Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 16 2

வைஷு நடப்பதை பார்த்திருந்தாள்.. சௌசன்யாவை கணவன் ஒரு பக்கம், தம்பி ஒரு பக்கம், என்று அவளை தாங்குவதை பார்த்தவள், அண்ணி ரொம்ப குடுத்து வச்ச வங்க என்று தோன்றியது.. திடிர் என்று அவளின் தம்பி பத்ரி ஞாபகம் அவளுக்கு  வர.. எத்தனை  மாசமாகியது அவனை பார்த்து  என்று மனதில் நினைக்க..

தன்னை , வைஷு, வைஷு என்று அழைக்கும்  தம்பியை பார்க்க மனம் ஏங்கியது..



Advertisement

சௌசன்யாவுக்கு பெய்ன்  அதிகமாக வர.. டெலிவரி அறைக்கு அவளை அழைத்து சொல்லும் முன்,, கணவனின் கையை இறுக்கமாக பிடித்திருந்தவள்,,  “ஆதி பாவா, பயமாஇருக்கு”  என்று கூற..

மனைவியின் நெத்தியில் முத்தமிட்டவன்..  “பயப்பிடாதா நான் இங்கே தான் இருக்கேன்”  என்றவன்..

Advertisement

Advertisement

சௌசன்யாவின் வயிறை தொட்டு  “அம்மாவை  கஷ்ட படுத்தாம வந்துடுங்க”  என்றான்.. தொண்டை அடைக்க..

நர்ஸ் “வாம்மா” என்று டெலிவரி ரூம்பிற்கு அழைத்து செல்ல..

Advertisement

ஆதி சொல்லியது போலவே சௌசன்யாவுக்கு  ரொம்ப கஷ்டம் கொடுக்காமல் அவனின் மகள்  10 நிமிடத்தில்  பிறந்து விட..

நர்ஸ்  வந்து பெண்குழந்தை என்று  சொல்லி செல்ல.. துல்லி குதித்தான் ஆதி..

நண்பனை பார்த்து “டேய் உனக்கு மாதிரியே எனக்கு பெண் குழந்தை டா விஜெய்”  என்று இருவரும் கட்டி பிடிக்க..

நண்பனை அணைத்துக்கொண்ட வீ. பி மேலே பார்த்து கடவுளுக்கு நன்றி  சொல்லிக்கொண்டிருந்தான்..

குழந்தை பிறந்ததை அனைவரும் போனில் சொல்ல.. விசயத்தை கேட்டு அனைவரும் பார்க்க வந்து கொண்டிருந்தனர்..

நர்ஸ்  குழந்தையை  வெளியில் எடுத்து வந்து “யாரு வாங்குறீங்க”   என்றார் நர்ஸ்..

வீ. பி ஆதியை குழந்தையை  வாங்கு என்று சொல்ல..

“தாய் மாமன் நீ வாங்கி என் கையில குடுடா.. நீ இல்லண்ணா நான், என் குடும்பம் இல்லடா”.. என்றான்..

“என்  ஹார்ட்டை   ஈரம் ஆக்குறதே உன் வேலையா  போச்சு”  என்றவன்.

“வைஷு பொம்மா ரா” என்றவன். “உன்னால தான்  சரியான நேரத்துக்கு சௌசன்யாவை  ஹாஸ்பெட்டலில் சேர்த்தது”..

“வா”  என்று அழைக்க..

“எனக்கு பயமா இருக்கு பாவா, நீங்களே  பேபியை வாங்குங்க”  என்றதும்,

ஆதி வைஷுவை பார்த்து  “குழந்தையை வாங்குமா” என்றான்..

“இல்லண்ணா நான் சின்ன குழந்தையை தூக்கியது இல்லை”  என்று கூற..

ஆதிக்கு  குழந்தையை தூக்குவதற்கு பயமாக இருந்தது….

 வீ. பி போங்கடா என்றவன்.. குழந்தையின் அருகில் வந்தவன்.. அழகாய் ஒரு கையை குழந்தையின்  தலைக்கு கீழ் வைத்து பிடித்துக்கொண்டவன்.. இன்னொரு  கையை இடுப்புக்குகீழ்  கொண்டு சென்று  அழகாய் குழந்தையை தூக்கியவனை பார்த்த நர்ஸ்.

“பத்து பிள்ளை பெத்த மாதிரி அசல்ட்டா குழந்தையை  தூக்கிறீங்க,  எத்தனை குழந்தை தம்பி”  என்றதும்..

“இப்போ ஒரு பேபி தான்.. சரியா அடுத்த பத்து மாதத்துல  இங்கே தான் இதை மாதிரி என் குழந்தையும் தூக்கி வச்சுப்பேன்”  என்று வைஷுவை பார்த்து கண்ணடித்து சிரிக்க.

வைஷு வீ. பி சொல்வதை சரியாக கவனிக்கவில்லை.. குழந்தையின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க..

“என்ன பொண்டாட்டி நான் சொல்லுற சரி தானே”  என்று கூற..

“பாவா எது சொன்னாலும் சரி தான்”  என்றாள்.. அவன் சொல்வது எல்லாம் சரியாக இருக்கும் என்றே…

“எப்படி” என்று நண்பனை பார்க்க..

குழந்தையை அழகாய் தூக்கியவன் ஆதியின் கையில் கொடுக்க வர..

“கொஞ்சம் நேரம் நீ வச்சு இரு வீ. பி” என்றவன்.. மகளை ரசித்து .. பார்க்க  அச்சு அசல் ஆதி மூக்கு போலவே குழந்தைக்கு இருக்க…

“டேய்  ஆதி மூக்கு  உன்ன மாதிரி இருக்குடா”..

“ஆமாம்டா”  என்று நண்பனை அணைத்தவன்…

“என்  அம்மா மாதிரியே இருக்காடா என் பொண்ணு,” என்றான்..

வீ. பியும் உற்று பார்த்து  “ஆமாம்டா உன் அம்மா மாதிரியே  கர்லி ஹேர்டா”  என்றான்..

வைஷு எட்டி, எட்டி குழுந்தையை பார்க்க,, “வா வைஷு” என்று ஒரு சேரில் உட்கார்ந்து  குழந்தையை மடியில் வைத்து நன்றாக வைஷுவிடம் காட்ட…

அவள் ஆசையாக குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தாள்..

“சார் உங்க வெய்ப்  கண் முழிச்சிட்டாங்க, உங்களையும், குழந்தையையும் கேட்குறாங்க வாங்க” என்றதும்..

தன் மகளை பூபோல் சுமந்து கொண்டே  மனைவியை பார்க்க சென்றான் ஆதி..

 “குழந்தை அழகாய்  இருக்க”  என்றாள் வைஷூ.

“ஊம்ம்”  என்றவன்..

“யாழினி  இத விட அழகாய் இருந்தாள்,, வைட்டு 4 கிலோ மேல இருந்தாள்” என்றான் வீ. பி..

அவன் சொன்னதும் வைஷு “நீங்க தான் முதல்ல தூக்குனீங்களா?”..

“ஆமாம்” என்று கண்மூடிக்கொண்டான்…

வைஷுவுக்கு  பிறந்த குழந்தையை வைத்து கொண்டு இவன் தனியாக எப்படி வளத்தான்.. சௌசன்யாவின் குழந்தை ஞாபகம் வர.. யாழினியும் இதே மாதிரி தானே இருந்திருப்பாள்.. என் குழந்தையை தூக்க முடியாத பாவி ஆகிட்டேன்,, என்று கலங்கி இருக்க..

மனைவியின் முகம் பார்த்த வீ. பி “என்ன பொம்மா?”.. என்றவுடன்..

அவன் தோளில் முகம் புதைத்தவள்.. சத்தம் இல்லாமல் குழங்கி அழ..

“என்னாச்சுடா?”..

சிறிது நிமிடம் அழுதவள், “யாழ்”  என்றதும்…

“யாழ்லை நெனச்சி அழுகுறீயா?”.. என்றான்..

அவள் “ஊம்ம்” என்றதும்..

“பழச  எல்லாம் நினைக்காத,, இப்பா நடக்குற பாறு,, அப்பறம் அந்த மூனு மாச கணக்கு குறைக்க முடியுமான்னு பாரு,  இப்போ நம்ம என்ஜாய் பண்ணுற வயசுடி,, ரொம்ப என்ன காக்க வைக்காத.. பக்கத்துல உன்ன வச்சுட்கிட்டு  பாவா பாவம் இல்லையா”  என்றவுடன்..

அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தவள்.. “ஒரு மூனு மாசம் தானே பாவா”..

“போடி  மனுஷனோட பீலிங்ஸ் புரியாம, எனக்கு கண்டிப்பா இன்னும் ஒரு வருஷத்துல  நமக்கு இதே மாதிரி ஒரு குழந்தை வேணும், அதுக்கு  அம்மணி  கொஞ்சம் இந்த  விஜயேந்திரன்  மீது கருணை காட்டனும்”  என்றான்..

இவள் வெட்கத்தில் “போங்க பாவா, நீங்க இருக்குற ஸ்பிடுக்கு. நாமா  ஒன்னும் சேர்ந்த அடுத்த மாசமே  நான் கன்சீவ் ஆகிடுவேன்.. அதுக்கு கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.. அந்த டான்ஸ் காம்பிடேஷன் முடியட்டும், நான் எப்போதும்  உங்க கூட தான்.

 நம்ம அகாடமி  எப்பையும் நம்பர் ட்டூல தான்  இருக்கு.. அத நம்பர் ஒன் ஆக்காம, நான் விடமாட்டேன்,, இந்த வருஷம் கண்டிப்பாக  நம்ம அகாடமி தான் நம்பர் ஒன்னா  ஆக்குவேன் பாவா,, அந்த  சிங்கப்பூர்  டான்ஸ்  அகாடமி தான் எப்பையும் நம்பர் ஒன்னா இருக்கு,, அத நான் வின் பண்ணி நம்ம அகாடமி நம்பர் ஒன்ன ஆக்கனும்”..

“எல்லாம் சரிதான், அதுக்கு நம்ம சேர்றதுக்கு  என்னாடி  சம்பந்தம்.”..

 “அந்த  போட்டியில வின் பண்ண நிறைய வேலை இருக்கு  பாவா அதுல நானும் கலந்துக்க போறேன்,, நிறைய போட்டியில டான்ஸ் ஆட  சோ, ”  என்று இழுக்க..

“அதுக்கு தான் என்னை தல்லி வச்சு இருக்க?”..

“தல்லி எங்க வச்சேன் பக்கத்துல தான் இருக்கேன்”  என்றவள் அவனை நெருங்கி அமர..

“அது  இந்த நெருக்கம் இல்லாற அம்மாயி”,, என்றவன் அவள் காதில் ஏதோ பேச..

“போங்க பாவா”  என்று அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்..

“வாடி இங்க”  என்று அழைக்க வரமுடியாது.. என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்க..

நாகில்லி  அந்த வரண்டாவில் வருவதை பார்த்தவன்.. “நானா  குட்டி பாப்பா  பிறந்துருக்கு” என்றான்..

“ரொம்ப சந்தோஷம்” என்றவர்..

 “உன்  அம்மாவுக்கு  சொன்னீயா?” என்றார்..

“சொல்லிட்டேன் பா, அம்மா ஆன் த வே, இன்னும் கொஞ்ச நேரத்தில்  வந்திடுவாங்க”..என்றான்..

“குழந்தையை  பார்க்கனும்”என்றார் நாகில்லி வாங்கப்பா”  என்று  சௌசன்யா இருக்கும் அறைக்கு கதவை தட்டி செல்ல..

“வா. வீ. பி”  என்றான் ஆதி…

ஆதி கட்டிலில் அமர்ந்து இருக்க.. அவன் மடியில் சௌசன்யா தலை வைத்து படுத்து இருக்க.. ஆதி கையில் குழந்தை  பார்க்கவே அழகாய்  இருந்தது. அந்த காட்சி. வைஷுவுக்கு  தானும் வீ. பியும் இன்னொரு  குழந்தையும் என்று  கற்பனையோட உள்ளே வந்தாள்..

ஆதியிடம்  வேகமாக வந்த நாகில்லி  பேத்தியை  ஆதியிடமிருந்து  ஒன்றை கையால் அழகாய் தூக்கி தன் கண்ணீல்  வைத்து கொண்டார் பேத்தியை..

நான்கு  பிள்ளையை  பெற்றவர் ஆகிற்றே, எல்லாரும் ஆச்சரியமாகபார்க்க.. “நா தேவதா,  நா சிக்காரம், நா இன்டி பொம்மா, நா தல்லி பங்காரம்”  என்று கண்கலங்கி சிரித்து பேத்தியோட பேசி, உச்சி  முகர்ந்தார் நாகில்லி..

அனைவரும் நாகில்லி குழந்தையை கொஞ்சுவதை பார்க்க.. மகளை பார்த்தவர்,, “வலி இருக்காடா, எப்படி வந்த?”.. என்றார்..

“வைஷு தான் பா.. காலையில இருந்து எனக்கு போன் பண்ணிட்டே இருந்தா,, எனக்கு வலி  வந்தது தெரிஞ்சி வந்துட்டா பா” என்றாள்..

நாகில்லி  மருமகளை நன்றி யோட பார்க்க..

“அத்தை என்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க மாமா”  என்றாள்..

மனைவி மீது அதிக கோபத்தில் இருந்தவர், மருமகள் சொன்னதும் கொஞ்சம் கோபம் குறைந்தது..

ஆதியின் அம்மா, பேரன் கிரிஷ்சை தூக்கிக்கொண்டு வர..

ஆதியின் அம்மாவிடம்  தன் பேத்தியை கொடுத்தவர்.. “இதி  மா இத்தரு இண்டி மகாலட்சுமி”  என்று கொடுத்தார்.. (நம்ம  ரெண்டு பேரு வீட்டின் மகாலட்சுமி) என்று  பேத்தியை தர..

ஆதியின் அம்மாவுக்கு  அவ்வளவு சந்தோஷம். பேத்தியை வாங்கி பார்த்தவர் , தன்னை போலவே முகம்  இருக்க..  “ஆதி பாப்பா என்னை மாதிரியே  இருக்குறா பாபு”  என்றவர்.. மருமகளை பார்க்க.

வைஷுவை  அவளை ஓய்வு அறைக்கு அழைத்து சென்று உடைமாற்றி அழைத்து வந்தவள்.. கட்டிலில் சௌசன்யாவை அமர்ந்தவுடன், அவளின் காலை பிடித்து கட்டிலின் மேலே மெல்ல  வைத்து. “என்ன வேணும் அண்ணி” என்றாள் வைஷு..

 “கொஞ்சம் சுடு தண்ணி வேணும் வைஷு குடிக்க,, அப்புறம் பால் வாங்கிட்டு வர சொல்லு வீ. பியை”. என்று சொல்ல..

“அவர் அப்பவே  வாங்கி வச்சுட்டார் அண்ணி,,” என்றவள்.. சௌசன்யாவுக்கு  தண்ணீரும், பாலையும் ஆற்றி கொடுக்க..

கிரிஷ் நேராக சௌசன்யாவிடம்  வந்தவன் “மம்மி தூக்கு”  என்றான்..

சௌசன்யா சங்கடமாக  மகனை பார்க்க.. ஆதி மகனை “வாடா  டாடி தூக்குறேன்”  என்க..

“நோ  மம்மி காவாலி”  என்றான்..

வீ. பி மருமகனிடம்  “மாமா  கிட்ட வா”  என்றான்..

“நோ” என்றான்..

மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து ஊட்கார்ந்து சௌசன்யா,, “வீ. பி அவனை தூக்கி என்கிட்ட கொடு” என்க.

கிரிஷை தூக்கி சௌசன்யா அருகில் உட்கார வைக்க..

மகனை அணைத்துக்கொண்டன்,, “சாப்டீயா  கிரிஷ்?”..

“ஊம்ம்” என்று தலையாட்டியவன்  சௌசன்யாவை  கழுத்தை கட்டிக்கொள்ள..

 சௌசன்யாவுக்கு  புரிந்தது மகன் நான் இல்லாமல் கஷ்ட பட்டிருக்கிறான் என்று..

மகனின் தலைகோதியவள் “பாபு, உன் தங்கச்சியை  பாத்தீயா, அவ உன்னை கேட்டா, டா, என் அண்ணா கிரிஷ் எங்கே எப்போ வருவான்னு உன்னை கேட்டா”  என்றதும்..

“என்னை கேட்டாளா மம்மி?”..

“ஆம்மா டா,  என் அண்ணா எங்கேன்னு கேட்டா.. டாடிட்ட  கேளு”  என்றதும்..

 ஆதி மகனிடம் சென்று “ஆமாம் டா, பாப்பை பார்க்கலாம்  வா”  என்று மகனை தூக்கிய படிய மகளிடம் வந்தவன்..

“குட்டி  பாப்பா அண்ணாவை  பாரு, உன்னை பாக்க வந்திருக்கான்”..  என்றது.. குழந்தை கண்மூடி சிரிக்க.

“அங்கே பாரு  பாப்பா  உன்னை பார்த்து சிரிக்குற”  என்றதும்..

தங்கையை எட்டி பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான் கிரிஷ்.

சௌசன்யாவின் தலை முடி கலைந்திருக்க..  வைஷு அவளின் கையை வைத்து சௌசன்யாவின்  முடியை  சரி பண்ண… வீ. பி அக்காவிற்கு தேவையானதை வாங்கி வந்து தர.. வைஷு சௌசன்யாவை பார்த்துக்கொண்டாள்..

குழந்தை அழுகவும் அனைவரும் வெளியில் போக…

ஆதி வைஷுவிடம் குழந்தையை  கொடுத்து  ” ஹெல்பு பண்ணுமா”  என்று வெளியே மகனை அழைத்துக்கொண்டு  சென்று விட..

குழந்தை   பசியாற, சௌசன்யாவுக்கு உதவி பண்ணியவள், சற்று  தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ஆதியின் அம்மா அறையை விட்டு வெளியே வந்தவர்.. நாகில்லியிடம்  “நல்ல பொண்ணு வைஷு,, இந்த மாதிரியெல்லாம்  இப்போ பொண்ணுங்க கிடைக்குறது கஷ்டம், உங்க மருமக மாதிரி பொண்ணு கிடைக்குறது அபூர்வம், குடுத்து வச்சவன் வீ. பி,,”  என்றார்..

“நல்லா அம்மாய் வீ. பி நல்லா பாத்துக்கோ, உன் மேல கோபமா வந்தேன், எல்லாருக்கும்  தெரியாம கல்யாணம் பண்ணதுக்கு,, இப்போ எனக்கு ரொம்ப  சந்தோஷம்,  அந்த பொண்ணு என்  மருமகளை நல்லா பாத்துப்பா”.. என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே..

இந்திரா தேவி  தன் குடும்பத்தோடு வர..

நாகில்லி மனைவியை முறைத்து நிற்க.

“சம்பந்தி” என்று  ஆதியின் அம்மாவிடம்  சென்ற இந்திரா தேவி..

“மன்னிச்சிருங்கா  அண்ணி, என்னால சௌசன்யா கூட  டெலிவரிக்கு கூட  இருக்க முடியல”  என்று கண்கலங்க..

“ஏன் சம்பந்தி வருத்தபடுறீங்க , அது தான் உங்களுக்கு பதிலா உங்க மருமகள்  வைஷு சௌசன்யாவை நல்லா பாத்துக்குறாளே, நல்ல ஆளை வச்சிட்டு தானே போயிருக்கீங்க, உள்ளே போயி  பாருங்க”… என்றார்…

இந்திரா  தேவி  சௌசன்யா இருக்கும் அறைக்கு  கதவை   திறந்துக்கொண்டு  போக..

அவர் பார்த்த காட்சியில் அதிர்ச்சியாகி  நின்றார்..

நான் கூட  செய்ய   மாட்டேன் இந்த செயலை  என்று பார்த்தார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!