Skip to content
Post Views: 5,368
அந்தியூரான் – 8
சிவராமனும், சிவகாமியும் மன்னிப்பு வேண்டி நிற்க.அத்தனை பேரும் பதறிக் கொண்டு நின்றனர்.ஒருவழியாக அனைவரும் சமாதானமாகி நிற்கும் வேளையில் மீண்டும் தொடங்கினான் அமுதன்.
அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், “இந்த அளவுக்குப் பெரியவங்க இறங்கி வந்தும் நான் இப்படி பேசுறேன்னு என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க.
எனக்கு ஒரு சில விஷியத்தை உடைச்சுப் பேசுறது நல்லதுன்னு படுது.எனக்குள்ள சில கேள்விகள் இருக்கு. அதுவும் அவர் கிட்ட தணிகாசலத்தை சுட்டி காட்டி.அதுக்கு அவர் சரியான விளக்கம் வச்சா விசா இங்க இருப்பா. இல்லனா பெரியவங்க என்னை மன்னிக்கனும் நம்ப வேற முடிவு எடுக்க வேண்டியது தான்” கொஞ்சம் கடுமையாக தான் பேசினான் அமுதன்.
Advertisement
“அமுதா என்ன பேச்சு இது?” முத்து கண்டிக்க.
“மாமா கொஞ்சம் பொறுமையா இருங்க நான் யாரையும் மரியாதை குறைவா பேச மாட்டேன். சிலது உடைச்சு பேசுகிறது நல்லதுன்னு தோணுது. இந்தக் கல்யாணம் பேசி வைக்கும் போதே நான் என்ன காரணம் கொண்டு மறுத்தேனோ அதே தானே இப்போ நடந்திருக்கு” என்றதும் அமைதியாகி விட்டார் முத்து.
விசலாட்சி – தணிகாலசம் மறுமணம் என்ற போதே அதில் வரும் சாதகம், பாதகத்தை அன்றே அமுதன் கேள்விகளாக அடுக்க.சிறு பையன் என்றளவில் அவனது கேள்விகளைப் புறம் தள்ளி நின்றார் முத்து, ஆனால் ‘நான் அன்றே கணித்தேன்’ என்றவனை இப்போது எதிர்த்து பேச முடியவில்லை. இப்பொழுதெல்லாம் அனுபவத்தை விட நடப்புப் பாடம் படிக்க வைக்கிறது.
Advertisement
மரகததிற்கு மகனது பேச்சு வயிற்றில் புளியை கரைத்தது.இவன் என்ன வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழியை உடைச்சுவான் போலையே என்று பதறி, “அமுதா என்னடா?”
Advertisement
“இருங்கம்மா” தாயை அடக்கியவன் நேராகத் தணிகாசலத்திடம் திரும்பி.
“நான் உங்க கிட்ட தான் பேசணும்” என்ன? என்பது போல் தணிகா பார்த்தானே ஒழிய வாய் திறந்து பேசவில்லை.
நீங்க உங்க பெண்ணுக்காக தான் என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? ஏன்னா அப்படி எதுவும் சொல்லி உங்க வீட்டுல பொண்ணு கேட்கல” என்றவனைக் கோபமாக முறைத்து வைத்தான் தணிகாலசம்.
Advertisement
“ஏன் கேக்குறேன்னா அவளுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. என் தங்கச்சியும் குழந்தை குட்டின்னு வாழனும். அன்னைக்கு நீங்க அந்தப் பொண்ணைக் கூட்டிகிட்டு போன்னு சொன்னப்ப தான் எனக்குப் புரிஞ்சுது அவளுக்கான இடம் என்னான்னு.
உங்களுக்கு அவ கூட வாழ முடியாது.என் பெண்ணுக்காகத் தான் இந்தத் திருமணம் அப்படின்னு எண்ணமிருந்தா தயவு செஞ்சு இப்போ இங்கையே முடிச்சிடலாம்.உங்களுக்கு தோதா ஒரு பெண்ணை பார்த்துக்கோங்க ” என்றவனைப் பார்த்து கந்தன்.
“என்ன தம்பி பேச்சு இது? பார்த்து பேசு.இத்தனை பெரியவங்க இருக்கோம் உன் வயசுக்கு என்ன பேசி வைக்கிற” மூத்த மாப்பிள்ளையாக மாமனார், மச்சினன் என்று நிற்க வைத்துக் கேள்வி கேட்கும் பொடியன் மீது பொங்கி கொண்டு தான் வந்தது.கந்தனுக்கு மட்டும் இல்லை கணேசன்,முத்துராமன் என்று எல்லா மருமகன்களுக்கும் தான்.
“சார்! உங்களுக்கு தான் சின்னப் பையன். என் குடும்பத்துக்கு எங்க மாமாக்கு அடுத்து நான் தான் எல்லாம்.விசலாட்சிக்கு அப்பா ஸ்தானம். மக வாழ்க்கை ஒரு அப்பாக்கு எத்தனை முக்கியம்னு உங்களுக்குத் தெரியாதா? எனக்கு என் தங்கச்சி நல்லா வாழனும் அது எனக்கு முக்கியம்.நீங்க பதில் சொல்லுங்க?” என்றவனிடம் மேற் கொண்டு அவரால் பேச முடியவில்லை.
“உன் பேச்சு சரிதான்ப்பா என்ற சிவராமன் மகனை ஒரு பார்வை பார்த்து பொண்ணைக் கொடுத்தவங்க கேட்குறாங்க நீயே பதில் சொல்லு”தந்தையின் பேச்சில் அடக்கப் பட்ட கோபம் புரிய. இதற்கு மேல் பேசாமல் இருந்தால் அது சரிவராது என்று எண்ணினான் போலும்.
“வேற யாரும் இந்த இடத்துல நின்னு என்னை கேள்வி கேட்டுருந்தா என் பதிலே வேற. இப்போ கடமையும் பொறுப்பு இருக்கிற பட்சத்துல பதில் சொல்றேன்” அத்தனை கடுமையான முக பாவம் கொண்டு பேசினான் தணிகா.
“வாழ வேண்டி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் வாழ்க்கையை மத்தவங்க முன்னாடி விமர்சிக்க எனக்கு விருப்பமில்லை. என்ன உறுதி கொடுத்துக் கல்யாணம் பண்ணேனோ அதுல நான் உண்மையாவும் உறுதியவும் இருப்பேன்” பெரும் இறுக்கம் அவனது குரலில்.
அவனது பேச்சு அத்தனை தெளிவாக இல்லை என்றாலும்.உறுதியில் உறுதியாக இருப்பேன் என்ற வார்த்தையைக் கொண்டு அமைதியாகி விட்டான் அமுதன்.சூழ்நிலை மௌனம் கொண்டு இறுக்கப் படுவதை உணர்ந்த சிவகாமி, “அப்புறம் என்ன எல்லாமே நம்ப புள்ளைங்க.எல்லாத்தையும் இந்த நொடி மறந்து நிற்போம்.சாப்பாடு தயாரா இருக்கு வாங்க “பேச்சை அவசரமாக திசை திருப்பி விட்டார்
அதனை உணர்ந்து காந்திமதி,மரகதம் சிவகாமியோடு செல்ல.மகள் கூட்டம் அனைத்தும் தனியாக ஒதுங்கியது.மெல்ல மெல்ல ஆண்கள் அனைவரும் வெளி கூடத்திற்கு வந்து விட்டனர்.தணிகாசலம் அமுதனை முறைத்துக் கொண்டே தனது அறைக்குச் செல்ல.அதற்கு முன்னே அங்கே இருந்தால் விசாலாட்சி.
குமாரி சித்தி மற்றும் அம்மாச்சிகளோடு விசாவை பற்றிக் கதையோ கதை பேசி நிற்க.பெரிய பெண்கள் அனைவருக்கும் உணவை எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.அறைக்குள் நுழைந்தவன் விசாலாட்சியை கண்டு அறை கதவை தாழிட. அந்தச் சத்ததில் திரும்பி பார்த்தாள் விசலாட்சி.
இருவருக்கும் இது முதல் தனிமை என்று இல்லை, ஆனால் இது போல் தனிமை கிட்டியதில்லை.அவளை முறைத்துக் கொண்டே அமர்ந்தவன் நேரடியாக அவளை பார்த்து, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“சொல்லுங்க?”
“என் மேல தப்பிருக்க போயி தான் பேசுறேன். கல்யாணம் முடிஞ்ச கையோட நான் பேசியிருக்கனும் எல்லாம் என் தப்பு தான்” நாற்காலியில் அமர்ந்து கொண்டு நெற்றியை நீவினான் தணிகா.
எல்லாமே தெளிவா பேசிடுவோம்,“உன்னைப் புரிஞ்சு, என்னைப் புரிஞ்சு அதுக்குப் பிறகு பேசி பழகி நிற்கிற காலத்துல நான் இப்போ இல்லை. நம்ப வாழ்க்கை போகுற போக்குல போகட்டும். அது சொல்ற நடப்பை வச்சு உன்னைப் பத்தி நானும்.என்னை பத்தி நீனும் தெரிஞ்சுக்கலாம்,
ஆனா சில விஷியங்கள் தெளிவு படுத்தி வச்சுடுறேன்.ஏன்னா நீயும் உன் அண்ணைக் கொண்டு கேள்வி கேட்டு வச்சா.நான் இதே போல பொறுமையா ஒரே மாதிரி பதில் சொல்லி நிற்க மாட்டேன்” என்றதும் வெடுக்கெனத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
மிரட்டுகிறான், கடுமை காட்டுகிறான், கோபம் பேசி நிற்கிறான். கொஞ்சம் முசுடு தான் இவன் எண்ணி கொண்டாள் விசாலாட்சி. அவளது பார்வையை தாங்கி கொண்டே,
“என் முதல் மனைவி, என் அக்கா பொண்ணு. சின்னதுல இருந்து நான் பார்த்து வளர்ந்தவ எனக்கும் அவளை ரொம்ப புடிக்கும். பெரியவங்க ஆசிர்வாதத்தோட கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்.ரொம்ப வருஷம் கழிச்சு குமாரி கையில.அதை அனுபவிக்க முடியாத படி செல்வி இறப்பு.
அவ இறப்பு எதிர்பாராத ஒன்னு. அவளே எதிர்பார்த்திருக்க மாட்டா புள்ளையை வாங்கிக் கொஞ்சிகிட்டு இருக்கேன் எனக்குச் செல்வி இல்லன்னு செய்தி சொல்றாங்க.யோசனை பண்ணி பாரு என் நிலையை” என்றவன் கசப்பை விழுங்கி நின்றான்.
செல்வியை ரொம்ப விரும்பி! கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவ இல்லங்குறதை இந்த நிமிஷம் வரை ஏற்க முடியல.உன்னை கட்டிக்கிட்டு அவளை மறக்க முடியலன்னு சொல்ல முடியாது.அவளை என்னால மறக்கவும் முடியாது.
செல்வியை தாண்டி எனக்கு ஓட்டமிருக்கு குமாரி இருக்கா, அம்மா, அப்பா இருக்காங்க.அக்கா அவங்க கடமை எல்லாமே இருக்கு. தனி ஆளா என்னால எல்லாத்தையும் பார்க்க முடியாது.எனக்குன்னு ஒரு துணை வேணும்.
இதை நான் எண்ணும் போதே. என் வாழ்க்கையில இன்னொரு பொண்ணு வந்தா அதுக்குப் பின்னாடி வர வாழ்க்கையைப் பத்தி யோசிக்காம நான் இன்னொரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிருக்க மாட்டேன் புரியுதா.
இப்போ எனக்கு எதுலையுமே நாட்டமில்ல.நான் என்னை மாத்திக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.என் பொண்ணைக் கூட நான் பாத்துக்கிறதில்லை அம்மாகிட்ட விட்டதோடு சரி”அதுவரை அவனை பேச விட்டு கேட்டு கொண்டு இருந்தவள்.குமாரி பற்றி தணிகாசலம் சொல்லவும்.
“அதான் தெரியுமே இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க?”
“எனக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது இப்போ தெரிஞ்சுக்கக் கூடிய மனநிலை இல்லை, ஆனா கண்டிப்பா உன்கூட வாழ்வேன் இது தான் சொல்லனும்” என்றவனை அலட்சியமாகப் பார்த்தவள்
“சரி” என்று நகர அவளது அலட்சியத்தைக் கண்டு கொண்டவன் உள்ளுக்குள் பல்லை கடித்து. அவளது கை பிடித்து இழுத்து நிறுத்த அவனது இறுக்கம் சிறு வலியை கொடுத்தது.
“என்ன? கையை விடுங்க”
“அது என்ன திமிரா ஒரு பார்வை. அந்த பார்வையில ஒரு அலட்சியம்”
“என் பார்வையே அப்படி தான்” என்றவள் உள்ளுக்குள் அப்படி தானே எங்களுக்கும் இருக்கும் கருவி கொண்டாள்.
“பேச்சுக்கு பேச்சு பேசுவியா நீ?”
“நீங்க கேட்டதுக்குப் பதில் சொன்னேன் ஸ்!. ஸ்!… கை வலிக்குது விடுங்க. எங்க வீட்டுல எல்லாரும் வெளில தான் இருகாங்க. முக்கியமா எங்க அண்ணன் இருக்கான் “என்றவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன் கையை விட்டு.
“ஐயோ! அண்ணாவா ரொம்ப தான் பயந்து வருது. என்னடி பண்ணிடுவான் உன் அண்ணா பெரிய இவனாட்டம் பேசுறான்.வேலையைத் தூக்கி போட்டுட்டுப் போறான்.எங்க அம்மா, அப்பா மன்னிப்பு கேட்டும் அத்தனை பேர் முன்னாடி என்னை நிக்க வச்சு கேள்வி கேக்குறான்?” தணிகாசலத்துக்கு மச்சான் மேல் பொங்கி கொண்டு தான் வந்தது.
“அதான் சொன்னாருல்ல என் அப்பான்னு. ஒரு பொறுப்பான அப்பா! இந்த இடத்தில் நிறுத்தி புருவம் உயர்த்தி எப்படி?.. எப்படி?.. என்றவள் அவனை நெருங்கி மீண்டும் பொறுப்பில் அழுத்தம் கொடுத்து. ஒரு பொறுப்பான அப்பா மகளுக்கு வேண்டி இப்படி தான் பேசி வைப்பார்” என்றதும் சுருக்கென இருந்தாலும் கோபம் அடங்கவில்லை.அதுவும் போக எங்க அண்ணன் எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்”
“அப்போ நான் செய்றது எல்லாம் தப்புனு சொல்றியா? எனக்கு பொறுப்பில்லன்னு நீ கண்டியாடி?” கோபத்தில் உரிமை கொஞ்சம் எட்டி பார்த்து நின்றது போலும்.
“ஓ! இன்னும் அது தப்புன்னு தெரியலையா? பொறுப்பு? உங்களுக்கு ? ஹ்ம்ம்!.. ஏகத்துக்கும் அவள் கோபத்தை நக்கல் செய்து காட்டி வைத்தால் போலும்
“ஏய்!”
“ப்ச்! எதுக்குக் கத்தி வைக்கிறீங்க.அடுத்த கல்யாணத்துக்கு மனசு ஒப்புதல் கொடுத்து நிக்கலனா எதுக்குக் என்னை கல்யாணம் பண்ணுறீங்க. உங்க வீட்டுல முடியாதுனு சொல்ல வேண்டியது தானே.முதல் மனைவியை மறக்க முடியலன்னு இருக்க வேண்டியது தானே.
உங்க சுயநலத்துக்கு அடுத்த வீட்டு பொண்ணைப் பழி பாவம் பண்ணுறது சரியா?” திருமணம் முடிந்த நாளில் இருந்து, உறுத்திய வண்ணமிருந்த கேள்வியை கொட்டி கவிழ்த்தாள் விசாலாட்சி.
“இப்போ உனக்கு என்ன வேணும்?”எரிச்சல் கலந்த குரலில் கேட்க.அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்த விசாலாட்சிக்கு அத்தனை கோபம் வந்தது.
“எதையும் கேட்டு வாங்குற பழக்கமே எனக்கு இல்லை இருக்கறதை வச்சு அது எப்படி இருந்தாலும் வாழ்ந்துப்பேன். இந்த அனுசரணையும் குமாரிக்காக அவ இல்லனா…” இந்த இடத்தில் விசாலாட்சி நிறுத்தி வைக்க.
“இல்லன்னா?”
“சரி தான் போடான்னு நானும் போயிருப்பேன்” ஏற்கனவே கொதிப்பில் இருந்தவன் விசாலாட்சி பேச்சில் ஒரு நொடி அதிர்ந்து இன்னும் கொதித்துப் போனான். கை நீண்டு அவளை அடிக்கப் பாய. எங்கே அவன் அடித்து விடுவானோ என்று எண்ணி உள்ளுக்குள் ஆட்டம் கண்டாலும் அசையாமல் அமர்த்தாளாக பார்த்து நின்றாள் அரிவை பெண்.
அதற்குள் குமாரி படக்கெனக் கதவை திறந்து வந்தவள் ஓடி வந்து விசாலாட்சியைக் கட்டி கொள்ள.அவளும் அவளை அனைத்துக் கொண்டே நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தாள்.தன்னை அனைத்திற்கும் மகளைக் கீழே குனிந்து பார்த்து, “என்னடி சாப்பிட்ட”
“இட்டிலி கறி குழம்பு”அவளது வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டே சொல்ல.அவளது தலையைக் கோதி கொண்டே.
“நான் இல்லாம நிம்மதியா இருந்தியாடி?”என்றதும் வெடுக்கென நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தவள்.
“நீ தான் அப்படி. நீ இல்லாம நான் அழுதேன் பள்ளி கூடத்துக்குக் கூடப் போகல தெரியுமா? பத்து நாள் ஆச்சு நேத்து தான் போனேன்” என்றதும் அதிர்ந்து.
“ஏண்டி போகல எரும மாடு”
“நீ ஏன் என்னை விட்டு போன அதான் “
“ப்ச் என்ன ஆனாலும் பள்ளி கூடம் போகனும். இந்த கிறுக்கு தனமான சாக்கு வைக்காத” என்று குமாரியை விலக்கி தள்ளியவளை.
“ப்ச்! தள்ளாத விசா” என்றவள் இன்னும் அவளைக் கட்டி கொள்ள. அவளது ஏக்கம் புரிந்து விசாலாட்சியும் அணைத்துக் கொண்டாள். தணிகாசலம் என்ற ஒருவன் அங்கே இருப்பதை இரு பெண்களுமே கருத்தில் கொள்ளவில்லை.
தங்களுக்கான தனி உலகில் இருவரும் கொஞ்சி நிற்க.அவர்களது பிணைப்பை எண்ணி ஆச்சிரியம் கொண்டவன். அதற்கு மேல் அங்கு நிற்காமல் பெரும் கோபத்தோடும் சிறு யோசனையோடும் வெளியில் சென்று விட்டான்.
அதன் பின் தடபுடலாக ஒரு விருந்து.மீண்டும் சில பேச்சுக்கள் அதில் விசாலாட்சியை மகள்களுடன் இழுத்து விட்டு மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டாள் சிவகாமி.இது தான் சரியான தருணம் பேசி பழகட்டும் என்று விட்டார் போலும்.
மேலும் சில மணி நேரங்கள் கடந்து வந்தவர்கள் அனைவரும்.முறையாக சொல்லிவிட்டு, வருத்தங்களை அலசி கொண்டு,இனி நன்மையே என்பது போல் சில இனிப்பான பேச்சுக்களை பேசியே விடை பெற்றனர்.
மரகதம்,முத்து,காந்திமதி மூவரும் விசாலாட்சிக்கு வழமையான பெற்றோர்கள் போல் அறிவுரை சொல்ல.அமுதன் மட்டுமே இயல்பையும், நடப்பையும் பேசி வைத்தான்.
“எதுனாலும் நான் இருக்கேன் என்கிட்ட பேசு பார்த்துக்கோ விசா ” விசாலாட்சி தோளில் தொங்கி கொண்டே அமுதன் பேச்சை கேட்ட குமாரி.
“நான் பாத்துக்குறேன் அமுது மாமா நீங்க போயிட்டு வாங்க. அப்புறம் விசா எனக்கு மட்டும் தான் இனி விசா சொல்ல கூடாது” என்றதும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவனைப் பார்த்து
“என்ன முறைக்கிறீங்க?”
“ப்ச்!” சலித்தவன் அவளது பேச்சுக்குப் பதில் சொல்லாமல் தங்கையிடம் தலையசைத்து விடை பெற்றான்.போகும் அவனை மூக்கை சுருக்கி பார்த்தாள் குமாரி.
error: Content is protected !!