Skip to content
Post Views: 3,051
“ஆனா ஒரு கண்டிசன்!” என்று மானு சொன்னவுடன், ரித்து உட்பட மூவருக்கும் ஒரே ஆச்சர்யம்!
“என்னம்மா கண்டிசன்? உன் அம்மாவை கடைசி வரை உன் கூடவே வச்சுக்கணும்னு சொல்லப் போறியா? சஷி என்ன அவ்வளவு கொடுமைக் காரியா தெரியறாளா உனக்கு? உன் அம்மாவை தனியே விட்டு விட்டு வர சொல்லும்அளவுக்கு” என்றார் பானு.
அவளைக் கொஞ்ச நேரம் உற்று நோக்கி விட்டு சஷி கேட்டார்.
“இந்த சொத்துக்காக தானே ரித்துவோட மாமாக்கள் இவ்வளவு தூரம் போனாங்க. அதனால இந்த சொத்தையெல்லாம் அவங்க கிட்ட கொடுத்துற சொல்றியா?”
Advertisement
அவள் முகத்தையே ரித்துவும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இது இரண்டுமே இல்லை என்பது அவனுக்குப் புரிந்து விட்டது!
“இது ரெண்டுமே இல்லை! என் அம்மாவை விட்டுட்டு வர சொல்ல மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும். அதே மாதிரி சொத்து விசயத்துல நான் தலையிட மாட்டேன். அது அத்தை தான் முடிவு எடுக்கணும்”.
Advertisement
“ரெண்டுமே இல்லன்னா, அப்புறம் என்னம்மா கண்டிசன்?” பொறுக்க முடியாமல் கேட்டார் பானு.
Advertisement
“என் ரித்துவுக்காக, காதலர்களா பிரிஞ்ச சஷி அத்தையும் வசந்த் மாமாவும் இப்போ கம்பெனியன்களாக வாச்சும் மீதி வாழ்க்கையை தொடரணும்! அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும்” என்றாள் மானு உறுதியாய்!
“திஸ் இஸ் ரிடிகுலஸ்! நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ, நாங்க எதுக்கு கல்யாணம் பண்ண வேண்டும்? அதுவும் பேரன் பேத்தி எடுக்கப் போற இந்த வயசுல?” சஷி கொஞ்சம் கோபமாய் சொன்னார்.
“இல்லன்னா வாழ்க்கை பூராவும் எனக்கும் ரித்துவுக்கும் கில்டியாவே இருக்கும். அட்லீஸ்ட் வசந்த் மாமாவாச்சும் வேற கல்யாணம் பண்ணியிருந்தா கூட பரவாயில்ல. அவரும் உங்களையே நினைச்சுட்டு இன்னும் அப்படியே இருக்கார். நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கும் போது எப்படி எங்க வாழ்க்கை இனிக்கும்?” மானுவும் விடுவதாக இல்லை!
Advertisement
“இது ஆகறதுக்கு இல்ல! மானு, நீ தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்க!” சஷி இப்போது சீறவே ஆரம்பித்து விட்டார்!
எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கும் போது இது என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது என்ற கோபம் அவருக்கு!
“நீங்க இதுக்கு ஒத்துகிட்டா தான் நான் ரித்துவோட வருவேன். இல்லன்னா இந்த அஞ்சு வருசமா இருந்த மாதிரியே மிச்ச வாழ்க்கையையும் கழிச்சுடுவேன் என் அம்மாவோடவே!
அப்புறம்.. ரித்துவும் என்னைத் தவிர வேற பொண்ணை மனசால கூட நினைக்க மாட்டான்! அவனும் வசந்த் மாமா மாதிரியே தான் இருப்பான்! நாங்க சேர்ந்து வாழறதும் வாழாததும் நீங்க எடுக்கிற முடிவுல தான் இருக்கு!”
சபாஷ்.. சரியான போட்டி! டீ.. சஷி, உனக்கு உன்னைப் போலவே ஒரு மருமகள்! தியாகம் பண்றதுலயும் சரி. இப்படி இமோஷனல் ப்ளாக் மெயில் பண்றதுலயும் சரி! சரியான பொருத்தம்! கர்மா இஸ் பூமராங்! அன்னிக்கு நீ அவ கிட்ட பண்ணின, இப்ப அவ உன்கிட்ட பண்றா!” பானு கை தட்டி பாராட்டினார்!
“ஏய்.. சும்மா இருடி. நீ வேற. அவ தான் சின்ன பொண்ணு புரியாம பேசுறா? நீயும் அவளுக்கு ஒத்து ஊதிட்டு! இதெல்லாம் நடக்கிற காரியமா? இந்த சொசைட்டி என்ன சொல்லும்?” சஷி தளர்ந்து போய் சொன்னார்.
“சொசைட்டியைப் பத்தியெல்லாம் நீ கவலைப் படாதே. அவங்க அவங்களுக்கு ஆயிரம் வேலை! அப்படியே பேசினாலும், அவங்களுக்கு வேற கன்டென்ட் கிடைச்சுட்டா இத விட்டுடுவாங்க! நம்ம வாழ்க்கையை நாம் தான் டிசைட் பண்ணணும்! எனக்கென்னவோ மானு சொல்றது சரியா தான் படுது!”
“அப்ப சரி நான் கிளம்பறேன்” என்று சொல்லி மானு அங்கிருந்து நகர,
“ஏய்.. இரும்மா.. எனக்கு கொஞ்சம் டயம் கொடு. உடனே எப்படி பெரிய முடிவு எடுக்க முடியும்? நீங்க முதல்ல தாலி கட்டி கல்யாணம் முடிங்க. அப்புறம் இத பத்தி பேசலாம்”.
“அத்தை, உங்க பிசினெஸ் டாக்டிஸ் எல்லாம் என்கிட்ட இம்ப்லிமென்ட் பண்ணாதீங்க. ஒரு விஷயத்தை மறுக்க நினைச்சு, அது முடியலன்னா, அத போஸ்ட்போன் பண்ணி விடுகிற வேலை! அது என்கிட்ட வேணாம்!
எனக்கு இப்பவே உங்க முடிவை சொல்லணும்!” கறாரான ஆளாக தெரிந்தாள் மானு!
“இவளா குட்டிமா? இவள் பெரியம்மா!” என்று மனதுள் சிரித்துக் கொண்டார் பானு!
தன்னிடம் சும்மா சும்மா குட்டு வாங்கிக் கொண்டு வலிக்குது ரித்து என்று குழந்தை முகத்துடன் சிணுங்கிய குட்டிமாவா இது? ரித்துவுக்கும் ஆச்சர்யம்! அவன் வெறுமனே அவளை ஆதரவாக பார்த்த படி நின்று கொண்டிருந்தான்!
“இப்ப என்ன தான் சொல்ற?” சஷி இழுவையான குரலில் கேட்க,
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேரணும்! அவ்வளவு தான்!” என்றாள் மானு முடிவாய்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சினை இழுத்து விட்ட சஷி,
“சரி.. நான் வசந்த் கிட்ட பேசுறேன்” என்றார்.
“ரொம்ப தாங்க்ஸ்..” என்றபடியே ஓடி சென்று அவரை கட்டிக் கொண்டாள் மானு!
தன் வாக்கர் உதவியுடன் மெதுவாக நடந்து வந்து பானுவும் இருவரையும் கட்டிக் கொண்டார்!
“என்ன இது? ஒரே மகளிர் அணியாக போச்சு?” என்றபடி ரித்துவும் அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டான்!
கட்டிக் கொண்டே சஷி கேட்டார்.
“உனக்கு எப்படிடா எல்லாம் தெரிஞ்சது? நிச்சயமா வசந்த் சொல்லி இருக்க மாட்டார்!”
“ஆமா. அவர் சொல்ல வில்லை. அவங்க அம்மா .. அந்த பாட்டி தான் சொன்னாங்க எல்லாத்தையும்!” என்று பதில் சொன்ன ரித்து, அன்று ராமேஸ்வரத்தில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
ஐந்து வருடங்கள் முன்பு.
ரித்து மானுவை பதிவு திருமணம் செய்து விட்டு, அவனின் அந்த புது பிளாட்டில் மானுவை வைத்து பால் கூட காய்ச்சி விட்டு, அவர்கள் குடும்ப வாழ்க்கையையும் கூட ஆரம்பித்து விட்ட அடுத்த கொஞ்ச நாட்களில் சஷி , ரித்துவை அவன் அப்பாவிற்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் அனுப்பி வைத்தாள், ஒரு ஜோசியரின் அறிவுரைப்படி!
சஷிக்கு ஒரு பழக்கம் இருந்தது! மற்ற பூஜையெல்லாம் செய்கிறாளோ இல்லையோ, நீத்தார் கடன் மட்டும் தவறாது செய்து விடுவாள்.
அதனால் தான் சதீஷ் இறந்த அடுத்த வருடமே அவன் அம்மா இறந்த போது, ஒரு பேரனாக ரித்துவின் கையில் நெய்ப்பந்தம் பிடிக்க வைத்தாள்.
இப்போதும் அப்படியே!
அவள் வசந்திடம் ஆரம்ப நாட்களில் பேசாமல் இருந்தாலும், போக போக அவள் பிசினெஸ் விசயமாக சில தொடர்புகளுக்காக அவனிடமும் பேச நேர்ந்தது!
அப்படி தான் பேச ஆரம்பித்து இருந்தாள்.
அதனால் ரித்துவை ராமேஸ்வரம் அனுப்பி விட்டு, வசந்த்தையும் கூப்பிட்டு அவர்கள் வீட்டில் ரித்துவை தங்க வைத்து மற்ற ஏற்பாடுகளையும் செய்து உதவ கேட்டுக் கொண்டாள்.
ரித்துவை காரில் பிக்கப் செய்து வந்தார் வசந்த்.
“நல்லா டிரைவ் பண்றீங்க அங்கிள்!” என்றான் ரித்து.
“உன் அப்பனும் தான் நல்லா வண்டி ஒட்டுவான். பைக்கிலேயே தமிழ் நாடு முழுவதும் சுற்றி இருக்கிறான்!” என்றார் அவரும் சிரித்த படி!
“நீங்களும் அப்பாவும் திக் ப்ரன்ட்ஸா?”
“ஆமா. நான், சதீஷ், ரிஷி, சஷி நாலு பேரும் திக் பிரண்ட்ஸ்!”
“நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல? இப்ப கூட நீங்க பயங்கர ஹான்ட்சம்மா தான் இருக்கீங்க! அப்ப வயசுல இன்னும் சூப்பரா இருந்துருப்பீங்க? அப்புறம் ஏன் இப்படி?”
“அத விடு. பழைய கதை. உன்னைப் பத்தி சொல்லு. நீ யாரையாச்சும் லவ் பண்றியா? பண்றன்னா சொல்லு உன் மம்மி கிட்ட நான் பேசுறேன்!”
“ம்ம்.. லவ்வா.. ம்ம். சொல்றேன். தேவைப்பட்டா, உங்கள கூப்பிடறேன்” ரித்து சிரித்துக் கொண்டே இழுவையாக சொன்னான்.
“என் மம்மி கிட்ட என்ன ஸ்டன்ட் அடிச்சு எப்படி காரியம் சாதிக்க முடியும்னு எனக்கும் தெரியும்!” என்றவன் தான் பைக் வாங்கிய கதையையும் சொன்னான்!
“டேய்,, சஷிக்கு ஏத்த பிள்ளை தாண்டா நீயும்” என்று சொல்லி சிரித்தார் வசந்த்!
சஷி கேட்டுக் கொண்ட படி ரித்துவை கடற்கரைக்கு அழைத்து சென்று திதி கொடுத்த பின், வீடு திரும்பி இருந்தார்கள்.
பூஜை பொருட்களை பூஜை அறையில் வைக்க போன ரித்து அந்த அறையில் இருந்த அவன் அப்பா சதீஷின் மாலையிடப் பட்ட போட்டோவைக் கண்டான்.
அது ரிஷிபாலா-சதீஷ் திருமணக் கோலத்தில் இருந்த படம்!
அய்யோ என்ன இது? என் அம்மா சஷி உயிரோட தானே இருக்காங்க. அவங்களும் சேர்ந்து இருக்கும் படத்திற்கு ஏன் மாலை? அவன் அதிர்ந்து போய், வசந்தை தேட, அவரோ போனில் அலுவலக வேலையாக பேசிக் கொண்டிருந்தார்.
அவன் அதிர்ச்சியில் அப்படியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்தார், ஒரு வேலைக்காரப் பெண்மணி.
“அம்மா உங்கள பார்க்கணும்னு சொல்றாங்க. வாங்க தம்பி” என்று வயது மூப்பின் காரணமாக படுக்கையில் இருந்த வசந்தின் அம்மா அறைக்கு அழைத்து சென்றார்.
“வாப்பா” என்று பலவீனமான குரலில் அழைத்தார் அவர்.
“சதீஷ் மகனா நீ? நல்லா இருக்கியா? அப்பாக்கு திதி கொடுக்க வந்தியா? சஷி நல்லா இருக்காளா?” என்று அவன் தலையை பாசமாக தடவியபடி கேட்டார்.
“ம்ம். ஆமா. மம்மி நல்லா இருக்காங்க.”
“என்ன படிக்கிற?”
“படிச்சு முடிச்சுட்டேன். இன்னும் ரெண்டு மாசத்தில் படிப்பு முடிய போகுது” என்றான் ரித்து.
“நல்லா படிச்சு முடிச்சு, சஷிக்கு துணையா இருக்கணும். அவளை கடைசி வர நல்லா பார்த்துக்கணும் சரியா?
உனக்காக தான் அவ வாழ்ந்துட்டு இருக்கா! மிச்ச வாழ்க்கையாச்சும் அவளுக்கு நிம்மதியா இருக்கணும்!.
அவளுக்கு வசந்துக்கும் நல்ல படியா கல்யாணம் ஆகியிருந்தா, அவனுக்கும் உன்னை மாதிரி உன் வயசுல ஒரு மகன் இருந்திருப்பான்!
எல்லாம் அந்த பாவி மனுஷன் பண்ணி வச்சது” என்று அந்த அறையில் போட்டோவில் இருந்த கணவனைத் திட்டினார்.
“என்ன? மம்மிக்கும் வசந்த் அங்கிளுக்கும் கல்யாணமா? ஓ. ஒன் சைட் லவ் போல!”
கணவரைத் திட்டிவிட்டு, “அவர் தானே தாயில்லா குழந்தையான உன்னை விட்டுட்டு வந்தா தான் வசந்த்தோட கல்யாணம்னு பிடிவாதம் பிடிச்சு பேயாட்டம் ஆடி, இப்ப கடைசியில என் மகனுக்கு கல்யாணமே ஆகாம பண்ணிட்டார்!” என்ற அவர் புலம்பலைத் தொடர்ந்தார்!
“அவ எப்படி வருவா? உன்னைப் பெத்துப் போட்டுட்டு ரிஷியும் போய் சேர்ந்துட்டா!
சதீஷ் அவ நினைப்பாவே இருந்துட்டு, கொஞ்ச நாளில் அவனும் என் ரிஷி கிட்டயே போறேன்னு போய் சேர்ந்துட்டான்!
என்ன படிச்சு என்ன புண்ணியம்? அத வாழ்க்கையில நடைமுறைப்படுத்தணுமே?
பிறந்த கொஞ்ச நாளில் அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழந்துட்டு இருக்கிற அந்த பச்சை மண்ணை விட்டிட்டு வான்னு சொன்னா, எப்படி வருவா சஷி? முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டா!
சின்ன பிள்ளையில இருந்தே அவளுக்கு அவன், என்று பேசியிருந்த பந்தம், இந்த கூறு கேட்ட மனுஷன் புத்தியில்லாம பண்ணின வேலையால, இப்ப என் மகன் தான் தனி மரமாக நிக்கிறான்!” அந்த பாட்டியின் கண்களில் கட கடவென்று கண்ணீர்!
பாட்டியின் கண்களில் மட்டுமா? ரித்துவின் கண்களிலும் தாம்!
அதற்குள் அங்கு வந்து விட்ட, வசந்த், நிலைமையை ஊகித்து விட்டவராய், பதறினார்.
“அய்யோ.. அம்மா என்ன வேலைப் பண்ணி வச்சுருக்க? எல்லார் கிட்டயும் புலம்புற மாதிரி இவன் கிட்டயும் புலம்பிட்டியா?
அம்மா.. அவனுக்கு எதுவுமே தெரியாதும்மா. சஷி எதையும் அவன் கிட்ட சொல்லவே இல்லை!
என்னம்மா நீ? யார் கிட்ட எத சொல்லணும் உனக்கு தெரியாதா? பாரு பிள்ளை மனசு உடைஞ்சு போறான் பாரு.
மனசங்க மனசை காயப்படுத்துறதே நீயும் உன் புருசனும் வேலையாவே செஞ்சுட்டு இருக்கீங்க இல்ல?” ஆத்திரப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டார் வசந்த்.
“என்ன? அவனுக்கு ரிஷி தான் அவன் அம்மான்னே தெரியாதா? அப்போ அப்பா அம்மாக்கு திதி கொடுக்க தானே வந்திருக்கான். எல்லாம் அவனுக்கு தெரியும்னு நினைச்சு தாண்டா சொல்லிட்டேன். அய்யோ என்னை மன்னிச்சுடுடா தங்கம்! உன்னை இப்படி அழ வச்சுட்டேனே இந்த கிழவி!” அவர் கையெடுத்துக் கும்பிட்டார்!
அவர் கையைப் பற்றி விடுவித்தவன், ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டான்.
“டேய். தம்பி. அவங்க சொன்னத எதையும் மனசுல வச்சுக்காத. சஷி தான் உன் அம்மா. இதுவே கடைசி வரை இருக்கும்! இந்த உண்மையை நீ தெரிஞ்சுகிட்டேன்னு தயவு செஞ்சு அவ கிட்ட காட்டிக்காதே! உடைஞ்சுப் போய்டுவா” என்று சொல்லி அவனைத் தேற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார் அவர்!
திருச்சி திரும்பி வந்த முக வாட்டத்துடன் இருந்த அவனுக்கு மானு ஆறுதலானாள்!
அவளிடம் அழுத படி தான் தெரிந்து கொண்டதையும் மறைக்காமல் சொல்லி விட்டான் அவன்.
அன்று இரண்டாவது முறையாக அவனுடன் கலந்து அவனை தேற்றி இருந்தாள் அவன் குட்டிமா.
அடுத்த நாள் அவர்களை குடும்ப வக்கீலின் ஜூனியர் விஸ்வாவை தொடர்பு கொண்டு பேசினான்.
“அன்னிக்கு என் அப்பாவோட வாரிசு சர்டிபிகேட்ல ஏதோ டவுட்ன்னு சொல்லிட்டு இருந்தீங்களே! அது என்ன?” என்று விசாரித்தான்.
“உங்க அப்பாவுக்கு சட்டப்படி நீங்களும் உங்க அம்மா சஷிபாலாவும் தான் வாரிசு.
அப்போ உங்க அப்பாவோட சொத்துல அவங்களுக்கும் ஷேர் உண்டு.
அவங்களும் சைன் பண்ணணும்.
ஆனா நீங்க மாட்டும் தான் வாரிசுன்னு அதிலே இருந்துச்சு. அதான் அன்னிக்கு எனக்கு டவுட் வந்தது.
அப்புறம் சீனியர் அதை கிளியர் பண்ணிட்டார்” என்றான் விஸ்வா.
“ஓ… ஓகே. தாங்க்ஸ்” என்று ரிஷிபாலா தான் அவனைப் பெற்றவள் என்பதை உறுதி செய்து கொண்டான்.
அம்மா அப்பா இல்லாத தன்னை எடுத்து வளர்த்த சஷிபாலாவிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டது அவன் மனதை கொஞ்சம் உறுத்தியது என்றாலும்,
மம்மி என் ஆசைக்கு குறுக்கே நிக்க மாட்டாங்க. அதுவும் அந்த காலத்திலேயே அம்மாவோட காதலுக்கு துணை போனவங்க.
என் காதலை மட்டும் எதிர்க்கவா போறாங்க என்ற ஓவர் கான்பிடன்ஸ் வந்து விட்டது அவனுக்கு!
..
பழைய நினைவில் இருந்து மீண்டவன், மானுவைப் பார்த்து சிரித்தான்.
நல்ல மாமியார்! நல்ல மருமகள்! சூப்பர் பொருத்தம் போ.
அடுத்து நடந்தது எல்லாம் மின்னல் வேகத்தில்!
கல்யாணமா? எனக்கும் சஷிக்குமா? அதிர்ந்து போய் கேட்டார் வசந்த்!
ஆமா! என்றான் ரித்து.
எத்தினி வாட்டி பண்றது? அவர் கேட்க, ரித்து திகைத்தான்!
error: Content is protected !!