Skip to content
Post Views: 1,140

நாட்களும் யாருக்கும் காத்திராமல் வேகமாக ஆறு மாதங்கள் கடந்து இருந்தது… இந்த ஆறு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குடுமபத்தினர் அவனை பார்த்து வந்து இருந்தனர்… ரித்திகாவை நிரவி குட்டி படிக்கும் பள்ளியிலேயே சேர்த்து இருந்தனர்… சசி கர்ணன் குடும்பம் அர்ஜுனன் வீட்டிற்கே வந்து இருந்தனர்.. முதலில் மறுத்தவர்கள் பின் அர்ஜுனனின் பிடிவாதத்திலும் அய்யனாரின் வாக்கிலும் வீட்டுக்கு வந்து விட்டனர்… ஆனால் ஆரவ் கேரளாவில் தான் படித்து கொண்டு இருக்கிறான்…
Advertisement
அன்று கர்ணன் சுப்ரியா இருவரும் பெரியவர்களுடன் குழந்தைகளை அழைத்து கொண்டு மாலிற்கு சென்று இருந்தனர்… உடன் முகுந்தனும் கண்மணியும் சென்று இருந்தனர்… நிரவி குட்டியும் ரித்திகாவும் செல்லவில்லை… ரித்திகா டென்னிஸ்ல் உள்ளாள்.. அதில் இன்று பயிற்சி இருந்ததால் அவள் மட்டும் பள்ளி சென்று விட்டாள்..
அன்று ஆசிரியர்களுக்கு பள்ளி இருந்ததால் மிதரவும் பள்ளிக்கு சென்றுவிட்டாள்.. சசி அவன் ஹோட்டல் சம்பந்தமாக வெளியில் சென்று இருந்தான்… அர்ஜுனன் வயல் வேலையாக வெளியில் சென்று இருந்தான்… வீட்டில் சுபாவும் நிரவி குட்டி மட்டும் தான்….
நிரவி குட்டிக்கு நல்ல குளிர் காய்ச்சல் எனவே அவள் அருகில் தான் இருந்தாள் சுபா… மணி அப்போது பன்னிரெண்டு இருக்கும்… அப்போது சுபாவிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது… அந்த அழைப்பை ஏற்று பேசியவளுக்கு சந்தோச படுவதா இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை.. அவள் இப்போது அங்கு செல்ல வேண்டும்… ஆனால் நிரவியை விட்டு அங்கு செல்ல இயலாது..
Advertisement
என்ன செய்வது என்றே தெரியவில்லை… மீண்டும் அவளுக்கு அழைப்பு வர நிரவி குட்டி நன்றாக உறங்குவதை உறுதி செய்து கொண்டு ராஜம்மாவிடம் சொல்லி பார்க்க கூறி விட்டு அந்த இடத்திற்கு சென்றுவிட்டாள்…
Advertisement
அவள் சென்ற பத்து நிமிடத்திலேயே நிரவி குட்டிக்கு கடுமையான காய்ச்சலால் ஜன்னி வர ஆரம்பித்துவிட்டது… ராஜம்மாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… அவருக்கும் வயதாகி இருந்தது… வேகமாக நடக்கவும் முடியவில்லை… இருந்தும் தன் வயதை மீறி வேகமாக வெளியில் சென்று யாரவது இருக்கின்றனரா என்று பார்க்க சென்றார்…
நிரவி குட்டியின் நல்ல நேரமோ என்னவோ சரியாக சசி வீட்டிற்கு வந்து இருந்தான்… அவனை பார்த்து வேகமாக சென்றவர் நிரவி குட்டியை பற்றி கூற வேகமாக அறைக்கு சென்று நிரவி குட்டியை தூக்கி கொண்டவன் ராஜம்மாவையும் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு காரில் சீறி பாய்ந்தான்…
மருத்துவமணையில் நிரவிக்கு தீவிரமாக சிகிச்சை நடக்க இங்கு சுபா சந்தோஷம் பயம் என எல்லாம் கலந்த உணர்வில் ரித்திகா படிக்கும் பள்ளிக்கு சென்று இருந்தாள்… அவள் காரை விட்டு இறங்கியதும் வேக நடையுடன் ரித்திகா இருக்கும் அறைக்கு சென்றாள்…
Advertisement
அங்கு ரித்திகா பயம் கலந்த முகத்துடன் அமர்ந்து இருக்க மித்ரா அவளுக்கு தைரியம் கூறி கொண்டு இருந்தாள்.. சுபாவை பார்த்ததும் “அம்மா” என அணைத்து கொண்டாள்…
சுபா சிரித்து கொண்டே தலையை கோதியவள் “பாப்பா எதுக்கு பயம்… கேர்ளா பிறந்தா இது எல்லாம் சகஜம் தான்… சோ பயப்பட கூடாது… ஓகேவா மித்து ம்மா உன் கூட தானு இருந்தா அப்பயும் பயம் போகலையா….” என்று அவளிடம் கூறியவள் மித்ராவிடம் திரும்பி “மித்து கிளம்பலாமா” என்று கேட்டாள்…
மித்ரா சுபாவிடம் “போலாம் சுபி ஸ்கூல்ல பேசிட்டேன்.. அதோட எல்லாருக்கும் போன் பண்ணியும் சொல்லிடேன்.. நீ அத்தான் கிட்ட சொல்லிட்டியா… சசி மட்டும் போன் எடுக்கல… அது நான் பாத்துக்குறேன்… நீ வா கிளம்பலாம்…” என்று கூறினாள்….
ரித்திகாவை அழைத்து கொண்டு இருவரும் காரில் வீட்டிற்கு சென்றனர்.. அவர்கள் வீட்டிற்கு வரும் போதே வாணன் வர்ணன் குடும்பத்துடன் வந்து விட்டனர். நந்தினியை அனைவரும் ஏற்று கொண்டனரா என்று கேட்டால் அது தெரியவில்லை. ஆனால் அவளை ஒதுக்கவில்லை…. சுபாவும் அவளை கண்டு அஞ்சுவது இல்லை. நந்தினி மனம் மாறியதை புரிந்து கொண்டாள்….
மித்ரா கூறியவுடன் மெய்யனூரில் இருந்து அனைவரும் வந்துவிட்டனர். கோவை சென்று இருந்த கர்ணன் முகுந்தன் தன் மனைவிமார்கள் குழந்தைகள் பெரியவர்களை அழைத்து கொண்டு வந்துவிட்டனர்…
ரித்திகாவை வீட்டிற்கு பின்புறம் தான் அழைத்து சென்றனர்.. அத்தை முறைக்கு நந்தினி தான் அவளுக்கு தண்ணீர் ஊற்றினாள்…. முகுந்தன் சசியை அங்கு காணாமல் அவனுக்கு அழைத்தான்… முதல் அழைப்பில் அவன் ஏற்கவில்லை… இரண்டு மூன்று முறை முயற்சி செய்தபின் நான்காவது முறை அழைத்த போது தான் அழைப்பை ஏற்றான்…
சசி மற்றவர்கள் மீது கோவமுற்றாலும் முகுந்தன் மீது கோவமடைந்ததே கிடையாது… ஆனால் இன்றோ அவனிடம் கடுமையாக பேசிவிட்டான்… முகுந்தன் அவனின் கோவத்திலேயே எதோ சரியில்லை என உணர்ந்து அவனுக்கு மீண்டும் அழைத்தான்… “சசி இப்போ நீ எங்க இருக்க… எதோ பிரச்சனையா…” என்று கேட்டான்…
சசி அமைதியாக இருக்க மீண்டும் “எங்க இருக்க சசி” என அழுத்தி கேட்டான்.. மருத்துவமனை பெயர் சொல்லி அங்கு உள்ளேன் என கூறி வைத்துவிட்டான்..
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அவன் மட்டும் தன் வண்டியை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்… அவன் அங்கு போகும் போது சசி தலையில் கை வைத்தவாறு அமர்ந்து இருந்தான்.. முகுந்தன் வந்தது தெரிந்தும் சசி நிமிரவில்லை…
ராஜம்மா தான் நடந்த அனைத்தையும் கூறியவர் இன்னும் மருத்துவர் எதுவும் கூறவில்லை என்று சேர்த்து கூறினார்… அவர் கூறி கொண்டு இருக்கும் போதே மருத்துவர் வெளியில் வந்தார்… வந்தவர் “இப்போ குழந்தை ஓகே… பட் பீவர் ஸ்டார்ட் ஆன அப்பயே வந்து இருந்தா இவளோ ரிஸ்க் ஆகி இருக்காது… பட் ரெண்டு நாள் இங்க இருக்கட்டும்… அதுக்கு அப்பறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க… இப்போ குழந்தை தூங்கிட்டு இருக்காங்க… டிஸ்டர்ப் பண்ணாதிங்க.. போயிட்டு பார்த்துட்டு மட்டும் வாங்க…” என்று கூறி கிளம்பிவிட்டார்…
முகுந்தன் சசியை மட்டும் பார்த்து வர கூறினார்… நிரவி ஓய்ந்து போய் படுத்து இருந்தாள்… காலையில் பார்த்த போது கூட இந்த அளவிற்கு அவள் இல்லை… மெதுவாக அவள் தலையை தடவி நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன் அவளை தொந்தரவு செய்யாமல் வெளியில் வந்து விட்டான்..
அப்போது முகுந்தனின் எண்ணிற்கு கண்மணி அழைத்தாள்… அவன் அழைப்பை ஏற்றதும் “மாமா எங்க இருக்கீங்க.. இங்க தானு இருந்திங்க அதுக்குள்ள எங்க போனீங்க… நீங்க இங்க இருக்க வேண்டாமா… சுபா உங்களை கேட்டா… அர்ஜுன் அண்ணாவும் உங்களை கேட்டாங்க… சீக்கிரம் வாங்க…” என்று கூறினாள்…
முகுந்தனோ “நான் வெளிய இருக்கேன் கண்ணம்மா என்னால வர முடியாது சொல்லிடு… நான் வர மாட்டேன் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்புங்க….” என்று கூறி வைத்து விட்டான்…
கண்மணியோ இவன் பதிலில் திகைத்து நின்றுவிட்டாள்… முகுந்தன் எப்போது அர்ஜுனனை விட்டு கொடுக்க மாட்டான்.. ஆனால் இன்று அவன் தேடினான் என்று கூறியும் வர முடியாது விழா முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பிவிடு என்று கூறியதை கேட்டு அதிர்ச்சி தான் ஆகிவிட்டாள்…
அவள் அருகில் இருந்த ஜனனியோ “ஹே கண்மணி என்ன ஆச்சு… அண்ணா என்ன சொன்னாங்க…” என்று கூறியவள் “என்ன இந்த சசி பையனை இன்னும் ஆளை காணோம்…. மித்ராவும் போன் பண்ணி சலிச்சிட்டா…” என்று சலிப்பாக கூறினாள்…
கண்மணியோ “இல்ல ஜானு எதோ தப்பா இருக்கு… நிரவி குட்டியும் அவ ரூம்ல இல்ல… அவளுக்கு காலையிலேயே உடம்பு சரி இல்ல… அதனால தான் மாலுக்கு கூட்டிட்டு போகல… சுபா அதை யோசிக்க கூட இல்லை… எனக்கு தெரிஞ்சு சசி நிரவி கூட இருக்கான்… ஹாஸ்பிடல்ல இருக்காங்களா தெரியல… மாமா போன் பேசுற அப்ப எனக்கு அப்படி தான் கேட்டுச்சு… சசி கோவமா இருக்கான் அது தான் அவன் போன் அட்டென்ட் பண்ணல…. மாமாவும் அர்ஜுனன் அண்ணன் கூப்பிட்டாங்கனு சொல்லியும் எனக்கு வேலை இருக்கு… நீங்களே எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போ அப்டினு சொல்லிட்டாங்க… இந்த மாதிரி மாமா எதுவும் சொன்னது இல்ல… ராஜம்மா அம்மாவும் இங்க இல்லை… அவங்களுக்கு தான் கால் பண்ணனும்…” என்று கூறி ராஜம்மாவிற்கு அழைத்தாள்…
அழைப்பை ஏற்ற ராஜம்மா கண்மணி கேட்டும் முன்னே அனைத்தையும் கூறியவர் “சசி தம்பி ரொம்ப கோவமா இருக்காங்க ம்மா… ரெண்டு நாள் பாப்பா இங்க தான் இருக்கனும்னு சொல்லிட்டாங்க… தம்பி யார் கிட்டயும் சொல்லக்கூடாதுனு சொல்லி இருக்காங்க பாப்பா… தம்பி வர மாதிரி தெரியுது…. நான் வைக்குறேன்” என்று கூறி வைத்துவிட்டார்…
கேட்டதும் அயர்ந்து அமர்ந்துவிட்டாள் கண்மணி… அவள் சோர்ந்து அமர்ந்ததை பார்த்தவள் “ஹே கண்மணி என்ன ஆச்சு… ராஜம்மா என்ன சொன்னாங்க” என்று கேட்டாள்…. கண்மணியும் அவர் கூறியதை கூறியவள் “சுபாவுக்கு நிஜமா ஞாபகம் இல்லையா ஜானு… சசி கோவப்படுறது தப்பு இல்லையே… இப்ப வரைக்கும் அவளுக்கு நிரவி ஞாபகம் இல்லையே… அர்ஜுனன் அண்ணா கூட பாப்பாவை தேடலயே என்று கவலையாக கூறினாள்…
ஜனனியும் எதுவும் கூறாமல் தலையில் காய் வைத்து அமர்ந்துவிட்டாள்… சசி போனை எடுக்கமால் இருந்ததால் ஏற்கனவே சோர்ந்து இருந்தவள் இவர்களிடம் பேசலாம் என வந்தவள் ஆளுக்கு ஒரு பக்கம் சோர்ந்து அமர்ந்து இருந்ததை பார்த்து “ஹே பக்கீஸ் நானே டென்ஷனா இருக்கேன்னு உங்க கிட்ட வந்தா ஆளுக்கு ஒரு பக்கம் இப்படி உட்காந்து இருக்கீங்க… ஏற்கனவே என் புருஷன் போன் எடுக்க மாட்டிங்குறான்… நீங்க ஒரு பக்கம் இப்படி இருக்கீங்க… என்ன தான் நடக்குது இந்த வீட்டுல… எனக்கு தலை வலிக்குது” என இவள் ஒரு பக்கம் அமர்ந்துவிட்டாள்…..
error: Content is protected !!