Skip to content
Post Views: 4,365
அவளுடைய அறையில் சென்று அமர்ந்துகொண்ட காமாட்சி சிறிது நேரத்திலே அன்னைக்கான துணிகளை எடுக்க அறையை விட்டு வெளியில் வந்தாள், அவளையே முத்துலட்சுமி பார்த்திருக்க ஒரு பக்க கன்னம் கன்றி சிவந்திருந்தது.
Advertisement
அத்தையின் பார்வையை புரிந்துகொண்டவள் “அப்பா இன்னும் சாப்பிடல அத்த அவருக்குச் சாப்பாடு போடு நான் அம்மாக்கு துணி எடுத்து வைக்கிறேன்” என்று தாய் தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.
Advertisement
Advertisement
“வந்து சாப்பிடு மணி” என்ற அக்காவைப் பார்த்தவர் “எனக்குச் சாப்பாடு எறங்கும்னு நெனைக்குறியா” என்றார்.
Advertisement
“இறங்கித்தானே ஆகணும் நம்ம பிள்ளைங்க வாழ்க்கை கண்ணுமுன்னாடி ஊசலாடுதே அதைக் காப்பாத்த இந்த உசிரை நாம பிடிச்சு வெக்க வேண்டாமா மனசை விட்டுறாத தம்பி” என்றார் முத்துலட்சுமி.
“இவ்ளோ தெளிவா பேசுற நீ ஏன்க்கா மீனாவை இன்னும் ஏத்துக்காம இருக்க” என்றார் மாசிலாமணி.
“என் மகன் நிக்குற கோலம் என்னய அவளை ஏத்துக்க விட மாட்டீங்குது, ஆச்சி மேல எவ்ளோ ஆசையா இருந்தான்… தப்புதான் தப்புதான் அந்த நாசமா போன போதை தான் காரணம் ஆனா அதுக்காக மீனா செஞ்சதை ஏத்துக்க முடியுமா மணி? அவ திட்டம் போட்டுத் தானே எல்லாத்தயும் செஞ்சிருக்கா அதையும் என்ன தைரியத்துல…”.
“இப்படி தப்பு நடந்துட்டா நம்மளதான கட்டிக்கணும் வீட்டுலயும் கட்டி வெச்சுடுவாங்கன்னு எவ்ளோ யோசிச்சு திட்டம் போட்டுச் செஞ்சிருக்கா இவ்ளோ யோசிச்சாளே இன்னொருத்தியை மனசுல நினைச்சுட்டு இருக்கவன கட்டிக்கிட்டா தன் வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிச்சாளா”.
“நான் அவ்ளோ சொல்லியும் அவளை என் தலைல கட்டி வச்சீங்கல்ல அவ கூட வாழமாட்டேன், இப்படியே குடிச்சு குடிச்சு சாவுறேன் நீயும் உன் மருமகளும் நிம்மதியா வாழுங்கான்னு பொழுதனைக்கும் குடிச்சுக்கிட்டே கிடக்குறானே அவனைப் பாக்க பாக்க என் பெத்த வயறு எரியுதேடா தம்பி நான் என்ன செய்யட்டும்”.
“சின்ன வயசுலே புருஷனை தூக்கி கொடுத்துட்டேன் நான் தான் வாழல ஒத்த பிள்ளையைப் பெத்து வெச்சுருக்கேன் அவனாவது ஆசைப்பட்ட மாதிரி வாழணும்னு கனவு கண்டேன் அதும் போச்சு, இப்படியே விட முடியாதுதான் அவனை மாத்தணும் இவங்க ரெண்டுபேரையும் ஒண்ணா வாழவைக்க முயற்சி எடுக்கணும் இவங்களை நம்பி ஒரு கொழந்தைவேற பொறந்திருக்கு”.
“ஆனா என்னாலேயே இதை இன்னும் ஏத்துக்க முடியலையே அவனைக் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியுமா கொஞ்சம் நாள் எடுக்கும் மணி நாம என்ன தப்பு செஞ்சிருக்கோம்னு மீனாவும் உணரணும் அவன்கிட்ட நெருங்க என்ன வழின்னு அவளும் யோசிக்கணும், இதெல்லாம் உடனே நடக்காது இன்னும் எவ்ளோ போராடுனா இவங்க வாழ்க்கையை சரி பண்ண முடியும்னு எனக்குத் தெரியல” என்ற முத்துலட்சுமியின் கையைப் பிடித்துக்கொண்டு அவரின் அருகில் அமர்ந்தார் மாசிலாமணி.
“எனக்கும் புரியுதுக்கா என்ன செய்யன்னு தெரியாமத்தான் நானும் இப்படி…”.
“சரி விடு ஏதோ நேரம் சரியில்ல நம்மால முடிஞ்ச வரைக்கும் போராடி பாக்கலாம் அதுக்கு நமக்குத் தெம்பு வேணும் வா வந்து சாப்பிடு, இதுல எல்லாத்துலயும் அதிகமா கஷ்டப்படுறது ஆச்சிதான் பிள்ளையைக் கவனிக்காம விட்டுற கூடாது” என்றவர் காலை உணவைப் பரிமாற மாசிலாமணி அமைதியாக உண்டு முடித்தார்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள் காமாட்சி மனதில் பழைய நினைவுகள் மீண்டும் வட்டமிட்டது, ரகுவரன் விருப்பம் தெரிந்ததும் உடனேயே மீனாவிற்கு மாப்பிளை பார்க்கத் தொடங்கிவிட்டனர் சொந்தத்தில்தான் தேடினர்.
உறவுகளுக்குள் விஷயம் பரவ அந்த உறவில் ஒரு பையன் இந்த உறவில் ஒரு பையன் என்று வரத்தொடங்கியது, நிறைய இருக்கிறதே யார் சரியாக வருவார்கள் என்று கணவனும் மனைவியும் அலசி ஆராய்ந்து நான்கு மாத தேடலுக்குப் பிறகு ஐந்து வரனை முடிவும் செய்து வைத்துவிட்டனர்.
இன்னும் மூன்று நாட்களில் முதல் சம்மந்தம் வீடு தேடி வரக் காத்திருக்க காலை எழுந்து வந்தபோதே கையில் கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியோடு நின்றிருந்த மகளைப் பார்த்த அன்னம்மா அது என்ன என்று சரியாகத் தெரியாமல் அவளை நெருங்கி “என்ன மீனா இவ்ளோ சீக்ரம் எழுந்துட்ட” என்றவர் “இது என்ன” என்றார் அவள் கையைக் காண்பித்து.
“நான் மாசமா இருக்கேன்” என்றாள் குரலில் மட்டும் சிறு அச்சத்தின் சாயல் தெரிந்தது, உள்ளுக்குள் அவ்வளவு உதறல் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் நின்றிருந்தாள்.
“என்னடி சொன்ன” என்றார் குரலே எழும்பாமல்.
“நான் மாசமா இருக்கேன் இதுல ரெண்டு கோடு தெரிஞ்சா அதுதான் அர்த்தம்” என்றாள் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை தலையை இபப்டியும் அப்படியும் ஆட்டிக்கொண்டார் கைகளை உதறிக்கொண்டார் நெஞ்சை அமர்த்தினார் வேகமாகச் சென்று கணவனை எழுப்பி அழைத்துவந்தார்.
“இவ… இவ… என்னமோ சொல்றாங்க என்னனு கேளுங்க” என்றவர் அப்படியே தரையில் அமர்ந்துவிட.
“ஏய் அன்னம் அன்னம் என்னாச்சு” என்றார் மாசிலாமணி உரத்தக்குரலில், அப்பொழுதுதான் எழுந்துகொண்ட காமாட்சி தந்தையின் பதட்ட குரலில் “அம்மா” என்று அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தாள்.
“என்னம்மா” என்றாள் அன்னையை நெருங்கி.
“ஆச்சி… உன் அக்கா மாசமா இருக்காளாம்… எப்படிடி??” என்று உடல் பதறக் காமாட்சியை கட்டிக்கொண்டவர் அதே வேகத்தில் எழுந்து மீனாவை அடி வெளுத்துவிட்டார்.
“சொல்லுடி யாரு? எங்க போன? கொழுப்பெடுத்தவளே ஐயோ நாங்க எப்படி வெளில தலை காட்ட போறோம், அப்படி என்ன அவசரம் உனக்கு நாங்கதான் மாப்பிளை பாக்குறோமே, வேற எதாவது நினைப்பிருந்த அந்தக் கருமத்தைச் சொல்லித் தொலைச்சிருக்கலாமே இப்படி கேடு கெட்ட காரியம் செஞ்சிட்டு வந்து நிக்குறியே” என்று தன் தலையிலே அடித்துக்கொண்டார்.
“அம்மா அம்மா இரு” என்று அவரைப் பிடித்துக்கொண்டாள் காமாட்சி மாசிலாமணி மகளை உக்கிரமாகப் பார்த்து நின்றவர் “யார்” என்றார் பல்லைக் கடித்துக்கொண்டு.
“மாமா” என்றாள் மீனாட்சி தேம்பிக்கொண்டே.
அன்னம்மாவின் அடி இடியாக மேனியெங்கும் இறங்கியிருந்தது முகம் வீங்கித் தலை களைந்து சுவற்றோடு ஒட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
“எந்த மாமா” என்றார் கூர்மையாக.
காமாட்சியும் அன்னம்மாவும் இப்பொழுது அவளைக் கேள்வியாக நோக்க ஆச்சியை பார்த்துக்கொண்டே “ரகு மாமா” என்றாள்.
காமாட்சியின் முகத்தில் சட்டென்று ஒரு அருவருப்பு நம்பிக்கையின்மை “யாரை பத்தி தப்பா பேசுற” என்றார் அன்னம்மா சீறிக்கொண்டு, அவருக்கோ காமாட்சிக்கோ ராகுவின் குடி மற்றும் போதை பழக்கம் தெரிந்திருக்கவில்லையே தெரியவிடவும் இல்லை யாரும்.
“அன்னம் இரு” என்ற மாசிலாமணி மகளையே ஆராய்ச்சியாகப் பார்த்திருந்துவிட்டு முத்துலெட்சுமிக்கு அழைத்தார் “ரகுவை கூட்டிட்டு உடனே வீட்டுக்கு வா” என்ற தம்பியின் இறுகிய குரலில் மகனின் குடிப்பழக்கம் காமாட்சிக்கும் அன்னத்திற்கும் தெரிந்துவிட்டது மகனை வேண்டாம் என்று ஆச்சி சொல்லிவிடுவாளோ என்றுதான் அவர் சிந்தனை ஓடியது இப்படியொரு இடியை அவர் எதிர்பார்க்கவேயில்லை.
வீட்டின் சூழ்நிலையை அவதானித்த தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் “என்ன மணி என்னாச்சு” என்றவர் “மீனா என்னடி” என்றார் அவளை நெருங்கி.
“அவ வயித்துல வளர்ற பிள்ளைக்கு நீதான்…” என்ற மாசிலாமணி அதற்குமேல் அதைப் பேசப் பிடிக்காமல் “என்ன பதில்” என்றார் அவனிடம்.
“என்ன விஷயம் மணி என்ன பேசுற” என்றார் முத்துலட்சுமி.
“நீயே கேட்டுச் சொல்லுக்கா, உன் மறுமவ மாசமா இருக்காளாம் உன் வம்சம்தானாம் என்ன எழவுனு நீயே கேளு” என்றவர் ஒரு மூலையில் சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
என்ன செய்ய அடிக்கவா மிதிக்கவா வெட்டிப்போடவா என்ன செய்ய ஆத்திரம் அவ்வளவு ஆத்திரம் கோபத்தில் உடல் விறைத்தது மாசிலாமணிக்கு.
“என்ன ராகு இது என்னடா நடக்குது” என்றார் முத்துலட்சுமி மகனைப் பார்த்து, அவனின் விழிகள் காமாட்சியின் மீதே அவளும் அவனைத்தான் தீர்க்கமாகப் பார்த்திருந்தாள்.
“சொல்லுடா” என்றார்.
“எனக்குத் தெரியாதுமா” என்றான் குரலே எழும்பாமல்.
“தெரியாதுன்னா என்னடா அர்த்தம் என்னதான் நடக்குது சொல்லித்தொலைடா” என்று மகனைப் பிடித்து உலுக்க.
“எனக்கு உண்மையிலே தெரியாதுமா இவ தான் இவ தான் என்னமோ செஞ்சா அதுகூட எனக்குத் தெரியல அவளையே கேளுங்க நான் போதைல இருந்ததை அவ சாதகமா பயன்டுத்திக்கிட்டா” என்றான் ஆத்திரமாக.
‘போதையா!!’ என்று அன்னம்மாவும் காமாட்சியும் அதிர்ச்சியாகப் பார்க்க மாசிலாமணி அக்காவைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார், வீட்டில் சொல்லாதே திருமணத்திற்குள் அவனை நல்வழி படுத்திவிடுவேன் என்று தம்பியிடம் வேண்டிக்கேட்டிருந்தார் முத்துலட்சுமி.
“ஐயோ ஐயோ இன்னும் என்ன என்ன கருமம் எல்லாம் இருக்கு சொல்லித்தொலைங்க எல்லாத்தயும் மொத்தமாக எங்க தலைல கொட்டுங்க” என்று மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அன்னம்மா.
காமாட்சிக்கு ஒன்றுமே புரியவில்லை ‘இவனுக்குப் போதை பழக்கமா? குடியா வேறு எதுவுமா, அத்தைக்கும் தந்தைக்கும் தெரியுமா இது எப்படி மீனாவிற்கு தெரிந்தது, இவர்களுக்கிடையில் எப்படி இப்படி என்னதான் நடக்கிறது’ என்று தலையைப் பிடித்துக்கொண்டாள்.
துள்ளி எழுந்த மாசிலாமணி மீனாவை நெருங்கி “ஏய்” என்று கர்ஜிக்க சுவரோடு இன்னும் ஒண்டியவள் பயத்தோடு தந்தையை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன நடந்துச்சுன்னு இப்போ சொல்றியா இல்ல இங்கேயே வெட்டிப் பொதைக்கவா” என்க.
“அத்தைக்கு யூட்ர்ஸ் ஆபரேஷன் ஆயிருந்துச்சுல அப்போதான்” என்றாள் மெல்ல, மூன்று மாதம் முன்பு முத்துலெட்சுமிக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்தது இங்கேயே இருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தம்பியும் தம்பி மனைவியும் கூற “இல்ல அன்னம் இங்க பக்கத்துலதான அதோட ராகுவும் தினமும் வந்து போகச் சங்கடப்படுவான் நான் அங்கேயே இருக்கேன்” என்றார் அவர்.
மீனா தானாகவே முன்வந்து “அம்மா எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சு வீட்ல சும்மாதானே இருக்கேன் நான் அத்தையை பாத்துக்குறேன்” என்க அனைவரும் சம்மதித்துவிட்டனர்.
உணவெல்லாம் அன்னம் சமைத்து கொடுத்துவிடுவார் அத்தைக்கு துணையாக இவள் இருந்துகொண்டாள் போன் பார்ப்பது டிவி பார்ப்பது சாப்பிடுவது வேறு ஒன்றும் வேலையில்லை மீனாவிற்கு, ரகுவும் அவளிடம் பெரிதாகப் பேசவெல்லாம் மாட்டான் ஒரு சிரிப்பு மட்டுமே.
ஆனால் அவளால் அப்படி விடமுடியாதே உன்மீது நான் காதல் கொண்டு பைத்தியக்காரியாய் சுற்ற உனக்கு என் தங்கைமீது தான் காதல் வருமோ என்ற கோபம் ஒருபுறம் அவளைவிட அப்படி எதில் நான் குறைந்துவிட்டேன் என்ற பொறாமை ஒருபுறம்.
வந்த இரண்டாம் நாளே கண்டுபிடித்துவிட்டாள் அவன் ஒளித்துவைத்து போராடும் மறுபக்கத்தை குடியின் அளவு குறைந்திருந்தாலும் முற்றிலும் விட்டுவிடவில்லை, அதோடு உணவுக்குப் பிறகு மயக்கமருந்தும் உள் சென்றது.
அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த அன்று முத்துலட்சுமி மகனிடம் கூறியிருந்தார் “கதவைத் தாழ்ப்பாள் போடாத ரகு எனக்கு ஏதாவது வலின்னா உன்னைக் கூப்பிட கஷ்டமா இருக்கும்” என்று ஆகையால் கதவை வெறுமனே சாத்திவிட்டு படுத்துவிட்டான்.
எப்படியெல்லாமோ புரண்டும் உறங்க முடியவில்லை போதை வேண்டும் நடந்தான் உருண்டான் முடியவில்லை இரவில் அன்னைக்கு எதுவும் தேவையென்றால் தெளிவு வேண்டுமே என்று கட்டுப்படுத்தி பார்த்தான் அதற்குமேல் தாக்கு பிடிக்க முடியாமல் எடுத்துக்கொண்டான், அவனையே கண்கொத்திப்பாம்பாகக் கண்காணித்தவள் தனக்கான சந்தர்ப்பமாக அதைப் பயன்படுத்திக்கொண்டாள்.
தன்னையே மறந்து கிடப்பவனுக்கு புதிய போதையாகிப்போனாள் மீனா, தன்னிடம் என்னவோ மாற்றம் என்று அவனுக்குக் காலையில் தோன்றியது இரவின் இளமை விளையாட்டு எல்லாம் ஏதோ கனவு போலவும் மாயை போலவும் அவனால் பிரித்தறியமுடியவில்லை, அவள் அங்கிருந்த ஒருவாரமும் அவனுடன்தான் இருந்தாள் தன் திட்டத்தைச் செயல்படுத்திக்கொண்டாள்.
அவள் கூறிமுடிக்க யாரிடமும் அசைவில்லை சில நொடிகளுக்கு ‘டம் டம்’ என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்க மாசிலாமணி சுவற்றில் தலையை முட்டிக்கொண்டிருந்தார்.
“ஐயோ ஐயோ இதையெல்லாம் கேட்க வேண்டிய கேவலமான நிலைமைக்குப் போயிட்டேனே, இன்னும் எதுக்கு உசிரோடு இருக்கணும்” என்று சத்தம்போட்டு அழுதார், அன்னம் பதறி ஓடிச் சென்று கணவனைத் தாங்கிக்கொண்டார்.
முத்துலட்சுமி மகனை இயலாமையோடு பார்த்து அமர்ந்திருக்க தாயை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறி நின்றான்.
“பொண்ணாடி நீ அசிங்கமா இல்ல உனக்கு உன்னை நம்பி எங்க வீட்டுக்குள்ள விட்டதுக்கு இப்படி கேவலமான ஒரு காரியம் செஞ்சிருக்க இதுக்கு நான் பொறுப்பு இல்ல” என்று கத்தியவன் நேரே காமாட்சியிடம் சென்று நின்றான்.
அவள் கையைப் பிடித்தவன் “ஆச்சி நான் தப்பு பண்ணல உன் அக்காவே… அவ உனக்கு அக்கா இல்ல அவ ஒரு பொண்ணே இல்ல அவளே ஒத்துக்கிட்ட செஞ்சத நான் உனக்குத் துரோகம் செய்யல ஆச்சி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத” என்றான்.
அவன் கையை விலக்கியவள் அவனை விட்டுத் தள்ளி நின்றாள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை இதெல்லாம் அவள் கனவில் கூட என்னாதது, ஒரு காலை வேளை தங்கள் குடும்பமே இப்படி உடைந்து கிடக்கும் என்று என்னவில்லையே, தமக்கைக்கு இவனின் மீது இப்படி விருப்பம் இருக்கும் என்றுகூட யோசிக்கவில்லையே, அவளே சொல்லியிருக்கலாமே யாரிடமாவது குறைந்தபட்சம் தன்னிடமாவது சொல்லியிருக்கலாமே.
“தப்பு இல்லன்னு எப்படிடா சொல்ற அவ வயித்துல வளர்ற பிள்ளைக்கு யார் பொறுப்பு, சுயநினைவோடை நீ இருந்திருந்தா இந்தத் தப்பு நடந்திருக்குமா” என்றார் முத்துலட்சுமி மகனிடம்.
“நான் சுயநினைவோட இல்ல சரி அதுக்காக உங்க தம்பி மகளைக் கையைப் பிடிச்சு இழுத்தேனா தப்பா பாத்தேனா ஏன் தோ நிக்குறாளே எட்டு வர்ஷம் எட்டு வருஷமா அவளைத்தான் பொண்டாட்டியா மனசுல வெச்சு சுத்திட்டு இருக்கேன் ஒருநாளாவது அந்த மாதிரி அவளுக்கு ஒரு பீல் குடுத்திருப்பேனா” என்றவன்.
காமாட்சியிடம் திரும்பி “சொல்லுடி உன்கிட்ட எப்பவாது தப்பா பேசியிருக்கேனா பாத்திருக்கேனா, ஒரு ஆம்பள போதைல இருந்தா அவன் படுக்கையில ஏறிப் படுப்பாளா இவ” என்றான் மீனாவை காட்டி.
அன்னம்மா பெரிதாக அழத்தொடங்க “போதும் போதும் எதுவும் பேசாத” என்றார் மாசிலாமணி கையெடுத்து கும்பிட்டு அவனும் தளர்ந்து போய்ச் சோபாவில் அமர்ந்தான்.
“மாமா நான் தெரிஞ்சே எந்தத் தப்பும் செய்யல என்னால ஆச்சியை தவிர யாரையும் ஏத்துக்க முடியாது நீங்களாவது புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்” என்றான்.
“உங்கமேல தப்பு இருக்கோ இல்லையோ, அதுக்கு நீங்கதான் பொறுப்பு” என்றாள் காமாட்சி மீனாவின் வயிற்றை காண்பித்து “நீங்க எனக்கு வேண்டாம்” என்றவள் அவள் அறைக்குள் சென்று கதவடைதாள்.
“ஆச்சி ஆச்சி” என்று அந்த மூடிய கதவைப் பலம் கொண்ட மட்டும் தட்டிக்கொண்டிருந்தான் வெறி பிடித்தவன் போல “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஆச்சி நீன்னா எனக்கு உசிர் டி வேண்டாம் சொல்லாத ஆச்சி என்ன செய்யணும் சொல்லு செய்றேன் ஆனா என்னைய விட்டுப் போகாத நீ இல்லனா செத்துடுவேன் ஆச்சி” என்றான்.
உள்ளே காமாட்சி தலையணையில் முகம் புதைத்துக் கதறிக்கொண்டிருந்தாள், மாமனைதான் கட்ட போகிறோம் என்று முடிவானதிலிருந்து மனதில் ஒரு நேசம் முளைவிடத் தொடங்கியிருந்தது அவனைத் தூர நின்று ரசிக்கத் தொடங்கியிருந்தாள் தன்னை காண்பதற்காக ஏதேனும் சாக்கு சொல்லி வருவானா என்று ஆசை பூக்க தொடங்கியிருந்தது, அனைத்தும் இப்படி முளைவிட்ட உடனேயே கருகிவிடும் என்று கருதவில்லை.
யாரிடமாவது சொல்லியிருக்கலாமே மீனாவிற்கு இப்படியொரு விருப்பம் இருப்பது தெரிந்தால் நிச்சயமாக மாசிலாமணி இந்தத் திருமணத்தைப் பற்றி யோசித்திருப்பார் அவர்களுக்கு யோசிப்பதற்கான எந்த அவகாசத்தையும் கொடுக்காமல் இப்படி செய்துவிட்டாள்
வீடே போர்க்களமாக இருந்தது காலை விடியலில் தொடங்கியது இருள் கவிழ்ந்த போதும் அப்படியே இருந்தது ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை.
“என்ன செய்யலாம்” என்றார் முத்துலட்சுமி நீண்ட மௌனத்திற்கு பிறகு, அனைவரும் அமைதியாகவே இருக்க “கல்யாணத்தை நடத்திடலாம்” என்றார் அவரே மீண்டும்.
“அம்மா” என்று அலறியவன் பொருட்களை அள்ளி வீசினான் “இவளைக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் போவேன் அது மட்டும் நடக்காது” என்றான்.
“சரிப்பா கொல்லு அவளை மட்டும் இல்ல எங்க எல்லாரையும் சேத்து கொன்னுடு” என்றார் முத்துலட்சுமி, சண்டை அழுகை வெறுப்பு கோபம் என்று மூன்று நாட்கள் அந்த வீட்டின் மனிதர்கள் அந்த நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடந்தனர்.
ஒன்று திருமணம் இல்லையென்றால் இப்படியே அனைவரும் ஒன்றாக விஷம் குடிக்கலாம் என்று முத்துலட்சுமி பிடிவாதமாக நின்றார், சாப்பிடவும் அவர் மறுத்துவிட நிலைமை மிகவும் மோசமாகச் சென்றுகொண்டிருந்தது இறுதியாக மீனா ரகுவரன் திருமணம் ஒரு வாரத்தில் என்று முடிவு செய்யப்பட்டு உறவுகளுக்கு அழைத்துச் சொல்லப்பட்டது.
அனைவரும் கேள்விகளால் துளைத்தனர் “சின்னவளுக்குத்தானே ரகுவை பேசிவெச்சிருந்தது இப்போ என்ன” என்று, பதில் சொல்லி மாளவில்லை எப்படியெல்லாமோ மழுப்பித் திருமணத்தை நடத்தியாயிற்று விஷயமும் கசிந்தது இந்தப் பேச்சுக்களையெல்லாம் வாழ்வில் கேட்போம் என்று மாசிலாமணியும் அன்னமும் கனவில் கூட நினைக்கவில்லை.
அவமானம் பிடுங்கி தின்றது அனைத்து இடங்களிலும் தலை குனிந்து நின்ற பெற்றோரைக் காண காண மீனா மீதும் ரகு மீதும் வெறுப்பு கூடியது காமாட்சிக்கு, மகனைச் சரியாக வளர்க்கவில்லை இப்படி ஒருத்திய எப்படி நம்பி வீட்டில விட்ட என்ற உறவுகளின் கேள்வியில் கூனிக்குறுகி நின்று நின்று மனமே மறுத்துப்போனது முத்துலெட்சுமிக்கு.
அந்த நாட்களையெல்லாம் எண்ணிப்பார்க்கவே பயமாக இருந்தது காமாட்சிக்கு ஒருவிதம் கடந்து வந்துவிட்டாள், இதோ இபோழுது பிள்ளை பிறந்ததை தந்தை அனைவருக்கும் கூறியிருப்பார் மீண்டும் ஒருமுறை அதே கேலி கிண்டல் குத்தல் பேச்சுக்கள் நினைக்கவே மலைப்பாக இருந்தது.
பேக் செய்த பேகோடு வெளியில் வந்தவள் தந்தையிடம் அதைக் கொடுக்க “சரி இதைக் கொடுத்திட்டு அங்க ஏதும் தேவை இருந்தா பாத்துட்டு வரேன்” என்றவர் கிளம்பி சென்றுவிட அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டு வாயிலில் நின்றிருந்தான் ரகுவரன்.
error: Content is protected !!