Skip to content
Post Views: 2,311
நாகில்லி “வீ. பி .. மாப்பிள்ளையை”மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று ஒரு அதட்டல் போட..
“சாரிப்பா,,”.. என்றான்..
Advertisement
“வாங்க மாப்பிள்ளை” நக்கலாக அவனை பார்த்து அழைத்து சிரிக்க..
“வந்துட்டேன் மாச்சான்”என்று அவனும் வம்பு இழுத்து சிரித்தவன்..
Advertisement
Advertisement
“டேய் சொல்லாம, கொல்லாம இப்படியா கல்யாணம் பண்ணுவ?”..
“சாரி ஆதி,, என் நிலமை அப்படி””.
Advertisement
“சரி சிஸ்டர் எங்கேடா?..
“வா” என்றவன்,, “பொம்மா, என்பிரண்டு உன்னை பார்க்கனுமுன்னு சொன்னான்,”,..என்று கூப்பிட
சௌசன்யா வைஷுவிடம் “என் ஹஸ்பண்ட்டும் , வீ. பியும் பிரண்டு” என்று அவளுக்கு அறிமுகம் படுத்தி வைக்க..
ஆதித்யாவை பார்த்த வைஷு வணக்கம் வைக்க..
“வாழ்த்துக்கள் மா” என்றான் ஆதி..
வைஷு பார்த்து சிரித்து தலையாட்ட..
வீ. பியின் காதில் “எங்கே இருந்துடா கண்டு பிடிச்ச?””.. என்றான்..
நண்பனை பார்த்து முறைத்தான்..
“ஏன்டா இப்படி பண்ணி வச்சு இருக்க.. நாளைக்கு மீடியாவுக்கு, பிஸ்னஸ் பீப்பிளுக்கு தெரிஞ்ச ஆயிரம் கேள்வி கேட்பாங்க உன் கல்யாணத்தை பத்தி? என்ன சொல்ல போற”.. வீ. பி என்றான்..
அவனோ அமைதியாகி நிற்க..
“அங்கிள்” என்று நாகில்லி வெங்கடேஸ்வரரிடம் சென்ற ஆதித்யன்.. “அங்கிள் கல்யாணம் தான் சிம்பிள்லா பண்ணிட்டான்,, நாம எல்லாருக்கும் தெரியுற மாதிரி ரிசப்ஷன் வச்சுருலாம் என்ன சொல்லுறீங்க”?..
“சரி மாப்பிள்ளை, நானும் அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றவர் மனைவியை பார்க்க..
“என்னை ஏன் பாக்குறீங்க, எல்லாம் என்னை கேட்டு தான் செய்யுற மாதிரி” என்று கணவனையும்,, மகனையும் முறைக்க..
அனைவரும் பேசி அடுத்த வர, ஞாயிற்று கிழமை ரிசப்ஷன் வைக்கலாம் என்று முடிவு எடுத்தனர்..
அவர்கள் வீட்டின் வாசல் முன் போலிஸ் சீப் வந்து நிற்க.. அதில் இருந்து சஞ்சனாவும் போலீஸ்சும் இறங்கி வீட்டினுள்ளே வர..
அனைவரும் ஏன் போலீஸ் வருது?.. என்று பார்க்க.
இந்திரா தேவி வாய் விட்டே “சஞ்சனா ஏன் போலீஸ் சோடு வர”.. என்றவர் அவள் அருகில் சென்று “என்னாச்சு சஞ்சனா?”…
என்று கேட்க..
“இனி உங்க கிட்ட பேசி எனக்கு ஒன்னும் ஆகபோறது இல்ல, என் லாயர் பேசு வாறு”.. என்றாள்..
“சார்” என்று லாயரை அழைக்க..
ஒரு ஆடர் காம்பி லட்டரை இந்திரா தேவியிடம் லாயர் தர..
அதை வாங்கி படித்து பார்த்தவர் அதிர்ச்சியாகி நிற்க..
மனைவியிடம் இருந்த லட்டரை வாங்கி படித்து பார்த்த நாகில்லி, மகனிடம் அதை தர..
என்னவாக இருக்கும் என்று வாங்கி பார்த்து வீ. பி அதிர்ச்சியாக இருந்தாலும். அவன் அதை சஞ்சனாவிடம் காட்டாமல், மனதில் இவள் ஏதாவது செய்வாள் என்று தெரியும் ஆனால் இதை எதிர் பார்க்க வில்லை விஜயேந்திரன்..
“யாழ், மம்மி யா கூட்டிட்டு உன் ரூம் போ” என்று யாழினியிடம் வீ. பி சொல்ல..
“ஓகே நானா” என்றவள், “மீ… வாங்க” என்று வைஷுவை அழைத்து அவள் ரூம் நோக்கி செல்ல..
“யாழினி இங்கேயே இரு” என்று சஞ்சனா கூறினாள்..
யாழினி ஒரு நிமிஷம் நிமிர்ந்து தந்தையை பார்க்க.. “போ பங்காரம்” என்றான் மகளிடம..
“வாங்க மீ..” என்று யாழினி வைஷுவை அழைத்து கொண்டு அவள் அறைக்கு சென்று விட..
“யார் குழந்தைக்கு, யாரு மம்மி?”… என்றாள் சஞ்சனா கோபமாக..
“உனக்கு இப்போ என்ன வேணும்”..
என்றான் வீ. பி சஞ்சனாவிடம் நேரடியாக.
“எனக்கு என் அண்ணண் ராம் பொண்ணு யாழினி எனக்கு வேணும்”… என்றாள்..
“சாரி யாழினி உன் அண்ணன் பொண்ணு இல்ல, அவ என் பொண்ணு”…
“ஹலோ மிஸ்டர் வீ. பி,, என்ன? பெரிய ஹீரோ வா நீங்க.. உங்க
அக்கா முதல் புருஷன் என் அண்ணன் ராம் செத்துட்ட,, உடனே நீங்க குழந்தையை தூக்கி வச்சி கிட்டு, உங்க அக்காவுக்கு, உங்க பிரண்ட் ஆதித்யாவை கல்யாணம் பண்ணி வச்சு சந்தோசமா இருப்பீங்களாம்.. என் அண்ணன் செத்துபோயிட்டான் அவன் பொண்ணையாவது எங்க கிட்ட கொடுக்க பிலிஸ்” என்றாள் கண்ணீர்ரோடு..
” யாழினியை கொடுக்க முடியாது,, என்னபண்ண முடியும் உன்னால?. பண்ணீக்கோ யாழினி என் பொண்ணு வெளியே போடி” என்றான்..
“வீ. பி” என்று சஞ்சனா கத்த..
“பல்ல தட்டிருவேன், இன்னொரு முறை வீ. பி யின்னு சொன்னா” என்றான் எச்சரிப்பது போல…
“லாயர் சார் அந்த பேப்பரை கொடுக்க’.. என்றாள்..
அந்த பேப்பரை வாங்கி பார்த்து கூலாக சிரித்தவன்..
“இது என்கிட்டையும் இருக்கு,” . என்றான் நக்கலாக.
யாழினியோட பெர்த் சர்ட்டிப்பிகேட்டில் அதில் தந்தை என்ற இடத்தில் ராம் பேர் இருக்க.. தாய் என்ற இடத்தில் சௌசன்யா பேர் இருக்க..
லாயர் விஜயேந்திரனிடம் “சார் சஞ்சனா மேடம் அவங்க அண்ணன் பொண்ண வளக்க கேட்குறாங்க.. அவங்க அம்மா வேற கல்யாணம் பண்ணிட்டாங்க, அதனால யாழினியை அவங்க வளக்க கோர்ட்ல ஆர்டர் வாங்கி இருக்காங்க,, நீங்க யாழினியை சஞ்சனா கிட்ட ஒப்படைங்க” என்று லாயர் கூற..
எல்லோரும் லாயர் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ச்சியாக…
சௌசன்யா கதறி அழ… ஆதித்யா மனைவியை சமாதானம் பண்ணிக்கொண்டு இருந்தான்..
இந்திரா தேவிக்கு நடப்பது எதுவும் சரியில்லை, தன் பேத்தியை அவரால் விட முடியாது என்றவர்.. சஞ்சனாவிடம் சென்று “சஞ்சனா பிலிஸ் சஞ்சனா, என் பேத்தியை எங்ககிட்ட இருந்து பிரிச்சிறாத, உனக்கு எவ்வளவு பணம் வேணாலும் தர்ரேன்,, என் பேத்தியை விட்டுட்டு” என்றார்..
“பணம், பணம்! பணம் இருந்தா போதுமா,, என்கிட்டையும் தான் பணம் இருக்கு,, உங்களுக்கு நான் பணம் தரவா. எவ்வளவு வேணும் உங்களுக்கு'” .. என்றாள்..
இந்திரா தேவி மீண்டும் சஞ்சனாவிடம் தன் பேத்திக்காக கெஞ்ச..
“மீ… அவகிட்ட ஏன் மீ,, இங்க வாங்க உங்க பேத்தியை யாராலும், உங்க கிட்ட இருந்து பிரிக்க முடியாது”.. என்றான்..
“விஜெய் என் பேத்தி எனக்கு வேணும், அவள என்னால விட முடியாது”.
“மீ பொறுமையா இருங்க,,” என்றவன் ..
“பிரகாஷ்” என்று அவனை அழைத்து அவன் ஆபிஸ் ரூம்பில் கீழே உள்ள கபோர்டில் உள்ள மஞ்சள் நிற பைலை எடுத்து வர சொன்னான்…
பிரகாஷ் அந்த பைலை எடுத்து வந்து வீ.பியிடம் தர…
சௌசன்யா அழுது கொண்டே இருக்க.. “அக்கா அமைதியா இரு, இல்ல உள்ள போ” என்றான்..
“நான் போக மாட்டேன்” என்றவள் கண்ணை துடைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.. ஆதி அவளின் கைபிடித்து “அழகூடாதுடா” என்று தலை கோதி விட்டுக்கொண்டு இருந்தான்.. மனைவிக்கு..
“நீங்க யாழினியை கூப்பிடுங்க வீ. பி, நான் யாழினியில்லாம போக மாட்டேன்” என்றாள்..சஞ்சனா..
சஞ்சனாவிடம் ஒரு பத்திரத்தை காண்பித்தான் வீ. பி, அதில் சௌசன்யா யாழினியை சட்டப்படி வீ. பிக்கு தத்து கொடுத்தது போல் எழுதி இருக்க..
“தத்து கொடுத்தா நீங்க அப்பா ஆகிட முடியுமா,, பணம் கொடுத்த ஆயிரம் பாம் வாங்கலாம்,, இந்த பாம் வச்சு, நீங்க ஒன்னும் பண்ண முடியாது” என்றாள் சஞ்சனா..
“சரி நீ நம்பாத, இத பார் இப்போ நம்பித்தான் ஆகணும்”.. என்று இன்னொரு பேப்பரை தர..
அதை வாங்கி பார்த்தவள் அதிர்ச்சியாகி. பின்பு இத நான் நம்ப மாட்டேன்.. நீங்க பொய் சொல்லுறீங்க,, இது நான் நம்ப மாட்டேன். காசு குடுத்து டெஸ்ட் பண்ணி ரிசல்ட் வாங்கி இருப்பீங்க” என்றவள்.
“நான் யாழினி இல்லாம இந்தவீட்ட விட்டு போக மாட்டேன்,, நான் ஹைகோர்ட்க்கு போவேன், யாழினியை எப்படி வாங்கனுமுன்னு எனக்கு தெரியும்” என்று கலாட்டா பண்ணி கொண்டு இருந்தாள்..
வீ. பி யின் வீட்டு முன் கமிஷனரின் கார் வந்து நிற்க.. அதில் இருந்து இறங்கி வந்தார் கமிஷனர்..
நாகில்லி முன்னே சென்று அவரின் நண்பனாகிய கமிஷனரை அழைத்து வர..
போலிஸ்காரர்கள் கமிஷ்னரை பார்த்து அமைதியாகி விட..
சஞ்சனா யார் இருந்தாள் எனக்கு என்ன நான் யாரும் பயப்பட மாட்டேன் என்றவள்.. கமிஷனர் அருகில் சென்று ராம் மகள் தான் யாழினி,, என் அண்ணன் பொண்ணு எனக்கு வேணும்,, இது யாழினி பிறந்த சர்டிபிகேட்.. மற்றும் கோர்டில் இருந்து வாங்கி வந்த ஆர்டர் காப்பியை,, என்று அனைத்தையும் கமிஷனரிடம் தர.
அதை வாங்கி பார்த்தவர் “எல்லாம் சரியா இருக்கு வீ. பி” என்றார்..
“அங்கிள் யாழ் என் பொண்ணு” என்றான்..வீ. பி..
“இல்லை சார் யாழினி, என் அண்ணன் பொண்ணு, அதுக்கு இதோ ஆதாரம் உங்க கிட்ட இருக்கு” என்றாள்..
“இதுக்கு என்ன சொல்ல போற” என்றார் கமிஷனர்.. வீ. பியை பார்த்து..
“அங்கிள்” என்றவன்.. அவன் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த,, டீ, என், ஏ சர்ட்டிபிவி கேட்டை கமிஷனரிடம் தர..
அதை வாங்கி பார்த்தவர்.. என்ன வீ. பி இதில் யாழினியோட அப்பா விஜயேந்திரனும், அம்மா வைஷ்ணவி தேவி ன்னு போட்டு இருக்கு..
“ஆமாம் சார், யாழினி எனக்கும் வைஷுவுக்கு பிறந்த குழந்தை என்றான் வீ. பி..
“எப்படி வீ. பி”” என்று அவர் கேட்க..
“இல்ல சார் இவன் பொய் சொல்லுறான்.. யாழினி 10 மாசம் சுமந்து பெத்தது சௌசன்யா” என்றாள் சஞ்சனா..
“நான் யாழினி 10 மாதம் சுமந்து பெத்தேன்,, அதுக்கு என் தம்பி எக்கு டொனேட் பண்ணதால பிறந்த குழந்தை தான் யாழினி,, அதில் வைஷு உயிர் அணு சேர்ந்தது எனக்கு தெரியாது சார்,, என் முன்னால் ஹஸ்பண்டால எனக்கு குழந்தை பெத்து முடியாத சூழ்நிலை,, என் தம்பி கிட்ட கேட்டேன் அவன் முதல்ல முடியாதுன்னு சொன்னான்,, அப்பறம் எடுத்து சொல்லி எக்கு டொனேட் பண்ண ஓகே சொன்னான்,, அதுக்கு வேற ஒரு பொண்ணுக்கு கிட்ட இருந்து எக்கு டொனேட் பண்ண கேட்டோம்,, என்னுடைய எக்கோட சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னான்,, ஆனா அது வைஷுவுடையதுன்னு எனக்கு தெரியாது” என்றாள் சௌசன்யா..
அவள் சொல்லி முடித்தும் அனைவரும் சஞ்சனாவை பார்க்க..
“நான் நம்ப மாட்டேன் எல்லோரும் போய் சொல்லுறீங்க”.. என்று சஞ்சனா கூற..
கமிஷனர் சஞ்சனாவிடம் “டீ, என் ஏ டெஸ்ட் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல எடுத்து இருக்காங்க இதுக்கு மேல உனக்கு எந்த ஆதாரம் வேணும் சஞ்சனா. நீ கிளம்பு,, இனிமே நீ இங்க வந்த யாழினியை கேட்டு பிரச்சனை பண்ணகூடாது போ” என்று அவளை அனுப்ப பார்க்க..
“நான் உன்னை கோர்ட்டுல பார்க்குறேன் வீ. பி”என்றள் சஞ்சனா கோபமாக..
அவளை சொடுக்கு போட்டு அழைத்தவன்..
“யாழினி என் பொண்ணு,, எனக்கும் வைஷுவுக்கு பிறந்த பொண்ணு நீ என்ன பண்ணாலும் யாழினியை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது கிளம்பு” என்றான்..
ஏதோ டம் என்று சத்தம் வர. அனைவரும் திரும்பி என்ன சத்தம் என்று பார்க்க.. கையில் உள்ள வாட்டர் கேனை கீழே போட்டு விட்டு வீ. பி சொன்னதை கேட்ட வைஷு அதிர்ச்சியாக நிற்க..
ஐயோ என்று தலையில் கைவைத்து விட்டான் வீ. பி …..
error: Content is protected !!