Skip to content
Post Views: 1,771
அத்தியாயம் 9
“பார்த்து வா டா.. கண்ணை எங்க வச்சிருக்க?” தம்பியை கூறியபடி வந்து சேர்ந்தாள் தர்ஷினியும் கூடவே நந்தகுமார்.
Advertisement
மனதெல்லாம் நொடியில் கொண்டாட்டமும் சந்தோசமும் நிரம்ப, உயிரில் பூக்கள் பூத்ததை போன்று அத்தனை ஒரு மகிழ்ச்சி ரகுவிற்கு. ஒரு நொடி வெளிப்படுத்தியும் விட்டவன், தர்ஷினியின் அழைப்பில் தான் பூலோகமே வந்து சேர்ந்தான்.
தர்ஷினியைப் பார்த்ததும் ஆராத்யா எழுந்து கொள்ளப் பார்க்க,
Advertisement
Advertisement
“அட இரு மா.. நீ காபியை குடி” என்று மகேஸ்வரி எழுந்து கொள்ள,
“ஆரா! என்ன சர்ப்ரைஸ் காலையிலே?” என்று அவளருகில் அமர்ந்தாள் தர்ஷினி.
Advertisement
“சும்மா தான்..” என்றவள் அருகில் இருந்த டப்பாவை தர்ஷினி கைகளில் கொடுத்து,
“இதுல இடியாப்பமும் தேங்காய்பாலும் இருக்கு.. உங்களுக்கு புடிக்குமா?” என்றாள் ஆர்வமாய் ஆராத்யா.
“புடிக்குமாவா? ஆரா செஞ்சு பிடிக்காம போகுமா?” என்று வாங்கிக் கொண்ட தர்ஷினி,
“சரி வா!” என்று எழுந்து ஆராத்யாவிற்கு கைநீட்டிட, புன்னகையுடன் அவள் கைகளைப் பிடித்து எழுந்து வந்தாள் ஆராத்யாவும்.
“என்ன மாமா நடக்குது?” என்று கேட்ட ரகுவின் குரலில் இருந்த துள்ளலில் நந்தா முகத்திலும் குறும்பாய் புன்னகை.
“நீ பிக்கப் பண்ற மாதிரி இல்லைனு அந்த வேலையை உன் அக்கா எவ்வளவு நேக்கா பண்றா பாரு.. வந்து மூணு நாள் ஆகல.. வீட்டுக்கு வர வச்சுட்டா.. நீயெல்லாம் வாய் பேசலாமா?” என்று நந்தா கூற,
“மாமா! சீரியஸ்லி ஐம் ஸ்பீச்லெஸ்!” என்று கூறி ஒரக் கண்ணால் ஆராத்யாவைப் பார்த்துவிட்டு ரகு நந்தாவோடு டைனிங் டேபிளில் அமர, தர்ஷினியும் ஆராவை அங்கே அழைத்து வந்தாள்.
“என்ன மாமா பண்றா தர்ஷி?” ரகு மூச்சைடைத்துக் கேட்க,
“என்னவோ பண்றா விடேன்! நீ தான் எதுவும் பண்ண மாட்ற! நான் தான் சொன்னேனே.. தர்ஷி பிளான்படியே நடக்கட்டும்!” என்றான் நந்தா.
“அய்யோ தர்ஷ்! நான் சாப்பிட்டேன்.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன் ப்ளீஸ்!” பேசியபடியே ஆராத்யாவை தர்ஷினி சாப்பிடும் இடத்திற்கு அழைத்து வந்திருக்க, பார்த்ததும் அதுவும் அங்கே ரகுவைப் பார்த்ததும் பதறி கூறினாள் ஆரா.
“இங்க பாரு! எனக்கு பசிக்குது.. நாம நின்னு நிதானமா பேசினதே இல்லை இல்ல? இன்னைக்கு சாப்பிட்டுட்டே பேசலாம்.. நீ சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்ல.. எனக்கு கம்பெனி குடு!” என்றாள் தர்ஷினி.
“ம்ம்ஹும்! நீ சாப்பிடாம அவ உன்னை அனுப்பிட மாட்டா.. சும்மா கொஞ்சமா எடுத்துக்கலாம் வா ஆராத்யா!” என்று கல்பனாவும் அழைக்க,
“தர்ஷ்! ப்ளீஸ்!” என்று மெதுவாய் ஆராத்யா கெஞ்சினாள் பார்வையை ரகுவிடம் வைத்து.
மூச்சை நிதானமாய் விட முடியாமல் நேராய் அவளைப் பார்க்கவும் முடியாமல் அவஸ்தையான ரகுவின் உணர்வெல்லாம் அங்கிருக்கும் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
“ஓஹ்! உன் பாஸ்க்காக பாக்குறியா? லேட்டானா திட்டுவானா?” என்ற தர்ஷினி,
“அய்யோ இல்ல இல்ல!” என்று ஆராத்யா கூறிக் கொண்டு இருக்க,
“டேய்! கெஸ்ட் வந்திருக்காங்க.. என்னனு கேட்க மாட்டியா? சாப்பிட கூப்பிடுறியா இல்லையா?” என்றாள் தம்பியிடம்.
ஏற்கனவே தர்ஷினியை ஆராத்யாமுன் கோபம் கொண்டு அதற்கு ஆரா கண்ணீர் வடித்து என நினைக்க, நேராய் தர்ஷினியை முறைக்க கூட முடியவில்லை ரகுவிற்கு.
“ரகு! ஜஸ்ட் காம்டேவ்ன் மேன்!” என்ற நந்தாவின் மெல்லிய குரலில்,
‘அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது?’ என்பதை போல பார்த்த ரகு,
“கம்! சிட்!” என்று மட்டும் ஆராத்யாவைப் பார்த்து கூற, அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வந்து அமர்ந்துவிட்டாள் தர்ஷினியுடன்.
“இந்த ரெண்டு வார்த்தைக்கு இருக்குற மதிப்பு எனக்கு இல்லை இல்ல?” என்று தர்ஷினி பேசியபடி டப்பாவை திறந்து இடியாப்பத்தை எடுத்து தன் தட்டில் வைக்க,
“அட ஐடியாப்பமா? அகி இருந்தா ரெண்டு குடுத்திருக்கலாம்.. அவருக்கு ரொம்ப பிடிக்கும்!” என்ற கல்பனா, பூரியை ஆராத்யாவிற்கு வைக்க,
“இங்க யாருக்கும் இடியாப்பம் வேணுமாப்பா? சோ மச் ஆஃப் ஸ்பெஷல் இடியாப்பம்..” என்றாள் டப்பாவை கையில் வைத்து மேலே தூக்கி தம்பியை வெறுப்பேற்றி தர்ஷினி.
“இவ்வளவு ஏன் டா மா? கொஞ்சமா செஞ்சிருக்கலாம் இல்ல? ஆமா நீ தான் சமையலா எப்பவும்?” என்றார் மகேஸ்வரி பூரிக்கு மசாலா கிழங்கை வைத்து.
“இல்ல ஆண்ட்டி! அம்பிகா ம்மா தான் எப்பவும் செய்வாங்க.. எப்பவாச்சும் தான் நான் சமையல் பக்கம் போறது.. தர்ஷ்க்காக தான் இன்னைக்கு நானே பண்ணினேன்!” என்று கூறி புன்னகைக்க,
“அழகு டி நீ!” என்று கொஞ்சினாள் தர்ஷினி.
“அதுக்காக இவ்வளவா?” என்றாள் கல்பனா.
“ஏன் நீங்க எல்லாம் சாப்பிட மாட்டிங்களா நான் செஞ்சதை?” ஆராத்யா விழி அகற்றி கேட்க,
“ஏன் இல்லாம? தர்ஷினி மீதி வைக்கட்டும்.. எப்படி சாப்பிடுறேன்னு பாரு.. இங்க எங்க நார்க்கு மட்டும் தான் இடியாப்பம் புடிக்காது.. நாங்க எல்லாம் நல்லா சாப்பிடுவோம்!” என்று கல்பனா கூற,
“நார்?” என்று புரியாமல் விழித்தாள் ஆராத்யா.
“கொழுந்தனார் தான் ஷார்ட் ஃபோர்ம்ல நார்..” தர்ஷினி கூறவும், “ஓஹ்!” என்று ரகுவை பார்த்துவிட்டு பூரியை அவள் வாயில் வைக்க,
“ரகு! ஒன்னு வேணா சாப்பிட்டு பாரேன்!” என்றாள் தர்ஷினி ரகுவின் பார்வையை கவனித்து.
“ம்ம்க்கும் சாப்பிட்டுட போறார்.. புடிக்கலைனா வாயில வைப்பாரா?” கல்பனா தவறான நேரத்தில் குரல் கொடுக்க,
“உனக்கு எதிரிங்க எல்லாம் இங்குட்டுகுள்ளயே தான் சுத்தி வர்ராங்க போல ரகு!” என்று நந்தா கூட கலாய்த்தான்.
“எனக்கு ஒன்னு குடு!” என்று வாங்கிய நந்தா,
“ரொம்ப டைம் எடுத்துக்காத ரகு! இப்ப பிரெஸ்டிஜ் முக்கியம் இல்ல.. நீயே வாய்விட்டு கேட்டுடு! ஐடியாப்பம் போனா கிடைக்காது!” என்று வேறு ரகுவிற்கு ரகசியம் சொல்ல,
“ம்ம்ஹும்! வேண்டாம் மாமா!” என்றான் சாப்பிட்டபடியே ரகு.
“சூர்?” நந்தா.
“ம்ம்ம் சூர்!” என்று புன்னகைக்க, அதற்கு அர்த்தம் புரியவில்லை நந்தாவிற்கு.
“அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க டா?” என்றார் மகேஸ்வரி.
ரகு தெரிந்ததாய் மெல்ல திரும்பி தன்னவளைப் பார்க்க, உதடுபிரியா சிறு புன்னகை கீற்றுடன் இல்லை என்று மட்டும் தலையசைத்தவள் புன்னகை வாடாமல் தொடர்ந்திருக்க, மற்றவர்கள் புன்னகை தான் காணாமல் போனது.
மகேஸ்வரிக்கு சட்டென்று பேச்சு வரவில்லை. என்ன சொல்ல? என்று வருத்தமாய் அவர் நிற்க, கல்பனாவும் வருந்தி பார்க்க,
“ஆரா! உனக்கு என்னெல்லாம் சமைக்க தெரியும்? பிரியாணி செய்வியா? சண்டே எனக்கு ஓகே! பிரியாணினா எங்க வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்!” என்று வெகுசாதாரணமாய் இலகுவாய் பேசி ஆராத்யாவையும் பேச வைக்க, தன் மனைவியை மெச்சிக் கொண்டான் நந்தா.
“இன்னைக்கு லேட் ஆகலையா மாப்பிள்ள? ரொம்ப நேரமா சாப்பிடுற மாதிரி இருக்கு? ” நந்தா ரகுவிடம் கேட்க,
“உங்க வைஃப் விட நீங்க தான் மாமா ரொம்ப மோசம்.. கிடைக்குற கேப் எல்லாம் எப்படி ஃபில் பண்றீங்க தெரியுமா?” என்று ரகு சொல்லவும்,
“இல்ல ஆபீஸ்ஸைக் கட்டி காப்பாத்தணுமே அது தான் கேட்டேன்..” என்று நந்தா.
“நீங்க எனக்கு ஹெல்ப் பண்றதா சொன்ன நியாபகம்” என்றான் ரகுவும்.
“அதுக்கு நீ எதாவது பண்ணினா தானே டா நான் ஹெல்ப் பண்ண முடியும்?” என்று நந்தா சொல்லிவிட,
“மாமா!” என்று அழைத்த ரகு நந்தா கூறிய தோரணையில் சத்தமாய் சிரித்துவிட்டான்.
பேசிக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லாம் ரகுவின் சிரிப்பு சத்தத்தில் அவன் பக்கம் திரும்பி இருக்க, ஆராத்யா பார்வையும் அவனிடம்.
விழி விரித்து தலை சாய்த்து ஆச்சர்யமாய் பார்த்த ஆராவின் பார்வையை புன்னகையுடன் எதர்ச்சையாய் கண்டவன் பார்வை ரசனையாய் சில நொடிகள் அவளிடமே இருக்க,
“ம்ம்க்கும்!” என்று தன் குரலை சரி செய்து ரகுவை மீட்கும் நிலை நந்தாவிற்கு.
“என்ன ரோபோ சிரிக்கவெல்லாம் செய்யுது? அப்படினு தானே பாக்குற?” தர்ஷினி கேட்க, ஆமாம் என்று தலையசைத்த ஆராத்யா “இல்ல இல்ல!” என்றாள் அடுத்து வேகமாய்.
“உண்மையை தான் சொல்லணும் ஆராத்யா.. ஏன்னா நார் சிரிச்சா நாங்களே அப்படி தான் பார்ப்போம்.. இல்ல தர்ஷி?” என்றாள் கல்பனா.
“அண்ணி! நீங்களும் இவங்களோட சேர்ந்தாச்சா?” என்று கைகழுவ ரகு எழுந்து கொண்டான்.
‘ச்ச! இப்படியா பார்த்து வைக்குறது? ஆரா உனக்கு அறிவே இல்லை டி!’என்று ரகுவை புதிதாய் பார்த்தது போன்ற தன் பார்வையில் அவனும் இரு நொடி அதிகமாய் பார்த்ததை நினைத்து தனக்கு தானே மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டாள்.
“கிளம்புறேன் மாமா!” என்ற ரகு தர்ஷினி அருகே அமர்ந்திருந்த ஆராத்யாவைப் பார்த்துவிட்டு மணியைப் பார்க்க,
“கிளம்பிட்டேன் சார்!” என எழுந்தாள் வேகமாய் ஆராத்யா.
“ஹே! இரு இரு! இங்க என்ன மிலிட்டரிக்கு ஆளா எடுக்குறாங்க? அவன் பார்த்தா.. உடனே கிளம்பிடணுமா? டேய்! அவ இன்னைக்கு லேட்டா தான் வருவா.. நீ கிளம்பு!” என்றாள் தர்ஷினி.
“க்கா! நான் சும்மா தான் பார்த்தேன்..” என்றான் மெல்லிய மிக மெல்லிய புன்னகை ஒட்டி ரகு.
“இல்ல இல்ல.. தர்ஷ்! பிரியாணி கேட்டீங்க இல்ல? இந்த சண்டே நமக்கு ஃபன் டே.. ஓகே! இப்ப நான் கிளம்புறேன்.. பை பை!” என்றவள் வேகமாய் எழுந்து கைகழுவி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு ரகுவிற்கு முன்பே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
“ரொம்ப நல்ல பொண்ணு இல்ல.. ஆனாலும் கடவுள் இப்படி அவளை தனியா நிக்க விட்ருக்க கூடாது..!” என்று மகேஸ்வரி சொல்லி சமையலறை செல்ல,
“இங்க நம்ம எல்லாரையும் பார்த்து ஆராத்யா அவ பேரண்ட்ஸ்ஸை ரொம்ப தேடுறா போல.. ஆனா ஜாலியா என்ஜோய் பண்ணினா மாதிரி தெரியுது இங்க நம்மளோட..” என்றாள் கல்பனா.
“பேசாம ஆராவை நம்மோட வச்சுக்கலாம் அண்ணி!” என்று தர்ஷினி சொல்ல கேட்டு, கல்பனா புரியாமல் பார்க்க, ரகு சகோதரியை கனிந்து பார்க்க, நந்தா புன்னகைத்து நின்றான்.
வண்டியில் அலுவலகம் வந்து கொண்டிருந்த ஆராத்யாவிற்கு நெஞ்சம் எல்லாம் பஞ்சாகி வானில் பறப்பதை போன்ற ஒரு உணர்வை தர,
நேற்று அலுவலகம் கிளம்பிய மனநிலைக்கு நேர்எதிராய் அத்தனை குதூகலமாய் அவளின் மகிழ்ச்சி விழிகளில் பிரதிபலிக்க அலுவலகம் வந்தடைந்திருந்தாள்.
தன் குடும்பத்துடனே இருந்த மகிழ்ச்சி, நீண்ட நாட்களுக்கு பின்னான நிம்மதி என ஆராத்யா முகத்தோடு அவள் நடையிலும் துள்ளல் எழ, அத்தனை சந்தோசமாய் அலுவலகத்தின் உள்ளே சென்றவள் அங்கே நின்றவனைக் கண்டு உச்சபட்ச அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.
error: Content is protected !!