Skip to content
Post Views: 2,932
“கொஞ்சம் நில்லும்மா” என்ற சஷியின் குரலைக் கேட்டு அவரைத் திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு, மானு தன் பாகை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க,
“உன்னை நில்லுன்னு சொன்னேன்!” என்றார் சஷி குரலில் அழுத்தம் கூட்டி.
அது வரை, கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு சோபாவில் தலையை இரு கைகளால் தாங்கிப் பிடித்து குனிந்து அமர்ந்து கொண்டு மவுனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ரித்து எழுந்து வந்தான்.
“மம்மி.. சாரி.. மம்மி. ஒரு அதிர்ச்சியில அப்படி கேட்டுட்டேன் ம்மி. சாரிம்மி.
Advertisement
ப்ளீஸ் உன் ரித்துவை மன்னிச்சுடு..”
ரித்து சஷியின் காலடியில் மடங்கி அமர்ந்து, அவள் கால்களைக் கட்டிக் கொண்டு மடியில் முகம் புதைத்தான்.
அவனிடம் ஒன்றுமே பேசாமல், அவன் தலையை மட்டும் கோதி விட்டார் சஷி.
Advertisement
மானு அவர்களை திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் நகர,
Advertisement
“உன்னை நில்லுன்னு சொன்னேன்” என்றார் சஷி இன்னமும் குரலில் வேகத்தைக் கூட்டி.
அம்மாவின் மடியில் இருந்து தலையை எடுத்து மானுவைப் பார்த்தான் ரித்து. உடனே எழுந்து அவளிடம் வந்தான்.
வந்தவன் சஷியின் முன்பே மானுவை ஒருமுறைக் கட்டிக் கொண்டு, விடுவித்தவன்,
Advertisement
“நீ போ குட்டிமா. மம்மிக்கு உன்னைப் பிடிக்கும்.
அவங்க உன்னை எப்ப ஏத்துக்கிறாங்களோ, அப்ப நான் சொல்றேன்.
அப்ப வா. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். என் லைப்ல இன்னொரு பொண்ணு இந்த ஜென்மத்துல கிடையாது!
அத மட்டும் மனசுல வச்சுகிட்டு போ!”
அவள் மவுனமாய் இன்னொரு அடியெடுத்து வைக்க,
“உன்னை நில்லுன்னு சொன்னேன்ல?” என்று சஷியின் குரல் தடுத்தது.
அவள் திரும்பிப் பார்த்தாள்.
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” கேட்டார் சஷி.
மவுனமாக ஒருமுறை ரித்துவைப் பார்த்து விட்டு ஆமாம் என்பதாய் தலையசைத்தாள் மானு.
“குழந்தை?”
“இல்லை!”
“அப்ப நீ இங்க கூட்டிட்டு வருவியே, அது யார்?” பானு இடையிட்டார்.
“அது என் பிரண்டோட குழந்தை. என் பிரண்ட் வெளியூரில் வேலைப் பார்க்கிறா. அதனால அந்த குழந்தை என் கிட்ட, என் அரவணைப்பில் தான் இருக்கு”
“அப்ப உன்னையும் அந்த குழந்தையையும் டிராப் பண்ணிட்டு போன அந்த பையன் யாரு?” மேலும் கேட்டார் பானு.
“அவர் மனீஷ் அண்ணா, என் பிரண்டோட ஹஸ்பன்ட்”
“அவர் உன்னோட அண்ணனா?” கொஞ்சம் அதிர்ந்தவர் மீண்டும் கேட்டார்.
“அப்ப உன்னோட புருஷன் யாரு?”
“அது.. வந்து..” மானு தயங்க,
“கல்யாணம் ஆன பிறகா, நீ ரித்து கூட நெருங்கி பழகுற?” பானு அதிர்ச்சியாய் கேட்க,
“இல்ல. பானு. இப்ப கூட ஏனோ என்னால இவள தப்பா நினைக்கவே முடியல! இதுல ஏதோ இருக்கு.. சொல்லும்மா. யாரு உன் புருஷன்?”
மானு மீண்டும் மவுனியாகி விட,
“சொல்லு” என்றார் சஷி ரொம்பவும் அழுத்தமான குரலில்.
“நீங்க தூங்குங்க. என்னைப் பத்தி தெரிஞ்சு என்ன ஆகப் போவுது. உங்களுக்கு இப்ப ரெஸ்ட் தேவை. ஊசிப் போட்ட பிறகும் நீங்க இப்படி தூங்காம இருக்கீங்க!” என்று சொன்னாள் மானு.
“பேச்சை டீவியேட் பண்றா பாரு பானு. இப்ப சொல்லப் போறியா இல்லையா?’ என்று கட்டிலை விட்டு எழுந்து வந்து அவளின் தோள்களைப் பிடித்து உலுக்கி கேட்டார் சஷி.
மானு இப்போது மட்டும் வாயைத் திறப்பாளா என்ன?
ரித்து தான் இப்போதும் ஓடி வந்தான் அவர்கள் அருகில்.
“சொல்லு குட்டிமா. இத மட்டும் ஏன் நாம மறைக்கணும்! நான் சொல்றேன்ம்மி. நான் தான் அவ புருஷன்! எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.
அதுவும் அஞ்சு வருஷம் முன்னாடியே!”.
கேட்ட சஷிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது!
ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி தான் தாங்குவார்! தள்ளாடி விழப் போனவரைத் தாங்கிப் பிடித்தான் ரித்து.
“டேய்.. என்னடா சொல்ற?” பானு கிட்ட தட்ட அலறினார்!
“ஆமா! அப்படியான ஒரு சூழ்நிலை!
எல்லாம் உன் உடன்பிறப்புகளால ஏற்பட்டது தான்!
அவங்க தான் குட்டிமா அப்பா சாவுக்கே காரணமா இருந்தாங்க.
நான் குட்டிமாவை லவ் பண்ணினதுக்கு, தண்டனையா தான், அவ அப்பா சாவும், குட்டிமாவும் அவ அம்மாவும் அனாதையாக நின்றதும்!
நீ, என்னை விட்டு விலகிப் போக சொன்னது, என்னோட லவ்வரை இல்லை! என் பொண்டாட்டியை!
அப்ப கூட அவ உன் கிட்ட எதையும் சொல்லாம தான் நீ கேட்டுகிட்ட படி விலகி போய் இருக்கா!
என்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு இருக்கலாம்ல ம்மி.
குட்டிமா ரொம்ப நல்லவ ம்மி.
நீ அவள் கிட்ட பேசிப் பார்த்திருந்தா, அவளை உனக்கு கண்டிப்பா பிடிச்சிருக்கும்! என் மேல எவ்வளவு நம்பிக்கை தெரியுமா அவளுக்கு!
என்னை, உன் அளவுக்கு நேசிக்கிற பொண்ணும்மி அவ!
நான் கிணத்துல குதின்னா, கண்ணை மூடிக் கிட்டு குதிக்கிற அளவு கண்மூடித்தனமான லவ் அவளுக்கு என்மேல!
எதுவுமே கேக்காம இருந்திட்டியே ம்மி!”
ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு குரல் கர கரக்க பேசிக் கொண்டிருந்தான் ரித்து.
ஒன்றுமே சொல்லாமல் வெறுமனே எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சஷி!
“உனக்கு ஒண்ணு தெரியுமா மம்மி, நீ என்னைப் பெத்த அம்மா இல்லைன்ற விஷயம் குட்டிமாவுக்கும் அஞ்சு வருஷம் முன்னாடியே தெரியும்!”
எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சஷியின் கண்கள் மேலும் திடுக்கிட்டன!
“என்னடா சொல்ற?” என்பது போல கேள்வியாய் ரித்துவைப் பார்த்தார் சஷி.
“ஆமா ம்மி. அஞ்சு வருஷம் முன்னாடி அப்பாக்கு திதி கொடுக்க நீ என்னை ராமேஸ்வரம் அனுப்பின இல்ல.
அப்ப தான் எனக்கு நீ அம்மா இல்ல.
சித்தி தான்னு எனக்கு தெரிய வந்துச்சு.
நான் அனாதை ஆகிட கூடாதுன்னு தான் நீ உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணிட்டன்னு!
நீ மட்டுமா? வசந்த் சித்தப்பாவும் தான்! உன்னைத் தவிர வேற பொண்ணை கல்யாணம் செய்ய மாட்டேன்னு அவரும் இன்னும் பேச்சிலரா தான் இருக்கார்.
என் அம்மா இருந்திருந்தா கூட என்னை இப்படி வளர்த்து இருப்பாங்களான்னு தெரியல!
அப்படி என்னை நீ வளர்த்து இருக்கம்மி!
நீயும் லவ் பண்ணிவ தானே! என் லவ்வை அக்செப்ட் பண்ணிப்பன்னு நினைச்சேன் ம்மி.
குட்டிமாவை நல்ல ஒரு சந்தர்ப்பம் பாத்து உன்கிட்ட கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன். அதுக்குள்ள அவ எங்கோ காணாம போய்ட்டா!
என்னால உன்கிட்ட சொல்ல முடியல.
அதே சமயம் நீ எங்க உன் அண்ணன் பொண்ணுங்கள்ல ஒருத்திய கட்டி வச்சிடுவியோன்னு ஒரு பயம்!
அதான் உன் கிட்ட சொல்லாம பைக் ட்ராவலரா ஊர் ஊரா சுத்தி அவளைத் தேடிட்டு இருந்தேன்.
கல்யாண ஏற்பாட்டையும் தள்ளிப் போட்டேன்.”
அழுதுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் ரித்து.
அதுவரை அமைதியா கேட்டுக் கொண்டிருந்த சஷி,
“ஸோ.. இப்ப நீங்க ரெண்டு பேரும் தியாகி ஆகிட்டு, என்னைப் பாவியாக்க ட்ரை பண்றீங்க! இல்ல?” என்று கேட்க,
“அய்யோ.. அப்படி இல்லம்மி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.” என்றான் ரித்து.
“நீ எதுவும் சொல்ல வேணாம். எனக்கு அவளைப் பத்தி, அவ உன்னை விட்டு பிரிஞ்சு போன கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுட்டுது.
நான், அவளை உன்னை விட்டு போறதுக்கு பணம் கொடுக்கிறேன்னு சொன்னேன். அவ அத மறுத்துட்டா.
என்னமோ ஸ்டன்ட் பண்றா.
திரும்ப உன்கிட்ட வந்து பேசி பழைய படி சுத்த ஆரம்பிச்சுடுவான்னு தான் முதல்ல நான் நினைச்சேன்.
ஏன்னா, உன் மாமா அப்படி தான் சொல்லியிருந்தாரு என்கிட்ட! பணக்கார பையன்ன்னு உன் கூட சுத்திட்டு இருக்கா அப்படி.. இப்படின்னு.
உன் மாமாக்களைப் பத்தி தெரிஞ்சுருந்தும், நான் அவங்க பேச்சைக் கேட்டுருக்கக் கூடாது!
உன் எதிர்காலம் பற்றிய பயம், ஒரு அம்மாவா மட்டும் நான் யோசிச்சுட்டேன்!
ஆனா நானே ஆச்சர்யப் பட்டது எப்போன்னா அவ என்கிட்ட கொடுத்த வாக்குக்காக, ஊரையே காலிப் பண்ணிட்டு போய்ட்டா, உன்னோட போன்ல கூட பேசல, நான் மிரட்டினது பத்தியும் ஒரு வார்த்தை கூட உன்கிட்ட சொல்லலன்னு தெரிஞ்சுகிட்டப்போ, நான் அவசரப்பட்டுட்டேன்னு தோணுச்சு.
நீயும் அவளை மறக்காம சுத்திட்டு இருந்த!
அப்ப பார்த்து லாக்டவுன் வந்தது. வீட்டிலேயே முடங்கி விட்டிருந்த என்னிடம் மாற்றி மாற்றி தொந்தரவு செய்தார்கள் உன் மாமாக்களும் அத்தைகளும்!
என்னால் அவர்களை மீறி ஒன்றும் சொல்ல முடியவில்லை. சாமியார் உத்தரவு அது இதுன்னு என்னால் முடிஞ்ச அளவு தள்ளிப் போட்டேன்!
வீட்டில் இருந்த போது தான் உன் அத்தைகளின் கால்குலேசன்களும் திடீர் பாசமும் எனக்குப் புரிந்தது.
மானு தான் எனக்கு மருமகளா வரணும்னு தீர்மானிச்சுட்டேன்! அவளை மேலும் தேடினேன். கூடவே இன்னொரு சந்தேகமும்!
ஒருவேளை மானுவுக்கு வேறு யாரோடும் கல்யாணம் ஆகியிருந்தால்! அவ வாழ்க்கையையில் குறுக்கிட்டு விடக் கூடாதுன்னும் ரொம்ப ஜாக்கிரதையா தான் தேடினேன்! ஆனா அவ கிடைக்கவே இல்லை!
உன்னை கவனிச்சுப் பார்த்தேன்!
நீ மாறவே இல்லை!
உன் மாமா பொண்ணுங்க யார் கூடவாவது உனக்கு கல்யாணம் செய்ய கூடாதுன்னு, அவங்களே உன்னை வெறுக்க, வேணுமின்னே பைக்கில் போய் சாகசம் பண்ணி, விழுந்து எழுந்து உன்னைக் காயப்படுத்திக்கிட்டப்போ, என்னால ஒண்ணுமே சொல்ல முடியல!
சரி காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன்!
ஆனா நீ மாறவே இல்லை!
வருசங்கள் தான் போச்சு நீ மாறவே இல்லை!
அப்ப தான் பானு கிட்டயிருந்து போன். இது மாதிரி ரித்து ஒரு கல்யாணம் ஆன பொண்ணோட நெருக்கமா இருக்கன்னு. நான் நம்பல. அதே மாதிரி மானு தான் அதுன்னு என்னால கெஸ் பண்ணவும் முடியல!
உன்னோட குட்டிமா, அவ கொடுத்த வாக்குக்காக, தன்னை மறைச்சுட்டு தான் இருந்திருக்கா! இப்போ பானு வீட்டில் இருக்கும் போது கூட, பெயரை சொல்லாமல் குட்டிமான்னு சொன்னதால, எனக்கு அவ தான்னு தோணவே இல்லை!
கடைசி வரைக்கும் உன் குட்டிமா, கொடுத்த வாக்கை காப்பாத்தி இருக்கா!
சான்சே இல்லை! இந்த காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா?”
மானுவை அணைத்துக் கொண்டார் சஷி.
“நானே தேடித் தேடித் பிடித்து கொண்டு வந்தாலும் கூட இப்படி ஒரு பொண்ணை உனக்குப் பொண்டாட்டியா கொண்டு வந்திருக்க முடியாதுடா மகனே! நீ உன் லைப்ல எதை உருப்படியா செஞ்சிருக்கியோ இல்லையோ? எனக்கு ஒரு நல்ல மருமகளைக் கொண்டு வந்திருக்கிற!
டீ.. பானு. யாராவது ஜோசியர் இருந்தா, ஒரு நல்ல நாள் பார்க்க சொல்லு. முறைப்படி என் பையன் கையால தாலிக் கட்டி என் மருமகளை நான் என் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகணும்!” என்றார் சஷி மன நிறைவுடன்!
“அய்யோ மம்மி..” என்று தாவி சஷியை அணைத்துக் கொண்டான் ரித்து.
பின், மானுவையும் அணைக்க முயல, “டேய். அதெல்லாம் உங்க ரூமில் வச்சுக்கங்க” என்றார் பத்திரம் காட்டி சொன்னார் சஷி.
“அப்பாடா.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. என் வீட்டில் வச்சு சஷியோட பையனோட பிரச்சினை சால்வ் ஆனதுல, பிரிஞ்சவங்க ஒண்ணு சேர்ந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!” என்று மனப்பூர்வமாக சொன்னார் பானு.
“என்ன குட்டிமா. ஆமா.. உன் நிஜப் பெயர் என்ன? குட்டிமா குட்டிமான்னு சொல்லி, நான் அது தான் உன் பெயரோன்னு நினைச்சிட்டேன்” சிரித்தபடி கேட்ட பானுவிடம்,
“மானு.. மானசா தான் என்னோட பேர்”.
“மானு, இப்ப நீ என்ன பண்ற, இந்த பானு சொன்ன படி கேக்குற! முதல்ல உன் அம்மாவை இங்க கூட்டிட்டு வா. உங்க சம்பிராதய முறைப்படியான கல்யாணம் செய்யணும்”.
“அதெல்லாம் நான் உங்க கூட ஒத்துக்கணும்னா, எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு!” என்றாள் மானு இது வரையிலுமே எதற்கும் வாயே திறக்காதவள்!
“கண்டிசனா என்ன அது?” என்று கோரஸாக கேட்டார்கள் சஷியும், பானுவும் கூடவே ரித்துவும் கூட!
ஆமா.. என்ன கண்டிசன்?
error: Content is protected !!