Skip to content
Post Views: 5,077
அந்தியூரான் – 17
தன் முன் அமர்ந்திருக்கும் மகளை என்ன தான் செய்வது என்று பார்த்து கொண்டு இருந்தாள் விசாலாட்சி.இருவரும் வீட்டுக்குப் பின்னில் அமர்ந்திருந்தனர்.குமாரிக்கு பக்கவாட்டில் சிவகாமியும்,சிவராமனும் அமர்ந்திருந்தார்கள்.
நேற்றைய தினத்துக்குப் பிறகு பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு.சற்று முன் தான் வீட்டு பெண்கள் ஐவரும் பிறந்தகம் சென்றார்கள்.பெரும் வாக்குவாதம் செய்து மகள்களை அனுப்பி வைத்து விட்டு தளர்ந்து அமர்ந்திருந்தார் சிவகாமி.
Advertisement
தணிகாசலத்தின் எண்ணம் வேறு என்னவென்று புரியவில்லை.இரவின் தனிமையில் கணவன் தன்னிடம் பேச கூடும் என்று எண்ணிய விசாலாட்சி அவன் முகம் பார்த்து நிற்க.
Advertisement
அவனோ வழமை போல் தனது மகனிடம் விளையாடி விட்டு உறங்கி விட்டான்.விசாலாட்சி தான் அவனது மனம் பிடிபடாமல் விடிய, விடிய விழிந்திருந்தாள்.அதனையெல்லாம் யோசித்து கொண்டிருந்த விசாலாட்சியை கலைத்தது குமாரியின் குரல்
Advertisement
“என்ன அப்பத்தா கூப்பிட்டு வச்சு எல்லாரும் உம்முன்னு இருக்கீங்க? பேசத்தானே கூப்பிட்டிங்க?” என்றவளை பார்த்து பல்லை கடித்த விசாலாட்சி.
Advertisement
“இந்த ஓணக்கமெல்லாம் நல்லா பேசு”
“ப்ச்! விசா நான் உங்கிட்ட பேசல”
“ஏய்!” என்று விசாலாட்சி சீற.
“நிறுத்துங்கடி இரண்டு பேரும் சண்டை கட்ட நேரம் காலமே கிடையாதா? எப்போ பாரு மாமியார், மருமக கணக்கா தான் மல்லுக்கு நிக்கிறது” பெரும் எரிச்சலில் பல்லை கடித்த சிவகாமி தனது பேத்தியை பார்த்து.
“இங்க பார் குமாரி? நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்லை.நீ பண்ணிருக்கக் காரியம் உங்க அம்மாக்கு தான் கெட்ட பெயரை வாங்கித் தரும்.பார்த்த தானே உன் அம்மாச்சிக்காரிங்க என்னவெல்லாம் பேசுனாளுக? ஒருத்தியாவது என்னால சமாளிக்க முடிஞ்சுதா? எனக்கே இப்படின்னா உன் அம்மாளுக்கு அவளுக எல்லாரும் நாத்தனாருங்க அவ எப்படி சமாளிப்பா சொல்லு?”
“அவங்க புரியாம பேசுறாங்க அப்பத்தா நான் அமுதன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன இருக்கு? பார்க்க போனா நல்லவர், தெரிஞ்சவர் எல்லாத்துக்கும் மேல விசா அண்ணன் இதுக்கு மேல என்ன வேணும்” என்றவள் பேச்சில் பெரியவர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொள்ள.
விசாலாட்சி குமாரியை வியப்பாகப் பார்த்து வைத்தால்.இந்த பிடித்தம் எப்படி? என்பது தான் அவளது வியப்பே. அதே எண்ணம் தான் சிவகாமிக்கு போலும் வாய் விட்டே கேட்டார், “உனக்கு எப்படி அமுதன் தம்பி கூடப் பழக்கம் அதுவும் கட்டிக்கிற அளவுக்கு?”
“என்ன பழக்கம்? நீங்க கேட்கவர்றது எனக்குப் புரியல அப்பத்தா”
“நீயும், அமுதனும் பார்த்து பேசி பழகாம எப்படி விருப்பம்? அதைக் கேக்குறேன்”
“ப்ச்! விசா அவங்க அம்மா வீட்டுக்கு போயே பல வருஷம் ஆகுது. இதுல நான் எங்க அவரை பார்த்து பழக”
குமரியின் பேச்சில் அதிர்ச்சி கொண்ட சிவகாமி “அப்புறம் எப்படி?”
“அப்பத்தா எனக்கு விசாவை ரொம்ப புடிக்கும். விசாவை கொண்டு அமுதன் மாமாவை புடிக்கும்.மூணு வாட்டி அவர் கூடப் பேசியிருக்கேன் அதுல இரண்டு முறையும் எனக்கும் அவருக்கும் சண்டை தான்.இருந்தும் அவரைப் புடிக்கும் பொறுப்பு,பொறுமை,கோபம் இதெல்லாம்”
கண்ணில் கனவு மின்ன சொன்ன குமாரியை விசாலாட்சி கலவரமாகப் பார்க்க. அதுவரை அதிர்ச்சில் இருந்த பெரியவர்கள் அவளது பேச்சில் சிறு இளக்கம் கொடுக்க அதனை ஒழித்து நின்றனர் பெரியவர்கள்.அதுவரை பேத்தியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த சிவராமன்.
“நீ உறுதியா இருக்கியா பாப்பா?” குமாரியை பார்த்து நேரடியாகச் சிவராமன் கேட்க.எழுந்து அவரது அருகில் அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பற்றிக் கொண்ட குமாரி.
“ஆமா தாத்தா எனக்கு அவரை ரொம்ப புடிக்கும் கட்டுனா நல்லா இருப்பேன்னு தோணுது “
“அப்போ எங்க கிட்ட பேசுன மாதிரி உங்க அம்மாச்சி, தாத்தா கிட்ட பேசு. பேசிட்டு சொல்லு நானும் தணிகாவும் கோவை போறோம்” என்றதும் வாய் கொள்ளா புன்னகையுடன் அவரைக் கட்டி கொண்ட குமாரி.
“ரொம்ப நன்றி தாத்தா கண்டிப்பா நாளைக்கே அம்மாச்சி, தாத்தா கிட்ட பேசுறேன்” என்றவள் துள்ளி குதித்து மாமனார் பேச்சை கேட்டு அதிர்ந்து அமர்ந்திருந்த விசாலாட்சியை வேண்டுமென்றே இடித்து விட்டு ஓடினாள்.
அவளது சேட்டையில் பெரியவர்கள் இருவரும் சிரித்துக் கொள்ள.விசாலாட்சி கலவரமாக ,”என்ன மாமா? அவ கிட்ட இப்படி சொல்லி வைக்கிறீங்க?”
“ஏன்மா உனக்கு இதுல இஷ்டம் இல்லையா என்ன?”
“ஐயோ! என் விருப்பு வெறுப்பு இருக்கட்டும் உங்க மகனும், என் அண்ணனும் இதுக்குச் சம்மதிக்கணுமே?”
“என்ன சொல்லற நீ?”
“என் விஷியத்துல அண்ணன் ரொம்பக் கறாரா பேசுச்சுனு இப்பவரை என்னை அம்மா வீட்டுக்கு விடாம அவர் கூட மல்லுக்கட்டிட்டு இருக்கார். உங்க மகன் எங்க அண்ணன் அவருக்கு மேல பண்ணும். இந்த லட்சணத்துல இவர் எங்க அண்ணனுக்கு மாமனார் ஆனா?…” கண்ணை மூடி கொண்டு தலையை உலுக்கியவளை பார்த்து சிவராமன்.
“என்னம்மா புதுசு, புதுசா சொல்ற?
“எல்லாமே பழசு தான் மாமா. அவருக்கும், எங்க அண்ணனுக்கும் சுத்தமா ஆகாது. இவளை கண்டாலே அண்ணே முகம் குடுத்து பேசாது. இவ பேச்சை நம்பி நீங்க எதுவும் செய்ய வேண்டாம் மாமா.இதெல்லாம் சரி வராது.”
“விசாலாட்சி எதுக்குப் பயந்துக்குற கொஞ்சம் பொறு பேசி பார்ப்போம் குமாரி பிடிவாதம் தான் தெரியுமே. ஒரு வேளை நீ சொல்றது போல அமுதன் குமாரியை வேணாம் சொல்லிட்டா பிறகு பேசிக்கலாம்” என்ற மாமியாரை கலவரமாகப் பார்த்தவள்.
“அத்தை நான் சுயநலமா இருக்கேன்னு எண்ணி வைக்காதீங்க.உங்களுக்கே தெரியும் தானே அவர் கூட இப்போ தான் வாழ தொடங்கிருக்கேன்.இந்த பிரச்சனையால திரும்ப அவருக்கும் எனக்கும் ஏதாவது உரசல் வந்தா என்னால அதை தாங்க முடியாது அத்தை” என்றவள் கண்ணில் மெல்லிய நீர் படலம்.
விசலாட்சியின் எண்ணம் பிடிபடப் பெரியவர்கள் இருவரும் அவளைச் சமாதானம் செய்தனர்,”அம்மாடி நாங்க இருக்குற வரை உன்னை அப்படி விட மாட்டோம் புரியுதா? தேவை இல்லாத பயம் வேணாம்.எங்களை மீறி எதுவும் நடக்காது.
போ, போயி பிள்ளையைப் பாரு” என்றதும் அதற்கு மேல் பேச முடியாமல் அரைமனதாக விசலாட்சி உள்ளே செல்ல.அவள் செல்லும் வரை அமைதியாக இருந்த சிவராமன்.
“என்ன சிவகாமி இது? மருமக பொண்ணு இப்படிச் சொல்லுது?”
“நம்பக் கண்ணுல இந்தச் சங்கதியெல்லாம் படல பாருங்க”
“எனக்கும் அதான் புரியல, சரி விடு எல்லாம் நலத்துக்குத் தான் பாப்பா பேசிட்டு சொல்லட்டும் நீயும் உன் பொண்ணுங்க கிட்ட பேசு எல்லாம் சரி வந்தா நான் முத்து கிட்ட பேசுறேன்”
“அது என்ன உன் பொண்ணுக கிட்ட பேசு? ஏன் அவளுக உங்களுக்கு யாரு? நீங்க உங்க மகளுங்க கிட்ட பேச வேண்டியது தானே? வயசாகி ஒவ்வொருத்தவளும் பேரன், பேத்தி எடுத்துட்டாளுக இன்னும் என்கிட்ட வம்புக்கு தான் நிக்கிறாளுங்க.
அதுவும் உங்க கடைசிப் பொண்ணு என்னை ரொம்பத் தான் பேசுறா.விசாலாட்சிக்கு நான் ரொம்பச் சலுகை தர்றேனாம். அவ மேல தப்பில்லன்னு தெரிஞ்சும் அவளை நான் கடிஞ்சு பேச முடியுமா? இது என்னங்க நியாயம்?
விசாலாட்சி மீது தவறு இல்லை என்பதை அறிந்து தான் சிவகாமி அவளுக்குத் துணையாகப் பேசி நின்றது.அதுவே பெண்களுக்குப் பெரும் கோபத்தைக் கொடுத்தது.
“இதெல்லாம் வழக்கத்துல இருக்குறது தான் சிவகாமி. நான் சொல்லி உனக்கு தெரியனுமா? நாத்தனார் குணத்தை உன் பொண்ணுங்க காட்டி நிக்குதுங்க.
ஏற்கனவே அதுக்குங்க பொண்ணை தணிகாசலத்துக்கு எடுக்கலன்னு கோபம். இதுல பேத்தியும் இந்தப் பக்கமே சாய அதுங்களால தாங்க முடியல. வார்த்தையைக் கொட்டி தனிச்சுக்குதுங்க விடு சரியா போகும் நமக்கு இப்போ பேத்தி தான் முக்கியம்”என்றவர் மகள்களை சரியாக நாடி பிடித்தார்.
“என்னமோ எல்லாம் சரியா நடக்கணும்” என்ற புலம்பலுடன் சிவகாமி எழுத்து செல்ல.பெரும் யோசனையாக அங்கே அமர்ந்து கொண்டார் சிவராமன்.
மீண்டும் ஒரு பஞ்சாயம் அதுவும் பேத்தியை கொண்டே. இதனை யாருக்கும் மனம் நோகாமல் முடிக்க வேண்டும்.வீட்டின் பெரியவராக அனைவரையும் அரவணைக்க எண்ணினார், ஆனால் அது சாத்தியமா என்ன? ஒருவருக்கு நியாயம் செய்தால் ஒருவர் காயப்படுவது உறுதி என்ற நிலையில், எப்படி இதனைக் கையாளுவது? என்று யோசிக்க தொடங்கி விட்டார்.
எத்தனை யோசித்தாலும் பேத்தியின் பக்கமே மனம் சாய.அவளது விருப்பத்தை முன் நிறுத்தி செயல் பட முடிவு கொண்டார் சிவராமன்.
இரவின் தனிமையில் இன்றும் கணவனது முகம் பார்த்து நின்றாள் விசாலாட்சி. வெகு நேரம் மனைவியின் இமைக்காத பார்வை தணிகாசலத்தை தூண்ட மகனை மடியில் வைத்து கொஞ்சி கொண்டு இருந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து.
“இப்படி பார்த்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? என்ன பேசணுமோ பேசு”
“நான் பார்க்குறேனு இப்போதான் தெரியுதா உங்களுக்கு?”
“ப்ச்! பேச்சை வளர்க்காத விசா” சிறு கண்டிப்புடன் சொல்ல அமைதியாகி விட்டாள்.
“என்ன சொல்லு?”
“குமாரி…” விசலாட்சி தொடங்கும் முன்னே அதனை தடுத்த தணிகா.
“நீ இதுக்குள்ள வர வேணாம் எனக்கு என் மகளையும் தெரியும், மனைவியையும் தெரியும் இந்த விஷியத்தை நான் பார்த்துக்குவேன்” என்றதும் இன்னும் பயம் வர.
“அண்ணே மேல” மீண்டும் தொடங்கியவளை அழுத்தமாக பார்க்க.
“இங்க பாருங்க என்னை பேச விடுங்க.என் பக்கத்தை நான் சொல்லனும். இந்த மூணு வருசமா தான் உங்களுக்கு என்னை கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கு.உங்க கூட வாழ்றதுக்கு முன்னாடி எப்படியோ,ஆனா இப்போ உங்களைப் பிரிய முடியாது” என்றவள் பேச்சில் சிறு புன்னகை பிறக்க முயன்று அடக்கி கொண்டான்.
“அதுனால நான் பேசுகிறேன் என் பக்கமிருந்து சில விளக்கம் வச்சாத்தான் எனக்கு நிம்மதி”
“சரிடி சொல்லு?”
“குமாரி பேச்சை கேட்டு நீங்க அண்ணனை தப்பா எதுவும் யோசிக்காதீங்க. எங்க அண்ணனுக்கு கல்யாணத்துல நாட்டமே இல்லை.அம்மா,மாமா, அத்தை எல்லாரும் அவருக்குப் பொண்ணு பார்த்துட்டு தான் இருக்காங்க, ஆனா அதுக்குப் புடிக்க மாட்டேங்குது.தொழில், வேலைன்னு இதுலையே உழண்டு கிட்டு கிடக்கு என்றவள் கணவன் முகம் பார்க்க..
“என்னடி பேசு?”
“ப்ச்! அவுளோதான்”
“இதைப் பேச தான் இரண்டு நாள் அந்தப் பார்வை பார்த்தியா?”
“அப்போ நான் தவிக்கிறது தெரிஞ்சே தெரியாத மாதிரி இருந்து இருக்கீங்க அப்படி தானே”
“அப்படியே தாண்டி விசாலாட்சி”
“அதானே என்னைப் பதட்ட படுத்தி, அழ வச்சு பாக்குறதுல அப்படி ஒரு ஆனந்தம் பொண்ணுக்கும், அப்பாக்கும்”
“ப்ச்! அதெல்லாம் இல்லை நீ பயந்து நிக்குறது ஒருவித போதை பார்க்க நல்லா இருக்கும்,குமாரி கூடச் சொல்லுவா விசா அழுதா கோவமா இருந்தா ரொம்ப அழகுன்னு” என்றவன் கண்ணில் குறும்பு மின்ன
அவனது பேச்சில் கோபம் உச்சிக்கு ஏறி, அவனை முறைத்துக் கொண்டே விலகி செல்ல போனவளை தடுத்து தன்னுடன் அமர்த்தி கொண்டு மெல்லமாக அனைத்து கொண்டான் பெண்ணுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.
“கண்டதையும் எண்ணி கண்ணை கசக்காதடி. நீ இந்த விஷியத்துக்குள்ள வராத என்ன நடந்தாலும் வேடிக்கை மட்டும் பாரு” என்ற கணவனை அண்ணாந்து பார்த்து,
“அது எப்படி முடியும்? ஒரு பக்கம் நீங்க, இன்னொரு பக்கம் அண்ணன், என் தவிப்பு புரியுதா? நான் யாருக்கு பேசினாலும் பிரச்சனை தான். எனக்கு இரண்டு பேரும் முக்கியம்”
“புரியுது உங்க அண்ணனும் சரி, நானும் சரி உன்னை இதுக்குள்ள இழுக்க மாட்டோம்.அதே போல நீயும் இடையில வராத” என்றவன் பேச்சில் இன்னும் கலவரம் ஆனது.
இதற்கு மேல் பேசினால் கண்டிப்பாக தணிகாசலம் பேச்சை தொடர மாட்டான்.அவனுக்கு நீண்ட பேச்சுக்கள் என்றால் ஆகாது.தேவைக்கு,தேடலுக்கு,தொழிலுக்கு,மட்டுமே அளவாகப் பேசி நிற்பவன்.இந்த கொஞ்ச ஆண்டுகளாகத் தான் காதல் கதை கொஞ்சம் நீளமாக பேசி நிக்கிறான்.
அவனது குணம் கண்டவளால் பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.கணவன் இப்படியென்றால் தனது அண்ணனை சொல்லவே வேண்டாம்.இதனை எல்லாம் எண்ணி தன்னுள் மூழ்கி போனவளை உலுக்கி.
“இப்போ தானே சொன்னேன் எதையும் யோசிக்காதன்னு. எல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்குவோம்” என்றவன் அவளை இறுக்க அணைக்க.கணவன் பேச்சில் சிறு தளர்வு பிறக்க, அவனை பார்த்து கொண்டே அவளும் கணவனை இறுக்கி கொண்டாள்.
error: Content is protected !!