Skip to content
Post Views: 1,886
அவள் “இல்லை” என்றதும்.. கோபம் கொண்டவன்..
“டைம் என்னன்னு தெரியுமா” என்று கோபப்பட்டவன்..
Advertisement
“வா” என்று கீழே அவளை அழைத்து செல்ல..
வைஷு அனைத்து உணவையும் சூடு பண்ணி விஜயேந்திரனுக்கு பரிமாற..
Advertisement
Advertisement
உணவு சூடாக இருந்ததால் நன்றாக உண்டான் வீ. பி… அவளும் அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட..
“தாங்யூ பொம்மா”… என்றதும்..
Advertisement
“எதுக்கு” என்பது போல் பார்த்தவளை..
“நான் லேட்டா வந்தா, வீட்டு வேலை செய்யுறவங்க இருக்க மாட்டாங்க,, நான் எடுத்து வச்சு சாப்பிடுவேன், சாப்பாடு எல்லாம் ஆரி போகி இருக்கும்,, சரியா சாப்பிட முடியாது,, இன்னைக்கு நீ சுடு பண்ணி கொடுத்தீயா, நல்லா சாப்பிட்டேன், அதுக்கு தான் தாங்யூ”..
“தாங்யூ எல்லாம் சொல்லாதீங்க பாவா” இது என் கடமை என்பது போல் பார்த்தவள்..
தண்ணீரை மீண்டும், மீண்டும் காரம் தாங்காமல் குடிக்க..
“ஏய் ஏன் இவ்வளவு தண்ணீ குடிக்குற,, அப்பறம் எப்படி சாப்பிடுவா?”..
“சாப்பாடு காரமா இருக்கு பாவா”?..
“உனக்கு தான் நான் தனியா காரம் இல்லாமல் சமைக்க சொன்னேனே”??.. என்றதும்
“நான் தான் வேணாமுன்னு சொல்லிட்டேன்,, உங்க சாப்பாட சாப்பிட பழகிக்கலாமுன்னு”.. என்றவளை முறைத்தவன்..
“கஷ்ட படாத பாப்பூ”..
“இது என் புது பேரு பாப்பூ” என்றாள்..
“ஏன் நான் பாப்பூ சொல்லகூடாதா?”..
“சொல்லுங்க, எப்படி வேணா சொல்லுங்க, உங்கலை யாரு வேண்டாமுன்னு சொல்லுறது”என்றவள்.. உண்டு முடித்து அனைத்து பாத்திரத்தையும் கிச்சனில் கொண்டு போய் வைத்து விட்டு வர..
“பொம்மா ஒரு வாக் போலாமா” என்றான்..
“இப்பாவா?”..
“ஆமாம் வா”… என்றவன்..
அவளை மாடியில் உள்ள சும்மிங் பூல் இருக்கும் பெரிய நடைபாதைக்கு அழைத்து வந்திருந்தான்..
அவளோ சும்மிங் பூலை பார்த்துவிட்டு..
“சும்மிங் பூல் எல்லாம் இருக்கா?..” என்று கேட்க..
“ஏய் சும்மிங் பூல் இங்கே இருக்குறது உனக்கு தெரியாதா” என்றான்..
“இல்லை” என்றவள்.. “நான் இன்னும் உங்க வீட்டையே சரியா பார்க்கல, இதுல மாடியில இருக்குற சும்மிங் பூல்லை எங்கே பாக்குறது”.. என்றதும்..
“நீ முதல்ல என்னை பாரு,, அப்பறம் வீட்டை பார்க்காமல்” என்றவன்.. அவளை தோள் அணைத்தவாறு நடக்க..
“பாவா” என்று நெழிந்தவளை..
“என்னடி” என்றான்..
“குளிருது பாவா” என்றாள்..
அப்போது தான் உணர்ந்தான்.. காற்று வேற சில்லென்று இருக்க.. சும்மிங் பூலும் பக்கத்தில் இருக்க அவனுக்கும் சில்லென்று இருக்க..
“இரு ஒரு பத்து நிமிசம் நடத்துட்டு போகலாம்,, உனக்கு முடியலன்னா,, பாவாவை இருக்கமா கட்டி பிடிச்சுக்கோ, பாவா ஒன்னும் சொல்ல மாட்டேன்”… என்று அவளை தோள் அணைப்பை கூட்டி சிரிக்க…
முறைத்து பார்த்தவளை.”என்ன டீல் ஓகே வா, டெய்லி இப்படி வருவோமா,, இல்லை சும்மிங் பூலில் குளிக்கலாம்,,?. என்று அவளிடம் கொஞ்சி சரசம் பேச..
“என்னது சும்மிங் பூலில் குளிக்குறதா, நோ வே”…. என்றவள்..
அவனிடம் இருந்து விலக..
“வேண்டாமுன்னா போ.. இது எல்லாம் நீ சொன்னா மூனு மாசத்துக்கு மட்டும் தான்.. மூனு மாசத்துக்கு அப்பறம் மேடம் எதுக்கு நோ சொல்ல கூடாது.. டெய்லி நைட் சும்மிங் பூலில் தான் குளிக்குறோம்” என்று அவளிடம் வம்பு பண்ண..
“பாவா குளிருது வாங்க” என்று வீ. பி யை இழுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு வர.. யாழினி நன்றாக தூக்கிக்கொண்டு இருக்க..
யாழினி அருகில் சென்றவளை அடுத்தவன்..
அந்த அறையிலே உள்ள இன்னொரு அறைக்கு அவளை அழைக்க..
“நோ பாவா இங்கே தூங்கலாம்” என்றவளை..
“பொம்மா நீ வா, யாழினி எழுந்துக்க மாட்டா, நீ வா, அந்த ரூம்புக்கு”.. என்று அழைக்க..
அவளோ வேண்டாம் என்பது போல் பார்க்க..
“நான் உன்னை ஒன்னும் பண்ணலடி,,?. உன்னை ஹக் பண்ணிகிட்டு தூங்கனும் வா” என்று அழைக்க..
“யாழினி எழுந்தா தேடுவா” என்றவளை.. பார்த்து சிரித்தவன்.
“சரி படு” என்றவன்.. அவள் படுத்ததும் அவளோடு சேர்ந்து அவளை தொடத வாறு படுத்துக்கொள்ள..
யாழினி நன்றாக உறங்குவதை உறுதிபடுத்தியவள்.. கணவனிடம் திரும்பி படுக்க,,..
அவன் கண்மூடி நாளை வேலைகளை பற்றி யோசனை செய்யு கொண்டு கண்மூடி இருக்க..
அவனை ஒரு விரல் தொட்டு எழுப்பியவள், தனது கைகளை விரித்து அவனை அழைக்க..
தனது பொம்மா விடமிருந்து இதை எதிர் பாராதவன்.. கை விரித்து தன்னை அழைத்தவளை.. பூ போல அவளின் மார்பில் தலைவைத்து அணைத்துக்கொண்டான்…
அவனின் தலையை வருடிவிட்டவன் அவனின் உச்சன் தலைமீது முத்தம் வைத்து தட்டி கொடுக்க..
தனது சொர்க்கம் தன்னை அணைத்திருப்பதில் எல்லை யில்லா இன்பம் கொண்டவன்.. நீண்ட நாள் கழித்து நன்றாக தூங்கினான்..
அடுத்த நாள் காலையில் வைஷு கண்விழித்துப் பார்க்க.. அவளின் கணவன் அவளை மார்போடு அணைத்துக்கொண்டு படுத்திருக்க..
மெல்ல எழுந்துக்கொள்ள பார்த்தவளை இன்னும் இருக்கி அணைத்தவன், “குட் மார்னிங் பொம்மா” என்றான்…
“முளிச்சுட்டீங்களா” என்றவளின் முகம் பார்த்தவன்.. “ஹாப்பி மார்னிங்டா” என்றவன்.. அவளை அணைத்துக்கொள்ள..
“பாவா யாழ் எழுந்துக்க போறா” என்றாள்..
“அவ இப்போ எழுந்துக்க மாட்டா” என்றவன்..
வைஷூவிடம் செல்லம் கொஞ்சி சில முத்தங்கள் கொடுத்து திருப்பி வாங்கிக்கொண்டு விலக…
வைஷு அவளின் உதட்டை அவள் கையால் தடவி கொண்டவள், வலியில் “முரட்டு பாவா” என்றவள் அவளை திட்ட..
“இதுக்கேவா” என்றவன்.. இன்னும் அவள் அருகில் வர..
அவனை தள்ளி விட்டு குளியல் அறைக்கு ஓடி இருந்தாள்..
வெளியில் வந்து பார்க்க..
யாழினியின் மடியில் வீ. பி படுத்து இருக்க..
நேற்று ஸ்கூலில் நடந்ததை தன் நானா விடம் சொல்லிக்கொண்டு இருந்தவள்..
வைஷுவை பார்த்து,, “மீ குட் மார்னிங்” என்றாள் யாழினி..
“குட் மார்னிங் யாழ் குட்டி” என்றவள், மகளின் கன்னத்தை தடவி “குளிக்க போ யாழ் ஸ்கூலுக்கு டைம் ஆச்சு” என்று கூற.
யாழினி சென்றதும், மனைவியின் சோப் வாசத்தில் அவள் அருகில் வந்தவன்,, “என்ன சோப்பு யூஸ் பண்ணுற பொம்மா?” என்று அவளின் கையை பிடித்து வாசம் பிடித்தவன். அவள் அசந்த நேரம் அவளின் இடுப்பை பிடித்து கிள்ளி விட்டு அவன் ஜிம் நோக்கி போக…
வீ. பி செய்யும் செயல்களை ரசித்தவள்.. இடுப்பை தடவிய படியே இருக்க.. யாழினி குளித்து வந்ததும் அவளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பி வைக்க கீழே சொல்ல..
ஆதித்யா வந்து இருந்ததை பார்த்தவள்..
“வாங்க அண்ணா, எப்போ வந்தீங்க”..
“நான் நைட்டே வந்துட்டேன்மா”,, என்றான் ஆதி..
“வாங்கண்ணா சாப்பிடுங்க” என்று அழைக்க..
வைஷூ தன்னை அண்ணா என்று கூப்பிடுவது ஆதிக்கு சந்தோசமாக இருக்க.. “வீ. பி வரட்டும்மா சேர்ந்து சாப்பிடலாம்” என்றான்
பின்னாடியிருந்து நண்பனின் தோளில் அடித்த வீ. பி.. “எப்போ வந்தீங்க மாப்பிள்ளை” என்று கேலி பேச..
“ஏய் மாமா இன்னும் வரலடா, நார்மலா பேசு” என்க..
“அதோ பாரு” என்க..
நாகில்லி டைனிங் டேபளை நோக்கி வந்தவர்..
ஆதியை பார்த்து “வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்” என்று அழைத்து அனைவரும் காலை உணவு உண்ண அமர..
வைஷு யாழினிக்கு நல்லா சாப்பிடு என்று ஊட்டி கொண்டு இருக்க.. “போதும் மீ, டைம் மாச்சு” என்று வேகமாக கிளம்ப…
அவளை அனுப்பி வைத்தவள்… சௌசன்யா வந்ததும்,, அனைவருக்கும் உணவு பரிமாற..
“நீயும் உட்காருமா” என்று மருமகளை நாகில்லி சாப்பிட சொல்ல..
“பரவாயில்லை மாமா நான் அப்பறம் சாப்பிட்டுகிறேன்” என்றவள், வீ. பிக்கு பார்த்த, பார்த்த பரிமாற..
அனைவரும் அவர்களை கண்டு கொள்ள வில்லை..
வீ. பிக்கு ஐ. டி. டி டான்ஸ் அகாடமியில் இருந்து கால் வர.. என்ன என்பது போல் போனை காதில் வைத்தவன்..
அவர்கள் சொல்லிய அனைத்தையும் கேட்டவன்,, “ஒரு இரண்டு நிமிசம் கழிச்சு”கூப்பிடுறேன்… என்று போனை வைத்தவன்..
நாகில்லியை பார்க்க.. என்ன விசயம் என்பது போல் பார்த்த தந்தையிடம்..
“அகாடமியில இருந்து பேசுறாங்க.. அம்மா போன் எடுக்கலீயாம்?..
நிறைய வேலையிருக்காம்,, நிறைய முடிவுகள் எடுக்கனுமாம்,, அம்மா சைன் வேணுமாம்” என்றவன்..
நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் நானா, வைஷுவை டோட்டல் இன்சார்சா, அம்மாவுக்கு அடுத்தது அவள எல்லா முடிவையும் எடுக்கற மாதிரி” என்று கூற..
“உன் இஷ்டம் விஜெய், இதில் அம்மாவும், நானும் ஒன்னும் சொல்ல மாட்டோம்”… என்றவர் உண்டு விட்டு சென்றுவிட..
வைஷு அதிர்ந்து இருப்பதை பார்த்த சௌசன்யா கணவரோடு அவள் அறைக்கு சென்று விட..
“நான் டான்ஸ் டிச்சராவே இருக்கேன்,, என்னால இது எல்லாம் பண்ண முடியாது, வேண்டாம்” என்றவளை..
“முதலில் சாப்பிடு” என்றவன்..
அவள் உண்டது,. அவன் ரூம்பிற்குக்கு அழைத்து சென்றவன்.. “இந்த புடவை வேண்டாம் வேற புடவை கண்டு”என்றவன்,,… வேற புடவையை எடுத்து கொடுத்து “கட்டிட்டு வா,, இல்ல நான் கட்டி விடவா?” என்றவனை முறைத்தவள்..
“அத்தை திட்ட போறாங்க”.. என்று புலம்பியவளை..
தன்னோடு இழுத்துக்கொண்டவன்… “அடுத்த இந்திரா தேவி நீ தான் கிளம்பு” என்று அவளை கிளம்ப சொல்லிவிட்டு..
வைஷு வருவதையும் அவளுடைய பதவியையும் போனில் சொன்னவன், அகாடமியில் முக்கியமானவை மீட்டிங்குக்கு வர சொல்லிவிட்டு போனை வைக்க..
வைஷு உம்மென்று ரெடியாகி வர..
“என்னாடி ரொம்ப அழுத்துக்குற, ஆமாம் எதுக்கு என் கிட்ட மூனு மாதம் டைம் கேட்ட,, நம்ம அகாடமியா நம்பர் 1 ஆக்கதானே, அதுக்கு உனக்கு பவர் வேண்டாமா?”….
“இல்ல அத்தை” என்று இழுக்க..
“உன் மாமியார் நேத்து நைட்டே போன் பண்ணி சொல்லிட்டாங்க.. அடுத்த இந்திரா தேவி என் மருமக வைஷூ தானுயின்னு போதுமா,, சிரிச்ச மாதிரி கிளம்பு” என்று வைஷுவை அழைத்துக்கொண்டு அகாடமிக்கு வந்தான்..
புதிய இந்திரா தேவியை வரவேற்க,, ஐ. டி. டி டான்ஸ் அகாடமியில் உள்ள முக்கியமான பலர் இவர்களை வரவேற்று பூங்கொத்தை குடுத்து வர வேற்க…
அனைவருக்கும் நன்றி சொல்லி பூங்கொத்தை வாங்கி கொண்டாள்..
வீ. பி அனைவரையும் மீட்டிங் ஹால் வர சொன்னவன்..
வைஷுவை தன் மனைவி என்று அறிமுகம் படுத்தியவன்.. இனி எந்த முடிவு எடுக்க வேண்டுமென்றாலும் வைஷு கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு…
இந்திரா தேவி ஆபிஸ் அறைக்கு வைஷுவை அழைத்து வந்தவன்..
அவளை இந்திரா தேவி சீட்டில் உட்கார சொல்ல..
வைஷு முடியாது என்றவள்.. அந்த சீட் எப்பையும் என் அத்தைக்கு தான்.. என்றவள் பக்கத்தில் உள்ள சீட்டில் அமர..
மனைவியை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தவன்..
இந்திரா தேவியின் பீ. ஏ வை அழைத்து,, வைஷுவுக்கு,, அனைத்தையும் சொல்லி கொடுக்க சொன்னவன்…
“பாத்துக்கோ, பொம்மலு” என்றவன் மனைவிக்கு கைகொடுத்து தோளில் தட்டிவிட்டு செல்ல..
வைஷு எழுந்து வீ. பி யின் காலில் விழ வந்தவளை தடுத்தவன்,, “நோ டா” என்று தடுத்தவன்,,.. வாழ்த்துக்கள் என்று கிளம்பி விட..
இந்திரா தேவியின் பீ. ஏ.. வைஷுவுக்கு அனைத்தையும், சொல்லி கொடுத்து சில பேப்பரில் சைன் வாங்கி விட்டு,, இந்திரா தேவிக்கு உள்ள வேலைகளை பற்றி விளக்கி விட்டு சொல்ல..
வைஷுவுக்கு இவ்வளவு வேலை இருக்கிறதா அத்தைக்கு என்று அனைத்து பைலையும், கம்பூட்டரில் உள்ள விசயத்தையும் பார்த்து கொண்டு இருக்க..
ரூம் கதவை தட்டி விட்டு வந்த பணி பெண்..
“மேம் உங்களை கோஆடினேட்டர் மேம் பாக்க வந்து இருக்காங்க” என்று சொல்ல..
வர சொல்லுங்க என்று வைஷு ஒரு பைலை படித்துக்கொண்டு இருக்க..
கையில் பூங்கொத்தோடு. “மே, ஐ, கம் மேம்” என்று ரூம் கதவை தட்டி விட்டு சொர்ணமுகி உள்ளே வர..
“எஸ் கம்” என்றவள் நிமிர்ந்து சொர்ணமுகியை பார்க்க.
“இவளா?”” என்று வாய்விட்டே அதிர்ச்சியாகி கூறி இருக்க..
“நானே, அது நானே” என்று வைஷு பாட்டு பாட….
error: Content is protected !!