Skip to content
Post Views: 5,265
அந்தியூரான் – 7
நடுக் கூடத்தில் குடும்பமே கூடி இருந்தது.தணிகாசலத்தின் வீடே ஜே! ஜே! என்று இருந்தது. ஒரு பக்கம் முத்து- காந்திமதி,சிவராமன் – சிவகாமி,மரகதம், அமுதன்,விசாலாட்சி.
தணிகாசலம்,ராணி – கந்தன்,பவளம் – கணேசன்,வைரம் – பழனிச்சாமி,அன்பு – ரெங்கன்,அழகி – முத்துராமன் என்று தொடங்கி அவர்கள் பிள்ளைகள், பேத்திகள் என்று வீடே கலை கட்டியது.சிவராமன் குடும்பம் ஊரிலே கொஞ்சம் பெரிய தலைக்கட்டு அல்லவா.
திருமணத்தில் கூட இத்தனை தலைகள் தெரியவில்லை.இன்று மகளது குடும்பத்தை பார்க்கவும் முழித்து நின்றாள் மரகதம், அவ்வப்போது அருகில் நிற்கும் மகனை வேறு திரும்பி, திரும்பி பார்த்து கொண்டாள் தாயின் பார்வை உணர்ந்து,
Advertisement
தாயிடம் சரிந்து மெதுவாக “என்னம்மா?”
“என்னடா இத்தனை கூட்டம் பயமா இருக்குடா அமுது” என்ற தாயை முறைத்தவன். அவரது கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான். என்னதான் முரடன், முன் கோபியாக இருந்தாலும், தாயிக்கு பொறுப்பான மகன் அமுதன்.
வெகு நேரம் யார் பேச்சை தொடங்குவது என்று மௌனமாக முழித்து நிற்க.இந்த சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழியிட்ட குமாரியே அவர்களது முன் நின்று பேச்சையும் தொடங்கி வைத்தாள்.ஏழு மணிக்கே அனைவரும் கூடி விட. அப்பொழுது தான் தூங்கி எழுந்து வந்த குமாரி வீட்டில் அத்தைகள் ,சித்திகள் என்று கண்டதும் அத்தனை மகிழ்ச்சி அதுவும் விசாலாட்சியைக் கண்டதும் இன்னும் பொங்கியது.
Advertisement
விசாலாட்சியை கண்ட நொடி “ஏய்!. விசா!” அப்படி கூச்சல் போட்டவள் அனைவரையும் தாண்டி அமுதனை இடுப்பில் இடித்துத் தள்ளி விட்டு. அவன் அருகில் நின்று இருந்த விசலாட்சியை இறுக்க அனைத்து கொண்டாள்.அவளும் மகளை இறுக்கி கொண்டாள்.
Advertisement
இதனை கண்டு சிவா அண்ட் கோ பெண்கள் கூட்டம் அனைத்தும் அதிர்ந்து முழித்து திரு திருத்து வைத்தது.அழகி,ராணியிடம் திரும்பி, “என்னக்கா இது? ஆரம்பமே பேத்தி சொதப்பி வைக்கிறா”
“எனக்கும் ஒன்னும் புரியலடி, ஆனா உண்மைக்கும் அன்னைக்கு இவளை குறை சொல்லி என்கிட்ட இவ தான் அழுது வச்சா. அந்த புள்ளையும் மல்லுக்கட்டுச்சுடி” பேத்தியின் மனம் புரியாமல் குழம்பி நின்றாள் ராணி.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே சுற்றும் மறந்து தங்கள் உலகிற்கு நுழைந்து கொண்டார்கள் தாயும், மகளும்.முழுதாக ஒரு நொடி அத்தனை இறுக்கமாகக் கட்டி கொண்ட பெண்கள் அதே வேகத்தில் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.
Advertisement
“நீ ஏன் என்னை விட்டு போன? என்னை அழுக வைக்கத் தானே” குமாரி சிறு அழுகையுடன் தொடங்க அவளை முறைத்துக் கொண்டே கச்சேரியை தொடங்கினாள் விசாலாட்சி.
“நான் எங்கடி போன்னேன். நீ தாண்டி நான் சண்டை கட்டுறேன்னு உங்க அம்மாச்சி கிட்ட சொல்லி என்னைத் துரத்தி விட்ட. அதான் உன் அப்பங்காரன் என்னை போ சொல்லிட்டான்”
சுற்றும் மறந்த நிலையில் மரியாதை மண்ணைக் கவ்வ. குடும்பம் மொத்தமும் அதிர்ந்து நின்றது தணிகாசலம், அமுதன் முதற் கொண்டு.சிவராமனும், சிவகாமி மட்டுமே அமைதியாக இருந்தனர்.அவர்களுக்கு இந்தப் பெண்களின் பேச்சும், கூத்தும் தெரியும் அல்லவா.
“நான் அன்னைக்குச் சும்மா தான் சொன்னேன் தெரியுமா? நீ அன்னைக்குச் சண்டை போட்ட தானே விசா அதை தான் சொல்லி வச்சேன்”
“என்னைக்குத் தினமும் தானே சண்டை போடுறேன். நான் சும்மா இருந்தாலும் நீ தானே சண்டைக்கு இலுப்ப” குமாரிக்கு நிகராக மல்லுக்கு நிற்க. மூன்றாம் மகளான வைரம் மற்ற சகோதரிகளிடம் திரும்பி.
“என்னடி இது? ராணியக்கா என்ன இது?”
“எனக்கே ஒன்னும் விளங்க மாட்டேங்குது?” பெரும் எரிச்சலில் இருந்தால் போலும் ராணி பல்லை கடித்துப் பதில் சொன்னாள்.அதுவரை என்ன? என்று குழம்பிய தணிகாசலம் மகள் மனைவியின் உரையாடலில் ஒரு நொடி திகைத்து பிறகு இயல்பாக வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான்.
“சரி இனி சண்டை கட்ட மாட்டேன் அப்படியே சண்டை போட்டாலும் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன் சரியா? இனிமே இங்க தானே விசா இருப்ப” என்றதும் வழமை போல் குறும்பு கூத்தாட இருக்கும் நிலை மறந்து சூழ்நிலை மறந்து வம்பை தொடங்கினாள் விசாலாட்சி.
“நான் ஏண்டி இங்க இருக்கப் போறேன். நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்” சொன்ன நொடி உதடு துடிக்க அப்படி ஒரு அழுக வந்தது குமாரிக்கு.
“இல்ல நீ போகக் கூடாது நான் போக விட மாட்டேன்”
“நான் போவேன்”
“நீ போக கூடாது”
“போவேன்டி” என்றதும் ஓ! வென்று அழுக தொடங்க.விசா! என்று அமுதன் அதட்ட. அதுவரை தாய் மகளது பிணைப்பை காட்ட அவர்கள் பேசி கொள்ளட்டும் என்று இருந்த சிவகாமி.பேத்தி அழுகவும் மருமகளை முறைத்துக் கொண்டே பேத்தியை இழுத்து அனைத்துக் கொண்டார்.
“எதுக்கு எடுத்தாலும் ஒரு அழுக. நீ அவளை அழக வை, அவ உன்னை அழுக வைக்கட்டும்.அம்மா பொண்ணடி நீங்க பிசாசுங்களா என்று இருவரையும் பொதுவாகக் கடிந்தவர்.
“குமாரி பல்லு தேச்சுட்டு வள்ளி அக்கா (வேலையாள்) கிட்ட எதையாவது வாங்கி வயித்துக்குப் போட்டுட்டு வா சாமி ஓடு”
“விசா!”
“உங்க ஆத்தா இங்க தான் இருப்பா நீ போ”
“ஹ்ம்ம்! என்றவள் மீண்டும் விசாலாட்சியிடம் சென்று அவளை இடுப்போடு கட்டி கொண்டு.கன்னம் கடித்து, காதை எச்சில் செய்து விட்டு ஓட.விசலாட்சி முகத்தில் அத்தனை புன்னகை. சிரிப்புடன் கணவனை தீண்டிய அவளது பார்வை கொஞ்சம் திமிராகவே தணிகலசத்தைத் தீண்டி நின்றது.
உன்னை விட உன் மகளுக்கு நான் தான் என்ற பார்வையில் தனது திணறலை வெளி காட்டாமல் அழகாக மறைத்து அமர்ந்திருந்தான் அந்தியூரான்.
முத்துவும், காந்திமதியும் இக்காட்சியைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.அமுதன் என்ன உணர்வெனத் தெரியாமல் இருவரையும் பார்த்திருந்தான். அமுதின் பார்வை அந்த சின்னக் குட்டியை ஆழ்ந்து தீண்டி சென்றது போல் இருந்தது.
பேத்தி சென்றதும் சிவராமன் தனது பெரிய மகளை பார்த்து,”ராணி இப்போ சங்கதி விளங்குதா உனக்கு?”
“ப்பா! நான் என்னமோ சண்டை கட்டுர மாதிரி பேசுறீங்க குமாரி தான் என்கிட்ட வந்து அழுதா.அவ சொல்ல போயி தானே நான் தம்பி கிட்ட பேசி வச்சேன்” “
“எல்லாம் சரி அவ வந்து அழுதா என்ன? ஏதுன்னு? நீ எங்க கிட்ட வந்து கேட்க வேண்டியது தானே.சின்ன பிள்ளை பேச்சை நம்பி உன் தம்பி கிட்ட யாரு உன்னைப் பேச சொன்னது?
வீட்டுல இருக்குறது நாங்க. எங்களுக்குத் தானே தெரியும் இதுங்கள பத்தி.மாசத்துக்கு இரண்டு நாள் வந்து போற தம்பி கிட்ட சொல்லி.அந்த ஆக்கம் கொண்ட தம்பி அந்தப் புள்ள அண்ணன் கிட்ட சொல்லி.இப்போ எங்க வந்து நிக்குது பாரு” மகனையும் சற்று வாரி தான் பேசினால் சிவகாமி.
கந்தன், “அத்தை!..” இடையில் எதோ பேச வர அவரைத் தடுத்த சிவகாமி.
“மாப்பிள்ளை நான் முழுசா பேசி முடிச்சுடுறேன் அப்புறம் நீங்க என்ன சொல்றீங்களோ சொல்லுங்க” என்ற சிவகாமி கணவனைப் பார்க்க மனைவியின் பார்வை உணர்ந்து தனது மகள்களை கண்டு பார்த்து பேச்சை தொடங்கினார் சிவராமன்.
“அம்மாடி இந்த வூட்டு பொறந்த பொண்ணுங்களா கொஞ்சம் அப்பா சொல்லுறதை பொறுமையா கேளுங்க சாமிகளா.
என் பட்டான், பூட்டன் காலம் தொடங்கி மாமன் மக, அத்தை மக, அக்கா மகளைக் கட்டிக்கிறது நம்ப வழக்கத்துல உள்ளது தான்,ஆனா இப்போ காலம் மாறி கிட்டு வருது. புதுசா புதுசா சொல்றாங்க. ஆசை, ஆசையா என் பேத்திக்கும் என் மகனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சோம்.அதுங்களும் பிரியமா அழகா தான் குடும்பம் பண்ணுச்சுங்க.
ஒன்பது மாசம் வரை நல்ல இருந்த பிள்ளை.பிரவசத்துல செத்து போச்சு. ஏன்னு? கேள்வி வர மருத்துவம் என்ன என்னமோ சொல்லி வச்சுது.சிலருக்கு அவங்க முன்னோர் கொண்டு உறவுல குறை வரும் நானே அதை பார்த்திருக்கேன்.
ஆனா நமக்கே வரும்னு ஒரு நாளும் எண்ணி வச்சுது இல்லை” என்றவர் கண்கள் செல்வியை எண்ணி கலங்கியது.அவர் மட்டும் இல்லை அனைவரும் அவளை எண்ணி துடித்து தான் போனார்கள்.
“பதுமையாட்டம் இருக்குற புள்ளைய முழுசா பறி கொடுத்து புட்டு நிக்கிறோம்.நான் திரும்ப என் பேத்திகளையே என் மகனுக்கு கட்டி வச்சா இன்னொரு இழப்பை என்னால தாங்க முடியாது சாமி.
இந்தப் பக்கம் பேத்தி, இந்த பக்கம் மகன் யாரை நான் தாங்கி நிக்கிறது.இரண்டுமே இரண்டு கண்ணு தானே அப்பா பேசுறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க?. உறவுல கல்யாணம் பண்ண போயி தான் இறப்பு வந்துச்சுனு அவங்க சொல்லும் போது அது உண்மையோ! பொய்யோ!
எனக்கு உள்ளுக்கு பயமா தான் இருந்துச்சு.அதான் பிறத்தில பெண் எடுக்க எண்ணி என் நண்பன் முத்து கிட்ட போயி அத்தனை பேசி பெண் எடுத்தேன்” இந்த இடத்தில் சிவராமன் நிறுத்த சிவகாமி தொடர்ந்தாள்.
இங்க பாரு ராணி எனக்கு செல்வி மருமக இல்லை பேத்தி.அதை மனுசுல நல்லா பதிய வை.வேண்டாம கிடைச்ச வரமா வந்த மகன். அவன் வாழ்க்கை இப்படியே போகக் கூடாதுனு எண்ணி தான்.உங்க எல்லார் கிட்டையும் பேசி சம்மதம் வாங்கி தான் வெளில பெண் எடுத்தோம்.உங்க அப்பா சொன்ன மாதிரி உறவுல பெண் எடுக்கப் பயம்.அதுக்கு வேண்டி தானே அத்தனை பேசி வச்சோம்.
நம்ப சுயத்துக்கு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ விட்டேனா பாருன்னு இருந்தா எப்படி? அந்த புள்ளைக்கு நியாயம் செய்ய வேண்டாமா? “தாயின் பேச்சில் மகள்களுக்கு கோபம் வர.நம்பர் நான்கு அதாவது அன்பு சிவகாமியை பார்த்து.
“ம்மா!.. நீங்களே போதும் போலையே. நாங்க கொடுமை பண்ணி வச்ச மாதிரி பேசி வைக்கிறீங்க.எங்க பொண்ணுகளை எடுக்கலையேன்னு தான் கோபம் அதையும் உங்க கிட்ட மட்டும் தான் காட்டி வச்சோம்.அந்த பொண்ணு கிட்ட மனசு வருந்தி வைக்கிற மாதிரி பேசிருக்கோமா?”
அவளைத் தொடர்ந்து அழகியும், “ம்மா! கல்யாணம் பண்ணி இரண்டு நாள் பார்த்ததோட சரி இப்போ தான் நாங்க வீட்டுக்கே வரோம் அப்படிருக்க என்னத்த பேசிட முடியும்”
வைரம்,“ ம்மா! எங்க எண்ணம் என்ன? வர பொண்ணு குமாரியை நல்லா பார்த்து வைக்கனும்.அவளை மகளா எண்ணி வைக்கனும் அது மட்டுந்தான் எண்ணம்.
அசல்ல பெண் எடுத்தா நம்பப் பொண்ணுன்னு பார்த்துப்பாங்க.அதை விட்டு பிறத்தில பொண்ணு எடுத்தா அந்தப் பொண்ணு குணம், எண்ணம் எல்லாம் நம்மளுக்கு தெரியுமா சொல்லுங்க? எல்லாருக்கும் இருக்குற பயம் தானே இது? இதுல என்ன குத்தம்?”
“வைரம் சொல்லுறது சரி தானே அத்தை” என்றான் அவளது கணவன்.
“எல்லாம் சரி தான் மாப்பிள அவங்க எண்ணத்தையும், பயத்தையும் நானும் தப்பு சொல்லி வைக்கல மாப்பிள. இங்க பிரச்சனையே வேற தொடக்கம் தான் என் மகளுங்க” என்றவர் பார்வை மகனை குற்றம் சாற்றி நிற்க. அப்பொழுதும் அமைதி கொண்டான் தணிகாசலம்.
“எல்லாமே பேசிடலாம் முதலும் கடைசியுமா இது போல ஒரு கசப்பான சந்திப்பு இனி நம்ப யாருக்குமே வேண்டாம்” தீர்க்கமாகச் சொன்ன சிவராமன் அறியவில்லை. சரியாக இதே இடத்தில் சில வருடங்கள் பிறகு மீண்டும் ஒரு கூட்டம் கூட உள்ளது என்று.
“விசாலாட்சி, குமாரியை பொறுத்தவரை எந்த வித உரசலும் இல்லை. அதுங்க இரண்டும் இப்படி தான் பேசி அடிச்சுக்குங்க.அதுங்க இரண்டும் அம்மா, பிள்ளை மாதிரியே பேசி வைக்காதுங்க தினமும் சண்டை தான் சில நேரம் அப்படி அடிச்சுக்குவாளுங்க
உங்க அப்பா தான் பேசி சமாதானம் செய்வார்.சண்டை ரொம்ப நேரம் நிலைக்காது.செத்த நேரத்துல கொஞ்சிகிட்டு திரிவாளுங்க. இதுங்களுக்குள்ள நான் போகவே மாட்டேன்.எல்லை மீறி போனா மட்டும் கண்டிப்பேன்.அதுவும் போக என் மருமக குமாரிய அப்படி பார்த்துப்பா ராணி”
“எனக்கு என்னம்மா தெரியும்” பாவம் போல் சொன்னால் ராணி. அவளுக்கு இப்போது ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அவள் எண்ணியது போல் விசாலாட்சி அத்தனை மோசமில்லை என்பது அறிந்து சிறு குற்ற உணர்வு.
அதுவும் போகத் தாயும், தந்தையும் இது போல் எல்லாம் பேசியது இல்லை. குடும்பம் என்றவரையில் சிறு உரசல்கள் வரும் தான் அதுவும் கொஞ்சமே கொஞ்சம் முத்தி வைத்தால் கத்தி தீர்ப்பாள்.
அவளை விடச் சிவகாமி கத்தி வைத்தால் தாயை கண்டு அடங்கி விடும் பெண்கள் அவர்கள்.ராணி மட்டும் இல்லை சிவகாமி பெற்ற எல்லாப் பெண்களுமே அப்படித் தான்,ஆனால் இன்று கூடி நின்று பஞ்சாயம் செய்வது ஒரு மாதிரியாக இருந்தது. எல்லாம் என்னால் என்று குற்றவுணர்வு வேறு.
“சரி போனது போகட்டும் விடு ராணி. ஏதோ தவறான புரிதல்” மகளுக்கு சமாதானம் சொன்ன சிவகாமி பேச்சை மேலும் வளர்க்காமல் மரகத்திடம் திரும்பி பேச மெதுவாக எழுந்து வந்து சிவகாமியின் அருகில் நின்று கொண்டார் சிவராமன்.
“தப்பு எங்க மேல தான். காரணம் சொல்லாம பொண்ணை அனுப்பி வச்சது எங்க தப்பு. அனுப்பிய பொண்ணை என்ன? ஏதுன்னு? விசாரிக்காம உங்க கிட்டையும் பேசாம.எங்க தோதுக்குக் காலம் தாழ்த்தி வந்து பேசியதும் எங்க தப்பு தான்.
என் மகளுங்க தப்பா புரிதல் பண்ணிட்டாங்க.எங்க குடும்பம் சார்பா.என் மகனுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுகிறோம்” சிவகாமி, சிவராமன் இருவரும் கை கூப்பி நிற்க.
தாய் தந்தை செயலில் தணிகாசலம் அதிர்ந்து “அப்பா!” என்று அழைக்க.மகள்கள் மருமகன்கள் எழுந்து அவர்கள் அருகில் பதட்டத்தோடு வந்து நின்று கொண்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் சிவராமன் சிவகாமி மிகவும் மரியாதைக்குரியவர்கள்
ஒரு நாள் ஒரு பொழுது கூடக் கை கட்டியோ தலை குனிந்தோ நின்றது இல்லை.அது போல் வைத்து கொண்டதும் இல்லை,ஆனால் இன்று குடும்ப மக்கள் கசப்பை விழுங்கி நின்றனர்.
“சிவராமா என்னது இது?” கூப்பிய கையை இறக்கி விட்டு முத்து கடிந்து கொள்ள.
“உன் கிட்ட கொடுத்த வாக்கை நான் காப்பதிவிடனும் இல்லையா முத்து? உன்னை நேர் கொண்டு பார்த்து பேச முடியல என்னால” வருந்தியவரை,
“ப்ச்! விடு இப்பவும் உன் மேல நம்பிக்கை இருக்க போயி தான் வந்திருக்கோம் என்றவர் விசா இங்க வா!” என்றதும் மாமனார், மாமியார் செயலில் அதிர்ந்து நின்றவள் சுயம் பெற்று அருகில் வர.
“நீ போமா இனி உன் குடும்பம் பார்த்து இருந்துக்கோ” என்றவர் மரகத்திடம் திரும்பி
“என்ன மரகதம் சரி தானே?”
“சரிங்க அண்ணே! இதுக்கு மேல என்ன வேணும் மன்னிப்பு எல்லாம் வேணாம். புள்ளைங்க நல்லா இருந்தா போதும்” என்றார் அவரும் இவர்கள் செயலில் பதட்டமாக இருந்தார் போலும்.
“போமா! என்று மீண்டும் முத்து சொல்ல.அவளது பார்வை அமுதனை தொட்டு நின்றது.அவள் பார்வை உணர்ந்து ‘இன்னும் என்ன?’ அவள் பார்வை சென்ற திசையைக் குடும்ப மக்கள் திரும்பி பார்க்க.அங்கே அமுதன் யோசனையாக நின்று கொண்டிருந்தான்.
error: Content is protected !!