Skip to content
Post Views: 1,318
அத்தியாயம் 22
அகிலனின் பேச்சில் ரகு முகம் மாறாமல் இருக்கப்பட்ட அவஸ்தை அனைவர்க்கும் புரியும் அளவுக்கு இருந்தது.
Advertisement
“உன்னை போய் சாமியார் ரேஞ்ச்க்கு நினைச்சுருந்தேனே டா.. ரெண்டு வருஷமா எப்படி டா கெத்தா மைண்டைன் பண்ணின?”
கல்பனா ரகுவின் காதலை சொல்ல சொல்ல ‘எது இவனா?’ என பார்க்க ஆரம்பித்து முழு கதையும் கேட்டு அத்தனை பேசினான் அகிலன்.
Advertisement
Advertisement
“அதெப்படி டா இந்த பூனையும் பால் குடிக்குமானு மூஞ்சை வச்சிருக்க?” அகிலன் கேட்க,
“கிளம்புற வழிய பாரு டா!” என்ற ரகு சட்னியை எடுத்து தனக்கு வைத்துக் கொள்ள, அப்பொழுது தான் எழுந்து வந்தாள் தர்ஷினி.
Advertisement
“ம்மா! அப்போ எப்போ ம்மா கல்யாணத்தை வச்சுக்கலாம்? தர்ஷிக்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்லை இல்ல.. பேசாம குழந்தை பிறந்த மூணு மாசத்துல வச்சுடலாம்..” அகிலன் சொல்ல,
“பார்றா! பொறுப்பான அண்ணன் எல்லாம் வெளில வர்றார்!” என்றாள் தர்ஷினி.
“தர்ஷி! அப்ப அடிக்கடி லூசு மாதிரி நீயும் இவளும் புரியாத பாஷை பேசினது எல்லாம் இதை தானா? ஏன் டா.. வயசுல மூத்தவன்னாலும் என்கிட்டயும் சொல்லி இருக்கலாம் இல்ல? நானும் கொஞ்சம் ஃபன் பண்ணி இருப்பேன்!” அகிலனின் பேச்சுக்களில் புதிதாய் ஒரு உணர்வு ரகுவிற்கு உண்டாக திக்கி திணற வைத்தது அவனை.
“இரு டா! என்ன அவசரம்? இன்னும் பொண்ணு பாக்கறதுல இருந்து எவ்வளவு விஷயம் இருக்கு?” மகேஸ்வரி சொல்ல,
“இப்ப தான த்தை கல்யாண வீடு, பத்திரிகை அடிக்கணும்னு எல்லாம் பேசினோம்.. சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிடலாம்ல.. அவரே இன்னைக்கு தான் மூளையை யூஸ் பண்ணி ஒன்னு உருப்படியா சொல்லி இருக்கார்..” என்றாள் கல்பனா.
“கொழுப்பா டி உனக்கு?” அகிலன் சொல்ல,
“பொண்ணு பாக்கற ஃபன்க்ஷன் எல்லாம் வேணுமா ம்மா? நாம தான் ரெண்டு அடி எடுத்து வச்சா பொண்ணு வீடு வர போகுது!” என்றாள் தர்ஷினி அவள் பங்கிற்கு.
“ம்மா! நான் கிளம்புறேன்!” என கைகழுவி எழுந்து கொண்டான் ரகு. நெஞ்சை முட்டும் மகிழ்ச்சி என்பார்களே அப்படி தான் இருந்தது அவனிற்கு.
அனைவரின் பேச்சும் மணமகன் என்ற இடத்தில் இவனையும் மனமகள் என்ற இடத்தில் இவனுக்கு பிடித்த இவனுள் நிறைந்த ஆராத்யாவையும் வைத்து பேச பேச பேச்சச்சு அமர்ந்திருந்தவனுக்கு எங்கே தன் உணர்வுகளை காட்டிவிடுவோமோ அனைவரின் முன்பும் என நினைத்து கிளம்ப தயாரானான்.
“உன் கல்யாணம் பத்தி தான் பேசுறோம் ரகு.. எங்க கிளம்புற? இன்னைக்கு கொஞ்சம் லேட்டா போனா ஒன்னும் இல்ல!” மகேஸ்வரி சொல்ல,
“லேட் எல்லாம் இல்ல த்த.. சீக்கிரம் வந்துட்டார் சாப்பிட.. நோட் தி பாயிண்ட்!” என்று எடுத்து கொடுத்தாள் கல்பனா.
“இப்ப என்ன பண்ணனும் உங்களுக்கு?” என்று கேட்டு ரகு அமர,
“அதான் ரகு! பொண்ணு பாக்கற ஃபன்க்ஷன் வேணுமா? கல்யாணம் எப்படி நிச்சயதார்த்தம் கூட ஒன்னாவா இல்ல ரெண்டு மூணு மாசம் உனக்கு டைம் வேணுமா?” என்றது தர்ஷினி.
“இப்ப ஏன் அவனை போட்டு இம்சை பண்றீங்க எல்லாம்? எல்லாம் இவளால.. கொழுந்தனை கலாய்க்குறோம்னு நினைப்பு இருக்கா உனக்கு?” மகேஸ்வரி கல்பனாவை கேட்க,
“கொழுந்தன்றவர் மகன் மாதிரி.. நான் பேச கூடாதாமா? எங்க அவரை சொல்ல சொல்லுங்க..” என்ற கல்பனா விளக்கத்தில் விளையாட்டுக்கு கூட யாராலும் பதில் கூற முடியவில்லை.
“எதாவது பேசி வாயை அடைச்சுடுவா.. அகி பாவம்!” என்ற மகேஸ்வரி,
“நீ சொல்லு ரகு! இல்லனா உன் மாமாகிட்டயே சொல்லு..
நாங்க அவர்கிட்ட கேட்டுக்குறோம்!” என்றார்.
“ம்மா! என்ன அவசரம்.. எல்லாம் பேசிட்டே போறீங்க? நான் நேத்து ஜஸ்ட் அந்த நேரம் சொல்லணும் தோணுச்சு சொன்னேன்.. உடனே எல்லாரும் எங்கேயோ போயிட்டீங்க..” என்ற ரகு,
“மாமாகிட்ட தனியா உங்ககிட்ட தனியானு எல்லாம் பேச என்ன? எல்லாரும் ஒன்னு தான் எனக்கு!” என்று கூற,
“அடடா அடடா! என்ன ஒரு உருட்டு.. உன் மாமாகிட்ட இதுநாள் வரை பேசினது எல்லாம் இங்க அம்மா முன்னாடி பேசேன் பாப்போம்!” தர்ஷினி சொல்லி கிண்டலாய் பார்க்க,
“க்கா!” என்றவனின் வெட்கப் புன்னகையில்,
“அய்யய்ய! என்ன இப்படி ஆயிட்டான் இவன்!” என்றான் அகிலன்.
“போதும் போதும்! விட்டா பேசிட்டே இருப்பிங்க!” என்ற ரகு,
“இவ்வளவு நாள் மாதிரி இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுங்க.. நானே சொல்றேன்.. அடுத்து பாக்கலாம்.. ம்ம்.. நான் வர்றேன்!” என்று சொல்லி ஓடியே விட்டான்.
“கல்யாணப் பேச்சு எடுத்ததும் வீடே எப்படி அமர்க்களமா மாறிட்டு பாருங்களேன்!” கல்பனா சொல்ல,
“ரகுவுக்கு கூட சுத்தி போடணும் கல்பனா.. நேத்து நைட்டு அவனை நான் பார்த்தேன்.. அது மாதிரி இதுநாள் வரை பார்த்ததே இல்ல.. மனசு நிறைஞ்சு போச்சு..” என்றார் மகேஸ்வரி.
“எல்லாம் நல்லபடியா நடக்கும் த்தை!” என்ற கல்பனாவை புன்னகையாய் பார்த்திருந்தான் அகிலன்.
காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ரகு வெளியில் நின்ற ஆராத்யாவின் ஸ்கூட்டியைப் பார்த்துவிட்டு தான் கிளம்பினான்.
இன்னும் நேரம் அதிகமாய் இருந்தது.. ஆனாலும் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. நேற்று அவளிடம் குறிப்பாய் கூறிய செய்தி அவளுக்கு புரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன்பின் முதல்முதலாய் அவளை காண போவதில் தான் மனம் இருந்தது.
இப்பொழுதும் அவள் பேசிய வார்த்தைகள் யாவும் மறக்கவில்லை.. காதல் என்ற வார்த்தைக்கு அவளிடம் இடமிருக்குமா என்று தெரியவில்லை.. காதல், கல்யாணம் என்று வரும் பொழுது பணம் என்ற ஒன்றை வைத்து மட்டும் அவள் ஆண்களை நினைப்பதில் சிறு வருத்தம் இருந்தாலும் அவள் கடந்து வந்த பாதை அவளுக்கு கற்று கொடுத்த பாடம் அது என்பதும் புரியாமல் இல்லை.
என்னை அவள் புரிந்தால் போதுமே! தன்னுடைய குணம் அவளுக்கு தெரிய வருமே! அதன்பின் எல்லாம் எளிது என்று தான் அவனுக்கு தோன்றியது.
இப்பொழுதே தன்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மறுக்கவும் மாட்டாள் என்றே நம்பினான்.
அலுவலகம் வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் ஆகி இருக்க, மற்றவர்களும் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்திருந்தனர்.
ஆராத்யாவும் வந்திருப்பாள்.. அவளை காண வேண்டும்.. அவள் முகத்தின் பாஷை வைத்து அவள் வார்த்தைகளை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாய் இருந்தவன், மேலும் அரை மணி நேரம் கழித்து வெளிவந்தான்.
“சார்! நியூ ப்ராஜெக்ட்ல இருக்கவங்க எல்லாம் நாளைக்கு அப்ராட் கிளம்பனும்!” என்று ரகு வெளிவரவும் விஷால் பேசியபடி அவன் முன் வந்து நிற்க,
“ஹ்ம் ஓகே விஷால்.. அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் ஓகே தானே?” என்று கேட்டபடி ஆராத்யா இருக்குமிடம் அவன் பார்வை திரும்ப, அவளிடம் வெற்றிடமாய்.
கண்களை சுருக்கியவன் சுற்றிலும் பார்க்க, எங்கும் அவள் தென்படவில்லை.
“சார்!” என்று விஷால் அழைக்கவும்,
“ஹான்.. சொல்லுங்க!” என்று கேட்க,
“அதான் சார்! இன்னைக்கு தான் கேட்டாங்க நானும் வரலாமான்னு.. உங்ககிட்ட கேட்டு சொல்றதா சொல்லி இருக்கேன்!” என்றான் விஷால்.
பேச்சை ரகு கேட்கவே இல்லையே! புரியாமல் ரகு பார்த்து, “என்ன சொல்றிங்க? யார் எங்க வரலாமானு கேட்டாங்க?” என்றான்.
“ஆராத்யா சார்! நியூ ப்ராஜெக்ட்..” என்று முழுதாய் கூற முடியாமல் தயங்கினான் விஷால்.. காரணம் ரகுவின் குரலோடு கண்களும் கூர்மையாய் பார்த்திட, கோவமோ என்ன சொல்லாவனோ என்பதை போல தயங்கி கூறினான்.
“ப்ச்! வாட்ஸ் திஸ் விஷால்? இது என்ன கேமா? வர்றேன் வரலைன்னு.. எல்லாம் விளையாட்டா போச்சா உங்களுக்கு?” என அந்த இடத்திலேயே ரகு பேச அனைவரின் பார்வையும் அவர்களின் பக்கம்.
“எங்க அவங்க? வர சொல்லுங்க!” என்று கூறிவிட்டு ரகு தன்னறைக்கு செல்ல,
“ஏன் டா எனக்கு தலைவலியை குடுக்குறீங்க!” என மற்றவர்களைப் பார்த்து கூறிவிட்டு ரகு அறைக்குள் நுழைந்தான் விஷால்.
“சார் இன்னைக்கு அவங்க லீவ்! ஃபிவேரிஷ்னு…” என முடிக்கும் முன்,
“வாட் ரப்பிஷ்! எப்ப வந்தாங்க? எப்ப லீவ் சொன்னாங்க? ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண என் பெர்மிஸ்ஸன் வேண்டாமா?” அவன் கோபத்தை எல்லாம் வார்த்தைகளில் கொட்ட, திணறினான் விஷால்.
“சார் எனக்கும் மெயில் தான் சார் பண்ணி இருந்தாங்க லீவ்க்கு.. அண்ட் ஏதோ சிட்டுவேஷன்.. ஜாயின் பண்ணிக்க முடியுமானு தான் கால் பண்ணி கேட்டாங்க!” என்று தன்மையாய் விஷால் சொல்ல, தன் ஏமாற்றத்தை இவனிடம் காண்பித்து கொண்டிருப்பது புரிந்து ஆயாசமாய் அமர்ந்தான் ரகு.
நீண்ட நிமிடங்கள் நின்றும் விஷால் ரகுவாய் பேசட்டும் என்று அமைதியாய் இருக்க, வேறு சிந்தனையில் இருந்த ரகுவும் அதன்பிறகே அவனை கவனித்தான்.
“நீங்க போய் வேலையை பாருங்க!” என்ற ரகு, விஷால் கூறியதிற்கு பதில் சொல்லாமல் இருக்க, அதை கேட்டு இன்னும் கோபப்படுத்த வேண்டாம் என்று விட்டிருந்தான் விஷால்.
அலுவலக மின்னஞ்சலை திறந்த பொழுது அதில் இன்றைய விடுப்பிற்கான கடிதம் ஆராத்யாவுடையது இருக்க, பார்த்தவனுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்ற குழப்பம்.
பதினோரு மணி அளவில் தர்ஷினி அழைக்கவும் “சொல்லு தர்ஷ்!” என்று எடுத்தான் ரகு.
அங்கே தர்ஷினி கூறியதை கேட்டு குழப்பம் எல்லாம் இல்லை கோபம் மட்டுமே அதிகமாய் இருக்க,
“கேட்குதா ரகு?” என்ற தர்ஷினிக்கு,
“ம்ம்! கேட்டுது.. நான் பாத்துக்குறேன்..” என்று சொல்லி வைத்துவிட்டான்.
இதற்குதான் இவ்வளவு நாள் தயங்கியதும் சொல்லாமல் மறைத்ததும் என எண்ண எண்ண அது இன்னும் கோபத்தை தான் கொடுத்தது.
கிளம்பி வீட்டிற்கு வந்தவன் எதிர்வீட்டை பார்த்தபடி தன் வீட்டின் உள்ளே சென்று கோபமாய் இறங்கியவன், அவன் வந்ததே யாரும் அறியா வண்ணம் நேரே யாரையும் பார்க்காமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
ஒரு மணி நேரம் தான் கடந்திருக்கும் கோபம் தாண்டிய ஆதங்கம் கூடிக் கொண்டே செல்ல, இந்த உணர்வுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை கொன்று தின்பதை உணர்ந்தவன் மனம் நிலை இல்லாமல் தவிக்க,
இந்த உணர்வுகளுக்குள் அடங்கி பொசுங்கி போவதற்கு அவளிடமே பேசிவிடுவது மேல் என்று முடிவுக்கு வந்து முன்வந்தான்.
ஒரு முழு அழைப்பும் சென்று ஆராத்யாபுறம் அழைப்பு ஏற்கப்படாமல் போக, இரு நொடி தயங்கி நிறுத்தியவன் மனம் கேட்காமல் போகவே மீண்டுமாய் அழைத்தான்.
“ஹெலோ யாரு!” ஆராத்யாவின் குரல் கேட்கும் வரை கோபம், அழுத்தம், ஆதங்கம் என மனம் முழுதும் வலியாய் அமர்ந்திருந்தவன் அவளின் சோர்ந்த குரலில் தானுமாய் சோர்ந்தான்.
“ஹலோ!” மீண்டும் குரல் மெல்லிதாய் வந்தது ஆராத்யாவிற்கு.
“ஒரு பிரச்சனைனா ஃபேஸ் பண்ணனும்னே தோணாதுல்ல உனக்கு?” என்ற ரகுவின் குரலில்,
“ராம் சார்!” என்றவள் அதிர்ந்த குரல் அரைகுறையாய் அவனையும் எட்டியது.
“அந்த நாய்கிட்ட இருந்து தப்பிக்க இங்க வந்த, இப்ப என்கிட்ட இருந்து ஓடி ஒழிஞ்சுக்க வேற இடம் தேடுற.. அவனும் நானும் ஒன்னா போய்ட்டோம் இல்ல? என்னை அவ்ளோ சீப்பா நினைச்சுட்ட இல்ல?” என்று கேட்ட ரகுவிற்கு,
“இல்ல சார் இல்லவே இல்ல..” என்ற கலங்கிய குரல் ரகுவிற்கு கேட்டாலும் தர்ஷினி கூறியது இன்னமும் மறக்காமல் வலியை கொடுத்தது.
“தர்ஷி என்ன பண்ணினா உன்னை? உன்னை உனக்காக புடிச்சு தான உங்கிட்ட பேசினா?.. ஒரே நாள்ல அவளை தூக்கி எரிஞ்சுட்ட.. எப்படி முடிஞ்சது உனக்கு? என் அக்காவா உன்கிட்ட அவ வந்திருந்தா நானே தடுத்திருப்பேன்.. நீ புரிஞ்சிக்கல இல்ல?”
“அப்படிலாம் இல்ல சார்..” ஆராத்யா அழுகையில் மனம் கரைய, தன்னை இத்தனை கீழாய் நினைத்துவிட்டாளே என்ற எண்ணமும் சேர்ந்து பேச வைத்தது ரகுவை.
“என்ன பண்ணிட்டேன் நான்? எனக்கு புடிச்சிருந்தது சொன்னேன்.. அது தப்பா? இதை சொல்ல நான் எத்தனை வருஷம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா டி உனக்கு?” என்று குரலை இன்னும் உயர்த்தி ரகு கேட்கவும்,
“ரகு!” என்று அழைத்து தர்ஷினி வரவும் சரியாய் இருந்தது.
“என்ன டா பண்ணிட்டு இருக்க?” என்றவள் பேச்சை கேட்டாலும்,
“என்ன உனக்கு? போகணும்.. தூரமா போகணும்.. அவ்வளவு தானே? போ.. போய்டு… ஆனா இனி என் கண்ல பட்ட..” பல்லைக் கடித்து ரகு பேச பேசவே ஆராத்யா தான் என உறுதி செய்த தர்ஷினி,
“டேய் என்ன உளறுற நீ? போனை குடு!” என பறிக்க முயல,
“க்கா! நீ என்ன பேச போற? உன்கிட்ட பேசுற அளவுக்கு எல்லாம் அவங்க ஒர்த் இல்ல..” என்று கூற, அது அங்கே ஆராத்யாவிற்கும் கேட்டது.
“ப்ச் ரகு!” என்று கண்டிப்பு மட்டும் கலந்த குரலில் அழைத்து ஆராத்யா அழைப்பில் இருப்பதை தர்ஷினி கண்ணால் காட்ட,
“தர்ஷ்! வீட்டுல இருந்துட்டே நீ போனப்போ இல்லைனு சொல்ல சொன்னவங்க இப்ப நான் பேசினது கேட்டா வருத்தப்பட போறாங்க?” என்றான் அத்தனை கோபத்தையும் சேர்த்து.
“லூசா டா நீ? அவ என்ன மாதிரி மைண்ட் செட்ல இருக்கானு தெரியாம நீ வேற! குடு முதல்ல போனை!” என்று கேட்க, கொடுக்கவே இல்லை ரகு.
“நம்மள வேண்டாம்னு சொன்னவங்க நமக்கும் வேண்டாம்.. அப்படி ஒன்னும் தேவை இல்ல..” ரகு சொல்ல, இவர்கள் பேச்சு தெளிவாய் கேட்டு மனதோடு ரத்தக் கண்ணீரை வடிய வைக்க, கண்களில் வழியும் நீரை துடைக்கவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள் ஆராத்யா.
“சரி! அம்மா ஒரு பொண்ணு பார்த்து வச்சுருக்காங்க.. நாளைக்கே நிச்சயதார்த்தம்.. சரினு சொன்னா மட்டும் அடுத்த வார்த்தை போன்ல பேசு!” தர்ஷினி ரகுவின் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் விழித்தவள், பின் ஒரு முடிவுடன் கூற, அந்த சொல்லில் சட்டென அமைதியாகிவிட்டான் ரகு.
“என்ன சொன்ன? தேவை இல்லையா? ஆரா உனக்கு தேவை இல்லையா? இதுக்காக தான் ரெண்டு வருஷமா தவம் இருந்தியா? ஈசியா தூக்கி போடுற? ஆராக்கு உன்னை என்னனு தெரியும்? அவ ஒர்க் பண்ற கம்பெனி எம்டி! அவ உன்னை வேண்டாம்னு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்.. உனக்கு என்ன டா? ரெண்டு வருஷமா பேசாம இப்ப சேர்த்து வச்சு பேசுறியா? அவளுக்கு உன்னை புரிய வைக்க தான் நீ டைம் எடுத்துக்குறனு நான் நினச்சேன்.. ஆனா நீ உன் கோபத்தாலேயே எல்லாத்தையும் முடிச்சுக்க பாக்குற!” தர்ஷினி கோபமாய் பேச,
“அவ ஃபாரின் ப்ராஜெக்ட்க்கு போக போறாளாம் க்கா.. போக சொல்லவா? என் மூஞ்சில முழிக்க கூடாதுன்னு தான் போறா! என் அக்காவா போய்ட்டியே அதான் உன்னையும் அவாய்ட் பண்ணி அனுப்பி இருக்கா.. என்ன செய்யணும் நான்?” என்றான் ரகு தர்ஷினி முன் நின்று.
“ரகு! சைல்டிஷா பேசுற.. ஏன் ஃபாரின் போனா என்ன? அவ ஒர்க் அவளுக்கு முக்கியம் இல்லையா? நீ காதலிக்குறது உண்மைனா அது உன்னை தேடி வர தான் செய்யும்..”
“சினிமா டயலாக் எல்லாம் பேசாத! கடுப்பாகுது!” என்ற ரகு மொபைலை பார்க்க, இன்னும் ஆரா இணைப்பில் தான் இருந்தாள்.
“அதான் அப்ரூவ் பண்ணிட்டேனே! பின்ன என்ன? போ! எங்க வேணா போ!” என்று அலைபேசியில் கூறியவன் மொபைலை தூக்கி கட்டிலில் எறிய,
“தர்ஷ்….” என்று அழுத குரலோடு தர்ஷினியை கட்டி அணைத்திருந்தாள் ஆராத்யா.
“ஆரா!” என்ற தர்ஷினியோடு ரகுவுமே ஒரு நொடி தடுமாறினர் அந்த கணம்.
ரகுவின் அறையில் தான் இவ்வளவும் நடந்திருக்க, சுத்தமாய் ஆராத்யாவை எதிர்பார்க்கவில்லை இங்கே இருவருமே!.
“சாரி தர்ஷ்! ஐம் ரியால்லி சாரி தர்ஷ்!” என்று தர்ஷினி மேலே சாய்ந்து ஆராத்யா அழ,
“அச்சச்சோ பாப்பா பாவம்!” என்று கல்பனா சொல்லவும் தான் வேகமாய் தர்ஷினியிடம் இருந்து பிரிந்தாள் ஆராத்யா.
அழுகையோடு மொபைலை காதில் வைத்தபடி வந்த ஆராத்யாவை முதலில் பார்த்த கல்பனா என்னவோ என்று பதறி அவள் அருகே வர, “தர்ஷ் எங்க?” என்றாள் அழுகையோடு.
தர்ஷினி அறையை புரியாமலேயே கல்பனா பார்க்க, அவளுக்கு முன் ஆராத்யா அந்த அறைக்கு செல்ல, கல்பனாவும் சென்றாள் பின்னோடு.
அங்கே இல்லை என்றதும் “ராம் சார்..” என்ற குரல் கூட காற்றாய் ஆராத்யாவிடம் வர, புரிந்த கல்பனா,
“வா!” என்று கூறி ரகு அறைக்கு வந்தபோது அங்கே தான் இருவரும் இருக்க, அந்த நேரம் தான் ரகு போனில் கோபமாய் பேசி தூக்கி எறிந்தது.
“சாரி தர்ஷ்! பாப்பாக்கு வலிச்சுட்டா?” என்றாள் ஆராத்யா பாப்பாவாய்.
“இல்லையே! பாப்பாக்கு ஆரா தொட்டதும் சந்தோஷமாம்!” என்ற தர்ஷினி ஆராத்யா கைகளை எடுத்து தன் வயிற்றில் வைக்க, குழந்தையின் அசைவு நன்றாய் உணர முடிந்தது.
“ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல? சாரி! என்ன பண்ணனு தெரியாம.. எனக்கு எதுவுமே தெரில.. சாரி தர்ஷ்!” ஆராத்யா மீண்டும் கண்ணீரோடு மன்னிப்பு கேட்க,
“டேப் ரெகார்டர் ஒன்னு என் ரூம்ல இருக்கு நான் வேணா எடுத்துட்டு வரவா? சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கஷ்டப்பட வேண்டாம்ல?” என்றாள் கல்பனா.
“உங்களுக்கு தெரியுமா? நான் இவங்களை ஹர்ட் பண்ணிட்டேன்.. என்னை தேடி வீட்டுக்கு வந்தவங்ககிட்ட நான் இல்லைனு சொல்லி அனுப்பி விட்டுட்டேன்.. நான் தப்பு தான? எனக்கு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னே தெரியல..” கல்பனாவிடம் ஆராத்யா சொல்ல,
“பார்டா! குழந்தை கதை சொல்லுது!” என சிரித்தபடி தர்ஷினி பார்க்க,
“கதையா! நான் கூட உண்மையோன்னு நினச்சுட்டேன்!” என்றாள் கல்பனா கிண்டலாய்.
“இல்ல நிஜம் தான்..” ஆராத்யா சொல்ல, தர்ஷினியும் கல்பனாவும் நன்றாய் சிரித்தனர் ஆராத்யா வெகுளித்தனத்தில்.
“போதும் ஆரா! எவ்ளோ அழுகை? மூணு நாளா ஒரே அழுகாச்சி தான் உனக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் குடு அந்த கண்ணுக்கு..” என்று ஆராத்யா கண்களை தர்ஷினி துடைத்துவிட, பொத்தென்ற சத்தத்தில் அனைவரும் திரும்ப, ரகு தான் அங்கே நடப்பதை பார்த்து இன்னும் கடுப்பானவன் கட்டிலில் கோபமாய் அமர்ந்திருந்தான்.
“அடடே நார்! நீங்க எப்ப வீட்டுக்கு வந்திங்க? என்ன நடக்குது இங்க? ஏன் என்னை மட்டும் டீல்ல விட்டிங்க?” கல்பனா சாதாரணம் போல கேட்க,
“அவர் கோபமா இருக்காராம்! வாங்க நாம ஹாலுக்கு போவோம்!” என்று தர்ஷினி அழைத்து செல்ல, திரும்பி திரும்பி ரகுவைப் பார்த்தபடி சென்றாள் ஆராத்யா.
“அம்மா எங்க அண்ணி?” தர்ஷினி சோபாவில் தானும் அமர்ந்து ஆராத்யாவையும் அமர வைத்து கேட்கவும்,
“அத்தை நம்ம சதாசிவம் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்லைனு பார்த்துட்டு வர்றதா சொல்லிட்டு போயிருக்காங்க தர்ஷி.. நீங்க பேசிட்டு இருங்க நான் டீ போட்டு கொண்டு வர்றேன்!” என்ற கல்பனாவிடம் ஆராத்யா மறுக்க,
“கொஞ்சம் பிரெஷ் ஆகலாம்.. நீங்க கொண்டு வாங்க அண்ணி!” என்றாள் தர்ஷினி.
“அய்யோ! உங்களுக்கும் என்னால கஷ்டம்.. நான் வேணா டீ போடவா?” என கல்பனாவிடம் ஆராத்யா கேட்க,
“அதான் இந்த வீட்டுக்கு டீ போட வர உனக்கு இஷ்டம் இல்லைனு சொல்லிட்டியே ஆரா!” என்ற தர்ஷினி பேச்சில் மீண்டும் ஆராத்யா முகம் அதிர்ந்து கசங்க, அதில் ஓரளவு புரிந்த கல்பனாவும் உள்ளே சென்றாள்.
“சாரி தர்ஷ்! உங்களுக்கும் என் மேல கோபம் தான?”
“எவ்வளவு சாரி தான் சொல்லுவ ஆரா? முதல்ல எதுக்கு சாரி சொல்லணும்? உனக்கு புடிக்காததை புடிக்கலைனு சொல்லி இருக்க.. அது சரி தானே? பின்ன ஏன் இத்தனை சாரி?” என்ற தர்ஷினி கேள்விக்கு ஆராத்யா மௌனம் காக்க, மொபைலில் என்னவோ செய்தபடி
“நமக்கு தோணுறதை தைரியமா சொல்லணும் ஆரா! தப்பு சரி எல்லாம் செகன்ரி தான்.. இதுல நீ பீல் பண்ண என்ன இருக்கு சொல்லு?” என மீண்டும் தர்ஷினி கேட்க,
“ம்ம்ஹும் நான் தப்பு தான்.. ராம் சார் சொன்ன மாதிரி எனக்கு எதையுமே ஃபேஸ் பண்ண தெரியல..”
“ஓஹ்! அதை சொல்ல ராம் சார் வேணுமா? உனக்கு தெரியாதா?”
“தர்ஷ்! எனக்கு நீங்க எல்லாரும் வேணும்.. ஆனா இப்படியே மட்டும் போதும்.. என்கிட்ட வந்தா நான் தொலைச்சிடுவேன்.. இல்ல அந்த கடவுளே பிரிச்சுடுவாங்க.. பார்த்தீங்க தானே? இவ்வளவு நாளும் எவ்வளவு ஜாலியா இருந்தோம்? இப்ப பாருங்க.. இந்த ரிலேஷன்ஷிப் எப்பவுமே ஆபத்து தான்! அது மட்டும் இல்ல அதுக்கெல்லாம் எனக்கு குடுத்து வைக்கல தர்ஷ்!” என்று ஆராத்யா சொல்ல,
“எதை குடுத்து எங்க வைக்கணும்?” என்று கல்பனா கேட்டு டீ கொண்டு வர,
“பார்த்தீங்க இல்ல? இவங்க எவ்வளவு ஜாலியா பேசுறாங்க? இதே மாதிரி நீங்க எனக்கு எப்பவும் வேணும்!” என்றாள் ஆராத்யா.
“சரி! இப்ப என்ன பண்ணலாம்?” கல்பனா கேட்க,
“ராம் சார் ரொம்ப பாவம்.. அவருக்கு போய் நான்.. அந்த தகுதி எல்லாம் எனக்கு இல்ல.. உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.. சாரை எனக்கும் தெரியும்.. நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.. வேண்டாம்.. நிறைய அனுபவிச்சுட்டேன்.. சொந்தம்னு சொல்றவங்க எனக்கு யாரும் கூட வரல.. இனி அவங்க வந்தாலும் வேண்டாம்.. எனக்கு யாருமே வேண்டாம் தர்ஷ்.. நீங்க சொல்லுங்க.. ரெண்டு வருஷமா வெயிட் பண்ற அளவுக்கு நான் ஒன்னும்…” என்று நிறுத்திய ஆராத்யாவின் முக பாவனையில் கல்பனாவும் தர்ஷினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, இன்னும் பல்ஸ் எகிறியது ரகுவிற்கு ஆராத்யாவின் பேச்சை கேட்டு.
error: Content is protected !!