Skip to content
Post Views: 401
மங்கையின் நிழலாய் வந்தவன்🥰💕
அத்தியாயம் – 5
காலை கிளம்பியவன் நேராக சென்றது தன்னுடைய சிறுவயதிலிருந்தே இன்பத்திலும் துன்பத்திலும் சுற்றி திரிந்த நண்பர்களுடன் இணைந்து நடத்தும் “சிவாஜி சூப்பர் மார்க்கெட் ” என்ற பெரிய கடைக்குதான்.
“இதற்கு முழுக்க முழுக்க முதலீடு விஷ்ணுவுடையது மட்டுமே ஆனால், ஷேரிங் மட்டும் மூன்று பேருக்கு,”
Advertisement
எந்த முட்டாலாவது இப்படி செய்வாங்களா? நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது. ஆனா நம்ப விஷ்ணுக்கு தெரியலையே நட்புக்காக உயிரையே கொடுக்க துணிஞ்சவன் கைக்கு கை மாறும் பணத்தை விட்டுக்கொடுக்க மாட்டானா என்ன?
“ம்ம்ம்…..என்ன நல்லது செஞ்சி என்ன புண்ணியம்?, இம்புட்டு நல்லவனுக்கு இன்னும் ஒரு நல்லது நடக்கலையே என்ற மனவருத்தமே பெற்றோர் இருவருக்கும் “
இவனுக்கு வயது முப்பதி எட்டு ஆகிவிட்டது. உடன் இருக்கும் நண்பர்கள் இருவருக்கும் திருமணமாகி கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் மனைவிகள் வைத்திருக்க, நண்பர்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்கு வருத்தமே, ஊருக்கெல்லாம் நல்லது நினைக்கும் இவனுக்கு ஒரு வரன் அமையவில்லையே என்று.
Advertisement
கடையின் வாசலில் இருந்த கோலத்தை கண்டவன் யோசனையில் அங்கேயே நிற்க, கடையின் உள்ளே இருந்த ரகு இவன் ஏன் வெளியவே நிற்கிறான் என்று பார்க்க வந்தான். பிறகு அவன்மீது கொண்ட அக்கறையின் பேரில் “என்ன மச்சான் இம்புட்டு சீக்கிரம் கெளம்பி வந்துட்ட? “
Advertisement
ஏய், நேத்தே சொல்லிட்டுதானே போனேன் கேரளாவுல இருந்து மசாலா லோடு வரும்ன்னு, உனக்கு மட்டும் பத்து கையாடா இருக்கு? நந்தனும் மாமியார் வீட்ல விசேஷம்னு போய்ட்டான் அதாண்டா ஒத்தையில உனக்கு சிரமம் வேண்டாம்னு வந்துட்டேன் என்றவன் அங்கு இருந்த கோலத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
“இல்ல அதுக்காக கேட்கல தேவா
பயிரெல்லாம் வளந்துருச்சி
அறுவடை பண்ணனும் ஆளுங்களை கூப்பிடணும்னு சொல்லிட்டு இங்க வந்துட்டியே, அங்க யார் பார்ப்பாங்க அதுக்காக கேட்டேன்?”
அதுக்கப்புறம், என்றவன் அவனின் முகத்தை உற்று நோக்க பார்வை வேறு திசையை பார்த்திருக்க, என்ன மச்சான் வாய் மட்டும் தான் என்கிட்ட பேசுது, உன்னோட பார்வையெல்லாம் எங்கயோ இருக்கு எதாவது பிரச்சனையா?
Advertisement
சேச்சே, அதெல்லாம்
ஒண்ணுமில்லை. இதே மாதிரி “ஷேம் டிசைன்” கோலத்தை வேற எங்கயோ பார்த்திருக்கேன். ஆனா எங்கன்னு சட்டுனு நினைவுக்கு வரலைடா
மாப்ள.
ம்……சரிதான் போடா, ஒரு ஊரா போயிருந்தா எங்க பார்த்தோம்னு ஞாபகத்துக்கு வரும். நீதான் தரமான பொருள் வாங்கணும்னு ஒரு திசையும்
விடாமல்ல போய்ட்டுவர மச்சான் எப்படிடா நினைவுக்குவரும்?
ஆமாம் அதுவும் சரிதான் என்றவன், அந்த “நண்டுவா” இப்படி அழகா போட்டிருக்கு என்றான் சிரித்து கொண்டே,
அட போடா, நீ தான் அவளை மெச்சிக்கணும். அவளுக்கு எறும்பு மருந்து போடுன்னு கோடு போட்டுவிட்டா, கோட்டை தவிர மத்த இடமெல்லாம் வீசிட்டு வருவா என்றான் நக்கலாக,
“ப்ச்” அப்படின்னா வேற யாரு?
அதுவாடா மச்சான் என்றவன் தலையை சொரிந்தன்.
என்னடா?
இல்ல மச்சான். புதுசா ஒரு பொண்ணை வேலைக்கு சேத்திருக்கேன்டா என் பொண்டாட்டி சொல்லிட்டா, அதான் முடியாதுன்னு மறுக்க முடியலடா என்றான் ரகு.
“ம்ம்ம்ம்…… தங்கச்சி மேலே அம்புட்டு பயமோ? என்றான் நக்கலானா சிரிப்புடன்”
“டேய், நீயும் கல்யாணம் பண்ணி பாருடா, என்னோட கஷ்டம் உனக்கு அப்ப தெரியும். எத்தனையோ ராத்திரிக்கி பட்டினியா படுத்திருக்கேன் தெரியுமா? என்றான் போலியான அழுகையுடன், “
அதனின் அர்த்தங்களை புரிந்த
தேவா, போடா லூசு பயலே என்றவனை செல்லமாக தட்டிவிட்டு இரண்டிரண்டாக காலினை அகல வைத்து மாடியில் இருக்கும் குடோனுக்கு நடந்தான் வரும் லோடை அடுக்கி வைக்க இடம் காலியாக உள்ளதா? என்று பார்க்க,
ஆனால் அங்கோ நடந்ததோ வேறு. புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் படித்தவள் என்பதனால் ஸ்டாக் எடுக்க குடோனுக்கு அனுப்பியிருந்தான் ரகு. அதுவும் அங்கு வேலையும் சிரமம் இல்லை என்பதனால்.
அங்கே, அவளோ பொருட்கள் அடுக்கி வைத்திருந்த கடைசி ரேக்கில் இருக்கும் பொருட்கள் கைக்கு எட்டாததால் ஏணியின் உதவியோடு மேலே சென்று கணக்கை எடுத்து இறங்கி வர கீழே திரும்ப, அப்போது அங்கே தெரிந்த பயங்கரமான தோற்றதுடன் இருந்த நிழலை பார்த்து,
ஐயோ……………என்ன காப்பாத்துங்க! ஐயோ……………என்ன காப்பாத்துங்க! யாராவது இருக்கீங்களா ப்ளீஸ்……… என்று அலறிக்கொண்டே கீழே விழப்போனாவளை கைதாங்களாக பிடித்து கொண்டான் விஷ்ணு.
இந்த அலறல் சத்தத்தை கேட்டு கீழே வேலை செய்பவர்கள் அனைவரும் ஓடி வர, இவன் அவளை தூக்கி வைத்திருந்த நிலையை பார்த்து பயந்துபோயினர்.
“ஐய்யய்யோ அண்ணா அந்த பொண்ணை என்ன பண்ணீங்க?”
என்றாள் சீதா (நண்டு அவளின் பட்டப்பெயர்)
ஏய் நண்டு கோவத்துல எதாவது சொல்லிட போறேன். அந்த தண்ணி பாட்டிலை கொண்டா என்றான் அதட்டலாக,
“கப்பென” வாயை மூடிகொண்டவள் அந்த தண்ணீரை கொண்டுபோய் அவனிடம் திணித்தாள். மெல்ல அவளது முகத்தில் தண்ணீரை தெளித்தவன் “பொண்ணே ஏய் பொண்ணே” இங்க பாரு கண்ணை தொறந்து பாரு என கன்னத்தில் கை வைத்து உளுக்கினான்.
அனைவரின் பார்வையும் அவள் மீதிருக்க, மெதுவாக கண்ணை
பிரித்து பார்த்தாள்.
அவளின் பார்வையில் அவனின் முகம் மிக நெருக்கமாக இருக்க மீண்டும் காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று சொன்னவளை, ஆச்சர்யமாக பார்த்தார்கள் கடையில் வேலை செய்யும் அனைவரும்.
நண்டுவோ, அண்ணா என்னதிது தேஞ்சிப்போன ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிட்டிருக்கு இந்த பொண்ணு.
நண்டுவை பார்த்து முறைத்தவன், ஏம்மா உனக்கென்ன பிரச்சனை நான் ஒன்னுமே பண்ணல எதுக்கு இவ்ளோ பயம் என்றான் பொறுமையாக,
“நா……… நா……… “
என்ன நா…….. நா……. ஒழுங்கா பேச்சு வராத உனக்கு? ஐயோ பாவமென்று நக்கலடித்து சிறித்தவளின் காதை பிடித்து திருகியன், அந்த பொண்ணே பயந்து போயிருக்கு, “நீ வேற, போ அந்த பக்கம் என்றான்”.
இவங்க அலம்பல் தாங்கமுடியலையே புதுசு வந்தா பழசு கசக்கத்தான் செய்யும், இன்னிக்கிதான் வேலைக்கு வந்தா அதுக்குள்ளவா? என்று சிலாகித்தாள்.
அங்கே அவனோ இங்க பாரு பொண்ணே முதல்ல இந்த தண்ணிய குடி,
ம்ம்ம்….. என்றவள் வாங்கிக்குடித்தாள்.
இப்ப சொல்லு எதுக்குமா சத்தம்போட்ட?
அதுவா, அண்ணா என்ன மன்னிச்சிடுங்க, இங்க பயங்கரமான உருவாத்தோட நிழல் உள்ள வந்ததை பார்த்தேன். அந்த பயத்துலதான் சத்தம் போட்டுட்டேன் என்றாள் பாவமான முகத்தை வைத்துக்கொண்டு,
அதை கேட்ட அவன் தன்னுடைய தலையில் தட்டிக்கொண்டு யாராவது நிழலை பார்த்துலாம் பயப்படுவாங்கலா? “என்ன பொண்ணுமா நீ”
அ…………துவந்து எனக்கு கொஞ்சம் என்றவளை,
“என்ன நீ எது கேட்டாலும் திக்கி திக்கி பேசற? பேச்சு வராதா?”
அப்படிலாம் இல்லண்ணா பயத்துல வார்த்தை வரல இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன். இதுக்காக என்னை வேலைய விட்டு அனுப்பிராதிங்கண்ணா, காலேஜ் பீஸ் கட்டணும்ண்ணா ப்ளீஸ்ண்ணா.
எப்பா சாமி என்னா நடிப்பு நடிக்கிறா?
என்று நண்டு முனுமுனுதாள்.
விஷ்ணுவோ, அந்த பெண்ணின் பேச்சையும், நடுங்கி போன உடல் தோற்றத்தையும் பார்த்து, சரிம்மா பயப்படாத இனிமேல் குடோன் வேலைக்கெல்லாம் வேற ஆளு போட்டு பாத்துக்கறேன். நீ “கிரௌண்ட் ப்ளோர்” -ல போய்ட்டு வேலையை பாரு என்றவன் அதோடு விடாமல் நண்டு இந்த பொண்ண “நட்ஸ் செக்க்ஷன்ல” விட்டுட்டு எல்லாத்தையும் சொல்லிகொடு சரியா?
ஏன், எல்லாத்தையும் திங்கறதுக்கா?
ஏய் வாலு அந்த பொண்ணு உன்னைய மாதிரி இல்ல கொண்டுபோய் விடு என்றவன் அங்கு அவள் எடுத்து வைத்திருந்த லிஸ்டை பார்த்து தலையில் கைவைத்து அமந்துவிட்டான்.
அதில் பொருட்களின் அளவு, விலை, என்ன பிராண்ட், எல்லாவற்றையும் சேர்த்து கட்டுரை போல எழுதியிருந்தாள். சரியாத்தான் போச்சி என்று நினைத்தவன்,
அடேய், ரகு என்னடா பண்ற?
கீழே தன் மனைவியிடம் மருத்துவமனையில் நடந்ததை விசாரித்து கொண்டிருந்த ரகு, இவனின் குரலை கேட்டதும் சரிம்மா உடம்ப பாத்துக்க நேரத்துக்கு டாக்டர் சொன்னமாதிரி மாத்திரையெல்லாம் சரியா எடுத்துக்கம்மா, கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடறேன் என்றவன் அழைப்பினை துண்டித்து மாடிக்கு சென்றான்.
என்னடா ஆச்சி? எதுக்கு இவ்ளோ சத்தம்?
இங்கபாருடா என்று அந்த பெண் எழுதிய பேப்பரை நீட்டினான்.
அதை பார்த்தவன் சிரித்து வைத்தான்.
சிரிக்காதடா வேலை தெரியாதவங்களை எல்லாம் வேலையில வச்சிட்டு என்னோட உயிர வாங்கற என்று காட்டமாக பேசிவிட்டான்.
இல்ல விஷ்ணு.
வரவங்க, போறவங்க எல்லாரையும் வேலைக்கு சேர்த்துக்கொள்ள படும்னு போர்டு எழுதியா வச்சிருக்கேன்.
விஷ்ணு எத்தனையோ முகம் தெரியாத நபருக்கெல்லாம் உதவி செய்திருக்க அந்த நேரமெல்லாம் நீ இவ்ளோ கோவப்பட்டது இல்லையே, நான் வேலைக்கு சேர்த்துட்டேன்னு கோவமா? இல்ல எனக்கு அந்த உரிமை இல்லையா?
“போடா முட்டாள் இதுதான் என்ன நீ புரிஞ்சி வச்சிருக்க லட்சணமா? “
உன்ன புரிஞ்சி வச்சிருக்கறதுனால தான் கேட்கறேன். அந்த பொண்ணு உன்ன என்ன பண்ணுச்சி?
“ப்ச் ” என்னோட பொறுமையா ரொம்ப சோதிக்கிறானே? என்றவன் லோடு இறக்கிவைக்க இடம் காலியா இருக்குதான்னு பார்க்க வந்தேன்டா. அதுக்குள்ள அந்த பொண்ணு சத்தம் போட்டு, கடையில வேலை செய்யற எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க எனக்கு ரொம்ப அசிங்கமாபோயிடுச்சி தெரியுமா?
அடச்சே, இதுக்காகவா இவ்வளவு அலப்பறை பண்ற?
இல்ல ரகு, அந்த பொண்ணு கடைக்கு செட் ஆகாது. கடை முடிச்சி வீட்டுக்கு அனுப்ப மணி ஏழு ஆகிடும். பகல் நேரத்துலயே இவ்ளோ பயந்த பொண்ணு ராத்திரில எப்படி தனியா போகும் என்றான். முதல் முறையாக அவளின்மீது அக்கறை கொண்டு,
விஷ்ணு நீயே இப்படி சொல்லலாமா? அம்மா, அப்பா இல்லாத பொண்ணுடா காலேஜ் படிக்குதாம், அதுவும் நீ உதவி செய்ற காலேஜ்தான் என்றான். தேவைபடும் பொருள் வாங்ககூட ரொம்ப சிரமம்னு ஜேம்ஸ் பாஸ்டர் இருக்காரே அவர் சொன்னாரு.
என்னடா சொல்ற? நம்ப பாஸ்டர் அனுப்பின பொண்ணா?
ஆமாம்டா, என்பொண்டாட்டி சொன்னதால் மட்டும் வேலைக்கு சேர்க்கவில்லை. அவர் சொன்னதுனால மட்டுமே முக்கியமாக சேர்த்தேன் என்றான்.
சரிடா தங்கசிக்கு இப்பவே போனை போட்டு சொல்லிடறேன்.
சரியாத்தான் போச்சி. நல்ல போய்டிருக்கும் குடும்பத்துல வெடிகுண்டு போடாதடா என்றவன் அவனின் பின்புறமுள்ள முதுகின் மேல் ஏறினான்.
கீழே இறங்குடா, சின்னப்புள்ள மாதிரி தொத்திட்டே வர. வண்டி வந்துடுச்சா பாக்கணும் சொன்னா கேளுடா என்றான்.
முடியாதுடா முடியவே முடியாது அந்த பொண்ணு வேலைய விட்டு அனுபமாட்டேன்னு சொல்லு நான் இறங்கறேன். இல்லனா இன்னிக்கி முழுக்க இப்படிதான் இருப்பேன் என சிறுபிள்ளை போல அடம் பிடித்தான்.
பாஸ்டர் சொன்ன பிறகு நான் சொல்ல ஒன்னுமில்ல, பசங்களோட கீழவே செய்யட்டும் மேல வந்து மறுபடியும் என்னோட மானத்தை வாங்காம இருந்தா போதுமென்றான்.
அது…….. என்றவன் மெதுவா கீழே இறங்கிவிட்டு இருகைகளையும் தட்டினான்.
அதன்பிறகு லோடு வண்டி வந்திருக்க, வைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் விஷ்ணு.
இன்று முதல் நாள் என்பதால் அந்த பொண்ணை மட்டும் வெளிச்சதோடு அனுப்பிவிடும்படி சொல்லியிருந்தான் ரகுவிடம் விஷ்ணு.
மருபேச்சு பேசாமல் ரகுவும் அதையே செய்து முடித்து சரியாக ஒன்பது மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.
அங்கே விஷ்ணுவின் தை மகனுக்கு பிடிக்குமென உருண்டை குழம்பும், பச்சரிசி சாதமும் செய்து வைத்திருந்தார். பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் வயிறு நிறக்க சாப்பிட்டு முடித்து உறங்குவதற்கு அவனுடைய அறைக்கு சென்றான்.
ஏதோ ஒரு வெறுமை அவனுடைய அறையில், தினமும் நெஞ்சில் தாங்கி நிற்கும் பாரம்தான் அது என்று எண்ணியவன் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி போனான்.
சரியாக அதிகாலை மூன்று மணியளவில் ஒரு அழைப்பு அவனை விடாமல் எழுப்ப முயற்சித்தது. வேலை அசதியில் இருந்தவனுக்கு அந்த சத்தம் தொலை தூரத்தில் கேட்பது போலிருக்க புரண்டு படுத்தான். அந்தநேரம் அவனின் கை கைபேசியில் டச் ஆகிவிட, தம்பி சீக்கிரம் வாங்க உங்க குழந்தைங்க எல்லாம் செத்துப்போச்சு தம்பி என்றார்.
அவரின் குரல் கேட்ட அடுத்த கணம் மின்சாரம் தாக்கியதை போல உணர்ந்தவன், அவர் சொன்ன இடத்திற்கு தன்னுடைய புல்லட்டை எடுத்துக்கொண்டு பறந்தான்.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீயெல்லாம் பெரிய மனிஷனா? உங்க அம்மா சின்ன வயசுல தாய்பால் தானே கொடுத்தாங்க? வேற எதாவது மூ………….. கொடுத்து வளத்தாங்களா?
என்று விஷ்ணு கேட்ட அடுத்த கணம்,
ஏய், என்னடா என்று அவனின் கழுத்தை நெறித்திருந்தான் ஊரில் நான் தான் பெரியவனென்று சொல்லி திரியும் ஜெகன்நாதன்.
கழுத்திலிருந்த கைகளை லாவகமாக பிரித்தவன் மூலிகை மருந்து “கொடுத்தாங்களா ன்னு ” கேட்கறதுக்கு முன்னமே இப்படி செய்தால் எப்படிடா தம்பி, பாரு இப்ப உன்னோட கை வலிக்குமில்லையா?
என்றான் நக்கலாக
என்னதிது முத்தரசு? மரியாதையே இல்லாம,
கதிர்வேலன், விஷ்ணுதேவனின் தந்தையை பார்த்து கேட்க,எனக்கிருந்த பொறுமை என்னோட புள்ளைக்கு இல்லையே கதிரு, உன்னோட மகன் தானே முதல்ல ஆரம்பித்தான். கேட்கணும்னா ரெண்டுபேரையும் கேட்கணும் என்றார் முத்தரசு
அப்படிலாம் கேடிருந்தா இவன் ஏன் ஊரு சொத்துக்கு அலைஞ்சிட்டு வர போறான்ப்பா என்றான் வம்புக்காகவே விஷ்ணுவும்,
ஏய் என்னடா விட்டா ஓவரா பேசிட்டே போற? என்றான் ஜெயகாந்தன்
அப்படிதாண்டா பேசுவோம் என்ன செய்வ? இல்ல உன்னால என்னதான் செய்யமுடியும் என்றான் ரகு மற்றும் நந்தன் இருவரும் விஷ்ணுதேவனின் உயிர் தோழர்கள்
அந்த நேரம் பார்த்து அங்கே சமாதானம் பேசவந்த அரசாங்க பதவியிலிருக்கும் வக்கீல் அவர்களை துணைக்கு கண் ஜாடையால் வரவைத்தான் கதிர்வேலன்.
இங்க பாருங்க ப்பா உங்களுக்குள்ள என்ன முன்விரோதம்னு எனக்கு தெரியாது.
ம்ம்…. ஓஹோ, அப்படியா தெரியாம எதுக்கு வந்த என்றான் தெனாவட்டாக ரகு என்பவன்,
இங்க பாரு தம்பி, வந்ததில் இருந்தே பார்க்கறேன் ரொம்ப திமிறா பேசறீங்க. அரசாங்க பதவியில் இருக்கும் என்கிட்டயே உங்க திமிரை காமிக்கிறிங்களா?
நான் நெனச்ச இப்பவே இப்பவே உங்க எல்லாரையும் பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட முடியும். “பட்” அதுக்காக ஒன்னும் நான் வரலை. ரெண்டு பக்கமும் சமாதானமாக பேசி தீர்த்திட வந்தேன்.
அதனால என்னய மாதிரியே உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு ஒதுங்கி நில்லுங்க, காரணமே இல்லாம சண்டைக்கு போகாதீங்க அவங்களோடது அவங்களே பேசி தீர்த்துக்கட்டும்.
என்னையா நெனச்சி பேசற, பணத்துக்காக வந்தவன் நீ, பழகுன பாசத்துக்காக வந்தவங்க நாங்க, காரணம் தெரியாம இங்க யாரும் நாட்டாமை செய்ய வரலை பொத்திட்டு போவியா? என்றான் மீண்டும் காட்டமாக ரகு
“அதை கேட்ட மறுநிமிடம் டேய் மரியாதையா பேசுடா ” என்றான் அந்த வக்கில்
ஆமா உன்னயெல்லாம் யாரு வக்கில் ஆக்குனது. காரணமே தெரியாம பஞ்சாயத்து வந்திருக்க என்றான் கேலிபுன்னகையுடன்,
ஏன் தெரியாது?
என்ன தெரியும் சொல்லுங்க பாப்போம்.
காரணத்தை,
ம்ம்ம்…. பயிரெல்லாம் எறிஞ்சி வீணாப்போயிடுச்சி அதுக்கு இவங்க எப்படி பொறுப்பாக முடியும்.
அப்படி போடுன்னானா அருவாளை, என்றவன் மாப்ள, இவனுங்க ஜெகஜால கில்லாடிங்கடா, இவனும் கூட்டுகளவாணியா இருப்பான் போலயே? என்றான் யோசனையான முகத்துடன்
உங்க வயசு இப்படியெல்லாம் பேச சொல்லுது என்ற வக்கில் கை கொண்டு தன்னுடைய தாடையை கேவலமான பார்வை பார்த்துக்கொண்டே தடவினார்.
இதெல்லாம் உன் மூஞ்சிக்கு செட் ஆகல என்று நாக்கலடித்தான் நந்தன்.
என்கிட்டவே திமிறா பேசறாயா? உன்னை இப்பவே என்ன செய்றேன் பாருடா என்று கத்தினான்.
error: Content is protected !!