“போயும் போயும் இந்த மலடியை தான் என் பேரனுக்கு பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சு இருக்கேன்…. என் குடும்ப வாரிசை பெத்து தர மாட்டா போல இருக்கே… இவளால என் பேரனும் புத்தி கெட்டு போய் யார் யார்கிட்டயோ போயிட்டு இருக்கான்….” என்று வடிவாம்பாள் கத்தி கொண்டு இருந்தார்…
“பாட்டி வாயை மூடுங்க… உங்களை இதை பத்தி பேச வேண்டாம்னு சொல்னேன்…. திரும்ப திரும்ப என் பொண்டாட்டியை தப்பா பேசுனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….. ஏய் வா எப்ப பாரு அழுதுட்டே இருக்குறது” என்று கோவமாக
“அவன் செஞ்சு வெச்ச வேலைக்கு அவன் வீட்டுல ரெண்டு பிசாசுங்க ஆடிட்டு இருக்கும்.. முதல்ல அதை போய் பாக்க சொல்லு… அதுக்கு அப்பறம் இங்க வந்து இருப்பானாம்…. இங்க காவலுக்கு நான் ஆளு ஏற்பாடு பண்ணிட்டேன்… முதல்ல வீட்டுக்கு கிளம்ப சொல்லு”
ஆனால் அவளோ “நீங்க என்ன சொன்னாலும் என் முடிவுல இருந்து மாற மாட்டேன்.. எனக்கு அவரு வேணும்” என்று பிடிதிவாதமாக கூறினாள்… அதை கேட்டு அனைவருக்கும் எரிச்சல் தான் மூண்டது…