Skip to content
Post Views: 2,529
அத்தியாயம் _4
இயல்பாக இருக்க இருவரும் மிகவும் மெனக்கெட்டனர் .
வாரம் ஒரு முறை கூடுவாஞ்சேரி பிராஞ்சிற்கு வந்து போவான் பிரபா.
Advertisement
அனாவசிய பேச்சுக்கள் ஸ்வாதியோடு கிடையாது .
அவன் கடினமான பாறை போல் இறுகி காட்டி கொண்டாலும் அங்கிருக்கும் நேரம் வரை ஸ்வாதியிடம் ஹோட்டல் சம்மந்தமாய் பேசி கொண்டே ….யதார்த்தமாய் பார்ப்பதை போல் அவளை அள்ளி அள்ளி பார்வையில் நிறைத்து கொள்வான் …. ஒரு வாரம் தாங்கும் அளவிற்கு
இருவரும் சற்று மெலிந்திருந்தனர் . ஸ்வாதி அலைச்சலிலும் , பிரபா உறக்கமின்மையாலும் மெலிந்து போயினர் .
Advertisement
பிரபா முகம் சற்று கருத்து கண்ணிற்கு அடியில் கருவளையம் வந்திருந்தது .
Advertisement
மகனின் நிலைமை எண்ணி பாலாஜியிடம் கவலை பட்டு கண்ணீர் விட்டார் கல்யாணி .
பாலாஜிக்கு ஒரு சிறு சந்தேகம் இருந்தது ….அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளதான் அவனால் முடியவில்லை .
கண்டுபிடித்து தீர வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.
Advertisement
“———–“
ஹோட்டலில் சிறு சிறு புதுமை படைத்து கொண்டிருந்தாள் ஸ்வாதி .
ஹோட்டலில் …உடலுக்கு நன்மை பயக்கும் உணவு வகைகளை அறிமுகம் செய்ய தொடங்கினாள் .
ஸ்வீட் ஸ்டாலில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து செய்யும் இனிப்பு பதார்த்தங்களை முயன்று பார்த்தாள் .
கருப்பட்டி அல்வா தொடங்கி , மைசூர்பாகு , ஜிலேபி , பால்கோவா வரை .
“மேஜிக் டே”என்ற பெயரில் சமூக வலைதள கணக்கு தொடங்கி இருந்தாள்.தான் முயன்று பார்க்கும் உணவு வகைகளை அழகழகாய் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தாள் .
முகநூலில் அவள் பக்கத்தை நிறைய பேர் பின் தொடர்ந்தனர்.
பிரபா ….அவள் மார்க்கெட்டிங் யுத்தியை கண்டு வியந்து போனான் .
தினம் தினம் அவள் மேற்கொள்ளும் முயற்சியை பிரபாவிற்கு மெயில் செய்து கொண்டே இருப்பாள் .
ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வரும் கஸ்டமர்களுக்கு சாம்பிள் இனிப்பு கொடுக்கபட்டது .
அன்று பார்வயிட வந்த …பிரபா , தனியே அமைக்கப்பட்ட சிறிய ஸ்வீட் ஸ்டாலை கண்டு வியந்தான் .
மக்கள் மொய்த்து கொண்டு நின்றனர் . வசதி படைத்த மனிதர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல ….அவர்களுக்கு உடல் நலம் பேண தான் நேரம் இல்லை ….அப்படிபட்ட மனிதர்கள் அடித்து பிடித்து வாங்கினார்கள் .
சிறிய அளவில் தொடங்கி இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் இனிப்பு கடையில் பெரிய அளவில் வியாபாரம் ஆகியது .
எந்தெந்த இனிப்பில் என்னென்ன பொருள் கலக்கப்படுகிறது… என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்று பெரிய போர்டில் எழுதி வைத்திருந்தாள் .
ஸ்வீட் மாஸ்டர்களுக்கு குறிப்பு கொடுத்து கொண்டே இருந்தாள் .
சிறிய அளவில் மாஸ்டர்களுடன் சேர்ந்து தானே செய்து பார்த்து திருப்திபட்டால் தான் விற்பனைக்கு கொண்டு வருவாள் .
விலை கூடுதல் என்றாலும் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதாலேயே வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க தொடங்கியது .
பாலாஜிக்கு பெருமையாக இருந்தது . பிரபா நீங்க பரம்பரையா ஹோட்டல் நடத்துறவங்க ….நான் ஆறு வருஷமா உன்னோட இந்த பிசினஸில் இருக்கேன் . நம்மை எல்லாம் தூக்கி சாப்பிடறா ஸ்வாதி. மனமார பாராட்டினான் பாலாஜி.
ஆளைப் பொறுத்து மதிப்பீடு செய்வதில்லை அவன் வழக்கம், திறமையை கொண்டே…
ம்ம்ம் …என்பதாய் தலை அசைத்து முழு மனதாய் ஆமோதித்தான் பிரபா .
ஹோட்டல் ஊழியர்களிடம் அன்பாகவும் , அதட்டியும் வேலை வாங்கி கொண்டிருந்தாள் ஸ்வாதி .
பில்லிங் செக்ஷன் சுதாகர் ….அடிக்கடி வழிந்து கொண்டு நிற்பது ஸ்வாதிக்கு எரிச்சலை கிளப்பியது . உண்மையை சொல்வதென்றால் அவளுக்கு கோபம் கொள்ள நேரமில்லை .
சுதாகர் சந்தேகம் கேட்பது போல் வந்து இளித்து கொண்டு நிற்பான் …ஸ்வாதியின் முயற்சியை பாராட்டுவது போல் கை குலுக்க வருவான் .
அவனை கவனமாக தவிர்த்து வந்தாள் . இவனை போன்ற வழிசல்களுக்கு பயந்தால் பெண்கள் படி தாண்டி வேலைக்கு வர முடியாது .
அவனைக் கண்டு அவளுக்கு அச்சமில்லை யாரை எப்படி கையாள வேண்டும் என்ற பக்குவம் நிறையவே வந்திருக்கிறது இப்போது.
இதை பிரபாவின் காதிற்கு கொண்டு போகவும் அவள் விரும்பவில்லை . அவனுக்கே ஆயிரத்தெட்டு டென்ஷன் .
அன்று ….கருப்பட்டி தினை மாவு பணியாரம் செய்து பார்த்தார்கள் . அதை ருசி பார்த்த சுதாகர் …ஸ்வாதி மேடம் செம்ம டேஸ்ட்…பாருங்க …அவள் வாயருகே கொண்டு வந்தான் …
சட்டென்று அவன் கையை தட்டி விட்டாள் .
ஸ்வாதி அவனை மிகவும் கடிந்து கொள்ளாததற்கு காரணம் சுதாகர் பாலாஜிக்கு வேண்டப்பட்டவன் . பாலாஜி பணியில் சேர்த்த ஆள்
அந்த ஒரு காரணத்திற்காகவே பல்லை கடித்துக் கொண்டு போனாள் .
நாம் இவனை தண்டித்து …அது பிரபா,பாலாஜி நட்பில் விரிசல் வந்துவிடக் கூடாது என்று எண்ணினாள் .
டைம் ஆச்சு ஸ்வாதி ….நான் கொண்டு வந்து டிராப் பண்ணவா ….?சுதாகர் வாயெல்லாம் பல்லாக இளித்து கொண்டு நின்றான் .
சுதாகர் நீங்க உங்க லிமிட்டை தாண்டறீங்க …அவள் முகத்திற்கு எதிரே கடுமையாய் முறைத்தாள் .
என்ன லிமிட் தாண்டறேன் …? அவன் கேலியாய் கேட்டான் . துளி கூட அவனுக்கு பயமில்லை.
உங்க பேச்சு சரியில்லை … பார்த்து நடந்துக்கோங்க !
பாருடா …மேடமுக்கு எவ்வளவு கோபம் வருது …பிரபா சார் பேசினா இனிக்குது …ஏன்னா அவர் ஓனர் . அவர் கூட மணிக்கணக்கா பேசுவீங்க ….நாங்க ஒர்க்கர் தானே …அது தான் கசக்குது .
ச்சீ ..பொறுக்கி …..வேகமாய் கை ஓங்கியவள் …கோபத்தை மட்டுபடுத்தி கையை தாழ்த்திக்கொண்டாள் .
மறுநாள் காலையிக் சுதாகர் வரவில்லை ….அதற்கு பதிலாக ஒரு லேடி பில்லிங் செக்ஷனில் அமர்ந்திருந்தார்.
ஸ்வாதிக்கு ஒன்றும் புரியவில்லை …சுதாகரை திருவான்மியூர் பிராஞ்சிற்கு மாற்றி இருப்பதாகவும் . அவனுக்கு பதில் சுகந்தி என்பவர் வந்திருப்பதாகவும் பிரபா மெயில் பண்ணியிருந்தான் .
என்னாச்சு பிரபா ..? ஏன் சுதாகரை திருவான்மியூர்க்கு அனுப்பி இருக்க ….பாலாஜி சந்தேகமாய் கேட்டான் .
அவன் ஆட்டிடியூட் சரியில்லை பாஜி.
என்னடா சொல்ற ?
அவன் ஸ்வாதிக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறான் ….
சிவந்த விழிகளுடன் முகம் இறுகி அமர்ந்திருந்தான் பிரபா .
நீயே பாரு…! நேற்றைய CCTV footage காண்பித்தான் .
ஸ்வாதியை சீண்டியவன் கையை காலைஉடைத்திருக்கணும் உனக்கு வேண்டப்பட்டவன் என்ற ஒரு காரணத்திற்காகவே விட்டுட்டேன். அவன் மனம் சமன் படவில்லை.
பாலாஜி நண்பனை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் உற்று பார்த்தான் .
பிரபா …என்னோட லேப்டாப் சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன்
கொஞ்சம் உன்னோட லேப்டாப் யூஸ் பண்ணிக்கிறேன் ….பாலா கேட்டான் .
டேய் …பாஜி அடி வாங்க போற …! என்னடா இதெல்லாம் புதுசா… இதையெல்லாம் என்னை கேட்கணுமா ?
சரிடா ….நீ இரு …! நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வரேன்
பிரபா பாஸ்வேர்ட் சொல்லிட்டு போடா …
Swi@21317. கேப்பிட்டல் எஸ் போட்டுக்கோ .
பாலா அசையாமல் அமர்ந்து விட்டான் .
” Swi யா ….எங்கோ இடிக்குதே ….? “
அவசரமாக பிரபாவின் டேபிள் டிராயரில் இருக்கும் ஒர்க்கர்ஸ் பர்டிகுலர்ஸ் தேடி எடுத்தான் .
அவன் கண்கள் அவரசமாய் அடித்து பிடித்து அலைமோதி தேடியது .
ஆம் …அவன் சந்தேகம் சரியே …swathi என்பதே Swi என்று இருந்தது . அவள் பணியில் சேர்ந்த நாள் 21.03.2017
பாலாஜி நாற்காலியில் சரிந்து அமர்ந்தான் . அவன் கண்ணில் நீர் திரையிட்டது .
பிரபா ….ஏன்டா உனக்கு நீயே ஒரு பொய்யான முகமூடி போட்டு கொண்டு அதை உண்மை என்று இந்த உலகத்தை நம்ப வைத்து கொண்டிருக்கிறாயே ..!
பிரபா உன் வாழ்வு முடிந்து போகலைடா …அது தொடங்கினால் தானே முடிய .
ஏதாவது செய்து …நீ ஆசைபட்ட வாழ்வை வாழ வைப்பேன்டா மனதிற்குள் சபதம் ஏற்றான் .
ஸ்வாதிக்கு ஆச்சரியமாய் இருந்தது எப்படி சுதாகர் விஷயம் பிரபா சாருக்கு தெரிந்தது ?
அவள் சிந்தனையை கலைக்கும் விதமாய் போன் அழைத்தது .
அவள் தம்பி விவேக் தான் ஊரில் இருந்து அழைக்கிறான் .
பரஸ்பர நலம் விசாரிப்பிற்கு பின் …அம்மா உன்னை பார்க்கணும்னு அழறாங்கக்கா . இந்த வாரம் வரியா?
இல்லை விவேக் ….எனக்கு டைம் இல்லை …நான் லீவ் கிடைக்கும் போது வரேன் . அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ ….அப்பா இப்போவும் குடிச்சிட்டு தான் இருக்காரா ?
கொஞ்சம் பரவாயில்லை… ஆனா அடியோட நிறுத்தலை.
அவர் இந்த ஜென்மத்தில் திருந்த போறதில்ல… பெருமூச்சு விடுத்தாள்.
சரி விக்கி …நீ நல்லா படி ! எதையும் நினைத்து மனசை போட்டு குழப்பிக்காதே கவனம் படிப்பில் இருக்கட்டும்.வேற ஏதாவது முக்கியமான விஷயம்னா கால் பண்ணு .வைத்து விட்டாள் .
“—————-“
பாலாஜிக்கு பிரபாவின் மனதில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது . மறுபுறம் நண்பனின் மகிழ்ச்சி நிலைத்து நிற்க நாம் என்ன செய்ய போகிறோம் என்று கவலையாகவும் இருந்தது .
“கிராமத்து விருந்து ” என்று ஒரு தீமை மனதில் வைத்து அதற்கான ஏற்பாட்டில் தீவிரமாய் இருந்தாள் ஸ்வாதி .
அன்று ஞாயிற்று கிழமை பிரபாவின் வீட்டிற்கு வந்திருந்தான் பாலாஜி.
அம்மா என் பொண்ணு ரேஷ்மிக்கு புதன் கிழமை பர்த்டே ….நீங்க அவசியம் வரணும் ! பிரபா நீயும் வரணும் . நீ வந்தா நிஷா ரொம்ப சந்தோஷப்படுவா என்றான் பாலாஜி .
பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் முதல் மகன் அகிலுக்கு நான்கு வயது . இரண்டாவது பெண் குழந்தை ரேஷ்மிக்கு முதல் பிறந்தநாள் .
கல்யாணிக்கு துக்க பந்து தொண்டையை அடைத்தது . தன் மகன் வயதை ஒத்தவன் .
இரு குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்டான் . தன் மகன் தனி மரமாய் நிற்கிறானே ? அந்த தாய் உள்ளம் குமுறியது .
ஏங்கி நிற்கும் தாயை கண்டு உடைந்து போனான் பிரபா .
இதற்காகவாவது இறைவா ஏதாவது செய்து இந்த குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கு! உள்ளுக்குள் விம்மினான்.
——-தொடரும் ——–
error: Content is protected !!