Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 15 1

ஜதி  தரும் அமுதம்



Advertisement

அத்தியாயம் -15

Advertisement

Advertisement

இந்திரா  தேவி  கேஷவனோடு தன்  தாய், தந்தையை  பார்க்க கிளம்பி நின்றார்..

Advertisement

“மீ எங்க உங்க பிரதர்ரோட கிளம்பிட்டீங்க?” என்றான்  வீ.பி..

“எங்க அம்மா அப்பாவை பார்க்க போறேன்  விஜெய்.. ஒரு 4 டேஸ்சுல வந்துருவேன்”.. என்றார்.,.

நாகில்லி மனைவியை முறைத்துக்கொண்டு இருந்தார், சௌசன்யா  நிறை மாதமாக இப்பவோ  அப்போவோ என்று டெலிவரிக்கு  தங்கள் வீட்டில் வந்து  இருக்க, “உனக்கு இப்போ எது  முக்கியம்,,” என்று மனைவிடம் சண்டை போட்டார்…

“எப்போதும்  உங்களையும் உங்க பிள்ளைகளையும்  மட்டுமே தானே பார்க்கிறேன்,, ஒரு 4 நாள் பொறுத்துக்க முடியாதா?”..

என்று நாகில்லியிடம்  இந்திரா தேவி வாக்கு வாதம்  செய்து கொண்டு இருந்தார்..

“நான்  உன்   பிறந்த  வீட்டுக்கு போக வேண்டாமுன்னு  சொல்லல்ல, சௌசன்யா  இப்படி  நிறை மாசமா இருக்கும் போது'” என்றார்..

“டெலிவரிக்கு  இன்னும் 20 டேஸ்சு  இருக்கே.. அதுக்குள்ள நான் வந்திருவேன்”.. என்று நாகில்லி இடம் சண்டை  போட்டு கிளம்பி இருந்தார்..

“நாளை  சௌசன்யாவுக்கு ஏதாவது ஆச்சு, அதுக்கு  நீதான் பொறும்பு, மாப்பிள்ளை ஆதி வீட்டுல இருந்து ஏதாவது கேள்வி வந்த, அதுக்கு  நீ தான் பதில் சொல்ல  வேண்டும்”… என்று மனைவியிடம்  கோபமாக பேசிவிட்டே ஆபிஸ் கிளம்பினார்..

இந்திரா தேவி  மகளிடம் “நீ  நாளு நாளைக்கு உன்னை பார்த்துக்கோ, நான் என் அப்பாவையும்,, அம்மாவையும் பாத்துட்டு வந்துடுறேன்”  என்று ஆசையாக கேட்கும்  அன்னையிடம் மறுப்பு கூற முடியாமல்..

“சரிமா போயிட்டு வாங்க”  என்று சௌசன்யா சொல்லி விட…

போகும் போது வைஷுவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்ட  இந்திரா தேவி “சௌசன்யாவை  பார்த்துக்கோ”.. என்று சொன்னவுடன்..

“சரி” என்பது போல் வைஷு தலையாட்ட..

இந்திரா தேவி, கேஷவனோடு  கிளம்பி விட்டார்..

இந்திரா தேவி கிளம்பியவுடன்

வீ. பியும் ஆபிஸ் கிளம்ப.. “ஆபிஸ் போயிட்டு வர்ரேன்”,   என்று வைஷுவை பார்த்து கண்ணடித்து சென்றான்….

வைஷு சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்..

அனைவரும் சென்றவுடன்  வைஷு சௌசன்யா அறைக்கு வந்து சிறிது நேரம் பேசினாள்.

“நீ உன் ரூம் போ வைஷு  எனக்கு ஏதாவதுன்னா, உன்னை கூப்பிடுறேன்”  என்று சௌசன்யா சொல்ல..

“இல்ல  அண்ணி  யாழினி ஸ்கூல்ல  இருந்து வர்ர வரைக்கும் உங்க கூட இருக்கேன்”…என்றவள்…

“யாழினி எப்படி பிறந்தாள், நீங்க எப்படி பீல் பண்ணி”  என்று கேட்க..

“அது  பெரிய கதை வைஷு,, யாழினி எப்படி பிறந்தான்னு எனக்கு தெரியாது?..  நானும், ராமும் போன கார் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு,, என்  ராம் இறந்துட்டார்,, நான் கோமாவுக்கு போயிட்டேன், கையில, காலுல நல்லா அடி.. யாழினியை   ஆப்ரேஷன்  பண்ணி தான் வேளியே எடுத்தாங்க..

எனக்கு சுயநினைவு  வந்துச்சு,, ராம் போனது முதல்ல தெரியாது, அவர் என்ன பாக்க வரலண்ணா நானே தெரிஞ்சிகிட்டே,, அவர் என்ன விட்டு போயிட்டார்.. என்னால கதறி அழகூட முடியல,, அவ்வளவு  வேதனை..

வீ. பி கிட்ட கேட்டேன், என் ராமுக்கு என்னாச்சுன்னு , அவன் கண்கலங்கி  அன்னைக்கு தான் பார்த்தேன்,, என் கையை பிடிச்சிகிட்டு எனக்கு முன்னாடி அவன் அழ ஆரம்பிச்சுட்டான்…

என்னால தடுக்ககூடா முடியல..

பெண் குழந்தை பிறந்து இருக்குன்னு சொன்னான்,, உன்னால தூக்க முடியாது, இன்பெக்சன் ஆகிடும்முன்னு சொல்லிட்டு யாழினியை  என்கிட்ட  காட்டாவே இல்லை,,

அவனே தான் யாழினியை வளத்தான்,,.

 எவ்வளவு ஆசையா  கனவு கண்டு, அவரை கல்யாணம் பண்ணி. என் ராம்மோடு அழகான  வாழ்க்கைவாழ  நெனச்சேன்,, ஆனா என்னால  வாழ முடியல”… என்று சௌசன்யா கண்கலங்க..

வைஷுவுக்கு என்ன மாதிரியான கொடுமை இது.. கணவன் இறந்து பெற்ற பிள்ளையை பார்க்க கூட முடியாத  சூழ்நிலை என வருந்தியவள்..

“கிரிஷ் எப்படி பிறந்தான்,  அண்ணி”.. என்று சௌசன்யாவிடம் கேட்க…

“அது பெரிய காமெடி வைஷு,, என் வைத்துல கிரிஷ் 40 வது வாரம்.. செக்கப்  முடிச்சிட்டு.. ஹாஸ்பெட்டல் பக்கத்தில்  உள்ள   ஹோட்டலுல  நானும் ,ஆதியும்  மதியம் சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.. திடிர்னு  ஒரு  வலி.. என்னென்னு சொல்ல முடியல,, சில நொடி தான் ஆனால் பயங்கரமான  வலி.. என் முகத்தை பார்த்தே,, ஆதித்யா என்னை ஹாஸ்பெட்டலில் சேர்த்துட்டார்…

உடனே எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிட்டு..

என்னை ஹாஸ்பெட்டலுல  அட்மீட் பண்ணிட்டாங்க.. எனக்கு டெலிவரி பெய்ன்  வர ஆரம்பிச்சது,, நான்  டெலிவரி பெய்யினுல அம்மான்னு  ஒரு கத்து கத்துனேன் பாரு,, ஆதி என் சவ்ன்ட  கேட்டு.. ஹாஸ்பெட்டல் விட்டு வெளியே போயிட்டாரு,, என்னால  இந்த சவ்ண்ட எல்லாம் கேட்க முடியாதுன்னு , வெளியே போயி நின்னுட்டாரு,, ஒரே அழுகையாம்.. என்று சொல்லி விட்டு  சௌசன்யா  விழுந்து, விழுந்து சிரித்தாள்..

வைஷு “அண்ணா வா   அப்படி பண்ணாங்க,, அவங்க ஹாஸ்பெட்டலை விட்டு வெளியே போனதுக்கு உங்களுக்கு கோபம் வரலீயா” ..

“கோபம் வரல வைஷு, லவ் தான் அதிகமா  ஆச்சு,, அப்பறம் உன் புருஷன்  தான் அவரை சமாதானம் பண்ணி ஹாஸ்பெட்டல்  உள்ளே கூட்டிட்டு வந்தான்..

“அப்பறம்” என்று  வைஷு கேட்க..

“ஆதி  என் விசயத்து மட்டும் தான் ரொம்ப வீக்,, மத்த படி ரொம்ப போல்டா  இருப்பாரு, நான் அழுவதை பார்த்துஸ, அவர் தான்  ரொம்ப துடிச்சாரு,, எப்படியே கொஞ்ச நேரத்துல  கிரிஷ் பிறந்துட்டான்,, ஆதிக்கு அவ்வளவு சந்தோசம், ஆதி விட்டுலையும்  ரொம்ப சந்தோசம் பட்டாங்க,, இதுக்கு எல்லாம் என்ன தம்பி தான் காரணம்,, அவன் மட்டும் நான் ராம் இருந்ததும் என்னை அப்படியே விட்டு இருந்த,, நான் கண்டிப்பா என்னவாக ஆகியிருப்பேன்னு எனக்கே சொல்ல தெரியால..

நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..

அதுக்கு முதல்ல காரணம் என் தம்பி,, இரண்டாவது என் ஆதி”

என்று கண்கலங்க..

“அண்ணி வேண்டாம்,, இப்போ நல்லா இருக்கீங்களா அது போதும்”…

“இல்ல வைஷு  நான்  வீ. பி யை ரொம்ப  கஷ்டபடுத்தி இருக்கேன்,, அவனை மட்டும் இல்ல, என் ஆதியையும் கூட..

ஆதி ரொம்ப நல்லா மாதிரி,, வீ. பி யோட பிரண்ட்டா தான் எனக்கு தெரியும்.. மத்த படி எனக்கு அவரை பத்தி தெரியாது.. அவர் என்னை பார்த்ததில்  இருந்தே விரும்பியிருக்கார்.. எனக்கு அது தெரியாது..

ராம் இறந்தவுடன் யாழினியோட என்னையும் சேர்த்து நல்லா பாத்துக்குவேன்னு வீ. பி கிட்ட சொல்லி இருக்காரு.. எனக்கு அது தெரியாது..

ராம் இறந்து ஒரு ஆறுமாதம் கழிச்சு என் தம்பி என்கிட்ட  ஆதித்தியாவை பத்தி சொன்னான்..  அவன் சொன்னதும்  எனக்கு ஏதாவது விசம் வாங்கி கொடு நான் செத்துப்போறேன்னு சொன்னேன்..

அதுக்குஸஅவன் என்ன சொன்னான் தெரியுமா!?. நீ எதுக்கு சாகனும், உனக்காக எல்லாரையும் எதுத்து உனக்கு எல்லா நல்லதை பண்ணேன் பாரு அதுக்கு நான் தான் சாகனும்.. இப்பவும் உன் ராம் உன்ன தனியா விட்டுடாதன்னு சொல்லிட்டு செத்து போயிட்டார்.அதை நிறைவேத்த  உன்கிட்ட போராடிட்டு இருக்கேன் பாரு  நான் தான் சாகனும்..

அப்பறம் அங்கே ஒரு பைத்தியகாரன் ஆதி உன்னை 5  வருஷமா லவ் பண்ணுறான் பாரு அவன் சாகட்டும் நீ, இப்படி இருந்து எங்க  எல்லாரையும்  சாகடிக்கபோற.. ஆனா நான் யாழினியை  மட்டும் உன்கிட்ட தரவே மாட்டேன் அவ என் பொண்ணு.. அப்படியின்னு சொல்லிட்டான்..

,, தினமும்  என்கிட்ட சண்டை போட்டு..  மிரட்டி  ஆதித்யாவை கல்யாணம் பண்ணி வச்சுட்டான்..

என்னால என் ராமை மறக்க முடியல.. இரண்டு வருசமா ஆதிகிட்ட நான் பேசல, பழகல தல்லி வச்சேன்,, என்பக்கத்துல கூட விடல..

சண்டை போடுவேன், எனக்கு கோபம், யாரு மேல காட்டுறதுன்னு தெரியல, என்  ராம்  போனது, என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சதுன்னு,, சரியா சாப்பிட மாட்டேன்,  ஆதி சாப்பாடு கொண்டு வந்தா தூக்கி எறிவேன்.. ஆதி ஒன்னும் சொல்ல மாட்டார்,, அத சுத்தம் பண்ணிட்டு, வேற சாப்பாடு  எடுத்துட்டு வந்து என் முன்னாடி  நிப்பார், சாப்பிட்டு  தெம்பா என் கிட்ட சண்டை போடுயின்னு  சொல்லுவாரு,,

என்னால அவர்மேல கோபத்தை  கூட  காட்ட  முடியல..ஆதியோட அன்பால   கொஞ்சம், கொஞ்சமா  ஆதிய  விரும்ப ஆரம்பிச்சுட்டேன் .. இப்போ எனக்கு எல்லாமே என் ஹஸ்பெண்ட்  ஆதி தான்..

நான் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேன்  ஆதிமாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க..

ஆதி உண்மையில ரொம்ப கோபகாரர், ஆனா  என்கிட்ட மட்டும் ரொம்ப ஸ்வீட்..

ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில என்ன வேணும்?. நம்மல புரிஞ்சுகிற புருஷன்,  நம்ம சொல்லுறத காது குடுத்து கேட்குற ஒருதர்,, நம்மளுக்கும் ஆசை, கனவு, விருப்பம்,  எல்லாம் இருக்கு அவங்களுக்கும்  கொஞ்சம் இடம் கொடுக்கனும்,, நம்ம மேல நம்பிக்கை வேணும்,, நாம தப்பே செஞ்சாலும் தெரியாம செஞ்சு  இருப்பா,, அவளுக்கு தப்புயின்னு  தெரிஞ்சா பண்ணியிருக்க மாட்டான்னு,  சொல்லுற நம்பிக்கை வேணும்.. அது நம்ம லைப் பாட்டுனர் கிட்ட இருந்து கிடைக்குறது  கஷ்டம்.. எனக்கு என் ஆதி அது மாதிரி கிடைச்சு இருக்காரு, ஆதி எனக்கு கிடைச்சது வரும்”  என்று பெருமையாக சொன்னவள்..

“உன்  புருஷன் ஆதிக்கு மேல , உன்னை எப்படி பாத்துக்க போறான் பாரு”..  என்று தம்பியை விட்டு கொடுக்காமல் பேச..

தலையாட்டி சிரித்துக்கொண்டாள் வைஷு..

யாழினி ஸ்கூலில் இருந்து வந்ததும்,, தோட்டத்தில் அமர்ந்து கதை பேசி, உணவு உண்டு சௌசன்யாவுடன்  உடன் சிறிது நேரம் நடக்க.. நாகில்லி   வந்து விட்டார்,,  மகள், மருமகளோடு  இனக்கமாக  பேசிக்கொண்டு  இருப்பதை பார்த்து சந்தோஷபட்டு மருமகளை பாசமாக பார்த்தார்..

“வாங்க மாமா, சாப்பிடுறீங்களா?”  என்று பாசமாக கேட்ட மருமகளை பார்த்தவர்,, தலையாட்ட..

கைகழுவி வந்தவர் மருமகள் பரிமாறியதை ஆசையாக உண்டு விட்டு,, “நீ சாப்டீயாமா?””  என்று கேட்டவரிடம்,,

“பாவா  வந்ததும் சாப்பிட்டுகிறேன்”.. என்று கூற..

“சரி  மா” என்று  அவர் அறைக்கு சென்று விட…

தந்தை சென்றது சௌசன்யா அவள் அறைக்கு செல்ல.

“அண்ணி”  என்று சௌசன்யாவை அழைத்த வைஷூ,,.

“டோர் லாக் பண்ணாதீங்க  அண்ணி நான் உங்க கூட ரூம்புல வந்து படுத்துக்கிறேன்”  என்று கூற..

“அடி வாங்குவா, ஒழுங்கா என் தம்பியோட குடும்ப நடத்துற வேலையை பாரு, என்னை  பாத்துக்க எனக்கு தெரியும்,,  போன் இருக்கு, பெய்ன் வந்த போன் பண்ணுறேன்  அப்போ வா”  என்று சிரித்துக்கொண்டே செல்ல.. வைஷுவுக்கு சௌசன்யா சொன்னதும், வெட்கம் வர…

யாழினி தூக்கம் வருவதாக சொல்ல.. அவளை தூங்க வைக்க சென்றவள் அவளும் சேர்ந்தே தூக்கி விட..

நடு இரவு 12  மணிக்கு   அவன் அறைக்கு  வந்த  விஜயேந்திரன்,

தன் இரண்டு சொர்க்கம்  தூங்குவதை பார்த்து, ரசித்துவிட்டு  குளித்து உடை மாற்றி  வந்தவன்..

வைஷுவை  பின்னிருந்து அணைத்துக்கொள்ள..

“பாவா”  என்று வைஷு முணங்க..

 இவ இன்னும் தூங்கலீயா என்று அவளை திருப்பி பார்க்க.. வைஷு நன்றாக தூங்குவதை போல தெரிய,, அவளை அப்படியே  தூக்கிக்கொண்டு   பக்கத்தில் உள்ள இன்னொரு அறைக்கு தூக்கி செல்ல..

தான்  ஏதோ மிதப்பது போல்  தெரியா மெல்ல விழி திறந்தவளின்,, கண்ணிமைகளில்  முத்தம் மிட்டவனை..

“பாவா”  என்றவள் “எப்போ  வந்தீங்க”  என்று கொட்டாவி விட்டு கொண்டே கேட்க.

“இப்போ தான்” என்றவன்..

அவளை அணைத்தவாறே வைத்து இருக்க..

“சாப்டீங்களா?”.. என்றாள்..

“இல்லை” என்று தலையாட்ட…

“வாங்க சாப்பிடலாம்,” என்று அழைத்தவளிடம்..

“கொஞ்சம் நேரம் அப்படியே இரு”என்றவன்.. அவளை அணைத்தவாறே  இருந்தவன்…

“நீ சாப்டீயா பொம்மா” என்றான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!