“சார்அவருக்குநான்தான் சார் வேலைவாங்கிக்கொடுத்தேன். பொறுப்பான பையன் சார் சின்னபையன் வேற குடும்பத்தை பார்க்க வேண்டி தவிக்கும் போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியல சார்.அதான் என்னால முடிஞ்ச சின்ன உதவி“
“கண்டிப்பாஇல்லைசுப்பிரமணியன்நீங்கபாருங்க.எனக்குஅவங்கவீடுவிலாசம்மட்டும் கொடுங்க ” என்றதும்தயங்கிகொண்டேஒருகாகிதத்தில்எழுதிகொடுத்தவர்,தணிகாசலம் முகம் பார்த்து நிற்க.அவரைபார்த்துபுன்னகைகொண்டவன்.சிறுதும்தாமதம்செய்யாமல்கோவைக்குக்கிளம்பிவிட்டான்.
இவனதுவரவை அறியாமல்போனவிசாலாட்சிஇன்றுபார்த்து விடுமுறைஎடுத்துகொண்டாள்.இன்றுஅவளின்பிறந்தநாள்வேறு.காலையில்இருந்தேஅவளதுமனம்சரியில்லை.வழமைக்கு அதிகமாக குமாரியின்எண்ணம்வேறு.
நித்தமும் குமாரியின் எண்ணமிருந்தாலும் அவளை ராணியாகப் பார்த்துக் கொள்ள அத்தனை சொந்தமிருக்கும் என்று எண்ணி தன்னைத் தானே சமாளித்துக் கொள்வாள்.
கணவன்என்றவனைஎவ்வகையிலும்உணர்ந்திராதவள்.அவன்பெற்றபிள்ளையைமட்டும் அணுஅணுவாகஉணர்ந்திருந்தாள்.அவளின்கணிப்புபடிஇந்நேரம்குமாரிஅவளைத்தேடதொடங்கிஇருப்பாள். அதனை எண்ணி கொண்டே அமைதியாகப்படுக்கையில்சுருண்டு கொண்டவளைபார்த்தஅமுதன், “விசா!” என்றழைக்க.
“ஐயோ!நீங்கஆரம்பிக்காதீங்கம்மாநானாவந்தேன்? பேச யாரு இடம் கொடுத்தா? அதை முதல சொல்லுங்க நீங்க?” என்றவள்மீண்டும்சுருண்டுகொள்ளசரியாக அந்நேரம் வெளியில்கார்சத்தம்கேட்டது.அதனை தொடர்ந்து கதவை தட்டும் சத்தமும் கேட்க.மகளை விட்டு “யாரு?” குரல் குடுத்து கொண்டே போனால் மரகதம்.
அங்கே தணிகாசலத்தைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து பின்பு மகிழ்ச்சி பொங்க “வாங்க! வாங்க தம்பி!” என்று அழைக்க.
“நல்லா இருக்கீங்களா?” என்றவாறே உள்ளே நுழைந்தான் தணிகாசலம்.
“நல்லா இருக்கேன் தம்பி நீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்றவள் அவன் அமர நாற்காலி எடுத்து போட்டு தண்ணி கொண்டு வந்து குடுக்க.
அதனை பருகியவன், “எல்லாரும் நல்லா இருக்கோம். எங்க வீட்டுல யாருமே இல்லையா?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவன் குரல் கேட்டு வெளியில் வந்து விட்டாள் விசாலாட்சி.
அவனை கண்டதும் அவள் புருவம் சுருக்கி நிற்க.அவனும் அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்.சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.
“அத்தை!” முதல் முறையான அவனது அழைப்பில் சிறு பதட்டம் கொண்ட மரகதம்.
விசாலாட்சியைப் பார்த்து “கிளம்பலாமா?”முதல் முறையான நேரடியான பேச்சு.
“எங்க அண்ணன் வந்து சொல்லாம நான் வர மாட்டேன்? அது முறையும் இல்லை. அதுவும் போக என்ன? ஏதுன்னு? சொல்லாம போ! வாண்ணா! என்ன அர்த்தம்? எனக்குப் புரியல?” தணிகாசலத்தை நேர் கொண்டு பார்த்து விசாலாட்சி கேட்டு வைக்க.அவளை ஆழ்ந்து பார்த்து வைத்தான் தணிகா.
இருவருக்குமான முதல் உரையாடல் இது.அதுவும் நேர் கொண்டு பார்த்துப் பேசுவது.திருமணத்திற்கு முன் ஒரே வார்த்தை. திருமணத்திற்குப் பின்பு ஓர், இரு வார்த்தை.இது மட்டுமே இவர்கள் பேசி கொள்ள.தற்போது தன்னைப் பார்த்து நேருக்கு நேர் பேசும் பெண்ணைக் கூர்ந்து பார்த்து வைத்தான் தணிகாசலம்.
வளைந்து கொடுக்கும் ஆளுமில்லை தாழ்ந்து பேசும் குணமும் இல்லை அல்லவா, “ஓ! அப்போ அமுதனை கூப்பிடுங்க பேசிடுவோம்?” கட்டளையாகச் சொல்லியவனை இன்னும் கடுமையாக பார்த்தவள்.
“கூப்பிடுங்கன்னா என்ன அர்த்தம்? யாரு போவா? நான் தான் போகணும் எனக்கு முடியலன்னு தான் வேலைக்கு போகல என்னால எங்கையும் போக முடியாது.அப்படி பார்க்க வேண்டி தேவை இருந்தா.எங்க அண்ணன் வேலைய விட்டு வர எட்டு மணி ஆகும். அதுவரை இருந்து பார்த்துட்டு போங்க” கொஞ்சம் குரலை உயர்த்தி பேசியவளை தணிகாசலம் புருவம் ஏற்றி பார்த்தான்.
மகளின் பேச்சில் பதறி போன மரகதம், “இந்தாரு விசா என்ன பேச்சு இது? மரியாதை இல்லாம?” மகளைக் கடிந்தவர் பெரும் பயத்தோடு மருமகனை நெருங்கி.
“தம்பி! நான் அமுதனை கொண்டு வந்து விடச் சொல்றேன்” என்றதும் படாரென எழுந்தவன்.
“நாளைக்கு காலையில எல்லாரும் அந்தியூர் வந்துடுங்க நான் கார் அனுப்பி வைக்கிறேன்”
“ம்மா! அண்ணன் வராம எதுவும் பேச முடியாது.அப்படி போறதா இருந்தா கூட நம்ப பஸ்ல போவோம்” என்றவளை இப்போது முறைத்து பார்த்தவன்.
“நான் கிளம்புறேன் அத்தை”
“சாப்பிடுங்க தம்பி ஒன்னுமே குடிக்காம கூடப் போறீங்களே”
“பின்னுக்குப் பார்த்துப்போம் ஒரு நாள் வந்து சாப்பிடலாம்” என்றவன் எழுந்து கொண்டு விசாலாட்சியை தோரணையாக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல.அவளும் அவனுக்கு சலிக்காத பார்வை பார்த்து நின்றாள்.
மருமகனை வாசல் வரை சென்று மரியாதையாக அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த மரகதம்.
“அறிவு இருக்காடி வீடு தேடி வந்தவர் கிட்ட இப்படி தான் பேசி வைப்பியா நீ ? என்ன யோசனையில் இருக்க நீ? அங்க போறதா எண்ணமிருக்கா? இல்லையா?”
“நான் உங்க கிட்ட எதுவுமே பேச விரும்பலம்மா அண்ணன் வரட்டும்” என்றவள் தாய் கத்த, கத்த அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.
தணிகாசலம் அமுதன் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று. அவனைப் பார்த்து பேசிவிட்டு தான் வீட்டுக்கு வந்திருந்தான்.அமுதனை நாளை வீட்டுக்கு வர சொல்ல பெரும் வாக்கு வாதத்திற்குப் பிறகு அவனும் வருவதாக ஒத்துக் கொண்டான்.
அமுதனிடம் பேசிவிட்டு தான் விசாலாட்சியின் நாடியை பார்க்க வந்திருந்தான் போலும்.அவனுக்கு மனைவியை பற்றி ஒன்றும் தெரியாது அல்லவா.அதனால் அவளது தற்போது மனநிலையைப் படிக்க வேண்டி தான் அங்கு வந்தான்.
இப்போதும் அவளை கணிக்க முடியா விட்டாலும் கையாளும் அளவுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.
அதன் பின் விடயம் முத்து தொடங்கித் தங்களது ஆறு அக்கா மார்களும், அவர்களது கணவனுகளுக்கும் சென்று நிற்க.நாளை விடியலுக்கு அனைவரும் அங்கே கூடுமாறு பார்த்துக் கொண்டான் தணிகாலசம்.
இரவு வேளை உணவை முடித்துக் கொண்டு சிவராமன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருக்க.வேலைகளை முடித்துவிட்டு அவருக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் சிவகாமி.
“என்னங்க?”
“சொல்லு சிவா?”
“விடியலை எண்ணி பயந்து வருதுங்க” மனைவி எதனை எண்ணி சொல்கிறாள் என்றதை அறிந்தவர்.
“கலகம் வரட்டும் சிவகாமி அப்போதான் வழி பிறக்கும் பேச்சு வரட்டும் பார்த்துக்குவோம்”
“பேச்சு வர்றது பெருசில்லை அது எல்லை தாண்டி போகாம பார்த்துக்கனுமுங்க அதான் முக்கியம்”
“நீ சொல்லுறது சரி தான். நம்ப வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு அதை நம்ப விட்டுக் கொடுக்கக் கூடாது சிவா”
“மக, மருமகன், பேரன், பேத்தி, பையன்னு யாரையுமே விட்டு கொடுக்க முடியாது என் பயமே அது தான். இப்போ யாருக்குன்னு பேசி நிக்குறது.என் வயசுக்கு ஒரு நாளும் நம்ப வீட்டுல இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்தது இல்லை” கவலையாகச் சிவகாமி சொல்ல.
சிவராமனும் அதனை ஒத்துக் கொண்டார், “எனக்கும் வருத்தமா தான் சிவா இருக்கு. நம்பப் பசங்க கண்ணையும், கருத்தையும் உறுத்தி வைக்காம. அதே சமயம் மருமக பொண்ணுக்கும் நியாயம் பண்ணிடனும் அது ஒன்னு தான் நம்ப வேலை”
கணவன் சொல்வது நன்கு விளங்க, “நம்ப இதை எப்படி கையாள போறும்ன்னு தான் பயமா இருக்கு.ராணி ஒரு விதம்,வைரம்,பவளம் அவளுங்க ஒரு விதம்,தங்க பொன்னும்,அன்பும் ஒரே ரகம்.சிறுசு அழகி அது ஒரு ரகம்.
நம்ப பொண்ணுகளை எண்ணி தான் பயமே.என்னத்த பேசி வைப்பாளுங்களோ தெரியல” தனது மகள்களை எண்ணி பயந்து நின்றார் சிவகாமி.பேச்சு என்று வந்தால் பெண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதுவும் இது போல் பஞ்சாயத்து வந்தால் கேட்கவா வேண்டும்.அதுவும் ஆறும் சேர்ந்து வந்தால் கண்ணைக் கட்டியது சிவகாமிக்கு.
“பொண்ணுங்க வாய் திறக்காத மாதிரி பார்த்துக்கோ சிவகாமி அப்படியும் பேச்சு வந்தா நம்ப பேத்திய வச்சு தான் சமாளிக்கனும்”
“நாளைக்கு உங்க பேத்தி மட்டும் சரியா பேசி வச்சுட்டா போதும் அவளுங்களே அடங்கிப் போயிடுவாளுங்க”
“பொண்ணுக பக்கமும் தப்புன்னு சொல்ல முடியல சிவா.அதுங்களுக்கும் தம்பி நல்லா இருக்கனும் யோசிக்கிற ஆளுங்க தான் என்ன பேச்சு தான் பெருசு”
“நானும் முழுசா அவளுங்களை தப்பு சொல்லல.ராணி பயத்தையும் தப்புனு சொல்ல முடியாது புரிதல் இல்ல அவ்வளவு தான். பெத்த பொண்ணை இழந்து நிக்கிறா.பேத்தியை எண்ணி அவ பயந்து வைக்கிறது நியாயம் தானே,ஆனா என்ன? நம்ப அம்மா கிட்ட தானே பிள்ளை இருக்குன்னு யோசிக்கல பாருங்க.அது தான் வருத்தமா இருக்கு.”
“அது தான் எனக்கும் புரியல சரிவிடு. மருமக பொண்ணு பேத்தி கிட்ட இருக்குற உறவை கண்ணுல பார்த்துட்டாங்கனு வை எல்லாம் சரியா போகும் குலசாமிய வேண்டிக்க பார்ப்போம் நாளைக்கு கதைய”
“ஹ்ம்ம்!” பெருமூச்சை விட்டாள் சிவகாமி. அதன் பின் இருவரும் வெகு நேரம் தங்களது பிள்ளைகளைப் பற்றியும் நாளைய பொழுதை பற்றியும் பேசி கொண்டு இருந்து விட்ட பிறகே உறங்க சென்றனர்.
அடுத்த நாள் விடியல் அந்தியூரில் ஒரு தினுசாக தான் விடிந்தது…