Skip to content
Post Views: 1,870
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் – 16
Advertisement
Advertisement
சொர்ணமுகி இன்று காலையே ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே சென்று வந்திருந்தவர்…
Advertisement
வீ. பி திருமணம் முடிந்து மனைவியை அழைத்து வந்ததாக அறிந்து, வாழ்த்தி விட்டு, பார்க்க வென வர. சத்தியமாக வைஷுவை அவர் எதிர் பார்க்க வில்லை..
Advertisement
“இவளா?”.. என்று வாய்விட்டே சொல்லியவரிடம்..”நானே அது நானே” என்று பாடி நக்கல் பண்ணியிருந்தாள் வைஷு..
அதிர்ந்து நின்றிருந்தவரிடம்.. “என்னை நீங்க எதிர் பாக்கல இல்லையா மேம்” என்றவள்.. “வாங்க உட்காருங்க”.. என்று சொர்ணமுகியை அமர சொல்ல…
மெல்ல நடந்து வந்து, அவர் வாங்கி வந்த பூங்கொத்தை வைஷுவிடம் நீட்ட…
“தாங்யூ சொர்ணா மேம்” என்ற அதை அவரிடம் இருந்து வாங்கி வைக்க கொண்டவள்.. “விஷ், பண்ண மாட்டீங்களா?” என்றாள்
சொர்ணமுகிக்கு பெறும் கவலை யாகி போனது,, இவளை எப்படி எல்லாம் திட்டி வேலை வாங்கி இருக்கோம் பதிலுக்கு என்ன செய்ய போறாலோ என்று புலம்பியவள்..
” வாழ்த்துக்கள் மேம்” என்றார்..
“மேம் எல்லாம் சொல்லாதீங்க, வைஷுயின்னு கூப்பிடுங்க மேம்” என்றவள்.
“எனி வே வாழ்த்து சொன்னதுக்கு நன்றி, நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்குது, அதுக்காக உங்களுக்கு நான், தான் நன்றி சொல்லனும் மேம்” என்று சொர்ணமுகிக்கு கை கொடுக்க..
நீட்டிய வைஷுவின் கையை பிடித்து குழுக்கியவர்.
“வர்ரேன்” என்று சொர்ண முகி கிளம்ப…
வைஷுவுக்கு சில விசயங்கள் அவரிடம் கேட்க வேண்டியது இருந்தது.. அதை அவரிடம கேட்க.. சரியாக எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி முடித்தார் சொர்ணமுகி..
“ஏதாவது டவ்ட்டு இருந்து கால் பண்ணவா மேம்” என்று வைஷு கேட்க..
“எனி டைம் கால் மீ வைஷு” என்று சென்று விட்டார்..
வைஷுவுக்கு சொர்ணமுகியை கொஞ்சம் பிடிக்கும்,, அவர் கண்டிப்பு பலருக்கு தேவை,, அதில் நானும் மாட்டிக்கொண்டது வேறு கதை..
அகாடமி வளர்ச்சி சொர்ணமுகியின் பங்கு நிறையவே இருப்பதால்.. அவர் தன்னை பேசியதை மறந்து விட்டு அவருடன் இயல்பாக பேசினாள் வைஷு…
சரியாக இரண்டு மணிநேரம் கழித்து சௌசன்யாவுக்கு கால் பண்ணியிருந்தாள் வைஷு..
போனை எடுத்த சௌசன்யா “வாழ்த்துக்கள் வைஷு” என்று கூற..
“தாங்யூ அண்ணி, எப்படி இருக்கீங்க, உடம்பு நல்லா இருக்கா, சாப்டீங்களா” என்று கேட்க…
“ஏய் வைஷு நான் நல்லா தான் இருக்கேன்,, நீ உன் வேலையை பாரு,, எனக்கு முடியலண்ணா நானே உனக்கு கால் பண்ணுறேன்,, உனக்கு வேலை நிறைய இருக்குமே?.. கஷ்டமா இருக்கா?”…
“அப்படியெல்லாம் இல்லண்ணு சொல்ல முடியாது அண்ணி, கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, இப்ப தானே வந்தேன்,, எல்லாத்தை தெரிஞ்சுக்கிறேன்” என்றவள்..
“நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க,” என்று போனை வைத்தாள்…
சௌசன்யாவுக்கு பெய்ன் லைட்டாக வருவது போல் தெரிய, நல்லா வலிக்கட்டும், சூட்டு வலியாக கூட இருக்கலாம் என்று நினைத்தவள் தண்ணீர் அதிகமாக குடித்துக்கொண்டு, ஓய்வு அறைக்கும், கட்டிலுக்கும் நடந்து கொண்டே இருந்தாள்..
சரியா லஞ்ச் டைம்முக்கு கால் பண்ணியிருந்தாள் வைஷு… சௌசன்யா நீண்ட நேரம் ஓய்வு அறையில் இருந்ததாள் போன் சத்தம் கேட்காமல் இருக்க..
வீ. பி யின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் நம்பரை காலையிலே வாங்கி வந்திருந்தாள் வைஷு.. அவரிடம் போன் செய்து,, “சௌசன்யா மேம் என்ன பண்ணுறாங்கன்னு பாருங்க” என்று கூற..
அப்பெண்மணி சௌசன்யாவின் அறைக்கு சென்று பார்க்க.. சௌசன்யா நீண்ட நேரம் பாத்ரூம்பில் இருப்பதாக.. சத்தம் குடுத்தால் நீ போ நான் வர்ரேன் என்று சொல்வதாக சொல்ல”..
உடனே கிளம்பி இருந்தாள் வைஷு…
அவளுக்கு வெளியே சென்று வர.. வீட்டிற்க்கு, வர, போக என்று ஒரு காரை ஏற்பாடு பண்ணியிருந்தான் வீ. பி.
இவளுக்காக கார்ரோடு டிரைவர் காத்து இருக்க.. இந்திரா தேவியின் பீ. ஏ. விடம் அனைத்தையும் சொல்லி விட்டு காரில் ஏறி வீட்டிற்கு வந்தாள்..
சௌசன்யா இடுப்பை பிடித்தவாறே ஹாலில் நின்று இருக்க..
வேகமாக வந்த வைஷு.. “அண்ணி” என்று சௌசன்யாவின் பக்கத்தில் வந்தவள் “பெய்ன் இருக்கா?”…
“லைட்டா இருக்கு வைஷு” என்று கூற..
“இருங்க அண்ணி” என்றவள்.. முதலில் சீரக தண்ணீரை வெது வெதுப்பாக குடிக்க கொடுத்தவள்..
அவள் பாட்டி சொல்லி கொடுத்த கசயத்தை ரெடி பண்ணி எடுத்து வந்து “இதையும் கொஞ்சம் குடிங்க”.. என்றாள்..
“ஐ யோ வைஷு என்னால இதற்கு மேல குடிக்க முடியாது”.. என்று புலம்பியவளை..
தன் தோளில் சாய்த்து “கொஞ்சமா இத குடிங்க, அண்ணி,, டெலிவரி பேய்ன் இருந்தா அடுத்து, அடுத்து வரும்,, சாதாரண சூட்டு வலியா இருந்தா சரியாகிடும்” என்று கூற..
கசாயத்தை குடித்து முடித்த சௌசன்யா சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தவள்.. வைஷுவின் கையை இருக்கி பிடிக்க..
“என்ன அண்ணி பெய்ன் வருதா?”..
“ஆமாம் வைஷு என்று முணங்க”..
“சரி அண்ணி ஹாஸ்பெட்டல் கிளம்பலாம்” என்று கூற..
வீ. பி சரியாக வீட்டினுள் நுழைந்தான்..
சௌசன்யா வைஷுவின் தோளில் கண்மூடி சாயந்திருப்பதை பார்த்துக்கொண்டே இருவரின் அருகில் வர…
தம்பி யை பார்த்ததும் “வலிக்குது விஜெய்” என்று கூறி கண்கலங்க..
“ஒன்னும் ஆகாது வா” என்றவன்..
வைஷுவை பார்த்து “தேவையானதை எடுத்துக்கோ” என்றான்..
“எல்லாம் அப்பவே எடுத்து வச்சுட்டேன், வாங்க போலம் என்க..
டிரைவர் கார் எடுக்க..
மூன்று பேரும் பின்னாடி அமர..
கார் கிளம்பியது..
“ஆதிக்கு போன் போடவா?”..
“வேண்டாம் டா,, அவர் ரொம்ப பயந்திருவாறு,, குழந்தை பிறந்தவுடன் சொல்லிக்கலாம்”..
“ஏய் அவன் என்னை திட்டுவான்”..
“திட்டுனா, திட்டுவாங்கு உன் பிரண்ட் தானே” என்றாள்…
“சரி அம்மா கிட்ட சொல்லவா, உன் மாமியாருக்கு போன் பண்ணவா?”.. என்று வீ. பி கேட்க..
“விஜெய் கொஞ்சம் நேரம் சும்மா வா,, குழந்தை பிறந்தவுடன் எல்லாருக்கும் சொல்லிக்கலாம்.. எனக்கு வலிக்குது” என்றவள்.. “டிரைவர் அண்ணா வேகமா போங்க” என்று வலியில் புலம்ப..
“டிரைவர் அண்ணா, அந்த கடையில் நிப்பாட்டுங்க, சௌசன்யாவுக்கு பிடிச்ச கடை, ஒரு சூஸ் வாங்கிட்டு வர்ரேன், அவளுக்கு பசிக்கும், ஸ்டாப் பண்ணுங்க” என்றான்..
“டேய் சும்மா இருடா,, எனக்கு சூஸ் வேண்டாம், பசிக்கல..”..
“அட கோபமா இருக்கீயா,, அப்போ கண்டிப்பா சூஸ் குடிச்சே ஆகனும், காரை ஸ்டாப் பண்ணுங்க”..
என்றான் டிரைவரிடம்..
“வைஷு உன் புருஷனை சும்மா இருக்க சொல்லு,,”என்றவளுக்கு கோபம்.. வர..
“மீண்டும் ஏன் கா கோபமா இருக்கீயா,, என்ன வேணுமா,, ஐஸ்கிரீம் வாங்கி தர” என்று கேட்டதும் சிரித்து விட்டவள்..
“டேய் ஏன்டா என்னை இப்படி பலிவாங்குற, வயிறு வலிக்குதுற” .. என்றாள் சிரித்துக்கொண்டே..
வீ. பி அடங்குவதாக இல்லை.. சௌசன்யாவிடம் மீண்டும், மீண்டும் ஏதோ, தோ சொல்லி அவளை வலி தெரியாமல் சிரிக்க. வைக்க..
வைஷு கணவனை ஆ என்று பார்த்திருந்தாள்..
“அங்க பாரு என் பொண்டாட்டி எப்படி ஷாக்கா என்னை பார்க்குறா,, உனக்கு ஏதாவது வேணுமா” என்றான்..
அவளோ கைஎடுத்து கும்பிட்டு எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று தலையாட்ட…
“தப்பிச்சுட்டா உன் பொண்டாட்டி” என்றாள் சௌசன்யா..
“அவளை யாரு விடுறது,. எண்ணி பத்து மாசத்துல அவள இதே மாதிரி காருல கூட்டிட்டு வந்து சூஸ் வாங்கி குடுக்கல நான் வீ. பி இல்ல” என்றான் காலரை தூக்கி விட்டு..
“டேய் பாப்போம் டா, நீயும் என் புருசன் மாதிரி அழுகுறீயா இல்லயாயிண்ணு நான் பாக்கதானே போறேன்..
“நான் எதுக்கு அழனும்.. அதெல்லாம் நான் ஹாப்பீயா இருப்பேன், சூனியர் வீ. பி வர போற சந்தோஷத்துல”…என்றான்..
சௌசன்யாவுக்கு மனசு லேசாகியது,, தம்பி பேசிக்கொண்டு வருவது..
வீ. பி ஹாஸ்பெட்டல் வரும்வரை சௌசன்யாவிடம் பேசிக்கொண்டே வந்தான்…
ஹாஸ்பெட்டல் வந்ததும் முகம் மாறிய அக்காவை தோள் அணைத்தவன்.. “குட்டி சௌசன்யா கம்மிங் உன்னை மாதிரி எனக்கு வேணும்,, ஹாப்பி இரு,, ஆதிக்கு சொல்லிட்டேன் வா” என்று டாக்டரிடம் அழைத்து செல்ல..
டாக்டர் சௌசன்யாவை செக் பண்ணி பார்த்து விட்டு,, “இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்” என்று வலி வர ஊசி போட்டு சௌசன்யாவை நடக்க சொல்ல..
அவளோ “என்னால நடக்க முடியாது வலிக்குது போடா,” என்று சேரில் அமர்ந்திருக்க…
“சௌவ்ச்” என்று அழைத்துக்கொண்டே மூச்சு வாங்க ஓடி வந்தான் ஆதி..
கணவனை பார்த்ததும் எழுந்து நின்று அவனை அணைத்துக்கொண்டவள்.. “வலிக்குது ஆதி” என்று அழுக..
அவளை மெல்ல அணைத்த ஆதி அவளின் முதுகில் தட்டிக்கொடுத்து.. “நான் வந்துட்டேன்னுல, ஒன்னும் ஆகாது” என்றவன்..
வீ. பி யை பார்த்து “டாக்டர் என்ன சொன்னாங்க” என்றான் ஆதி..
“டாக்டர் உன் அருமை பொண்டாட்டியை கொஞ்ச நேரம் நடக்க சொன்னாங்க, இவ நடக்க முடியாதுண்ணு சொல்லுறா டா”.. என்றான் வீ. பி..
ஆதி மனைவியின் முகம் பார்த்து “கொஞ்சம் நடக்கலாம் பேபி ரா” என்று அவளை நடக்க வைக்க…
“நான் இவ்வளவு நேரம் நடக்க சொன்னேன் நீ நடக்கல, உன் புருஷன் சொன்னவுடனே நடக்குற,.. என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு,, இந்த வீ. பி பேச்சுக்கு மரியாதை இல்லை ரா” என்றான் சௌசன்யாவை பார்த்து..
“ஆதி இவனை என்னென்னு கேளுங்க, என்னை ரொம்ப வம்பு பண்ணி சிரிக்க வைக்குறான்”..
“சிரிச்ச நல்லது தானே ரா”.. என்றான்..
இவன் ரொம்ப சிரிக்க வைக்குறான்,, சிரிச்சே வயிறு வலிக்குது.. இவன் சீரியஸ்சா பேசுறானா, இல்லை காமெடி பண்ணுறான்னு எனக்கு தெரியல.. மூஞ்ச பார்த்த உண்மை மாதிரா பேசுறான்,, ஆனா எல்லாம் நக்கல் அவனுக்கு ” என்று சிரிக்க.
வீ. பி ஏதோ சொல்ல வர..
“டேய் சும்மா இருடா” என்றான் ஆதி..
சௌசன்யா மிகவும் சோர்ந்து தெரிய,, “உனக்கு குடிக்க சூடா பால் வாங்கிட்டு வரவா” என்றான் அக்காவிடம்…
“எனக்கு ஒன்னும் வேண்டாம், கொஞ்சம் நேரம் நீ பேசாம இருடா” என்றவள், இடுப்பு வலியில் சற்று நின்று அடிவயிறை பிடிக்க…
சௌசன்யா அருகில் ஓடி வந்த வீ. பி.. “என்ன பண்ணுது கா” என்றான்.
“அடி வயிறு வலிக்குதுடா, கை, கால் எல்லாம் வலிக்குது முடியல” என்று தம்பியின் கையை இருக்கமாக பிடித்து இருக்க..
“டாக்டர் கிட்ட போலாம் வா” என்று டாக்டர் அறைக்கு செல்ல..
error: Content is protected !!