம் சர்வீஸ் என்று எந்த செக்ஷனில் ஆள் இல்லை என்றாலும் அங்கு சென்று வேலை பார்ப்பாள் .

பிரபாவிற்கு ஸ்வாதி மீது பெரும் மதிப்பு உண்டு .அவள் ஆர்வமும் , ஈகோ இல்லாமல் எந்த வேலையையும்  பார்க்கும் அவள் குணமும், அனைவரிடமும் அன்பாய் பழகும் தன்மையும் அவனுக்கு பிடிக்கும் .

Advertisement

பிரபா சார் …என் மேல் ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்கார் .அதை காப்பாத்தனும் ….வெறும் B.com குவாலிபிகேஷனோட வந்த எனக்கு உடனே வேலை போட்டு கொடுத்தவர் .

நாளை கூடுவாஞ்சேரிக்கு போய் நியூ ஹோட்டலில் ஜாயின் பண்ணனும் … நம்மால் முடிந்த பெஸ்ட் கொடுக்கணும்! மனதிற்குள் உறுதி ஏற்றுக் கொண்டாள்.

இருந்தாலும் பிரபா சாரை தினம் பார்க்க முடியாதே …? ஏதோ ஒரு இனம் புரியாத வருத்தம் அவளை ஆட்கொண்டது .

“————-

மடியில் லேப்டாப்பை வைத்துக் கொண்டு தனது படுக்கை அறை சோஃபாவில் கண்மூடி சாய்ந்திருந்தான் பிரபானந்தன் .

நான் வாழ வேண்டிய வாழ்க்கை இது இல்லை ….என்  அழகிற்கும் , தகுதிக்கும் நான் எப்படி வாழனும் ? படைத்தவனை நொந்துக்கிறதா? என்னை பெற்ற தகப்பனை நொந்துக்கிறதா…? இப்போதும் பத்மஜாவின் அகங்காரமான  குரல் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது .

இதே அறை, இதே கட்டில்…. எதை மறக்க? எப்படி மறக்க?

காரணமின்றி ஏனோ ஸ்வாதி முகம் கண்முன் வந்து நின்று போனது .

சார் நம்ம ஹோட்டலில் இதை பண்ணனும் , சார் நம்ம ஹோட்டலில் ஒரு கஸ்டமர் இன்னைக்கு ….

என்று ஸ்வாதி இந்த ஹோட்டலை பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் அளவிற்கு பெருமையாய் சொல்வாள் .

“இது ஒரு ஹோட்டல் இதுக்கு ஒரு ஓனர் ….”

ஏளனமாக பத்மஜா சிரித்த  கர்ண கொடூரமான காட்சி  இப்போதும் கண்முன் நிழலாடுகிறது . ஊசியாய் குத்துகிறது.

தலையை இருபுறமும் உருட்டி கொண்டிருந்தான்.

தலைவலி பிளந்தது .

நாளை ஸ்வாதி கூடுவாஞ்சேரி போய்விடுவாள் என்ற எண்ணமே கசந்தது ….போக சொன்னதே தான் என்பதை மறந்து உழப்பிக் கொண்டிருந்தான் .

போகட்டும் …என் பார்வை படாத தூரத்திற்கு போகட்டும் ..நெற்றி பொட்டை ஆள் காட்டி விரலால் குத்திக் கொண்டான் .

பிரபா சரியாவே சாப்பிடலையே  …இந்த பாலையாவது குடிப்பா ….

கல்யாணி பால் டம்ளருடன் வந்தார் .

சோர்ந்திருந்த மகனின் திருமேனி கண்டதும் …

தாயுள்ளம் கதறியது .

பிரபா ….எத்தனை காலத்துக்கு பழசை நினைச்சுட்டு இருக்க போற ….?

உனக்கு வயசாகுதோ இல்லையோ …எனக்கு ஆகுதேப்பா …அறுபத்தாறு முடியப்போகுது . இன்னும் எத்தனை காலம் உன் கவலையை பார்த்துட்டே  காலம் தள்ளுவேன்…? பெருமூச்சுடன் கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டார் .

ம்மா ப்ளீஸ் என்றான்….

அவர் வேதனையுடன் உற்று பார்க்க….எப்போதும் போல் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் .

பிரபானந்தன் …சுந்தர மூர்த்தி, கல்யாணி தம்பதிகளின் மூத்த மகன் . அவனுக்கு ஸ்ரீமதி என்று ஒரு தங்கை உண்டு .

அண்ணன் வாழ்க்கை தான் பட்டுப் போய் விட்டது . தங்கை வாழ்க்கை சுகபோகமாகவே இருக்கிறது . மகளின் மகிழ்ச்சியான வாழ்வு தான்  கல்யாணிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் .

பிரபானந்தன் …பெயரில் மட்டுமே ஆனந்தத்தை கொண்டவன் . வாழ்வில் அது அவனுக்கு எப்போதும் கிட்டவில்லை . யாருக்கும் பாவம் செய்தவன் இல்லை. நல்லவனாய் இருப்பது தான் சாபமோ?

பசித்து சாப்பிடவும் , படுத்தவுடன் உறங்கவும் கொடுப்பினை வேண்டும் . அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . மிகுந்த போராட்டத்துடன் பிரபா  உறங்கி போனான் .

“———-“

காலை GST சாலையில் (Grand southern Trunk Road ) அதாவது சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  மேஜிக் டே ரெஸ்டாராண்டுக்கு வந்து சேர்ந்தாள் ஸ்வாதி .

அவள்ரெஸ்டாரண்ட் வாயிலில் காத்திருக்க ….

சற்று நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தான் பிரபா .

இருபது  மீட்டர் தூரத்தில் வரும் போதே …. ஸ்வாதி நிற்பதை கண்டவன் கண்கள் மோக்ஷம் பெற்றது,இதயம் வலியில் சுகமாய் துடித்தது . சிரிப்பும் பதைபதைப்பும் இணையாய் உண்டானது.

பிரபாவை கண்டவள் கண்கள் சிரித்தது …வாய் காலை வணக்கம் சொன்னது .

அவளை உள்ளே அழைத்து சென்றவன் அனைத்து ஊழியர்களையும் அழைத்து ஸ்வாதியை அறிமுகம் செய்து வைத்தான் .

இவங்க தான் இங்கே இன்சார்ஜ் . இவங்களுக்கு கட்டுபட்டு தான் நீங்க எல்லோரும் வேலை செய்யணும் . சின்ன பொண்ணுன்னு நினைக்க வேண்டாம் …ரொம்ப திறமையானவங்க ..எனக்கு கொடுக்கும் மரியாதை, அன்பை இவங்களுக்கும் கொடுக்கணும் என்றான் .

அனைத்து பகுதிக்கும் அழைத்து சென்று காண்பித்தான் . அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல்….அவள் சிறு கால்கள் தடுமாறியது.

அவளுடன் இணைந்து நடந்த இதம் …அவன் இதயத்தை மென் தென்றலாய் வருடியது ….அந்த சுகத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்கே வேக எட்டுக்களை எடுத்து வைத்து நடந்தான் .

அனைத்தையும்  சுற்றிக்காட்டி விட்டு ….அலுவலக அறைக்குள் வந்தமர்ந்தான் .

ஸ்வாதி …நீங்க பயப்படாம இன் சார்ஜ் எடுத்துக்கோங்க .

இங்கே நாற்பது பேர் வேலை பார்க்கிறாங்க …. புது பிரான்ச் ….இங்கே போட்டி அதிகம் ,பார்த்தீங்களா..?

நம்ம ரெஸ்டாரண்டை சுற்றி பனிரெண்டு ஹோட்டல் இருக்கு ….இதுக்கு மத்தியில் நாம் தாக்கு பிடித்து நிற்கணும் .

ஹோட்டல் பிசினஸில் தரம் , ஆரோக்கியம் , சுத்தம் முக்கியம் …!

வாடிக்கையாளர் முப்பது ரூபாய்க்கு காஃபி குடித்தாலும்

முப்பதாயிரத்துக்கு பார்ட்டி கொண்டாடினாலும் எல்லா கஸ்டமரும் ஒன்னு தான் .

ஓகே சார் …என்றாள் சிறு தலை அசைப்புடன் .

ஸ்வாதி இது ரெண்டல் பில்டிங் ….பேங்க் லோன் போட்டு தான் இதில் நாலு கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ணியிருக்கேன் .

தன்னை பெற்ற தாயிடம் , தன்னுடன் பிறந்த தங்கையிடம் கூட …தன் கடன் பிரச்சனைகளை கூறாதவன் ஸ்வாதியிடம் கூறினான் .

என்னால் முடிந்தவரை இந்த ரெஸ்டாரண்டை சிறப்பா நடத்துவேன் சார் ….சிறு பயத்தத்துடனே வாக்கு கொடுத்தாள் .

நாலு கோடிக்கு ஒரு வட்டி என்றாலே மாதம் நாலு லட்சம்  வட்டி கட்ட வேண்டும் ….!

நாற்பது ஊழியர்களுக்கான சம்பளம் , மின்சார வரி , தண்ணீர் வரி இன்னும் பிற செலவுகள் இருக்கிறதே …

ஸ்வாதியின் மனம் கவலை கொண்டது .

ஸ்வாதி இதை ரெசிடென்ஷியல் ஹோட்டலாக மாற்றும் ஐடியா எனக்கு இல்லை .

வேண்டாம் சார் …பக்கத்தில் மூன்று பெரிய லாட்ஜ் இருக்கு …வரும் போது பார்த்தேன் என்றாள் .

தட்ஸ் குட் …அவளை மெச்சுதலாக பார்த்தான் .

அது தான் ஸ்வாதி…. பார்க்க எளியவளாக அப்பாவி போல் தோன்றினாலும் சுற்றறியிருக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பாள்.

ஸ்வாதி …உங்களுக்கு புதுமையா ஏதாவது செய்யணும்னு தோணுச்சுன்னா தாராளமா செய்யுங்க ….பட் பெரிய அளவில் இன்வெஸ்ட்மென்ட் இல்லாம பார்த்துக்கோங்க . இதுக்கு மேல என்னால இன்வெஸ்ட் பண்ண முடியாது.

ஷுயூர் சார் ….என்று நம்பிக்கையுடன் தலை ஆட்டினாள் .

சரி ஸ்வாதி நான் கிளம்புறேன் …கணக்கு வழக்கெல்லாம் டெய்லி எனக்கு மெயில் பண்ணிடுங்க! சந்தேகம்னா தயங்காம கால் பண்ணுங்க!

ம்ம்ம் …சொல்ல மறந்துட்டேன் …ஆறு மணி ஆயிட்டா நீங்க கிளம்பிடலாம்  பில்லிங் செக்ஷன் சுதாகர் பார்த்துப்பார் .

சுதாகர் பொறுப்பா பார்த்துக்கோங்க என்று சுதாகர் பக்கம் திரும்பினான்.

கண்டிப்பா சார் என்றான் சுதாகர்.

கிளம்பும் அவனையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் .

பள்ளியில் முதல் நாள் குழந்தையை விட்டு விட்டு அழும் குழந்தையை எண்ணி உள்ளுக்குள் தவிக்கும் தாயை போல் ….அவன் மனம் தவித்தது .

வா ஸ்வாதி ….வடபழனி ஹோட்டலுக்கே போயிடலாம் என்று அழைத்து செல்ல….மனம் துடியாய் துடித்தது .

மனதின் பின்னே போனால் ஏற்படும் அபாயம் உணர்ந்து திரும்பி பார்க்காமல் விரைவாக வெளியேறினான் .

காரில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட் போட்டவன் …செயலிழந்து அப்படியே அமர்ந்து விட்டான் .

வேண்டாம் இந்த பெண் நன்றாக வாழட்டும்! மனதை சமாதானம் செய்தான்.

எவ்வளவு புத்திசாலி பெண்! மனம் வாதிட்டது.

அதுக்காக உனக்கு எப்படி கேவலமான நினைப்பு வரலாம்? உன்னிடம் வேலை பார்த்தால் உனக்கு வீட்டுக்காரி ஆகிவிடவேண்டுமா? மனசாட்சி மீண்டும் கேள்வி கேட்டது.

ஒரு சிறு எறும்பு பெரிய யானையின் காதில் புகுந்து யானையையே வீழ்த்திவிடும் என்று எங்கோ படித்த ஞாபகம் வந்தது .

ஆம் …ஒரு சிறுபெண்..

தன்னை விட ஒன்பது வயது சிறியவள் தன்னுள் நுழைந்து இப்படி வதைக்கிறாளே ..? ஏற்கனவே காயப்பட்ட அவன் உள்ளம் இன்னும் காயப்பட்டு ரணத்தின் வலியை அதிகப் படுத்தியது .

உள்மளம் வெதும்பி கண்கள் அதுவாய் கலங்கி ஸ்டியரிங்கில் தலை சாய்த்தவன் ஓரிரு நிமிடத்திலே சுதாரித்துக் கொண்டான்.

                                                 ——-தொடரும் ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!