Skip to content
Post Views: 5,387
அந்தியூரான் -16
சரியாக பத்து வருடங்கள் கழித்து..
மாற்றம் ஒன்று தான் மாறாதது போலும்.இந்த பத்து வருடங்களில் எத்தனை மாற்றங்கள், மக்களிடம் தான் எத்தனை முதிர்ச்சி.தள்ளாடிய வயதை தொட்டு நின்றாலும் சிவகாமியும், சிவராமனும் கம்பீரமாகவே வளம் வந்தார்கள்.இருவருக்கும் தங்களது மக்களை எண்ணி அத்தனை களிப்பு.
Advertisement
சிவகாமியின் மடியில் தணிகாவின் மகன் விரல் சூப்பிக் கொண்டு கை,கால்லை உதைத்துக் கொண்டு இருந்தான்.ஆறு மாதங்கள் இருக்கும் போலும்.குட்டி உருவமும் ,குண்டு கன்னமும் விசாலாட்சியின் நிறமும் கொண்டு தணிகாவை உரிந்து வைத்திருந்தான்.பொக்கை வாய் புன்னகை கொண்டு அனைவரையும் தன் பால் ஈர்த்து கொண்டிருந்தான்.
கந்தனும்,ராணியும் கொஞ்சம் பதட்டமாக இருந்தார்கள்.வீடு முழுக்க சிவகாமி, சிவராமன் பெற்ற பிள்ளைகள் அவர்களது வாரிசுகள், அவர்களது விழுதுகளென மூன்று தலைமுறையும் நிறைந்து நிற்க.நடுக் கூடத்தில் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் குமாரி. பள்ளி படிப்பை முடித்து கொண்டு,துணிகளை சார்ந்த படிப்பும்,தற்போது தையல் கற்று கொண்டிருக்கிறாள்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சரியாக இரண்டு மாதத்திற்கு முன். குமாரியை ஒரு விழாவில் பார்த்துவிட்டு தூரத்து உறவில் அத்தை முறை உள்ள தனம் என்பவள் பெண் கேட்டு வைத்திருக்க.வீட்டில் உள்ளவர்கள் பேசி விசாரித்து, இதோ பூ முடிக்க வந்திருக்கிறார்கள்.குமாரிக்கு நேற்றைய இரவு தான் விசாலாட்சி மூலம் விடயம் சொல்ல பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரி இப்போது பொறுப்பான பெண்ணாக மாறி குடும்ப பொறுப்பையே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து நின்றாள்.அவளது பேச்சும், பக்குவமும் அவ்வீட்டு பெரியவர்களையே ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.அதுவும் போக விசாலாட்சிக்கு வாழ்க்கை தொடக்கம் பிரசவம் வரை அவளை தாயாகத் தாங்கி நின்றது குமாரி தான்.
Advertisement
அது மட்டுமா தந்தையை சரி கட்டி விசாலாட்சியுடன் வாழ வைத்ததில் பெரும் பங்கு குமாரிக்கு தான் உண்டு.அன்றைய பேச்சுக்கு பிறகு சிவகாமியை நச்சரித்து விசாலாட்சி பிறந்தகம் சென்று நிற்க.வழமை போல் சண்டை கட்டி நின்றான் அமுதன்.
யாரும் எதிர்பாரா நிகழ்வாக அவனுக்கும், குமாரிக்கும் அத்தனை பெரிய வாக்கு வாதம்.விசலாட்சியே மிரண்டு தான் போனாள்.
வார்த்தைகள் முத்தி இருவரும் வயது வித்தியாசம் பாராமல் முட்டி கொண்டு நிற்க.முத்துவும், காந்திமதியும் தான் இடையில் புகுந்து பெரும் பாடு பட்டு இருவரையும் விலகி விட்டனர்.மரகதம் அமுதனை அடக்கி மீண்டும் விசாலாட்சியை புகுந்தகம் அனுப்பி வைத்து விட்டார்.
அன்று வந்தவள் தான் விசாலாட்சி இன்னும் பிறந்தகம் செல்ல வில்லை.அவளை பார்க்க வேண்டும் என்றால் கூட மரகதம் ,முத்து ,காந்திமதி மூவரும் இங்கு வந்துதான் பார்த்துவிட்டு செல்வார்கள்.அமுதன் பார்க்க வேண்டும் என்றால் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு வர சொல்லி பார்த்துவிட்டு செல்வான்.
இதற்கு இடையில் பெரும் புரிதல் கொண்டு தங்களது வாழ்க்கையைத் தொடங்கியிருந்தனர் விசாலாட்சி-தணிகாசலம் தம்பதியினர்.எந்த நொடியில் இவர்களது நெருக்கம் அதிகமானது என்று அவர்களுக்கே தெரியவில்லை.இதோ அவர்களது அன்புக்கு சான்றாக தணிகாசலத்தின் மகன் வெற்றி வேல் கையில்…
தாய்மையின் பூரிப்பு மின்ன பெண்ணின் தாயாக முன் நின்றாள் விசாலாட்சி. பேரிளம் பெண்கள் அன்று தவறிய தருணங்களை எண்ணி இன்று சரி செய்து நின்றனர் போலும்.
“பொண்ணை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு மேல் கொண்டு ஆக வேண்டியதை பேசலாம்” உறவில் மாப்பிள்ளையின் பெரியம்மா பேச்சை தொடங்க.
சிவராமன், “நல்லது நீங்களே சொல்லுங்க என்ன செய்யனும்?”
கந்தன், “என் பெண்ணோடு பொண்ணு ஒரே பேத்தி அவளுக்கு நிறைக்க செஞ்சுடுவோம்”
“எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நீங்க உங்க பெண்ணுக்கு செய்றதை செய்ங்க” என்றார் மாப்பிள்ளையின் தந்தை.மாப்பிள்ளையும் ஈரோட்டில் துணி கடை தான் வைத்திருந்தான்.
“அப்புறம் என்ன நிச்சியம் பண்ண தோது பார்த்து தேதி குறிச்சிடலாம்” சிவகாமி சொல்ல. அதுவரை தலையைக் குனிந்து அமர்ந்திருந்த குமாரி வெடுக்கென நிமிர்ந்து விசாலாட்சியைப் பார்க்க.அவ்ளோ உதட்டில் சிரிப்பை தவழ விட்டு கண்களால் மிரட்டி வைத்தாள்.அவளது பார்வையைக் கடுப்பாக உள்வாங்கித் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் குமாரி.
அதன் பின் அவளுக்குப் பூ வைத்து பேசி விட்டு, மேலும் ஒரு மணி நேரம் சென்றே அவர்கள் விடைபெற.அதுவரை அமைதியாக தன்னைக் கட்டு படுத்தி வைத்திருந்த குமாரி வெடிக்கத் தருணம் பார்த்து நின்றாள்.அவர்களை வழியனுப்பி விட்டு வந்த தணிகாசலம்.
மகளிடம் வந்து அமர்ந்து கொண்டு அவளை வாஞ்சையாக கண்ணில் நிரப்பி தனது நெஞ்சில் சாய்த்து கொள்ள.அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம், இயலாமை கண்ணீராக அவன் நெஞ்சை சுட்டது.
தன் நெஞ்சில் ஈரம் உணர்ந்து, “ஏய்! அம்மாடி!.. குமாரி எதுக்கு அழுகை?” அவளது முகத்தை நிமிர்த்தி தன்னை காண செய்ய.இன்னும் அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு அதில் முகத்தை மறைத்துக் கொண்டு அழுக தொடங்கினாள்.
கந்தன், “அம்மாடி பாப்பா! என்னத்துக்கு அழுக? தங்கமே!” பேத்தியின் பிரிவை எண்ணி அவருக்கும் கலக்கம் தான் இருந்தும் அவளைத் தேற்ற எண்ணி கேட்க.
“ஐயோ! போச்சு பிசாசு தொடங்கிடுச்சு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே” குமாரியின் தற்போதைய மன நிலையை எண்ணி கலக்கம் கொண்டால் விசலாட்சி.
தேம்பி தேம்பி அழுதவளை தேற்ற முடியாமல், “குமாரி அப்பாவுக்கும் கஷ்டமா இருக்குடா என்னான்னு சொல்லு? கல்யாணத்தை எண்ணி பயமா இருக்கா? அப்பாவை விட்டுப் போகப் போறம்னு எண்ணி வைக்கிறியா?” பாசத்தால் உருகி நின்று தணிகாசலம் கேட்க.
அவன் பெத்த தவப் புதல்வியோ படு தெளிவாக, “அதுக்கெல்லாம் பயம் இல்லப்பா எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணி தானே ஆகனும். உங்களை விட்டு போயி தானே ஆகணும்” பேத்தியின் பேச்சில் சிவகாமி பட்டெனச் சிரிக்க.
தணிகாசலம் திருத் திருவென விழித்து, “அப்புறம் என்னத்துக்கு இந்த அழுகை?”
“எனக்குக் கல்யாணம் பிரச்சனை இல்ல, மாப்பிள்ளை தான் பிரச்சனை” என்றதும் பெரியவர்கள் கொஞ்சமாக விழித்துக் கொண்டனர்.
அதுவரை சிரிப்புடன் இருந்த சிவகாமி, “குமாரி என்ன சொல்ற? நேத்து விசாலாட்சிக்கிட்ட நீ சரினு சொல்லவும் தானே.அவங்க கிளம்பி வந்தாங்க இப்போ என்ன?”
“நான் விசா கிட்ட சரினு சொல்லவே இல்ல பாட்டி. புளுகுனி என்னை மிரட்டி வச்சு, உங்க கிட்ட பொய் வச்சுட்டா ராட்சசி.வர, வர இந்த சின்னம்மா கொடுமை தாங்கல அப்பத்தா ” என்றதும் பெரியவர்கள் அதிர்ந்து ஒரு சேர விசலாட்சியைப் பார்க்க.
அவ்ளோ பல்லை கடித்துக் கொண்டு, “எல்லாரும் இருக்காங்கன்னு பார்க்க மாட்டேன் பார்த்துக்கோ கொன்னுடுவேன் ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வாழற வழியைப் பாரு”
“முடியாது” வழமை போல் எதற்கு இந்தத் தர்க்கம் என்று புரியாது முழித்த தணிகாசலம்.
“குமாரி இது விளையாட்டு விஷயம் இல்லை. என்ன பண்ணிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்” இருவரையும் கடிந்து கொள்ள.
“அப்பா எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்” மகளின் வார்த்தையைக் கூர்ந்தவாறு தனது தந்தையைப் பார்க்க, சிவராமனும் மகனை தான் பார்த்தார்.
சிவகாமி, “சரி ஏன் வேணாம்?”
“அமுதன் மாமாவை பிடிச்சிருக்கு அதனால வேணாம்” பட்டென விஷியத்தை போட்டு உடைத்தவளை அதிர்ந்து பார்த்தனர் பெரியவர்கள்.
“எத்தனை தைரியம் பாரேன் இவளுக்கு. நான் அத்தனை தூரம் சொல்லியும் என்ன காரியம் பண்ணி வைக்கிறா” முனகி கொண்டே குமாரியை முறைத்து கொண்டிருந்தாள் விசாலாட்சி.
எதையும் மனதில் வைத்திருக்கும் பழக்கமே குமாரிக்கு கிடையாது.எண்ணியதை எல்லாம் பேச கூடிய சுபாவம்,தணிகாசலத்தைக் கொண்டு பயமறியா அரிவை அவள்.தந்தை குணம் என்பதால் பேச்சில் ஒருவித அலட்சியமும், பிடிவாதமும் நிறைந்தே இருந்தது.
“என்ன? என்ன பேசுற நீ? உனக்கும் அவனுக்கும் எப்படி பழக்கம்” ராணி பதறிக் கொண்டு வர, அவளை தொடர்ந்து தங்கைகள் குமாரியை பிடித்துக் கொண்டனர்.
“விசாலாட்சி என்ன இது?” அழகி கொஞ்சம் கோபமாகவே தம்பி மனைவியை கடிய,
“அண்ணி எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. அதுவும் போக இரண்டு முறை எங்க அண்ணனை பார்த்திருப்பா அவளோ தான்.நீங்க எண்ணி வைக்கிற மாதிரி எதுவும் இல்லை.பார்க்க போன இவளை கண்டாலே அண்ணன் ஒதுங்கி போயிடும், எங்க அண்ணன் அவ கூட பேசுனது கூட இல்லை.
நேத்து பெண் பார்க்க வராங்க நான் சொல்லவும் தான். எனக்கு விஷியத்தை சொன்னா நான் அப்பவே முடியாதுனு மிரட்டி தான் வச்சேன். என்னையும் என் குடும்பத்தையும் இதுல இழுக்காதீங்க” குமாரியை விட தெளிவாகப் பேசியவளை உருத்து விழித்தான் தணிகாசலம்.
அவனது பார்வை உணர்ந்து, “எனக்கு உண்மைக்கும் தெரியாதுங்க பேசி பழக்கம் வந்திருந்தா கூடச் சரிங்கலாம்.அதுவும் இல்லை தீடீர்னு சொல்லுறா நான் என்ன செய்ய?” மனைவியின் பேச்சும் சரிதான் என்பது போல. அவனது பார்வை மீண்டும் மகளிடம் செல்ல,
“அப்பா பார்த்து பேசி வச்சாதானு இல்லை அமுது மாமாவை ரொம்ப புடிக்கும், காரணம் கேட்டா விசாவை கொண்டு பிடிக்கும் அதுக்கு மேல தெரியாது”
“அம்மாடி இதெல்லாம் சரி வராதுடா” அன்பு அமைதியாகப் பேத்திக்கு எடுத்து சொல்ல.
“அப்பாக்கும் விசாக்கும் கூட இதையே தானே சொன்னீங்க. பாருங்க அவங்க நல்ல இருக்காங்க தானே இப்போ தம்பி வேற வந்திருக்கான்” என்றவளை சபையில் கடிந்து கொள்ள முடியாமல் பல்லை கடித்தார்கள் அம்மாச்சிகள் குழு.
கந்தன், “பாப்பா இப்போ என்ன செய்யலாம்? அவருக்கு உன் மேல விருப்பமோ?” முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் பேத்தியை ஆழம் பார்த்தார்.
அவளோ, “தாத்தா விசா சொன்ன மாதிரி நான் அவரை மூணு தடவை பார்த்திருப்பேன். அதுல இரண்டு தரமும் அவருக்கும் எனக்கும் பயங்கரச் சண்டை.மத்தபடி பார்த்து பேசி பழகி இது எதுவும் இல்லை” இவ தெளிவுல தீய வைக்க இப்படி சிக்க வச்சுட்டாளே.பெரும் கடுப்பாகக் குமாரியை முறைத்து கொண்டிருந்தாள் விசாலாட்சி.
“சரி குமாரி! இப்போ அப்பா அவனை வேணான்னு சொன்னா?” கேள்வியாகத் தணிகாசலம் கேட்டு வைத்து. மகளின் முகத்தை ஆழ்ந்து பார்க்க.
“எனக்கும் கல்யாணம் வேணாம்” சிறுது யோசனையின்றி பேசிவிட்டு வெடுக்கென எழுந்து செல்ல. செல்லும் சிறியவளை ஆழ்ந்து பார்த்தவன், படக்கென எழுந்து வெளியில் நடக்க.அவனைத் தொடர்ந்து அனைத்து ஆண்களும் வெளியில் சென்று விட்டனர்.
ஆண்கள் சென்றதும் நாத்தனார்களின் பார்வை விசாலாட்சி மேல் படிய.அவர்களை திசை மாற்றும் பொருட்டு, “ராணி கொஞ்சம் சங்கதிய ஆற போடு குமாரி கிட்ட பேசுவோம்.அவ தான் ரொம்பத் தெளிவா சொல்றாளே.இப்போ பேசி வச்சா இன்னும் முரண்டி நிற்பா”
தாயின் பேச்சில் கடுப்பாகிய அழகி, “இப்போ என்ன? உங்க மருமகளை ஒன்னும் சொல்லிட கூடாது அதானே? அதுக்கு தானே அவசரமா பேசுறீங்க?”
“பேச்சை மாத்தி விடுறதை பாரேன்” என்றால் அன்பு.
ராணி, “ம்மா! ஒரே பேத்தி பொண்ணைத் தான் பறி கொடுத்து நிக்கிறேன்..” மேலும் என்ன பேசியிருப்பாளோ கை நீட்டி மகளின் பேச்சை தடுத்த சிவகாமி.
“உன் பேத்தி தாண்டியம்மா கூத்து கட்டுறது. இப்போ என்ன உன் தம்பி பொண்டாட்டிகிட்ட பேசணுமா? பேசு தாராளமா பேசு,அதுக்குப் பிறகு வர விளைவுகளை நீங்க தான் சமாளிக்கனும்.என்கிட்ட கொண்டு வர கூடாது.என் மனசரிய இந்த இரண்டு வருசமா தான் விசாலாட்சி கூட உன் தம்பி குடும்பம் நடத்துறான்.அதையும் மனசுல வச்சுக்கிட்டு பேசுங்க” என்றவர் கோபமாகத் தனது அறைக்குச் சென்று விட்டார்.
அவர் சென்றதும் பேரிளம் பெண்களின் பார்வை விசாலாட்சி மேல் படிய “இங்க பாருங்க அத்தாச்சி! எல்லாத்துக்கும் பொதுவா சொல்லிக்கிறேன். உங்க ஆதங்கம் கோபம் எனக்கும் புரியுது, ஆனா அதுக்குக் காரணம் நாங்க இல்லை.அப்படியும் உங்க மனசு சந்தேக பட்டுச்சுன்னா எங்க அண்ணனை வச்சு நேரா கேளுங்க.இல்லையா இங்கையே வர வச்சு பேசிடுவோம்”
“பேசி தான் ஆகணும் தணிகா வரட்டும் அவன் கிட்ட சொல்லிட்டு தான் நாங்க செய்யனும்” நான் உன் குடும்பத்தோடு பேச தான் போறேன் என்பது போல் ராணி பேச.விசாலாட்சி பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.
“சரி பார்ப்போம் விடுங்க” படக்கென தனது அறைக்குள் செல்ல.
“வெடுக்கு வெடுக்குன்னு தான் பேசுறது பெரியவங்கன்னு வச்சு பாக்குறதே இல்லை” விசாலாட்சியின் பேச்சை எண்ணி வைரம் குறை பாட.
“அவளை பார்த்தே இந்தச் சின்னக் குட்டியும் நறுக்குன்னு தான் பேசி வைக்குது” இப்போது ராணியும் சேர்ந்து கொண்டார்.
“விடுங்க க்கா! அப்பா, தம்பி, மாமாங்க எல்லாரும் என்ன பேசுறாங்கனு பார்ப்போம். அப்புறம் விசாலாட்சி குடும்பத்தை வர வச்சு பேசிடலாம்” என்று தமக்கையைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.
எண்ணியது எல்லாம் நடக்குமா என்ன? பல வருடங்களாக நீயா? நானா? என்று கண்ணனுக்குத் தெரியாத பனி போரை நடத்தி வரும் மாமனும், மச்சானும் இப்போது நேர் கொண்டு நிற்பதை என்னவென்று சொல்வது.
கனவில் கூட இருவரும் எண்ணாத நிகழ்வை நினைவில் குமாரி அழகாகத் தொடங்கி வைத்தாள்.
விருப்பம் காதல் என்பதை தாண்டி இந்த அரிவை என்ன தேடியது என்பது தான் புதிர்..
error: Content is protected !!