Skip to content
Post Views: 4,966
அந்தியூரான் -11
விசாலாட்சி எழுந்து சென்றதும் குமாரியிடம் வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்த அமுதன், “சாரி” என்றதும் அவனை ஏறிட்டு முறைத்தாள் சின்னவள்.
அவளது நிறத்திற்கு அவள் அழுது வைக்கவும் முகம் அத்தனை சிவப்பாக இருத்தது.அமுதனே உள்ளுக்குள் கொஞ்சம் பதறி தான் போனான்,”என்ன இது முகமெல்லாம் இப்படி சிவந்து போயிருக்கு. யாரவது பார்த்தா என்னான்னு எண்ணி வைப்பாங்க.பெரிய பொண்ணா ஆகிட்டே வர தானே,சின்ன விஷியத்துக்கு எல்லாம் இப்படி தான் அழுது வைப்பாங்களா?
Advertisement
அன்னைக்கும் நீ இது போலப் பண்ணி தான் உங்க அம்மாச்சி தப்பா புரிஞ்சுகிட்டு.அதை உங்க அப்பா கிட்ட சொல்ல பெரிய சண்டையாகி போச்சு.இருக்க, இருக்க நீ பெரிய பிள்ளை குமாரி. இது போலச் சின்ன விஷியத்துக்கு எல்லாம் தொட்டா சிணுங்கி கணக்கா அழுக கூடாது சரியா” அத்தனை பொறுமையாக எடுத்து சொன்னவனை இன்னும் முறைத்தவள்.
அவன் இத்தனை நேரம் பேசிய பேச்சையெல்லாம் காற்றில் பறக்க விட்டு, “உங்களுக்கு என்ன கண்டாலே ஆக மாட்டேங்குது அதான் திட்டிகிட்டே இருக்கீங்க”
Advertisement
Advertisement
“ப்ச்! நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் திரும்ப அதையே பேசி வைக்கிற சும்மா இருக்க உன்னைத் திட்ட எனக்கு என்ன வேண்டுதலா? எதுக்கு நம்மை சொல்லுறாங்கன்னு யோசி”
“பாருங்க திரும்பத் திட்டுறீங்க. உங்களுக்கு என்ன பிடிக்கல” என்று மீண்டும் கண்ணைக் கசக்கியவளை பார்த்து தலையைப் பலமாக உலுக்கி கொண்டவன்.
Advertisement
அழுகும் அவளை பார்த்து வாய்விட்டுக் காற்றை ஊதி தள்ளி,”அப்படியெல்லாம் இல்லம்மா”என்றதும் கட்டிலில் இருந்து படக்கெனக் குதித்தவள் அமர்ந்த வாக்கில் இருந்தவன் முன் வந்து இரு கைகளையும் அவன் முகத்திற்கு நேராக நீட்டி.
“அப்படி தான் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ. என்னையும் எங்க அப்பாவையும் முறைச்சுகிட்டே இருந்தீங்க. நான் பேசியும் நீங்க பேசல அதுவும் போக எங்க அப்பாவ சண்டைக்கு இழுத்தீங்க”கையை ஆட்டி, ஆட்டி அவனது கண்ணனுக்குக் கொண்டு போக.
எங்கே குத்தி வைத்து விடுவாளோ என்று பயந்தவன் அவள் ஆட்டி கொண்டிருந்த கையைப் பற்றி, “குத்தி வச்சுடாத நான் பாவம்.சரி சமாதானம் தப்பு என் மேல தான் சரியா. இனி உன்னை திட்ட மாட்டேன்.உங்க அப்பா கிட்ட சண்டை கட்ட மாட்டேன் போதுமா”
“ஹ்ம்ம்! எங்கிட்ட ஒழுங்கா பேசணும்”
“ஹ்ம்ம்! சரி”
“என்னையும் விசாவையும் நாளைக்கு வெளில கூட்டிகிட்டு போகனும்”
“சரி! சரி!.. இப்போ சாப்பிட வா”
“இருங்க இப்போ உங்க பேச்சு சரி இதுக்கு முன்னாடி என்னை கோச்சுக்கிட்டதுக்கு என்ன செய்யலாம்” முதல் இருந்து தொடங்கியவளை என்ன செய்வது என்பது போல் பார்த்தவனை.
“அதுக்கு தான மன்னிப்பு கேட்டேன்”
“நான் மன்னிக்கல தானே” அவனே போலவே சொல்ல தலைசுற்றி நின்றான் அமுதன்.
“இப்போ என்ன பண்ண சொல்ற” பரிதாப நிலைக்கு வந்தவனைப் பார்த்து கொஞ்சமும் மனம் இறங்காமல்.
“நீங்க எதுவும் செய்ய வேணாம். நான் கொடுக்குற சின்ன தண்டனையை வாங்கிக் கோங்க. அப்போ தான் அடுத்த முறை அந்த தப்பை செய்ய மாட்டீங்க.அப்படியே தப்பு செய்ய எண்ணி வச்சாலும். இந்த தண்டனையை பார்த்து பயம் வரும்” என்னவோ பெரிதாக தவறு செய்தவன் போல தன்னை மிரட்டி நின்றவளை என்ன செய்தால் தகும் என்பது போல் அமுதன் யோசித்து நிற்க.
அந்நேரத்தை தனக்குச் சாதகமாக்கி. அவன் கன்னம் அவனது புஜத்தில் பட்டென இரு அடிகளை வைத்து விட்டு ஓடினாள் குமாரி.ஒரு நொடி அதிர்ந்து நின்ற அமுதன்.
“குடும்பமே பையித்தியம் தான் போல எரிச்சலாக முனகி கொண்டான்”
அழுது வடிந்து நின்றவள் வாய் கொள்ளா சிரிப்புடன் ஓடி வர.விசலாட்சிக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.அதன் பின் அமுதன் தெளிந்து வர அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கச் செல்ல.அமுதனை பார்த்துக் கண் சிமிட்டி சென்ற சின்னவளை முறைத்துக் கொண்டே சென்றான் அமுதன்.
அதன்பின் வந்த இரு நாட்களும் பெண்கள் இருவரும் அத்தனை மகிழ்ச்சியாகச் சுற்றி வந்தனர்,சரியாக மூன்றாம் நாள் அவர்களை அழைத்துச் செல்ல வந்து நின்றான் தணிகாசலம்.பெரும் படையோடு இருந்த பெண்களுக்கு நீ என்னைப் பார் நான் உன்னைப் பார் என்று இருக்கப் போகும் வாழ்க்கையை எண்ணி வெறுப்பு தான் வந்தது.
கிளம்பும் போது முகத்தை இருவரும் ஒரே போல் தூக்கி வைத்து கொள்ள. பெண்களின் செயலில் தணிகாசலத்துக்கு சிறு புன்னகை பிறக்க தான் செய்தது.அதனை பெண்கள் தெரியாதவாறு மறைத்துக் கொண்டு இருவரையும் ஈரோட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
ஈரோட்டில் குடும்பமாக தணிகாசலம் ஒரு புது வாழ்க்கையை தொடங்கினான் என்று தான் சொல்ல வேண்டும். இரு பெண்களுக்கும் முதல் இரு நாட்கள் அத்தனை கொடுமையாக இருந்தது.குமாரிக்கு புது இடம், புதுத் தோழிகள் என்பதால் பழக சற்று தடுமாற்றமாக இருந்தது.
விசாலாட்சிக்கு மகள் இல்லையென்றால் வெறுமையாக சென்றது.இன்றும் மகளைப் பள்ளிக்கு விட்டுட்டு மதிய சமையலை முடித்து விட்டு வெளியில் அமர்ந்திருந்தவளை பார்த்தவாறே நடந்து வந்தான் தணிகாசலம்.
அவனை கண்டதும் உள்ளே எழுந்து சென்றவள். அவனுக்கு வேண்டி உணவுகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.இங்கு வந்து சில தினங்களில் இது வழமையாகி விட்டது போலும்.
தட்டில் உள்ள உணவை பிசைந்து கொண்டே, “நீயும் உட்காந்து சாப்பிட வேண்டியது தானே” இப்போதெல்லாம் இருவரும் கொஞ்சமே கொஞ்சம் உரிமையுடன் பேசி கொள்கிறார்கள்.இங்கு பேசி தானே ஆக வேண்டும் கணவனை விட்டால் வேறு வழியும் இல்லை அல்லவா.
“இல்ல நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம்..” என்றவளை மேலும் பேசவிடாமல்.
“சாப்பிடு கொஞ்ச நேரம் தூங்கலாம்” என்றவனை கண்கள் விரித்து பார்த்து வைத்தாள் விசலாட்சி இது என்ன பேச்சு?
“என்ன?”
“சாப்பிட்டு வா” என்றவன் தனது உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் செல்ல கொஞ்சமாகப் பயந்து நின்றாள்.
“அது என்ன தூங்கலாம்?” முனு முனுத்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தவள் சாப்பிட்டுவிட்டு சிறு தயக்கத்தோடும், பெரும் யோசனையோடும் அறைக்கு சென்றாள்.
அங்கே பனியன் லுங்கியுடன் படுத்திருந்தான் தணிகாசலம்.உள்ளே நுழைந்தவளை அவனுக்கே உண்டான அலட்சிய பார்வையுடன் எதிர் கொள்ள.அவளும் அவன் பார்வையை தயங்கியவாறே கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“கொஞ்சம் பேசலாமா?” என்றவனை யோசனையுடன் பார்த்தவள்.
“ஹ்ம்ம்!”
“சில விஷயங்களைக் கொஞ்சம் உடைச்சு பேசி வைக்கிறது நல்லதுன்னு தோணுது”
“ஹ்ம்ம்!”
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது. என்ன பத்தி உனக்குச் சுத்தமா தெரியாது. இனியும் இப்படியே இருந்தா நாளைக்கு ஊரே என்னைக் கூப்பிட்டு நிக்க வச்சுக் கேள்வி கேட்கும்” என்றதும் கொஞ்சமாகத் தணிகாசலத்தை முறைத்து வைத்தாள் விசாலாட்சி.
அமுதனை தான் சொல்கிறான் என்பதைக் கண்டு கொண்டவள்.”கேள்வி கேட்கும் போல நம்ம வச்சுக்கிட்டா கேள்வி கேட்க தானே செய்வாங்க”
“ஓ! என்றவன் படக்கென எழுந்து அவள் எதிர்பாரா சமயம் அவளை இழுத்துக் கொள்ள. அவனது செயலில் ஒரு நொடி பயந்தவள் ஐயோ!.. என்று அலறினாள்.
“என்னடி அண்ணனும், தங்கச்சியும் ரொம்ப தான் மிரட்டி வைக்கிறீங்க ஹ்ம்ம்!” என்றவன் கொஞ்சமாக அவளை அனைத்து கொள்ள.பெண்ணுக்கு முதல் முறையான தயக்கமும், கூச்சமும் அவளை நெளிய செய்தது.
“எனக்கு வள வளன்னு பேச வராது சுருக்கமா பேசிடுறேன் நான் சொல்றதை நிதானமா கேளு இது போலத் தனிமையில தான் பேச முடியும்”
“சொல்லுங்க”
“குமாரி எப்போ வேணா பெரிய பொண்ணாகலாம் அவ முன்னாடி உன்கிட்ட இயல்பா இருக்க என்னால முடியுமான்னு தெரியல”
“எனக்கும் அதெல்லாம் புரியும்”
“உனக்குத் தெரியாம இருக்குமா” நக்கல் செய்தவன் மீது கோபம் வர. அவனது கையில் இருந்து விடுபடப் போராடியவளை இன்னும் தன்னோடு இறுக்கி கொண்டவன்.
“அது என்ன எங்களைக் கொண்டு அப்படி ஒரு அலட்சியம், நக்கலன்னு கேட்குறேன் ஒன்னும் பேச வேணாம் விடுங்க என்னை”
“சரி!… சரி!.. சண்டை வேண்டாம்.நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்” என்றதும் அசையாமல் இருந்து கொண்டாள்.
செல்வி பத்தி தெரியும் தானே.என் முதல் மனைவி சின்ன வயசுல இருந்தே ரொம்ப புடிக்கும்.ரொம்ப ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.அதான் அவளைத் தாண்டி இன்னும் கூட என்னால வெளில வர முடியல” என்றவனைப் பார்த்து விட்டுத் தன்னை அனைத்திற்கும் அவனது கையைப் பார்க்க.
மிகவும் வருந்தி கொண்டு பேசியவன் மனநிலை முற்றிலும் மாறியது “ப்ச்! என்ன நக்கலடி உனக்கு? அப்புறம் ஏண்டா என்னைக் கட்டி புடிச்சுகிட்டு இருக்கன்னு கேட்குறியா?” என்றதும் சிரிப்பை ஒழித்துக் கொண்டு நின்றாள் விசாலாட்சி.
“எகத்தாளம் ஹ்ம்ம்!.. இப்போ நான் விசாலாட்சி புருஷனா போயிட்டேன்.ஒரு வாழ்க்கைக்குள்ள வந்தா எப்படி இருக்கனும்.அதை யோசனை பண்ணி தான் கல்யாணம் பண்ணுனேன்” என்றவனை இன்னும் நக்கலாகப் பார்க்க.அவளது தாடையைக் கொஞ்சம் வலிக்கப் பற்றியவன்.
“என்ன ஒரு கொழுப்பு உனக்கு? ஒரு நாளும் எவனுக்கும் பதில் சொல்லி நான் தனுஞ்சு போனதில்லைடி,அம்மா தொடங்கி செல்வி, உறவு வேலையாளு வரை என் பார்வைக்கு தக்கன காரியம் நடக்கும்,அப்படி இருந்தவனை நீயும், உன் அண்ணனும் என்னை இறங்கி பேச வச்சுடீங்க. இருக்கு அவனுக்கு ஒரு நாள். வசமா மட்டுவான் அப்போ வச்சுக்குறேன்.
“என்ன இது விரோதி மாதிரி பேசி வைக்கிறீங்க.எங்க நிலையில இருந்து யோசிங்க. எதுக்கு இத்தனை கோபம்” விளையாட்டைக் கைவிட்டுக் கொஞ்சம் நிதானமாக பேச தொடங்கினாள் விசாலாட்சி.
இப்போ என்ன சொல்ல வரீங்க.என்ன செய்யணும் நீங்க என்ன சொன்னாலும் நான் அதைக் கேக்குறேன் போதுமா.அதை விட்டுட்டு எதுக்குத் தேவை இல்லாத பேச்சு கோபமெல்லாம்” இறங்கியே பேசினாள். என்னதான் விளையாட்டு இருந்தாலும் சூழ்நிலை கொண்டு நடக்கும் அரிவை அல்லவா.
“ஹ்ம்ம்!.. அதுவும் சரி தான் எதுக்குத் தேவை இல்லாத பேச்சு.நான் சொல்ல வேண்டியது இது தான்.இயல்பா இருப்போம்”
“சரி”
“குமாரியை நல்லா பார்த்துக்கோ”
“உங்களை விட நல்லாவே பார்த்துப்பேன்” பேச்சில் குத்தியவளை ஒரு மாதிரியாகத் தணிகாசலம் பார்க்க.
“நம்ப பொண்ணை இரண்டு பேரும் நல்லா பார்த்துக்கலாம் சரியா” என்றதும் சிறு புன்னகை அவனிடம்.
சரியான அழுத்தம் கொண்டவன் தணிகாசலம்.பேரும் ஆளுமையைத் தன்னுள் ஒழித்து வெளியில் அமைதியாக இருந்து கொள்வான்.அன்றைய தினம் பஞ்சயத்திற்கு பிறகு தணிகாசலம், விசலாட்சியிடம் பேசி கொஞ்சமாகப் பழக ஒரு சில நாட்களிலே.அவனது குணத்தைக் கணித்து விட்டால் விசாலாட்சி.
அவன் எண்ணத்திற்கு சரியென்று நிற்க வேண்டும் இல்லையென்றால் மௌனம் கொண்டே சரி என்று சொல்ல வைத்து காரியம் சாதித்து விடுவான்.சரியான பிடிவாதகாரன் என்பதைக் கணித்தவள் கொஞ்சம் வளைந்து கொடுக்க எண்ணி விட்டாள் போலும்.
இது தான் வாழ்க்கை.இந்த வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.இதனையெல்லாம் முன்பே யோசித்துத் தானே இரண்டாந்தரத்திற்கு ஒத்து கொண்டாள்.தனது குடும்ப நிம்மதிக்காகத் தனது சுயம் தொலைக்காமல் வாழ்க்கையை எப்படி வளைக்கலாம் என்பதை எண்ண தொடங்கி விட்டாள் விசாலாட்சி.
அதன் பின் இருவரும் சில விஷயங்களைப் பேசி கொண்டே உறங்கி விட.பள்ளியை விட்டு வந்த குமாரி சத்தம் போடாமல் உள்ளே நுழைந்து தங்களது அறைக்குச் செல்ல.
அங்கே தாயையும் தந்தையும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அத்தனை களிப்பு.சத்தம் போடாமல் இருவருக்கும் இடையில் வந்த படுத்து கொண்டவள் இருவரது கழுத்திலும் கையைப் போட்டு இறுக்கி கொள்ள.
அவளது தொடுகையில் இருவரும் ஒன்றாக முழித்துக் கொண்டனர்.விசாலாட்சி அவளைக் கண்டு பதறி எழ போக. அவளை எழுந்து கொள்ள முடியாமல் மீண்டும் சரித்தவள், “விசா! விசா! படுத்துக்கோ எனக்கு இப்படி படுக்க ரொம்பப் புடிக்கும் தெரியுமா?” என்றவள் தகப்பனிடம் திரும்பி தூங்கி கொண்டு இருக்கிறான் என்று எண்ணி.அவனது கன்னத்தில் முத்தம் வைக்க.தூங்குவது போல் இருந்து கொண்டான் தணிகாசலம்.
“எப்போ வந்த? கதவு திறந்து தான் இருந்துச்சா?”
“விசா பேசி அப்பாவ முழிக்க வச்சுடாத பேசாம படு”
“என்னை விடுடி உங்கப்பனை கட்டிக்கோ”
“ஹ்ம்! நீயும் வேணும். அப்பா, அம்மா நடுவுல நான். எத்தனை நாள் ஆசை தெரியுமா. அப்பா கிட்ட வந்து படுத்தா அம்மாச்சி, அப்பத்தா எல்லாம் திட்டுவாங்க. இப்போ யாரும் எதுவும் சொல்ல முடியாது தானே” என்றவள் இன்னும் இருவரையும் இறுக்கி கொள்ள.
மகளது ஏக்கம் தணிகாசலத்தை வெகுவாகக் குற்றம் சாற்றி நின்றது.எதிலும் பிடிப்பில்லாமல் மகளது தேவைகளைக் கூடக் கவனிக்காமல் இருந்த தன் செயலை காலம் கடந்து உணர்ந்து நின்றான் தணிகாசலம். ஒரு பெருமூச்சுடன் அவனும் குமாரியை அனைத்து கொள்ள.அதிர்ந்து தகப்பனை பார்த்தாள் குமாரி.
“ப்பா!”
“இனி அப்பா கூட இப்படி படுத்துக்கோ யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.அப்பா உங்கிட்ட சரியா இல்லை தானே”
“அப்படியெல்லாம் இல்லப்பா” என்றவள் மீண்டும் அவனைக் கட்டி கொண்டு படுத்து கொள்ள.அவனும் அனைத்துக் கொண்டான்.
தணிகாசலம் நிதர்சனம் தெரிந்தவன் தான்.நடப்பை உணர்ந்தவன் தான். அதனை கொண்டு தான் இரண்டாம் திருமணம் இருந்தும் பிடிப்பில்லாமல் தான் இருந்தான்.அவனால் பெற்ற பிள்ளையிடம் கூட ஒன்ற முடியவில்லை.பல முறை தவறு என்று மூளை எச்சரித்தும் அவனால் குமாரிக்குச் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்ய முடியவில்லை.இதனை விசாலாட்சி திருமணமாகி வந்த நாட்களிலே கண்டு கொண்டாள்.
அவனுள் எதோ ஓர் தயக்கம் என்பதையும் உணர்ந்து கொண்டாள்.வாழ முயற்சி செய்கிறான் அதுவும் புரிந்து தான் இருந்தது.அதான் குமாரியுடன் தன்னைப் பொருத்தி கொண்டாள்.
இப்பொழுது அதனையெல்லாம் எண்ணி கொண்டே குமாரியை பார்க்க அவளும் தூங்கி இருந்தாள்.அதன் பின் எழுந்து கொள்ள மனம் வராமல் தணிகாசலமும், விசாலாட்சியும் அமைதியாக படுத்து கொண்டனர்.
error: Content is protected !!