Skip to content
Post Views: 2,165
கருவின் குரல்
அத்தியாயம் 18
அர்ஜூன் ஒரு சிறந்த ராஜ தந்திரி. இருபத்தி நான்கு வயது என்றால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவிற்கு தொழிலும் வாழ்க்கையிலும் பக்குவப்பட்டவன்.
தனது தந்தையின் பல கோடி சொத்துக்களுக்கு ஒரே வாரிசு.அவனது பனிரெண்டு வயது வரை வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.ஆசைப்பட்டதை வாங்கி தந்து அன்பொழுக பார்த்து கொள்ளும் பெற்றோர், பாலும் தேனும் கலந்த ஒரு வாழ்க்கை.யார் கண் பட்டதோ? அவனது அப்பா ஒரு விபத்தில் காலமாகி விட, அம்மா வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். அப்பாவின் சொத்தில் ஒரு பகுதி மட்டும் ஜீவனாம்சமாக இன்றுவரை அவருக்கு சென்று கொண்டுள்ளது.
தந்தை இறப்பிற்கு பின் அவரின் தாய் மரகதம் கட்டுப்பாட்டில் வளர ஆரம்பித்தான் அர்ஜூன்.வயது மூப்பின் காரணமாக அவர் இவனை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார். பணம் தாராளமாக கைகளில் புரண்டது ஆனால் அன்பு செலுத்ததான் ஆள் இல்லை.
அந்த வயதில் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்பா இறந்து விட்டார், அம்மா ஏன் என்னை விட்டு சென்று விட்டார்? அப்போ இவ்வளவு நாளாக அம்மா தங்களுடன் இருந்தது எதற்காக? அப்பாவிற்காகவா? இல்லை பணத்திற்காகவா?என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.
Advertisement
இவ்வளவு நாட்களாக தாயும் தந்தையும் தந்த அன்பு மழையில் நனைந்தவன்.ஹாஸ்டல் வாழ்க்கை நரகமாக உணர்ந்தான்.என்னதான் பாட்டி நன்றாக கவனித்துக் கொண்டாலும், தனிமை அவனை வாட்டி எடுத்தது.
நாட்களும் ராக்கெட் வேகத்தில் நகர ஓரளவு தன் வாழ்க்கைக்கு அவன் பக்குவப்பட்டுக் கொண்டான். அவ்வப்போது அவன் அம்மாவை பற்றி பாட்டி வசைபாடும் போது அவர் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வான்.
அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருப்பதாக தகவல். பருவ வயதை அடைய காதல்,கல்யாணம் மீதெல்லாம் அவனுக்கு ஒரு வெறுப்பு. அதுமட்டுமில்லாது அவன் உடன் படிக்கும் பெண்கள் இந்த மாதம் ஒருவன் அடுத்த மாதம் இன்னொருவன் என்று சுற்ற பெண்கள் மீது ஒரு வெறுப்பு.
Advertisement
எல்லா பெண்களும் ஒரே மாதிரிதான் போல,அவர்களுக்கு தேவை எல்லாம் பணம்,மற்றொன்று என யோசிக்கும் போதே அவனுக்கு அருவருப்பைத் தந்தது.
Advertisement
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த உடன் தன் தந்தையின் குடும்ப தொழிலான ஹோட்டல் பிசினஸை கவனிக்க சென்றான்.நல்ல வருமானம் வரக் கூடிய தொழில்,உள்நாடு ,வெளிநாடு என லக்ஸரி ஹோட்டல்கள் இருந்தனர். மேலும் அவன் ஹோட்டல் பிசினஸும் சொத்துக்களும் இவன் அறிவார்ந்த செயல் திட்டங்கள் மூலம் பல்கிப் பெருகின.
அவன் சொடுக்கு போட்டு முடிப்பதற்குள், அவன் முடிவு இதுதான் என அதற்கேற்ப அவனது தொழிலாளர்களும் வேலையை செய்து முடித்தனர்.
நல்ல ஆறடி உயரம் ஆஜானு பாகுவான தோற்றம்.எந்த வேலையானாலும் நிதானமாக செய்யும் நேர்த்தி.சாந்தமான குணம் இருந்தாலும் தன் தனிமையை போக்க கொஞ்சம் கடுப்பாகவே வெளியே காட்டிக் கொள்வான். நல்ல நண்பர்கள் கிடைத்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது பிடித்தமான ஒன்று. தண்ணி,தம் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் பெண்கள் என்றால் மட்டும் பத்தடி தள்ளி நின்று கொள்வான்.
Advertisement
மாடியில் தனது அறையில் பிரபல கம்பெனி ஜாம்பவான்களுடன் பிசினஸ் கான்ப்ரன்ஸில் இருக்க, அவனது பாட்டியின் அர்ஜூன் என்ற அழைப்பில் கீழே வந்தான்.என்ன பாட்டி?எதாவது உடம்புக்கு சரி இல்லையா ? எதுக்கு இப்படி கத்தி கூப்படரீங்க என்றவாறு வந்தான்.
அர்ஜூன் பாட்டிக்கு வயசாகிட்டே வருது, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா நா நிம்மதியா கண்ணை மூடிருவே, நீ யாரையாச்சு லவ் பண்ணுனா சொல்லு, இல்லைனா பாட்டி நிறைய பொண்ணுங்களை உனக்காக பாத்து வைச்சுருக்கே அதுல உனக்கு எந்த பொண்ணு புடிக்குமோ அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றார்.
அர்ஜூன்,” பாட்டி நான் எவ்வளோ முக்கியமான மீட்டிங்ல இருந்தே நீங்க என்னடானா கால் பைசாக்கு பிரையோஜனம் இல்லாத ஒன்னுக்கு என்னை கூப்பிட்டு ஜோக்கடிச்சுட்டு இருக்கீங்க. பேசாம சாப்பிட்டுட்டு உங்க ஃபேவரைட் சீரியல் ஏதாச்சு டிவில பாருங்க என்றான்.
இந்த முறை உன்னை விடறதா இல்லை.எனக்கு அப்பறோம் உனக்கு ஒரு துணை வேணும் கண்ணா. அதனாலதான் சொல்றேன் சீக்கிரமா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறே என்றார். அவனுக்கு நன்றாக தெரியும் அவர் ஏதாவது இவனுக்கு செய்ய வேண்டுமென நினைத்து விட்டால் செய்யமால் விடமாட்டார் என, எதுவும் பேசாமல் வண்டியை எடுத்து வெளியே சென்று விட்டான்.
லேசான தூரல், இரவோ என்று எண்ணும் அளவிற்கு இருள் சூழ்ந்திருந்த ரோட்டில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
கல்யாணம் இதன் உண்மையான அர்த்தம் இதுவரை யாருமே அறிந்ததில்லை. ஏதோ வீட்டில் பார்த்து செய்து வைக்கும் சடங்கு. பிடிக்குதோ இல்லையோ கட்டினவருடன் வாழ்ந்தாக வேண்டும். குழந்தை பிறக்கும் அதை வளர்த்து ஆளாக்க வேண்டும். இதில் காதல் எப்படி வரும்? சரி காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் கசப்பு வந்தவுடன் பிரிந்து சென்று விடுகிறார்கள். எது காதல் ? எது கல்யாணம்? தன்னால் ஒரு பெண்ணை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ முடியுமா? அவளும் அம்மா போன்று சென்று விட்டாள், தன்னை போன்று தன் குழந்தையும் அனாதை ஆகி விடுமோ? என்றெல்லாம் பல எண்ணங்களுடன் சென்று கொண்டிருந்தான்.
கொஞ்ச தூரத்தில் கார் எக்ஸ்ஸிடன் ஆகி நின்றிருக்க அருகில் சென்று பார்த்தான்.வேறு யாருமில்லை தேவாதான்.உடனடியாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தான்.
தேவா நல்ல மயக்கத்தில் இருக்க, அவனது போனை எடுத்து கடைசியாக வந்த அழைப்பிற்கு டையல் செய்தான். வினய் எடுத்தான்.அர்ஜூன் விவரம் சொல்ல, வினய் போனை கட் செய்யாமலேயே மைதிலியிடம்,” அம்மா அப்பாக்கு எக்ஸிடன்ட் ஆமா ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணிருக்காங்க என்று சொல்ல, செத்துட்டாரா இல்லையானு கேளு , என்றாள்.அம்மா கொஞ்சம் அடியாமா அந்த வழியா போனவங்க ஹாஸ்பிடல் சேர்த்து இருங்காங்க என்று கூறினான்.
நமக்கு சொத்தையும் எழுதி தர மாட்டீங்கறாரு இப்படி ஹாஸ்பிடல் போய் படுத்துக்கிட்டா யாரு பாக்கறது?என்று மைதிலி குறைபடுபவது அர்ஜூன் காதில் நன்றாகவே கேட்டது. அதற்கு மேலும் போனை தொடர விருப்பமில்லாது வினய் எந்த ஹாஸ்பிடல் என்ற விவரம் எல்லாம் கேட்டுவிட்டு கட் செய்தான்.
கல்யாணத்திற்கு அர்த்தம் தேடிக்கொண்டிருந்தவனுக்கு தற்போது சரியான அர்த்தம் கிடைத்தது.சிறிது நேரத்தில் வினய் வந்து சேர்ந்தான். தேவாவின் யங்ஏஜ் தோற்றம் சொல்லாமல் இவன்தான் தேவாவின் பையன் என்பதை அர்ஜூன் புரிந்து கொண்டான். வந்தவன் அர்ஜூனிடம் நன்றி சொல்லிவிட்டு ,டாக்டரை பார்த்து தேவாவின் உடல்நலம் பற்றி விசாரித்து , தேவாவின் துணைக்கு ஒரு ஆளை அப்பாயின்ட் செய்து கிளம்பி விட்டான்.
இரண்டுநாட்கள் கடந்த நிலையில் மைதிலியோ அவன் பெற்ற பிள்ளைகளோ அவனை பார்க்க வரவில்லை.ஆனால் அர்ஜூன் வந்திருந்தான்,தேவாவின் கார் சாவியை கொடுக்க மறந்தவன்,அதை ஒப்படைக்க வந்தான்.தன்னை தேவாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.என் பெயர் அர்ஜூன் சார் அப்பா இறந்து விட்டார்.அம்மா அவர் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். கவர்ன்மென்ட் ஸ்காலர்ஷிப்பில் எம்.பி.ஏ. வரை படித்து உள்ளேன்.அன்று ஒரு இன்டர்வியூவிற்கு சென்று வரும்போது உங்களை பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தேன் என்று பாதி உண்மையும் பொய்யும் கலந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
தேவா கண்களின் ஓரம் நீர் கசிய நன்றி என்றான்.வீட்டில் யாரும் வரவில்லையா? சார் என்ற கேள்விக்கு ஒரு விரக்தி புன்னகையுடன் உதவிக்கு யாருமில்லை என்றான்.
அம்மா ,அப்பாவிற்கு வயதாகி விட்டது. காலையில் வந்து பார்த்து செல்வார்கள். எனது மனைவிக்கு வேலை இருப்பதால் வர முடியாத சூழ்நிலை என்றான்.அந்த சூழ்நிலைதான் தனக்கு தெரியுமே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
ஏனோ தேவாவின் மேல் ஒரு இரக்கம் ,அன்பு என்னவென்று சரியாக வரையறுக்க தெரியவில்லை அர்ஜூனிற்கு, தன்னைபோலவே தனிமையில் இருக்கிறார் என்று எண்ணினான் போல தேவா டிஸ்சார்ஜ் ஆகும் வரை ஒருமுறையேனும் வந்து பார்த்து விட்டு செல்வான்.
தேவா வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அவனின் ஏற்றுமதி நிறுவனத்திற்கு அவ்வப்போது அர்ஜூன் செல்வான். இருவரும் பிசினஸ் பற்றி விவாதித்து
கொள்வார்கள்.தேவாவின் அனுபவம் அர்ஜூனிற்கு பிடித்திருந்தது.
அதேபோல் அர்ஜூனின் விவேகமும் தேவாவிற்கு பிடித்திருந்தது.நல்ல பையன் நிறைய திறமை வேறு உள்ளது.தன்னிடமே வேலை போட்டு கொடுத்து வைத்துக் கொள்ள தேவா எண்ணினான்.
அர்ஜூனிடம் இதை தெரிவிக்க அவனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு இருந்தும் வெளியே காட்டி கொள்ளவில்லை. தற்போது பாட்டியின் கல்யாண வலையில் சிக்காமல் இருக்க இது நல்ல வழியாக தோன்றியது. அதுமட்டுமின்றி ஹோட்டல் தொழிலை மட்டுமே நிர்வகித்து வந்தவனுக்கு வேறு தொழில்களிலும் ஆர்வம். யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டான்.தேவாவிற்கு அவ்வளவு சந்தோசம் தன் மகன் மீது இல்லாத நம்பிக்கை எங்கிருந்தோ வந்த அர்ஜூனிடம் வந்துவிட்டது.
இரு பிசினஸ் மூளைகளும் சேர்ந்து, தேவாவின் பிசினஸை விரிவு படுத்தியது.அர்ஜூன் தன் சுயத்தை மறைத்து வாழ ஆரம்பித்தான்.தன் பாட்டி இடம் ஒரு புது ஹோட்டல் தொடங்கும் விஷயமாக வெளியே செல்கிறேன். அவ்வப்போது வந்து தங்களை பார்த்து கொள்கிறேன். தொழில் கொஞ்சம் வளர்ந்ததும் வந்து விடுவேன். நீங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்பினான்.
தேங்காய் பிசினஸ் மட்டுமில்ல, பேசன் டிசைனிங் ஆர்வம் இருப்பதாக தேவா கூற, அதையும் அசால்டாக ஆரம்பித்து விட்டான் அர்ஜூன்.அதை நிர்வகிக்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான்.எங்கு லாபம் வரும் எதைத் தொட்டால் நட்டம் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளோம் என தேவாவைவிட அர்ஜூனிற்குதான் நன்றாக தெரியும்.அவ்வப்போது தனது பிசினஸையும் கவனித்து வந்தான்.அவனை பற்றி தேவாவிற்கு எந்த சந்தேகமும் வரவில்லை தனது பேசன் டிசைனிங் கம்பெனியின் மேல் மாடியில் ஒரு ரூம் கட்டிக் கொடுத்து அங்கேயே அவனை தங்க வைத்தான்.
மற்றொரு புறம் அனிஷ் நன்றாக வளர்ந்துவிட்டாள்.நல்ல நிறம், நிறைய அறிவு,இன்னமும் சிறு வயதில் இருந்த துறுதுறுப்பு அப்படியே இருந்தது.பேஷன் டிசைனிங் முடித்து வந்தவளுக்கு வலை வீசி மாப்பிள்ளை தேடினாள் ஜானகி.எங்கே தன் வாழ்வை போல ஆகி விடுமோ என்ற எண்ணமும்,தனக்கு பிறகு அவள் வாழ்க்கை என்ற எண்ணமும் அவள் தூக்கத்தை கெடுத்தது.
நல்ல ஒருவனின் கையில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை தேடினாள்.பெண்ணிற்கு அப்பா என்று வரும் போது வந்த நல்ல வரன்கள் எல்லாம் கைநழுவி போனது.
ஜானகி,அனிஷின் கல்யாண விஷயத்திற்கு தேவாவிடம் தயங்காமல் உதவி கேட்க ஆரம்பித்தாள்.ஏனெனில் அவளுக்கு மகளின் வாழ்வு முக்கியமான ஒன்று. தனது சுய கெளரவத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவாவிற்கு போன் செய்து அனிஷின் கல்யாண விஷயமாக பேச நேரில் வரச் சொன்னான் தேவா.
மைபேசன் என்ற கண்ணாடி மாளிகைக்குள் நுழைந்தாள் ஜானகி.தேவாவை பார்க்க சென்றவளை அர்ஜூன் வரவேற்று அமர வைத்தான்.
-கருவின் குரல் ஒலிக்கும்……
error: Content is protected !!