Skip to content
Post Views: 2,227
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் -11
Advertisement
விஜயேந்திரனும், வைஷுணவி தேவியும் இராஜராஷேஸ்வரர் கருவறை முன் கைகூப்பி நின்றிருந்தனர்.. இருவருக்கும் ஏகாப்பட்ட வேண்டுதல்..
Advertisement
Advertisement
வீ. பி சுவாமியை கண்திறந்து பார்த்தவாறே கடவுளிடம் நன்றி சொல்வது போல் புன்னகையோடு நின்றிருந்தான்..
Advertisement
வைஷு கடவுளிடம் நீ எல்லாத்தையும் பாத்துட்டு தானே இருக்க ஈஸ்வரா,, இனிமேலாவது என்னை நிம்மதியா வாழ விடு போதும்,, என்னால முடியல, என்று ஈஸ்வரனை பார்த்து கண்கலங்கி நின்றிருந்தாள்,, ஐயர் சிவனுக்கு தீபாரதனை காண்பித்து விட்டு இவர்களிம் வந்து, கற்பூர தட்டை நீட்ட.. இருவரும் ஆரத்தியை கண்ணில் ஒற்றி கொண்டனர்..
வைஷு அமைதியாக விஜயேந்திரனுடன் நடந்தாள், அவன் சொல்வதை பொம்மை போல செய்தாள்.இருவரும் அம்மன் சன்னிதியில் வணங்கி நின்றிருக்க.. ஐயர் குங்குமத்தை வீ. பி யிடம் கொடுத்து,, வைஷுவின் நெத்திக்கு மேல் வைத்து விட சொல்ல..
விஜயேந்திரன் குங்குமத்தை ஆசையாக எடுத்து வைஷுவின் நெத்தில் வைத்து விட்டான்.. அவளோ எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அமைதியா அவனின் முகம் பார்த்து சிறு இதழ் விரிந்து புன்னகை செய்ய.. அதுவே வீ. பிக்கு பெரியதாக தெரிந்தது..
இருவரின் பக்கத்தில் இருந்த சௌசன்யா தம்பி முகத்தையும், வைஷுவின் முகத்தையும் வைத்தே புரிந்து கொண்டாள். அந்த பெண்ணிற்க்கு இந்த திருமணத்தில் அவ்வளவு விருப்பம் இல்ல போலவே,, வீ. பிக்கு தான் ரொம்ப பிடிச்சுருக்கு போல.. சந்தோசமா இருக்கான் என்றாள்..
கோவிலில் அனைத்து தெய்வங்களை வணங்கிவிட்ட முடிக்க..
“போலாமா” என்று சௌசன்யா இருவரையும் பார்த்து கேட்டு,, திருமணமான ஜோடிகளோடு வீடு வந்து சேர்ந்தாள்.
இந்திரா தேவிக்கு நடந்தது எதுவும் பிடிக்க வில்லை, கணவருக்காக வேலை கார பெண்ணிடம்.. ஆரத்தி எடுக்கு ரெடி பண்ணி வை என்று சொல்லி விட்டு யாழினியை அழைத்து கொண்டு அவர் அறைக்கு சென்று விட்டார்..
நாகில்லி வெங்கடேஸ்வரர் சமையல் செய்யும் பெண்மணியை அழைத்து அசைவ விருந்து ரெடி பண்ண சொன்னார்..
சௌசன்யா தம்பிக்கு, வைஷுவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்து வந்தாள்..
வைஷுவை பூஜையறைக்கு அழைத்து சென்று சௌசன்யா விளக்கேற்ற சொல்ல… வைஷு பயந்து கொண்டே செய்தாள், எங்கே இந்திரா தேவி வந்து மறுபடியும் திட்டி விடுவாரோ என்ற பயம் அவளுக்கு..
சௌசன்யா இருவருக்கு முதலில் இனிப்பு உண்ண கொடுத்தாள்..
“அக்கா அம்மா எங்கே?””..
“அவங்க ரூம்புல தான் இருக்காங்க, விஜெய்”..
“நீ எல்லாரும் சாப்பிட சாப்பாடு எடுத்து வை நான் அம்மாவை கூட்டிட்டு வர்ரேன்” என்றவன் தாய் அறை நோக்கி சென்றான்..
“மீ” என்று கதவை தட்டி விட்டே உள்ளே வந்த மகனை பார்த்து முறைத்த இந்திரா தேவி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவர்,, மகனை பார்த்ததும்,, கோபப்பட்டு பக்கத்து அறைக்கு சொல்ல..
“மீ, சாரி மீ” என்று இந்திரா தேவியின் கையை பிடித்துக்கொள்ள, “போ விஜெய்” என்றவர் மகன் முகத்தை பார்க்காமல் திரும்பி நிற்க…
“மீ, நான் உங்க பையன் தானே,, என்னை மன்னிக்க கூடாதா”?..
“என்கிட்ட எதுக்கு சாரி சொல்லுற விஜய்,, நான் தான் உன் பொண்டாட்டியை அடிச்சவள் ஆச்சே,, அப்போ ஏன் என்கிட்ட வந்து பேசுற,, நான் ஒன்னும் சொல்ல கூடாதுன்னு சொன்ன, அப்படி சொன்னா வீட்ட விட்டு போயிடுவீயா?.. போ, போ,, நீ போன அடுத்த நிமிசம் நான் உயிரோட இருக்க மாட்டேன்” என்று கண்கலங்கிய அன்னையை…
கட்டி அணைத்து கொண்டவன்,, “சாரி மீ,, நான் அப்படி பேசியிருக்க கூடாது,, சாரி மீ,, என் செல்லம் அம்மா என் மீ இல்ல, நான் பேசுனதுக்கு சாரி”..
“போ வீ. பி” என்றார் மகனை தள்ளியவாறே..
“மீ வைஷு ரொம்ப நல்ல பொண்ணு,, யாரோ அவள பத்தி உங்கிட்ட தப்பா கைடு பண்ணி இருக்காங்க, என்றான்..
“நீ இப்போ இப்படி தான் பேசுவ,, காதல் மயக்கத்துல இருக்க.. நான் சொல்லுறதெல்லாம் தப்பா தான் தெரியும்?””..
“மீ சாரி மீ,, நீங்களே அவள கொஞ்ச நாள் கழிச்சி கண்டிப்பா புரிஞ்சீப்பீங்க,, என்னை பிளஸ் பண்ணுங்க” என்றவன் அவரின் காலில் விழ..
மகன் காலில் விழுந்தது மனம் உருகியவர்.. “நல்லா இரு”.. என்று கண்ணீரை துடைத்து கொண்டார்..
“மீ வாங்க போவோம் சாப்பிட”” என்றான்.. “எனக்கு வேண்டாம் விஜெய், நீயே போய் சாப்பிடு, நான் கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கிறேன்.. என்றார்..
“மீ அப்பா நீங்க வராம்ம சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டாரு,, வாங்க மீ” என்றான்.. அவரின் குணம் அறிந்து..
“சரி நீ போ, நான் யாழினியை எழுப்பி கூட்டிட்டு வர்ரேன்” என்க.
“சரி மீ” என்றவன் வெளியே செல்ல..
இந்திரா தேவியின் மனதில் மகன் எப்பையும் போல தான் இருக்கிறான், யாரு வந்தா எனக்கு என்ன,, என்றவர்,, யாழினியை,, “யாழினி,, யாழினி குட்டி எழுந்திரு, என்று எழுப்பிக்கொண்டிருந்தார்,..
டைனிங் டேபளில் அனைத்து உணவுவகைகளையும் எடுத்து வைத்திருக்க.. நாகில்லி மகனையும், மருமகளை சாப்பிட அழைத்தவர்.. மனைவியை இங்கே இருந்த வாறே “இந்திரா, யாழ்” என்று அழைத்தவர்.. “வீ. பி நீ போய் மருமகள கூட்டிட்டு வா”. என்றார்..
“ஓகே நானா” என்றவன். வைஷுவை தேடி போக.. அவளோ பூஜை அறை பக்கத்தில் உள்ள சேரில் அமர்ந்திருந்தாள்.
“பொம்மா நீ, இங்கே தான் இருக்கீயா வா, சாப்பிட போலாம்”.. என்று அழைக்க
“எல்லாரும் சாப்பிடட்டும் சார், நான் அப்புறம் சாப்பிடுறேன்,,”..
“நீயும் வா பொம்மா, எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்’..
“இல்ல சார், கொஞ்ச நாளைக்கு நான் தனியாவே சாப்பிடுறேன்,, நீங்க போய் சாப்பிடுங்க..
“ஏன் பொம்மா?”..
“இல்ல இந்திரா தேவி மேம், என் மேல கோபமா இருக்காங்க. கொஞ்சம் கோபம் குறையட்டுமே”
“அதெல்லாம் மீ ஒன்னும் சொல்ல மாட்டாங்க, நீ ஏன் பயப்படுற, நீ விஜயேந்திரனோட பொண்டாட்டி, இந்த வீட்டுல எல்லா உரிமையும் உனக்கு இருக்கு, அம்மா ரொம்ப நல்ல மாதிரி வாபொம்மா”… என்றான்..
அவள் நான் வரமாட்டேன் என்பது போல தலையாட்ட..
அவனோ அவள் அருகில் வந்து “நீ இப்போ என் கூட வர்ரீயா, இல்லை உன்னை தூக்கிட்டு போகவா?” என்று வைஷுவின் கண் பார்த்து சொல்ல..
அவளோ அவனை முறைத்து.. “சொன்னா கேளுங்க வீ. பி சார்” சொல்லி கொண்டு இருக்கும் போது..
“விஜெய்” என்று இந்திரா தேவியின் குரல் கேட்க..
“மீ தான், வா, வா” என்று அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு டைனிங் டேபள் வந்தான்..
வீ. பியின் குடும்பம் அமர்ந்திருக்க..
“உங்காரு வைஷு” என்றாள் சௌசன்யா..
“நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்றவள் போக பார்க்க..
அவளின் கை பிடித்து சௌசன்யா “ஏய் புது பொண்ணு,, முதல் முதல்ல கல்யாணமாகி வந்து இருக்க, இரண்டுபேரும் ஒன்னா சேர்ந்து தான் சாப்பிடனும் உட்காரு,, வீ. பி உங்காரு அவ பக்கத்தில்” என்று தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கு
அசைவ உணவு பரிமாற….
“வீ. பியை நிமிர்ந்து பார்த்தவள் ஏதோ சொல்ல வர..
“என்னடா? பொம்மா” என்றான்.
“நான் வெஜ் மட்டும் தான் சாப்பிடுவேன்” என்று கூற..
அனைவரும் என்ன என்பது போல் அதிர்ச்சியாகி பார்க்க.. சௌசன்யா விழுந்து, விழுந்து சிரித்தாள் தம்பியை பார்த்து..
“அக்கா” என்று ஒரு அதட்டல் போட.. மீண்டும் அவனை பார்த்து சிரித்தவளை
பார்த்து “சும்மா இரு,, ஆதி கிட்ட சொல்வா”..
“சொல்லு அவரும் உன்னை பாக்கதான் வந்துட்டு இருக்கார்” என்று தம்பியை நக்கல் பண்ணி சிரிக்க.
வைஷுவுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவங்க சிரிக்குறாங்க.. என்று சௌசன்யாவை பார்க்க..
“சாரி வைஷு உனக்கு விசயம் தெரியாதுல்ல,, என்று மீண்டும் சிரிக்க..
நாகில்லியும் மகனை பார்த்து சிரித்து இருந்தவர்,,
“டேய் மகனே என்னை மாதிரி நீயும்” என்று சிரிக்க..
இந்திரா தேவிக்கு மகன் எப்போதோ சொல்லியதை நினைத்து பார்த்தவர் மனதுக்குள் சிரிக்க..
சௌசன்யா வைஷுவுக்கு பரிமாறி இருந்த அசைவ உணவை எடுத்து வைத்து விட்டு..
சைவ உணவை எடுத்து வைத்து கொண்டே தம்பி மனைவியிடம்..
“உன் புருஷன் அசைவ பிரியன், அசைவம் இல்லாம ஒரு வேலை கூட சாப்பிட மாட்டான். நாங்கெல்லாம் அவனை டெய்லி அசைவம் சாப்பிடாதன்னு திட்டுவோம்.. எங்க வீட்டுல அம்மா மட்டும் தான் வெஜிடேரியன்.. நாங்க எல்லாம் நான்வெஜ் சாப்பிடுவோம்.. உன் புருஷன் ஓவரா கறி சாப்பிடுவான்,, அப்போ நாங்க சொல்லுவோம் உன் பொண்டாட்டி வெஜ்ஜ வந்தா என்ன பண்ணுவேன்னு,, அதுக்கு,, அவன் என்ன சொன்னான் தெரியுமா,,,? எனக்கு வர பொண்டாட்டி என்னை விட அதிகமா நான்வெஜ் சாப்பிட மாதிரி தான் கல்யாணம் பண்ணுவேண்ணு.. இப்போ நீ வெஜ்,, அவன் மூஞ்ச பார்றேன்”,, என்று சிரிக்க..
அவளோ விசயம் கேட்டு வீ. பியை பார்க்க..
“நீ உண்மையாவே வெஜிடேரியனா பொம்மா?”.. என்றான் கவலையான முகத்தோடு..
அவளோ “ஆமாம்” என்று தலையாட்ட..
யாழினி இந்திரா தேவியின் அருகில் அமர்ந்து கொண்டே வைஷு பார்த்திருந்தாள்..
வைஷு அவளை பார்க்க..
“”ஹாய் ஆண்ட்டி” என்று கையை அசைக்க..
“ஆண்ட்டி சொல்ல கூடாது யாழ், வைஷுவை அம்மா கூப்பிட,, இல்ல மம்மி கூப்பிடு என்றான்..வீ. பி..
“நோ நானா,, நான் மீ.. யின்னு தான் கூப்பிடுவேன்.. என்றாள் யாழினி..
“சரிடா உன் இஷ்டம் உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே கூப்பிடு” என்றான் வீ. பி..
அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. ஆதித்யா “விஜெய்”என்று சத்தம் போட்டு கொண்டே வீட்டின் உள்ளே வந்தவன் வீ. பி பார்த்ததும்..
நண்பனை தூக்கி சுத்தி இருந்தான்..”டேய் விடுடா ஆதி” என்று வீ. பி கத்த..
அவனை இறக்கி விட்டவன்..
வீ. பியின் தோளில் அடிக்க.
“டேய் வலிக்குதுடா” என்றான் வீ. பி ஆதித்யாவிடம்..
error: Content is protected !!