Skip to content
Post Views: 2,419
அத்தியாயம் 32
“அம்மா.. அப்பா.. தாத்தா.. பாட்டி…” என்று அனைவரையும் அழைத்து கொண்டே முகம் முழுவதும் சந்தோசமாக தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் கருணா.
Advertisement
“அம்மா.. அம்மா..”
கருணாவின் குரலில் அனைவரும் ஹாலிற்கு வந்துவிட்டார்கள்.
Advertisement
Advertisement
“என்ன கருணா, ரிசல்ட் வந்தாச்சா?“ என்றார் சுமதி.
“ஆமா ம்மா, நான் ஐ.ஈ.எஸ் எக்ஸாம் க்ளியர் பண்ணிட்டேன். ப்ர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே க்ளியர் பண்ணிட்டேன் ம்மா..” என்று கூறி அவரை கட்டி அனைத்து கொண்டாள்.
Advertisement
“எங்களுக்கு எல்லாம் நீ க்ளியர் பண்ணிடுவேன்னு முன்னாடியே தெரியுமே? அதான் இன்னிக்கு காலையில உனக்கு பிடிச்ச கருப்பட்டி பணியாரம் ரெடி பண்ணிட்டு இருக்கேன்” என்று கூறி கருணா நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு அவர் அடுப்படிக்குள் சென்றுவிட்டார்.
பாட்டியும்,”என் தங்கம் பாஸ் பண்ணாமா வேற யார் பாஸ் பண்ணுவா சொல்லு…” என்று அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து அவரும் அடுப்படிக்கு சென்று விட்டார்.
தாத்தா, “அவள் தலையை வருடிவிட்டு, நீ சாதிக்க பொறந்தவன்னு எனக்கு தெரியும்டா” என்று கூறி விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார்.
சங்கரன்,”ரொம்ப சந்தோசம் டா.. எனக்கு முன்னவே தெரியும்.. எப்ப ட்ரெயினிங் எங்கேன்னு எல்லாம் எப்ப ம்மா சொல்லுவாங்க..” என்று முகமலர்ச்சியுடன் கேட்டார்.
“இன்னும் ரெண்டு நாள்ல சொல்லிடுவாங்க ப்பா..”
“சரி டா.. இந்தா உனக்காக முன்னாடியே வாங்கி வச்சிருந்தேன்” என்று ஒரு வாட்சை கொடுத்தார்.
“தேங்ஸ் ப்பா.. நான் போய் அத்த வீட்லயும் அவினாஷ் வீட்லயும் சொல்லிட்டு வரேன்” என்று கூறி முதலில் தமயந்தி வீட்டிற்கு சென்றாள்.
“வா.. வா.. பாப்பா.. அப்படி சொல்லலாமா, ஆஃபிஸர் மேடம்” என்றார் தர்மராஜ் உற்சாகமாக.
“எவ்வளவு பெரிய ஆஃபிஸர் ஆனாலும் உங்களுக்கு பாப்பா தான் மாமா.. நான் வீட்ல இருந்து நடந்து வரதுக்குள்ள உங்களுக்கு நியூஸ் வந்தாச்சா?”
தமயந்தி கையில் ஒரு கிண்ணத்தில் சுட சுட கேசரியுடன் வந்தார்.
“கங்கிராட்ஸ் பாப்பா.. இந்தா பாப்பா..” என்று ஊதி ஒரு வாய் கேசரியை ஊட்டி விட்டார்.
“தேங்க்ஸ் அத்தை”
“ஆன்னா ஊன்னா கேசரியை கிண்டிட வேண்டியது. பாப்பா எவ்வளவு பெரிய எக்ஸாம்ல பாஸ் ஆயிருக்கு.. ஒரு ரசகுல்லா.. ஒரு பாஸந்தி.. இப்படி செய்யலாம்ல” என்றார் தர்மராஜ்.
“உக்கும்.. உங்க மாமாக்கு வேற வேலை இல்லை கருணா, அவரை விடு. நீ சாதிச்சிட்டன்னு பெருமையா இருக்கு, ஆனாலும் திரும்ப தூரமா போய்டுவன்னு நினைச்சா கவலையா இருக்குடா”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பாரியும் வில்வாவும் வீடியோ அழைப்பில் அழைத்தனர்.
“தூங்காம கண் முழிச்சு டீ போட்டு கொடுத்து உனக்கு படிக்க ஹெல்ப் பண்ண எங்களை மறந்திட்டு இல்ல..” என்றான் வில்வா
“அதானே..” பாரியின் பின்பாட்டு.
கருணா இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைத்து பார்க்கவும்,
“நீ போன் பண்ணப்ப, கீழே மேஜர் சார் முன்னே அன்டென்ஷன்ல நின்னு பேசிகிட்டு இருந்தோம். அதான் கால் அட்டென்ட் பண்ணல” என்றான் பாரி.
“சும்மா சும்மா இந்த காலத்தில பசங்க எல்லாம் போன் வச்சுகிட்டு டைம் வேஸ்ட் பண்றாங்கன்னு தான் கிளாஸ் எடுத்திட்டு இருந்தார்”
“சரி சரி அதை எல்லாம் விடு. மனமார்ந்த வாழ்த்துக்கள் கருணாம்பிகை. எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு”
“ஆமா கருணா, நிஜமாலுமே ரொம்ப ரொம்ப ஹாப்பி.. எல்லாரும் சேர்ந்து செலிப்ரேட் பண்ணலாம்னா நாங்க தான் இங்கே இருக்கோமே”
“விடுண்ணா… இன்னும் கொஞ்ச மாசம் தான் அங்கே இருக்க போறீங்க. அப்புறம் அடிச்சு துரத்தினாலும் நம்ம ஊரை விட்டு போவ மாட்டீங்க தானே?”
“என்னம்மா அது கையில” என்றான் பாரி தமயந்தியை பார்த்து.
“பாப்பாக்கு கேசரி பண்ணேன் டா..”
“எங்களுக்கு?” என்றனர் இருவரும் கோரஸாக.
“உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்பவே மிஸ் பண்றேன் டா. உங்க அப்பாவுக்கு ரசகுல்லா பாஸந்தி வேணுமாம், கேளுடா பாரி.. நீங்க எப்படி கேசரியை வேணும்னு ஆசையா கேக்குறீங்க?” அவர் குரலும் தழுதழுத்துவிட்டது.
“இங்க தானே வரணும்… வந்ததும் தினமும் கேசரியை கிண்டி தருவா, சாப்பிடாம மட்டும் இருங்க பேசிக்கிறேன்” என்றார் தர்மராஜ் கடுப்பாக.
“சரி சரி நீங்க அத்தைக்கூட பேசிட்டு வைங்க, நான் போய் அவினாஷ் வீட்லயும் சொல்லிட்டு வரேன்” என்று கருணா அவினாஷ் வீட்டிற்கு சென்றாள்.
“ஹலோ அக்கா.. கங்கிராட்ஸ்… எங்களுக்கு எல்லாம் நீங்க பாஸ் பண்ணிடுவீங்கன்னு முன்னாடியே தெரியுமே… இன்னிக்கு ஈவினிங் நான் காலேஜ்ல இருந்து வந்ததும் நம்ம ரெண்டு பேரும் போய் பானி பூரி சாப்பிடலாம். என் ட்ரீட் ஓகேவா?” என்று கருணாவை கட்டி பிடித்து கூறினாள் அருந்ததி.
“நான் குளிச்சிட்டு வரேன் க்கா.. பைவ் மினிட்ஸ்” என்று கல்லூரிக்கு செல்ல கிளம்ப சென்றாள்.
வேதாச்சலம் தாத்தாவும் வாழ்த்திவிட்டு , “ரெண்டு நிமிஷம் இரு பாப்பா, சாம்பாரை இறக்கிட்டு வந்துடறேன் “ என்று சமையலறைக்குள் சென்றார்.
கருணாவின் கண்கள் அவினாஷை தான் தேடியது.
“சாப்பிடறியாம்மா” என்றார் தாத்தா அடுப்படிக்குள் இருந்து.
“இல்ல தாத்தா, வீட்ல எனக்கு பிடிக்கும்னு இன்னிக்கு கருப்பட்டி பணியாரம் செஞ்சிட்டு இருக்காங்க”
அப்பொழுது அவினாஷ் கையில் அர்ச்சனை தட்டுடன் உள்ளே நுழைந்தான்.
காலையிலே குளித்து வேஷ்டி சட்டையில் கோவிலுக்கு சென்று வந்திருப்பது தெரிந்தது.
“உனக்காக தான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் கருணா. ரிசல்ட் என்னாச்சு” என்றான் கொஞ்சம் பதட்டமாகவே.
எல்லாரும் நீ பாஸ் பண்ணிருவேன்னு தெரியுமே என்று சொன்னபோது கிடைக்காத ஒரு நிறைவு, தான் பாஸ் ஆகவேண்டும் என்று கோவிலுக்கு போயிட்டு வந்ததாக அவினாஷ் கூறியதில் கிடைத்தது கருணாவிற்கு.
அவள் கண்கள் கலங்கி, பார்வை மங்கலாகியது.
“ஹே கருணா.. என்னாச்சு.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று வேகமாக கருணாவின் அருகில் வந்து விட்டான்.
கருணாவிற்கு வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மேலும் கலங்கியது.
முதன் முதலாக பேச வார்த்தைகள் இல்லாமல் தடுமாறினாள் பெண்.
“என்னம்மா.. என்னாச்சு.. உட்காரு”, என்று அவள் கையை பிடித்து, நாற்காலியில் அமர வைத்தான்.
உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
“இந்த தடவை இல்லன்னா என்ன கருணா.. அடுத்த தடவை எழுதி க்ளியர் பண்ணிக்கலாம், இதுக்கு எல்லாம் கலங்க கூடாது” என்று ஆறுதல் கூறினான் அவினாஷ்.
அதை கேட்டு கொண்டே வெளியே வந்த அருந்ததி, “லூசாண்ணா நீ.. கருணாக்கா போய் பாஸ் ஆகாம இருப்பாங்களா.. அவங்க பாஸ் பண்ணதை சொல்லத்தான் வந்தாங்க” என்று கூறி, “தாத்தா, என்ன டிபன்” என்று அடுப்படிக்குள் சென்றுவிட்டாள் அருந்ததி.
“அப்படியா?” என்று கருணாவை பார்த்து கண்களாலே கேட்டு அவள் ஆம் என்று தலை அசைக்கவும் , ஆசுவாசமாக அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
“தேங்க்ஸ்” என்றாள் கருணா.
அவினாஷ், சிரித்துக்கொண்டே தன் கையில் இருந்த கோவில் அர்ச்சனை தட்டை நீட்டினான்.
விபூதி குங்குமம் வைத்துக்கொண்டு, அதில் இருந்த பூவைவயும் தலையில் வைத்துக்கொண்டாள்.
“அண்ணா, காலேஜ்ல நீ ட்ராப் பண்ணுவியா இல்ல நான் பஸ்ல போகட்டுமா” என்று கேட்டுக்கொண்டே கையில் தட்டுடன் வந்து அமர்ந்தாள் அருந்ததி.
“நீயும் சாப்பிடுப்பா” என்று வந்தார் தாத்தா.
“இல்ல தாத்தா நான் கோவில் போயிட்டு வந்து சாப்பிடுறேன்..” என்று தாத்தாவிடம் கூறி, “நீ இன்னிக்கு பஸ்ல போய்டு” என்றான் அருந்ததியை பார்த்து.
தாத்தாவும் பேத்தியும் ‘ங்கே’ என்று விழித்தனர்.
“கோவில்ல இருந்து தானே இப்ப வந்தான்” என்று இவனை கேள்வியாக பார்த்தனர்.
“என்னமோ திரும்பவும் கோவில் போகணும் போல இருக்கு.. இப்ப என்ன? நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க தாத்தா” என்று வெளியே கிளம்பினான்.
“நானும் கிளம்புறேன் தாத்தா” என்று கருணாவும் அவினாஷின் பின்னே சென்றாள்.
இருவரும் பேசிக்கொள்ளாமலே, நடந்து அவர்கள் ஏரியா பிள்ளையார் கோவிலுக்கு சென்றார்கள்.
இருவரும் மனமார பிள்ளையாருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தனர்.
“அண்ணாஸ் சம்திங் பிஷ்ஷி.. நான் காலேஜ் முடிச்சு வந்ததும் பேசலாம்” என்று அருந்ததி, பாரி வில்வாவிற்கு மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு கிளம்பி சென்றாள்.
———————
ராஜியை பார்க்க வந்த விக்ராந்த், தனக்கு டெல்லிக்கு ட்ரான்ஸ்பர் கேட்டு வாங்கிக்கொண்டு அங்கேயே வந்துவிட்டார். அவர்கள் வீட்டு மாடியிலேயே வில்வாவும் பாரியும் பேயிங் கெஸ்ட்டாக குடி வந்துவிட்டனர். அவருக்கு ட்ரான்ட்ஸ்பர் கிடைக்கும் வரையில் இவர்கள் பக்கத்தில் இருக்கட்டும் என்று தான் இந்த ஏற்பாட்டை முதலில் செய்தனர்.
பிறகு “எப்படியும் இன்னும் நாலஞ்சு மாசம் தானே டெல்லில இருக்க போறீங்க, அது வரை இங்கேயே இருந்துக்கோங்க” என்று ராஜியின் அன்பு கட்டளையை மீற முடியாமல் அங்கேயே தங்கி விட்டனர்.
விக்ராந்த் வந்ததும், நானும் விதுவும் லவ் பண்ணனும், நீ மேலே போ என்று தர்ஷையும் குண்டு கட்டாக இவர்கள் ரூமிற்கு அனுப்பி விட்டார் ராஜி.
ராஜியுடன் துணைக்கு இருக்கவும், சமையல் வேலை பார்ப்பதற்கும் வீட்டோடு மது என்ற ஒரு பெண்மணியை வேலைக்கு அமர்த்திவிட்டார் விக்ராந்த்.
அதனால் சமையல் வேலை, வீட்டு வேலை என்று எதுவும் இல்லை பாரி வில்வாவிற்கு. எல்லாம் நன்றாக சென்றாலும், மிலிட்டரி கேம்ப்பில் இருப்பது போலவே இருந்தது இவர்களுக்கு.
விக்ராந்த் வேலைக்கு கிளம்பி சென்ற பிறகு தான் பிரீயா மூச்சு விடுவது போலவே இருந்தது.
முதலில் ஒரு நாள் காலையில் நாலரை மணிக்கு ஜாகிங் போக வருகிறீர்களா? என்று இவர்களிடம் கேட்டார்.
இவர்களும் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று மண்டையை ஆட்டிவிட்டனர். அன்றில் இருந்து அது தினமும் தொடர்கிறது.
அதை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கின்றனர் இருவரும்.
“ராஜிம்மா, இது எல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை. உங்க வீட்டுக்காரர்க்கு கம்பெனி கொடுக்க உங்களை கூட்டிட்டு போக வேண்டியது தானே, நாங்க எதுக்கு?”
“அதானே, நானும் பேச்சு வாக்குல ராஜிம்மாவ கூப்பிட்டு போலாமேன்னு சொன்னதுக்கு, பாவம் ராஜி காலையில தான் அசந்து தூங்குவா அவளை எப்படி டிஸ்டர்ப் பண்றதுன்னு கேக்குறாரு”
“அப்படியா வில்லு சொன்னாரு? எம்மேல எவ்வளவு லவ் பார்த்தீங்களா?” என்று வெட்கப்பட்டு சிரித்தார்.
“சரி தர்ஷை கூப்பிடவேண்டியது தானேன்னு கேட்டா.. ராஜி தனியா இருப்பால்ல, ஏதாவது எமெர்ஜென்சின்னா வீட்ல யாராச்சும் இருக்கணும் தானேன்னு சொல்லறாரு..”
“நிஜமாவா பாரு.. என் விதுக்கு எம்மேல….”.
“தெய்வமே.. உங்க லவ் ஸ்டோரிய கேக்க முடியாது.. அதுக்கு நாங்க ஜாகிங்கே போறோம்” என்று புலம்பிக்கொண்டே இருவரும் சென்றுவிடுவார்கள்.
விக்ராந்த் என்ன கேட்டாலும், எஸ் சார், ஓகே சார் மட்டும் தான். அதை தவிற வேற வார்த்தைகள் வராது இருவருக்கும்.
நடுவில் ஒரு முறை ஹர்ஷும் வர்ஷும் ஸ்ரீனிவாசனுடன் வந்து ராஜியை பார்த்துவிட்டு சென்றார்கள். அங்கே சீதா லட்சமிக்கு விரைவில் ஆப்பரேஷனிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
இங்க தான் இவ்வளவு பேர் இருக்கீங்களே, மீயை பார்த்துக்க? நாங்க அத்தை கூடவே ஒரு வருஷம் இருக்கிறோம் என்று கிளம்பிவிட்டார்கள்.
—————
அன்று காலை உணவிற்கு அனைவரும் டைன்னிங் டேப்பிள்லில் அமர்ந்திருந்தார்கள்.
சுட சுட ஹல்வா பூரியை கொண்டு வந்து வைத்தார் மது. நம்மூரில் விஷேஷம் என்றால் உடனே செய்யும் கேசரி வடை போல அங்கே ஹல்வா பூரி செய்வார்கள்.
விக்ராந்தின் பார்வையில் அவர் கை எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“மேம்சாப் தான் சொன்னாங்க” என்று அவர் கேட்காமலே, ராஜியை கை காட்டி உளறி கொட்டினார் மது.
ராஜியின் திருட்டு முழியை பார்த்து பாரிக்கும் வில்வாவிற்கும் சிரிப்பை அடக்க கஷ்டமாக இருந்தது.
“இல்ல விது.. இன்னிக்கு கருணாக்கு ரிசல்ட் வந்துச்சு.. ப்ர்ஸ்ட் அட்டெம்லேயே குரூப் எ எக்ஸாம் கிளியர் பண்ணிருக்கா.. அதை செலிப்ரேட் பண்ணலாமேன்னு தான்”
“அப்படியா, வெரி டேலன்டட் கேர்ள்” என்று மெச்சுதலாக கூறினார்.
“அப்பாடா” என்று வேக வேகமாக ஹல்வாவை எடுத்து அனைவருக்கும் பரிமாறினார்.
“டேய் வில்வா, பஞ்சாயத்தை ஆரம்பிக்கிறதுக்குள்ள சீக்கிரமா சாப்பிடனும் டா” என்று கூறிக்கொண்டே பாரி சுட சுட இருந்த ஹல்வாவை எடுத்து வாயிற்குள் போட்டு கொண்டான்.
நண்பனை தொடர்ந்து வில்வாவும் சூட்டை கவனிக்காமல் வாயில் போட்டு சுட்டு கொண்டான்.
“பார்த்து மெதுவா சாப்பிடு வில்லு” என்று அவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு அமர்ந்து தன் தட்டை பார்த்த ராஜி அதிர்ந்தே விட்டார்.
அவர் தட்டில் வைத்திருந்த ஹல்வாவை காணும்.
“கொஞ்சமா சாப்பிடட்டும் பப்பா” என்றான் தர்ஷ் அம்மாவிற்காக பரிந்து.
“ஏற்கனவே இப்படி சாப்பிட்டு, ஹாஸ்ப்பிட்டல் போய் பயம் காட்டினது எல்லாம் பத்தாதா?“, என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிஷத்துக்கு அட்வைஸ்களை அள்ளி தெளித்து கொண்டிருந்தார் மேஜர்.
“டேய் தர்ஷா.. எப்படியும் சார் போனதும், ராஜிம்மா சைலன்ட்டா ஹல்வாவை அபேஸ் பண்ணிருப்பாங்க.. தேவை இல்லமா பேசி இப்படி காதுல ரத்தம் வர வைக்கிறியே? இது நியாயமா?” என்றான் வில்வா சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு மெல்லிய குரலில்.
“டேய் பேசாம இருடா, நம்ம பக்கம் திருப்பி விட்டுடாத” என்று நண்பன் காலை மிதித்தான் பாரி.
விக்ராந்த் கடுமையாக முறைத்துக்கொண்டு டேபிளின் கீழே குனிந்து பார்த்தார்.
பாரி மிதித்து கொண்டிருந்தது அவரது காலை.
“ஆத்தி..நாங்க இல்லை” என்று அலறிக்கொண்டு நண்பர்கள் இருவரும் எழுந்து ஓடியே விட்டனர் மாடிக்கு.
அவர்கள் செயலில் விக்ராந்தே சிரித்துவிட்டார்.
“பாவம் பசங்க ரொம்ப பயம் காட்டுறீங்க..” என்றார் ராஜி.
“நான் எங்க பயம் காட்டுனேன், அவனுங்க தான் என்னை சிங்கம் புலி மாதிரி பார்த்துட்டு இருக்காங்க”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தர்ஷும் மேலே அவர்கள் பின்னே சென்று விட்டான்.
“சரி சரி, நான் கிளம்புறேன். எப்படியும் ஸ்வீட் சாப்பிடுவ.. கொஞ்சமா சாப்பிடு.. எனக்காக.. என்னால திரும்ப நீ கஷ்டப்படுறத பார்க்க முடியாது” என்றார் நெகிழ்வான குரலில்.
“இப்படி சொல்லிட்டு போனா என்னால சாப்பிட முடியாது” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டார் ராஜி.
“சரி சரி..” என்று அவரே அரை ஸ்பூன் ஹல்வாவை எடுத்து ராஜிக்கு ஊட்டி விட்டார்.
“இதுபோதும் ராஜி, கொஞ்சம் உடம்பை கவனமா பார்த்துக்கணும், நமக்காக, நம்ம பசங்களுக்காக.. ப்ளீஸ்..”
“எனக்கு தானே டயட்.. நீங்க சாப்பிடவே இல்லை” என்று அவருக்கு மல்லுக்கட்டி இரண்டு ஸ்பூன் ஊட்டி விட்டே அனுப்பினார்.
“ஒரு வாய் தான் பாரி சாப்பிட்டோம்” என்றான் வில்வா சோகமாக.
“அஞ்சு நிமிஷம் இருங்க.. பப்பா கிளம்பிடுவாரு.. ஒரே லவ்ஸ் கீழே..
முடிஞ்சதும் நாம கீழே போவோம்.. மீயே கூப்பிடுவாங்க” என்றான் தர்ஷ்.
“டேய் உங்க அப்பா போனதும் நாமளே கீழே போயிடுவோம்.. ராஜிம்மா சும்மாவே உங்க அப்பாவை நினைச்சு ட்ரீம்ஸ்ல தான் இருப்பாங்க.… இப்ப லவ்ஸ்ன்னு வேற சொல்ற.. அதனால் கூப்பிடறது கஷ்டம்..”
“வில்வா சொல்றதும் சரி தான் தர்ஷ்..”
“என்னடா இது சின்ன பாப்பா.. சம்திங் பிஷ்ஷின்னு மெசேஜ் போட்டிருக்கு.
என்னனு சொல்லாம காலேஜ் போயிருச்சே.”
“என்னன்னு தெரியாட்டி மண்டைய வெடிச்சும் டா”
“அதானே..”
“எனக்கு பசிக்குது, வாங்க கீழே போய் சாப்பிட்டுட்டு நீங்க யோசிங்க” என்று தர்ஷ் அவர்களை அழைத்து கொண்டு கீழே சென்றான்.
——————————-
error: Content is protected !!