Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரன் – 23

அந்தியூரான் – 23
இதோ மாலை வேளை இதமான காற்று மேனியை உரசி செல்ல.அதனை ரசிக்கும் நிலையில் இல்லை சிவராமன் வீட்டு ஆண்கள் இல்லை போலும்.
சிவராமன்,கந்தன்,தணிகாசலம்,அமுதன் மட்டுமே அங்கிருந்தார்கள். மற்ற ஆண்கள் எல்லாம் தனிகாவிடமும்,சிவராமனிடமும் சற்று முன் தனியாகப் பேசிவிட்டு.தணிகாசலத்திற்கும் அறிவுரை கூறிவிட்டு கிளம்பி விட்டனர்.


Advertisement

அமுதனிடமும் அவர்கள் பேச தவறவில்லை.இங்கு நடத்த எந்த உரசலும் அவர்களுக்கு தெரியாது.இதற்கு மேல் அவர்கள் இங்கிருந்தால் வீட்டுப் பெண்களுக்கு உண்மை தெரிந்து விடும் அல்லவா.

Advertisement

அதற்காக அவர்கள் பேசிவிட்டு செல்ல.கந்தனை மட்டும் நிறுத்தி வைத்துக் கொண்டார் சிவராமன்.வீட்டுக்கு பெரிய மாப்பிள்ளையாக அவருக்குத் தலை மகனாக எல்லாச் செயலிலும் கந்தன் இருப்பார் என்பது குறிப்பிட தக்கது.

Advertisement

இதோ அவர்கள் சென்றவுடன் பேச தோதாக மெத்தைக்கு வந்து அமர்ந்து கொண்டனர் நால்வரும்.தன் எதிரில் அமர்ந்திருக்கும் தணிகாசலத்தை ஒரு பார்வை பார்த்த அமுதன் பின்பு கந்தனை பார்க்க.

Advertisement

இளையவன் பார்வையை உணர்ந்தார் போல,”நானும் மாமாவும் இங்க தான் இருப்போம் தம்பி. நீங்க என்ன பேச எண்ணி வைக்கிறீங்களோ.மாப்பிள்ளை உன்கிட்ட என்ன பேச எண்ணி வைக்கிறாரோ அதை தைரியமா பேசலாம்.அதுவும் போக உங்களை மனம் விட்டுத் தனியா பேசுங்க சொல்லிவிட்டு போற அளவுக்கு எங்களுக்கு மனசில்லை. தனியா விட்டு போக கொஞ்சம் பயமா இருக்கு.
ஏன்னா மாமன் மச்சானா இருந்த போதும் சரி. இப்போ மாமனார், மருமகனான இருக்கும் போதும் சரி.அந்த நம்பிக்கைய நீங்க இரண்டு பேரும் கொடுக்கல எங்களுக்கு” வார்த்தையில் எத்தனை தூரம் அழுத்தம் கொடுக்க முடியுமோ அத்தனை அழுத்தம் கொடுத்துக் கடுமை கூட்டி பேசினார் கந்தன்.
அவருக்கு அத்தனை கோபம் திருமணத்திற்கு முன்பே தனிகாவிடம் படித்துப் படித்துச் சொன்னார்.உங்கள் வம்பில் எப்போதும் பெண்களை இழுத்து வைக்க கூடாது என்று,ஆனால் இன்று அவர்களால் இரு பெண்களும் அழுது நின்றதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
எத்தனை வருடம் விசாலாட்சியை பார்க்கிறார் அவர். ஒரு நாளும் அவள் குரல் உயர்த்தி பேசி நின்றதில்லை அதனால் இன்று அவள் பேசியதையும் அவரால் தவறாக எண்ண முடியவில்லை.
அவளும் பெண் தானே என்றளவில் அமைதியாக நின்று விட்டார்.அந்த கோபம் அதுவும் போக தணிகா தன்னையே காயப்படுத்திருப்பதை அவரால் மன்னிக்கவே முடியவில்லை.இது என்ன மனநிலை? என்ற கோபம் வேறு.சிவராமன் எதுவுமே பேசவில்லை ஒரு பார்வையாளராக.
கந்தன் பேசியதை புன்னகையுடன் உள் வாங்கிக் கொண்ட அமுதன் வெகு நிதானமாகப் பேச்சை தொடங்கினான்.தணிகாவை நேருக்கு நேராகப் பார்த்து, “என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றுவிட்டு அவனது பதிலுக்காகக் காத்திருக்க.
அமுதனை நேர் கொண்டு பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் தணிகாசலம்.மகனின் செயலில் அத்தனை கோபம் வந்தது சிவராமனுக்கு இருந்தும் அடக்கி கொண்டார்.
“உங்களை தான் மாமா” என்றதும் படக்கெனத் திரும்பி அமுதனை பார்த்தான் முதல் முறையான உரிமையான அழைப்பு அதுவும் இத்தனை வருடங்கள் சென்று.
“சொல்லுங்க என்னத்த மனசுல எண்ணி வச்சு இதையெல்லாம் பண்ணுறீங்க?”
“ப்ச்! எனக்கு என் பொண்ணைக் கொண்டு பயமா இருக்கு. நீ அவளை எப்படி வச்சுப்பியோன்னு இருக்கு? உன் தங்கச்சிய எண்ணி அவளைப் பழி வாங்கி வைப்பியோனு பயமா இருக்கு.ஏண்டா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்னு இருக்கு.இந்த கல்யாணம் பேச்சு எடுத்துல இருந்து என் தூக்கமே போச்சு.நீயும் என்னை வம்பு செஞ்சு கிட்டே இருக்க” மனதில் உள்ளதை எல்லாம் கொட்டினான் தணிகாசலம்.
“இது நல்லா இருக்கே! நீங்களா என்னைச் சீண்டாத வரை எப்போ நானா வந்து உங்களை வம்பு செஞ்சிருக்கேன் சொல்லுங்க? பல வருசத்துக்கு முன்னாடி நானும் இப்படி தான் தவியா தவிச்சேன் மாமா” அமுதன் சொல்லவும்.
“பார்த்தியா பார்த்தியா இது தான் இது தான் என் பயமே. உன் தங்கச்சியை வச்சு சொல்லி காட்டுற” தணிகாசலம் இப்படியெல்லாம் பயந்து பேச கூடிய ஆளே இல்லை என்பதை மூன்று ஆண்களும் உணர்ந்து தான் இருந்தார்கள்.
“மாமா கொஞ்சம் இந்த தண்ணிய குடிங்க” அமுதன் தண்ணீரை எடுத்து கொடுக்க அமைதியாக வாங்கி அருந்தினான் தணிகாசலம். சில நொடிகள் அவனுக்கு அவகாசம் கொடுத்த அமுதன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.
“முதல என்னை எதிரியா  பாக்குறதை நிறுத்துங்க.ஒரு பரம்பரையான குடும்பத்துல செல்வமா வளர்ந்த உங்களுக்கே மகளைக் கட்டி கொடுத்துட்டு இத்தனை தவிப்பு இருக்கும் போது. ஒன்னுமே இல்லாம இருக்குற என்னால என்ன செய்ய முடியும் சொல்லுங்க? உங்களுக்காவது பணம் பலம், ஆள் பலமிருக்கு எனக்கு அப்போ என்ன இருந்துச்சு?
இரண்டாந்தரமா வேற என் தங்கச்சியக் கொடுத்திருக்கேன். அப்போ என் நிலையை எண்ணி பாருங்க? நம்ப பிரச்சனையின் தொடக்கம் என்ன? நீங்க என் தங்கச்சியைக் கூட்டிட்டுப் போகச் சொன்னது தான்.அதுவும் நீங்க சொன்ன முறை.இப்போ நீங்க ஒரு தகப்பனா எப்படி உங்க மகளுக்கு தவிக்கிறீங்களோ..
அதே போல விசாக்கு ஒரு தகப்பன் ஸ்தானத்துல இருந்து நான் தவிக்கிறேன்.இதை எப்படி நீங்க தப்புனு சொல்ல முடியும் சொல்லுங்க? என் வீட்டுக்கு பெரியவனா அவளுக்கு நான் தானே எல்லாமே” சிறு பிள்ளைக்கு எடுத்து சொல்வது போல் நிதானமாக பேசினான் அமுதன்.
“இங்க பாரு அமுதா இது நாள் வரை என்னை யாரும் நிக்க வச்சுக் கேள்வி கேட்டது இல்ல.அன்னைக்கு எங்க அம்மா, அப்பா கையெடுத்து கும்பிட்டு கேட்டும் என்னை நீ நிக்க வச்சுக் கேள்வி கேட்ட” அதே பிடியில் நின்றவனைக் கண்டு கோபமாகச் சிவராமன் எதுவோ பேச வர.கந்தன் அவரது கைகளைப் பிடித்துத் தடுத்து விட்டான்.
“ப்ச்! மாமா சரி நான் பேசுனது தப்பு தான் அதுக்கு வேண்டி இப்போ மன்னிப்பு கேட்கவா?”
“என் பொண்ணு”
“நீங்க உங்க மனசுல ஒன்னை வச்சுக்கிட்டு என்கிட்ட பேசுனா சரி வராது பேச்சுன்னு வந்துச்சுல உடைச்சுப் பேசிடுங்க”அத்தனை தன்மையாக கெஞ்சுவது போல் அமுதன் பேச. அவன் மீது தணிகா கட்டி வைத்த திமிர் என்ற விம்பம் சரிய தொடங்கியது.
“இங்க பாரு அமுதா எனக்கு விசாலாட்சியை ரொம்ப புடிக்கும். அளவை சொல்ல முடியாது அதை அவளுக்கு எப்படி புரிய வைக்கண்ணு தெரியல. என் பயத்தைத் தான் சொன்னேன் அதுல அவளுக்கும் எனக்குப் பேச்சு முத்தி போச்சு.
ப்ச்! அவளைக் காயப்படுத்த எண்ணி வைக்கல.செல்வியை இந்த நிமிஷம் வரை மறக்க முடியல.அவ எப்போது என் மனுசுக்குள்ள இருக்கா.அதுக்கு வேண்டி நான் விசாலாட்சியை விட மாட்டேன்” அவனது தவிப்பு புரிய தான் செய்தது.
“உங்க உணர்வுகளுக்கு நான் மதிப்பு கொடுக்குறேன் மாமா. சின்ன வயசுல தொடங்குன அன்பு, பிடித்தம் அது இல்லனு ஆகும் போது இருக்குற வலி எனக்குப் புரியுது. இதை விசாலாட்சிக்கும் புரிஞ்சதுனால தான் அவ எல்லாத்துக்கும் அமைதியா போனா.
என் தங்கச்சின்னு நான் பேசல.அவளை பத்தி தெரியும் எங்களுக்கெல்லாம் எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை பழகிடுச்சு.எது கொடுத்தாலும் சாப்பிடுவோம்,எந்த மாதிரி துணி கொடுத்தாலும் உடுத்திக்குவோம்.
எங்க மாமா, அத்தை, அம்மா என்ன சொன்னாலும் கேட்டுப்போம்.ஆசை பட்டு நாங்க ஒரு விஷியத்தைக் கேட்டோ செஞ்சோ பழக்கம் இல்லை.இத்தனை வயசுக்கு அப்புறமும் நாங்க அப்படிதான் எங்களால எந்த சூழ்நிலையையும் கடந்து வர முடியும், வாழ முடியும்.அதுனால தான் விசாலாட்சியால இங்க இருக்க முடியுது.
முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி. நம்ப முதல் சந்திப்புக் கசப்பை கொடுத்தது தான் இத்தனைக்கும் காரணம்.என்னை எதிரியா பார்க்கிற அளவுக்கு நான் இல்லை” தெளிவாகச் சொன்ன சின்னவனை சிவராமன் கூர்மையாக அலசி கொண்டிருந்தார்.
அவருக்கே அமுதன் குணம் தெரியாது அல்லவா. அவர்களுக்குள் அத்தனை நெருக்கம் கிடையாது அவர்கள் கண்டது எல்லாமே அவனது கோபம் முகம் தான்.
“இப்போ என்ன உங்க பொண்ணை நான் பத்திரமா பார்த்துகிறேனா? இல்லையா? இதானே உங்க பிரச்சனை.இப்போ நான் சொல்றது தான் எப்போதும்.வரமா கிடைச்சவளை கடைசி வரை தங்கமா வச்சிருப்பேன்.எனக்கு நீங்க கொடுத்தது பெண்ணில்லை தேவதை.
நாங்க பழகுனது இந்தச் சில நாட்கள் தான், ஆனா இது தான் உண்மை.அவ கூட இரண்டு முறை பேசிருக்கேன் அதுவும் கோபமா.விசாலாட்சியை பிரிய கூடாதுனு தான் அவ என்னைய கல்யாணம் பண்ணிருக்கா.
அதுவும் போக பணம் இருக்குற பகட்டே அவ கிட்ட இல்லை.அவ தேவைகள் எல்லாம் ரொம்ப சிக்கனம்” மகளைப் பத்தி அறிந்திடாத பக்கத்தை சொன்ன அமுதனை பார்த்துக் கொஞ்சமாக அதிர்ந்து தான் போனான் தணிகாசலம்.
தகப்பனை விட விசாலாட்சிக்கும், அமுதனுக்கும் தான் குமாரியை பற்றி அதிகம் தெரியும் என்ற சங்கதி தணிகாசலத்தைப் பெரும் குற்ற உணர்வில் தள்ளியது.அதனை உணர்ந்தார் போல அவனது கைகளைப் பற்றிக் கொண்ட அமுதன்.
“பக்கம் பார்த்து பழகி இருந்தா என்னைப் பத்தி உங்களுக்கும், உங்களைப் பத்தி எனக்கும் தெரிஞ்சிருக்கும்.நமக்கு சூழ்நிலை அப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கல.கொஞ்சம் காலம் போனாலும் இப்போ அது அமைஞ்சிருக்கு தானே”
“ஹ்ம்ம்!” என்றவனைச் சிரிப்புடன் பார்த்த அமுதன்.
விசா கணவனா இல்லாம தனி மனுசனா உங்களை ரொம்ப புடிக்கும். உங்க ஆளுமை,தொழில் யுக்தி,உங்க அலட்சியம் அதைக் கொண்டு நீங்க செய்ற செயல் இதெல்லாம் பார்த்து ரசிச்சிருக்கேன்.பார்க்க போனா உங்களைக் கொண்டே நானும் தொழில் செய்யனும்னு ரொம்ப ஆசை பட்டுருக்கேன்.உங்ககிட்ட நிறைய கத்திருக்கேன்” என்றதும் ஆச்சிரியமாகப் பார்த்து வைத்தான் தணிகா.
“இப்போ பேசுன பேச்சை வச்சு உடனே புரிஞ்சு என் மேல உங்களுக்கு நம்பிக்கை வந்திராது,ஆனா போகப் போக நடத்தை வச்சு நம்பிக்கையை பார்த்துக்கலாம்.
எதையும் யோசிக்காம இருங்க. அதுவும் உங்க செல்ல மகளைப் பத்தி இனி கவலை படவே வேணாம்.ஏன்னா உங்க இளவரசி எனக்கு ராணி” ஒரே வார்த்தையில் தணிகாவின் உச்சந் தலையில் கொட்டியவனை மெச்சி கொண்டனர் சிவராமனும்,கந்தனும்.
அதிலும் கந்தனுக்கு அமுதனை கொண்டு அத்தனை நிறைவு.தன் மகள் வாழாத வாழ்க்கையைப் பேத்தி நிறைக்க வாழ்ந்து விடுவாள் என்ற எண்ணம் அவருக்கு.
“தம்பி பேச வேண்டியதை மட்டும் தெளிவா பேசிடுச்சு இப்போ நீ தான் சொல்லணும் தணிகா. மருமக பொண்ணைக் கொண்டு நீ செய்றது எதுவுமே சரியில்லை.விசாலாட்சி இடத்துல வேற பொண்ணு வந்திருந்தா என்ன ஆகும்னு நடப்பை யோசிச்சு பாரு” சிவராமன் மகனுக்கு எடுத்து சொல்ல.
“என் மேல தப்பிருக்குப்பா நான் இல்லனு சொல்ல மாட்டேன் முன்ன எப்படியோ, ஆனா இப்போ விசா இல்லாம என்னால எதுவும் முடியாது”
“அதை வாய் திறந்து பேசு மாப்பிள்ளை விசாலாட்சி எனக்குப் பொண்ணு தான்.மாற்றான் தாயின் சில எண்ணங்கள் இருந்தாலும் பயம் இருந்தாலும் விசாலாட்சி பேத்தியை நல்ல மாதிரி தான் பார்த்துக்கிச்சு” என்றார் கந்தன்.
“என் பக்கமிருந்து நான் பேசிட்டேன் மாமா. எதையுமே யோசிக்காதீங்க அதுவும் போக இனி உங்களுக்கும் விசாக்கும் இடையில நான் வர மாட்டேன்.
அப்போ நான் வர வேண்டிய சூழ்நிலை வந்தேன்.இப்போ நீங்க வாழ தொடங்கியாச்சு.அப்போ அவ பொறுப்பு முழுமையும் நீங்க தான். எங்களைப் பத்தின தேவை இல்லாத கற்பனைகளை விட்டுட்டு.இனி உங்களைப் பத்தி யோசிங்க” என்றுவிட்டு அமுதன் எழுந்து கொள்ள.
அவனைத் தொடர்ந்து சிவராமனும் எழுந்து கொண்டார்,”அப்போ நான் கீழே போறேன் மாமா எனக்காக இரண்டு ராட்சசிங்க காத்திருக்காங்க அடுத்து அவங்களைச் சமாளிக்கனும்” என்றதும் கந்தன் வாய்விட்டு சிரிக்க.தணிகா இதழ் பிரியாமல் சிரித்து வைத்தான்.
சிவராமன் விளையாட்டு போல், “என்னய்யா இப்படிச் சொல்லிட்ட?”
“ஆமா மாமா சண்டை போட்டது மாமா அவரை விட்டுட்டு என்கிட்ட இரண்டு பேரும் மல்லுக்கு நிக்குதுங்க. எதுக்கோ தொடங்குன சண்டை இப்போ உரிமை போராட்டத்துல வந்து நிக்குது. இத்தனை நாள் பகையைக் கொண்டு என் மாமனார் என்னைப் பழி வாங்கிட்டார்” சிரிக்காமல் அமுதன் சொல்லி செல்ல இப்போது பல் தெரிய சிரித்து வைத்தான் தணிகாசலம்.
இந்த இரு தினங்களாக இருந்த மன வேதனை,அதீத பயம் எல்லாம் தற்போது ஒன்றுமே இல்லாமல் ஆகி போனது.அமுதன் இப்படியெல்லாம் பேச கூடியவன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை
அமுதனை கொண்டு தணிகாசலம் எண்ணி வைத்த எண்ணமே வேறு.இப்போது அவனது குணம் பிடிபடக் கொஞ்சம் தடுமாறி தான் போனான்.செய்த ஆர்ப்பாட்டமெல்லாம் அர்த்தமின்றிப் போனது இப்போது. இதனையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன் தோளை தட்டிய கந்தன்.
“இன்னும் என்ன மாப்பிள்ளை?”
“ஒன்னுமில்லை மாமா” என்றவனை ஆறுதலாகத் தட்டி.
“யானைக்கும் அடி சறுக்கும் மாப்பிள்ளை எல்லாத்துலையும் நேர்த்தியா இருக்குற நீங்க விசாலாட்சி விஷியத்துல சறுக்கி நிக்குறீங்க அது ஏன்னு யோசிங்க? விடையை தேடி காலம் தாழ்த்தி நிற்காம சரி பண்ணிடுங்க.அது தான் உங்க குடும்ப வாழ்க்கைக்கு நல்லது.
அப்புறம் குமாரியை பத்தி இனி எந்த பயமும் வேணாம்.எனக்கு இந்தக் கல்யாணத்துல பெருசா பிடிப்பு இல்லை,ஆனா இப்போ அமுதன் என் பேத்திக்கு ஏத்த ஜோடின்னு தோணுது.பையன் தங்கம் மாப்பிள்ளை கவலை வேண்டாம். என் பொண்ணு ஆசியோட நீங்களும், என் பேத்தியும் நல்லா இருப்பீங்க” என்றவரும் தணிகாவிற்கு தனிமை கொடுத்து விட்டு செல்ல.
எல்லாரும் செல்லவும் தளர்வாக நாற்காலியில் சாய்ந்து கொண்டவன்.அன்று தொடங்கி இன்று வரை தன் செயலும் விசாலாட்சியும் என அசை போட்டான். சில உண்மைகள் கசப்பை தந்து நிற்க இறுக்க கண்ணை மூடி கொண்டு அதனை விழுங்க போராடி நின்றான் தணிகாசலம்.
மனம் இரு பெண்களுக்கு நீ நியாயமே செய்யவிலை என்று சரமாரியாக கீறி வைத்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!