Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞24

இப்போ ஏன் கார்? உவப்பில்லை குரலில்.

மூனு மாசமா வாங்கணும்னு பிளான் பண்ணிட்டு தான் இருக்கேன்.

செகண்ட் ஹேன்ட் கார் எதுக்கு?

இவர்கள் பேச்சினூடே சரவணன் வந்துவிட்டான்.



Advertisement

இந்த கார் தானா? நல்லா இருக்குடா. 2020 மாடலா?

ம்ம்ம்ம் ஆமாண்ணா என்றான்.

குழந்தைகள் மூவரும் வெளியில் வந்துவிட்டனர்.

Advertisement

ஹை சித்தப்பா புது கார் துள்ளி குதித்தனர்.

Advertisement

சித்தப்பா ஜாலியா ஒரு ரவுண்டு என்றாள் ஸ்ருதி. எஸ் சித்தப்பா என்று குதித்தான் குகன்.

சரி வாங்க என்று குழந்தைகளை அழைத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்டான்.

என்ன சுபி செகன்ட்  ஹேன்ட் காரா? இளக்காரமாக கேட்டாள் அஞ்சலி.

Advertisement

அவள் பதில் பேசாது இறுகி நின்றாள்.

எங்க கார் மாருதி விடாரா பதினாலு லட்சம் தெரியுமா? ஆசைப்பட்டு தேடி தேடி வாங்கினாரு என் வீட்டுக்காரரு.

மெட்டாலிக் பிரில்லியன் சில்வர் கிடைக்கலைன்னு ஒன் மன்த் வெயிட் பண்ணி வாங்கினோம்

எங்க கார் ஹுண்டாய் க்ரெட்டா. என் வீட்டுக்காரர் பிரண்ட்ஸ் நிறைய பேரு அதை தான் வச்சிருக்காங்க. நல்லா மைலேஜ் கொடுக்கும் செம்ம ஸ்மூத்தா இருக்கும் என்றாள் சங்கீதா.

மன்னரு தான் கஞ்சனாச்சே…. அனுபவிக்க தெரியாத மனுஷன். பாவம் சுபி என்று உச்சு கொட்டி போனார்கள்.

“———————“

பூமாலைக்கு மிகுந்த மகிழ்ச்சி. தந்தையை வயலில் இருந்து காரில் அழைத்து வந்திருந்தான். பாப்பாத்திக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தான்.பெற்ற பிள்ளைகள் குறைவின்றி வாழ்வதை காண்பதை விட பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி வேறென்ன இருந்து விட முடியும்?

அவ்வளவு கடினமாகி இருந்தது சுபியின் முகம். யாரிடமும் எதுவும் பேசும் நிலையில் அவள் இல்லை. எல்லோரும் தன்னை பாவமாக பார்ப்பதை போல் உணர்ந்தாள்.

இரவு உணவின் போது தோசை சுட்டு கொண்டு வந்து வைத்துக்கொண்டே இருந்தாள் சுபி. சீரியல் பார்த்து சிரித்து பேசிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் சங்கீதாவும் அஞ்சலியும். சித்தி நெய் தோசை…. கொஞ்சினான் குகன். சித்தி எக் தோசை ஆர்டர் போட்டாள் ஸ்ருதி.

கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டிருந்த சுபி வியர்வையில் கசங்கி போனாள்.

அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவன் சுபி இங்கே வா என்று அறைக்குள் நின்று அழைத்தான்.

வியர்வையை துடைத்துக் கொண்டு என்ன சொல்லுங்க என்றாள் எங்கோ பார்வையை பதித்தபடி.

உட்காரு! என்றான் கட்டிலை காட்டி.

வேலை இருக்கு என்றாள் சிடுசிடுப்புடன்.

அவங்க தோசை ஊத்தி சாப்பிட்டுக்குவாங்க என்றான் அழுத்தமாய்.

இப்படி அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது பாதியில் வரது நல்லா இருக்காது என்றவள் போய் விட்டாள்.

மன்னர் மனைவியை அழைப்பதை பார்த்து அஞ்சலி சங்கீதாவிற்கு ஜாடை காட்டினாள். இரண்டு பேரும் முகத்தை முறுக்கி உதட்டை பிதுக்கிக் கொண்டனர்.

எல்லோரும் சாப்பிட்டு முடிய நீ சாப்பிடு நான் தோசை ஊத்தி தரேன் என்று ஒருவரும் சொல்லவில்லை.

இட்டலிக்கு அரைத்த மாவை உப்பு போட்டு கரைத்து தனி தனி தூக்குகளில் ஊத்தி வைத்துக்கொண்டிருந்தார் பாப்பாத்தி.

கிச்சனுக்குள் வந்த மன்னர் சட்னி கிண்ணத்தை பார்த்தான் தக்காளி சட்னி காலியாகி வெறும் கிண்ணம் கிண்டல் செய்தது. தேங்காய் சட்னி கொஞ்சமாய் ஓரம்பாரம் ஒட்டிக் கொண்டிருந்தது.

இன்னும் அம்மாவும் மனைவியும் சாப்பிடவில்லை என்று புரிந்து கொண்டவன் நாலு பல்லு பூண்டை தோலோடு நசுக்கினான், பழுத்த ஒரு தக்காளியை நறுக்கி வைத்தான். கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை பொறிய விட்டு தக்காளியை போட்டு வதக்கி உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் மிளகாய் தூள் போட்டு கிளறி ஸ்டவ் ஆப் செய்து விட்டு இன்னும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இட்டலி பொடி ரெண்டு ஸ்பூன் மேலே போட்டு கிளறி மூடிவைதான்.

தோசை ஊற்ற போனவனை சுபி தடுக்க….

உட்காரு!என்று அவளை அதட்டினான்.

பாப்பாத்தி பெருமையாய் மகனை பார்த்திருக்க தோசை ஊற்றி பொடி வைத்து அவருக்கு கொடுத்தான்.

இரண்டு தோசை முறுகலாய் ஊற்றி மனைவிக்கு கொடுத்தான். அவன் கிளறிய பூண்டு தக்காளி பொடி அவ்வளவு டேஸ்ட்.

பாத்திரம் மலையாய் குவிந்திருக்க…. பாப்பாத்தி மாவரைத்த கிரைண்டரை கழுவ போனார்.

ம்மா…. காலையில் பார்த்துக்கலாம் போய் படுங்க என்றான்.

சுபி ஸ்க்ரப்பரை கையில் எடுக்க “உனக்கு வேற தனியா சொல்லணுமா?” அவ்வளவு கோபம் அவன் குரலில்.

அம்மா கால் வீங்கியிருக்கு தைலம் தேய்ச்சுட்டு படுங்க என்றான்.

சுபி தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளை முன்னே விட்டு பின்னே கிசுகிசுத்துக் கொண்டனர் ஓரகத்திகள்.

காய்ச்சிய பாலும் தண்ணீர் பாட்டிலுமாய் வெளியில் வந்தான் மன்னர்.

சித்தப்பா எனக்கு பால் என்றான் குகன்.

உங்கம்மாவை காய்ச்சி கொடுக்க சொல்லு குகன். சித்தப்பா ரொம்ப டயர்டா இருக்கேன்!  குட்நைட் என்று சென்றுவிட்டான்.

எவ்வளவு திமிரு பாருக்கா இவனுக்கு. இவன் பொண்டாட்டி வேலை செய்து ஓடா தேஞ்சு போயிட்டாலாமா? நாம வந்து ரெண்டு நாள் தான் ஆகுது இதுக்கே அவனுக்கு எரியுது.

ஆமா அஞ்சலி நமக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்குனு அவங்க நினைக்கவே இல்லை. அவங்களே ஆண்டு அனுபவிக்கனும்னு எண்ணம்! இன்னும் கொஞ்சம் கொளுத்தி போட்டாள் சங்கீதா.

பொண்டாட்டிக்கு நோகும்னு கூடவே நின்னு குடை பிடிக்கிறான்.

கொடுத்து வச்சவ தான். ராணி மாதிரி தாங்குறான்.

“————————-“

சுப்பு இந்த பாலை கொஞ்சம் குடி! மென்மையாய் அழைத்தான்.

அவள் பதில் பேசவில்லை.

சுப்பு உன்னை தான். அசதியா இருக்கா? வாஞ்சையுடன் அவள் கரம் பற்றி எழுப்பினான்.

எனக்கு பால் வேணாம்! வெடுக்கென்று பதில் வந்தது.

தினமும் குடிச்சுட்டு தானே தூங்குவ?

இன்னைக்கு வேணாம்….

ஏன்?

ஏன்னா நான் எல்லாமே உங்கட்ட செல்லனுமா?

ஆமா சொல்லணும் தான்! அவள் கோபத்தில் அவனுக்கு லேசாய் சிரிப்பு வந்துவிட்டது.

நீங்க எல்லாம் சொல்லிட்டா செய்றீங்க? காய்ந்தாள்.

என் சுப்பு குட்டிக்கு சொல்லாம என்ன செய்துட்டேனாம்?அழகாய் அள்ளி மடியில் அமர்த்திக் கொண்டான்.

இப்போ எதுக்கு இந்த கார் வாங்கினீங்க? மாலையில் இருந்து சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவள் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டாள்.

இப்போ கார் வாங்கினதில் என்ன பிரச்சனை?.

உங்களை யார் செகன் ஹேன்ட் கார் வாங்க சொன்னது?

நமக்கு இது போதும்மா. தன்மையாய் சொன்னான்.

எங்க அக்கா வீட்டில எரிட்டிகா வச்சிருக்காங்க, உங்க அண்ணனுங்க விட்டாரா, கிரேட்டான்னு வச்சிருக்காங்க. நாம போய் இப்படி பழைய கார் வாங்கணுமா? ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது அவளுக்கு.

யாருக்கு என்ன தேவையோ அதை தான் வாங்கணும்! அவங்க ரெகுலரா கார் யூஸ் பண்றவங்க. உங்க மாமா காலேஜ் போற ப்ரொபஸர் அவருக்கு கார் வேணும். என் அண்ணனுங்க ஆபிஸ் போறவங்க அவங்களுக்கு கார் வேணும். நான் போலீஸ் ஸ்டேஷன் போக கார் எதுக்கு? சும்மா போர்டிக்கோவில் நிற்க போகுது. ஏதாவது எமர்ஜன்சிக்கு யூஸ் ஆகுமேன்னு தான் வாங்கினேன்.

கேஸ் விஷயமா போனா SI கூட ஜீப்ல போக போறேன். டெய்லி ஸ்டேஷனுக்கு பைக்ல போற தூரம் தான் எனக்கு.

நாம ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் கார் எடுப்போம். அதுக்கு ஏன் பத்து லட்சம், பதினைந்து லட்சம் இன்வெஸ்ட் பண்ணனும்?

பொறுமையாய், நிதானமாய் குழந்தையிடம் பேசுவது போல் அமைதியான குரலில் எடுத்து கூறினான்.

அதுக்காக இப்படி அசிங்கமா பழைய கார் வாங்கணுமா? கண்ணீர் வந்து விட்டது அவளுக்கு.

எது? அசிங்கமா? இதில் என்ன அசிங்கம்? இது திருடிட்டு வந்த கார் இல்லை. இந்த கார் என் பிரண்டோட அண்ணன் டாக்டர் கார்த்திகேயன் கார். அவர் அமெரிக்காவில் செட்டில் ஆக போகிறார். ஆச்சுவலா அவர் பத்தாயிரம் கிலோ மீட்டர் கூட ஓட்டலை.

கார் நல்ல கண்டிஷனில் இருக்கு. மெக்கானிக் எஸ்டிமேட் பார்த்து வேல்யூ சொல்லி அதை விட குறைத்து இரண்டேகால் லட்சத்துக்கு தான் வாங்கினேன்.

அதிலும் கார்த்தி அண்ணா இருபத்தைந்தாயிரம் திருப்பி கொடுத்துட்டார்.

அது சரி சீப்பா கிடைச்சது போதும்,கிடைத்தவரை லாபம்னு வாங்கிட்டு வந்துட்டீங்க ஒரு மாதிரி குரலில் அவள் சிரித்தது அவனுக்கு சுருக்கென்று இருந்தது.

சுப்பு…. அதட்டிவிட்டான்.

அறிவோட பேசு! கண்கள் சிவந்துவிட்டது அவனுக்கு.

ஏன் கோபத்தை அடக்கி வைக்கிறீங்க? அடிங்க…. பொல பொலவென்று கண்ணீர் கொட்டியது.

இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற? பொறுமையா பேசு!

அது சரி நான் வாயே திறக்க கூடாது.நமக்குன்னு ஆசை இருக்க கூடாதா? எல்லாத்திலுமா கஞ்சத்தனம் பண்ணுவீங்க? விம்மினாள்.

எரும…. உனக்கு என்னைக்கு தான் சுய புத்தி இருந்திருக்கு? இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படறவ நீ!

அவங்க வாங்குறாங்க, இவங்க வாங்குறாங்கன்னா அவங்களுக்கு தேவை இருக்கு வாங்குறாங்க! நமக்கு என்ன தேவை, எப்போ தேவை எல்லாம் யோசிக்கணும்.

உன்னை கூட்டிட்டு எங்காவது வெளியில் போக வர சிரமமா இருக்குன்னு மூனு மாசம் பிளான் பண்ணி சேவிங்க்ஸ் எல்லாம் உருட்டி திரட்டி தான் இந்த கார் வாங்கினேன்.

நான் கேட்டேனா? மூக்கு முகம் கண்கள் எல்லாம் சிவந்து விட்டது.

நீ கேட்டு தான் நான் எல்லாம் செய்றேனா?

ஓ… இவ தெண்ட சோறு தானே இவகிட்ட ஏன் கேட்கணும்னு நினைப்பு!

எதுக்கு மனசை போட்டு குழப்பிக்கிற?விரலுக்கு தகுந்தது தான் வீக்கம். நம்ம வருமானம் வாழ்க்கை வேற…. அவங்க வாழ்க்கை முறை வேற. அடுத்தவங்க கூட நம்மை கம்பேர் பண்ணாதே.

இப்படியே பஞ்ச பாடிட்டு இருங்க. அவங்கவங்க மனை வாங்கி போடறாங்க, கடை கட்டி வாடகைக்கு விடலாம்கிறது வரைக்கும் யோசிக்கிறாங்க. நாம பஞ்சப்பாட்டு பாடிகிட்டு இந்த கிராமத்துல ஆடு மாடு வளர்த்துகிட்டு தான் இருக்கணும். நான் ஏதாவது கேட்டா உங்க கண்ணுக்கு எருமையா தெரியறேன்…. இன்னும் ஆக்ரோஷம் கூடியது அவளுக்கு.

அவள் என்ன பேச வருகிறாள் என்று அவனுக்கு புரிந்து விட்டது.

யார் போட்ட தூபத்தில் இப்படி பேசறன்னு புரியுது.

எனக்கு மனை வாங்க விருப்பம் இல்லை, என்கிட்ட பணமும் இல்லை.  பணம் சேர்த்தா கூட நிலம் தான் வாங்குவேன். உறுதியாக கூறினான்.

இந்த கரகாட்டக்காரன் காரை வாங்கினதுக்கு பதிலா ரெண்டு சென்ட் மனை வாங்கியிருக்கலாம்.

பளார் என  அரைந்திருந்தான்.

அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. வின்னென்ற வலி மட்டுமே உணர முடிந்தது.

சுருண்டு கட்டிலில் சரிந்தாள்.

அவங்க புருஷனுங்க லட்சத்துல சம்பளம் வாங்குறவங்க உன் புருஷன் ஆயிரத்துல தான் வாங்கிட்டு இருக்கேன்.

இந்த வீடு கட்டும் போது, வீடு நாலு பேருக்கும் தானே… நாலு பேரும் சேர்ந்து தான் செலவு பண்ணனும். உங்க தம்பியும் தான் வேலையில்

இருக்கானேன்னு என் பங்குக்கு பணம் கொடுக்க சொல்லி கறாரா சொல்லிட்டாங்க இந்த வீட்டு மூத்த மருமகள்.

அவங்க வருமானமும் என் வருமானமும் ஒன்னா? ஆனா கூட அண்ணனுங்க வாயை திறக்கல…. எட்டு லட்சம் பர்சனல் லோன் போட்டு என் பங்குக்கு கொடுத்தேன். இன்னைக்கு வரைக்கும் அந்த கடன் மாசம் இருபத்தோராயிரம் என் சம்பளத்தில் பிடித்தம் ஆகுது.

பத்து பைசா வெளியில் கடன் வாங்காம எவ்வளவு சிக்கனமா பார்த்து பார்த்து ஒவ்வொன்னையும் யோசித்து யோசித்து செலவு செய்றேன் தெரியுமா? புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்க கூடாது.

என்னால் முடிந்த வரை உன்னை குறையில்லாம ராணி மாதிரி பார்த்துக்கிறேன். நீ கொஞ்சமும் புரிஞ்சுக்காம சின்னபிள்ளை தனமா அதிகம் பேசற… எத்தனயோ முறை எடுத்து சொல்லிட்டேன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற…. நமக்காக தான் வாழனும் ஊருக்காக வாழக் கூடாது.

அடித்து விட்ட குற்ற உணர்வு அவனை அரித்தெடுத்தது.

சுப்பு…. மெல்ல அவள் முதுகில் கரம் வைத்தான்.

பட்டென்று தட்டிவிட்டாள். கன்னம் பெரிதாய் வீங்கி இருந்தது கண்டு கலங்கிவிட்டான்.

சாரிம்மா….. அவள் கன்னத்தை வருட… வேகமாய் தட்டி விட்டாள்.

எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? பொண்டாட்டின்னு ஒருத்தி வரவே தானே வெட்டி செலவு? பிரம்மசாரியா இருந்து சம்பாதிச்சு சேர்த்து வச்சு தோப்பு துரவுனு வாங்கி வச்சு ரசிக்க வேண்டியது தானே…?

என்னை பெத்தவங்க என்னை ச்சீனு ஒரு வார்த்தை சொன்னதில்லை எருமைன்னு சொல்றீங்க? நீங்க கணக்கு வழக்கு பார்க்காம வாங்கி போடுறதுல எரும கணக்கா தின்னுட்டு பெருத்து போய் இருக்கேனா?

கை நீட்டறீங்க…. என்னால திருப்பி அடிக்க முடியாதுன்னு தானே உங்க ஆம்பள திமிரை என்கிட்ட காட்டறீங்க?

சுப்பு ஸாரிம்மா… தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.

அவனாலே அவனை மன்னிக்க முடியவில்லை. தானா கை நீட்டினோம்? தன் அடியை அவள் எப்படி தாங்கினாள்? வீட்டில் தெரிந்தால் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள்? அவள் வீட்டிற்கு தெரிந்தால்? நெஞ்சை பிசைந்தது.

சுப்பு….. நடுங்கும் கரம் கொண்டு அவளை அணைத்தான். அவள் திமிறினாள்.

சாரிடி பட்டு என்றவனின் கண்ணீர் அவள் கன்னத்தின் வீக்கத்தில் பட்டுத் தெறித்தது.

கோபமே வராத எனக்கு கோபம் வர மாதிரி பேசிட்ட…. ஸாரிம்மா நான் நிதானமா இருந்திருக்கணும். புரிஞ்சுக்கோடா செல்லம் ப்ளீஸ் குற்றவுணர்வுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!