Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 20

அத்தியாயம் 20

“அப்புறம் சொல்லு சின்ன பாப்பா, எப்படி போகுது காலேஜ்?” என்றான் வில்வா வீடியோ காலில் அருந்ததியிடம்.



Advertisement

“ஏதோ போகுது, அதை விடுங்க. டெல்லி எப்படி இருக்கு? உங்க வேலை எல்லாம் எப்படி இருக்கு?”

“எல்லாம் சூப்பரா தான் இருக்கு. எப்பவும் புஃப்னு உப்புன பூரி மாதிரி இருக்குற எங்க சின்ன பாப்பா மூஞ்சி ஏன் இன்னிக்கு டொசுக்குனு உப்பாம இருக்குற பூரி மாதிரி இருக்கு?”

Advertisement

Advertisement

“டேய் உனக்கு பூரி சாப்பிடணும் போல இருக்குன்னு ஏன்டா பாப்பாவ பூரியோட கம்பேர் பண்ற?” என்று கேட்டுக்கொண்டே வந்து வில்வாவின் அருகில் அமர்ந்தான் பாரி.

இருவருக்கும் தேநீர் கலந்து கொண்டு வந்திருந்தான்.

Advertisement

“நீங்க ரெண்டு பேரும் மட்டும் ஜாலியா இருக்கீங்க அண்ணாஸ்.. என்ன மட்டும் தனியா விட்டுட்டு போய்ட்டிங்க இல்ல” கேக்கும் போதே குரல் கலங்கிவிட்டது.

“அச்சோ பாப்பா, அப்படி இல்லடா.. உனக்கு காலேஜ் இருக்கு இல்ல?”

“போங்க அண்ணாஸ் உங்களுக்கு கருணா அக்கா தான் முக்கியம். அவங்களுக்காக என்னை டீல்ல விட்டுட்டு போய்ட்டிங்க தானே”

“அய்யோ சின்ன பாப்பா, அப்படி எல்லாம் இல்ல.. நீ காலேஜ் முடிச்சதும் எங்க கூடவே உன்னை சேர்த்துப்போம். அதுக்காக தானே உன்னை பிசியோ படிக்கச் சொன்னதே.. நம்ம மூணு பேரும் ஒன்னாவே வேலை செய்யலாம். கொஞ்ச நாள் தான்.. அதுக்கு போய் கண்ணை கசக்கி கிட்டு” என்றான் வில்வா. உண்மையிலே அருந்ததி அழுதாள் இவனுக்கு தாங்காது. இவன் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

“ஏன் திடீர்ன்னு உன் மூட் ஆப் ஆயிருக்கு பாப்பா, என்ன விஷயம்” என்று கேட்டான் பாரி.

“அது ஒன்னும் இல்ல அண்ணாஸ்.. இன்னிக்கு எங்க அண்ணா ரொம்ப திட்டிட்டான்” சிறுமியாக மாறி குற்றப் பத்திரிகை வாசித்தாள் பெண்.

“சும்மா எல்லாம் அவி திட்ட மாட்டேனே?” என்றான் வில்வா.

“அதானே” என்று பின்பாட்டு பாடினான் பாரி.

“இந்த அதானே… அதானே..” இதை  நான் ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணாஸ்.

“விஷயத்தை சொல்லு, எதுக்கு அவி திட்டினான்?”

அருந்ததி எட்டி எட்டி போன் திரையை பார்த்தாள்.

“ஹேய் சின்ன பாப்பா, எட்டி எட்டி பார்த்தா என்ன தெரியும் போன்ல?”

“இல்ல, கருணா அக்கா இருக்காங்களா?” என்றாள் கிசுகிசுப்பாக.

“இல்ல பாப்பா, கருணாம்பிகை வர எட்டு மணி ஆகிடும் இன்னிக்கு, நீ சொல்லு” 

“எக்ஸாம் ரிசல்ட் வந்துச்சு.. ரெண்டு சப்ஜெக்ட்ல பார்டர்ல தான் பாஸ் ஆயிருக்கேன்”

“அதான் பாஸ் ஆயிட்ட இல்ல, அப்புறம் எதுக்கு திட்டுறான்?”

“படிச்சா ப்ர்ஸ்ட் கிளாஸ்லயே பாஸ் ஆகலாம்.. நீ வேணும்னே டைம் வேஸ்ட் பன்றேன்னு ஒரே திட்டு..”

“சரி பாப்பா கவலை படாதே, நாங்க உனக்கு சொல்லி தரோம் இனிமே.. அடுத்த செமெஸ்டர்ல நல்லா படிச்சிடலாம், விடு பாப்பா”

“நிஜமாவா அண்ணாஸ்.. சூப்பர்” என்றாள் குஷியாக.

“இதுக்கு போய் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு.. விடு சின்ன பாப்பா.. பி ஹேப்பி”

“அண்ணாஸ் கருணாக்கா கிட்ட சொல்லிடாதீங்க, அப்புறம் அவங்க வேற திட்டுவாங்க”

“அது எல்லாம் இன்னேரம் உங்க அவி அண்ணா நியூஸ் வாசிச்சிருப்பான்” 

“இந்த ரெண்டு ரூல்ஸ் ராமானுஜமும் சேர்ந்து நம்மள கொடுமை படுத்துறாங்க அண்ணாஸ்” 

“ஹா ஹா ஹா” நண்பர்கள் இருவரும் வெடித்து சிரித்தனர்.

“ஆமா ஆமா, ரெண்டு ரூல்ஸும் சேர்ந்து எங்களுக்கும் ஒரு குழி பறிச்சிருக்கு தெரியுமா பாப்பா” 

“அங்கே போயும் உங்களை விடலயா? என்ன குழி அண்ணாஸ்” 

“எங்க ரெண்டு பேரயும் ஹிந்தி கத்துக்க வைக்க பாக்குறாங்க சின்ன பாப்பா”

“நீங்க ஒத்துகாதீங்க அண்ணாஸ்” 

“அப்படி தான் நாங்களும் முதல்ல நினைச்சோம்.. ஆனா இப்ப மனச மாத்திகிட்டோம்.. ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“இன்னிக்கு நாங்க பாக்ஸிங் கிளாஸ் போறப்போ ரெண்டு பொண்ணுங்க எங்களை பார்த்து ஹிந்தில கிண்டலா ஏதோ  சொன்னாங்க சின்ன பாப்பா, எங்களுக்கு புரியலை”

“பொண்ணுங்களா?”

“ஆமா பாப்பா .. பார்க்க ஆனா பயில்வான் பக்கிரிசாமி மாதிரி இருந்தாங்க தெரியுமா?”

“பயில்வான் பக்கிரிசாமியா? ஹா ஹா ஹா” 

“சினிமால காட்டுற  மாதிரி சும்மா தூசி பறக்கவிட்டு வந்து பைக்கை நிப்பாட்டுனாங்க..”

“ஓ “

“செமயா இருந்துச்சு சின்ன பாப்பா பார்க்கவே”

“ஏன் பாப்பா நீயும் அதே மாதிரி பைக் ஓட்ட கத்துக்கோடா. சும்மா மாஸ்ஸா இருக்கும்”

“நான் எல்லாம் சைக்கிள் ஓட்டுனதே சரித்திரம், இதுல பைக் வேறயா.. போங்க அண்ணாஸ்..”

அடுத்த அரை மணி நேரமும் மூவரும் அரட்டையில் மூழ்கி விட்டனர்.

சரியாக அப்பொழுது வந்தாள் கருணா.

“ஏன் அருந்ததி இப்படி இவனுங்களோடு சேர்ந்து வெட்டியா அரட்டை அடிச்சிட்டிருக்க? என்ன மார்க் வாங்கி இருக்க?” என்று நேராக அருந்தியிடம் பாய்ந்தாள் கருணா.

“———————-”

“சும்மா அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சிக்காத, நாளைல இருந்த என்ன படிச்சிருக்கன்னு எனக்கு டெய்லி அப்டேட் பண்ணனும் சரியா?”

“சரிக்கா”

“நாங்க சொல்லி தர்றோம் கருணாம்பிகை, நீ கவலை படாதே” என்று பாரி கூறவும்,

“நீங்க தானே.. நீங்க மூணு பேரும் சேர்ந்தா என்ன  கிழிப்பீங்கன்னு எனக்கு தெரியும்” என்றாள் நண்பர்களிடம் திரும்பி.

“அடுத்த செமெஸ்டர்ல நல்ல மார்க் வரலைன்னா, கண்டிப்பா உன்னை ஹாஸ்டல்ல சேர்க்க சொல்லிடுவேன் அருந்ததி. எல்லாரும் சேர்ந்து உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க”

“விடுமா…இனி சுதாரிப்பா படிச்சுப்பா, சின்ன பொண்ணு தானே” என்று அங்கே இருந்து வேதாச்சலம் தாத்தா பேத்திக்கு சப்போர்ட்டுக்கு வந்தார்.

“நீங்க என்ன பண்றீங்க தாத்தா.. அவ படிக்கிறாளா இல்லயான்னு பார்க்க வேணாமா? அவினாஷ் ஆபிஸ்ல இருந்து வர நேரமாகுதுனா நீங்க தானே கவனிக்கணும். எப்ப பார்த்தாலும் எங்க தாத்தா கூட சேர்ந்துக்கிட்டு அரட்டை…” என்று தாத்தாவையும் ஒரு பிடி பிடித்தாள்.

“——————————”

“அப்புறம் அவினாஷ் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டாம்னு சொன்னீங்கலாமே?”

“ஆமா.. சொன்னேன்.. இப்ப என்ன அதுக்கு?” 

“இங்க பாருங்க தாத்தா, அத்தை விஷயத்துல மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு எடுக்காதீங்க. உங்க இரண்டு பசங்களும் உங்களை திரும்பி  பார்த்தாங்களா.. வயசானா பக்குவம் வரணுமா வேணாமா.. முதல்ல அவினாஷ் என்ன நினைக்கிறான், அவன் பிளான் என்ன, அதன் சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன, அவன் விருப்பம்  என்ன? எதையாவது கேட்டீங்களா?”

உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டார் தாத்தா.

“பொறுமையா அவினாஷ் கிட்ட உக்கார்ந்து பேசுங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட அபிப்பிராயம் கேளுங்க. அப்புறம் நல்லா யோசிச்சு முடிவு எடுங்க“

“உம்ம்..”

“ஆமா, டெய்லி வாக்கிங் முடிச்சிட்டு மூணு பேரும் சேர்ந்து சமோசா வடைன்னு சாப்பிடறீங்களாமே. எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க உடம்பு சரி ஆச்சு, நீங்க எல்லாம் என்ன சின்ன பசங்களா?”

“உனக்கு யாரு இது எல்லாம் சொல்றாங்க?”

“இருங்க நான் மத்த இரண்டு தாத்தாகிட்டயும் பேசிக்கிறேன். உங்களை நம்பி தானே அவினாஷும் அருந்ததியும் இருக்காங்க.. உங்க ஆரோக்கியம் முக்கியமா இல்லையா? சொன்னா  மூக்குக்கு மேல கோவம் மட்டும் வரும்”

“ஏதோ இரண்டொரு நாள் சாப்பிட்டோம், அவ்வளவு தான்… இனிமே கவனமா இருக்கேன். அடுப்புல நைட் தொட்டுக்க சாம்பார் வச்சேன். நான் போய் பார்க்கிறேன், போனை வைக்கிறேன்” என்று தாத்தா அழைப்பை துண்டித்துவிட்டார்.

கருணா திரும்பி பார்த்தால் நண்பர்கள் இருவரும் அடுப்படிக்குள் புகுந்து விட்டனர்.

“டேய் பாரி, தாத்தா அச்சா கியா.. போன் கட் கியா”

“ஹான்.. அச்சா.. பஹத் அச்சா..”

“நைட் பூரி கியா அச்சா”

“ஹான் பூரி கியா ஆலூ கியா பஹத் அச்சா”

“டேய் சூப்பர்டா.. நமக்கும் ஹிந்தி வருது டா..” என்று இருவரும் ஹை பை கொடுத்துக்கொண்டனர்.

கருணா தலையில் அடித்துக்கொண்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!