Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 17

கருவின் குரல்
அத்தியாயம் 17

சந்திரன் தனது இருப்பை கொண்டு இரவு முழுவதையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.தேவாவின் செயலால் என்ன செய்வது என்று தெரியாமல் ஜானகி நின்றாள். இருந்தும் அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.இந்த வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வரவேண்டும், தன்னை ஒருநிமிடம் கூட பிரிய மனமில்லாமல் அவன் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு காலத்தில் எண்ணியவள் தான்.அவன் அருகாமை அவளுக்கு எப்பவும் பிடித்தமான ஒன்று .ஆனால் என்ன செய்ய காலமும் நேரமும் அவர்களை பிரித்து சூழ்நிலை கைதிகளாக இன்று நிற்க வைத்து விட்டது. இருவரும் திரும்பி வர முடியாத இடத்தில் நிற்கின்றனர். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை இருவரதும்.

தேவா அவனது சொகுசு வாழ்க்கைகாக ஜானகியை வேண்டாம் என்றான்.ஆனால் அவன் விரும்பிய வாழ்வு தற்போது அவனை கொஞ்சம் கொஞ்சமாக நரகத்தில் தள்ளி கொண்டிருந்தது.
இருப்பினும் அவனது சுகபோக வாழ்வு தாய் தந்தை என எதையுமே இழக்க வில்லை. ஜானகியின் நிலை அவ்வாறில்லையே தன் பெற்றோர்,உடன்பிறப்பு,உற்றார், உறவினர் என எல்லாரையும் இழந்து
தனிமரமாக நிற்கிறாள்.



Advertisement

தேவாவைவிட ஜானகிக்குதான் அதிக இழப்பு இருந்தும் , அவன் மேல் அவளுக்கு இருந்த நேசம் இன்னமும் குறைந்தபாடில்லை .
தன்நலனைவிட அவன் நலனை பெரிதும் விரும்பினாள்.
அவனை விலக்கவும் மனமில்லை, பதிலுக்கு அணைக்கவும் தோனவில்லை. இதுதான் அவனின் கடைசி அருகாமையாக கூட இருக்கலாம் என்றெல்லாம் எண்ணினாள். ஆனால் அவனால் அவள் அனுபவித்த வலி ஆறாத ரணமாய் அவளுள் இருந்தது. அந்த வலி அவனை விளக்கி சொல்லி கத்தியது .

திடீரென மைதிலியின் குடும்பம் உள்ளே நுழைய ஜானகி ஒரு நிமிடம் பதட்டமாக யார்? என பார்த்தாள். ராஜேஸ்வரி அடிப்பாவி என் மக வாழ்க்கைய கெடுத்துட்டையே என கத்திய பின் தான் தேவா சுற்றம் உணர்ந்து விலகினான்.
மைதிலியின் பார்வை அவனை எரித்துவிடும் போல இருந்தது. மாமனார்,மாமியார் மனைவியின் அக்கா என எல்லோரும் தன்னை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அடுத்த நொடி ஜானகி நிலையை எண்ணினான்.

Advertisement

அதற்குள் ராஜேஸ்வரி ஜானகியின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து வந்தார் . சத்தம் கேட்டு அனிஷ் விழித்துக் கொண்டாள் .பயந்து மம்மி… மம்மி…என கத்த ஆரம்பித்தாள். அனிஷின் சத்தம் கேட்டு சுதா குடும்பமும்,தீபா குடும்பமும் வெளியே வந்து விட்டனர். ராஜேஸ்வரி அங்கிருந்த வாசல் கூட்டும் துடைப்பத்தை எடுத்து எவ்வளவு நாளா என் மருமகன் கூட ரகசியமா குடும்பம் நடத்திட்டு இருக்கே ,இந்த பொலப்புக்கு தூக்குல தொங்கிடு இன்னைக்கு உன்ன அடிச்சே இந்த ஊர விட்டு தொரத்தரே பாரு என சொல்லி,
ஜானகியை அடிக்க ,அனிஷ் மம்மியை அடிக்காதீங்க என வந்து கட்டிக் கொண்டாள்.

Advertisement

இரண்டு அடி அனிஷ் மேலும் விழுந்தது. அவள் வலியில் அலற சுப்ரமணியம் தன் முரட்டு கரங்களால் அந்த பிஞ்சு கைகளை பிடித்து தள்ள, சுதா வந்து பிடித்துக் கொண்டாள்.சுதா அவர்களை சமாதானப்படுத்தி ஜானகியை மீட்க போராடினாள். மைதிலியின் அக்கா நிவேதா அவளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுப்டடாள்.

தன் பிள்ளையை அடித்து தள்ளி விட்டதை ஒரு நிமிடம் உணர எடுத்த கொண்ட ஜானகி வெறி கொண்ட காளியாய் மாறினாள். அந்த துடைப்பத்தை பிடுங்கி ராஜேஸ்வரியை தன் ஆத்திரம் அடங்கும் வரை அடித்தாள்.தடுக்க வந்த யாராலும் அவளை எதிர் கொள்ள முடியவில்லை அவ்வளவு வலிமை இருந்தது அவளிடம். ராஜேஸ்வரியின் உடலெல்லாம் காயங்கள்,இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தாள் அவளை அடித்து துவம்சம் செய்திருப்பாள்.

அதற்குள் தேவா வந்து அவளிடம் இருந்து துடைப்பத்தை பிடுங்கி எறிந்தான்.உனக்கு என்ன பைத்தியமா ஏன் இப்படி ஆக்ரோசமா நடத்துக்கறே? என்றான். அடுத்த நொடி அவனை பளார் என அறைந்தாள். யாருக்கு பைத்தியம் எனக்கா இல்ல அந்த அம்மாக்கா? என்னை முதல்லே கல்யாணம் பண்ணி வயித்தில குழந்தையை கொடுத்துட்டு அப்பறோம் தானே நீ இவளை கட்டிக்கிட்டே என்றாள். அவள் அடித்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவன், அவளின் அடுத்த கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்தான். வாய திறந்து எல்லார் முன்னாடியும் சொல்லு நீதானே என் புள்ளைக்கு அப்பா என்றாள். அவன் ஏதும் பேச வில்லை, அந்த துடைப்பத்தை எடுத்து அவனை இரண்டு அடி வைக்க,சக்கரவர்த்தி வந்து மகனின் மீது அடிபடாதவாறு நின்று விட்டார். என்னை அடி நானும் இதோ என் மனைவி கருணாவும் தான் இந்த நிலைமைக்கு காரணம். இப்படிபட்ட பையன பெத்ததுக்கு எங்களுக்குதா நீ தண்டனை தரனும் என்றார் .

Advertisement

உங்களுக்கு தண்டனை கொடுக்கற அளவுக்கு என்கிட்ட பணம் அந்தஸ்து தகுதி எதுவும் இல்லை. நான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கறது என்னையும் என் மகளையும் நீங்க நிம்மதியா வாழவிட்ட போதும், எங்களுக்கான பாதுகாப்ப தர வேண்டியது உங்க மகன்தா ஆனா இன்னைக்கு எங்களோட இந்த நிலைமைக்கு காரணமாகி நிக்கறாங்க, ஒரு வேலை எங்களை காப்பாத்தும் பொறுப்பை உங்க மகன் முதலிலேயே செய்து இருந்தால், இன்றைக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தே இருக்காது.உங்களுக்கான தண்டனையை அந்த ஆண்டவன் தருவான் என்றாள்.
இவ்வளவு நேரம் எரிமலையாக நின்றிருந்த சுப்பிரமணியம் ஆரம்பித்தார் ,என்னமோ பெரிய பத்தினி மாதிரி சாபம் விடரே என் மருமகன் கூட ரகசியமாகதானே குடும்ப நடத்தி இந்த குழந்தையே பெத்துக்கிட்டே என ஜானகியை பார்த்து கூற, தேவாவிற்கு கோபம் வந்துவிட்டது . ஜானகி என்னுடைய முதல் மனைவி, அனிஷ்தான் என்னுடைய முதல் குழந்தை இனி அவளை பற்றி ஒரு வார்த்தை தவறாக பேசினாள் நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என எச்சரிக்கை செய்தான்.

அடுத்து மைதிலி ஆரம்பித்து விட்டாள், ஓ அப்ப அவள உன் மனசுல வெச்சுட்டுதா என்கூட இவ்வளவு நாளா குடும்பம் நடத்திட்டு இருந்தியா, இனி ஒரு நிமிஷம் கூட உன்கூட வாழ மாட்டே நான் எங்க அப்பாவோட போறே என தனக்கு தேவையானதை வாரி எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
யாரும் அவளை தடுத்து நிறுத்தவில்லை.அனைவரும் மெளனமாக அவரவர் இடத்திற்கு உறங்க சென்றனர். யாருக்கும் அன்றிரவு தூக்கம் இல்லை.

அனிஷிற்கு தற்போதுதான் தேவா அவளின் அப்பா என தெரிய அவளுள் இருந்த பயம், துறுதுறுப்பு எல்லாம் மறைந்து தாயிடம் ஒட்டி அமர்ந்து கொண்டாள். மம்மி வலிக்குதா என்றாள், ஜானகி இல்லை என தலையாட்ட மம்மி நாமே சீக்கிரம் வீடு கட்டி போய்ராலாம் இங்க இருக்கவே எனக்கு பிடிக்கல மம்மி என்றாள். மகளுக்கு தங்களின் வாழ்வு ஓரளவு புரிந்து விட்டதால் தாமதிக்காமல் வீட்டை கட்ட ஆரம்பித்தாள். எண்ணி ஆறு மாத்தில் வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் முடித்து கிளம்பி விட்டாள்.அழகான தொட்டி கட்டு வீடு கேரள பராம்பரிய முறைப்படி கட்டி இருந்தாள்.அனிஷிற்கு அந்த வீடு ரொம்ப பிடித்து இருந்தது. சக்கரவர்த்தியின் வீட்டை விட பிரமாண்டமாக கட்டி இருப்பதாக கருணா சொல்ல கேட்டுக் கொண்டார் கணவர்.

மைதிலி சண்டை பிடித்து அம்மா வீடு செல்வது தெருமுனையில் இருக்கும் கடைக்கும் சென்று வீடு திரும்புவது போலத்தான் என்பதால் இந்த முறை இரண்டாவதாக பையன் பிறந்ததும் வந்து ஒட்டிக் கொண்டாள்.அதுமட்டுமின்றி தேவாவின் சொத்து தன் மகள் அதுல்யாவிற்கும் மகன் வினய்க்கும் வேண்டும் எங்காவது அனிஷிற்கு எழுதி வைத்துவிட்டாள் தங்களின் நிலைமை அவ்வளவுதான் என எண்ணி அவனோடு வந்து ஒட்டிக் கொண்டாள். தேவாவும் மகன்,மகளுக்காக அவளுடன் வாழ்வை தொடர்ந்தான்.

இருந்தும் அனிஷ் அவனை விட்டு தள்ளி செல்வது அவனுக்கு வருத்தத்தை தந்தது. பள்ளிக்கு சென்று அவளை பார்க்க ஆரம்பித்தான்.அனிஷிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பக்குவம் வர ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். தேவாதான் தன் தந்தை அதில் எந்த மாற்றமும் இல்லை அதே சமயம் அவனை வெறுக்கவும் இல்லை, பாசமழையும் பொலியவும் இல்லை.அவன் தருவதை வாங்கி கொள்வாள் ஏதாவது கேட்டாள் பதில் கூறுவாள்.எத்தனையோ முறை அவளது பள்ளி தோழர்கள் அவர்களின் தந்தை பற்றி பேசும் போது ஏங்கி உள்ளாள்.
“நா டாடி கூட பைக்ல போனே, இது எங்க டாடி வாங்கி கொடுத்தாங்க” என மற்றவர்கள் கூறும் போது ஒரே ஏக்கமாக இருக்கும்.

அப்பா என்ன ஆனார்? ஏன் அம்மா மட்டு தனியா இருக்காங்க ?அப்பா எப்படி இருப்பார்? என்றெல்லாம் யோசித்து இருக்கிறாள். ஒரு நாளாவது அப்பாவுடன் சந்தோசமாக இருந்திட வேண்டும் என்றெல்லாம் கற்பனை உலகில் மிதந்து உள்ளாள். ஆனால் இன்றைய நிலை அவளை அவனிடமிருந்து தள்ளி வைத்தது.அப்பா எங்களுடன் வந்து விட்டாள், அதுல்யாவும்,வினய் உம் பாவம் என்னை போலவே கஷ்டப் படுவார்கள். ராஜேஸ்வரி அவர்களையும் துடைப்பத்தால் அடிப்பார் எனவே அப்பா அவர்களுடனே இருந்து கொள்ளட்டும் எனக்கு அம்மா மட்டும் போதும் என தனது குட்டி அறிவிற்கு ஏற்ப முடிவெடுத்து இருந்தாள்.

நாட்கள் அதன் போக்கில் வேகமாக ஓடியது. ஜானகி தற்போது சவுதி,துபாய் என தனது வியாபாரத்தை பெருக்கினாள்.பூண்டு மட்டுமின்றி ஆர்கானிக் முறையில் அனைத்து விதமான உணவு பண்டங்களையும் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தாள்.
வேலை விஷயமாக அடிக்கடி ஃபாரின் சென்று வருவதால் அனிஷின் பாதுகாப்பு கருதி ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள். தேவாவை போன்றே ஃபேஷன் டிசைனிங் படித்து முடித்தாள் அனிஷ் .

தேவாவும் தன் தொழிலை அர்ஜூன் என்ற இருபத்தி நான்கு வயது மூளைக்காரனின் மூலம் நன்றாக விரிவு படுத்தி இருந்தான்.
பிரச்சனைகளுடனே தேவாவின் பிள்ளைகளும் வளர்ந்தனர்.

இடைப்பட்ட காலத்தில் ஜானகியின் வளர்ச்சியை பார்த்து அவளை பெற்றவர்களும் மூக்கின் மேல் விரல் வைத்தனர்.கோகுல் வேலையை இழந்து ஜானகியிடம் வந்து நிற்க அன்பாக அழைத்துக் கொண்டாள். தற்போது தாய் தந்தைக்காக மாதம் ஒரு தொகையை வழங்கி வருகிறாள். கோகுலுக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கி அவனது பிள்ளைகளுக்கு, அத்தை சீரும் செய்து முடித்தாள். அனிஷ் பூப்பெய்திய போது கூட கோகுல் தாய் மாமன் சீர் செய்ய வில்லை, ஆனால் ஜானகி எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தாயன்போடு அனைவரையும் அரவணைத்துக் கொண்டாள்.

தேவாவும் நடந்த விஷயங்களுக்காக அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டான். அவ்வளவுதான் அவளின் மானம்கெட்ட மனம் அவனையும் மன்னித்து விட்டது. அவனது தொழில் சரிவடையும் போது அவ்வப்போது ஜானகியிடம் வந்து பணம் பெற்று செல்வான். ஏற்றுமதிக்காக அவளுக்கு நிறைய சூட்சமங்களை சொல்லிக் கொடுத்தான்.ஒரு நல்ல நண்பர்களைப் போல இருவரும் தங்கள் சுக துக்கங்களை பரிமாறிக் கொண்டனர்.சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, தேவைப்படும் போது தோள் கொடுத்து உதவிக் கொண்டனர்.

ஜானகியின் வாழ்வு ஒரு தெளிந்த நீரோடை போல தெளிவாக ஓடியது.இனி அடுத்த அத்தியாயத்தில் இருந்து அனிஷ், அதுல்யா ,வினய் இவர்களின் திருமணம்,குழந்தை என அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்ய வருமாறு வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்
–கருவின் குரல் ஒலிக்கும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!