Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 15.1

அத்தியாயம் 15

தனக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன் என்றான். ஆனால் அவனின் அணைப்பு அத்தனை நாகரீகமாக இருக்க, பொன்மணிதான் பெரும் சங்கடத்திற்குள்ளானாள்.

தனது சம்மதம் இல்லாமல் சின்ன முத்தம் கூட கொடுக்கமாட்டேன் என்று சொன்னது வெறும் வார்த்தை அல்ல என்ற உண்மை பொன்மணியை பாடாய் படுத்தியது.



Advertisement

சில நொடிதான் அணைத்திருந்தான். பின்னே “பசிக்குது” என்றான் பாவம் போல்.

“இன்னும் பத்து நிமிஷத்துல ஃபுட் வந்திடும், கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என்றாள் கெஞ்சலாக.

“என்ன ப்ராஜக்ட் போய்ட்டிருக்கு?” என்றான்.

Advertisement

அவளின் வேலையைப் பற்றி சொன்னதும், தனது வேலையைப் பற்றி சொல்லி, “சின்ன ப்ராஜக்ட்தான், ஆனா அவங்க கொடுத்த டைமிங் ரொம்ப ரொம்ப கம்மி. அதுக்கேத்த செட்டில்மண்ட் கொடுக்குறாங்க. இன்னும் இருபது நாள்ல முடிச்சாகனும். இதை முடிச்சா பெரிய ஆஃபர் கிடைக்கும்” என்றான்.

Advertisement

பின்னே உணவு வர, “ம்… பசி மறக்கத்தான் வேலையைப் பத்தி பேசினேன், சீக்கிரம் பிரிச்சு கொடு” என்றான்.

அவளின் பாதியை முன்பே தனியாக எடுத்து வைத்திருந்தாள். பொன்மணி உண்பதற்குள் அவன் உண்டு முடித்திட, “இன்னும் கொஞ்சம் போடவா?” என்றாள்.

“ம்ஹூம்… வயிறு ஃபுல்லாகிடுச்சு” என்றவன் முகம் திருப்தியை காண்பிக்கவே, நிம்மதியாக உண்டாள் பொன்மணி.

Advertisement

உண்டு முடித்ததும், முன்னே வாங்கிய உணவு, தற்போதைய மீதம் என அனைத்தும் ஒரு கவரில் போட்டு, “அடுப்புல பால் கொட்டிடுச்சில்ல? க்ளீன் பண்ணிட்டு வரேன்” என்று கிச்சன் சென்று சுத்தம் செய்து வந்தாள்.

“போலாமா?”

சற்று நேரம் பேசுவான் என எதிர்பார்த்தவள், டையர்டாக இருக்குமோ என நினைத்து, “போலாம்” என்றாள்.

பொன்மணி வீட்டிற்கு வந்ததும், “நீங்க தங்கியிருக்க லொக்கேசன் அனுப்புங்க, காலைலை வந்துடறேன்” என்றாள்.

திருனேஷ்வரன் மறுப்பாக தலையசைக்க, “இல்லைனா நீங்களே வந்து கூட்டிட்டு போறிங்களா? நான் ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகிடறேன்”

“நான் தங்கியிருக்க இடத்துல கொஞ்சம் பிரச்சனை, அதனாலதான் உன்னோட இருக்க கேட்டேன், உன்னை அங்க அழைச்சிட்டு போக பிடிக்காமத்தான் தனியா வீடு பார்த்தேன்”

உண்மையாகவே பிரச்சனை போல, தன்னோடு இருக்க விருப்பப்பட்டு கேட்கிறான் என அன்று எண்ணியதை நினைத்து தற்போது வருந்தியவள், “அப்போ லேப் எடுத்துட்டு வந்திடுங்க, இங்கயே ஒர்க் பார்ப்பிங்களாம், நான்வெஜ் சமைக்கிறேன்” என்றாள்.

சரியென்பதாய் தலையசைத்து சென்றான்.

அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்த தென்றல் மெல்ல எட்டிப்பார்த்தாள் பொன்மணிக்கு பின்னே.

“அவர் போய்ட்டார்” என்று உள்ளே வந்தவளிடம் “திருனேஷ் சார்தான் உன் ஹஸ்பண்ட்னு ஏன் சொல்லல பொன்மணி? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள? ஏன் தனியா இருக்கிங்க?” என படபடக்க, “எங்க கல்யாணம் பத்தி கேட்காத தென்றல், ப்ளீஸ்” என்றாள்.

தென்றல் முகமும், ஸ்வாதி முகமும் வாடிவிட, “எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். ஆனாலும் அவரோட வாழமுடியாம தவிச்சிட்டிருக்கேன், தப்பு என்மேலதான். டைம் வரும்போது சொல்றேன்” என்றாள்.

“உங்களுக்குள்ள பிரச்சனை சரியாகி சந்தோசமா வாழ நான் ப்ரே பண்ணிக்கிறேன்” என்றாள் தென்றல்.

மகிழ்வோடு சிரித்தவள், “நானும் ப்ரே பண்ணிக்கிறேன், இப்போ தூங்கலாம்” என்று இலகுவான உடைக்கு மாறி வெகு நாள்களுக்கு பிறகு நிம்மதியோடு கண்மூடினாள் பொன்மணி.

இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. பொன்மணி ஒருத்திக்கு அதிகம் என்றபோதும், வேலை சென்னையில் என்றதும்பாதுகாப்பு கருதி இவ்வீட்டினை பார்த்து வைத்தார் அசோகன்.

தனியறையில் உறங்கினால் மூவருக்கும் இடம் போதாதென தென்றல் ஸ்வாதி வந்த பின்னே ஹாலில்தான் உறங்குவார்கள் மூவரும்.

காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்திருந்தது பொன்மணிக்கு. எழுந்து அறைக்கு சென்று குளித்து வந்தவள், திருனேஷ்வரன் வந்தால் தங்குவதற்கு தனது அறை சரியாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டு, சிலவற்றை ஒழுங்குபடுத்தி நேரம் பார்க்க, ஆறு மணியாகியிருந்தது.

கறி இந்த நேரத்தில் கிடைக்குமா என்று தெரியாததால், இன்னும் சற்று நேரம் கழித்து செல்லலாம், அதற்கு முன்னே தேவையானதை தயார் செய்யலாம் என்று வெங்காயத்தை எடுக்கலானாள்.

அரைமணி நேரம்வரை வேலை செய்தவள், கடைக்கு கிளம்பினாள். பிறகுதான் தந்தை இரவு போன் செய்ததும், இவரோடு இருக்கிறேன் என்றதும் அப்புறம் பேசுறேன் என்று வைத்ததும் நினைவு வர, எதாவது முக்கிய விசயமாக இருக்குமோ என்று தந்தைக்கு அழைப்பு விடுத்தபடி நடக்கலானாள்.

“பொன்மணி” என்று அஞ்சுகத்தின் குரல் கமரலாய் ஒலிக்க, “என்னாச்சும்மா?” என்றாள் பதட்டமாக.

“கலை நேத்து கல்யாணம் செய்துக்கிட்டா”

எதிர்பார்த்ததுதான் ஆகையால், “உங்க பர்மிஷன் இல்லாம கல்யாணம் செய்தது தப்புதான்ம்மா, ஆனா அவ விருப்பம் நிறைவேறிடுச்சுனு சந்தோசப்பட்டுக்கலாமே, நம்ம கலை இல்லையா? அவளை ப்ளஸ் பண்ணுங்கம்மா” என்றாள்.

“பெத்த பிள்ளையாச்சே, வாழ்த்தலைனாலும் சபிக்க முடியுமா?” என்றவர், “உன் மாமியார்தான் அதிகமா பேசிட்டாங்க” எனும்போதே அழுகை வந்தது அஞ்சுகத்திற்கு.

“நம்ம வீட்டுக்கு வந்து பேசினாங்களா?”

“இல்ல பொன்மணி, அவங்க வாசல்ல நின்னுட்டு திட்டிட்டிருந்தாங்களாம், அப்பாவோட ஃபிரண்டு சொன்னார்”

“அப்பா எங்கம்மா?” என்றாள்.

“நைட்டெல்லாம் தூங்காம விடிகாலைலதான் தூங்கினார், அதான் எழுப்பல”

“அப்பாவை ரொம்ப வருத்திக்க வேணாம்னு சொல்லுங்கம்மா, நீங்களும் ஸ்ட்ராங்கா இருங்க, கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாகும்”

“ரொம்ப வேதனையா இருக்கு பொன்மணி, ஒருத்தி பொய் சொல்லி எங்க குடும்ப நிம்மதியை கெடுத்ததோட, என் பையனையே கல்யாணமும் செய்துகிட்டா.

இன்னொருத்தி ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கிட்டா. இரண்டு கல்யாணம் இப்படி நடந்துருக்கே… நல்ல ரத்தம் ஓடறவங்களா இருந்தா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன் பண்ண வேண்டியதுதான?

எப்படி பண்ணுவாங்க? இப்படி வாய்ப்பை விட்டுட்டா இரண்டு பிள்ளைகளையும் கரையேத்த முடியாதுனு தெரிஞ்சிருக்கும். அதான்… முறையில்லாத கல்யாணம்னாலும் கண்டும் காணாம விட்டுட்டாங்க.

என் மகன் தாலி கட்ட வந்தா இவ விலகி போகவேண்டியதுதான? அதுவுமில்லைன்னா அவ அப்பாம்மா தடுத்துருக்கலாமே, சின்ன எதிர்ப்பும் காட்டாம நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்?

பொண்ணை பெத்தவங்க மறுத்திருந்தா என் பையன் வற்புறுத்தியிருக்கமாட்டான். சரியான கைகார குடும்பம். ஊரார் முன்னாடி அமுக்கமா இருந்து காரியத்தை சாதிச்சுகிட்டாங்கனு ஒரு மணி நேரத்துக்கு மேல திட்டிட்டிருந்தாங்களாம்” என்றார் பெரும் வேதனையோடு.

தன்னை திட்டியிருந்தால் பரவாயில்லை, பெற்றோரை திட்டியிருக்கிறார்கள், முக்கியமாக அப்பாவும் அம்மாவும் சேர்ந்தே பிள்ளைகளை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்றபடியான பேச்சு பொன்மணியை பெரிதாய் பாதிக்க, தன்போல் கண்ணீர் பெருக்கெடுத்தது.

தன்னை சரி செய்து, “அஞ்சு வருசம் முன்ன நான் சொன்ன பொய்க்கு கிடைச்ச தண்டனைனு நினைச்சுக்கலாம், என்னவோ கத்திட்டுப் போறாங்க. இதையெல்லாம் நினைச்சு உங்களை வருத்திக்காதிங்க, அப்பாவை நல்லா பார்த்துக்கோங்க” என்றாள்.

“எங்களால தாங்க முடியல பொன்மணி, என் பிள்ளைகளை நாங்களே கூட்டிக்கொடுப்போமா?”

“ம்மா” என இடைமறித்தவள், “என் புருஷனுக்காக அவங்க பேச்சை பெருசா எடுக்காதிங்க, நீங்க எப்படினு எனக்கும் கலைக்கும் தெரிஞ்சா போதும்” என்றாள் மன்றாடலாக.

“தம்பி பக்கத்துல இருக்காரா?”

திருனேஷ்வரன் இருக்கிறான் என்றால்தான் இணைப்பை துண்டிப்பார் என்பதால், “ம் தூங்கிட்டிருக்கார்” என்றாள்.

“சரி சரி… இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லாத, நான் வச்சிடறேன்”

“அப்பா எழுந்ததும் போன் செய்ய சொல்லும்மா” என்று இணைப்பை துண்டித்தாள் வேதனையோடு.

“என்னம்மா வேணும்? எவ்வளோ வேணும்?” என கடைகாரார் கேட்க, பிறகுதான் பேசிக்கொண்டே கடைக்கு வந்துவிட்டோம் என்று புரிந்தது.

திருனேஷ்வரனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது ஆகையால், மட்டன் சிக்கன் இரண்டுமே எடுக்க முடிவெடுத்து, “அரைகிலோ கறி கொடுங்கண்ணா” என்றாள்.

ஆட்டிறைச்சி வாங்கியவள், பக்கத்து கடைக்கு சென்று நாட்டுக்கோழி இறைச்சியும் வாங்கிக்கொண்டு, பெற்றோர் இருவரும் எத்தனை வேதனையில் இருப்பார்கள் என்று நினைத்தபடி வீட்டிற்கு கிளம்பினாள்.

கதவை திறந்ததும் “பொன்மணி, என்ன இந்நேரத்துக்கே எழுந்துட்ட? சார் கூட சமாதானம் ஆகவும் இன்னைக்கு சன்டேன்றதை மறந்துட்டியா?” என்ற கிண்டலோடு வரவேற்றாள் ஸ்வாதி.

பிறகுதான் கையிலுள்ள பையை பார்த்தவள், “ஓ… விசயம் அப்படி போகுதா?” என்றாள்.

சின்னதாய் சிரித்தவள், “ம் அப்படித்தான் போகுது. அதுக்கு என்னங்குற?” என்றாள்.

“சார் இங்க வரப்போறாரா?” என்று தென்றல் கேட்க,

“அச்சோ… நாம வேற இருக்கோமே, இன்னைக்கு சன்டே வேற. இல்லைனா ஆஃபீஸ்க்காவது கிளம்பியிருக்கலாம். இந்த சென்னையில தனியா எங்க போக?” என கவலையானாள் ஸ்வாதி.

திருனேஷ்வரனிடமிருந்து அழைப்பு வர, ஏற்றதும், “அங்க ஸ்வாதி தென்றல் இருப்பாங்க, ஏதும் சமைக்க வேணாம், எங்கையாவது வெளில போலாம், கிளம்பி ரெடியா இரு” என்றான்.

“அவங்க இருந்துட்டு போறாங்க, நான் சமைச்சு எல்லாம் பேக் பண்ணிடறேன், நீங்க வந்து என்னை கூட்டிட்டு போங்க, நம்ம வீட்டுக்கு” என்றாள்.

“ஹே பொன்மணி” என்றவனுக்கு பேரின்பமாகிட, “வேணாம்டீ, எதோ நேத்து கெட்ட பையனா இருந்தேன், எல்லா நேரமும் அப்படியே இருக்கமாட்டேன், நல்லவனாகிட்டேன்னா உனக்குத்தான் கஷ்டம்” என்றான் உற்சாகமாக.

“மாத்தி சொல்றிங்க, நேத்து நல்ல பையனா இருந்திங்க”

“நான் சரியாத்தான் சொன்னேன், பொண்டாட்டியை தொடாம இருக்கவன் நல்லவனா? அதுக்கா கல்யாணம் செய்துக்கிறது?” என்றான் சிரிப்போடு.

“நீங்க எந்த பையனாவோ இருங்க, ஆனா இன்னைக்கு வீட்டு சமையல்தான். இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் ரெடியாகிடும், சீக்கிரம் வாங்க” என்று இணைப்பை துண்டித்தாள்.

“ஓஹோ…” என்று தென்றல் கூச்சலிட, “எங்களுக்கும் கொஞ்சம் கறிசோறு கிடைக்குமா?” என்றாள் ஸ்வாதி.

“பார்க்கலாம் பார்க்கலாம்” என்று சமையலறைக்கு சென்றாள் புன்னகையோடு.

புன்னகைத்த போதும் பொன்மணியின் முகம் அழுதிருப்பதையும் உணர்த்த, “உன் சிரிப்பு நிஜம்தான். அதோட அழுதிருப்ப போல பொன்மணி” என்று கவலையோடு விசாரித்தாள் தென்றல்.

“ம்… அவரோட அம்மாக்கு எங்க கல்யாணம் பிடிக்கல, அதை தப்புனு சொல்லமாட்டேன், அவங்க கோபம் நியாயமானது. எல்லாம் சரியாகும்னு நம்பறேன், ஆனாலும் அப்பப்போ மனசு உடைஞ்சு போய்டுது. இப்போ இவர்கிட்ட பேசினதும் ஓகே ஆகிட்டேன்” என்று சமைக்க ஆரம்பித்தாள்.

“சார் அழகுதான், திறமையானவர்தான், அதுக்காக உன்னை குறை சொல்ல என்னயிருக்கு, சாருக்கு சரியான மேட்ச் நீதான் தெரியுமா?” என்றாள்.

“அப்படியா?” என்று சந்தோசித்தவள், தான் திருனேஷ்வரனுக்கு இழைத்த துரோகத்தையும், திருமணம் நடந்த விதத்தையும் விளக்கி, “இப்போ சொல்லு… அவங்க கோபம் நியாயம்தானே?” என்றாள்.

சார் ஜெயில்ல இருந்தாரா? அதுவும் அஞ்சு வருசம்… எல்லாத்தையும் மறந்து அனைத்திற்கும் காரணமானவளையே எப்படி மணந்தார் என்று வியந்த தென்றல் “நியாயம்தான்… ஆனா சாரை நீ மறுத்ததான? அவங்க சாரைதான கோவிக்கனும்?” என்று தோழிக்காக பேசினாள்.

“என்னை பேசினாலும் அவருக்கு வலிக்கும்டீ, ரெண்டும் ஒன்னுதான்” என்று இலகுவாக சொல்லி “என்னை சமைக்க விடு,” என்றாள்.

*** *** *** *** ***  ****

இங்கே திருனேஷ்வரனுக்கு நண்பனிடமிருந்து அழைப்பு வர, ஏற்றவன், “என்னடா காலைலயே போன் செய்திக்க? என் அம்மா எதாவது கலாட்டா பண்ணிவிட்டாங்களா?” என்றான்.

“எப்படிடா?”

“ம்… போன வாரமே பொன்மணி வீட்டுக்கு சண்டைக்கு போயிருக்காங்க, இப்போ நீ பண்ற, என்கிட்ட காட்ட முடியாத கோபத்தை அவங்ககிட்ட காட்டுறாங்க. சரி என்ன விசயம் சொல்லு”

நண்பன் நடந்ததை விளக்க, பெரும் வேதனைக்கு உள்ளானான் திருனேஷ்வரன்.

“சரிடா, நான் பார்த்துக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தவனுக்கு பொன்மணியின் நினைவுதான்.

நேற்று இவ்விசயம் சொல்லத்தான் அவளின் தந்தை அழைத்திருப்பார் போல, நான் உடன் இருக்கிறேன் என்றதும் பேசவில்லை, நேற்றிரவோ, அல்லது இன்று காலையோ நிச்சயம் அவளுக்கு விசயம் தெரிந்திருக்கும்.

இப்படி சூழலில் அவளுக்கு சிரமம் வேண்டாம் என பொன்மணிக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்றதும் “அதுக்குள்ள ரெடியாகிட்டிங்களா?” என்றாள் ஆச்சர்ய பாவனையோடு.

“இல்ல, என்ன பண்ணிட்டிருக்க?”

“சமைச்சிட்டிருக்கேன், இன்னும் ஒன் ஹார்ல ரெடியாகிடுவேன்”

இவளுக்கு விசயம் தெரியுமா? தெரியாதா? என்று திருனேஷ்வரனுக்கே குழப்பமாகிட, “வீட்டு சாப்பாடுதான் சாப்பிட்டாகனுமா?” என்றான்.

“ஆமாம்”

“ஆனா எனக்கு உன்னோட வெளில போகனும்”

“போலாம் போலாம். அதுக்கும்தான் ப்ளான் பண்ணியிருக்கேன், ரெடியாகி வாங்க, சாப்பிட்டு போலாம்”

“ம்ச்” என்று சலித்தவன், “சரி வரேன், ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத, சிம்பிளா எதாவது செய், போதும்” என்று இணைப்பை துண்டித்து குளியலறை சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!