துளசி , தூதுவளை, ஓமவல்லி , வெற்றிலை போட்ட மூலிகை ரசம் , பிரண்டை துவையல் சுத்தமான நல்லெண்ணெய் , பூண்டு பொடி …என பார்த்து பார்த்து தயார் செய்த காம்போ ….அமோக ஆதரவை பெற்றது .
மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள் ஸ்வாதி .
விழுப்புரம் வரை நண்பனை பார்க்க சென்ற பிரபா ….வரும் வழியில் ஹோட்டலுக்கு சென்றான் .
வாடிக்கையாளர்கள் கருத்து கேட்டு குறிப்பெழுதி கொண்டிருந்தாள் ஸ்வாதி .
கர்மசிரத்தையோடு பணியை செய்யும் அவளை எப்படி பாராட்ட ….? யோசித்து அமர்ந்தான் .
இந்த சின்ன வயதில் எவ்வளவு ஆர்வம் அர்ப்பணிப்பு…. மெய் சிலிர்த்துவிட்டான்.
அந்த வாரத்திற்கான வரவு செலவு பதிவேட்டை காண்பித்தாள்.
அவன் விழி விரித்து விட்டான்.
அவன் பொறுப்பில் சிட்டிக்குள் இருக்கும் ரெசிடென்ஷியல் ஹோட்டலின் வருமானத்தை விட …அவள் ஈட்டி கொடுத்தது அதிகம் .
இல்லை ஸ்வாதி ….அவன் என்னோட பிரண்ட் மட்டும் இல்லை பிசினஸ் பார்ட்னர் கூட ….அதுமட்டுமில்லாம ரேஷ்மி டால் என் செல்ல குட்டி. அவளுக்கு கோல்ட் ஏதாவது வாங்குவோமா ?
ஐடியா போல் இல்லாமல் அனுமதி போல் கேட்டான் .
உங்க விருப்பம் போல் செய்யுங்க சார் என்றாள் .
குரோம்பேட்டை GRT போய் குழந்தை கைக்கு வளையல் பார்த்தான் .
ஸ்வாதி ஒரு பவுன் வர மாதிரி பேபி பேங்கில் பாருங்க ….இதோ வரேன் …அவன் எழுந்து போய் விட்டான் .
ஸ்வாதி எனாமல் கோட்டிங் கொடுத்த காப்பு போன்ற டிசைன் கொண்ட கெட்டியான வளையலை தேர்ந்தெடுத்தாள் .
சற்று நேரத்தில் வந்தவன் பில் போட்டு கிளம்பினான் .
சார் …நான் ஏதாவது டாய்ஸ் வாங்கிட்டு வரேன் …நீங்க இங்கே இருங்க என்றாள் .
இல்லை ஸ்வாதி நானும் வரேன் என்றான் .
இருவருமாய் கிட்ஸ் வேர்ல்ட் என்னும் கடையில் நுழைந்தனர் . பிங்க் வண்ண டெடி பியர் வாங்கினாள் . பிரபா பர்ஸ் எடுக்க ….சார் ப்ளீஸ் …இது என்னோட கிஃப்ட் என்று அவளே பணம் செலுத்தினாள் .
பக்கத்தில் ஐஸ்க்ரீம் பார்லர் கண்டவன் அங்கு நுழைந்தான் …வேறு வழியில்லாமல் அவளும் பின் தொடர்ந்தாள் .
எனக்கு எப்போதும் வெனிலா தான் என்றாள்.எனக்கும் என்றான் இதழ் பிரியா புன்னகையுடன்.ஐஸ்க்ரீம் சாப்பிடும் அவள் அழகை இமை கொட்டாமல் ரசித்தான் .
அவன் பார்வை தாளாது …ஐஸ்க்ரீம் சாப்பிட இயலாமல் ஸ்பூனால் நிரண்டி கொண்டிருந்தாள் .
ஐஸ்க்ரீமோடு அவன் இதயமும் கரைந்து உருகி ஓடியது .
அவளை வடபழனியில் டிராப் பண்ணியவன் …நாளை வேலைக்கு போக வேண்டாம் . பர்த்டே பார்ட்டிக்கு வந்தால் போதும் . நம்முடைய திருவான்மியூர் ஹோட்டலில் தான் பார்ட்டி என்று சொல்லிவிட்டு போனான் .
அவள் இறங்கி சென்றவுடன் வெற்றிடமாக இருந்தது ….
கார் சீட் மட்டுமில்லை அவன் இதயமும் தான் .
அவளை விட்டு ஒதுங்க வேண்டும் என்று எடுக்கும் உறுதிமொழி யாவும் …அவள் கயல்விழியின் படபடப்பில் தொலைந்து போகிறது .
சற்று நேரம் ஸ்டியரிங்கில் தலை சாய்த்து கண்மூடினான். அவ்வளவு சோர்வு! அவன் காயப்பட்ட மனதிற்கு மயிலறகு ஒத்தடம் கிடைக்குமா என்ற ஏக்கம்.
“———“
கட்டிலின் மீது வைத்திருந்த சந்தன வண்ண மைசூர் சில்க் புடவையும் , நேற்று பிரபா பரிசளித்த இரட்டை சரம் கொண்ட முத்து மாலையும் அவளை பார்த்து சிரித்தது .
ஆம் …நேற்று பிரபா ..ரேஷ்மிக்கு வளையல்வாங்கும்போது ….
ஸ்வாதிக்கு இரண்டு பவுனில் முத்து மாலை வாங்கியிருந்தான் .
சார் …ப்ளீஸ் …இதெல்லாம் எனக்கு வேண்டாமே ….அவள் கெஞ்சினாள் .
எங்காவது பிசகு நிகழ்ந்து விட்டால்? மீண்டும் ஒரு அவமானம். இம்முறை அவளுக்கு தாங்கும் சக்தியில்லை நிச்சயம் மறித்து போவாள்.
ஸ்வாதி …உங்களுக்கு தவறான எண்ணத்தில் இதை வாங்கி கொடுக்கல .
உங்க மூளையை பயன்படுத்தி என் பிசினஸில் பணம் பார்க்கிறேன் . அதற்கு ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் … அவளால் மறுக்க முடியாதபடி …ஆணித்தரமாக கூறி …அவள் கையில் திணித்தான் .
அவளால் மறுக்க முடியாதபடி மடக்கிவிட்டான்.
இதை போட்டு கொள்வதா வேண்டாமா ? அவள் மனம் ஊசலாடியது.
உன் திறமைக்கு கிடைத்த சன்மானம் தானே என்றது ஒரு மனம் . ஒரு முறை பட்டும் நீ திருந்தவில்லையே என்று திராவகத்தை ஊற்றியது மறு மனம் .
தவித்து தத்தளித்து துவண்டு போனாள்.
நல்லவர்களுக்கு இது தான் பிரச்னை. நாலையும் யோசித்து குழப்பி குழம்பி…. அது ஒரு தனி ரகம்.