Skip to content
Post Views: 6,840
அத்தியாயம் 20
பொன்மணி வீட்டிற்கு வந்து “பொன்மணி” என உரக்க குரல் கொடுத்தான்.
தென்றலிடம் “அவரை உள்ள வர சொல்லுடீ” என்றாள்.
Advertisement
“நான் மாட்டேன்ப்பா” என்று ஸ்வாதி தென்றல் இருவரும் மாடிக்கு விரைந்தனர்.
வாயிலருகே வந்தவள், “உள்ள வாங்க” என்றாள்.
மனைவியைப் பற்றி அறியாதவனா? உள்ளே சென்றால் தனக்கு பாடம் எடுப்பாள் என்று, “வரப்போறியா? நான் கிளம்பவா?” என்றான்.
Advertisement
இரண்டு நிமிடமாகியும் தனது கேள்விக்கு பதிலில்லாமல் போகவே பைக்கை முறுக்கினான். தவிப்போடு அவனருகே வந்தவள், “ஒரு நிமிஷம் உள்ள வாங்களேன்” என்றாள் மன்றாடலாக.
Advertisement
“வந்து”
“வந்து…” என திணறியவள், “உங்களோட பேசனும்” என்றாள் கலக்கமாக.
“நீ என்னோட வராம இருக்க விளக்கம் கொடுக்கப்போற. அதை கேட்டுட்டு நான் கிளம்பிடனும். அப்படியா?”
Advertisement
“அச்சோ… அப்படியில்லங்க, உள்ள வாங்களேன்”
“வரேன்… எவ்வளோ நேரம்னாலும் பேசு, கேட்கறேன். ஆனா என்னோட கிளம்பனும், இதுக்கு ஓகேனா உள்ள வரேன்” என்றான்.
பொன்மணியின் தவிப்பை பார்த்து “வரப்போறதில்ல நீ… சூப்பர், எனக்காக எதையும் சந்திக்க தயாரா இருப்பேனு நம்பினேன். பரவால்ல” என்று பாராட்டும் பாவனையில் சொன்னவன், “ஆனா நீ என்னை பார்க்குறது இன்னைக்குத்தான் கடைசி” என்று தீர்க்கமாக சொல்லி பைக்கை வளைக்க,
இன்று வரவில்லை என்றால் நான் பொண்டாட்டி என்பதையே மறந்துவிடுவேன் என்றது, தற்போது பேசியது, தனியா விடப்போறியா என்று அலுவலகத்தில் கேட்டது அனைத்தும் பொன்மணியை பெரிதாய் பாதிக்க, “வரேன்ங்க” என்றாள் கண்ணீரோடு.
“இத்தனை கெஞ்சித்தான் நீ வருனா வேணாம் போடீனு சொல்லத்தான் வாய் துடிக்குது, ஆனா மனசு கேட்டுத்தொலையலேயே” என்று கோபத்தோடே இவள் அமர்வதற்கு ஏதுவாக பைக்கை திருப்பி நிறுத்தினான்.
“பத்தே நிமிஷம்… உள்ள வந்து சாப்பிடுங்க, கிளம்பலாம்” என்றாள்.
அங்கு சென்றால் தன்னால் சமைக்க முடியுமா? சமைத்தாலும் கணவன் உண்ணும் மனநிலையில் இருப்பானா என்ற கவலை பொன்மணிக்கு.
“எனக்கு பசியில்ல, வா போலாம்” என்றான்.
“டிரஸ் எடுத்துட்டு வந்துடறேன்” என்று உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் வந்தாள். பொன்மணியிடமிருந்து பையை வாங்கி “உக்காரு” என்று பையை முன்னே வைத்துக்கொண்டு கிளம்பினான்.
வீட்டிற்கு வர, உள்ளே செல்ல கால்கள் பின்னியது பொன்மணிக்கு. “இங்கையே நின்னுட்டிருக்கப்போறியா?” என்று திருனேஷ்வரன் முறைக்க, தலைகுனிந்தபடி உள்ளே வந்தாள் பொன்மணி.
மனைவியின் பையோடு அறைக்குள் சென்றவன், “உள்ள வா” என்றான்.
பொன்மணியின் அழுத முகமே சொன்னது இங்கே வர தர்கம் செய்திருப்பாள் என்று. கணவன் மீதுள்ள பயத்திலும், பொன்மணியை அழைத்து வர சென்றபோது, சில விசயங்களில் விலகித்தான் இருப்பேன் என்று மகன் சொன்ன வார்த்தையிலும் பயந்து அமைதியாக அமர்ந்திருந்தார் செல்லம்மாள்.
பொன்மணி அறைக்குள் சென்றதும் வெளியே வந்தவன், “நைட்டுக்கு எதாவது செய்தியாம்மா?” என்றான்.
இல்லை என்பதாய் தலையசைக்க, “பொன்மணி சமைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவிங்களா?” என்றான்.
வில்வராஜ் பொன்மணியை மருமகளாக ஏற்க மனதளவில் தன்னை தயார் செய்யத்தான் முயற்சிக்கிறார். ஆனால் முயற்சி இன்னும் கை கூடவில்லை போல. மனம் தவித்தபோதும் மகனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமர்ந்திருந்தார்.
“உன் வாழ்க்கை சீரழிய காரணமானவ கையாலேயே சாப்பிடும் அளவுக்கு என் மனசுல தெம்பில்ல திருனேசு” என்றார் செல்லம்மாள்.
கோபமாக சொல்லியிருந்தால் இவனிற்கும் கோபம் வந்திருக்குமோ என்னவோ. செல்லம்மாள் வேதனையோடு சொல்ல, சற்று நிதானித்தான் திருனேஷ்வரனும்.
“அறியாத வயசுல, நடக்கக்கூடாதது நடந்துருக்கு. ரொம்ப பயந்திருப்பாதானம்மா? அந்த சத்யப்ரகாஷ் பயமுறுத்தியிருக்கான்ம்மா, அவன் சொல்றதை கேட்க்குறதைத்தவிர வேற வழியில்ல அவங்களுக்கு, அதனால பொய் சொல்லிட்டாங்க”
“அதுக்கப்புறம் கூட என் மகன் அப்படி பட்டவன் இல்லைனு சொல்லியிருக்கலாமே… அவங்களை பார்க்கும்போதெல்லாம் புழுவா துடிச்சேனே… நம்ம பிள்ளைக்கு இப்படி ஆகியிருந்தா தப்பு செய்தவன சும்மா விடுவோமானு நினைச்சு நினைச்சு எவ்வளோ வேதனை பட்டேன் தெரியுமா?
பெத்த மகன் ஜெயில்ல இருக்கானேனு உன்னை நினைச்சு வருந்துனதை விட, அவளையும் அவங்கப்பாம்மாவையும் நினைச்சு வருந்துனதுதான்டா அதிகம்.
ஊரார் நம்மளை கேவலமா நினைச்சது, ஒர்க் பண்ணின ஸ்கூல்ல அசிங்கமா பேசினதுனு… எதை மறக்கறது? என்னால முடியல திருனேசு” என்றார் வேதனையாக.
சில விசயங்களில் விலகிவிடுவேன் என்றானே… பொன்மணி மீதுள்ள அன்பில், மகன் தன்னை மொத்தமாய் நிராகரித்துவிடுவானோ என்ற பயம் செல்லம்மாவிற்கு. மனதிலுள்ளதை பேசியபோதும் வேதனை கலந்த பயத்தோடுதான் பேசினார்.
“உடனே இல்லைனாலும் இரண்டொரு மாசம் கழிச்சாவது உங்ககிட்ட உண்மையை சொல்லியிருக்கனும், எப்படி சொல்றதுனு விட்டுட்டாங்க போல” என்று திருனேஷ்வரன் சொல்ல, இத்தனை எடுத்துரைத்தும் அவர்கள் பக்கம் பேசுகிறானே என்று அதிருப்த்தியாக பார்த்தார் மகனை.
“அறியாத வயசுல, சந்தர்ப்ப சூழ்நிலையால பொய் சொல்லிட்டா. ஆனா விபரம் தெரிஞ்சதுக்கப்புறம் குற்றவுணர்வே அவளை கொன்னுட்டிருந்திருக்கு.
எப்படியாவது நான் நல்லவனு ஊராருக்கு நிரூபிக்கனும்னு அவ எடுத்துக்கிட்ட முயற்சி…. மனசாற சொல்லுங்க… இப்படி யாராவது செய்வாங்களா? எனக்காக அத்தனை பேர் முன்னாடியும் கூனிக்குறுகி நின்னா. இவளைத் தவிர என்னை புரிஞ்சவ எவ கிடைப்பானு தோணுச்சு. கல்யாணம் செய்துக்கிட்டேன்.
உங்ககிட்ட அனுமதி கேட்காம செய்யனும்னு திட்டம்போட்டு செய்யலம்மா. பொன்மணியை கல்யாணம் செய்துப்பேனு நானும் நினைச்சே பார்க்கல. பொன்மணிக்கும் என்னை கல்யாணம் செய்துக்க விருப்பமேயில்ல.
தாலி கட்டின பின்னாடி கூட பிரிஞ்சுடலாம்னு எவ்வளோ கெஞ்சினா.. அவளுக்கு என்னை பிடிக்காம பிரிய நினைச்சிருந்தா கூட விலகியிருப்பேன். என்னை பிடிச்சதால பிரிய நினைக்கிறவளை பிரிஞ்சிட்டா, எனக்குத்தான் லாஸ். எனக்காக அவளை மன்னிச்சிடேன்ம்மா” என்றான் கோரிக்கையாக.
“பெத்த மகன் நீ… நீதான் தப்பு செய்தனு ஊரார் சொன்னதும் உன்னையே என்னால மன்னிக்க முடியல, பாவம் செய்தவனை விட்டுட்டு என் மகனை தண்டிச்சவளை எப்படிடா மன்னிக்கிறது?” என்றார் கோபமாக.
“மன்னிக்க முடியலைனா அதுக்கான பின் விளைவுகளையும் யோசிச்சுக்கோங்க” என்றான்.
“உன்னை பெத்தவங்கடா நாங்க, பயங்காட்டுறியா?” என்று ஆற்றாமையோடு சொல்ல,
“உங்களுக்கு பயம் காட்டுற அளவுக்கு நான் பெரிய மனுஷனில்லம்மா” என்று தன்மையாக சொன்னவன்,
“பொன்மணியை மன்னிக்கிறதும் மன்னிக்காததும் உங்க விருப்பம். ஆனா பொன்மணியோடதான் என் வாழ்க்கை. உங்க அன்பு ஒன்னைத்தவிர, அவளுக்கு இல்லாதது எதுவும் நானும் அனுபவிக்கமாட்டேன். அதேபோல அவளால வந்த எதையும் உங்களுக்கு கொடுக்கமாட்டேன்” என்றான் திடமாக.
செல்லம்மாள் வில்வராஜ் தம்பதிக்கு மகன் சொல்வது சரியாக விளங்கவில்லை என்றபோதும், எதையோ பெரிதாக சொல்கிறான் என்று புரிய, பதறிப் பார்த்தனர் மகனை.
“என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்கிங்க, அதுக்காக என் சம்பாத்தியம் மொத்தமும் கேட்டாலும் கொடுத்துடுவேன், ஆனா சொத்து ஏதும் வாங்கிக்கமாட்டேன், அனுபவிக்கவும்மாட்டேன்.
எனக்கு குழந்தை பிறந்தா அதுக்கு நானும் பொன்மணியும் மட்டும்தான் சொந்தம். தாத்தா பாட்டி உறவு இருக்காது” என்றான் திடமாக.
“திருனேசு” என உடைந்த குரலில் சொன்ன செல்லம்மா கதறி அழுதார்.
மகன் பொன்மணியை அழைத்து வர சென்றதும், எதுவானாலும் மகனிடம் பேசு, அந்த பொண்ணை ஏதும் சொல்லாதே, பொன்மணியை பேசினால் நாம் நம் மகனை இழந்துவிடுவோம் என்று பலமுறை எச்சரித்தார் வில்வராஜ்.
எப்படி பேசினாலும் மகன் பொன்மணியை விடமாட்டான் என்று செல்லம்மாவிற்கும் புரிந்தது. ஆனாலும் பொன்மணியை ஏற்றுக்கொள்வதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மகனின் பேச்சில் உடைந்து போயினர் பெற்றவர்கள். “நீ சொல்றது நியாயமா திருனேசு? என் வம்சத்துக்கு ஆகாத சொத்தும், என் வம்சத்தை கொஞ்சாத உசுரும் இருந்து எதுக்கு பிரையோஜனம்? இதுக்கு எங்களை கொன்னுருக்கலாம்டா” என்றார் நலிந்த குரலில்.
“நீங்க என் பொண்டாட்டியை ஏத்துக்காம நான் எப்படிம்மா சொத்தை அனுபவிக்க முடியும்? நானொரு பக்கம் அவ ஒரு பக்கம்னு இன்னும் எவ்வளோ நாளைக்கு இருக்கிறது?”
“எங்களுக்கு சென்னை ஒத்து வராது, நாங்க ஊருக்கு போய்டுவோம்”
“உங்களுக்கு ஒத்து வராதுனு தெரிஞ்சுதான சொத்து வேணாம்ன்றேன்”
“நீங்க இங்க இருந்துக்கோங்கடா”
“சரி இருந்துக்குறோம், உங்களை பார்க்கனும்னா நான் மட்டும் வந்தா போதுமா? என் பொண்டாட்டியையும் கூட்டிட்டு வரனுமா?”
இதற்கு பதில் சொல்ல முடியவில்லை செல்லம்மாவால்.
அன்னையின் அமைதி கண்டு, “அவ வேண்டாம், அவ மூலமா வர குழந்தை வேணும். ஆமாவாம்மா?” என்றான் பொறுமையாகவே.
“பேரப்பிள்ளைகள் என் உரிமை” என்றார் உரிமையாக.
“யார் இல்லைனு சொன்னா? ஆனா உன் பேரப்பிள்ளையை நானா சுமக்கப்போறேன்? வெறும் பிள்ளை பெத்துத்தர மிஷினா என் பொண்டாட்டியை வச்சிருக்க என்னால முடியாதும்மா. அவளுக்கு உரிமை இருக்க இடத்துல மட்டும்தான அவ பெத்த பிள்ளைகளுக்கும் உரிமை வரும்?
நீங்க எவ்வளோ தரக்குறைவா பேசினாலும் என்னால அதை திருப்பித்தர முடியாது. நீங்க என்ன சொன்னாலும் அவ தாங்கிக்குவாம்மா. ஆனா உங்ககிட்ட பேச எனக்கு விசயமே இல்லாம போய்டும்..” என்றான் வருத்தமாக.
இந்த பேச்சை வளர்த்தால் மனஸ்த்தாபம்தான் எஞ்சும் என்று புரிய, “மருமகளை சமைக்க சொல்லு திருனேசு, வழக்கமா எட்டு மணிக்கே சாப்பிட்டுடுவேன்” என்றார் வில்வராஜ்.
திருனேஷ்வரனின் முகம் பெரும் நிம்மதியை காட்ட, “தேங்க்ஸ்ப்பா” என்று தந்தையருகே சென்று அணைத்துக்கொண்டான் ஆத்மார்த்தமாக.
செல்லம்மாள் கணவனை பார்க்க, “திருனேஷ் சொல்றது சரிதான செல்லம்? வம்சம் வேணும்னா நாமளும் இறங்கி வரத்தான செய்யனும்? பையனுக்கு சொத்து கொடுக்க முடியாம, பேரப்பிள்ளைகளை கொஞ்சாம போய் சேர்ந்துட்டா நம்ம கட்டை வேகுமா?
யார் யாருக்கு எவ்வளோ நாளுனு விதிச்சிருக்கோ தெரியாது. இருக்கும்போதே எல்லாம் சரி செய்ய பார்க்கனும். நடந்து முடிஞ்சதையே யோசிச்சிட்டிருந்தா நிம்மதியில்லாம போய் சேர்ந்திடுவோம்னு பயமா இருக்கு செல்லம்மா.
நம்மளை பார்க்க மகன் மட்டும் வந்துட்டு போய்ட்டிருந்தா நல்லா இருக்குமா? அப்படி வீராப்பா இருந்து எதை சாதிக்கப்போறோம்? தாத்தா வீட்டுக்கு அப்பா மட்டும்தான் போவார், அம்மாவை அவங்களுக்கு பிடிக்காதுனு பேரப்பிள்ளைகளுக்கு புரிய வரும்போது பேரப்பிள்ளைகளே நம்மகூட ஒட்டாது. இதெல்லாம் நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு.
மகனும் பத்து வயசுக்கப்புறம் நம்மளோட இல்ல, விருந்தாளி போல லீவுக்கு வந்துட்டு போவான். திருனேஷ்கிட்ட தவற விட்டதை பேரப்பிள்ளைகள் கிட்டயாவது அனுபவிக்கனும் ஆசையா இருக்கு” என்றார் கோரிக்கையாக.
தற்போதும் கூட செல்லம்மாவிற்கு பொன்மணி மீதெல்லாம் இரக்கம் வரவில்லை. ஆனால் சொத்து வேண்டாம், பேரப்பிள்ளைகளை விடமாட்டேன் என்று மகன் எடுத்த முடிவு மனதை தளரச் செய்தது.
அதோடு இருதயத்தில் பிரச்சனை இருக்கும் நிலையில் இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கப்போகிறோம் என்று கணவன் சொன்ன வார்த்தை பெரிதாய் பாதித்தது.
அன்னையின் முகம் குழப்பத்தில் இருப்பது புரிந்து, “என்னோட வாழவே நாலு நாள் முன்னதான் சம்மதிச்சா. மிரட்டித்தான் சம்மதிக்க வச்சேன்.
இப்போ கூட நீங்க வந்துருக்கிங்கன்னதும் உங்களுக்காக யோசிச்சு வரலைனு சொன்னா. அவ சொன்ன பொய்க்கு அவளுக்கு அவளே கொடுத்துக்கிட்ட தண்டனையே ரொம்ப அதிகம். நாமளும் தண்டிக்க வேண்டாம்மா. பொன்மணியை சமைக்க சொல்லட்டா?” என்றான் தன்மையாக.
ஏற்றுக்கொள்ளவே முடியாத விசயத்தை மகனுக்காக ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று மனதில் மந்திரம்போல் சொல்லிக்கொண்டு, “உன் அப்பாக்கு எப்படி சமைக்கனு அவளுக்கு தெரியாது. நானே சமைக்கிறேன்” என்று சமையலறைக்குள் சென்றார்.
error: Content is protected !!