டேய் …பித்தா வெறுப்பேத்தாம இரு! அவன் பிரபானந்தனை கோபத்தில் அப்படி தான் அழைப்பான் .
ஏன்டா ? புரியாமல் புருவத்தை மேலே தூக்கி இறக்கினான் .
நான் சொன்னது கல்யாணி அம்மாவை ….!
ஏன் ? என் அம்மாக்கு என்ன ?
ஒன்னும் இல்லை ..
உன்னை நினைத்து சந்தோஷமா குளுகுளுன்னு இருக்காங்க!
பதில் ஏதும் சொல்லாமல் பேனாவின் மூடியை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தான் .
இதற்கு மேல் பேச விரும்பாமல் அமைதி காத்த பிரபாவிடம் இருந்து விடை பெற்றான் பாலா.
பிரபாவை பேச வைப்பது கடினம் என்று அவனுக்கு தெரியாதா? இயல்பிலே பிரபா அதிகம் பேசுபவன் அல்ல. இப்போது சுத்தம்… அளவாய் ஒன்றிரண்டு வார்த்தை தான்.
வருத்தத்துடன் வெளியேறும் நண்பனை ….விரக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபா
அன்றைய பொழுதை சிரமப்பட்டு நெட்டி தள்ளி சோர்ந்திருந்தான் பிரபா .
“—————-“
சோர்வுடன் வீடு வந்து சேர்ந்திருந்த மகனை கண்டவர்
பிரபா டிபன் எடுத்து வைக்கவா …? என்றார்.
இல்லைமா …நான் ஹோட்டலில் சாப்பிட்டேன் .
மேற்கொண்டு தாய் முகம் பார்க்க திராணியற்று மாடி ஏறிவிட்டான் .
பிரபா ஹோட்டல் தொழில் செய்தாலும் ஹோட்டலில் சாப்பிட விரும்ப மாட்டான் .
அம்மா கையால் தான் சாப்பிடுவான் . அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டேன் என்று சொன்னால் அது உண்மை இல்லை என்று அர்த்தம் .
மகனுக்கு ஏதோ மனசு சரியில்லை என்று உணர்ந்து கொண்ட கல்யாணி… பால் மட்டும் ஒரு டம்ளர் கொண்டு வந்து வைத்து விட்டு போனார்.
“———–“
இன்றைய நாள் இருபத்து நான்கு மணி நேரமாக இல்லாமல் …இருபத்து நான்கு வாரம் போல் இருந்தது ஸ்வாதிக்கு .
பிரபாவின் பார்வை படாமல் ஏதோ மதிப்பு மிக்க கை பொருளை இழந்தது போன்ற வெறுமையாக இருந்தது .
தனக்கு ஏன் இப்படி தோன்ற வேண்டும் ? தன் எண்ணத்தை அறவே வெறுத்தாள். ச்சே என்ன ஸ்வாதி நீ… மனதை கடிவாளமிட்டு அடக்கினாள்.
இத்தனைக்கும் பிரபாவும் , ஸ்வாதியும் அவசியமின்றி பேசி கொண்டது இல்லை .
தன் எண்ணபோக்கில் இருந்து வெளி வந்தவளை பிரபாவின் வார்த்தைகள் உலுக்கி எழ வைத்தது .
என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை . ஏதாவது செய்ய வேண்டும் …போட்டி நிறைந்த அந்த ஏரியாவில் ..”மேஜிக் டே” ரெஸ்டாராண்டைவெற்றிகரமாக நடத்தி காட்ட வேண்டும் .
என்னால் முடிந்த மகிழ்ச்சியை பிரபாவிற்கு கொடுக்க வேண்டும் .
எந்நேரமும் கடுமை தவழும் பிரபா முகத்தில் இளக்கம் காண வேண்டும் .
டைரி எடுத்து… தோன்றுவதை எல்லாம் குறிப்பு எடுத்து கொண்டாள் .
“————“
பில்லிங் செக்க்ஷனில் இருக்கும் வித்யா வந்து பிரபானந்தனின் தந்தை படத்திற்கு மாலை போட்டு …ஊது பக்தி ஏற்றி வைத்து விட்டு போனாள் .
அமைதியாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டான் பிரபா.
சிரித்த முகமாய் காலை நேர சுறு சுறுப்புடன் தினமும் இதை ஸ்வாதி தான் செய்வாள் .
அவள் இன்முகம் கண்டாலே ஒரு வித உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
காலையிலேயே பிரபாவின் சிந்தை தறிகெட்டு அலைந்தது .
ஸ்வாதி…. ஸ்… வா… தி…. மெல்ல அவன் உதடுகள் உச்சரித்தது.
“—————“
காலையில் ரெஸ்டாரண்டில் நுழைந்து ….ஸ்வாமி கும்பிட்டு பில்லிங் செக்ஷனுக்கு போனவள் …
பிள்ளையார் சுழி போட்டு கணக்கை தொடங்கினாள் .
குக்கிங் டிபார்ட் மெண்டிற்கு சென்று டிபன் வெரைட்டி தயாராகி கொண்டிருப்பதை பார்வையிட்டாள் .
என்னென்ன மெனு என்று கேட்டுக் கொண்டு அனைத்தும் சுவை பார்த்தாள் .
என்னென்ன மெனு டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று கருத்து கூறிவிட்டு …
ஸ்டோர் ரூம் சென்று ஸ்டாக் இருப்பு பார்த்தவள் …..
ஸ்டோர் ரூம் இன்ச்சார்ஜ் பெண்ணை அழைத்து சில சந்தேகம் கேட்டு தெரிந்து கொண்டாள் .
ஸ்வீட் ஸ்டாலில் இன்றைய ஸ்பெஷல் என்ன என்று கேட்டுக் கொண்டாள் .
அந்தந்த ஹோட்டலுக்கு தனி தனியாக பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக மொத்தமாக கொள்முதல் செய்து மூன்று பிரான்சிற்க்கும் பிரித்து அனுப்பலாம் ….
மளிகை பொருட்கள் குறைவாகவும் , தரமாகவும் சேலம் ஏரியாவில் கிடைப்பதாகவும் ….நமக்கு வேண்டப்பட்ட நண்பர்களின் ஹோட்டலுக்கும் நாமே சப்ளை செய்யலாம்…. இதன் மூலம் நிறைய கொள்முதல் செலவு மிச்சமாகும் என்று கருத்துகளை எழுதி பிரபாவிற்கு மெயில் பண்ணியிருந்தாள் .
எதேச்சையாக ஆன்லைனில் இருந்த பிரபா ஸ்வாதியின் மெயில் பார்த்தான் .
அவள் யோசனை கண்டு வியந்தான் ….அவள் மெசேஜை அப்படியே பாலாஜிக்கு பார்வேர்டு பண்ணினான் .
மறுநாள் பிரபாவும் , பாலாஜியும் சென்னையில் இருந்து சேலம் கிளம்பினர் .
அங்கு போய் ஏகப்பட்ட விஷயங்களை அறிந்து கொண்டனர் .
செவ்வாய் பேட்டை தொடங்கி கொல்லிமலை வரை சுற்றி வந்தனர் .
உண்மையில் சேலம் சுற்றுவட்டார பகுதியில் மளிகை சாமான் கொள்முதல் செய்தால் நிறைய மிச்சமாகும் என்று புரிந்து கொண்டனர்.
நிறைய பேரிடம் டீல் பேசிவிட்டு வந்தனர் .
நேராக கூடுவாஞ்சேரி ஹோட்டலுக்கு வந்தவன் ஸ்வாதியைசந்தித்து ….நன்றி கூறினான் .
சென்னையில் கொள்முதல் செய்யும் விலையை விட சேலத்தில் மிக மிக விலை குறைவு .
இங்கு ஒரு கிலோ துவரம்பருப்பு நூற்று அறுபது ரூபாய் …அங்கு பருப்பு உடைக்கும் மில்லில் பர்ஸ்ட் குவாலிட்டி பருப்பு நூற்று பத்து ரூபாய் தான் . கோதுமை , மைதா ,ரவை எல்லாமே இங்கே டபுள் ரேட் கொடுத்து வாங்கிட்டு இருக்கோம் என்பதே இப்போ தான் புரியுது .
ஆயில் மில்லில் ரீபைண்ட் ஆயில் மொத்த விலையா கிலோ எழுபது ரூபாய்கே கிடைக்குது . இங்கே நூறு ரூபாய்க்கு வாங்கறோம் .
கொல்லிமலை ஏரியாவில் எல்லா மசாலா சாமான் விளையும் ரொம்ப நியாயமா இருக்கு .
மிளகு , சீரகம் , சோம்பு, ஏலக்காய் , கிராம்பு எல்லாமே இங்கே கம்பேர் பண்ணும் போது அங்கே பாதி விலை தான் .
இங்கே எனக்கு தெரிந்த பதினெட்டு ஹோட்டல் ஓனர்ஸ்க்கு மளிகை சப்ளை பண்ண பேசி இருக்கேன் .
இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும் பட்சத்தில் நமக்கு நிறைய பிராஃபிட் இருக்கும் . அட்லீஸ்ட் மன்த்லி த்ரீ லேக்ஸ் பிராஃபிட் வரும் என்றான்.
கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் சார் …அவள் தைரியம் கொடுத்தாள் .
அவன் முகத்தில் சிரிப்பை கண்டு அவள் உள்ளம் பூரித்தது .
தேங்க் யூ சோ மச் ஸ்வாதி …அவள் கரம் பற்றி குலுக்கினான் ….குலுக்கிய கரத்தை நெடு நேரம் விடாமல் பற்றி இருந்தான் .
அவன் தீண்டலில் அவள் மின்சாரம் பாய்ந்தது போல் கையை உருவி கொண்டாள் .
பிரபாவின் முகம் இறுகியது …எதுவும் சொல்லி கொள்ளாமல் கிளம்பி விட்டான் .
ஏன் அவளை தொட்டேன் …? படுக்கையில் உருண்டான். அவள் ஏன் அப்படி அருவெறுத்து கரத்தை விலக்கிக் கொண்டாள்.
அவள் விரல் தீண்டிய சிலிர்ப்பு உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி இருந்தது .
அவள் கரத்தை விடாமல் பற்றி கொள்ள சொன்ன இதயத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான் .
ஸ்வாதிக்கோ இரவு முழுவதும் உறக்கம் இல்லை . பிரபா சாரின் மகிழ்ச்சியான மனநிலையை கெடுத்து விட்டேனே …?
எந்த ஆணின் ஸ்பரிசமும் வேண்டாம் என்று தானே இத்தனை கடுமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .
பிரபா தவறான எண்ணத்துடன் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை . அவளிடம் என்று இல்லை எந்த பெண்ணிடமும் அதிகப்படி நாலு வார்த்தை பேசிட மாட்டான்.
என் மனதில் இருக்கும் கடந்த கால பயம் தான் என்னை இப்படி தவறாக நினைத்து கொள்ள செய்கிறது . துவண்டு போனாள். ஒருவன் தவறானவன் என்றால் உலகில் இருப்பவர்கள் எல்லாரும் தவறானவர்கள் என்றாகிவிடாது என்று தனக்கே சொல்லிக் கொண்டாள்