Skip to content
Post Views: 2,269
அத்தியாயம் 7
பிரபாவின் இயல்பு தொலைந்து போனது . மீண்டும் ஒரு இறுக்கம் அவனுள் விரவியது .
ரேஷ்மியை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஸ்வாதி . அவளிடம் சிரித்து விளையாடி கொண்டிருந்தது குழந்தை .
Advertisement
பிரபாவிற்கு அக்காட்சி பெரும் மன நிறைவை கொடுத்தது
ராணுவ கட்டுக்கோப்புடன் தன் மனதை வைத்திருந்தவன் பிரபா.இப்போதெல்லாம்
தன்னை கட்டுப்படுத்தும் வழி தெரியாது விக்கித்து நிற்கிறான் .
Advertisement
ஸ்வாதி டைம் ஆச்சு நீங்க கிளம்புங்க …பாலாஜி அவசரபடுத்தினான் .
Advertisement
பாஜி அம்மாக்கு ஒரு கேப் புக் பண்ணி அனுப்பு ..எனக்கு ஹோட்டலில் ஒரு அவசர வேலை இருக்கு .
நான் வட பழனி போகணும் .. நான் வேணும்னா ஸ்வாதியை டிராப் பண்ணிடறேன் என்றான் இயல்பாக ..
பாருடா ….ஒன்னும் தெரியாத அம்மாஞ்சினு நினைத்தோம் .
Advertisement
பையனுக்கு லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சு . பாலா உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான் .
நான் வேணும்னா டிராப் பண்றேன்டா ? அவன் வயிற்றெரிச்சலை கிளப்பினான் பாலா .
நான் தான் வேலை இருக்குன்னு சொல்றேனே …?பல்லை கடித்தவன் நீ வந்திருக்கும் கெஸ்டை கவனி …! அவனை முறைத்து விட்டு தாயிடம் சொல்லி கொண்டு கிளம்பினான் .
ஸ்வாதி வாங்க போகலாம் என்றவனிடம் …மறுக்கும் வழி அறியாது கிளம்பினாள் .
கல்யாணி , பவானி, நிஷா என அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு …அகிலுக்கும் , ரேஷ்மிக்கும் அவசர முத்தம் பதித்து விட்டு அவன் பின்னே ஓடினாள் ஸ்வாதி .
காரில் அவள் அமர்ந்த உடனே தேங்க்ஸ் என்றான் .
புரியாமல் பார்த்தாள் .
இந்த முத்து மாலையை போட்டுகிட்டதுக்கு …உனக்கு ரொம்ப அழகா இருக்கு !அவன் பார்வையில் இதுவரை இல்லாத ஏதோ ஒன்று இருந்தது .
அவள் அவன் புறம் திரும்பவேயில்லை .
ஸ்வாதி உனக்கு சிப்லிங்ஸ் ?
ஒரு தம்பி இருக்கான் ஸார் . என்ஜீனியரிங் படிக்கிறான் .
ஓ …உங்க பேரெண்ட்ஸ் …?
ஏன் இப்படி தோண்டி துருவி கேட்கிறார் ? ஸ்வாதிக்கு எரிச்சலாய் வந்தது .
ஸ்வாதி உன்னை தான் கேட்கிறேன் …?
ஹ்ம்ம் …இருக்காங்க ஸார் . அப்பா கார்பெண்டர் , அம்மா டெய்லர் .
ஹ்ம்ம் …என்றவன் அமைதியாய் டிரைவ் பண்ணினான் .
பாலாஜி ஏதோ பேசினானே ….?
என்ன …?
இல்லை …மாப்பிள்ளை RI அப்படி இப்படின்னு காதில் கேட்டுச்சே ….?
இவருக்கு என்ன தான் பிரச்சனை ? பல்லை கடித்தாள் .
சொல்ல விருப்பம் இல்லைனா விட்டுடு !
அது என்ன ஸார் மிலிட்டரி சீக்ரெட்டா ?
பிரண்ட் சர்க்கிளில் மாப்பிள்ளை இருக்கார் பார்க்கட்டுமான்னு கேட்டார் .
நான் வேண்டாம்னு சொன்னேன் ..பொறுமையை இழுத்து பிடித்து பேசினாள் .
ஏன் ? உங்களுக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கலையா …?
எந்த மாப்பிள்ளையும் பிடிக்காது …ஏன்னா நான் மேரேஜ் பண்ணிக்கிற ஐடியாவில் இல்லை .
கோவை பழமாய் சிவந்திருந்த அவள் விழிகள் கண்டு …அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை .
ஹாஸ்டலில் அவளை டிராப் பண்ணினான் .
அவள் தேங்க்ஸ் சொல்லவோ , பை சொல்லவோ இல்லை . விறு விறுவென்று திரும்பி பார்க்காமல் உள்ளே போய் விட்டாள் .
பிரபாவின் முகம் மீண்டும் வருத்தத்தில் சுருங்கியது .
வீட்டிற்கு வந்தவன் சோஃபாவில் சரிந்தான் .
பிரபா ….அந்த ஸ்வாதி பொண்ணு ரொம்ப நல்ல டைப்பா இருக்கா இல்லையாப்பா …? பாலை டீ பாயில் வைத்த கல்யாணி கேட்டார்
அமைதியாக கண்மூடி இருந்தான் .
என்னப்பா அந்த பொண்ணுக்கு வயசு இருக்கும் ?
ஏன் எனக்கு பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா ? டீபாய் மீதிருந்த பாலை கீழே தள்ளினான் .
அது பிரபா …கல்யாணி பயந்து போனார் .
தேவையில்லாம எதையும் யோசிக்காதீங்க … கோபமாய் எழுந்து போய் விட்டான் .
எத்தனையோ பெரிய பிரச்சனைகளிலும் தாயின் முகம் கோண அவன் பேசியதில்லை .
கல்யாணிக்கு கண்ணில் நீர் பீறிட்டு கொண்டு வந்தது .
கடவுளே என் பிள்ளை உள்ளுக்குள்ளே மருகிப் போறானே …? பெற்ற மனம் துடியாய் துடித்தது .
பிரபா மனம் விட்டு கலகலப்பாக பேசும் ரகம் என்றாலும் பரவாயில்லை . சிறு வயதில் இருந்தே அவன் எந்த வலியையும் வேதனையையும் வெளியில் காட்டி கொண்டதில்லை .
“————–“
ஸ்வாதி ஏற்கனவே இறுகி இருந்தவள் இப்போது இன்னும் இறுகி கடினப் பாறையாகி இருந்தாள் .
முற்று முழுதாக பிரபாவை தவிர்த்தாள் .
அவன் ஹோட்டலுக்கு வந்தாலும் …வரவு செலவு நோட்டை அவனிடம் நீட்டிவிட்டு வேறு வேலை பார்க்க கிளம்பி விடுவாள்
பேச வேண்டிய விஷயம் எனில் மெயில் பண்ணி விடுவாள் .
பிரபாவிற்கு வாழ்வில் இருந்த கொஞ்சம் நஞ்சம் ஈடுபாடும் இப்போது இல்லாமல் போனது .
பாலாவிற்கு அவர்களை எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை . தலையை பிய்த்துக் கொண்டிருந்தான் .
இருவரும் அழுத்தமாக இருந்தால் என்ன செய்வது ?
காதல் இருக்கு ஆனால் இல்லை என்று நிலைமை ஓடி கொண்டிருந்தது .
ஸ்வாதி வாரம் ஒரு நாள் பாரம்பரிய உணவுகளுக்கான விழா நடப்பது போல் ஏற்பாடு செய்த்திருந்தாள் .
ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரம்பரிய உணவுகள் தயார் செய்யப்படும் .
உளுந்து களி , கேழ்வரகு புட்டு , குழி பணியாரம் , கேப்பை களி , முடக்கத்தான் தோசை . மருந்து குழம்பு , சென்னாகுன்னி பொடி , முருங்கை கீரை சூப் , கம்பு அடை , சோள மாவு தோசை …பாரம்பரியமான கிராமத்து உணவுகளை சனிக்கிழமை மதியம் தயார் செய்வார்கள் .
நகரங்களில் வாழ்ந்தாலும் கிராமத்து உணவிற்காய் ஏங்கி நிற்கும் சென்னை வாசிகள் படையெடுக்க தொடங்கினர் …இளைய தலைமுறையினர் பாரம்பரிய உணவில் என்ன தான் இருக்கிறது என்று ஆவலாய் ஓடி வந்தனர்
ஹோட்டல் வியாபரம் ஜே ஜே வென கலை கட்டியது .
அக்கம் பக்கம் ஹோட்டல் எல்லாம் மேஜிக் டேயின் விஸ்வரூப வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டது .
இவர்களின் உணவு முறையை அவர்களும் பின்பற்றத் தொடங்கினர் ..
ஆனாலும் அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை .
ஸ்வாதி தான் இந்த வெற்றியின் சூத்திரதாரி என்று அறிந்து …அவளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் . எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறோம் எங்கள் ஹோட்டலுக்கு வந்துவிடு !
யாரின் ஆசை வார்த்தையிலும் ஸ்வாதி அசரவில்லை .
இதெல்லாம் பிரபாவின் காதுக்கு போனபோது …
இன்னும் இன்னும் ஸ்வாதிக்காக ஏங்கியது அவன் மனம் .
ஸ்வாதியை தினம் CCTV காமிராவில் வடபழனியில் இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறான் பிரபா .
அங்கு அவள் சிரித்தாள் இங்கு அவன் இதழ் பிரியும் …அவள் வருத்தமுற்றால் இவன் முகம் சுருங்கும் .
ஸ்வாதி அவன் மனதில் விஸ்வரூபமாய் வேரூன்றி வளர்ந்து நின்றாள் .
உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு சின்னா பின்னமாகி கொண்டிருந்தான் பிரபா .
தீபாவளி நெருங்கி கொண்டிருந்தது .
கிராமத்து பலகாரம் என்று அட்டை பெட்டியில் பேக் செய்து விற்பனை தொடங்கினாள் ஸ்வாதி .
மகளிர் சுயஉதவி குழுவில் இருக்கும் பெண்களை அழைத்து பலகாரம் செய்து பேக் போட்டாள் .
பொரிவிளங்காய் உருண்டை , சீடை , கை முறுக்கு , அதிரசம் , பயத்தமாவு லட்டு , சோமாஸ் , தட்டை , எள்ளுருண்டை என்று தயார் செய்தனர் .
லட்சங்களில் வியாபாரம் அள்ளியது . தென் மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு செல்பவர்கள் காரை நிறுத்தி வரிசையில் நின்று வாங்கினர் .
அங்கேயே கங்கா ஸ்நானம் செய்ய மரச்செக்கு நல்லெண்ணெய் , அரப்பு தூள் , தீபாவளி லேகியம் விற்பனை செய்தனர் .
ஸ்வாதி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் . இரவு பகலாக …குக்கிங் , பேக்கிங் , டெலிவரி என்று வேலை போய் கொண்டிருந்தது .
அம்மா ஸ்வாதி …அப்படியே பட்டாசு , ஜவுளி எல்லாம் வித்தா …மொத்தமா நம்ம ஹோட்டலில் வாங்கிட்டு போயிடுவாங்க இல்ல …?பாலாஜி கிண்டல் செய்தான் .
பிரபா அவள் வியாபார யுத்தியை கண்டு கர்வம் கொண்டான் .
ஹோட்டல் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸாக கொடுத்து பட்டாசு பெட்டி கூடவே ஒரு கிலோ இனிப்பு , காரம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்தினான் பிரபா .
“————-“
ஹோட்டலில் கஸ்டமர்கள் உணவருந்தும் இடத்தை பார்வையிட வந்த ஸ்வாதியை கண்டவன் …
அவளையே இமைக்காமல் கண்டு கொண்டிருந்தான் .
“ஹே … நீ …ஸ்வாதி “
அவன் முகம் கண்டதும் வியர்க்க தொடங்க …
அங்கிருந்து ஓடி போய் அலுவலக அறையில் நுழைந்து கொண்டாள் ஸ்வாதி .
இதை எதேச்சையாக CCTV யில் பார்த்து கொண்டிருந்த பிரபா …கோபத்துடன் எழுந்தான் .
நாற்காலியில் சரிந்து …தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்தாள் .
அப்போதும் அவள் பதட்டம் குறையவில்லை .
யார் முகத்தை இனி வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவன் முகத்தை காண வேண்டிய நிலையா ? அவள் விழிநீர் உருண்டு திரண்டு வழிந்தோடியது .
மொபைல் அழைத்தது
அவள் தம்பி விவேக் தான் அழைத்தான் .
அம்மா அக்கவுண்டில் நீ போட்ட முப்பதாயிரம் எடுத்துட்டோம் . புது டிரஸ் எல்லாம் வாங்கிட்டோம் .
அக்கா நீ தீபாவளிக்கு வருவ தானே ? அம்மா புலம்பிட்டு இருக்காங்க .
நான் வந்து என்னடா பண்ண போறேன் ? அந்த ஊரே எனக்கு வேண்டாம் . அவள் குரல் கரகரத்தது .
அம்மாகிட்ட பேசறியா ?இல்லை வேண்டாம் ..நான் வச்சிடறேன் .
அவள் தாய் வசந்தியிடம் பேசி ஏழு ஆண்டுகள் ஆகிறது .
அவள் செய்தது மன்னிக்க முடியாத தவறு தான் . அதற்காக பெற்ற தாய் பேசிய வார்த்தைகள்… அவளை என்றோ கொன்றுவிட்டதே …!
——–தொடரும் ——
error: Content is protected !!