அமுதமழை சாரல் 28
அத்தியாயம் 28
“என்னாச்சுங்க? ரெண்டு ரவுண்ட் ஓடுனதுக்கா இப்படி?” என்றார் சீதாலட்சுமி பயந்தவராக.
Advertisement
“அத்தை, சுப் ரஹோ..” என்று ஒரு அதட்டலிட்டாள் வர்ஷித்தா.
“முதல்ல இந்த க்ளுகோஸ் குடிங்க அண்ணா” என்று ராஜி ஸ்ரீனிவாஸனுக்கு கொடுத்தார்.
Advertisement
Advertisement
பின் வர்ஷித்தாவும் ஹர்ஷித்தாவும் மெல்ல அவரை அழைத்து வந்து கூடத்தில் அமர வைத்தார்கள்.
இவர்கள் சத்தம் கேட்டு பாட்டியும் வந்துவிட்டார் என்னானதோ என்று பயந்து.
Advertisement
“என்னாச்சு மாப்பிள்ளை?” என்றார் அவரின் அசந்த தோற்றத்தை பார்த்து.
ஹர்ஷித்தா தான் நடந்ததை கூறினாள். பாட்டி சீதாலட்சமியை முறைத்த முறைப்பில் அவர் கப்சிப்.
“டாக்டர் கிட்ட போகலாமா அண்ணா” என்றார் ராஜி.
“இல்லம்மா, க்ளுகோஸ் குடிச்சதும் கொஞ்சம் பரவாயில்லை. இன்னிக்கு ரெஸ்ட் எடுத்தா போதும்னு நினைக்கிறேன், நான் ரூமுக்கு போறேன்” என்று சங்கோஜமாக கூறினார்.
“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” என்று உடனே வந்தார் சீதா.
எழுந்து காலை கீழே வைத்தால் பயங்கர வலி. ஆ என்று அலறிக்கொண்டு மறுபடியும் அமர்ந்து விட்டார்.
“என்ன என்ன” என்று பதறிப்போனார் சீதா.
வர்ஷ் தான் கீழே அமர்ந்து அவர் காலை பார்த்தாள். லேசாக வீக்கம் கண்டிருந்தது.
“மீ, லைட்டா ஸ்ப்ரேயின் மாறி இருக்கு” என்றாள்.
“டாக்டர் கிட்ட போவோம்” என்று அவரை எழுப்ப முயற்சித்தார் சீதா.
“என்னால எங்கேயும் வர முடியாது” என்றுவிட்டார் ஸ்ரீனிவாசன்.
“நீங்க கவலை படாதீங்க அண்ணா. என் பிரண்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரெண்டு பசங்க இருக்காங்க, அவங்க கிட்ட கேட்போம்” என்று ராஜி தன் அலைபேசியை எடுத்து பாரி, வில்வாவிற்கு அழைத்தார்.
காலை நேரம் என்பதால், பாரியும் வில்வாவும் மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
“ஹாய் ராஜிம்மா, என்ன காலையிலே போன் போட்டிருக்கீங்க?என்ன சமாச்சாரம்?” என்று உற்சாகமாக பேச்சை தொடங்கினான் பாரி.
ராஜி சுருக்கமாக விஷயத்தை கூறினார்.
யார் என்று போனை எட்டி பார்த்த சீதா, “பாரிவேந்தன், வில்வநாதன் நீங்களா?“ என்றார் ஆர்வமாய்.
“சீதா லட்சுமி மிஸ் நீங்களா?” என்றார்கள் அவர்களும் உற்சாகமாக.
“டேய் நீங்க அப்புறமா கதை கேளுங்க, இப்ப அண்ணா காலை முதல்ல பாருங்க” என்றார் ராஜி.
“காலை கிளோஸ் அப்ல காட்டுங்க ராஜிம்மா”
“ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. அந்த பக்கிரிசாமிங்களோடு நம்மளால ஈடு கொடுக்க முடியுமான்னு யோசிக்க வேண்டாமா?” என்றான் வில்வா.
அவர் பாவமாக பார்க்கவும், “சார், காலை லேசா இடதுபக்கம் வலதுபக்கம் ஆட்டுங்க..”
“ஆன் அப்படிதான்.. முடியுதா? வலி இருக்கா?”
“இல்ல ப்பா வலிக்கல”
“சரி இப்ப பாதத்தை மேலே கீழேன்னு அசைங்க..”
“இப்ப வலி இருக்கா?”
“இல்லை..”
“ரெண்டு காலையும் சோபா மேலே நீட்டி வைங்க…
இப்ப வலது காலை அப்படியே மேலே தூக்குங்க.. இப்ப இடது காலை அதே மாதிரி தூக்குங்க..”
இவர்கள் சொல்லுவதை செய்ய செய்ய அவருக்கே அப்பாடா என்று இருந்தது. உண்மையில் ஏகத்திற்கும் பயந்திருந்தார்.
“காலை ஊனுன்னப்ப தான் வலிச்சுது. திரும்ப நிக்க ட்ரை பண்ணவா?” என்றார்.
“வேண்டாம் சார், கொஞ்ச நேரம் கழிச்சு இறங்குங்க. பெருசா அடி எல்லாம் இல்ல சார். திடீர்னு அதிகமான ஸ்ட்ரயின் கொடுத்தனால வந்த பிரச்சனை தான்”
“சரிப்பா”
“ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுங்க. அப்புறம் மிஸ், ஐஸ் பேக் ஒத்தடம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கொடுங்க.. அதுலயே சரி ஆயிடும்”
இவர்கள் பரிசோதித்து கொண்டிருக்கையில் பெண்கள் வந்துவிட்டனர்.
“இதை நாங்களே சொல்லி இருப்போமே?” என்றனர் நக்கலாக.
“ஒரு அப்பிராணி மனுசரை இப்படி உட்காரவச்சது மட்டும் இல்லாமல் பேச்சை பாருங்க ராஜிம்மா இந்த பக்கிரிங்களுக்கு?”
“இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டிங்க அப்புறம் அவ்வளவு தான்” என்றாள் வர்ஷ் கடுப்பாக.
“உங்க சண்டையை அப்புறம் வச்சுக்கோங்க. ரொம்ப சோர்வா இருக்காங்களே பாரி?” என்றார் ராஜி கவலையாக.
“அது உங்க பயில்வான்ஸ் கூட அனுப்ப முன்ன யோசிச்சிருக்கணும்”
“அதானே?”
“நான் சொன்னேன் யார் கேட்டா?”
“அப்ப கேக்காதவங்களை போய் சாருக்கு நல்ல தெம்பா சூப் வச்சு கொடுக்க சொல்லுங்க”
“என்ன சூப் வில்வா?” என்றார் சீதா பாவமாக. அவர் கணவருக்கு இப்படி ஆகவும் மிகவும் பயந்துவிட்டார்.
“என்ன ராஜிம்மா நீங்க, எப்படி இருந்த எங்க மிஸ்ஸ, ரெண்டே நாள்ல இப்படி ஆக்கிட்டீங்களே?”
“விதி வலியது வில்லு..”
“அதுவும் சரி தான்”
“சரி ராஜிம்மா, நீங்க போய் நல்ல பிரெஷ் ஜூஸ் போட்டு மிஸ்ஸுக்கும் சேர்த்து கொடுங்க. அப்புறம் பிரீயா பேசுங்க” என்று வைத்து விட்டனர்.
ராஜி போனை வைப்பதற்குள், வர்ஷித்தா ஐஸ் பேக் கொண்டு வந்து ஸ்ரீனிவாசன் பாதங்களில் இதமாக வைத்தாள்.
ஹர்ஷித்தா, மாதுளை ஜூஸ் போட்டு கொண்டு வந்து அனைவருக்குமே கொடுத்தாள்.
ஐஸ் ஒத்தடம் கொடுத்ததும் கொஞ்சம் வலியும் குறைந்தது. ஜூஸ் குடித்ததும் தெம்பாக உணர்ந்தார். பின்னரே சீதாவும் கொஞ்சம் இயல்பாகினார்.
பேத்திகளின் பொறுப்பான செயல்களை ஆசையாக பார்த்துக்கொண்டிருந்தார் பாட்டி. என் மருமகள் வளர்ப்பாச்சே என்று மருமகளயும் பெருமையாக பார்த்தார்.
இப்படி கலாட்டாவுடன் வர்ஷ் ஹர்ஷின் சென்னை வாசம் தொடங்கியது.
————————-
அடுத்த வாரமே ராஜி தமி, சுமி, பாட்டி மூவரையும் அழைத்து கொண்டு டெல்லி புறப்பட்டார். அவர்கள் மூவரும் ஒரு வாரம் டெல்லியில் தங்கி சுத்தி பார்த்துவிட்டு வருவதாக ஏற்பாடு.
தமயந்தி, சுமதி, பாட்டி இவர்கள் எல்லாம் இது போல தனியாக பிரயாணம் செய்ததே இல்லை. ஒரு விதமான பரவச நிலையில் இருந்தனர் என்றே கூறலாம்.
“ஏன் அத்தை, சாமாளிச்சிடுவாங்களா?” என்றார் சுமதி நூறாவது தடவையாக.
“ஏன்டிம்மா ராஜேஷ்வரி, அடுத்த ஸ்டேஷன்ல இவளை இறக்கி விட்டுடு. திரும்ப ஊருக்கு போகட்டும். அந்த இட்லி மெஷின்ல இவ இட்லி அவிச்சு போடாட்டி என் புருஷனும் என் பிள்ளையும் சாப்பாடே இல்லாம போய்டுவாங்க” என்றார் கடுப்பாக.
ராஜிக்கு இவர்கள் சம்பாஷணைகள் சுவாரசியமாக இருந்தது.
“சரிம்மா..”என்றார் அவரும் உடனே.
சுமதி ராஜியை முறைத்துவிட்டு, “ஏன் தமி, உனக்கு டென்ஷனா இல்லையா?” என்றார் தமயந்தியிடம்.
“அதான் அவி இருக்கான்ல சுமி.. அவன் பார்த்துப்பான். எனக்கு பசங்களை பார்க்கணும் போல இருக்கு, அவுனுங்க தான் லீவ் இல்லை வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. ஒரு வாரம் தானே, சமாளிக்கட்டும்” என்றார் தமயந்தி.
“ஏன், கருணா அங்க தானே இருக்கா?” என்றார் ராஜி.
“எங்க கருணா ரொம்ப கெட்டிகாரி தான். ஆனா, அவ எப்பவுமே படிப்பு, பேச்சு, பொறுப்புன்னு தான் சுத்துவா..” என்றார் பாட்டி. அதில் நிச்சயம் பெருமையே அதிகம் இருந்தது.
“நீங்க ஏன் இவ்வளவு நாள் டெல்லி வரலை? கருணா இங்கே இருக்கும் பொழுதே வந்திருக்கலாம் தானே?” என்றார் ராஜி.
“நிஜமா நாங்க மூனு பேரும் தனியா டெல்லி போவோம்னு நினைக்கவே இல்லை. பாரியையும் வில்வாவையும் நாங்க பார்த்து நாள் ஆயிடுச்சு. நாங்க அவங்களை மிஸ் பண்ணறோம்னு புரிஞ்சு பாப்பா தான் எங்களை போக சொல்லி ஏற்பாடு செஞ்சா” என்றார் தமயந்தி.
சரியாக அப்பொழுது ஊரில் இருந்து அழைத்தனர் ஆண்கள் அணி.
“நீங்க எல்லாம் டீன்னு இத்தனை வருஷமா ஒன்னை போட்டு கொடுத்தீங்களே.. அதுக்கு பேர் என்ன டீயா?” என்றுதான் ஆரம்பித்தார் சங்கரன்.
சுமதி கடுப்பாக பார்க்கவும், “என் பொண்ணு போட்டு கொடுத்திருக்கா பாருங்க, இதுக்கு பெயர் தான் டீ” என்று கண்ணாடி டம்பளரில் இருந்த டீயை காட்டினார்.
“அடடா.. விளம்பரத்துல காட்டுற மாதிரி நிறம் சுவை குணம்ன்னு எல்லாம் பெர்பெக்டா இருக்கு பாப்பா போட்ட டீ” என்றார் தர்மராஜ் சங்கர் பின்னாடி நின்றுகொண்டு.
“என் வாழ்நாள்ல இப்படி ஒரு டீயை..” என்று வீரராகு தாத்தா ஆரம்பிக்கவும், கடுப்பான பாட்டி,
“உங்க பேத்திக்கு அருமையா டீ போடத் தெரியும்னு எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனா உங்க தங்க பேத்திக்கு டீ மட்டும் தான் போடத் தெரியும்னு உங்களுக்கு எல்லாம் தெரியுமா?” என்று ரஜினி ஸ்டைலில் கூறி போனை
கட் செய்துவிட்டார் பாட்டி.
அந்த பக்கம் அனைவரும் முகமும் போகும் போக்கை கூறி சிரித்து கொண்டார்கள் பெண்கள் அணி.
அதன் பின் சுமதியும், ஒரு வாரம் வீட்டை பற்றி கவலைப்படாமல் அந்த ட்ரிப்பை ரசித்து அனுபவிக்க முடிவு செய்தார்.
பாரி வில்வா தங்கள் அன்னைகளையும் பாட்டியையும் பார்த்ததும் மிகவும் உணர்ச்சி வசமாகிவிட்டார்கள். என்னதான் போனில் பேசிக்கொண்டாலும் நேரில் பார்ப்பதை போல வருமா?
“இங்க இருக்கிற வரை நீங்க மூனு பேரும் புஃல் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நாங்க தான் சமைப்போம்” என்று கூறி, நண்பர்கள் இருவரும் அவர்களை அடுப்படி பக்கம் கூட அனுமதிக்க வில்லை.
இதுவரை போனில் பாட்டியிடம் கற்றுகொடண்டதை எல்லாம் விதவிதமாக சமைத்து கொடுத்தனர். அன்னைகளுக்குக்கு பெருமை பிடிபடவில்லை.
போன் போட்டு ஆண்கள் அணியை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார் பாட்டி.
தினமும் காலை உணவை முடித்துக்கொண்டு வெளியே கிளம்பினார்கள். ராஜியும் வந்து இவர்களுடன் இணைந்து கொண்டார். மாலை வேலைகளில் தர்ஷும் சேர்ந்து கொண்டான். ராஜி, வில்வா, பாரி, பாட்டி என்று கலாட்டாவுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. தர்ஷனுக்கு தமிழ் புரிந்தாலும், சில பல சமயங்களில் அவர்களது சிலேடை பேச்சுகளும், நக்கல் நய்யாண்டிகளும் புரியாது. அதற்கு ராஜி விளக்கம் வேறு கொடுப்பார். சுமிக்கும் தமிக்கும் சிரித்து சிரித்து முடியவே இல்லை.
———–
“மீ இவ்வளவு சந்தோசமா இருந்து நான் பார்த்ததே இல்லை பப்பா” என்றான் தர்ஷன் அன்று இரவு பேசிய தந்தையிடம்.
“எப்பவுமே உங்க மீ ஹாப்பி பர்சன் தானேடா தர்ஷ்”
“நீங்க இப்ப மீயை பார்த்தா நீங்களே சொல்லுவீங்க.. அவங்க எல்லாம் இன்னும் நாலு நாள் இங்க இருக்க போறாங்களாம். உங்களால வர முடிஞ்சா வாங்களேன். நீங்களே நான் சொன்னது உண்மைன்னு சொல்லுவீங்க”
“நான் முடிஞ்சா இந்த சண்டே வரேன், எனக்கும் டெல்லில மீட்டிங் இருக்கு”
“மீக்கு சர்ப்ரைஸ்சா இருக்கட்டும் பப்பா, நீங்க அவங்ககிட்ட பேசாதீங்க.. பேசுனா யூ காண்ட் கீப் சீக்ரெட் ப்ரம் ஹர் ”
“உங்க மீ எப்படி இருக்கான்னு தெரியல, பட் உன் வாய்ஸ்சே ஹாப்பியா தான் இருக்கு.. எனக்கு நேரமாச்சு, ஒரு வேலை இருக்கு, சண்டே பார்க்கலாம். பை“ என்று போனை வைத்து தன் வேலையை பார்க்க சென்றார் விக்ராந்த்.
—————————
“அத்தைங்க, பாட்டி எல்லாம் வர வரைக்கும், எல்லாரும் அங்க எங்க வீட்லயே சாப்பிட்டுக்கலாம்”, என்றான் அவினாஷ்.
“எதுக்கு அவினாஷ், நான் சமைக்கிறேன்” என்றாள் கருணா உடனடியாக.
இந்த அவசர கூட்டடத்தை கூட்டி இருந்தார் வீரராகு தாத்தா.
காரணம் அன்று மதியம் கருணா சமைத்திருந்தாள். அரிசி, பருப்பு, காய்கறிகள், வெங்காயம் தக்காளி, எல்லாம் ஒன்றாக வைத்து குக்கரில் நான்கைந்து சவுண்ட் விட்டு இறக்கி இருந்தாள்.
தர்மராஜையும் இங்கேய தான் சாப்பிட வேண்டும் என்று முன்னமே அன்பு கட்டளை போட்டிருந்தாள்.
“என்னம்மா சாப்பிடலாம்னு சொன்ன? ஒரே ஒரு குக்கர் தான் இருக்கு? குழம்பு காய் எல்லாம் எங்கே? இல்லனா பிரியாணியா? அப்படியும் வாசனை வரலையே?” என்றார் சங்கர்.
“நாளைக்கு இங்க சென்னைல ஒரு பெண்கள் முன்னேற்ற கழகத்துல ஸ்பீச்சுக்கு கூப்பிட்டிருக்காங்கப்பா.. அதான் அதுக்கு பாயிண்ட்ஸ் எடுத்துட்டு இருந்தேன். அதனால சீக்கிரமா செய்யலாம்னு கிச்சடியா செஞ்சுட்டேன்”
தர்மராஜ், ”அதனால என்ன பாப்பா, நம்ம வெளிய கூட சாப்பிட்டிருக்கலாமே, எதுக்கு நீ கஷ்டப்படற?” என்றார் அன்பாக.
“வெளியே சாப்பிட்டா செலவுக்கு செலவு, உடம்புக்கும் கெடுதல் தானே மாமா.. சாப்பிடுங்க” என்று ஆளுக்கொரு கரண்டி கிச்சடியை வைத்தாள்.
அதை பாத்ததுமே மூவரின் முகமும் அஷ்டகோணலானது.
கருணா அவளுக்கும் ஒரு தட்டில் வைத்து கொண்டு அமர்ந்துகொண்டாள்.
பக்கத்தில் குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்து கொண்டாள். அவளது கவனம் முழுவதும் அதிலே இருந்தது. அவள் தட்டில் இருந்ததை சாப்பிட்டும் விட்டாள். இவர்கள் மூவரின் நிலைமையும் தான் கவலைக்கிடமாக இருந்தது.
சாப்பாட்டை வீணாக்கினால் அதற்கும் கருணா திட்டுவாள் என்று பயந்து கஷ்டப்பட்டு தண்ணீரை குடித்து கிச்சடியை முழுங்கிவிட்டனர்.
அதனாலே இந்த கூட்டம் அவினாஷ் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“அவினாஷ் சொல்றதும் சரி தானே கருணாம்பிகை. இங்கேன்னா வேதாவும் உதவி செய்வாப்புல, நானும் இங்கேயே வந்து உதவி செய்றேன். உனக்கும் படிக்க நிறைய இருக்கு தானே” என்றார் வீரராகு.
“நான் எப்ப தாத்தா சமையல் பழகுறது?”
இதற்கு அவள் மனம் நோகாமல் எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.
“உனக்கு நேரமிருக்கும் பொழுது நீயும் இங்கேயே வந்து சமைக்கலாம் கருணா. அத்தைங்க வர வரைக்கும் தானே, எங்க வீட்டுக்கு விருந்தாளிகள்னு யாருமே வரதே இல்லை. ஒரு வாரம் நீங்க எல்லாம் இங்கே வந்தா நாங்க நிஜமாலுமே சந்தோசப்படுவோம் “ என்றான் அவினாஷ்.
‘சரி’ என்று அரைமனதாக ஒத்துக்கொண்டாள் கருணா.
அப்பாடா என்று ஆசுவாசமடைந்தனர் சங்கரும் தர்மராஜும்.
“உம்மென்று இருந்த அருந்ததியும், எல்லாரும் இங்கே தான் சாப்பிடப்போறாங்களா? சூப்பர்.. தாத்தா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று உற்சாகமாகிவிட்டாள்.
அன்று இரவில் இருந்து அவினாஷ் தயவால் அனைவரும் நல்ல உணவை உண்டார்கள்.
என்ன செய்ய? கருணா எல்லாம் இந்த ரகம்
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
