Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 5.2

காலை முதல் மாலைவரை அன்னமாவும் முத்துலெட்சுமியுமே பிள்ளையைப் பார்த்துக்கொள்வது,  வீட்டு வேலை மனதின் கவலை குழப்பம் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை பற்றிய பயம் என்று உழன்றுகொண்டு இருக்கும் அவர்களிடம் ஆதிக்கப்படியான சோர்வு.

 

 



Advertisement

ஆகையால் மாலை வந்ததும் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையைக் காமாட்சி பார்த்துக்கொள்வாள்,  அதற்கும் மீனா தொடங்கிவிட்டாள் “என்ன இவனை வெச்சு அவரை வளச்சு போடப் பாக்குறீயா சுமந்து பெத்த எனக்கே அது அழுதா ஒன்னும் தோணல நீ என்னமோ மடி சுமந்தவ மாதிரி பதறிட்டு ஓடுற” என்று அவளைக் கொத்தி தின்றாள்.

 

 

Advertisement

 

Advertisement

அன்னம்மா காமாட்சியிடம் சொல்லிவிட்டார் “பேர் வெக்கும்போது நீ தள்ளியே நின்னுக்கோ ஆச்சி அவ எல்லாரையும் பேசியே கொன்னுடுவா” என்று ஆகையால் ஆச்சி தள்ளி நின்றுகொண்டாள்.

 

Advertisement

 

மனம் வலித்தது அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க நெஞ்சை அடைத்தது என்ன பாவம் செய்தேன் ஏன் இப்படி எல்லாம்… அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன செய்தது ஏன் அதற்க்கு பிறப்பிலே இத்தனை துன்பம் என்று கண்ணீரை கூட வெளிப்படையாகக் காட்டமுடியவில்லை.

 

 

உறக்கம் என்பதே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது அதோடு இன்றைய மனஉளைச்சலில் வெகுநேரம் சென்றே உறங்கினர்,  முத்துலட்சுமி இரவில் இங்குத் தங்குவதில்லை அவர் வீட்டில் சமையல் எல்லாம் செய்து வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு குழந்தையைப் பார்த்துக்கொள்ள இங்கு வந்துவிடுவார்.

 

 

மகனாக ஒருத்தனை பெற்றிருக்கிறாரே அவனுக்கு வேளா வேளைக்கு வேண்டிய உணவைச் சமைத்துவைத்துவிடுவார் பெற்றுவிட்டேன் என் உயிர் இருக்கும் வரைக்கும் தாயாக என் கடமை என்று செய்துவிடுவார்,  இரவில் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

 

 

அன்றும் பெயர் வைத்து எளிமையான மதிய உணவையும் உண்டுவிட்டு மாலைவரை இருந்தவர் இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்,  இரவு நேரம் சென்று உறங்கியதால் அன்னம்மாவால் எழுந்துகொள்ளமுடியவில்லை முதலில் எழுந்த காமாட்சி வீடே அமைதியாக இருப்பதையும் வாயில் திறந்திருப்பதையும் பார்த்தவள் மீனாவின் அறையை எட்டிப்பார்க்க அன்னம்மா கட்டிலின் கீழே பாயில் படுத்திருந்தார் மெத்தை வெறிச்சோடியிருந்தது.

 

 

மீனாவையும் குழந்தையையும் காணவில்லை சட்டென்று ஒரு பதட்டம் சூழ தாயை உலுக்கினாள் காமாட்சி “அம்மா மீனா எங்க” என்க அவரும் அப்பொழுதுதான் பார்த்தார்.

 

 

“தெரியலையேடி நீ மொட்டைமாடில பாரு” என்றவர் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார் அனைத்து இடத்திலும் தேடியாகிவிட்டது எங்குமில்லை.

 

 

மேல் வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்மணி ஒருவர் “என்ன ஆச்சி மீனா மட்டும் காலைல தனியா ஆட்டோ பிடிச்சு போனுச்சு நாங்க கூடப் பேசிக்கிட்டோம் ஒருமாசம்தான் ஆகுது அதுக்குள்ள இந்தப் பொண்ணு இப்படி தனியா எங்க போகுதுன்னு” என்றார் அதைக் கேட்டதும் அவசரமாகக் கீழே வந்தவள் தாயிடம் அதைக் கூற தந்தையும் அப்பொழுது அங்குதான் இருந்தார்.

 

 

சரியாக மாசிலாமணியின் அலைபேசி அடித்தது முத்துலெட்சுமிதான் அழைத்திருந்தார்  “மணி சீக்கிரம் வா இங்க ரெண்டும் அடிச்சுகிட்டு செத்துடும் போல” என்று பெரிதாக அழத்தொடங்க அடித்துபிடித்து அங்கு ஓடினர்.

 

 

சட்டமாக ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் மீனா,  பசியில் குழந்தை உச்சபட்ச சத்தத்தில் அழுதது காமாட்சி எதையும் யோசிக்கவில்லை மீனாவின் அருகில் இருந்த பையிலிருந்து பால்  பவுடரை எடுத்தவள் தண்ணீர் சுடவைத்து கலக்கி ஆற்றி என்று அவசரகதியில் தயார் செய்து குழந்தைக்குப் புகட்டினாள்.

 

 

அவ்வளவு ஆத்திரம் பிள்ளை இப்படி அழுதும்கூட கல்லு மாதிரி நிற்கும் பெற்றோர் இருவரையும் பார்த்து இனிமேல் ஏதாவது பேசட்டும் அவள் பல்லைப் பேர்த்துவிட்டுதான் அடுத்த வேலை என்று முடிவு செய்துகொண்டாள்.

 

 

முத்துலெட்சுமிக்கு கையெல்லாம் நடுங்கியது அவரால் எதையும் யோசிக்கமுடியவில்லை குழந்தையைத் தூக்க கூட அவரால் முடியவில்லை.

 

 

“உனக்குத்தானே பொறந்தது நான் மட்டும் ஏன் பாக்கணும்” என்றாள் அவள்.

 

 

“என் சம்மத்தோடயா பெத்துக்கிட்ட நான் பொறுப்பில்லை” என்றான் அவன்.

 

 

“நீயும் சேர்ந்துதான் பாத்துக்கணும்”.

 

 

“முடியாது,  உன்கூட சேருவேன்னு கனவுல கூட நினைக்காத”.

 

 

“அப்போ என்னாலயும் பாதுக்க முடியாது” என்றாள் மீனா.

 

 

“சந்தோசம் கொண்டு போய்க் குப்பைல போடு” என்றான் ரகு.

 

 

“போதும்” என்று கத்தினார் முத்துலட்சுமி “உங்க ரெண்டு பேருக்கும் இனிமே அந்தப் பிள்ளை சொந்தமில்லை நான் பாத்துக்குறேன் நீங்க உங்க வழியைப் பாருங்க” என்றவர் “மணி உன் பொண்ணை கூட்டிட்டு போ” என்றார் திடமாக.

 

 

“அக்கா நீ எப்படி?” என்ற தம்பியைப் பார்த்தவர் “நான் பாத்துப்பேன் கூடத் துணைக்கு  நீங்க ரெண்டு பேரும் நிக்க மாட்டீங்களா” என்று கேட்டார் கணவன் மனைவியைப் பார்த்து.

 

 

“எங்களுக்கும் பேரன்தான் அண்ணி” என்றார் அன்னம்மா அவரின் கைபிடித்து.

 

 

“என்னால போராட முடியல அன்னம் ஆம்பள  பிள்ளைதானே  நம்மால முடிஞ்ச வரைக்கும் எப்படியாவது வளத்து விட்டுடலாம்” என்றார்.

 

 

அழுது அழுது ஓய்ந்து இபோழுது கொஞ்சமாகப் பால் குடித்து வயறு நிறைத்த பிள்ளை சிறு விதும்பலோடு உறங்கிக்கொண்டிருக்க அதை அப்படியே மார்போடு சேர்த்தனைத்தாள் காமாட்சி.

 

 

“போங்க ரெண்டுபேரும் கிளப்புங்க உங்களுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க இனிமே உங்க ரெண்டு பேர்கிட்டயும் நாங்க எதுவும் கேக்க மாட்டோம் வெளில போங்க” என்றார் முத்துலட்சுமி.

 

 

மீனாவை அழுத்தமாகப் பார்த்தவன் காமாட்சியின் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையையும் காமாட்சியையும் பார்த்து ஒரு சிறு புன்னகையோடு வெளியேறினான் அதன் அர்த்தம் புரிந்துகொண்ட மீனாவின் மனதில் புயல்வீச நெஞ்சின் வஞ்சம் மீண்டும் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

 

“ஒளிச்சு மறைச்சு பேசறதுக்கு இங்க ஒண்ணுமில்ல உங்க வீட்டு விஷயம் எங்களுக்கு நல்லாவே தெரியும், எங்க பக்கம் என்ன பிரச்சனைன்னு நான் தெளிவா உங்ககிட்ட சொல்லிட்டேன் வேணும்னா நீங்க விசாரிச்சுக்கோங்க”.

 

 

“ஏதோ எங்க போறாத காலம் இப்போ கொஞ்சம் கஷ்டத்துல இருக்கோம் இப்படியே போகாது கேஸ் ஜெயிச்சுட்டா வீடு கைக்கு வந்திடும் அதோட சொத்தும் எங்க பங்கு வரும் பையனும் நல்ல உழையாளி கெட்ட பழக்கம்  எதுவும் இல்ல நம்பி குடுங்க நல்லா பாத்துப்போம்” என்றார் மயில்லம்மா.

 

 

மாசிலாமணி மனைவியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு மையமாகத் தலையாட்டினார்,  மருதவேலின் புகைப்படத்தைப் பார்த்திருந்தனர் மனதுக்கு திருப்தியே நல்ல வாட்டசாட்டமாக இருந்தான் கொஞ்சம் மாநிறம் தரகரும் விஷயங்களை ஒளிவு மறைவின்றி சொல்லியிருந்தார்.

 

 

“அப்பறோம் உங்க மக போட்டுடுவர நகை சிலதை போட்டுத்தான் எங்க பொண்ணை அனுப்புவோம் அதோட பண்டபாத்திரத்துக்கு பதிலா ரொக்கமா குடுத்திடுங்க, அப்படியே அந்தக் கடன் பத்து லச்சத்தை பாத்துக்கோங்க” என்றார் கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான் மயிலம்மா பேசினார்.

 

 

முன்பே அன்னமாவிடம் விசாரித்தும்விட்டார் “பொண்ணுக்கு நீங்கதான் அத்தைபையனை பேசினதாவும் அதுக்குள்ள இந்த மாதிரிப் பிரச்சனை ஆனதாவும் தரகர் சொன்னார்,  அவர் சொல்றது இருக்கட்டும் நீங்கச் சொல்லுங்க பொண்ணுக்கு அத்தை மகன் மேல ஆசை இருந்துச்சா”.

 

 

“இப்போவும் மனசுல அந்த நெனப்போடதான் இருக்காளா ஏன்னா என் மகனோட வாழ்க்கை பாருங்க இன்னொருத்தனை மனசுல வெச்சிருக்க பொண்ணுகூட எப்படி குடும்பம் நடத்த முடியும்” என்றதும் காமாட்சி விழிகளை மூடிக்கொண்டாள் மூடிய இமை தாண்டிக் கண்ணீர் வழிந்தது.

 

 

சமையலறையின் உள்ளே சுவற்றில் சாய்ந்து அவள் நின்றிருக்க வெளிப்பக்கம் நின்று பேசிக்கொண்டிருந்தார் மயில்லம்மா “இல்லங்க நாங்கதான் கல்யாணம் பேசினோம் ஆச்சி மனசுல அப்படி எந்த நெனப்பும் இல்ல” என்றார் அன்னம்மா.
காமாட்சியின் மனம் முழுதும் பயம் மட்டுமே எப்படி இல்லாமல் இருக்கும் மாப்பிள்ளையின் தாய்க்கே இந்தச் சந்தேகம் இருக்கும்போது,  மாப்பிளைக்கு இருக்காதா தாலிகட்டும் முன்னவே தன் மீது சந்தேகப்பார்வை தான் இருக்கும் நாட்கள் செல்லச்செல்ல அது கூடிக்கொண்டே போனால் என்ன செய்ய.

 

 

தன் மீது என்ன பழி வேண்டுமானாலும் போடலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்,  எத்தனை எத்தனை கேள்விகளுக்குத்தான் விளக்கம் சொல்ல முடியும் இது என்னமாதிரி தலையெழுத்து என்று சோர்ந்துபோனாள்.

 

 

“மாப்பிள போட்டோ இதுல இருக்கு ஆச்சி பாரு” என்ற தாயை பார்த்தவள் “நீங்களும் அப்பாவும் பாத்துட்டிங்களே போதும்மா” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

 

 

“என்ன ஆச்சி உனக்குப் பிடிக்கவேண்டாமா” என்ற தாயை பார்த்தவள்  விழிகளில் வெறுமை.

 

 

“எனக்குப் பிடிக்கணுமா?? அப்படிப்பட்ட பெரிய பாக்கியம்லாம் எனக்கு இனிமே உண்டாம்மா,  இங்க எனக்குப் பிடிக்குறதுயில்ல இவ்ளோ விஷயத்தையும் கேட்டபிறகு பெரிய மனசு பண்ணி என்னைய கட்டிக்குறேன்னு சொல்றாங்களே அதுதானம்மா பாக்கியம்”.

 

 

“நமக்குத் தேர்ந்தெடுக்குற தகுதி இல்லாம போயிடுச்சு,  வாழ்க்கை குடுக்க வரவங்களை கும்பிட்டு ஏத்துக்குறது மட்டும்தான் நமக்கு விதிச்சது” என்ற மகளின் வார்த்தையில் அவளைக் கட்டிக்கொண்டு விம்மினார் அன்னம்மா.

 

 

“யாரை கேட்டு முடிவு செஞ்சீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க புருஷனும் பொண்டாட்டியும்,  நான் பொண்ணு  பாக்க சொன்னேனா மொதல்ல மாப்பிளையை நேர்ல பாக்காம என்கிட்டே சம்மதம் கேக்காம எப்படி அவங்க வீட்டில ஒத்துக்கிட்டாங்க உண்மையா சொல்லுங்க என்ன ஏழரைய இழுத்துட்டு வந்துருக்கீங்க”  என்று தந்தையிடம் இறைந்தான் மருதவேலு.

 

 

“பொண்ணோட அப்பா உன்கிட்ட நேர்ல பேசணும்னு  சொன்னாரு வேலு,  இன்னும் சம்மதம்லாம் சொல்லல உன்கிட்ட பேசிட்டு முடிவைச் சொல்றேன்னு தான் சொன்னாரு” என்றார் அவன் தந்தை.

 

 

“இவ்ளோ காசு நகை கேட்டும் சரின்னு சொல்லியிருக்காங்க அப்போ அங்க என்ன பிரச்சனை” என்றான் கூர்மையாகத் தந்தையிடம்,  முதலில் தயங்கியவர் அனைத்தையும் சொல்லிமுடிக்க.

 

 

“ஆமா இங்க பிரச்சனை கம்மியாயிருக்கு அதனால இன்னொன்னை எடுத்துவந்து என் தலைல வெக்க பாக்குறீங்களா,  இதெல்லாம் சரியா வராதுப்பா… ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு அத்தை மகன் மேல ஆசை இருந்திருந்தா அதை மறக்கக்கூட நேரம் குடுக்காம பிடிச்சு கட்டிவெச்சா  அது எப்படி நிம்மதியா வாழும்”.

 

 

“ஏற்கனவே மனசு சங்கடத்துல இருக்குற பொண்ணை கட்டி கூட்டிட்டு வந்து இந்த நரகத்துல தள்ளணுமா,  அவரோட நம்பர் குடுங்க நான் பேசிடுறேன் இது சரியா வராதுன்னு கிடைச்ச வரைக்கும் லாபம்னு அவங்க இருக்குற நிலைமையைச் சாதகமா மாத்திக்க பாக்குறீங்க என்ன ஆளுங்க நீங்கெல்லாம்” என்று பல்லைக் கடித்தான்.

 

 

“கொஞ்சம் பொறுமையா இரு வேலு” என்றவர் “அந்தப் பொண்ணு அங்க நிக்குது” என்றார்.

 

 

“எந்தப் பொண்ணு” என்றான் திரும்பிப் பார்த்துக்கொண்டே.

 

 

“அதான் உனக்குப் பாத்தோமே அந்தப் பொண்ணு… காமாட்சி” என்றவர் கைக்காட்டிய பக்கம் பார்த்தான் கையில் ஒரு கட்டைப்பையோடு நடந்து சென்றுகொண்டிருந்தாள் அவள்.

 

 

“இந்தம்மா பொண்ணே” என்று அழைத்துக்கொண்டு அவள் பின்னே இவன் செல்ல “லேய் வேலு நில்லு எதுவும் பேசிடாதா” என்று பின்னையே சென்றார் ராமலிங்கம்.

 

 

“இந்தாம்மா நில்லு” என்றிவன்  கத்திக்கொண்டே செல்ல யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என்று நில்லாமல் நடந்தவள் “யம்மா முடியழகி நில்லு”  என்ற குரலில் சட்டென்று திரும்பிய காமாட்சி மருதவேலை அதிர்ச்சியோடும் குழப்பத்தோடும்  பார்த்துநின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!