Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே ஏனடி நுழைந்தாய்?

என்னுள்ளே💞8

அத்தியாயம் _8

நெடு நேரம் வெளியில் வராமல் அறைக்குள்ளே இருந்தாள் .

அவன் அங்கு இருப்பானோ …?
மெல்ல தலையை நீட்டி வெளியே பார்த்தாள் .

ஸ்வாதி கண்ணு உன்னை ஒரு தம்பி கேட்டுச்சு … உங்க ஊர் பக்கம் தான்னு சொன்னுச்சு . ஸ்வீப்பிங் வேலை செய்யும் பாட்டி சொன்னார் .



Advertisement

ஸ்வாதிக்கு உள்ளுக்குள் திகில் பிடித்தது .

“————— “

இரவு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவளுக்கு  நினைவுகள் எங்கெங்கோ சென்றது . நினைவின் சுழலில் சிக்கியவளுக்கு மூச்சு திணறியது . எழுந்து தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள் .

Advertisement

பிரபாவும் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தான் .

Advertisement

யார் அவன் ? அவனை பார்த்து ஏன் ஸ்வாதி அஞ்சி ஓடினாள் ? ஏதோ ஒன்று அவள் கடந்த கால வாழ்வின் இருண்ட பக்கமாக இருக்கக் கூடும் !

அவன் இனி ஒரு முறை  ஸ்வாதியை பார்க்க வந்தால் …நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது .

பிரபா பல நாள் உறக்கத்தை தொலைத்திருக்கிறான் . அந்த வலி, வேதனை எல்லாம் தாண்டிய வலி இன்று அவனுக்கு …

Advertisement

அவனால் ஸ்வாதியை தவறாக எண்ண முடியவில்லை

அவன் அறிந்த ஸ்வாதி நல்லபெண் , திறமைசாலி , பொறுமைசாலி ….

என்ன செய்வது என்று புரியாமல் சோர்ந்து போனான் .

“———–“

” நாளை தீபாவளி ”
காலையிலேயே  ஸ்வாதியின் மொபைல் கூவியது . அவள் தம்பி விவேக் தான் .

அக்கா கிளம்பிட்டியா ? அம்மா உனக்கு பிடித்த பலகாரம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க , தீபாவளி சீட்டில் பட்டாசு , ஸ்வீட் எல்லாம் வாங்கியாச்சு . உனக்கு அம்மா அரை பவுன் கம்மல் , கொலுசு எல்லாம் வாங்கி இருக்காங்க . அவன் ஆர்வமாய் சொல்லி கொண்டே போனான் .

அப்படியா .. என்றாள்… ஏனோ தானோ மனநிலையில் …!

நான் வருவது கஷ்டம் விக்கி …
எனக்கு இங்கே வேலை அதிகம் . என்னை எதிர்பார்க்க வேண்டாம் என்றாள் .

பதினெட்டு வயதில் சென்னைக்கு வந்தாள் ..இப்போது அவளுக்கு இருபத்து நான்கு வயது .

இந்த ஆறு ஆண்டு காலத்தில் நான்கு முறை தான் ஊருக்கு போய் இருக்கிறாள் . போனாலும் தங்க மாட்டாள் .

நினைக்கவே இதயத்தின் ஓரம் வலித்தது . வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் .

ஹாஸ்டலில் பெரும்பாலான பெண்கள் பெட்டியை கட்டி கொண்டு கிளம்பி விட்டனர் .

குஜராத்தி பெண் சோனம் IT கம்பெனியில் வேலை பார்க்கிறாள் .  கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்டினா …அவளும் IT கம்பெனி தான் .

எண்பது பெண்கள் தங்கி இருக்கும் அந்த விடுதியில் ஸ்வாதியோடு மற்ற இரு பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் .

ஸ்வாதியிடம் மற்ற இருவரும் தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டார்கள் .

இல்லை ….லீவ் கிடைக்கலைப்பா என்று சிரித்தபடி சொல்லி விட்டு
போனாள் .

ஸ்வாதி இன்றும் ஹோட்டலுக்கு கிளம்பினாள் .சென்னை எங்கும் போக்குவரத்து நெரிசல் …அனைத்து கடைகளும் மனித தலைகளால் நிரம்பி வழிந்தது . மாநகர பேருந்துகள்  பிதுங்கி தள்ளாடியது .

பேருந்தை எதிர்பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று ஓலாவிற்கு அழைத்தாள் .

வடபழனியில் இருந்து கூடுவாஞ்சேரி வந்து சேர மூன்றரை மணி நேரம் ஆனது .

இந்த வார கணக்கு  வழக்குகளை பார்த்து கொண்டிருந்தாள் .

ஊழியர்களிடம் புன்னகை முகமாய் ஏதேதோ பேசி கொண்டே வேலையில் மூழ்கினாள் .

இவள் ஏன் ஊருக்கு போகவில்லை ?

பிரபா யோசனையுடன் நாற்காலியில் சாய்ந்தான் .

மதிய உணவு முடித்து சற்று கண்ணயர்ந்தாள் ஸ்வாதி .

இரவு உறங்காதது …கண் சிவந்து எரிய தொடங்கியது .
தலைவலி பிளக்கவே ..
.மேஜையில் தலை சாய்த்தவள் உறங்கி போனாள் .

ஸ்வாதி ஓனர் ஸார் வந்திருக்கார் ! ஸ்வீட் ஸ்டால் கேஷியர் சுகுணா சொல்லி விட்டு போனாள் .

அவசரமாய் எழுந்து முகம் கழுவி கொண்டு வெளியில் வந்தாள் ஸ்வாதி .

குட் ஈவ்னிங் சார் என்றாள் …அவன் முகம் பாராது .

அவனோ சிவந்து சோர்ந்திருந்த அவள் விழிகளையே ஆராய்ந்தான் .

அவன் விழிகளும் அப்படி தான் இருந்தது .

தீபாவளிக்கு விற்பனை செய்த “கிராமத்து பலகாரம் ” சேல்ஸ்
அன் பிராபிட் அவனை மயக்கம் போட வைத்தது .

எட்டு நாட்களில் பதினெட்டு லட்சம் சேல்ஸ் ….இது சென்னையின் பிரபலமான ஸ்வீட் ஸ்டால்களின் மாத விற்பனையை விட அதிகம் .

மூலப் பொருட்கள் கொள்முதல் , எரிபொருள் , ஆள் கூலி அனைத்தும் போக நான்கு லட்சம் லாபம் .

ஸ்வாதி எனக்கு வார்த்தைகளே கிடைக்கல உன்னை பாராட்ட … பிரபா குதூகலித்தான் .

அமைதியாய் ஒரு மோனாலிசா புன்னகை பூத்தாள் .

ஸ்வாதி நீ ஊருக்கு போகலையா ? ஆச்சர்யமாய் கேட்டான்  .

வயதில் சிறியவளாக இருந்தாலும் நீங்க என்று மரியாதையோடு அழைத்தவன் … சமீபமாக நீ என்று ஒருமைக்கு தாவி விட்டிருந்தான் .

ஏதோ சிந்தனையில் இருந்தவள் …ஸ்வாதி என்ன பதிலை காணோம் என்ற அவன்குரலில் ..திடுக்கிட்டாள்.

ஸாரி ….என்ன கேட்டீங்க ?

ம்ம்ம் ஊருக்கு போகலையான்னு கேட்டேன் ?

ஊருக்கு …ஊருக்கு …ம்ம்ம் ..
போகணும் ….சமாளித்தாள் .

இங்கே உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே …? எதேச்சையாய் கேட்பது போல் கேட்டான் .

அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸார் ….உடனடியாய் மறுத்தாள் .

நிறைய ஹோட்டலில் உன்னை கூப்பிடறாங்களாமே ?
நல்ல சேலரி தரேன்னு சொன்னாங்களாம் …?

அப்படிலாம் இல்லை ஸார் …அவள் எச்சில் விழுங்கினாள்

உன்னை எங்கேயும் அனுப்புகிற ஐடியா எனக்கு இல்லை . என்னை விட்டு நீ எங்கும் போக முடியாது .

மிக ..மிக …பொறுமையாக ஆணித்தரமாக கூறினான் .

சரேலென்று தலை உயர்த்தினாள் . அவளையே பார்த்து கொண்டு இருக்கும் அவன் விழிகள் அவளை துளைத்தது .

நேர் கொண்டு அவளை பார்த்து அழகாய் சிரித்தான் .

அவளுக்கு பட படப்பு  கூடியது .
விழியை தாழ்த்தி கொண்டாள் .

ஸ்வாதி எனக்கு சூடா ஜிஞ்சர் டீ வேணும் . நைட் எல்லாம் தூக்கம் இல்லை . டயர்டா இருக்கு …தலை வலிக்குது.

அவள் எழுந்து போய் விட்டாள் .  பிரபாவிற்கு இதழ்கோடியில் சிறு புன்னகை வந்து போனது .

பரவாயில்லையே  பிரபா ..நீ இப்படி எல்லாம் கூட பேசற …? தன்னை தானே மெச்சி பாராட்டிக் கொண்டான் .

சூடான கீரை வடையுடன் ஜிஞ்சர் டீ கொண்டு வந்தாள் .

வா ஸ்வாதி …நீயும் சாப்பிடு என்றான் .

நோ தாங்க்ஸ் ….நான் ஆயில் ஐட்டம் அதிகம் சாப்பிடறது இல்லை என்றாள் .

ம்கும் …குட்….கீப் இட் அப் என்று உதடு நீங்காமல் ஒரு சிரிப்பை உதிர்த்தான் .

ஸ்வாதி அம்மாக்கு கருப்பட்டி ஜிலேபி ரொம்ப பிடிச்சிருக்காம் …கருப்பட்டி திரட்டு பாலும் அருமையா இருக்காம் . உன்னை ரொம்ப பாராட்டினாங்க .

சேல்ஸ் செக்ஷன் வடிவேலை அழைத்து ஒருகிலோ ஜிலேபியும் , அரை கிலோ திரட்டு பாலும் , கை முறுக்கு , நெய் உருண்டை பார்சல் செய்ய சொன்னாள்  .

ஸார் போதுமா ? என்றாள் .

போதும் …போதும் .. இதுவே அதிகம் என்றான் .

ஸ்வாதி நீயும் ஸ்வீட்ஸ் எடுத்துட்டு போ என்றான் .

இரவு ஹோட்டலை நேரமாய் மூடி விடும் படி கூறினான் .

ஸ்வாதி அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறினாள் .

பிரபாவும் அனைவருக்கும் வாழ்த்து கூறினான் .

ஸ்வாதி வா உன்னை டிராப் பண்ணிடறேன் என்றான் .

இல்லை ஸார் ..நீங்க கிளம்புங்க ….நான் ஓலா புக் பண்ணிக்கிறேன் .

ஏன் என்னோட வர பயமா ? நான் உன்னை கிட்நாப் பண்ணிடுவேனா ..? புருவத்தை மேலே தூக்கி சிரித்தான் .

இல்லை …நீங்க போங்க …நான் ..
இதுவரை இப்படி அவன் பேசியது இல்லயே… அவன் முகம் பார்த்து அகத்தை படிக்க முனைந்தாள்.

ஒன்னும் பேச வேண்டாம் …கிளம்பு என்றான் சற்று கண்டிப்புடன் .

கார் கிளம்பியது . சற்று நேரம் அமைதியாகவே சென்றது .

ஸ்வாதி …உன்னை அம்மாக்கு ரொம்ப பிடிச்சு போச்சு . எனக்கும் தான் என்றது  அவன் உள் மனது .

ம்ம்ம் …என்றாள் ….எந்த வித முக பாவமும் காட்டாமல் .

ஹோட்டல் பிசினஸ் பற்றி …அவள் வித்தியாசமான அனுகுமுறை பற்றி பேசி கொண்டே வந்தான் .

தான் ஒரு பிளான் வைத்திருப்பதாகவும் தீபாவளி கழித்து …அந்த திட்டத்திற்கு தேவையான அனைத்தும் தயார் செய்து விட்டு கூறுவதாகவும்  கண்ணில் ஆர்வம் மின்ன பேசினாள் ஸ்வாதி.

உன்னோட பிளான் எதுவா இருந்தாலும் அது கரெக்டா தான் இருக்கும் என்றான் பிரபா .

இருவரும் கொஞ்சம் இலகுவாக பேசி கொண்டிருந்தனர் .

வடபழனி திவ்யாஸ் பொட்டிக் முன்பாக கார் நின்றது .

ஏன் ஸார் ? புரியாமல் கேட்டாள் .

வா சொல்றேன் …அவன் உள்ளே நுழைந்தான் .

செல்வந்தர்களுக்கான கலெக்ஷன்ஸ் கொண்ட பொட்டிக் அது ….எனவே அதிகம் கூட்டம் இருக்காது .

ஸ்வாதி அம்மாக்கு புடவை எடுக்கணும் என்றான் .

” ஓ என்றாள் … “

நீ செலக்ட் பண்ணு …அதுக்கு தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன் .

என்ன மாதிரி வெரைட்டி ?

அம்மா காட்டன் , சில்க் காட்டன் அது போல தான் உடுத்துவாங்க.

பாகல்புரி சில்க் சாரீஸ் அல்லது டஸர் சில்க் என்று சொல்லக்கூடிய ரகத்தில் .. ஏழாயிரம் ரூபாயில்  மஸ்டர்டு கலர் சாரீ ஒன்று தேர்வு செய்தாள் .

இது ஓகேவா சார் என்றாள் .

ம்ம்ம் …என்று விரலை உயர்த்தி காட்டினான் .

என் தங்கை ஸ்ரீமதிக்கு ஒரு டிஸைனர் சாரீ செலக்ட் பண்ணு !

அவங்களை நான் பார்த்தது இல்லையே …?

எங்கம்மாவை கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருப்பா …அவன் குறும்பாய் சிரித்தான்  .

சில்வர் லைனிங் கொண்ட பிங்க் வண்ண லெஹரியா புடவை ஒன்றை தேர்வு செய்தாள் . வைட் வித் ரெட் காம்பினேஷனில் சந்தேரி சில்க் காட்டன் ஒன்றை தெரிவு செய்தாள் .

ஸார் ரெண்டுமே அழகா
இருக்கு ….ஏதாவது ஒன்னு நீங்க சூஸ் பண்ணிக்கோங்க என்றாள் .

எனக்கு சாரீஸ் பத்தி என்னம்மா தெரியும் ?  நீ உன் மேல இந்த ஸாரியை போட்டு காமி என்றான் .

சேல்ஸ் கேர்ள் புடவையை விரித்து பிளிட்ஸ் எடுத்து அவள் மேல் வைத்து காண்பித்தாள் .

இரண்டுமே வெகு அழகாய் …ரசிக்கும்படி இருந்தது .

ஓகே ரெண்டுமே சூப்பரா இருக்கு . ரெண்டையும் பேக் பண்ணிடுங்க என்றான் .

ஸ்வாதி உனக்கு ஒரு ஸாரி வாங்கிக்கோ என்றான் .

ஸார் ப்ளீஸ் …வேண்டாமே …
அவள் வேகமாய் வெளியேறினாள் .

ஸ்ரீமதி குழந்தை நேத்ராவிற்கு பட்டு பாவாடை சட்டை  வாங்கி கொண்டு வந்தான் .

பக்கத்து கடையில் ஸ்ரீமதி கணவன் விக்னேஷ்க்கு  உடை வாங்கினான் .

நகத்தை கடித்தபடி காருக்கு அருகில் காத்திருந்தாள் .

கணத்த மனதுடன் காரை ஸ்டார்ட் பண்ணினான் . பளிச்சென்று அவனால் காதலை சொல்ல முடியவில்லை . அவனது கடந்த காலத்தை அவள் ஏற்பாளா ? என்ற பயமே அவனை முடக்கி வைத்தது .

ஏன் ஸ்வாதி நான் ஸாரி வாங்கி கொடுத்தா வாங்கிக்க கூடாதா ?

ஸார் …நீங்க ஓனர் .நான் உங்க ஒர்க்கர் . என் வேலைக்கு நீங்க சம்பளம் கொடுக்கறீங்க . எங்களை  அப்ரிஷியேட் பண்ண போனஸ் கொடுக்கறீங்க .
அது தான் என் லிமிட்.

ஏன் ஸ்வாதி உனக்கு  நான் ஸாரி வாங்கி கொடுக்கறது பிடிக்கலை .

ஸார் …பூ , புடவை எல்லாம் யார் வாங்கி கொடுத்தாலும் வாங்கிக்க கூடாது .

இப்போ தான் வாங்கி கொடுக்க கூடாதா ? எப்போவும் வாங்கி கொடுக்க கூடாதா ?

பதில் கூறி அவனை காயப்படுத்த விரும்பாமல்  கொந்தளிக்கும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் .

ஹாஸ்டல் வரவே இறங்கி கொண்டாள் .

ஏக்கத்துடன் காரை கிளப்பி கொண்டு சென்றான் .

“———“

ஹை மாமா வந்தாச்சு ….
நான்கு வயது நேத்ரா ஓடி வந்து பிரபாவின் காலை கட்டி கொண்டது .

ஏய் செல்லகுட்டி எப்போ வந்தீங்க ….? வாரி அணைத்து முத்தமிட்டான் .

மாமா நாங்க ஈவ்னிங் வந்தோம் .

செல்லக்குட்டி சாப்பிட்டாளா ? குழந்தை கன்னத்தை வலிக்காமல் கடித்தான் .

ம்ம்ம் …கல்யாணி பாட்டி சப்பாத்தி, பன்னீர் கிரேவி கொடுத்தாங்க .

ஹாலில் விக்னேஷ் டிவி பார்த்து கொண்டு இருந்தான் .

ஸ்ரீமதியின் கணவன் . EB யில் JE ஆக இருக்கிறான் . நல்ல குணம் கொண்டவன் .

வாங்க விக்னேஷ் ….!
மாப்பிள்ளையின் கரம் பற்றினான் .

கிச்சனில் இருந்து ஸ்ரீமதியும் கல்யாணியும் வந்தனர்.

வாடா ஸ்ரீ …நல்லா இருக்கியா ?

ம்ம்ம் …நல்லா இருக்கேன் அண்ணா …

பிடிப்பில்லாமல் கடமைக்கு வாழும் அண்ணனை தனி மரமாய் காண அவள் உடன் பிறந்த பாசம் கொல்லாமல் கொன்றது .

அப்பா ஸ்தானத்தில் இருந்து அவளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்தவன் .

கண்ணில் முட்டி கொண்டு நின்ற நீரை …உள்ளேயே அணைகட்டி வைத்து கொண்டாள் .

ம்மா …ஸ்ரீக்கு , நேத்ராக்கு , மாப்பிள்ளைக்கு டிரஸ் வாங்கி இருக்கேன் , இதில் ஸ்வீட் இருக்கு ….கல்யாணியின் கையில் பையை கொடுத்து விட்டு…ஒரு பையை எடுத்து கொண்டு தன்னறைக்கு போனான் .

டைனிங் டேபிளில் ஸ்ரீமதி அண்ணனுடன் தொழில் பற்றி பேசிக் கொண்டே ஸ்வாதி பற்றி கேட்டாள் . கேட்டாள் என்பதை விட தோண்டி துருவினாள் .

கல்யாணி மகளிடம் உளறி கொட்டி விட்டார் போலும் …

விலாங்கு மீன் போல் பதில் சொல்வதில் இருந்து நழுவினான் .

என் ஆபிஸ்ல சீனியர் அவர் அண்ணன் பொண்ணுக்கு வரன் தேடறார் .

பொண்ணு காலேஜில் லெக்சரரா இருக்கா …
மொபைலில் இருக்கும் போட்டோவை காட்டினான் விக்னேஷ் .

பிரபா கல்லாய் அமர்ந்திருந்தான்  . அவன் முகம் இருண்டது .

மாப்பிள்ளை …பிரபா பத்தி ?

எல்லாம் சொல்லிட்டேன் அத்தை . அவங்களுக்கு ஓகே தான் .

அனைவரின் பார்வையும் பிரபாவின் மீதே படிந்திருந்தது .

இப்போ இது பத்தி பேசவேண்டாம் …
ப்ளீஸ் சாப்பிடுங்க என்றான் .

கோபப்பட்டு பண்டிகை மூடை கெடுக்க விரும்பாமல் தான் தன்மையாய் பேசினான் .

அவசரமாய் சாப்பிட்டு ஹாலுக்கு போய் விட்டான் .

மாமா  என் டிரஸ் சூப்பரா இருக்கு …நேத்ரா அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்  .

அண்ணா என் ஸாரி கூட சூப்பரா இருக்கு . எனக்கு டிசைனும் கலரும் ரொம்ப பிடிச்சிருக்கு . நீங்களா செலக்ட் பண்ணீங்க ? ஸ்ரீமதி ஆச்சரியமாய் கேட்டாள் .

இல்லை …நான் இல்லை ….இல்லை ..நான் தான் …உளறினான் .

கல்யாணி மகனின் உளறலை உன்னிப்பாய் கவனித்தார் .

“———–“

தீபாவளி  திருநாள் …எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி ….நேத்ராவுடன் பட்டாசு வெடித்து கொண்டிருந்தான் பிரபா .

ஹாஸ்டலில் …சோனா , கிறிஸ்டினாவுடன் ஸ்வீட் சாப்பிட்டு கொண்டிருந்தாள் ஸ்வாதி .

உங்க ஹோட்டல் ஸ்வீட்டா ? சோனா கேட்டாள் .

ம்ம்ம் …நல்லா இருக்கா ?

வெரி டேஸ்டி ஸ்வாதி …’யம்மி” ஜிலேபியின் ஜீரா வழிய சோனா ரசித்து சுவைத்தாள் .

ஸ்வாதியின் மொபைல் ரிங்கானது .

பிரபா தான் லைனில் …

ஹலோ ஸார் …குட்மார்னிங் .
என்ன ஸார் விஷயம் ?

நீ எங்கிருக்க ?

எங்க வீட்ல தான் ?

ஓ …சூப்பர் …எப்போ உங்க வீட்டை ஹாஸ்டலுக்கு ஷிப்ட் பண்ணின ? அவன் கேலியாய் சிரித்தான் .

ஸார் …அவள் விக்கித்து நிற்க …

நான் உங்க ஹாஸ்டல் வாசலில் நிற்கிறேன் .

” ஸார் …! “

” வெளியில் வா …! “

ஸார் . … நான் …அவள் தயங்கினாள் .

” சொன்னதை செய் ! “

——தொடரும் ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!