Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 17.1

அத்தியாயம் 17

அதிகாலை மூன்று மணிக்கு மேல் உறங்கிய திருனேஷ்வரன் காலை ஒன்பது மணிக்கு எழுந்தான். விழித்ததும் மனம் மனைவியை தேட, அவள் இல்லை எனப்புரிந்தது.

பொன்மணிக்கு அழைக்கலாம் என்று மொபைலை எடுக்க, ‘நல்லா தூங்கிட்டிருக்கிங்க, எழுப்ப மனசு வரல, இன்னைக்கு ஆஃபீஸ் போயே ஆகனும், நான் கிளம்பறேன், எழுந்ததும் கால் பண்ணுங்க’ என்று காத்திருந்த குறுஞ்செய்தியைப் படித்து, அழைப்பு விடுத்தான் இன்முகத்தோடு.



Advertisement

“எழுந்துட்டிங்களா? கிச்சன்ல ஃப்ளாஸ்க்குல காஃபி இருக்கு, ஹாட் பாக்ஸ்ல தோசையும் சட்னியும் இருக்கு. இன்னொரு கப்ல சாம்பார் சாதமும் ஊறுகாயும் வச்சிருக்கேன், பொறியல் பண்ண டைம் இல்ல, இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றாள்.

மனைவி அருகில் இல்லாத கடுப்பிலும், அதிகாலைவரை தூங்கவிடவில்லையே, எதற்கு இத்தனை வேலை செய்திருக்கிறாள் என்ற தவிப்பிலும் “எப்போ எழுந்த? எதுக்கு இவ்வளோ செய்த? கடைல வாங்கிக்கமாட்டேனா?” என்று சிடுசிடுத்தான்.

“ஆறு மணிக்கு முழிப்பு வந்துடுச்சு, சமையல் செய்யறது எனக்கு பிடிக்கும், கஷ்டப்பட்டெல்லாம் செய்யல”

Advertisement

“இப்போ எங்கயிருக்க? ஆஃபீஸ்லயா?”

Advertisement

“அங்கயிருந்து இப்போதான் வீட்டுக்கு வந்தேன், இப்போ ஆஃபீஸ்க்கு கிளம்பிடுவேன்”

“இம்ப்பார்ட்டண்ட் ஒர்க்கா?”

“ம்… கொஞ்சம், ஆனா மதியம் ஃப்ரீ ஆகிடுவேன்”

Advertisement

“அப்போ மதியம் வீட்டுக்கு வந்துட்டு தூங்கு” என்றான் அக்கறையாக.

திருனேஷ்வரன் அங்கு வர சொல்கிறானோ என நினைத்து, “நீங்க வேலைக்கு போகல?” என்றாள்.

“நான் போறேன், உன்னை தூங்க சொன்னேன்”

“ம்” என்றாள்.

‘ம்‘ என்ற சொல், நேற்றிரவின் நினைவில் வைத்து சொல்வது புரிய, சத்தமில்லாமல் புன்னகைத்தவன், “என்ன ம்? காலைல எழுந்தா ஆளைக்காணோம், சோறாடீ முக்கியம்? நான் எழுந்துக்கிற வரைக்கும் இங்கையே இருந்திருக்கலாமில்ல? இல்லைனா என்னை எழுப்பியாவது சொல்லிட்டு போயிருக்கனும்” என்றான் ஏமாற்றத்தோடு.

“எழுந்துட்டா திரும்ப தூக்கம் வராதில்ல? இருபது நாள்ல ப்ராஜக்ட் முடிக்கனும்னு சொன்னிங்க, அதான் எழுப்பல” என்றாள் அக்கறையாக.

“முழிக்கிறதுக்குள்ள கிளம்பிட்டு காரணம் சொல்லிட்டிருக்க” என கடுகடுத்தவன், “வீட்டை திறந்து விட்டுட்டே போய்ட்டியா?” என்றான்.

“நீங்க அப்படி தூங்கிட்டிருக்கும்போது எப்படி அப்படி போவேன்? கிச்சன்ல ஜன்னல் இருக்குல்ல? அதை திறந்து விட்டுட்டு, வீட்டை பூட்டிட்டு சாவியை ஜன்னல் வழியா உள்ள போட்டுருக்கேன், கிச்சன்ல தேடி பாருங்க, இருக்கும்” என்றாள்.

ஒற்றை போர்வை மட்டுமே இவனின் உடலை மறைத்திருக்க, சிரித்தவன், “எப்படி தூங்கிட்டிருந்தேன்?” என்றான்.

“முதல்ல போய் குளிச்சிட்டு சாப்பிடுங்க, நான் அப்புறம் பேசறேன்” என்று இணைப்பை துண்டித்தாள் பெருகிய நாணத்தோடு.

மனைவி அருகிலில்லாததே ஏமாற்றமாக இருக்க, தற்போது இணைப்பை துண்டித்ததும் பெரும் ஏமாற்றமாக இருந்தது திருனேஷ்வரனுக்கு.

மீண்டும் அழைத்தான் மனைவிக்கு. அழைப்பை ஏற்கவில்லை பொன்மணி. ம்ப்ச்… நான் முழிக்கும் வரை வீட்டுக்கு போக வேணாம்னு நைட்டே சொல்லியிருக்கனும் என புலம்பியபடி குளிக்கச் சென்றான்.

பொன்மணி நாளை வேலைக்கு போவாள் என்று நேற்றே தெரியும்தான். ஆனால் நேற்றிரவிற்கு இணையாக இன்று பகலிலும் அவளை தேடுவோம் என்றுதான் தெரியாமல் போனது.

பதினொரு வயதில் விடுதியில் தங்கிப்படிக்கும்போது மிகக்கொடுமையான விசயமாக இருந்தது தனியாக உறங்குவதுதான். விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும்போதும் அன்னையோடு கதையளந்தபடி உறங்கத்தான் ஆசைகொள்வான்.

ஆனால் அப்பொழுது குழந்தையாக இருந்த வெண்பா அன்னையோடு உறங்குவதால் அவள் விழித்துக்கொள்வாள் என்று பேச தடைவிதிக்கும் அன்னையை ஏமாற்றமாக பார்த்தபடி தனியறையில் உறங்கச் சென்றிடுவான்.

பள்ளி விடுதி, கல்லூரி விடுதி என்று பத்து வருடம் விடுதி வாழ்க்கைக்கு பின்னே தனியாக இருப்பது பழகிப்போக, தந்தை அழைத்தாலும் அவரோடு உறங்க செல்லமாட்டான்.

நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு துணையோடு உறங்கியது பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருந்தது. தவற விட்ட அழைப்பை பார்த்த பின்னே அழைப்பாள் என்று வேகமாய் குளித்து வந்தவன், மொபைலை பார்த்த பின்னேதான் உடை அணிந்தான்.

உண்ணும் எண்ணமே இல்லைதான். ஆனாலும் தனக்காக சிரத்தை எடுத்து சமைத்திருக்கிறாளே என்று உண்டவன், சாவியை தேடி எடுத்து மதிய உணவையும் எடுத்துக்கொண்டு, வேறு உடை மாற்றுவதற்காக தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து உடைமாற்றிக்கொண்டிருக்க, பொன்மணியிடமிருந்து அழைப்பு வந்தது.

ஏற்றதும் “சாப்பிட்டிங்களா?” என்றாள்.

“ம்… இன்னைக்கு மதியம் லீவ் போட்டுட்டு வா, உன்னோட திங்க்ஸ்ஸெல்லாம் நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு போய்டலாம்” என்றான்.

“இ… இன்னைக்கேவா? கொஞ்ச நாள் போகட்டுமே”

“எதுக்கு இவ்வளோ தயக்கம்? கொஞ்சம் நாள் எதுக்கு டைம் கேக்குற?”

திருனேஷ்வரன் பொன்மணியை தேடுவதை விட, அதிகமாக கணவனை தேடுகிறது பொன்மணியின் மனது. தன் மீது எத்தனை காதல் இருந்தபோதும் சென்னையிலேயே இருந்து கொண்டு ஒருமாதத்திற்கு மேல் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தவன் ஆகிற்றே.

சிறு வார்த்தை தவறாக பேசினாலும் அதிகமாக கோபப்படுவான், அதோடு கணவனின் மனதையும் வலிக்கச் செய்யும் என்ற கவலை பொன்மணிக்கு. ஆனாலும் திருனேஷ்வரனின் பெற்றோரை நினைத்துப் பார்த்தவளுக்கு அவனோடு தனியாக வசிக்க தைரியம் வரவில்லை.

தன்னை பேசுவதோடு பெற்றோரை அல்லவா பேசுவார்கள் என்று செல்லம்மாள் மீதும் அதீத பயம். கணவனுக்கு தன்மீதுள்ள அன்பின் ஆழம் தெரிய வந்தால் அவருக்காகவாவது தன்னை சகிக்க யோசிப்பார்கள்… அதுவரை சற்று காலம் பொறுத்திருக்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் மனதிலுள்ளதை சொன்னால் அவ்வளவுதான்… என்ன சொல்லாம் என யோசித்தவள், “இல்ல… தென்றலையும் ஸ்வாதியையும் என்னை நம்பித்தான் அவங்க பேரண்ட்ஸ் அனுப்பியிருக்காங்க, அதான்” என்று அந்த நேரம் தோன்றிய காரணத்தை சொன்னாள்.

“ஓஹோ… சரி நீ அவங்களைப் பாரு என்று இணைப்பை துண்டித்தான் உள்ளடக்கிய கோபத்தோடு.    

கோபமாக இணைப்பை துண்டித்திருப்பான் என்று மீண்டும் அழைத்தாள் திருனேஷ்வரனுக்கு. திருனேஷ்வரன் அழைப்பை ஏற்கவில்லை. ஒருமுறை அல்ல, அன்று மாலை வரை.      

மாலை அலுவலக வேலைகள் முடிந்த பின்னே ரூபலஷ்மிக்கு அழைத்தான். ரூபலஷ்மி இணைப்பை துண்டித்து விட, ராஜதுரைக்கு அழைத்தான்.

அவரும் ஏற்காமல் போகவே, மீண்டும் அழைத்தான் ரூபலஷ்மிக்கு.

“கட் பண்றேன்ல? பிஸியா இருக்கேனு தெரிஞ்சுக்கமாட்டியா? என கடுகடுத்தார் ரூபலஷ்மி.

திருனேஷ்வரனின் மனம் இதமாகிட, “என் போனை அட்டன் பண்ண முடியாதளவுக்கு நீங்க பிஸியா இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க மேடம். வாழ்த்துக்கள் என்றான் சின்ன சிரிப்போடு.

கண்டுகொண்டான் தன்னை என்று புரிய, “எதுக்கு வாழ்த்து? வைடா போனை என்றார் கடுப்பாக.

“அடுத்த மாசம் வீட்டை மாத்தலாம்னு இருக்கேன் மேடம், அதை சொல்லத்தான் போன் செய்தேன். சொல்லிட்டேன்… இதோ வச்சிடறேன் என்று இணைப்பை துண்டித்தான் பெருத்த நிம்மதியோடு.     

கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை தீர்ந்ததா என்பதை நேரில் சென்று விசாரிக்க மனம் விரும்பவே ரூபலஷ்மியின் வீட்டிற்கு கிளம்பினான்.

உள்ளே நுழைந்ததும், “ஹாய் சார்… என்ற யுகன், “சாரி… அப்பா அண்ணா சொல்ல சொல்லியிருக்கார் என்று தனது தவறை திருத்தினான் சிறுவன்.

“அண்ணா வேணாம், அங்கிள்னு கூப்பிடு என்று புன்னகையோடு சொன்னவன், அப்பா அம்மா எங்க? என்றபடி சோபாவில் அமர்ந்தான்.

“அப்பா மாடில போன் பேசிட்டிருக்கார். அம்மா ஒர்க் விசயமா அவுட் ஆஃப் ஸ்டேஷன் போயிருக்காங்க என்றான்.

“ஓ… என்றவனுக்கு மனம் சற்று ஏமாற்றம்தான் அடைந்தது.

நான்கு நாள்களாக தன்னிடம் ரூபலஷ்மி பேசாததும், போனில் தன்னை ‘டாஎன்று பேசியதும் அவரின் தவறை ராஜதுரை உணரவைத்து விட்டார் என்று நிம்மதிகொண்டான்.     

ஆனால் ராஜதுரை இங்கிருக்கும்போது மேடம் வீட்டில் இல்லை என்பது நெருடலாக இருக்க, அப்படியென்றால் இவர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வில்லையா? நான் தற்போது இங்கே வந்திருக்கக்கூடாதா என்று யோசித்தபடி, “சரி குட்டி, நான் கிளம்பறேன் என்று எழவே,

“அப்பா உங்களை வெய்ட் பண்ண சொன்னார் அண்ணா, இம்ப்பார்ட்டண்ட் காலாம், பேசிட்டு வருவாராம் என்றபடி வந்தாள் யுகதி.    

“ஹம் என்று அமர்ந்தவன், “இரண்டு பேரும் எப்படி இருக்கிங்க? என்றான் இன்முகமாக.

“நல்லா இல்லை, அம்மா வீட்டுக்கு வந்து த்ரீ டேஸ் ஆச்சு. அவாய்ட் பண்ண முடியாத அஃபிஸியல் ஒர்க்காம், நாங்களும் அப்பாவும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனுமாம். அப்போதான் அம்மாக்கு ப்ரமோசன் கிடைக்குமாம். அப்பா சொன்னார் என்றாள் ஏமாற்றமாக.

“ஆமாம்தானே? அப்பா சொல்றது சரிதானே? அப்போதானே அம்மா பெரிய ஆஃபீஸரா ஆக முடியும்? நிறைய பேருக்கு நல்லது செய்ய முடியும்? என்று எடுத்துரைத்தான் பொறுமையாக.      

“ம்… அம்மா ப்ரமோஷனுக்காக நாங்க ஹெல்ப் பண்ண முடிவு பண்ணியிருக்கோம், அம்மாக்கு கால் பண்ணி டேக் கேர் மட்டும்தான் சொல்றோம். வர சொல்லி தொல்லை பண்ணல என்றான் யுகன்.

“குட் பாய் என்று பாராட்டி, பள்ளியில் நடப்பை பற்றி இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.      

அரைமணி நேரம் கழித்து வந்தார் ராஜதுரை. முகம் சோர்வாகத்தான் இருந்தது. “அப்பாக்கு வீட்டுக்கு வர டைம் இருக்கும்போது அம்மாக்கு ஒர்க் வந்துடுச்சு என்று பாவமாய் முகம் சுருக்கினாள் யுகதி.      

“குழந்தைகள் இப்படி சூழலில் இருந்ததேயில்லை என்று வருந்தி சொன்னவர், “அப்பாக்கு திருனேஷ்வரன்கிட்ட பேசனும். நீங்க டிவி பாருங்க என்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, திருனேஷ்வரனை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றவர், “குழந்தைங்க ரூபாவை ரொம்ப மிஸ் பண்றாங்க என்றார் வேதனையாக.

“நீங்க மிஸ் பண்ணலைங்களா சார்?

“ரொம்ப… ரொம்ப ரொம்ப”    

மேடம் எங்க சார் இருக்காங்க? நான் கால் பண்ணினேன் என்றவன் ரூபலஷ்மி பேசிய விதத்தை சொன்னான்.

“அத்தை வீட்டுல, ஐ மீன் அவங்கம்மா வீட்டுல இருக்கா

“அவங்க கோபம் குறையலையா?

“கொஞ்சம் கூட குறையல, என்மேல மட்டுமில்ல, அவ மேலயே அவ ரொம்ப கோபமா இருக்கா

“ஓ… என்றான் புரிந்தவனாக. முகமும் சற்று நிம்மதியை காட்டஎப்படிடா ஒத்த வார்த்தையில அவளை புரிஞ்சிக்கிற? என்றார் ஆச்சர்யமாக.

“மேடம் ரொம்ப நல்லவங்க சார், அவங்க பாதை தப்புனு புரியும்போது அவங்களை அவங்களே மன்னிக்கமாட்டாங்கனு எனக்கு தெரியும்.  அதான் யாரையும் பார்க்க பிடிக்காம ஊர்ல இருக்காங்க என்றான்.

“அப்போ நான் கெட்டவனா? அவளை மாதிரி நீயும் என்னையே ப்ளேம் பண்ணு என கடுகடுத்தார்.

“ஊருக்கு நல்லவனா இருக்கிறது பெரிய விசயம்தான் சார். அந்த நல்லவனை வீட்டுக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்ல? ஏக்கத்தோட எத்தனை நாளைக்கு வாழ முடியும்? மேடம் இல்லாத வீட்டுல மூணு நாள் கூட உங்களால தாக்கு பிடிக்க முடியலல்ல? என்று ரூபலஷ்மிக்காக பேசினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!